ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s BJP government imposes death penalty for child rape

இந்தியாவின் பிஜேபி அரசாங்கம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை புரிவோருக்கு மரண தண்டனை விதிக்கிறது

By Wasantha Rupasinghe 
24 April 2018

இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் கடந்த வாரம், 12 அல்லது அதற்கு குறைந்த வயதான குழந்தைகளை தனியாகவோ அல்லது கும்பலாகவோ பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது உட்பட, தண்டனைகளை கடுமையாக அதிகரிக்கும் ஒரு அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தியது.

இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரில், ஆசிபா பானோ என்ற எட்டு வயது முஸ்லீம் சிறுமிமை கொடூரமான முறையில் கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை பாதுகாக்க முனைவதில் முக்கிய பங்குவகித்த அங்குள்ள பிஜேபி தலைவர்கள் மீதான கவனத்தை திசை திருப்பும் ஒரு இழிவான மற்றும் பகிரங்கமான முயற்சியாகவே “குற்றவியல் சட்டம் (திருத்தம்) அவசர சட்டம், 2018” (“Criminal Law (Amendment) Ordinance, 2018”) என்பதன் அறிவிப்பு உள்ளது.

கடந்த ஜனவரியில் ஆசிபா பானோ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை, ஜம்மு காஷ்மீரில் உள்ள அதிகாரிகள் தற்போது ஒப்புக்கொள்வது போல், ஆசிபா சாரந்திருந்த ஒரு மிக வறிய, பகுதி நாடோடியான முஸ்லீம் சமுதாயமான பக்கர்வாலாவுக்கு எதிராக தூண்டப்பட்ட ஒரு வகுப்புவாத குற்றமாகும். இந்த குற்றவாளிகள், பக்கர்வாலா சமூகத்தினரை அச்சுறுத்தி கத்துவாவில் இருந்து அவர்கள் தப்பியோட செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தனர், அது ஒரு இந்து பெரும்பான்மை மாவட்டம், அங்கு பல தசாப்தங்களாக அல்லது அதற்கு மேல் கூட இருக்கலாம்,  அந்த சமூகத்தினர் தங்களது வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் குதிரைகளை ஆண்டின் ஒரு பகுதியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும் கூட, பானோவின் கொடூரமான விதி மற்றும் பிற சமீபத்திய மிருகத்தனமான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் மீதான பொது மக்களின் கடும் வெறுப்பை சாதகமாக்கி, இந்த அவசர சட்டத்தை பிரகடனப் படுத்துவதன் மூலம் அவர்களது பிற்போக்குவாத சட்ட ஒழுங்கு திட்ட நிரலை மேம்படுத்த முனைகின்றனர். “இந்தியாவின் மகள்களை பாதுகாக்கும்” பெயரில், பிஜேபி அரசாங்கம், அரசு அடக்குமுறை அதிகாரங்களை அதிகரிக்கிறது என்பதுடன், “நீதியை” அரசு வன்முறைக்கு சமன்படுத்துவதன் மூலம் அரசியல் சூழலை இன்னும் மோசமடையச் செய்கிறது.

ஜம்மு காஷ்மீர் பொலிஸ், ஆசிபா பானோ விவகாரத்தில், – ஒரு இந்து கோவிலின் பாதுகாவலர் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட- ஆறு பேர் மீது, அவர்கள் அவரை கடத்தி, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து ஒரு வாரம் வரை துன்புறுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்ய முதலில் நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கூட, ஆதாரங்களை அழித்து குற்றவாளிகளை பாதுகாப்பதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பிஜேபி தலைவர்கள், கத்துவா பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காப்பாற்றுவதற்காக ஒரு வகுப்புவாதத்தினால் தூண்டப்பட்ட கிளர்ச்சியை தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள், பொலிஸ் விசாரணை “பாரபட்சமானது” என கண்டித்து கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர், ஏனென்றால், இந்த வழக்கை விசாரிப்பதில் முஸ்லீம் அதிகாரிகளும் அடங்குவர் என்பதால், இவ்வழக்கை பிஜேபி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலான மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

