ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian authorities intensify vendetta against framed-up Maruti-Suzuki workers

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றனர்

By Keith Jones 
22 February 2018

பாதிக்கப்பட்ட இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்கள், அவர்களது சக தொழிலாளர்கள் 13 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டுமென ஹரியானா மாநில அரசுத் தலைமை வழக்கறிஞரின் உத்திரவின் பேரில் செயலாற்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் கடந்த வார இறுதியில் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு செய்தி அளித்துள்ளனர்.

இந்த 13 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஆவர். ஆனால், இந்திய ஆளும் உயரடுக்கினருக்கோ அல்லது ஜப்பானை தளமாக கொண்ட நாடுகடந்த நிறுவனமான சுசூகியின் உரிமையாளர்களுக்கோ இது திருப்தியளிப்பதாக இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன், தொழிலாளர்களின் இரத்தத்திற்காக அவர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.

இந்த 13 பேரில் பன்னிரண்டு பேர், நிர்வாகத்திற்கும் மற்றும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற, நிறுவன எடுபிடி தொழிற்சங்கத்திற்கும் எதிராக 2011-12 இல் ஹரியானா மாநிலத்தில் மானேசரில் மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டதான மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) நிர்வாக உறுப்பினர்களாவர்.


மாருதி சுசூகி தொழிலாளர்கள் 13 பேர்

கலகம் செய்தனர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஏனைய 117 மாருதி சுசூகி தொழிலாளர்களின் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை மாற்றியமைக்க அரசாங்க வழக்கறிஞர்களும் முனைவதாக கூறப்படுகிறது.

பொலிஸ், வாதித்தரப்பு, நீதித்துறை மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டு ஆகியவற்றின் ஈடுபாட்டிலான ஒரு சட்டபூர்வமான பழிவாங்கலுக்குரிய இலக்காகவே மாருதி சுசூகி தொழிலாளர்கள் இருந்துள்ளனர். 2012 கோடையில், இந்த ஜோடிப்பு வழக்கு தொடரப்பட்டது, மேலும் அதனுடன் தொடர்புடையதொரு நிகழ்வாகவே 2,300 தொழிலாளர்களின் பணிநீக்கமும் மானேசர் ஆலையில் செயல்படுத்தப்பட்டது, அப்போது ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்ததுடன், இந்திய தேசிய அரசாங்கத்திற்கும் தலைமை வகித்தது. 2014 இல் இவர்களுக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழும் இதுவே கண்மூடித்தனமாக தொடரப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்தில், மரணதண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்ட இந்த 13 தொழிலாளர்களுடன் சேர்ந்து குறைந்த குற்றங்களின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட ஏனைய 18 தொழிலாளர்கள், மேலும் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 117 தொழிலாளர்கள், இவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் அதிகாரிகள் மேல்முறையீடு செய்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, இத்தொழிலாளர்கள் அனைவரின் மீதான ஒரே “குற்றம்” என்னவென்றால், குறைவூதியங்கள், பாதுகாப்பற்ற வேலை, கொடூரமான வேலை ஆட்சிமுறை ஆகியவற்றிற்கு எதிராக இவர்கள் கிளர்ச்சி செய்தனர் என்பது தான்.

உலக சோசலிச வலைத் தளம், மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடச் செய்வதற்கும், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான எங்களது முயற்சிகளின் ஒரு பாகமாக, போலிக் குற்றச்சாட்டுக்கள் குறித்த ஐந்து பாகம் கொண்ட ஒரு விரிவான செய்தி வெளியீட்டை முன்னரே வழங்கியுள்ளது. (பார்க்கவும்: “The frame-up of the Maruti Suzuki workers—Part 1: A travesty of justice”)

ஜூலை 18, 2012 அன்று, நிர்வாகம் தொழிலாளர்கள் உடனான ஒரு மோதலைத் தூண்டியது. இதனைத் தொடர்ந்த கைகலப்பில், திடீரென மர்மமான முறையில் வெடித்த நெருப்பானது தொழிலாளர்களிடம் அனுதாபமிக்க ஒரு மேலாளரான அவினேஷ் தேவ் மூச்சுத்திணறலினால் இறப்பதற்கு வழிவகுத்தது. இது நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக, இந்திய தலைநகரம் தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மாபெரும் குர்கான்-மானேசர் தொழில்துறை எல்லைக்குள் தொழிலாளர்கள் எதிர்ப்பின் மையமாக உருவான இந்த ஆலையின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்காக, ஹரியானா காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் அங்கு பொலிஸ் மீண்டும் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டனர்.       

