World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Fiji's military leaders accede to racialists' demands

பிஜி இராணுவத் தலைவர்கள் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்

By Mike Head
12 July 2000

Use this version to print

இராணுவச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குப் பின்னர் பிஜி நாட்டின் இராணுவத் தளபதிகள் தமது நோக்கம், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிப்பதும் மே 19 ம் திகதி ஜோர்ஜ் ஸ்பெயிட்டும் இராணுவத்தின் எதிரப்புரட்சி பிரிவின் அங்கத்தவர்களும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றியதனால் உருவான பணயக் கைதிகள் நெருக்கடியை முடிவுக்கு கொணர்வதுமே எனப் பிரகடனம் செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயிட்டின் சகல கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்து ஆயுதப் படைகளின் தளபதி பிராங் பெயினிமாரமா கைச்சாத்திட்ட உடன்படிக்கை, ஆரம்பத்தில் இருந்தே இராணுவம் சதிப்புரட்சி முயற்சி தொடர்பாக பிளவுண்டு போனதையும் ஸ்பெயிட்டினதும் அவரின் குண்டர்களதும் இனவாத இந்திய எதிர்ப்புக் கோரிக்கைகளுக்கு அடிப்படையில் இணக்கம் தெரிவித்ததையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுகாலம் வரையும் இராணுவ உயர் மட்டப் புள்ளிகள் ஸ்பெயிட்டை அடியோடு எதிர்த்து வந்தனர். அவர்கள் பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஒரு பகுதியினரதும் பெரும் வல்லரசுகளதும் உக்கிரமான நெருக்குவாரங்களுக்குப் பதிலளிக்க நேரிட்டது.

இந்தத் திருப்பம் ஏற்பட்ட போதும் அனைத்துலக தனிமைப்படுத்தலும் பொருளாதார வீழ்ச்சியின் சாத்தியங்களும் பெயினிமாராமா ஜூலை 9ம் திகதி முனைக்கா (Munaikau Accord) உடன்படிக்கையில் கைச்சாத்திடாமல் இருப்பதை அசாத்தியமாக்கிவிட்டது. இந்த உடன்படிக்கையின் படி அவர் நாளை கூடவிருக்கும் படைத் தளபதிகளின் மாபெரும் சபை (Great council of Chiefs) யினால் தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதியிடம் அதிகாரத்தைக் கையளிக்க இணங்கியுள்ளார். இச்சபை பதிவியேற்றதும் அது கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக இடைக்கால பிரதமர் லைசேனியா குவாசினால் நிறுவப்பட்ட அரசாங்கத்தை இரத்துச் செய்யும்.

ஒரு சில வாரங்களுக்கு ஸ்பெயிட்டுக்கு விட்டுக் கொடுத்ததன் பின்னர் கடந்த வாரம் அவருடன் இடைக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடாத்திய இராணுவம் கடந்த வாரம் தனது சொந்த சிவிலியன் நிர்வாகத்தை அமைத்ததோடு பணயக் கைதிகள் நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவர ஸ்பெயிட்டுக்கு ஒரு காலக்கெடுவும் வழங்கியது. ஆனால் இராணுவம் பிளவுபட்டுப் போனது உடனடியாகவே வெளிப்படையாகியது. ஒரு இராணுவப் படையாட்களின் வதிவிடத்தையும் ஆயுதக் களஞ்சியத்தையும் ஸ்பெயிட் ஆதரவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு கனிஷ்ட படை அதிகாரிகளும் சில சிப்பாய்களும் படையில் இருந்து விலகிக் கொண்டனர். பைனிமாராவும் அவரது ஆலோசகர்களும் பாராளுமன்றக் கட்டிடத்தைச் சூழ ஒரு தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தை அமைக்க உடனடியாக ஆதரவளித்தனர்.

ஸ்பெயிட்டினால் துண்டாடப்பட்ட பல்வேறு ஆயுதம் தாங்கிய கும்பல்களும் பாராளுமன்றக் கட்டிட குண்டர் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடத் தொடர்ந்து மறுத்துவந்த இராணுவத்தினால் ஊக்குவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல பகுதிகளை ஸ்தம்பிதம் அடையச் செய்தன. அவர்கள் ஒரு மின்சார நிலையத்தை கைப்பற்றியதோடு தலைநகர் சுவாவுக்கான மின்சார விநியோகத்தையும் துண்டித்தனர். ஒரு கிராமத்தில் பாய்ந்து விழுந்த அவர்கள் 30 இந்திய-பிஜி இனத்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்தனர். முக்கிய வீதிகளை தடை செய்ததோடு, பல இராணுவ, பொலிஸ் நிலையங்களையும் கைப்பற்றினர்.