பிஜேபி இன் நடவடிக்கைகள், ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏற்படுத்திய கூக்குரலுக்கு பின்னரே, அதாவது அவை சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி மீது புது தில்லியின் ஆட்டம் காணும் பிடியை பலவீனப்படுத்துகிறது என்று இந்திய ஆளும் வட்டத்தினுள் ஏற்பட்ட கவலையினால் தான் பிஜேபி இன் தேசிய தலைமை இந்த கிளர்ச்சியுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பிஜேபி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் அந்த இருவரும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில அரசாங்கத்தில் அவர்கள் வகித்து வந்த அமைச்சரவை பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர், அதில் பிஜேபி, காஷ்மீரி முஸ்லீம் அடிப்படையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியின் (Peoples Democratic Party) இளைய பங்குதாரராக சேவையாற்றுகிறது.

கடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட அவசர சட்டம், அரசியல் சேதத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகவே இருந்தது.

கடந்த சனியன்று கூட்டப்பட்ட “அவசரகால” அமைச்சரவை அமர்வு ஒன்றில் தான் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த நாளிலேயே, முன்னாள் பிஜேபி சட்டமன்ற உறுப்பிரான, இந்திய ஜனாதிபதி ராம் கோவிந்த், அவசர சட்டத்தை சட்டமாக மாற்றும் ஆணையில் கையெழுத்திட்டார், மேலும், “உடனடி நடவடிக்கையை எடுக்க” அரசாங்கத்திற்கு “தேவையானதை இது வழங்குவதாகவே சூழ்நிலைகள் இருக்கின்றன என்பதில் திருப்தியடைந்ததாக” அவர் கூறுகிறார்.

அவசர சட்டங்கள் என்பவை எதேச்சதிகாரமானவை, அதாவது, இந்திய ஆளும் நிர்வாகத்தின் ஜனநாயக விரோத சக்தியாக உள்ளன, அதன் கீழ் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், ஜனாதிபதியின் ஒப்புதலுடன், பாராளுமன்ற அமர்வு நடைபெறாத போது, நாட்டின் சட்டங்களை மாற்றி எழுதமுடியும். அத்தகைய சட்டங்கள் நிரந்தரமான சக்தியாக இருக்க வேண்டுமாயின், அடுத்த ஆறு வாரங்களுக்குள் பாராளுமன்றம் கூடும் போது அதற்கு ஒப்பதல் அளிக்கப்பட வேண்டும்.

கடந்த வார இறுதியிலான அவசர சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (Indian Penal Code), ஆதார சட்டம் (Evidence Act), குற்றவியல் நடைமுறை தொகுப்பு (Code of Criminal Procedure), மற்றும் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குழந்தைகளின் பாதுகாப்பு (2012) (Protection of Children from Sexual Offences Act (2012) ஆகியவற்றைத் திருத்துகிறது.

இது, 12 அல்லது அதற்கு குறைந்த வயதிலான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் மற்றும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்குகிறது. மேலும், எந்தவொரு 12 அல்லது அதற்கு குறைந்த வயதிலான குழந்தையை கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்தவர்களும் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவார்கள், ஆனாலும் குறைந்தபட்சம் அவர்களை “எஞ்சிய வாழ்நாள் முழுவதும்” சிறையிலடைத்துவிட வேண்டும் என்கிறது.

13 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளை பாலியல் வனகொடுமை செய்யும் குற்றத்திற்காக, குறைந்தபட்ச சிறை தண்டனைகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலுமாக அதிகரிக்கப்பட்டுள்ளன, அத்துடன் அதிகபட்ச தண்டனையாக “குற்றவாளியின் எஞ்சியுள்ள இயல்பு வாழ்நாள்” முழுவதுமாக அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும், மேலும் 7 முதல் 10 வயதான குழந்தைகளை பாலியல் வனகொடுமை செய்வது போன்ற பிற அனைத்து பாலியல் வன்முறை குற்றங்களுக்கும், அதிகபட்ச ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

இத்தகைய சட்ட மாற்றங்களுக்கு கூடுதலாக, அமைச்சரவை ஒரு தொடரான  நிறுவனஅமைப்பு ரீதியான நடவடிக்கைகளுக்கும் ஒப்புதலளித்தது. இவற்றில், மாநிலங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றுடனான ஆலோசனையில் கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள் என அழைக்கப்படுவையும், கூடுதல் பொது வழக்கறிஞர்கள் நியமனமும், மேலும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் கற்பழிப்பு வழக்குகளுக்காக சிறப்பு தடயவியல் கருவி வழங்குவதும் அடங்கும்.