விசாரணை செய்வது போன்ற பாசாங்கு கூட இல்லாமல், பொலிஸ், நிர்வாகத்துடன் கைகோர்த்து வேலை செய்து, கைகலப்பு ஏற்பட்டதற்கும் நெருப்பு பற்றிக் கொண்டதற்கும் தொழிலாளர்களைக் குற்றம்சாட்டியதுடன், நிறுவனம் அளித்த “சந்தேகத்திற்குரிய” நபர்களின் பட்டியலை பயன்படுத்தி ஏராளமான தொழிலாளர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட சில தொழிலாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து “ஒப்புதல் வாக்குமூலங்கள்” பெறுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தும் வகையில் சித்திரவதையும் செய்யப்பட்டனர்.

148 தொழிலாளர்கள் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணையும் நீதியை பரிகசிப்பதாகவே இருந்தது.

ஜூலை 12, 2012 அன்று ஆலையில் இருந்த ஆனால் குற்றம் சாட்டப்படாத மாருதி சுசூகி தொழிலாளர்கள் யாருமே சாட்சியம் கூற அழைக்கப்படவில்லை. அந்த தவிர்ப்பை நியாயப்படுத்த அன்று தலைமை வகித்த நீதிபதி கூறியதாவது அவர்கள் தவறான சாட்சியங்களை கொடுத்திருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் பரிவு கொண்டவர்களாக இருந்திருக்கலாம், அல்லது MSWU இனால் மிரட்டப்படிருக்கலாம் என்றார்.   


கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் பொலிஸ் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர் (ராகுல் ராய் இன்தி ஃபேக்டரிதிரைப்படத்திற்கு நன்றி)

வாதித்தரப்பு கொலை வழக்கின் அடிப்படையாக இந்த தீ விபத்து இருந்தது. எங்கு, எப்போது, அல்லது எப்படி தீ பற்றிக்கொள்ளத் தொடங்கியது என்பதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை. அங்கு ஒரு தீப்பெட்டி கிடந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகளால் கூறப்பட்டது, எனினும், நெருப்பு பற்றியது குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் போது அதைக் கண்டறிவது விடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது, மற்றும் நெருப்பு சுவாலையில் அழிந்துபோன ஒரு பகுதியில் சிறிதும் சேதமடையாமல் அது எப்படி தப்பித்தது என்பதை விளக்கமுடியவில்லை. ஆனால், எந்தவொரு தொழிலாளிக்கும் இந்த தீப்பெட்டிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

ஏனைய முக்கியமான ஆதாரங்களுக்கான தடயங்களை கண்டறிய தவறியது போலவே இந்த தீப்பெட்டி குறித்த மிக அடிப்படையான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸ் தவறிவிட்டது.

நிறுவன மேலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர்கள் என்ன வகையான ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று கூறப்பட்டது உட்பட, இந்த வழக்கு பற்றிய அதன் கதையின் அடிப்படை கூறுகளை கூட வாதித்தரப்பு மாற்றியது.

