ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers Struggles: Asia, Australia and the Pacific

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் ...

27 May 2017
Asia

இந்தோனிசியா: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்களை ஃபிரிபோர்ட் தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்கிறது

இந்தோனிசியா மேற்கு பாபுவா மாகாணத்திலுள்ள பெரிய கிராஷ்பெர்க் தங்கம் மற்றும் செப்பு சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தியதால் இந்தோனிசியா PT ஃபிரிபோர்ட் 2000 க்கு அதிகமான தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கியிருக்கிறது. இரசாயண, எரிசக்தி மற்றும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் (the Chemical, Energy and Mining Workers Union [SP-KEP]) அவர்களுடைய வேலைநிறுத்தப்போராட்டம் அடுத்த ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நடத்த இருப்பதாக அறிவித்த மறுநாளே இந்த வேலையைவிட்டு நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மே 1 அன்று 8000 க்கு அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்,  பெருந்திரளான பணிநீக்கங்களை எதிர்த்து சுரங்கப் பகுதியில் வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இந்நடவடிக்கையானது சட்டவிரோதமானது என்றும்   விடுமுறை இல்லாமல் வேலைக்கு வராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் ஐந்து நாட்டகளுக்கு மேல் போராட்டம் செய்பவர்கள் அவர்களுடைய பணியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் ஃபிரிபோர்ட் தொழில்துறை அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் 2018 இல் வெறும் ஒரு மாத சம்பள இறுதி கொடுப்பனவுடன்  “தன்விருப்பார்ந்த விலகல்” அறிவிப்புக்களை வழங்கியிருந்தது. சில தொழிலாளர்கள் கூறியதற்கு மாறாக பணத்தினைப் குறைவாகப் பெற்றனர் ஏனெனில் அவர்கள் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய கடன்பாக்கி இருந்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்நிறுவனம் ஏற்கனவே ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநீக்கம் (விடுப்புக்கொடுத்துவிட்டு) செய்திருக்கிறது, இந்தோனிசியன் அரசாங்கத்துடன் அதன் நடப்பு ஒப்பந்த பிரச்சனை காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் இது 5,000 பணியிடங்களை நிறுத்தப்போகிறது என இந்த நிறுவனம் கோரியிருக்கிறது. புதிய அரசாங்கத்தின் விதிகளின்படி இந்த நிறுவனம் ஒரு புதிய சுரங்க அனுமதியைப் பெறவேண்டும். 51 சதவீத பங்குகளை விற்கவேண்டும், இரண்டாவது செப்பு உருக்காலையை கட்ட வேண்டும், நடுவர் தீர்ப்பாயத்தை கைவிடவேண்டும் மேலும் புதிய வரிகள் மற்றும் ஆதாயவரிகள் போன்றவற்றை செலுத்தவேண்டும். கிராஷ்பெர்க் இல் உற்பத்தியானது 60 சதவீதம் குறைந்துள்ளது என ஃபிரிபோர்ட் கொரியுள்ளது.

ஃபிரிபோர்ட் விடுமுறை அளிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறுகிய கால அறிவித்தல் மூலம் அதன் பத்து சதவிகித நிரந்தர தொழிலாளர்களுக்கு நீண்ட கால விடுப்பினைக் கொடுக்கின்றனர். விடுப்புக்குக்கான நாளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது, இருந்தபோதிலும் . தொழிலாளர்கள், அதிக வேலைக்கான சம்பளக் கூலி, தங்கும் வசதி உட்பட பல்வேறு நலன்களை இழக்க நேரிட்டுள்ளது.  இரண்டு நாட்களில் அறிவித்தல் கொடுக்கப்பட்டு நிறுவனத்தின் தங்கும் இடத்திலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

இந்தோனிசியா PT ஃபிரிபோர்ட், உள்ளூர் பீனிக்ஸ் துணையுடன், அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட ஃபிரிபோர்ட்-எம்சிஎம்ஓரான், 12,000 நிரந்தரத்த தொழிலாளர்களையும் 20,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலையில் அமர்த்தியிருந்தது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலையைவிட்டு நீக்குதலை நிறுவனம் நடைமுறைப்படுத்துவதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஃபிலிப்பினோ ஜீப்னி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டனர்

15 அல்லது அதற்குமேற்பட்ட பழைய பயணிகள் ஜீப்னிகளை இடைநிறுத்துவதற்கு பிலிப்பைன் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக திங்கள்கிழமையன்று பிஷ்டன் குழுவின் ஜீப்னி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், ஸ்டொப் அன்டு கோ கூட்டணியும் ஜீப்னி இடைநிறுத்தக் கூட்டணியும் சேர்ந்து ஒரு இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். மேற்கண்ட பிரச்சினைக்காக இந்த வேலைநிறுத்தம் பிப்ரவரியில் இரண்டு ஒருநாள் மாநில அளவிளான வேலை நிறுத்தப்போராட்டங்களின் ஒரு தொடர்ச்சியாகும்.

