World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Putin's visit to Germany and the redefinition of international relations

புட்டினின் ஜேர்மன் விஜயமும் சர்வதேச உறவுகளின் புதிய மாற்றமும்

By PatrickRichter
28 June 2000

Use this version to print

ரஷ்யஜனாதிபதி விலாடிமிர் புட்டின் ஐரோப்பியவிஜயத்தின் ஒரு பாகமாக கடந்த 14-16ஜூன் வரை பெரிய தூதுக்குழு ஒன்றுடன்ஜேர்மன் தலைநகருக்கு விஜயம் செய்திருந்தார். அவரது குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டஅரசாங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வர்த்தகப் பிரதிநிதிகள் இடம் பெற்றனர்.

இதற்கு முன்னர் அவர் ரோமிற்கும் [Rome] மட்றிட்டுக்கும் [Madrid] விஜயம் செய்துள்ளதுடன் அடுத்ததாகமொல்டோவியாவிற்கு [Moldavia] விஜயம் செய்யவுள்ளார்.

அவரதுஜேர்மன் விஜயத்தின் முக்கிய நோக்கம்இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல்பொருளாதார உறவுகளுக்கு புத்துயிர்அளிப்பதாகும். ஜேர்மன் பிரதமர் கெஹார்ட்சுரோடர் [Gerhard Schröder] ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான "மூலோபாயமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டை" உறுதிப்படுத்திஆழமாக்க விரம்புவதாக தெரிவித்தார்.மேலும் "அடிப்படையான பொதுநலன்கள்தொடர்பாக" பரந்தளவில் புதிதாகஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது எனவும்தெரிவித்தார். பொருளாதார உறவுகளில்ரஷ்யாவின் நவீனமயமாக்கலில் ஜேர்மனிமுக்கிய பங்கு வகிக்கின்றது. புட்டின் தனதுபங்கிற்கு "ஜேர்மனி ஐரோப்பாவிலும் உலகரீதியவும் எமது முதலாவது கூட்டாளியாக இருக்கின்றது"எனத்தெரிவித்தார்.

1998ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் ஜேர்மனியின் அரசாங்க மாற்றத்துடன் அரசியல் உறவுகள் மிகவும் தணிந்திருந்ததுடன்,கொசவோ யுத்தத்தில் ஜேர்மனியின் பங்கெடுப்புடன் இவ்வுறவுகள் கிட்டத்தட்ட உறையும்நிலையை அடைந்தன. முக்கியமாக பழைமைவாதிகளிடமிருந்தும், ஏனைய ஆழும் வட்டாரங்களிலிருந்தும்கெஹார்ட் சுரோடரினதும் வெளிநாட்டமைச்சர் ஜோசெப் பிஷ்ஷர் [Joseph Fischer] இனதும் தலைமையிலான அரசாங்கத்தின்மீது Konrad Adenauer , Willy Brandt, Egon Bahr [முன்னையபிரதமர்கள்] ஆகியோரின் காலத்திலிருந்துமிகக்கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த பாரம்பரியம் மிக்க கிழக்குத்தேச அரசியலை அழித்துவிட்டதாகவும், காலால் மிதித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இப்படியான விமர்சனங்களுக்கானஆரம்பப்புள்ளி என்னவெனில், ரஷ்யாவின்ஜனாதிபதியாக புட்டின் இவ்வருட ஆரம்பத்தில்தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் பிரித்தானியபிரதமரான ரொனி பிளேயரை இருதடவைசந்தித்துள்ளதும், அமெரிக்க ஜனாதிபதிபில்கிளின்டனை மொஸ்கோவிற்கு வரவேற்றதும்,இத்தாலி, ஸ்பெயினுக்கான விஜயத்தைமேற்கொண்டுள்ளதும், இதுவரை ஜேர்மன்ரஷ்ய உறவுகளுக்கான உத்தியோகபூர்வமானபுதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையுமாகும்.