இராணுவத் தளபதிகள் ஏறக்குறைய உடனடியாகவே ஸ்பெயிட்டின் அதிகாரத்தினுள் கொணரப்பட்டனர். உடன்படிக்கையின் கீழ் புதிய ஜனாதிபதி பெருமளவுக்கு ஸ்பெயிட்டினால் பொறுக்கியெடுக்கப்பட்ட வேட்பாளர் ரட்டு ஜொசேபா இலொயினா குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு பிஜியை ஆட்சி செய்ய ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வார். இந்த ஆட்சிப் பீடம் ஒரு சில குவாரேசின் வர்த்தகர்களைக் கொண்ட அமைச்சரவை, அதிகாரத்துவத்துடன் ஸ்பெயிட் குழுவின் அங்கத்தவர்களையே பெரிதும் கொண்டிருக்கும் அத்தோடு இராணுவம் ஏற்கனவே செல்லுபடியற்றதாக்கிய 1997ம் ஆண்டின் அரசியலமைப்புக்குப் பதிலாக ஒரு இனவாத அடிப்படையிலான புதிய பத்திரத்தை வரைவதற்கு ஜனாதிபதி ஒரு கமிட்டியை நியமனம் செய்வார்.

ஸ்பெயிட்டும் அவரின் சகாக்களும் அத்தோடு அவரின் ஆதரவாளர்களும் மே 19 -ஜலை 15க்கும் இடைப்பட்ட காலத்தில் இழைத்த சகல குற்றங்களுக்காக வழக்குத் தொடர்வதில் இருந்து விடுவிக்கப்படுவர். இந்தக் குற்றங்களுள் இந்திய- பிஜியன் வீடுகள், கிராமங்கள், பண்ணைகள், கடைகளில் தொடர்ந்து இடம் பெற்றுவரும் கொள்ளையடிப்புகளும் அடங்கும்.

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் ஸ்பெயிட் தான் "ஆச்சரியமும் பரவசமும்" அடைந்து போனதாக தெரிவித்தார். இது "பிஜி மக்களுக்கு ஒரு மாபெரும் நாள்" என அவர் கூறிக் கொண்டார். இப்போது ஒவ்வொருவரினதும் அசல் கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மகேந்திர செளத்ரியின் தொழிற்கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு ஒரு கம்பளியால் மூடிமறைக்கப்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டது. ஸ்பெயிட்டின் சதிகார அங்கத்தவர்கள் பதவிகளில் அமர்த்தப்படுவர். இந்தோ- பிஜியன்களை- சனத்தொகையில் 44 சதவீதத்தினர்- உயர் பதவிகளில் இருந்து நீக்கும் பொருட்டு ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படும்.

ஸ்பெயிட் படைத் தளபதிகளை சந்திப்பதற்கு முன்னதாக செளத்ரியையும் மற்றும் 26 அரசாங்க பணயக் கைதிகளையும் வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப் போவதாக கூறியிருந்தார். ஆனால் வெற்றி கிட்டியதும் இதை அமுல் செய்வதை சந்தேகத்துக்கு இடமாக்கினார். நேற்றைய தினம் அவர் பணயக் கைதிகள் கூட்டத்துக்கு (படைத் தளபதிகள்) முன்னர் விடுதலை செய்யப்படாது போகலாம் என பிரகடனம் செய்தார். புதன்கிழமை அதிகாலை 9 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்னமும் 18 பேர் பாராளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே துப்பாக்கி முனையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயிட்டினாலும் அவரது கையாட்களாலும் தூண்டிவிடப்பட்ட பல்வேறு போக்குகளையும் இந்த உடன்படிக்கை மேலும் கிண்டிவிட்டுக் கொண்டுள்ளது. இது கைச்சாத்திடப்பட்டதில் இருந்து குண்டர் கும்பல்கள் கட்டிடங்களுக்கு தீவைத்தன; கடைகளைக் கொள்ளையடித்தன; மீன்களை தகரத்தில் அடைக்கும் பக்டரியை கைப்பற்றின; ஒரு பொலிஸ் நிலையத்தை கைப்பற்றியதோடு நாடி (NADI) யில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றப் போவதாக பயமுறுத்தின. தொலைத் தொடர்பு அதிகாரிகள், இந்தியன் முகாமையாளர்களை வேலைநீக்கம் செய்யும்படி கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிஜி தீவு மக்கள் ஒரு சிறிய விமான தரிப்பிடத்தையும் ஒரு உல்லாசப்பயணிகள் உறைவிடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். சிறைக் கைதிகள் நபோரோவில் உள்ள அதிபாதுகாப்பு சிறையை உடைக்க முயன்றுள்ளனர். தமது நிலத்தில் ஒரு அணைக்கட்டு கட்டுவதற்கு நஷ்டஈடு கோரி கிராமவாசிகள் ஒரு ஹைட்ரோ மின்சார நிலையத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து வெளியேறவும் மறுத்துவிட்டனர்.