நவீனரக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று Duterte அரசாங்கம் கோருகிறது. இதற்கு பெரிய நிறுவனங்கள் மட்டுமே தேவையான வண்டிகளை கொடுப்பதற்கு முடியும் என தொழிற்சங்கக் கூட்டணி குற்றம் சாட்டின. மேலும் ஜீப்னிகளை மேம்படுத்துவதற்காகவும் சாலை தகுதிவாய்ந்தவைகளாக விதிகளை செம்மையாக அமுல்படுத்த வேண்டும் என ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறோம். தொழிற்சங்க கூட்டணி பிப்ரவரியில் நில மற்றும் போக்குவரத்து தனியுரிமை பெற்றவர்களிடமும் ஒழுங்குமுறை வாரியத்திடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

தற்காலிக திட்டத்தின் கீழ், ஒரு ஜீப்னி உரிமையாளருக்கு ஒரு உரிமத்தைப் பெற 7 மில்லியன் பீசஸ் ($US140,393)  வேண்டும். 2018 க்குள் உரிமையாளர் 20 அலகுககள் வைத்திருக்கவேண்டும் மேலும் 2019 இல் 40 அலகுகளில் வண்டி ஓட்ட தொகுதி உரிமையை அதிகரிக்க வேண்டும். உரிமையாளர்கள் ஜீப்னி வண்டிக்கு GPS மற்றும் WI-FI இணைப்பினை கொண்டிருக்கவேண்டும்.

ஜூலையில் தொடங்க இருக்கும் ஜீப்னி வண்டிகளை இயக்காமல் நிறுத்துவதனால், 600,000 ஓட்டுநர்களும், 250,000 உரிமையாளர்களும் அதிகமாக இதனால் பாதிப்படைவார்கள்.

பர்மியன் ஆடைத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஹிலைங் தர்யர் தொழிற்துறை மண்டலத்தில் கூட்டு-ஆதாய ஆடைத்தொழிற்சாலையிலிருந்து (Join-Profit garment factory) 350 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மே 17 அன்று தொழிலாளர் சட்டங்களைப் தொழிற்சாலை அலுவலர்கள் பின்பற்றவேண்டும் எனவும் முந்தைய ஒப்பந்தங்களை மீறக்கூடாது எனவும் கோரி போராட்டத்தினை மேற்கொண்டனர். அவர்கள் வரையறுத்து ஒப்புக்கொண்ட தொழிலாளர் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும் கண்காணிப்பாளர்கள் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னைய தொழிலாளர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் எனவும் அதன் பிரதிநிதி ஒருவர் குற்றம் சுமத்தினார்.

தொழிலாளர்களுக்கு குறைந்தளவு சம்பளம் கொடுக்கப்படுவதும், அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துவதும், மற்றும் அவர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளத்தை பிடித்தம் செய்வதும் மற்ற குறைகளாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிறுவனத்திற்கு வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

நேபாள பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ட்ரிபூவன் பல்கலைக்கழகத்தின் (TU) 60 கட்டமைப்பு வளாகங்களிலிருந்து   நூற்றுக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் மே 18ன்று காலவரையற்ற வெளிநடப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.    அரசாங்கத்திற்கும் மற்றும் எட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு உண்ணாவிரதப் போராட்த்தின் போது கையொப்பமிட்ட ஒரு ஒப்பந்தத்தை அமுல்படுத்த தவறிய பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலுவாட்டர் இல் அமைச்சரின் இல்லத்திற்கு வெளியே தினமும் ஒரு போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்நாள் வேலைநிறுந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் நடந்த ஒரு மோதலில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் சலுகைகளை தெரிவித்தது. ஆசிரியர்கள் அவர்களுடைய மூலப்படிவ ஒப்பந்ததை நடைமுறைப்படுத்தவேண்டும் என  முடிவெடுத்து அந்த சலுகையை எதிர்த்தாரகள்.