இத்தகைய நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு நீதி வழங்கும் என்று எவரும் சிறிதும் கூட நம்பக்கூடாது.

இந்திய பொலிஸ், லஞ்ச ஊழல், திறமையின்மை, சித்திரவதை செய்தல் மற்றும் போலியான சுற்றிவளைப்பு கொலைகள் செய்தல், மேலும், இறுதியாக  ஆனால் அது குறைவானதல்ல, அதாவது அவர்களது அரசியல் எஜமானர்கள், பெருவணிகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு அவர்களது அடிபணிவு போன்ற  செயல்பாடுகளுக்கும் அவர்கள் இழிபுகழ் பெற்றவர்கள்.

நீதிமன்றங்கள் இவற்றிற்கு கொஞ்சம் மேலானவை. அவர்கள் கொஞ்சம் கூடுதல் மெருகூட்டப்பட்ட மூடிமறைப்பை மட்டும் தான் அமைப்பிற்கு  வழங்குகின்றனர், அந்த அமைப்பில் ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு சட்டமும் மற்றும் செல்வந்தர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் மற்றொரு சட்டமும் உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ஏனைய நிறுவனங்களைப் போல், இந்தியாவின் சட்ட அமைப்பும் அதிகரித்தளவில் வகுப்புவாத தன்மைக்கு மாறியுள்ளது. தில்லியில் நடந்த 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் தொடங்கி, 1992 பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டது, மற்றும் குஜராத்தில் நடந்த 2002 முஸ்லீம் விரோத படுகொலை வரையிலான எண்ணற்ற வகுப்புவாத அட்டூழியங்களுக்கு பின்னணியில் இருக்கும் பிஜேபி, சிவ சேனா மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். கடந்த வாரம் தான், 2002 படுகொலை சம்பவத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை தூண்டுவதில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பாத்திரமேற்ற முன்னாள் பிஜேபி குஜராத் அமைச்சர் மாயா கொத்னானிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.

மேலும் பிஜேபி தம்பட்டம் அடித்துள்ளது போல், பல வருடங்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்துவந்த பல்வேறு “இரத்தகளரியான பயங்கரவாத” வழக்குகள் – அதாவது, குண்டுவீச்சுக்களையும் பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து வகுப்புவாதிகளின் வழக்குகள் - ஒன்றன் பின் ஒன்றாக, “போதிய ஆதாரம் இல்லாததால்” வெளிப்படையாகவே உடைந்து போயின.

கற்பழிப்பு குற்றம் மீதான மோடியின் அவசர சட்டம் குறித்து கருத்து கூற தெரிவு செய்தவரையில், அரசியல் ஸ்தாபகம் மொத்தமும் மிகவும் சாதகமாக இருந்து வந்துள்ளது.

பஞ்சாபின் காங்கிரஸ் முதலமைச்சர், அமரீந்தர் சிங், “சிறு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளின் மரணத்துக்காகவே நாம் அனைவரும் காத்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியானவர்கள் அல்லர், மேலும், இன்று மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய அவசர சட்டத்தை நான் வரவேற்கிறேன். முன்மாதிரியான, தடுக்கக்கூடிய தண்டனை தற்போது தேவையாக உள்ளது” என டுவீட் செய்தார்.

மரண தண்டனைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயத்தில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவில், நவம்பர் 2012 மற்றும் பிப்ரவரி 2013 இடையிலான மூன்று மாத காலத்திற்குள் காங்கிரஸ் இரண்டு உத்திரவுகளை பிறப்பித்து தூக்கு தண்டனைகள் நிறைவேற்றியது என்பதை கவனிக்க வேண்டும்.

