ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Behind the US war drive against North Korea

வடகொரியா மீதான அமெரிக்க போர் உந்துதலின் பின்னணியில்

Peter Symonds
30 May 2017

கொரிய தீபகற்பத்திற்கு அருகே அமெரிக்கா அதன் இராணுவ தயாரிப்பை தொடர்ந்துவரும் நிலைக்கு மத்தியில், சமீபத்திய ஒரேவகையான ஏவுகணை சோதனைகளின் தொடர்ச்சியாக, திங்களன்றும் வட கொரியா மேற்கொண்ட ஒரு குறுகிய தூர ஏவுகணை சோதனை வெடிப்பானது வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மற்றொரு சுற்று கண்டனங்களையும், எச்சரிக்கைகளையும் அது தூண்டியுள்ளது. அந்த பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை, USS Nimitz ஐயும், அதன் போர் குழுவையும் நிலைநிறுத்தியுள்ளதாகவும், வட கொரியாவிற்கு எதிராக அவர்களது பாரிய தாக்குதல் பலத்தை நிகழ்த்தகூடிய விதமாக மூன்று விமானந்தாங்கி கப்பல்களை அங்கு கொண்டுவந்துள்ளதாகவும் கடந்த வாரம் அது அறிவித்தது.

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு வளைந்துகொடுத்து பியோங்யாங் அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடுமாறு அதனை வலியுறுத்தி “கடும் முயற்சி” செய்துவரும் அதன் அண்டைநாடான சீனாவிற்கு அது “பெரும் அவமதிப்பை” காட்டியுள்ளது என்று ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஏவுகணை சோனைக்கு விடையிறுத்து ட்வீட் செய்துள்ளார். பியோங்யாங் ஆட்சிக்கு கடிவாளமிட தனது பொருளாதார பலத்தை பயன்படுத்துவதற்கு, அனைத்திற்கும் மேலாக அதன் நுழைவாயிலில் இருக்கும் போர் அச்சுறுத்தலுக்கு ஊடாக, பெய்ஜிங் மீது வாஷிங்டன் பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

ஞாயிறன்று CBS இன் “Face the Nation” பற்றி பேசுகையில், சீனா மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தையே கொண்டுள்ளது என்பதை அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெளிவுபடுத்தினார். வட கொரியாவை “அமெரிக்காவிற்கான ஒரு நேரடி அச்சுறுத்தல்,” என்று அவர் கண்டனம் செய்ததுடன், மேலும் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “அதனுடான ஒரு அணுஆயுத போர் முனையில் அவர்கள் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பெருவெடி ஏவுகணையை அவர்கள் உருவாக்கும் வரை நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை.” வட கொரியாவுடனான எந்தவொரு போரும் “பேரழிவு” கொண்டதாக இருக்கும் என்பதுடன், “ஒருவேளை பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்நாளில் ஈடுபடும் மிக மோசமான ஒரு போராட்டமாகவும்” அது இருக்கும் என்று மாட்டிஸ் எச்சரித்தார்.

வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலானது, பியோங்யாங் ஆட்சியையும், அதன் சிறிய அணுஆயுத தொகுப்பை முன்வைத்து அது அச்சுறுத்துவதையும் குறைகூறி இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களில் செய்யப்படுகின்ற இடைவிடா பிரச்சாரத்துடன் இணைந்துள்ளது. அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய வகையிலான வட கொரியாவின் எந்தவொரு முயற்சியும் “செயலூக்கம் உடைய மற்றும் பெரும் அடக்குமுறையுடனான” விடையிறுப்பை, அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய அணுஆயுத படைக்கலங்களை பயன்படுத்தி அழிக்கும் திறனை அது எதிர்கொள்ள நேரிடுமென மாட்டிஸ் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான மோதல்களைப் போலவே, வட கொரியாவின் “பேரழிவு ஆயுதங்கள்” மற்றும் அதன் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களும், ஒரு சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாட்டிற்கு எதிரான போரை தயாரிப்பதற்கு வசதியான சாக்குப்போக்குகளாக உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏனைய, கொள்ளையடிக்கும் வகையிலான, பொருளாதார மற்றும் பூகோள மூலோபாய இலக்குகளைக் கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பியோங்யாங் ஆட்சியை அழிக்கும் ஒரு போரானது சீனாவை பலவீனப்படுத்தி, வலுவற்று போகச் செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் என்பதுடன், அமெரிக்காவிற்கும் மற்றும் அதன் நட்பு நாடுகளான வடகிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கும் எப்பொழுதும் எதிரான ஒரு முக்கியமான முட்டுக்கட்டையாக வட கொரியாவை எப்போதும் கருதுகின்றது.    

ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் இராணுவவாத போக்குகளின் காரணமாக மட்டுமே கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களின் திடீர் எழுச்சி அடையவில்லை. மாறாக, 2008 இன் உலகளாவிய நிதியியல் நெருக்கடியை அடுத்து மோசமான முதலாளித்துவ முறிவு ஏற்பட்டதன் மூலம் எரியூட்டப்பட்ட நிலையில், ஆசியாவிலும், உலகெங்கிலுமான பூகோள அரசியல் போட்டியாளர்களை விரைவாக கூர்மைப்படுத்தும் ஒரு சாதனமாக வட கொரியாவிற்கு எதிரான ட்ரம்பின் ஆக்ரோஷமும், அச்சுறுத்தும் நிலைப்பாடும் இருக்கிறது. 

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின்னர், அதன் போட்டியாளர்களிடமிருந்து வரும் எந்தவொரு பொருளாதார அல்லது இராணுவ ரீதியான சவால்களை தடுப்பதாகவும், அதிலும் குறிப்பாக யுரேஷிய நிலப்பகுதியை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதாகவும் தான் அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய நோக்கம் இருந்துவருகிறது.

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski, 1997 ல் வெளியுறவு விவகார சஞ்சிகையில் இருந்த நியாயத்தை பின்வருமாறு விளக்கினார்; “யுரேஷிய நிலப்பகுதி மீதான அதிகாரப் பகிர்வுடன் என்ன நடக்கிறதென்பது அமெரிக்காவின் உலகளாவிய முன்னுரிமை மற்றும் வரலாற்று மரபுக்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒரு உறுதியற்ற யுரேஷியாவில், எந்தவொரு நாடோ அல்லது நாடுகளின் கலவையோ, அமெரிக்காவை வெளியேற்றவோ அல்லது அதன் தீர்க்கமான பங்கை குறைக்கும் திறனையோ கொண்டிருக்காது என்பதை உறுதி செய்வதற்கான உடனடி பணி உள்ளது.”

1950  லிருந்து 1953 க்கு மத்தியில், வட கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா அதன் மேலாதிக்க நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக மில்லியன் கணக்கிலான உயிர்களை பலியெடுத்த ஒரு குற்றவியல் போரை அமெரிக்கா சீனாவிற்கு எதிராக கொரிய தீபகற்பத்தின் மீது நடத்தியது. பியோங்யாங் உடன் எந்தவொரு சமாதான உடன்படிக்கையிலும் வாஷிங்டன் ஒருபோதும் கையொப்பமிடாத நிலையில், அதன் மீதான வாஷிங்டனின் அணுகுமுறை எப்பொழுதும் ஒரு இடைவிடாத விரோதப் போக்காகவே உள்ளது. சோவியத் ஒன்றிய பொறிவுக்கு பின்னர், அமெரிக்க மூலோபாயம் ஆட்சி மாற்றத்தையும், சீனாவின் செலவில் அதன் செல்வாக்கு மண்டலத்துக்குள் வட கொரியாவை இணைப்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் வட கொரியாவுடன் அதன் சார்பான அணுஆயுத ஒழிப்பு குறித்த உடன்படிக்கை எதையும் அமெரிக்கா மேற்கொள்ள தவறிவிட்டது.      

வட கொரியா மீதான அமெரிக்க தாக்குதலினால் அதிகரித்துவரும் அபாயமும், அமெரிக்க அரசியல் ஆளும் வர்க்கத்திற்கும், அரசு இயந்திரத்திற்கும் இடையேயான வெளிநாட்டுக் கொள்கை மீதான ஒரு வெளிப்படையான மறைக்கமுடியாத உள்நாட்டு யுத்தமும் ஒரே காலகட்டத்தில் நிகழ்கின்றன. உண்மையில், அங்குள்ள கருத்துவேறுபாடுகள், அமெரிக்கா யுரேஷியாவில் அதன் மேலாதிக்கத்திற்கான உந்துதலில், ரஷ்யா அல்லது சீனா எதன் மீது முதலில் கவனம் செலுத்தவேண்டும் என்ற தந்திரோபாயம் தொடர்பானதே. மாஸ்கோவுடனான ஒரு மோதலுக்குப் பதிலாக பெய்ஜிங் உடனான ஒரு மோதலை நோக்கி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளை தடுப்பதன் மூலமாக, ரஷ்யாவிற்கு தொடர்புடையதாக கூறப்படுகின்ற ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த நிலையான தடை உந்தப்படுகிறது.

