ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose the coup plot against Labour Party leader Jeremy Corbyn

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு எதிரான பதவிக் கவிழ்ப்பு சதியை எதிர்ப்போம்

Statement of the Socialist Equality Party (Britain)
28 June 2016

தொழிற் கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜெர்மி கோர்பினை நீக்கும் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. அது நூறாயிரக் கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் அவர்களது தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மீதான ஒரு தாக்குதல் என்பது மட்டுமல்லாது, அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும் வகையில் அரசியலை மேற்கொண்டு வலதிற்குத் திருப்பும் ஒரு முயற்சியாகும்.

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வலது-சாரி கும்பல் ஒன்று, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த பதவிக்கவிழ்ப்பு நடவடிக்கையைத் தூண்டிவிட்டு வருகிறது. ஆனால் அவர்கள், MI5, MI6 மற்றும் அரசு தகவல் தொடர்பு தலைமையகம் (GCHQ) ஆகிய பாதுகாப்பு சேவைகள் உட்பட பிரிட்டிஷ் அரசின் உயர்மட்டங்களுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் சிஐஏ உடனும் விவாதித்த பின்னரே இவ்வாறு செய்கின்றனர் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

இதில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள், கடந்த செப்டம்பரில் தொழிற் கட்சி தலைவராக கோர்பின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அவரை குழப்பம் ஏற்படுத்தும், புதிய வாக்கெடுப்பு நடைமுறைகளின் எதிர்பாரா விளைவாக அவர் கட்சி தலைமைக்கு வந்துவிட்டதாக பார்க்கிறார்கள். தொழிற் சங்க தடுப்பு வாக்குமுறையை (union block vote) அகற்றி விட்டு, முன்னாள் தலைவர் எட் மிலிபாண்ட், கட்சி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அங்கத்தவர்களது மற்றும் புதிய வகை தொழிற் கட்சி ஆதரவாளர்களது தனித்தனி வாக்குகளை இந்த புதிய வாக்கெடுப்பு நடைமுறையில் கொண்டு வந்திருந்தார். சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்திற்கு அவர் அறிவித்திருந்த எதிர்ப்பின் அடிப்படையில் கோர்பினை அண்ணளவாக 90,000 பேர் ஆதரித்தனர் என்ற இந்த உண்மைக்கு தமது எதிர்ப்பை முற்றுமுழுதாக காட்டினர்.

உடனடியாக இந்நகர்வு தூண்டப்படுவதற்கு காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கத்துவம் மீதான ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கான வாக்குகளால் ஏற்பட்ட பேரதிர்ச்சியாகும். இதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கொந்தளிப்பு, அத்துடன் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரிட்டன் ஆளும் உயரடுக்கு முகங்கொடுத்துள்ள அதன் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி ஆகியவற்றிற்கு இடையே, சிக்கன திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான எவ்விதமான எதிர்ப்புணர்வையும் சகித்துக் கொள்ள முடியாதென்பதில் பிரிட்டிஷ் அரசின் உயர்மட்ட அடுக்குகள் தீர்மானகரமாக உள்ளன.

வெள்ளியன்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் இன் இராஜினாமா அறிவிப்பு மற்றும் ஒருசில வாரங்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஆகியவற்றுடன், ஆளும் பழமைவாதிகள் நிலைகுலைந்துள்ளனர். சாதனையளவிற்கு ஸ்டெர்லிங் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே உடைவதற்கு அச்சுறுத்தும் அதிர்ச்சி அலைகளுக்கு இடையே, வெகுஜன வாக்கெடுப்பு முடிவை ஒன்றுமில்லாது ஆக்கும் வகையில் புதிய கூட்டணி அரசாங்கத்திற்கான சாத்தியக்கூறை திறந்து விட்டு, இலையுதிர் காலத்தில் ஒரு இடைக்கால பொது தேர்தல் நடத்துவதற்கான பேச்சுக்களும் அங்கே பரவலாக உள்ளன.

ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புக்கான அமெரிக்க திட்டங்கள் மீது பிரிட்டன் வெளியேற்றத்தினது தாக்கங்கள் குறித்த பெரும் அச்சங்களால் உந்தப்பட்டு, வாஷிங்டன் நேரடியாக இதில் தலையிடுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, அவரது புரூசெல்ஸ் விவாதங்களுக்குப் பின்னர், நேற்று ஐக்கிய இராச்சியம் சென்றடைந்தார். “பொருளாதார ஸ்திரப்பாடு மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுக்கு சேதம் ஏற்படுவதை குறைக்க … [ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன்] இரண்டையும் வலியுறுத்துவதே" அவரது திட்டமென பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

"ஐரோப்பிய ஒன்றியத்தைத் திசை திருப்புவதற்கும் மற்றும் பிரிட்டன் வெளியேறுவதன் நெருக்கடி நேட்டோவிற்குள் பரவுவதைத் தடுக்கவும், அப்பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் பிளவுகளை கையாள்வதற்காக ஒபாமா நிர்வாகம் உள் இழுக்கப்படும்" என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது.

ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர்—அதாவது டோரி கட்சியின் இரண்டு சம அளவிலான வலதுசாரி பிரிவுகளுக்கு இடையிலான ஒரு கன்னை மோதலின் இந்த முடிவுக்குப் பின்னர்—அதிர்ச்சிகரமாக தொழிற்கட்சி தான் பாரிய வீழ்ச்சியில் நிற்கிறது. தொழிற்கட்சியின் பெரும்பாலான கட்சி அங்கத்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதென்று வாக்களித்திருந்த நிலையில், வேறு சூழ்நிலைகளாக இருந்திருந்தால், டோரி கட்சியால் ஆதரவாளர்களின் அடித்தளத்தை அணிதிரட்ட முடியாததால் முன்கூட்டியே ஒரு தேர்தலை நடத்த வேண்டுமென தொழிற்கட்சி தவறுக்கிடமின்றி கோரி இருக்கும்.

ஆனால் அதற்கு மாறாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற பெரும்பான்மையினர் அதன் சொந்த தலைவரையே நீக்குவதற்கு விரும்புகின்றனர்.

வெகுஜன வாக்கெடுப்பு முடிவு வந்து ஒருசில மணி நேரங்களுக்குள், வெள்ளியன்று நண்பகல் வாக்கில், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டேம் மார்கரெட் ஹோட்ஜ் மற்றும் ஆன் கோஃபெ நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை சமர்பித்தனர். கடந்த இலையுதிர் காலத்தில் சிரியா மீது பிரிட்டன் குண்டுவீசுவதை ஆதரிப்பது குறித்த நாடாளுமன்ற வாக்களிப்பில் கட்சி உறுப்பினர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க கோர்பின் அனுமதித்ததும், இழிவார்ந்த வகையில் 66 தொழிற்கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு தலைமை கொடுத்த நிழல் அமைச்சரவையின் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி பென், ஞாயிறன்று அதிகாலையில், கோர்பினின் தலைமை அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவரிடம் தெரிவித்தார், இது அவரை நீக்குவதற்கு கோர்பினை நிர்பந்தித்தது.

இது, நிழல் அமைச்சரவையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியான இராஜினாமாக்களுக்கான சமிக்ஞையாக இருந்தது. திங்களன்று காலை, தொழிற்கட்சி துணை தலைவர் டோம் வாட்சன் கோர்பினிடம் கூறுகையில் இனியும் அவருக்கு நாடாளுமன்ற கட்சியின் ஆதரவு கிடையாது என்றும், பதவியிலிருந்து இறங்க ஆலோசிக்குமாறும் தெரிவித்தார். நேற்றைய நாடாளுமன்ற தொழிற்கட்சி கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்ட போது, நிழல் அமைச்சரவையின் மந்திரிசபை அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இராஜினாமா செய்தனர், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 சதவீதத்தினர் கோர்பின் பதவி விலக வேண்டுமென இன்று மாலை 4.00 வாக்கில் வாக்களிப்பார்கள் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.