பிஜி நாட்டின் ஆளும் பிரமுகர்களில் ஒரு பகுதியினர்- படைத்தளபதிகளின் மாபெரும் சபை (GCC) யின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் உட்பட- இத்தகைய ஒரு இயக்கமானது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக சுற்றிச் சுழன்று பல்வேறு குழுக்களும் தமது சொந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்ளுமோ என அஞ்சுகின்றனர். ஸ்பெயிட்டின் ஆதரவாளர்களில் பலரும் அதிருப்தி கண்ட கிராமவாசிகளாகவும், வேலையற்ற இளைஞர்களாகவும் உள்ளனர். தற்போதைக்கு ஸ்பெயிட் அணிதிரட்டிக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர்களும் கனிஷ்ட நிலவுடமையாளர்களும் இந்த விரக்திகளை இந்திய எதிர்ப்பு இனவாதமாகவும் தொழிலாளர் வர்க்கத்தையும் ஏழைகளையும் பிளவுபடுத்தும் திசையிலும் வழிப்படுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட்ட ஏனைய வர்த்தக நலன்களையும் ஊடறுத்துச் செல்ல வாய்ப்புண்டு.

படைத் தளபதிகளின் மாபெரும் சபையின் (GCC) நாளைய கூட்டத்திற்கு முன்னதாக ஸ்பெயிட் கனிஷ்ட படைத் தலைவர்களின் ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தனது நிலைப்பாட்டுக்கு மேலும் ஆதரவு திரட்டவே இதைச் செய்துள்ளார். படைத் தளபதிகளின் மாபெரும் சபையின் தலைவராக 1987 இராணுவ சதிப் புரட்சித் தலைவர் சிட்டிவேணி ரபுக்கா விளங்குகின்றார். இவர் சமீப நாட்களாக தம்மை ஸ்பெயிட்டின் முகாமில் இருந்து அன்னியப்படுத்திக் கொண்டுள்ளார். ரபுக்கா படைத் தளபதிகளின் மாபெரும் சபை ஸ்பெயிட்டினால் தெரிவு செய்யப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் அல்லாது குயின் விக்டோறியா இராணுவ 'பராக்'க்கில் கூட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் மாஜி- பிரதமர் ரட்டு கமிசேச மாராவும் கலந்து கொள்வார். இவர் ஜனாதிபதி பதவியில் இருந்து வழக்காறான முறையில் இராஜினாமாச் செய்ததோடு இவருக்கு பெரும் வர்த்தக நலன்களும் இருந்து கொண்டுள்ளன.

வெளிநாட்டு மூலதனத்தைத் தருவிப்பதை வாபஸ் பெற்றதனாலும் உல்லாசப் பயணத் துறையின் சரிவினாலும் வியாபாரமும் வர்த்தகமும் பரந்த அளவில் பாதிக்கப்பட்டதனாலும் கடந்த வாரம் பிஜியின் முதலாளிகள் சம்மேளனமும் பிஜி 'சேம்பர் ஒப் கொமர்சும்' (Chamber of Commerce) பிஜி- அவுஸ்திரேலியா வர்த்தக சபையும் பிஜி தொழிற்சங்க காங்கிரசுடன் (FTUC) சேர்ந்து 1997 அரசியலமைப்புச் சட்டத்தை புனர்நிர்மாணம் செய்யும்படி கோரின.