இரண்டாவது, - பாராளுமன்றத்தின் மீது நிகழ்த்தப்பட்ட 2001 பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஒரு காஷ்மீரி முஸ்லீமான அப்சல் குரு போலியாக குற்றம்சாட்டப்பட்டார்- இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முற்றிலும் இரக்கமற்ற முறையில் செயல்பட தயாராக இருந்தது என்பதை நிரூபிக்க குறிப்பாக கணித்து செயல்ப்பட்டது. பரந்தளவிலான ஆர்ப்பாட்டங்களையும், மரண தண்டனையை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய சாத்திமுள்ள கடைசி நிமிடத்தையும் தடுக்க, அரசாங்கம் ரகசியமாக அதை நிறைவேற்றியது. (பார்க்கவும் : “A legal lynching: Indian government executes Afzal Guru”)

சிவில் சுதந்திர அமைப்புகள், சில மகளிர் உரிமைகள் குழுக்கள், மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் கூட இந்த அவசர சட்டத்தை விமர்சித்துள்ளன.

நேற்று, இரண்ட தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு அல்லது குழு அரசாங்கத்திடம், அது, “இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றும் முன்பு எதேனுமொரு அறிவியல் மதிப்பீடு அல்லது ஆய்வை நடத்தியுள்ளதா” என  கேள்வி கேட்டது. அரசாங்கம், பாலியல் வன்முறைக்கான “அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்பது குறித்தோ” அல்லது “மக்களை கல்வியூட்டுவது” குறித்தோ கவனம் செலுத்தவில்லை, அல்லது, பல குற்றவாளிகள் 18 வயதிற்கு உட்பட்டோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்கின்றனர் என்ற உண்மையை அதன் அவசர சட்டம் கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.  

ஒரு முதன்மை தில்லி சிவில் உரிமைகள் வழக்கறிஞரும், மற்றும் மரண தண்டனையை வெளிப்படையாக எதிர்ப்பவருமான விருந்த் குரோவர், அவரது பங்கிற்கு, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கான கடுமையான புதிய குறைந்தபட்ச தண்டனைகளையும் மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனையையும் விதிப்பது என்பது பாதிக்கப்பட்டவர்கள் முன்னோக்கி வரும்போது அவர்களுக்கு அறிவுரை வழங்கி மனம் திரும்ப செய்வதை தடுக்க நேரிடலாம் என எச்சரிக்கிறார். “இந்த மரண தண்டனை விதிக்கும் சட்டம், குற்றவாளி குடும்ப நபராகவோ அல்லது தெரிந்த நபராகவோ இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவரை பாலியல் தாக்குதல் குற்றம் நடந்த விபரத்தை தெரிவிப்பதிலிருந்து தடுத்துவிடும். இது குற்றம் நசுக்கப்படுவதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர் முற்றிலும் உதவியற்ற நிலைமைக்கு தள்ளப்படுவதற்கும் வழிவகுக்கும்.”

Indian Express பத்திரிகையின் கட்டுரையாளர் ஷாலினி நாயர், தில்லியின் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் (National Law University) ஒரு அறிக்கை, இந்த மரண தண்டனை விதிப்பு என்பது, “எளிதாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மீதான பொருளாதார மற்றும் சமூக அளவுகோல்களின் தாக்கங்களின் அளவுக்கு மீறிய திணிப்பாக உள்ளது” என காட்டுவதாக குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில் மரண தண்டனைக்காக வரிசையில் இருக்கும் 385 கைதிகளில், 373 பேரை பேட்டி கண்டதில், அவர்களில் 23 சதவிகிதம் பேர் ஒருபோதும் பள்ளி வாசலை மிதிக்காதவர்கள் என்பதும், 9.1 சதவிகிதத்தினர் ஆரம்ப பள்ளி கூட செல்லவில்லை என்பதும், மேலும் 61.6 சதவிகிதம் பேர் மேல்நிலை பள்ளி செல்லவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வு, மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் “பின்தங்கிய வகுப்பினர்” (அதாவது தலித்துகள் அல்லது பிற பாரம்பரிய சாதி குழுக்கள்) அல்லது மத சிறுபான்மையினர் என்பதையும் காட்டியது.

ஆசிரியர் கூடுதலாக பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

BJP leaders’ cover-up of rape and murder of Kashmiri Muslim girl provokes outrage across India
[20 April 2018]