சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN report on Sri Lanka details atrocities during the civil war

இலங்கை மீதான .நா. அறிக்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்த அட்டூழியங்களை விவரிக்கின்றது

By Rohantha De Silva and K. Ratnayake
22 September 2015

Use this version to printSend feedback

கடந்த புதன்கிழமை .நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் சைட் ராட் அல் ஹுசைன் வெளியிட்ட இலங்கை மீதான ஒரு அறிக்கை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த 26 ஆண்டுகால யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் செய்த அட்டூழியங்கள் குறித்து மேலும் ஆதாரங்கள் வழங்குகின்றது.

அறிமுகம் மற்றும் பரிந்துரைகளும் இலங்கையில் தற்போதைய அமெரிக்க-சார்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக வளைந்துள்ளது என்றாலும், அறிக்கையானது கொழும்பு ஆளும் தட்டின் ஒவ்வொரு பிரிவினாலும் மற்றும் புலிகளாலும் கூட செய்யப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவரங்களை இந்த அறிக்கை வழங்குகின்றது.

அறிக்கையை சமர்ப்பித்து சைட் சுட்டிக் காட்டியதாவது: "முக்கியமாக, முழு சர்வதேச சமூகமும் மிகவும் பாரதூரமான குற்றங்களாக கருதும் மீறல்கள் நடந்துள்ளதை அறிக்கை வெளிப்படுத்துகிறது." எனினும், இது போர்க் குற்றங்கள் புரிந்தவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அறிக்கை யாரினதும் பெயர்களை குறிப்பிடவில்லை என்று உவகை கொண்டுள்ளனர். டெயிலி மிரர் பத்திரிகையின் படி, "ஜனவரி 8 மாற்றம் இடம்பெற்றதால், .நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கபடவிருந்த அறிக்கையை விட இந்த அறிக்கை 100 மடங்கு அல்லது 1000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது" என்று கொழும்பு ஊடகத் தலைவர்களின் கூட்டத்தில் சிறிசேன கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் மஹிந்த இராஜபக்ஷவிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, "பல பெயர்களை அறிக்கையில் சேர்க்கப்படவிருந்த ஆபத்து" தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி (.தே.) தலைமையிலான அரசாங்கத்தின் "நல் அபிப்பிராயமான தோற்றத்தின்" மூலம் தவிர்க்கப்பட்டுவிட்டது  என்று அறிவித்துள்ளார்.

பெயர்கள் குறிப்பிடப்படாமையானது சைட் அலுவலகம், அமெரிக்கா மற்றும் கொழும்பு அரசாங்கத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 261 பக்க அறிக்கையானது 2014 மார்ச்சில்  .நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்தைத் தொடர்ந்து, இலங்கை மீது .நா. மனித உரிமைகள் விசாரணைகளுக்கான உயர் ஆணையாளர் (OISL) அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டது.

புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்த வாஷிங்டன், இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்துகொண்டது. எனினும், 2009ல் போரின் இறுதி மாதங்களில், சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலக நெருக்கும் ஒரு வழிமுறையாக "மனித உரிமைகள்" விவகாரத்தை அமெரிக்கா பற்றிக்கொண்டது. அது தோல்வியடைந்த போது, வாஷிங்டன் ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு சமமான ஒன்றை ஆதரித்தது.

அறிக்கை "கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது" என்றால், அதற்குக் காரணம், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வாஷிங்டனுடன் நெருக்கமாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ள புதிய அரசாங்கத்துக்கு எத்தகைய தொந்தரவும் ஏற்படுவதை விரும்பாமையே. கடந்த நவம்பர் வரை, சிறிசேன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர், முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவர் மற்றும் பல சந்தர்ப்பங்களில் தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர். இது போன்று, இராஜபக்ஷ, ஏனைய அமைச்சர்கள் மற்றும் மூத்த இராணுவ பிரபலங்களுடன் சேர்ந்து போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் புதிய ஜனாதிபதியும் அகப்படுவார்.

அறிக்கையானது கிட்டத்தட்ட 200,000 மக்களை பெரும்பாலும் தமிழர்களை காவுகொண்ட குற்றவியல் யுத்தத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. ..எஸ்.எல். (OISL) செயற்கைக்கோள் படங்கள், பல்வேறு ஆதாரங்கள் அத்துடன் கண்கண்ட சாட்சிகளில் இருந்தும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. அறிக்கையின் கால எல்லையானது 2002ல் இருந்து 2011 வரை ஆகும் -அதாவது 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து 2009 மே மாதம் புலிகளின் தோல்வியின் பின்னரான கால இடைவெளியாகும். இது .தே.. அரசாங்கம் போரைத் தொடங்கிய 1983ல் இருந்த கடந்த இரண்டு தசாப்தங்களை உள்ளடக்கவில்லை.

பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்களைக் குறிப்பிட அது தவறியிருந்தாலும், அறிக்கையின் முடிவானது இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..), தற்போதைய .தே.. ஆகிய இரு கட்சிகளதும் தலைமையில் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் மீது பெரும் குற்றப் பத்திரிகையை முன்வைக்கின்றது. "இலட்சக் கணக்கான மக்கள் அத்துடன் எல்லா சமூகங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மோசமான தீவிர மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள்" அறிக்கையில் அடங்கியுள்ள காலத்தில் மட்டுமன்றி முந்தைய தசாப்தங்களிலும் நடந்துள்ளன என ..எஸ்.எல்.  கண்டுள்ளது.

பல ஆண்டுகளாக அரசாங்க படைகள் அதனுடன் இணைந்த துணை இராணுவ அமைப்புக்களும் இழைத்த சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், காணாமல் ஆக்குதல்கள், கடத்தல்கள், சட்டவிரோத கைதுகள் மற்றும் சட்டவிரோத தடுத்து வைப்புகள், சித்தரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளின் விரிவான மற்றும் புரையோடிப் போன வடிவங்கள்இதில் அடங்கும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கை, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நலன்களை அன்றி, தீவின் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த, தமிழ் பிரிவினைவாத வேலைத் திட்டத்தைக் கொண்ட, புலிகளின் பரவலான மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இயலாத புலிகள், தனது எல்லைகளை பராமரிக்க மேலும் மேலும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடியதோடு சிங்கள பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இனவாத பகைமையை வேண்டுமென்றே கிளறிவிட்டனர்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆதரவுடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ வெற்றி பெற்றபின், 2006 நடுப்பகுதியில் தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடித்து, இராணுவ செலவைக் கூட்டியதுடன் இராணுவத்தின் போராட்ட வலிமையை மும்மடங்காக 300,000 வரை அதிகரித்து, முதலில் கிழக்கிலும் பின்னர் வடக்கிலும் புலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

முந்தைய .நா. விசாரணை போலவே, இந்த அறிக்கையும், நூராயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள், சுருங்கி வந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டு சிக்கிக்கொண்டிருந்த 2009ல் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களில் குவிமையப்படுத்தியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு உள்ளே இலங்கை இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையம் எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இராணுவத்தின் நடவடிக்கைகளை மூடிமறைப்பதன் பேரில், அரசாங்கம் 2008 செப்டம்பரில் வடக்கில் எஞ்சியிருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு அனைத்து .நா. நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் வெளியேற உத்தரவிட்டது.

ஆயுதப் படைகளின் உக்கிரமான ஷெல் தாக்குதல்கள் வன்னிப் பிரதேச பொது மக்கள் மத்தியில் பெரும் துன்பங்களையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன. படுகொலை, இரத்தம் சிந்துதல் மற்றும் முழு குடும்பங்களும் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் உளவியல் அதிர்ச்சிகளையும் கூட ..எஸ்.எல். விசாரணைக்கு கிடைத்த  சாட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளினால் வன்னி மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றாக்குறையாகவே விநியோகம் செய்யப்பட்டுள்ளமை அவர்களது நலனை மேலும் பாதித்துள்ளதோடு சந்தேகத்திற்கு இடமின்றி மேலும் இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது," என அறிக்கை முடிகின்றது.

..எஸ்.எல். கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை பற்றி எந்த மதிப்பீடும் செய்யாவிட்டாலும், "ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை," என அறிவித்துள்ளது. “மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை, அவை திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பண்பு, அதனோடு இணைந்த தாக்குதல்களின் வீச்சு போன்ற அனைத்தும், சர்வதேச குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதற்கான சாத்தியத்தை சுட்டிக் காட்டுகின்றன,” என்று அறிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த குற்றங்களில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களும் அடங்கும். அவற்றின் அமைவிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அல்லது அதன் காரணமாகவே கூட இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. 2009 ஜனவரியில் வல்லிபுனம் மருத்துவமனை மீதான முதல் ஷெல் தாக்குதலில்பிரதான கட்டிடத்திற்கு, மருத்துவ உள்கட்டமைப்பு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காலிக மருத்துவ முகாம்களுக்கு சேதம் விளைவித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 22 பேர் காயமடைந்தனர்." இது, புதுக்குடியிருப்பு, வலயர்மடம், முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதியாக வெள்ளிமுள்ளிவாய்க்கால் சுகாதார வசதிகள் மீதான தாக்குதல்கள் வரை தொடர்ந்தது.

அறிக்கை விளக்கியது போல், "போர் முடிந்த உடன் பொதுமக்களின் அவலம் முடிவுக்கு வரவில்லை." 250,000 இற்கும் அதிகமான மக்கள் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்த "நலன்புரி கிராமங்கள்" என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வவுனியா மெனிக் பார்ம் "சுமார் 500 ஹெக்டர் மற்றும் பல கிலோமீட்டர் பரவியிருந்தது, அது ஏழு லையங்களை கொண்டதாகும், ஒவ்வொன்றும் முட்கம்பிகளால் சூழப்பட்டு இராணுவ அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டன.” சுமார் 220,000 மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 12,000 பேர், பிரதானமாக இளைஞர்கள், "புலி சந்தேக நபர்களாக" முத்திரை குத்தப்பட்டு மற்றும் இரகசிய இடங்களுக்கு எடுத்து அங்கு சித்திரவதையை எதிர்நோக்கினர். சிலர் சாதாரணமாக "காணாமல்" போயினர்.