இந்த கூட்டின் ஒரு பாகமாக எப்.ரீ.யூ.சி. தலைவர்கள் சீனி அறுவடையை பகிஷ்கரிப்பதை கைவிடவும் வர்த்தகத் தடைகளை நீக்குமாறும் வெளிநாட்டு தொழிற்சங்கங்களை கோரவும் இணங்கியுள்ளனர். ஆரம்பத்திலே ஸ்பெயிட்டின் சதிப்புரட்சி தொடர்பான தொழில்கொள்வோரினதும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களினதும் பொதுவான அக்கறையானது ஸ்திரமற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதாகவும் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவதாகவும் விளங்கியது. இதன் மூலம் சீனி, ஆடையுற்பத்தி, உல்லாசப் பயணம், சுரங்க கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள முதலாளிகள் இலாபம் தரக்கூடிய நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபட முடியும்.

பதவிநீக்கம் செய்யப்பட்ட தொழிற் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்தில் உள்ள தமது சகாக்களுடன் சேர்ந்து எப்.ரீ.யூ.சி. அதிகாரிகள் ஸ்பெயிட் இன்றைய கட்டத்துக்கு நின்று பிடிக்கும் வல்லமையை வழங்கியதற்கான முதல் அரசியல் பொறுப்பாளிகள் ஆவார். இத்தொழிற்சங்கத் தலைவர்கள், இனக்குழு அடிப்படையில் இனவாதிகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தை எந்தவிதத்திலும் அணிதிரட்ட எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இராணுவம் இறுதியாக ஸ்பெயிட்டுக்கு இணங்கிப் போனதற்கு பின்னரும் கூட எந்த ஒரு வேலை நிறுத்தத்துக்கோ அல்லது ஆர்ப்பாட்டத்துக்கோ அழைப்புவிடாதது இதற்கு நல்ல உதாரணமாகும்.

இருப்பினும் ஸ்பெயிட்டின் சதிப்புரட்சிக்கு சுதேச பிஜி வாசிகள் இந்தோ- பிஜிவாசிகளிடையே ஒரே மாதிரியான பரந்த எதிர்ப்புக்கான அடையாளங்கள் இருந்து கொண்டுள்ளன. கடந்த வார இறுதியில் சுவாவில் உள்ள கிளர்ச்சிப் படைகளின் வீதித் தடைகளில் நிறுத்தப்பட்ட கார் சாரதிகளிடம் பிஜியில் உள்ள 'இன்டர் நெட் நியூஸ் சேவை' யினால் நடாத்தப்பட்ட பேட்டிகளில் இதை நோட்டம் விடக் கூடியதாக இருந்தது. ஒரு சாரதி கூறியதாவது: "நான் ஒரு பிஜியன். இவர்கள் போராடுவது இந்த இலட்சணத்திலான உரிமைகளுக்கு தானா? சுதேசிகளின் உரிமைகளுக்கு போராடுபவர்களாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் எனது குடும்பத்தை பராமரிப்பார்களா?" இந்தச் சாரதி தான் 1987 லும் இதே மாதிரியான கோசங்களைக் கேட்டுள்ளதாகக் கூறியதோடு சதிப்புரட்சித் தலைவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு, தமது சொந்த 'பொக்கட்டுகளை' (Pocket) நிரப்பிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 4ம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்ட செளத்ரியின் பொதுஜன கூட்டரசாங்கத்தின் பதில் தலைவர்கள் இராணுவச் சட்ட ஆட்சியாளர் தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முயன்றது தெரிந்தது. "ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்ததில் இராணுவம் "முற்றிலும் தவறாக நடந்து கொண்டுள்ளது" என்ற ஒரு அறிக்கையுடன் அவர்கள் குவாரசேயின் அமைச்சர் அவையின் நியமனத்தை இளக்கரமானதாக கருதினர். பத்திரகை அறிக்கைகள் அடிமட்டத்தில் இருந்து முழு சதிப் புரட்சியையும் நிராகரிக்கும்படி கோரும் நெருக்குவாரத்தின் வளர்ச்சியை தெளிவாக பிரதிபலித்தன.

எவ்வாறெனினும் இந்த வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்ட அதே வேளையில் இந்த அறிக்கை கூட்டரசாங்கத்தின் முன்னைய கோரிக்கையான செளத்ரி அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்தும் படி கோருவதையும் கூட பெரிதும் கைநழுவவிட்டது. அதற்குப் பதிலாக இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளது அங்கத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நியமனம் செய்வதை இராணுவம் கணக்கிலெடுக்க வேண்டும் எனக் கோரியது. இது முதலீட்டாளர்களின் அபிலாசைகளைத் திணிக்கும் விதத்தில் முழு இராணுவ- வர்த்தக பிரமுகர்களின் ஆதரவு கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் சமமானதாகும்.

