ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Social Democrat Steinmeier is elected president of Germany

ஜேர்மன் ஜனாதிபதியாக சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்ரைன்மையர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

By Johannes Stern
14 February 2017

ஞாயிறன்று, கூட்டாட்சி சட்டமன்றத்தின் மூலமாக ஜேர்மனின் புதிய ஜனாதிபதியாக சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party, SPD) இன் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ்துவ ஜனநாயக யூனியனை (Christian Democratic Union, CDU) சேர்ந்த, அதிபர் அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பதவியிலிருந்து இறங்கிய பின்னர், Bellevue கோட்டையில் ஓய்வு பெறவிருக்கும் தலைவர் ஜோகாயிம் கவுக் இடத்தினை ஸ்ரைன்மையர் எடுத்துக்கொள்வார்.

ஸ்ரைமையர் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளதுடன் மற்றும் பல அறிக்கைகள் அவரை பாராட்டுகின்றபோதும், அதிகரித்துவரும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையான நிலைமைகளின் கீழ் ஜேர்மன் கட்சி அமைப்பு முறையானது முறிந்துகொண்டிருக்கின்றன என்று தேர்தல் முடிவு காட்டுகிறது.

முதல் சுற்று வாக்குபதிவில், ஸ்ரைன்மையர் 75 சதவிகித வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையில், அதாவது 1,239 செல்லுபடியாகும் வாக்குகளில் 931 வாக்குகள் மட்டுமே அவர் பெற்றார். கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், கிறிஸ்துவ சமூக யூனியன் (Christian Social Union-CSU), சமூக ஜனநாயகக் கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி (Free Democratic Party-FDP), மற்றும் பசுமை கட்சி (Green Party) போன்ற ஐந்து கட்சிகளின் அனைத்து வாக்காளர்களும் அதிகாரபூர்வ ஆதரவுடன் ஸ்ரைன்மையருக்கு வாக்களித்திருந்தால், அவர் 1,106 வாக்குகள் பெற்றிருப்பார்.

இடது கட்சி வேட்பாளராக தேர்தலில் நின்ற ஒரு வறுமை ஆராய்ச்சியாளரான கிறிஸ்தோப் பட்டர்வேஜே எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகளை பெற்றார். இடது கட்சி 95 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளபோதும், அவர் மொத்தம் 128 வாக்குகளை பெற்றார். தீவிர வலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்று (Alternative for Germany - AfD) கட்சியின் வேட்பாளர் ஆல்பிரெக்ட் கிளாசர் 42 வாக்குகளை பெற்றார். இதில் குறைந்தது ஏழு வாக்குகள் பிற கட்சிகளின் பிரதிநிதிகளிடமிருந்து வந்தன. இதைவிட, கூட்டாட்சி சட்டமன்றத்தின் 103 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஸ்ரைன்மையர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஒரு அரசியல் திருப்புமுனையை குறிப்பிடுகிறது. இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்த பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஒரு ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அரசு இயந்திரத்தில் இதுபோன்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரதான பதவியை வகித்திருக்கவில்லை. பழமைவாத Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை பின்வருமாறு எழுதியது: "ஸ்ரைன்மையர் இந்த நாட்டின் அரசியல் வர்க்கத்தின் உருவகமாக உள்ளார். அவருடைய முன்னோடிகளில் ஒருவரான ஹோஸ்ட் கோலர், ஒரு வெளிநபராக இருந்து தோற்றார், ஏனென்றால் அவர் பேர்லின் அரசியலில் யாரையும் அறிந்திருக்கவில்லை. ஸ்ரைன்மையர் அனைவரையும் அறிந்திருக்கிறார்."

கடந்த 20 ஆண்டுகளில் வேறெந்த அரசியல்வாதியையும் விட, இந்த SPD அரசியல்வாதி ஜேர்மன் அரசியலில் வலதுசாரி திருப்பத்தை உருவகப்படுத்துகிறார். மேர்க்கெலின் முன்னோடியான சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹெகார்ட் ஷ்ரோடர் இன் கீழ் அதிபர் அலுவலகத்தின் தலைவராக, ஸ்ரைன்மையர் மதிப்பற்ற 2010 திட்டநிரலையும், மில்லியன் கணக்கிலான மக்களை கடுமையான வறுமையில் தள்ளிய Hartz சட்டத்தினையும் வகுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றினார். 2005 முதல் 2009க்கு இடையிலும், பின்னர் மீண்டும் 2013 முதல் 2017க்கு இடையிலும், மேர்க்கெலின் கீழ் பெரும் கூட்டணி ஆட்சியின்போது வெளியுறவு அமைச்சராக அவர் பணியாற்றினார். இந்த பங்கேற்பில், ஜேர்மன் அரசியலில் ஒரு மிகுந்த ஆக்கிரோஷமான வெளியுறவு கொள்கை மாற்றத்திற்கு வழிவகுப்பதற்கு அவர் தயாரிப்பு செய்தார்.

சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மூனிச் பாதுகாப்பு மாநாட்டின்போது, ஸ்ரைன்மையர், கவுக் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU) ஐ சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் வொன் டெர் லையன் ஆகியோர் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை குறித்து அறிவித்தனர். ஜேர்மன் "வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மிகவும் தீர்க்கமான முறையிலும், கணிசமான அளவிலும் முன்னரே தலையிடுவதற்கு தயாராக இருக்கவேண்டும்." என்று ஸ்ரைன்மையர் தெரிவித்தார். உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவை கட்டியெழுப்புதல், மற்றும் மாலி, சிரியா மற்றும் ஈராக்கில் இராணுவம் குவிக்கப்படுதல் போன்றவற்றை ஆதரிப்பதன் மூலமாக இந்த திட்டத்தை அவர் பின்பற்றினார்.

அதேநேரத்தில், போருக்கும் மற்றும் இராணுவவாதத்திற்குமான தொடர்ச்சியான எதிர்ப்பை சமாளிப்பதற்காக, அவரது வழிகாட்டுதலின் கீழ் ஜேர்மன் வெளியுறவு கொள்கை மீதான ஒரு மீள்ஆய்வு பணியினை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகம் வழிவகுத்தது. ஜேர்மன் ஆதிக்கத்தின் கீழ் ஐரோப்பிய இராணுவமயமாக்கல் பற்றி வாதிடுகின்ற ஒரு மூலோபாய அறிக்கையை இது வெளியிட்டது. எண்ணற்ற உரைகள் மற்றும் கட்டுரைகளில், ஸ்ரைன்மையர் "ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்" என்று அவரே திரும்ப திரும்ப குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது குறுகிய உரையில், அவர் ஜனாதிபதி என்ற முறையில் மேலும் இந்த திட்டத்தினை தொடர இருப்பதாக ஸ்ரைன்மையர் இதை தெளிவுபடுத்தினார். சூறாவளித் தன்மைகொண்ட காலங்களில், உலகமே "தடம்புரண்டது" போன்று தோன்றும்போது, "சமூக ஒருங்கிணைப்பை தக்கவைத்துக்கொள்ளும் உறுதிப்பாட்டை" தான் அனைத்தும் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார். "உலகம் முழுவதிலும் பெரும்பாலான மக்களால் நம்பிக்கையின் நங்கூரமாக" ஜேர்மன் பார்க்கப்படுவதற்கு ஆரம்பித்திருக்கிறது," என்றும் கூறுகிறார். "எங்காவது அடித்தளம் கவிழ்க்கப்படுகிறது என்றால், அந்த அடித்தளத்தின் மீது நாம் இன்னும் உறுதியாக நிற்கவேண்டும். ..,, தைரியமாக இருக்கவேண்டும். பின்னர் நான் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட மாட்டேன்," என்று கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் அவர் கூறினார்.

"தைரியமாக" இருக்கவேண்டும் என்பதன் பொருள் போர் கொள்கையை தொடருவது என்பதும், அது தவிர்க்கமுடியாமல் நாட்டிற்குள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களுடன் இணைந்து செல்லும் என்பது பற்றிய சந்தேகத்திற்கு ஸ்ரைன்மையர் இடமளிக்கவில்லை.

"ஜொஹானெஸ் ராவ் இங்கு நின்றபோது, பால்கன் நாடுகளில் தலையீட்டில் சிக்கலான வெளியுறவு கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதை ஐக்கியப்பட்ட ஜேர்மனி பார்த்ததுடன், உலகின் புதிய பொறுப்புக்களுடன், தற்போது இவை இன்னும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன, மேலும் இவற்றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்," என்று கூறினார். இன்று மறுபடியும் "ஒரு கடினமான நேரமாக உள்ளது, ஆனால் பெரியோர்களே, பெண்களே, இது நமக்கான நேரம்! நாம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். மற்றவர்களை நாம் தைரியமானவர்களாக்க விரும்புகிறோம் என்றால், நாம் நம்மை தைரியமானவர்களாக்கிக் கொள்ளவேண்டும்!" என்றும் தெரிவித்தார்.

வைமார் குடியரசின் அனுபவங்களுக்கு பின்னர் ஒரு முதன்மையான பிரதிநிதித்துவ செயல்பாட்டையே கொண்டிருக்கும் ஜனாதிபதி அலுவலகமானது, இந்த புதிய பெரும் வல்லரசு எனும் விருப்புகளை செயல்படுத்துவதற்கான ஒரு அரசியல் திட்டமிடும் மற்றும் சக்தி மையமாகவும் மீண்டும் அது மாற்றப்பட வேண்டும்.

"அவருடன் நீண்டகாலம் பணியாற்றிய மற்றும் நட்பின் அடிப்படையில் தன்னுடன் இணைந்த ஒரு முழுமையான அணியினை ஸ்ரைன்மையர் Bellevue கோட்டைக்குள் கொண்டு வருவார்" என்று Frankfurter Allgemeine Zeitung அறிவிக்கிறது. "வெளியுறவு செயலர் ஸ்டீபன் ஸ்டெய்ன்லெய்ன், மற்றும் SPD பாராளுமன்ற பிரிவின் திட்டமிடலில் முந்தைய தலைவரான ஒலிவர் ஷ்மொல்க, அத்துடன் "30 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த பேச்சாளரும், எழுத்தாளருமான வொல்ப்காங் சில்பெர்மேன், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஹார்வர்ட் இன் ஒரு பட்டதாரியும், மேலும் வெளியுறவு அலுவலக திட்டமிடலின் முந்தைய தலைவரான தோமஸ் பாக்கர் ஆகியோரை இந்த அணி உள்ளடக்கியுள்ளது."