இந்த அறிக்கை 2006 ஆகஸ்ட் 4 கிழக்கு நகரமான மூதூரில் உள்ள பிரான்சை தளமாகக் கொண்ட பட்டினிக்கு எதிரான தொண்டு நிறுவன (Action Contre la Faim -ACF) ஊழியர்கள் 17 பேர் கொலை உட்பட பல பேர்போன வழக்குகளை ஆராய்கிறது. அவர்களில் பதினைந்து பேர் ஒரே வரிசையில் நிறுத்தப்பட்டு மரண தண்டனை பாணியில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் தப்பிக்க முயன்ற போது கொல்லப்பட்டனர். அடுத்தடுத்த விசாரணைகள், கிட்டத்தட்ட நிச்சயமாக அதற்குப் பொறுப்பான இராணுவத்தினரை விடுவிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மூடிமறைப்பாக இருந்தன.

அறிக்கை கூறுவதாவது: "நிறைவேற்று அதிகாரி [ஜனாதிபதி இராஜபக்ஷ] விசாரணையில் தலையிட்டு, தமிழர்கள் அதில் பங்கேற்பதில் சிரமமான ஒரு சிங்கள பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றினார். ஆரம்பத்தில் வழக்கு விசாரணை நடத்திய நீதவான் அச்சுறுத்தப்பட்டார். இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்பார்வையிட வந்த சர்வதேச தடயவியல் நோய்க்குறி ஆய்வு வல்லுநர் தொந்தரவுக்கு உள்ளானதோடு, பலியானவர்களில் ஒருவரின் மண்டையை தாக்கிய ரவை அதிரடிப்படையினரின் ஆயுதத்திற்கு உரியதாக இருக்கலாம் என்ற அவரது கண்டுபிடிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது."

மற்றொரு உயர் வழக்கில், அரசாங்கத்தின் மறுப்புக்களுக்கு முரணாக, சரணடைந்த புலிகளின் உறுப்பினர்களை பாதுகாப்பு படைகள் கொலை செய்தன என்று நம்புவதற்கு "நியாயமான அடிப்படைகள்" இருப்பதாக அறிக்கை பிரகடனம் செய்கின்றது. 2009 மே 18, பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பின்னர் உயிரிழந்த புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பாலசிங்கம் நடேசன், அதன் சமாதான செயலகத்தின் தலைவர் சீவரட்ணம் புலித்தேவன் சம்பந்தப்பட்ட விவகாரம் இதில் முக்கியமானவை ஆகும்.

..எஸ்.எல்., தான் அடையாளம் கண்ட குற்றங்களை விசாரிக்க, "சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளடங்கிய கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை" ஸ்தாபிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆயுதப் படைகள் மற்றும் பொலிசார் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் செயல்பட்டுள்ளதை எடுத்துக்கொண்டால், இலங்கையினுள் ஒரு "உள்ளக" நீதி விசாரணை முறையை அமைப்பது போதுமானதாக இருக்காது என்று அது வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை செப்டெம்பர் 30 அன்று .நா. மனித உரிமைகள் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. பரிந்துரைகளை செயல்படுத்துவது பற்றிய ஒரு தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்துடன் வேலை செய்துகொண்டிருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது. கொழும்பு முன்வைத்த உள்ளக விசாரணைக்கு அதன் ஆதரவை வாஷிங்டன் ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளது.

ஞாயிறன்று PTI News இடம் பேசிய, தெற்காசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், மனித உரிமைகளை அனுகுவதில்இலங்கை வலுவான நோக்கத்துடன் இருப்பதைவாஷிங்டன் காண்கின்றது என கூறியதோடு அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யவும் உறுதியளித்தார். உண்மையில், கொழும்பு அரசாங்கம், அமெரிக்க ஆதரவுடன், விரிவான போர் குற்றங்களை புதைக்க எந்தவொரு விசாரணையையும் பயன்படுத்தும்.

கொழும்பில் உள்ள முழு இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபனமானது நீண்டகால யுத்தம் மற்றும் அதைச் சார்ந்த அட்டூழியங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமல்ல, அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது போல், முழு பொலிஸ்-அரச இயந்திரம் இன்னமும் அமுலில் உள்ளது. "மீறல்கள் மற்றும் குற்றங்களுக்குப் பொறுப்பான பல கட்டமைப்புகள் அப்படியே இருப்பதோடு தேவையான போது, அதே போல் பொறுப்புடைமை பற்றிய விடயத்தை தீர்த்தல் என்ற பெயரிலான எந்தவொரு முன்னேற்றத்தையும் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது," என அது தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டத்தில், புதிய அரசாங்கம் அதன் சிக்கன திட்டத்தை செயல்படுத்துகின்ற நிலையில், இத்தகைய அடக்குமுறை "கட்டமைப்புகள்" உண்மையில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காத்துக்கொள்ள முயற்சிக்கும் போது அவர்களை ஒடுக்க மீண்டும் செயல்படுத்தப்படும்.