ஜூலை 7ம் திகதி இதே கூட்டரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள்- கல்வி அமைச்சரான பிரதாப் சந்தும் பிஜியன் அசோசியேசனின் பதில் தலைவர் இசிமாலி கொகனசிகா- மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டனர். "நாட்டில் சிவில் குழப்பங்களும் அராஜகமும் ஏற்படுவதற்கான பெரிதும் நிஜ சாத்தியத்தை" தவிர்க்கும்படி இராணுவத்திடம் மன்றாடும் விதத்தில் இந்த அறிக்கை அமைந்திருந்தது. பணயக்கைதிகள் நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்கான தொழில்சார் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஐக்கிய நாடுகள் சபையை அல்லது பிரித்தானிய பொதுநலவாயத்தை இது வேண்டுவதாக விளங்கியது.

ஐக்கிய நாடுகள் சபையினதோ அல்லது பொதுநலவாயத்தினதோ எந்த ஒரு தலையீட்டினதும் நோக்கம் பிஜி நாட்டின் தொழிலாளர்கள், கிராமவாசிகள், ஏழைகளது ஜனநாயக உரிமைகளைக் காப்பது அல்ல. இது தென் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ள அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்தைய நாடுகளதும் பூகோளரீதியான நிதி அமைப்புக்களதும் பன்நாட்டுக் கம்பனிகளதும் நலன்களை அமுல் செய்வதாக இருக்கும். உள்ளூர் செயற்பாட்டாளர்களாக விளங்கும் ஸ்பெயிட்டினதும் அவரது கையாட்களதும் நோக்கம் பொருளாதாரத்தின் சில துறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதாக விளங்கும்வரை இந்த நலன்கள் ஓரளவுக்கு இனவாத கைப்பற்றல்களின் மூலம் சவால் செய்யப்பட்டுள்ளது.

எனவேதான் அமெரிக்க கிளின்டன் ஆட்சியாளர்கள் ஸ்பெயிட் முகாமின் கோரிக்கைகளுக்கு இராணுவம் உடன்பட்டு போவதையிட்டு கவலை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் குவாசி அமைச்சரவையை இராணுவம் நியமனம் செய்தததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது தூதுவரான ஒஸ்மான் சித்தீக்கை ஆலோசனைக்காக பிஜியில் இருந்து திருப்பியழைத்ததன் மூலம் இது வெளிப்பாடாகியது. ஒஸ்மான் சித்தீக் புறப்பட்டதும் அமெரிக்க தூதரகம், பிஜியில் "பாரதூரமான தாக்கங்களை" உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதையிட்டு வாஷிங்டன் ஆராய்ந்து வருவதாக எச்சரிக்கை செய்தது.

கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய ஹவார்ட் அரசாங்கம் அந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்தும் தனது மேலாதிக்கத்தை கொண்டிருக்கும் விதத்தில் சற்று மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்படித்துள்ளது. அது இராணுவம் ஸ்பெயிட்டுடன் கொண்டுள்ள உறவுகளை ஒரேயடியாகக் கண்டனம் செய்ய மறுப்புத் தெரிவித்து விட்டது. வெளிநாட்டு அமைச்சர் அலெக்சாண்டர் டோவ்னர் உடன்படிக்கை வரவேற்கப்படுவதாக தெரிவித்தார். அது பணயக் கைதிகளை விடுதலை செய்வதற்கான வழிவகைகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இது 1987ல் ஹொவ்க் அரசாங்கம் கடைப்படித்த விதிமுறைகளுக்கு பெரிதும் சமமானது. அன்று ரபுக்காவின் இராணுவச் சதிக்கு வாயளவிலான எதிர்ப்பு தெரிவிப்பதை அது உடனடியாக கைவிட்டதோடு அவுஸ்திரேலியாவின் மலிவு உழைப்புக்கான முதலீடுகளுக்கு பொருளாதாரத்தை திறந்து விடும் விதத்தில் ரபுக்காவுடன் ஒன்றுபட்டுச் செயற்பட்டது.