தொழிற் கட்சியின் இற்றுப்போன வரலாற்று தொகுப்பேடுகளிலேயே கூட, இதுவொரு அசாதாரணமான மற்றும் முன்னொருபோதும் இல்லாத சம்பவமாக இருக்கும். கோர்பின் தேர்ந்தெடுக்கபட்டதில் இருந்து, சிக்கனத் திட்டம், நேட்டோ அங்கத்துவம், முப்படையைப் புதுப்பிப்பது, சிரியா போர், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் எதுவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு பிரச்சினையிலும் கோர்பின் தொழிற்கட்சிக்குள் உள்ள வலதுசாரியை சமாதானப்படுத்தி உள்ளார். “கட்சி ஐக்கியம்" என்ற பெயரில் அவர் முதுகில் குத்துவதற்கு வரிசை கட்டி நிற்கும் எல்லா வலதுசாரி நபர்களையும், பெருமளவில் அவரது நிழல் அமைச்சரவை மந்திரிசபையில் தேர்ந்தெடுத்ததுடன், அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாமென்ற அழைப்புகளையும் எதிர்த்தார்.

இதுவரையில், பதவியிலிருந்து இறங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை கோர்பின் எதிர்த்து வருவதுடன், வலதுடன் உடன்பாடின்மையை முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறார். அவருக்கு எதிராக ஏகாபத்திய-சார்பு மற்றும் வலதுசாரி சக்திகள் அணிதிரள்வது அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் நாடாளுமன்ற சதுக்கத்தில் அவரை நியாயப்படுத்துவதற்கான ஒரு கூட்டத்தில் பேசுகையில், அவர் வெகுஜன வாக்கெடுப்பு முடிவைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை என்பதுடன், பதவிக்கவிழ்ப்பு சூழ்ச்சியாளர்களுடன் ஐக்கியத்திற்காக ஒரு முறை அவர் மன்றாடியதைக் கூட குறிப்பிடவில்லை.

இது கோர்பின் பல மாதங்களாக அரசியல் நடவடிக்கையை மீண்டும் மீண்டும் வலதுசாரிகள் கையாளவிட்டதன் விளைவாகும். ஆனால் நாடாளுமன்ற கட்சியின் கிளர்ச்சியில் அவரது பலவீனம் அம்பலப்பட்டதை விட மிகவும் அடிப்படையான பிரச்சனைகள் உள்ளடங்கியுள்ளன.

கடந்த செப்டம்பரில் கோர்பின் தலைமை மீதான சவாலை ஆதரிக்க கையெழுத்திட்ட பலருடன், குறிப்பாக இளைஞர்களுடன் தனது ஐக்கியத்தை காட்டிக்கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி குறிப்பிடுகையில், தொழிற் கட்சியின் ஏகாதிபத்திய-சார்பு குணாம்சத்தைக் கருத்தில் கொண்டு மிகவும் அத்தியாவசியமான வரலாற்று படிப்பினைகளைப் பெறுமாறு அவர்களை வலியுறுத்தியது. கோர்பினின் வெற்றி தொழிற் கட்சி மீண்டும் அதன் சீர்திருத்தவாத கடந்த காலத்திற்கு திரும்பி வருவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க சிக்கனத் திட்டங்களை எதிர்க்கும் கட்சியாக செயல்படுவதற்குமான சாத்தியக்கூறை திறந்து விட்டிருக்கிறது என்ற பிரமையைப் பரப்பிய போலி-இடதுகளுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்துகையில், “பிரிட்டிஷ் தொழிற் கட்சி பிளேயரில் இருந்து தொடங்கவில்லை. அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசு எந்திரத்தின் பரிசோதித்து முயற்சிக்கப்பட்ட கருவியாக ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் ஒரு முதலாளித்துவ கட்சியாகும். அது க்ளீமெண்ட் அட்லீ, ஜேம்ஸ் கலஹன் தலைமையாக இருக்கட்டும், அல்லது ஜெர்மி கோர்பின் தலைமையாக இருக்கும், அதன் சாராம்சம் மாற்றமின்றி இருக்கிறது,” என்று குறிப்பிட்டது.