பகுதிநேர ஆசிரியார்களின் எண்ணிக்கைக்காக ஒரு ஒதுக்கீடு உருவாக்குவதற்கு ஒரு வேலைக்குழு உருவாக்குவது, ஒப்பந்தங்களுக்காக நிபந்தனைகளைத் தயாரித்தல், நிறைவேற்றப்பட்ட தரங்களால் ஒப்பந்த நியமனம் மேலும் ஒப்பந்த ஆசிரியர்களை அதிகரிப்பது உட்பட 2010ல் ஒப்பந்ததில் முடிவாயிருந்தது.

நேபால் பகுதிநேர ஆசிரியர்களின் சங்கத்தின் கூற்றுபடி, 1,200 க்கும் அதிகமான பகுதிநேர ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முழுநேர ஆசிரியர்கள் வாரத்தில் 10 வகுப்புக்கள் மட்டுமே கற்பிக்கும் அதேவேளை பகுதிநேர வேலையாளர்கள் ஒருவாரத்தில் 24 வகுப்புக்கள் எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மற்ற கொடுப்பனவுகள் மற்றும் ஒரு வகுப்புக்கு 2000 ரூபாய் பெறுகிற நிரந்தர ஆசிரியர்களுக்கு மாறாக இவர்களுக்கு ஒரு வகுப்புக்கு 360 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது என ஒரு தொடர்பாளர் கூறினார்.

இந்தியா: மேற்கு வங்க ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

மேற்கு வங்கம் ஹூக்ளியிலுள்ள ஜெயசிறி ஆடைத் தொழிற்சாலை  தொழிலாளர்கள் மே 16 லிருந்து சம்பள  மற்றும் ஏனைய  மேம்பாடுகள்  போன்ற கோரிக்கைகளைவைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தொழிற்சாலையின் அனைத்து உற்பத்தி செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.  கடந்தவார இறுதியில் ஆலைக்கு வெளியே ஒரு மறியல் போராட்டம் செய்தபோது அதனை காவல்துறையினர் கலைத்துவிட்டிருந்தனர். தங்களைத் துப்பாக்கிகளுடன்  அச்சுறுத்தியிருப்பதுடன் நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறையினர் செயற்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது ஏனேனில் 2015இல்  வேலைக்கான கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் 2018 யூலை வரை காலாவதியகவில்லை என நிர்வாகம் உரிமைகோரியிருக்கிறது.

பஞ்சாப் துப்புரவு தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்

பதின்டா மாநகராட்சி மன்றத்தின் 100க்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்கள் மே 22ன்று 320க்கும் அதிகமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப்பற்றிய ஒரு பிரச்சனைக்காக காலவரையற்ற வேலைநிறுத்ததினை மேற்கொண்டனர். மன்றத்தின் தேர்வாணையை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் எதிர்க்கிறது, ஏனென்றால் அது புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ”தகுதி” அடிப்படையில் தெரிவு செய்யப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஒரு அரசியலடிப்படையில் இந்த தெரிவு இருக்கலாம் என்று தொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும். இந்த செயற்பாட்டில் அதிக ஈடுபாடு இருக்கவேண்டும் என்றும் இது ஒரு வெளிப்படையானதாக இருக்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கேரளா துறைமுகத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம்.

அரசாங்கத்தின் புதிய கப்பல்துறை ஆணை மசோதாவினை எதிர்த்து  இந்திய தொழிற்சங்கங்களின் ஸ்ராலினிச மையத்தால் இணைக்கப்பட்ட இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் தொழிலாளர்கள். மே 23ன்று கொச்சி, வெளிங்கடன் தீவில் ஒரு இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். 2016 இல் பிரதானமான துறைமுகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான முதல் படியாக இந்த முக்கிய துறைமுக ஆணை மசோதா என அவர்கள் கவலைப்படுகின்றனர்.

துறைமுக ஆணைக் குழுவில் அவர்களுடைய இரண்டு பதவிகளை இழக்க நேரிடும் என்பதே சங்கத்தின் பிரதான கவலையாக இருக்கிறது.