பொருளாதார உறவுகளுக்கான ஒரு புதிய முயற்சி

பொருளாதாரநோக்கில் 1998 ஆவணிமாத ரஷ்ய நிதிநெருக்கடியின்ஆரம்பத்துடன் இரு நாடுக்ளுக்குமிடையிலானஉறவுகள் பாரிய பின்னடைவை சந்தித்தது.இதன் விளைவாக ஜேர்மன் முதலாளிகளும்,தனியார் முதலீட்டாளர்களும் மில்லியாடன்கணக்கான பணத்தை மறக்கவேண்டிஇரந்தது அல்லது அறவிடமுடியாது போனது.முன்னரை போலவே தனது முக்கிய கடன்வழங்குனரான ஜேர்மனியிடம் கிட்டத்தட்ட100 மில்லியாடன் மார்க் ரஷ்யா கடன் பட்டிருந்தது.இக்கடன்களில் ஒரு பகுதி முன்னாள் சோவியத்காலகட்டத்திலிருந்தும், மற்றும் கோலின் [Kohl] காலகட்டத்தில் ஜெல்சின் [Jelzin] அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதுமாகும். வங்கிகளாலும், நிறுவனங்களாலும்வழங்கப்பட்ட கடன்கள் இத்தொகையினுள்உள்ளடங்கும்.

அவர்களின் நோக்கத்திலும்பார்க்க கூடியளவு வழங்கவேண்டி,4 மில்லியாடன் மார்க் முதலீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மில்லியாடன் மார்க்வடதுருவத்திற்கு அண்மையிலுள்ள நிலவாயுநிலையங்களை அபிவிருத்தி செய்ய ஜேர்மன் Wintershall AG இனதும் ரஷ்ய Gas நிறுவனமான Gasprom இனதும்கூட்டுமுயற்சிக்கு முதலிடப்படவுள்ளது.மேலும் ரஷ்ய நிறுவனங்களுடன் ஜேர்மன்ஏற்றுமதி உடன்படிக்கைகள் ஜேர்மன்அரசாங்கத்தினூடாக மேலும் ஒரு மில்லியாடன்மார்க் பெறுமதியானவை மீண்டும் செய்யப்பட்டுள்ளன. இவை 1998 இலையுதிர் காலத்தில்ரஷ்யா திரும்பச் செலுத்தாமையினால்உறைந்து போனவையாகும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் புதிய பொருளாதாரஉறவுகளை நடைமுறைக்கு கொண்டுவருவது மிக மெதுவாகவும், கடந்த இரண்டுவருட அனுபவங்களினால் பாதிக்கப்பட்டுமுள்ளது. எவ்வாறு முன்னர் அரசாங்கங்களுக்கும்வங்கிகளுக்கும் திட்டமிட்ட அளவிலான கடன்கள்வழங்கப்பட்டது போல் அல்லாது தற்போது"சுலபமாக கையாளக் கூடிய சிறிய திட்டங்களில்"கவனம் செலுத்தப்படுகின்றது.

இதுஎதிர்காலத்தில் முக்கியமாக ஜேர்மன்பொருளாதாரத்தின் முதலீட்டிற்கானதெளிவான நிலைமையை உருவாக்குவதாகும்.மாபியா கும்பல்களினதும், தீர்க்கமுடியாதஅதிகாரத்துவ தடைகளையும் "மேற்குசந்தை பொருளாதாரத்திற்கு" எதிராகஇல்லாது ஒழிக்க வேண்டியுள்ளது. இதற்காகஜேர்மன் முதலீட்டாளர்களையும், அவற்றிற்குரியநிதிதுறை செயலாளர்களையும் உள்ளடக்கியஒழுங்கமைக்கும் புதிய செயற்குழுக்களின்கீழ் பொருளாதார உறவுகள் கொண்டுவரப்படவுள்ளன. ஜேர்மன் பொருளாதாரத்தின்கிழக்கு-பிரிவின் தலைவரான Klaus Mangold "வரிச் சீர்திருத்தத்தை எவ்வாறு செய்வதுஎன்பதையும், வங்கி அமைப்பை திருத்தியமைப்பது,திறமையான சுங்கத் தீர்வைமுறையைஉருவாக்க ரஷ்யர்களுக்கு ஆலோசனைவழங்குவது மூலம் ரஷ்யா செய்யவிருக்கும்சீர்திருத்தத்தை விரைவாகவும், திறமையாகவும்நடைமுறைப்படுத்த முடியும்" என விரும்புவதாக தெரிவித்தார்.

உறவுகளின்புதியமாற்றமும் மத்திய ஆசிய எண்ணெய்வளமும்.

ஆளும் வட்டாரங்கள்மத்தியில் புட்டினின்-காலகட்டமும், பலமானஅரசின் அரசியலும் முக்கியமாக ரஷ்யாவிலும்,மத்திய ஆசியாவிலும், காவ்காஸஸ் இலும்ஜேர்மன் நலன்கள் உள்ள தனது ஆழுமைக்குரியபிரதேசங்களை பிரதிநிதித்துவபடுத்த முடியும்என நம்பிக்கை தெரிவிக்கின்றன.