சீனாவை தனிமைப்படுத்தவும், இராணுவ ரீதியாக அதனை சுற்றிவளைப்பதற்குமான உந்துதலாக இருந்த ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை” கொள்கை தோல்வியடைவது குறித்து அதிகரித்துவரும் அறிகுறிகளுக்கான விடையிறுப்பின் ஒரு பகுதியாகவே பெய்ஜிங் மீதான வாஷிங்டனின் வட கொரியாவின் மீதான அதன் அழுத்தம் உள்ளது, ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவின் கீழ் பிலிப்பைன்ஸின் சரிவு, வாஷிங்டனிலிருந்து விலகியதாகவும், பெய்ஜிங் உடனான நெருக்கமான உறவுகளை நோக்கியதாகவும் இருப்பது, ஆசியா எங்கிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் சீனாவில் பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு இதேபோன்ற மோதல்களின் மிக வெளிப்படையான அடையாளமாகவும் உள்ளது. 

வார இறுதியில் G7 கூட்டத்திற்கு பின்னர், அதிபர் அங்கேலா மேர்க்கெல்,  அமெரிக்காவை நம்புவதற்கு மாறாக, “ஐரோப்பியர்களான நாங்கள் உண்மையில் எங்கள் விதியை எங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று அறிவித்தது போன்ற, ஜேர்மனிலிருந்துவரும் மிக வெளிப்படையான சவால்களுக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா முகம்கொடுத்து வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில், சீனா அதன் பேராவலுள்ள ஒரே இணைப்பு, ஒரே பாதை முன்முயற்சியை முறையாக அறிமுகப்படுத்தியது. இது சீனாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்ற வகையில், யுரேஷியா முழுவதிலும் சாலைகள், துறைமுகங்கள், குழாய்வழிகள், இரயில்வே இணைப்புக்கள் மற்றும் தொலைதொடர்புகள் ஆகியவற்றை அமைக்கின்ற பாரிய உள்கட்டமைப்பு செலவுக்கான ஒரு திட்டமாகும். குறிப்பிடத்தக்க வகையில் ஜேர்மனி, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே சீனாவுடனான பொருளாதார உறவுகளை அதிகரிப்பதாகக் கருதப்பட்டு, பெய்ஜிங் கூட்டத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தை பெற்றன.

சீனாவை பொருளாதார ரீதியாக விலக்கிவிட முடியாத நிலையில், ஒரு ஆற்றல்வாய்ந்த போட்டியாளரை வலுவற்று போகச் செய்வதற்கும், பெய்ஜிங் உடனான அதன் போட்டியிடும் உறவுகளை தகர்ப்பதற்கும் அமெரிக்கா அதன் இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான தயாரிப்புகளை முதல் முறையாக அல்லாமல், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2002 ல், ஜனாதிபதி புஷ் ஈரான் மற்றும் ஈராக்குடன் சேர்த்து வட கொரியாவையும் “தீமை அச்சின்” ஒரு அங்கமாக முத்திரை குத்தியதுடன், அணுஆயுத ஒழிப்பு குறித்து, அதனுடனான ஒரு உடன்படிக்கையை முறித்துக்கொள்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம், சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆதரவுடன் தென் கொரியாவின் “சூரியஒளி கொள்கையை” திறம்பட அழித்தது என்பதானது, கொரிய தீபகற்பத்தை ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவை இணைப்பதற்கான ஒரு போக்குவரத்து மற்றும் குழாய் வழித்தடமாக மாற்றுவதற்கான ஒரு திட்டமாக இருந்தது. 

பதினைந்து வருடங்களுக்கு பின்னர், இதில் இன்னும் பல விடயங்கள  தொடர்புபட்டிருப்பதுடன் போருக்கான அச்சுறுத்தலும் மிகப் பெரியளவில் உள்ளது. உள்நாட்டில் பெருகிவரும் அரசியல் நெருக்கடிக்கும், கடுமையான சமூக பதட்டங்களுக்கும் முகம் கொடுக்கின்ற ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதில் இன்னும் மிகமிக அதிகமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரிய தீபகற்பத்தின் மீது அல்லது தென் சீன கடல் போன்ற மற்றொரு வெடிப்பு புள்ளியின் மீது, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ நடவடிக்கைகளை எடுக்க உந்துதல் அளித்துவருவதானது அணுஆயுதம் தாங்கிய சக்திகளுக்கு இடையிலான ஒரு போரை துரிதப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலாகவும், பேரழிவுகொண்ட மோதலாகவும் இருக்கும்.