ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Responding to US threats, Russian President Putin proclaims nuclear arms race

அமெரிக்க அச்சுறுத்தலுக்குப் பதில்கொடுக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அணுவாயுதப் போட்டியை அறிவிக்கிறார்

By Andre Damon
2 March 2018

வியாழன் அன்று ரஷ்யப் பாராளுமன்றத்தில் போர்நாட்டம் கொண்ட தேசியவாத உரையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்யாவின் அணுவாயுத முன்னேற்றம் பற்றி தம்பட்டம் அடித்ததோடு, எந்த அமெரிக்க அணுவாயுத தாக்குதலுக்கும் “உடனடியாக” பதிலடி கொடுக்கப்படுமென அச்சுறுத்தியதுடன், அமெரிக்காவின் மீதான அணுவாயுத தாக்குதலைப் படம்பிடித்துக்காட்டும் ஒரு காணொளியை காட்டினார்.

அமெரிக்க செய்தி ஊடகத்தில் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு வெறித்தனமான போர்-வெறிபிடித்த பிரச்சாரத்திற்கு இடையே வரும் புட்டினின் பேச்சு, அமெரிக்க-ரஷ்ய உறவுகளின் முறிவின் மிக வெளிப்படையான அறிக்கையாகவும் ஒருவேளை இருக்கலாம் என்பதோடு, இருநாடுகளுக்கும் இடையில் எழும் போர் மனிதகுலம் முகங்கொடுக்கும் அச்சுறுத்தலையும் உயர்த்திக்காட்டுகிறது.

“சிரியாவில் நடவடிக்கை ரஷ்ய ஆயுதப் படைகளின் அதிகரித்த தகமைகள மெய்ப்பித்துள்ளது” என்று வீண்பெருமை பீற்றிய புட்டின் ரஷ்யா அதன் அணுவாயுதங்களை நவீனப்படுத்துவதற்கும் அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு முறையை தாண்டி முன்செல்வதற்குமான ரஷ்யாவிலான மிக-நவீன திட்டங்களை விவரித்தார்.

இவற்றுள் மிகவும் முக்கியமானது சர்மாட் ஏவுகணைத் திட்டம் என்றழைக்கப்படும், ஒரு புதிய கனரக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ரஷ்யப் படைகளால் ஏற்கெனவே நிறுத்தி வைக்கட்டுள்ளது. அதனைக் கண்டு பிடிப்பதை மற்றும் இடைமறித்தலை தவிர்க்கும் மற்ற பல்வேறு சிறப்பியல்புகளுடன் சேர்த்துக் கூடுதலாக,  புதிய ஏவுகணையானது அமெரிக்காவை தெற்கிலிருந்து தாக்கவல்லது, வடக்குநோக்கி கூடுதலாக வைக்கப்பட்டுள்ள ஏவுகணைப் பாதுகாப்பு முறையான தற்போதிருக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறையை மிகவும் தாண்டிச் செல்லக்கூடியதாகும்.

வரிசையான அடுத்த தலைமுறை ஆயுத முறை என அவர் கூறிய அனைத்தும் முன்னேறிய சோதனை நிலையில் உள்ளன என்று கணிசமான விவரத்துடன் புட்டின் மேலும் விளக்கினார். இவற்றுள் ICBM ஏவிடும் ஹைப்பர்சோனிக் ரீசன்ட்ரி வாகனம், அது அதன் இலக்கைநோக்கி விண்கற்கள்போல், நெருப்புப் பந்துபோன்று பறக்கக் கூடியது,” ஒரு அணுவாதம் தாங்கிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையானது அணு உலையால், அணுவாயுதம் தாங்கிய கடலுக்கடியிலான குண்டு வீச்சு விமானம் மற்றும் ஹைப்பர் சோனிக் ஏவுதல் கொண்ட அணுவாயுதம் ஏவக்கூடிய வாகனத்தால் சக்தி ஊட்டப்படும்.