மேற்கு வங்க காகிதத் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்

மேற்கு வங்கம், கொல்கத்தாவிலுள்ள மாநில அரசு நடத்தும் இந்துஸ்தான் காகித நிறுவனத்தின் சுமார் 1000 தொழிலாளர்கள் ஊதியங்களை செலுத்தக் கோரி மே 18ன்று நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 60 நிரந்தர ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சாதாரண மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 40 பேர் உட்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் ஊதியம் கொடுக்கப்படாமல் இருப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அஸ்ஸாம் உட்பட நிறுவனத்தின் இரண்டு ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் கிட்டத்தட்ட 1,600 தொழிலாளர்களின் ஊதியம் கொடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது என இந்துஸ்தான் காகித தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கம் ஆகியன கூறியிருக்கிறது. இந்த ஆலைகளை தனியார்மயப்படுத்துவதற்கு முயற்சிக்கிறது என தொழிலாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.

பாகிஸ்தான்: போராடும் அரசாங்க எழுத்தர்கள் மீது இஸ்லாமாபாத் காவல்துறையினர் தாக்குதல்

இஸ்லாமாபாத் இன் பல பகுதிகளில் 500க்கும் அதிகமான அரசு எழுத்தர்கள்  ஒரு ஊதிய உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தேசிய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டம் கண்ணீர் புகை மற்றும் பொல்லுகளால் முதலில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.. குற்றக்கட்டணம் எதுவும் விதிக்கப்படாமல் இறுதியில் எழுத்தர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

பல வருடங்களாக ஒரு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வுக்காக எழுத்தர்களின் வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் எழுத்தர்கள் சங்கம்  கோரியிருக்கறது. தொழிலாளர்கள் வாய்பேசாமல் அமைதியாக இருப்பதற்கு ஒரு கொடுமைப்படுத்தி மிரட்டும் விதமாக காவல்துறையின் நடவடிக்கை இருந்தது.

பஞ்சாப் பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்துவருகிற ஊதிய உயர்வு மற்றும் 20 சதவீத கொடுப்பனவுக்காகவும் திங்களன்று மாநிலத்தின் ஐந்து நகரங்களிலிருந்த பஞ்சாப் அரசாங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டனர்.  பஹவல்பூர், ஷஹிவல், ரஃஹிம் ஜர் ஹான், தோபா டெக் சிங் மற்றும் பஹவல்நகர் இல் இருக்கும் பஞ்சாப் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவை சங்கம் (PTAA)  போன்றவற்றின் உறுப்பினர்களால் இந்த பிரச்சனைக்காக வாரமொன்றில் தினமும் ஒரு மணிநேரம் வேலையைச் செய்யாமல் இந்த வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். ஒவ்வொரு நகரத்திலும் இந்தப் போராட்டத்திற்கான முகாம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

PTAA இன் கூற்றுப்படி, மார்ச்சில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மாநில முதலமைச்சர் நேரடியாக ஏற்றுக்கொண்டார் ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு நிதிச் செயலாளர் தாமதப்படுத்துகிறார். 2010 இல் மாகாணத்தில் மற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 20 சதவீத கொடுப்பனவு வழங்களுடன் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு PTAA இன்  பிரதிநிதி ஒருவர் கூறினார்.

கைபர் எல்லைப்புற மாகாண அரசாங்க சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சில ஊழியர்களுக்கு எதிராக இருக்கும் நிலுவையிலுள்ள குற்ற விசாரணைகளை திரும்பப்பெறவும் மற்றும் ஒழுங்குமுறை இடமாற்றலைத் திரும்பப்பெறவும் கோரி பெஷாவரில் உள்ள பல அரசாங்க மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் மே 18 ன்று வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டனர்.  ஜின்னா பூங்காவில் அனைத்து தொழிலாளர்கள் கூட்டுறவு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு லேடி ரீடிங் மருத்துவமனை, கைபர் போதனா மருத்துவமனை மற்றும் ஹையாடாபாத் மருத்துவ வளாகம் ஆகியவற்றின் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.

முந்தைய போராட்டங்களில் பல ஊழியர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட காவல்துறையினர் விசாரணைகள் அல்லது முதல் தகவல் அறிக்கைகள் (FIRs) போன்றவற்றை திரும்பப்பெறவேண்டும் என்று சுகாதாரதுறை ஊழியர்கள் கேட்டனர்.  தொழில்துறை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதிலிருந்து தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக முதல் தகவல் அறிக்கைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.