மானேசர் ஆலையில் பணிபுரியாத மாருதி சுசூகி அதிகாரி மூலமாக வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 89 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் என்பதை பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார், மற்றும் அதற்கு பின்னர் தொழிலாளர்களை சிக்கவைக்க, புனையப்பட்ட ஆதாரங்களாக நான்கு “சாட்சியங்களை” கண்டறிந்தனர், அதற்கு காரணம் அவர்களது சட்டவிரோதமான கூட்டு சதி அம்பலமாகிவிடக் கூடும் என்ற பயம் தான். ஜூலை 18, 2012 கைகலப்பில் அவர்கள் தலையிட்ட போது, அவர்களை தொழிலாளர்கள் தான் தாக்கினார்கள் என்ற தங்களது கூற்றுக்கான ஒரு “ஆதாரமாக”, பொலிஸ்காரர்கள் பலரும் போலியான மருத்துவ சட்ட சான்றிதழ்களையே (Medico Legal Certificates-MLCs) சமர்ப்பித்தனர்.

பொலிஸின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி சட்டவிரோதமானவையாக இருந்தன என்பதால், எந்தவித வாதித்தரப்பு சாட்சியமும் அடையாளம் காணப்படாத அல்லது சரியாக அடையாளம் காணப்படாத நிலையில் ஏனைய 29 தொழிலாளர்களுடன் சேர்த்து 89 பேரையும் மன்னித்து விடுவிக்க நீதிபதி நிர்பந்திக்கப்பட்டார்.

ஆனால், MSWU தலைவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஜோடிக்கப்பட்ட வழக்கின் மிகவும் அத்தியாவசியமான பகுதியை “காப்பாற்றும்” நோக்கத்துடனேயே நீதிபதி அவ்வாறு செய்தார்.

அவர்களை குற்றவாளிகளாக கண்டறிவதில், வாதித்தரப்பிடம் இருந்து பெறப்பட வேண்டிய ஆதாரங்களின் சுமையை தொழிலாளர்கள் மீது அவர் திரும்ப திரும்ப மாற்றியதுடன், புனையப்பட்ட சாட்சியங்களை அழைத்துவந்த அதே பொலிஸின் மூலமாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக மொத்த வழக்கின் போக்கு இருப்பதையும், மாருதி சுசூகி நிர்வாகத்துடனான கூட்டு சதியில் இணைந்த அதே காவல் துறை ஆய்வாளர் மூலமாகத்தான் இது வழிநடத்தப்பட்டது என்பதையும் மற்றும் குறுக்கு விசாரணையின் கீழ் அவரது MLCs மோசடியானவை என கண்டறியப்பட்டதையும் அவர் நன்கு தெரிந்தே அலட்சியப்படுத்தினார்.

விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருந்த அதேவேளையில், தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதில் இந்திய அதிகாரத்தட்டுக்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியும் என்று முதலீட்டாளர்களுக்கு மீள்உறுதி செய்ய வேண்டிய தேவையுடன் அதனை திரும்ப திரும்ப அரசியல்வாதிகளும் வாதித்தரப்பினரும் தொடர்புபடுத்தினர். 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை சிறைவாசம் விதிக்கப்பட்டதற்கு மாறாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தும் விதத்தில், சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா பிரகடனம் செய்தார்; “நமது தொழில்துறை வளர்ச்சி சரிந்துவிட்டது, வெளிநாட்டு நேரடி முதலீடும் (Foreign Direct Investment-FDI) வறண்டுவிட்டது” என்றார். பிரதம மந்திரி நரேந்திர மோடி “இந்தியாவில் தயாரிப்பு செய்யுங்கள்” எனும் திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார், ஆனால் அதற்கு மாறாக இத்தகைய சம்பவங்களோ நமது கண்ணியத்தின் மீதான ஒரு கறையாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மானேசர்-குர்கான் தொழில்துறை பகுதி மற்றும் இந்தியா எங்கிலும் உள்ள வேலை வழங்குநர்கள், சிறந்த ஊதியம், வேலை நிலைமைகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கை அச்சுறுத்தல்கள் ஆகியவை பற்றிய கோரிக்கைகளுடன் எதிர்த்து நின்ற மாருதி சுசூகி தொழிலாளர்கள் எதிர்கொண்ட விதியை தற்போது வழக்கமாகவே இதர தொழிலாளர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டுகின்றனர்.

இதற்கிடையில், பிரதம மந்திரி மோடியும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து 11 மாதங்களில் சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமு சுசூகி உட்பட, மாருதி சுசூகி அதிகாரிகளை பலமுறை சந்தித்தனர்.