இந்த முறைகளின் அபிவிருத்தி என்பது, “கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வாபஸ்வாங்கியதற்கும் அமெரிக்காவிலும் அவர்களின் தேசிய எல்லைகளுக்கு வெளியிலும் இரண்டிலும் அவர்களின் ஏவுகணைப் பாதுகாப்பினை நடைமுறையில் நிறுவியதற்கும் ரஷ்யாவின் பதிலாகும் என்று புட்டின் கூறினார்.

அமெரிக்காவால் செய்யப்படும் வரிசையான வெடிப்புறு நடவடிக்கைகளுக்கு, மிகவும் குறிப்பிடத்தக்கவகையில் பிப்ரவரி 2 அன்று சமீபத்திய அமெரிக்க அணுவாயுதக் காட்சி மதிப்பீடு வெளியீட்டில், அது பெரிதும் விவரித்த காட்சிகளின் அளவில் அமெரிக்கா அணுவாயுதங்களைப் பயன்படுத்தும், மற்றும் வரிசையாய் குறுகிய தூரம்செல்லக்கூடிய யுத்த அணு ஆயுதங்கள் அபிவிருத்தியை முன்னிறுத்தி, அமெரிக்காவை சர்வதேச உடன்படிக்கைகளை மீற வைத்துள்ள நடவடிக்கைக்கு ஒரு பதிலாக புட்டின் தனது பேச்சை வடிவமைத்தார்.

அவரது பேச்சில் புட்டின் அறிவித்தார், “திருத்தப்பட்ட அணுவாயுத மதிப்பீட்டின் சில விதிமுறைகளால் பெருங் கவலைகொள்கிறோம், அது…. அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான நுழைவாயிலைக் குறைக்கிறது. மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே, யாரும் யாரையும் அமைதியடையச் செய்ய எதுவும் கூறலாம், ஆனால் நாம் என்ன எழுதியிருக்கிறது என்பதை படிக்கிறோம். எழுதி இருப்பது யாதெனில், மரபுவழி ஆயுத் தாக்குதல் மற்றும் சைபர் அச்சுறுத்தலுக்குக் கூட பிரதிபலிப்பாக இந்த மூலோபாயம் முன் வைக்கப்படும்” என்பதேயாகும்.

அமெரிக்க ஆவணமானது வாஷிங்டனின் இராணுவ ஆயுதங்களில் அணுவாயுதங்களைக் குறைக்கும் 2010ல் வெளியிடப்பட்ட அணுவாயுத நிலைப்பாட்டு மதிப்பீட்டிலிருந்து ஒரு பின்வாங்கல் போக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

“அரசின் இருப்புக்கே அச்சுறுத்தல் என்ற” தாக்குதலுக்கு பதிலானதில் மட்டுமே அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உரிமை உண்டு என ரஷ்யா எச்சரிக்கும் வேளை, புட்டின் அமெரிக்காவினால் வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் மேலாளுமை செய்யக்கூடியதாய் ரஷ்யா பதிலளிக்கும் என்று தெளிவுபடுத்தினார்.

“ரஷ்யாவுக்கோ அதன் கூட்டாளிகளுக்கு எதிராகவோ அணுவாயுதங்களை எந்த விதத்திலும் பயன்படுத்தல், சிறு, நடுத்தர அல்லது எந்த அளவினதாக இருப்பினும், ஒரு அணுவாயுதத் தாக்குதலாகவே கருதப்படும். பதிலடி உடனடியானதாக, வரும் அனைத்துவிதமான விளைவுகளுடன் இருக்கும்” என புட்டின் கூறினார்.

புட்டின் பேச்சுக்கு வெள்ளை மாளிகையின் பதிலானது,                                                               அதனை ரஷ்ய ஆயுதத்தால் பொருத்தமற்றதாக ஆக்கிவிட முடியாது, “அமெரிக்க பாதுகாப்புத் திறன்கள் ஒருவருக்கும் இரண்டாம்தரமானதாக இருக்காது” என்ற அதன் சொந்த அறிவிப்பை வெளியிட்டது, மற்றும் “ஜனாதிபதி ட்ரம்ப்” “வலிமையின் மூலம் எமது தாயகத்தைக் காப்பதற்கும் அமைதியைப் பேணுவதற்கும்” உறுதியாக உள்ளார் என்று அறிவித்தது.