தொழிற் கட்சியானது அரசு எந்திரத்தின் ஒரு இன்றியமையா பாகமாகும் என்ற இந்த மதிப்பீடைப் பதவிக்கவிழ்ப்பு சதி உறுதிப்படுத்துகிறது.

கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், பெயர் வெளியிட விரும்பாத "சேவையில் உள்ள மூத்த தளபதி" ஒருவரின் அறிக்கை மீது உலக சோசலிச வலைத்தளம் கவனத்தைக் கொணர்ந்தது, கோர்பின் பிரதம மந்திரியானால், அவருக்கு எதிராக "ஓர் இராணுவக் கலகம்" ஏற்படுவதற்கு "அதிக வாய்ப்பிருப்பதாக" அவர் தெரிவித்திருந்தார். கோர்பினை இராணுவத்தை விட நாடாளுமன்ற தொழிற்கட்சி மூலமாக வெளியேற்றுவதே சிறப்பென முதலாளித்துவ வர்க்கம் தீர்மானித்துள்ளது போலும்.

பிரிட்டன் திசை தெரியாமல் போய் கொண்டிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்திற்குள் அதிகாரத்திற்கான ஒரு பிரதான முதலாளித்துவ தூணாக இருக்கும் தொழிற்கட்சி, பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க அழைக்கப்படும். இதில் ஓர் அரசாங்கம் அமைப்பதோ அல்லது ஏதோவொரு வடிவிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக இருப்பதோ உள்ளடங்கி இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அத்தகையது வேலைகள், கூலிகள் மற்றும் இன்றியமையாத சேவைகள் மீதான பாரிய தாக்குதல்களைத் திணிப்பதையும் மற்றும் நேட்டோ போர் திட்டங்களில் ஐக்கிய இராச்சியம் முழுமையாக அங்கம் வகிப்பதற்கு பொறுப்பேற்பதையும் உள்ளடக்கி இருக்கும்.

நேற்றைய பைனான்சியல் டைம்ஸ் தலையங்கத்தில் தொகுத்தளிக்கப்பட்டதில் இருந்து இந்த தீர்மானத்திற்கு வர முடியும், “தொழிற்கட்சி இப்போது ஜெர்மி கோர்பினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்திய அது, “தொழிற்கட்சி மேற்கொண்டுவந்த தவறான பாதையின் விளைவை முழு தொழிலாளர் இயக்கத்திற்கும் வெளிப்படுத்தவேண்டும்… கத்தியை உறையிலிருந்து வெளியே இழுத்துவிட்டபின், தொழிற்கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்கள் இப்போது அதிலிருந்து பின்வாங்க முடியாது,” என்று குறிப்பிட்டது.

வலதுசாரி பதவிக்கவிழ்ப்பு சூழ்ச்சியாளர்களைத் தோற்கடிப்பதற்கான மற்றும் அரசியல் அமைப்புமுறையை இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்த்துவதற்காக அரசுக்குள் முடுக்கிவிடப்பட்டுள்ள அவர்களது சூழ்ச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிக்க சோசலிச சமத்துவக் கட்சி சூளுரைக்கிறது. ஆனால் இத்தகைய ஓர் அரசியல் போராட்டத்தை தொழிற்கட்சிக்கு உள்ளேயே நடத்தி வென்றுவிட முடியாது என இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை நாம் எச்சரிக்கிறோம். ஆளும் வர்க்கம் மற்றும் அதற்கு அரசியல் வக்காலத்துவாங்குவோருக்கும் எதிராக சமரசமின்றி மற்றும் ஒவ்வொரு முனையிலிருந்தும் போராட்டத்தை நடத்த ஒரு புதிய மற்றும் நிஜமான சோசலிச தலைமையைக் கட்டமைப்பது இதற்கு அவசியமாகும்.