மாருதி சுசூகி மானேசர் தொழிலாளர்களின் ஜூன் 2011 உள்ளிருப்பு போராட்டம் (குர்கான் தொழிலாளர் செய்திகளுக்கு நன்றி)

ஒரு உலகளாவிய மலிவுகூலி உழைப்பு உற்பத்தி சங்கிலியின் மையமாக இந்தியாவை உருவாக்கும் தங்களது முயற்சிகளில் சுசூகியை ஒரு முதன்மை நிறுவனமாக அவர்கள் பார்க்கின்றனர். இந்திய தொழிலாளர்களுக்கான செலவினங்கள் சீனாவில் இருப்பதைவிட மிகவும் குறைவானவையே என்று மோடி மீண்டும் மீண்டும் பெருமையடித்துக் கொள்கிறார். உண்மையில், இந்தியாவில் உள்ள தொழில்துறை ஊதியங்கள் தற்போது சீனாவில் இருப்பதை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு குறைவானதாகும்.

இந்தியாவின் கூலிக்கு மாரடிக்கும் ஆளும் உயரடுக்கு மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக தனது பழிவாங்குதலின் மூலம் மிருகத்தனமான சுரண்டல்களின் இத்தகைய சூழ்நிலைகளை தக்கவைத்துக் கொள்ள முனைந்து வருகிறது.

MSWU தலைவர்களுக்கு மரண தண்டனையை விதிக்க செய்யவும், 117 தொழிலாளர்களின் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தடுக்கவும் முனைவதற்கு ஒருவேளை இந்திய அதிகாரிகள் இப்போது துணிவுடன் இருப்பார்கள், ஏனென்றால் தொழிற்சங்கங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளும் மாருதி சுசூகி தொழிலாளர்களை முற்றிலும் கைவிட்டுள்ளனர்.

பல வாரங்களாக, 13 தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஸ்ராலினிஸ்டுகள் அவர்களது இணைய தளத்தில் அல்லது அவர்களது செய்தித்தாள்களில் செய்தி வெளியிடுவதற்கு முதலில் தவறினர், பின்னர் வெளியிட்டனர் என்றாலும் மீண்டும் விரைவாக அவர்கள் மௌனத்தையே கடைபிடித்தனர்.

மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட அவர்கள் ஒரு விரலைக் கூட உயர்த்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால் அரசியல் ஸ்தாபகத்துடனான அவர்களது வசதியான உறவுகள் ஆபத்துக்கு உள்ளாகும்.

ஸ்ராலினிச தலைமையிலான CITU மற்றும் AITUC போன்ற இந்தியாவின் பிரதான தொழிலாளர் கூட்டமைப்புகளின் பங்கு பற்றி கேட்கப்பட்ட போது, MSWU இன் இடைக்கால குழு உறுப்பினர்களான அபிராம் மற்றும் ஜிதேந்தர் ஆகிய இருவரும், 13 தொழிலாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான மாநிலத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் பற்றி WSWS இடம் தெரிவித்த போது, “குற்றச்சாட்டுக்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, அவர்கள் எங்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் இங்கே முழுமையாக முடிந்துபோய்விட்டார்கள். தொழிற்சங்கங்கள் தங்களது சந்தா பணங்களை வசூல் செய்வதில் தான் அக்கறை செலுத்துகின்றனர். தொழிலாளர்கள் ஒரு மாற்றீட்டை விரும்புகிறார்கள்” எனக் கூறினர்.

இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க கண்டிப்பாக முன்வர வேண்டும். கொத்தடிமை சுரண்டலுக்கு சவால் விடுவதில், இந்திய தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாமல் உலகெங்கிலுமான ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காக ஒரு படி முன்னெடுத்து அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். உலக மூலதனத்தை எதிர்த்துப் போராட தேவையாகவுள்ள தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய முதல் படியாக அவர்களை பாதுகாப்பு உள்ளது.

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்! [PDF]