ரஷ்யா பிராந்திய சக்தியாக உருவாவதைத் தடுக்க அமெரிக்காவால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பதிலிறுக்கையில், புட்டின் அறிவித்தார், “கடந்த 15 ஆண்டுகளாக ஆயுதப் போட்டியை வேகப்படுத்த முயற்சித்திருந்த மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக  ஒருதரப்பான முன்னேற்றத்தை பெறுவதை நாடியவர்களுக்கு… நான் இதைக் கூறுவேன்: அத்தகைய கொள்கை மூலமாக தடுப்பதற்கான எல்லாவற்றையும் நீங்கள் செய்தீர்கள். ரஷ்யாவைக் கட்டுப்படுத்த ஒருவராலும் முடியாது.”

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிப்படையான இராணுவ மோதலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முழு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு முறையும் உடையும் விளிம்பில் நிற்கின்றன என்ற வரிசையான எச்சரிக்கைகளுக்கு இடையே புட்டினது அறிக்கைகள் வருகின்றன.

மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையில் பதட்டங்கள் மீது கருத்துக்கூறும் வகையில், மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், புளூம்பேர்க், “மூலோபாய சமநிலையைப் பேணவும் எதிர்பாராமல் போர் நடப்பதைத் தவிர்க்கவும் வைக்கப்பட்டிருந்த பல பத்தாண்டுகால பழமையான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள்” முறிவதைப் பற்றி எச்சரித்தது.

“அமெரிக்காவில், ரஷ்யாவைத் தண்டித்தல் செய்ய வேண்டிய விடயம் என்ற கடும்வெறுப்பு பேரளவினதாக இருக்கிறது… நான் காண்கிறேன் ஆயுதக் கட்டுப்படுத்தலின் முழு ஆட்சியின் அழிவையும்” என்று கூறிய Carnegie Moscow Center இன் தலைவர் டிமிட்ரி ட்ரெனினால் வழங்கப்பட்ட கூற்றுக்களை அது மேற்கோள் காட்டியது.

பிரதான ஐரோப்பிய வல்லரசுகள் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு முரண்பாடான அணுகுமுறையை கொண்டிருந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மனிய வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியேல் "ஐரோப்பாவின் மையத்தில் மீண்டும் அணுசக்தி மோதல்களுக்கான அரங்கம் மீண்டும் ஒருமுறை இங்குதான் இருக்கும்" என்று எச்சரித்தார்.

கியூப ஏவுகணை 1962 நெருக்கடியின்பொழுது கூட இருந்ததை விட ”மிகவும் அதிக ஆபத்தாக” ஆகக்கூடிய பாதையில் நிலைமை இருக்கிறது என்று கூறிய முன்னாள் கிரெம்ளின் வெளியுறவு ஆலோசகர் செர்ஜி காரகனோவ் கூறியதையும் அது மேற்கோள் காட்டியது.

சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா மாநாட்டில் பொதுச்செயலர் அந்தோனியோ குட்டேரஸ், “எமது பொது இலட்சியத்தை: அணு ஆயுதமில்லா  ஒரு உலகை நோக்கி நாம் சேர்ந்து வேலை செய்தாக வேண்டும்” என்று அறிவித்த முடிவுரையைத் தொடர்ந்து புட்டின் பேச்சு தொடர்ந்தது.

ஆனால், புட்டின் கூற்றுக்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்த அமெரிக்க அணுஆயுதத் தோற்ற மதிப்பீடு, அத்தகைய சொற்றொடர்கள் எப்படி வெறுமையானவை என்பதைத் தெளிவுபடுத்தியது. உலகம் முழுவதிலும் புவிசார் அபிவிருத்திகளின் முழு வளைவரைகோடும், இறுதியில் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதில் உச்சம் அடையும், இராணுவ வெடிப்பில் ஒன்று என்பது தெளிவாகிறது.

அத்தகைய போர்வெறி அச்சுறுத்தல்களைச் செய்வதற்கான புட்டினின் முடிவானது, ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்குத் தயாரிக்கும் அமெரிக்க இராணுவத்தின் கணிசமான பகுதியினர் அங்கே இருக்கின்றனர் என்ற  அதிகரித்துவரும் வெளிப்படையான உண்மையை எதிர்கொள்கையில் விரக்தியின் ஒரு அம்சத்தை வெளிப்படுத்தும்.

இந்த உள்ளடக்கத்திற்குள்ளே, அவரது கண்காணிப்பின் கீழ், 1941 இல் சோவியத் ரஷ்யாவில் நாஜி ஊடுருவல் நடைபெற்றதுபோன்று திரும்ப நடைபெறாது, காரணம் நாடு முற்றிலும் தயாரிப்பின்றி இருந்தது என்று புட்டின் தெளிவுபடுத்தினார். அமெரிக்காவினைப் பின்னே தள்ளுவதற்கு அவரின் சொந்த இராணுவ அமைப்பிலிருந்து ஆழமான அழுத்தத்தின் கீழ் புட்டின்தாமே இருக்கிறார் என்று நம்புதல் யாதார்த்தமற்றது என்ற ஒன்றும் அல்ல.

புட்டின் அதனை வைத்தவாறு, “ரஷ்யாவிற்கெதிரான நட்பற்ற நடவடிக்கைகளான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை நிறுவுதல் மற்றும் நேட்டோ கட்டமைப்பை ரஷ்ய எல்லைகளுக்கருகே கொண்டுவரல் ஆகிய நடவடிக்கைகளுக்குப் பின்னர், அவற்றை இராணுவ அர்த்தத்தில் அர்த்தமற்றதாக ஆகும் மற்றும் செலவுகளை வீண்செலவாக ஆக்கிவிடும், அத்கைய முனமுயற்சிகளை முன்னிலைப்படுத்துவோருக்கு அவற்றைப் பயனற்றதாக்கிவிடும் என்பதன் காரணமாக இன்று கூறிய ஒவ்வொன்றும் எந்த சாத்தியமான ஆக்கிரமிப்பாளரையும் இருமுறை சிந்திக்க வைக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

அமெரிக்காவிலான மூர்க்கமான அச்சுறுத்தல்களை அணுவாயுத வல்லாண்மை அச்சுறுத்தல் காட்சியுடன் எதிர்கொள்ளுவதற்கான முயற்சி, மற்றும் புட்டினால் விவரிக்கப்பட்ட தேசப் பாதுகாப்புக் கொள்கை ஆகியன ஒரு அழிவுக்குத்தான் இட்டுச்செல்ல முடியும்.

ஏகாதிபத்தியம் அதன் சொந்த நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றிய கலைப்பானது சோவியத்துக்குப் பின்னரான ரஷ்யாவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் உண்மையான காலனித்துவ நாடாக மாற்றும் ஒரு நிகழ்ச்சிப்போக்கை இயங்க வைத்தது. அமெரிக்க ஆணைகளுக்கு ரஷ்யாவை முற்றிலும் அடிபணியச்செய்யும் வகைப்பட்ட ஒன்றை ஒருவர் ஏற்றுக்கொள்ளலில், புட்டின் எந்தச் சலுகையும் காட்டப் போவதில்லை. உண்மையில் ரஷ்யாவின் அணுவாயுத அபிவிருத்தி என்ற கூற்று ஏகாதிபத்திய அரசுகளை “கவனி” என்பதாக ஆக்கும் என்பது மோசமான விளைவுகளைப் பற்றி எண்ணாதது மற்றும் அப்பாவித்தனமானது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டும் குளிர்யுத்தம் முடிந்தும் ஒரு கால் நாற்றாண்டான பின்னர், மனித சமுதாயமானது அணுவாயுத அழிவின் ஒரு விளிம்பிற்குள் மீண்டும் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரேஒரு மாற்றுதான் உள்ளது: போருக்கான காரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டலும் ஐக்கியப்படுத்தலும் ஆகும்.