செச்சேனியாவின்யுத்தத்தினூடாக இப்பிரதேசத்தில் ரஷ்யாவிற்க்குதனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. சோவியத்யூனியனின் உடைவுடன்அமெரிக்காவுடனும் நேட்டோவுடனும்நெருங்கிய உறவினை கூடியதாக கொண்டிருந்தஇருந்த ஜோர்ஜியாவும் அஸர்பச்சானும்கடந்த அரை ஆண்டுகாலப்பகுதியில் மிகக்கவனமாக திரும்ப வேண்டியிருந்ததுடன் ரஷ்யாவின்அதிகரித்துவரும் அழுத்தத்திற்கும் உள்ளாகவேண்டியுமிருந்தது.

உஸ்பெக்கிஸ்தானின்தலைநகரான ரஷ்கென்ற் இற்கானதனது அண்மைய விஜயத்தின் போது புட்டின்உஸ்பெக்கிஸ்தானுடனும் கிர்கிஸ்தானுடனும்"ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாத ஆபத்திற்க்கு" எதிராக இராணுவ மூலோபாய கூட்டுஉடன்படிக்கைகளை செய்த்தன் மூலம்ரஷ்யாவுடனான உறவுகளை பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்"துருக்கி-அமெரிக்க ஆதிக்கம் இல்லாதொழிக்கப்படும் வரை ரஷ்யா செச்சேனியாவிற்க்கு எதிரானயுத்தத்தை செய்யவேண்டியிருந்தது"என்றார்.

இக்கருத்தானது செச்சேனியயுத்தத்தை ரஷ்ய தொலைத்தொடர்புசாதனங்கள் மறுமதிப்பீடு செய்வதற்கானதூண்டுதலாக இருந்தது. "பயங்கரவாதிகளுக்குஎதிரான யுத்தம்" என்ற கிரெம்ளினின் வாய்ப்பாட்டை இதுவரை விமர்சிக்காது ஏற்றுக்கொண்டதற்கு மாறாக, இப்போது இவ்யுத்தம் "முக்கியவெளிவிவகார ஆயுதமாக" விவாதிக்கப்பட்டுஇந்நிலைப்பாட்டிலிருந்து யுத்தத்தைமுடிவிற்கு கொண்டுவரவேண்டுமென கருதப்படுகின்றது.

இந்த வாரம் புட்டீனுக்கும் காஸக்ஸ்தான் ஜனாதிபதியான Nursultan Nasarbajew இற்கும் இடையே காஸாஸிய எண்ணெய்வினியோகத்தை ரஷ்ய குழாய்களூடாகசெய்யும் மேலதிக பேச்சுவார்த்தைகள்நடைபெறுகின்றன. குறிப்பிட்ட காலமாகரஷ்யா எண்ணெயை உலகச் சந்தையின்விலையின் தரத்தில் ஏற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இணக்கம்தென்படுகின்றது. இதுவரை உலகச்சந்தையின் விலைக்கு மிககுறைவான விலையில்மத்திய ஆசியாவினதும், ஏனைய நாடுகளினதும்எண்ணெயை பெற்றுக்கொண்டமை இந்நாடுகளை ரஷ்யாவை விட்டுவிலகி அமெரிக்காவினையும்அதனது கூட்டினரையும் நோக்கி இப்பிரதேசத்தை திரும்பவைத்தது. இப்பேச்சுவார்த்தைகளின்விளைவாக காஸாஸிய எண்ணெய் வினியோகத்தின்முக்கிய பகுதியை ரஷ்ய பிரதேசத்தின் ஊடாகசெய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

பேர்லினுக்கான தனது விஜயத்தினூடாகபுட்டின் ஜேர்மனியுடனும் ஐரோப்பாவுடனும்ரஷ்யாவின் உறவினை சர்வதேசமட்டத்தில்உறுதியாக்கவும் புதிதாக மாற்றம் செய்யவும்முயல்கின்றார். கடந்தகால நிரந்தரஉட்பதவி முரண்பாடுகள் தீர்த்துக்கொண்டுஒருமைப்பாடான பலமான அரசாகவும்,முன்நோக்கி செல்லும் பொருளாதாரத்தைகொண்டிருப்பதாகவும் ரஷ்யாவை காட்டுவதன் ஊடாகவும் புட்டினின் நிகழ்ச்சிநிரலில் முக்கியபுள்ளியாக ஒரு ஒருங்கிணைந்த சர்வதேசரீதியானஏவுகணைஎதிர்ப்பு திட்டத்திற்கான பிரசாரம்இருந்தது.

இராணுவ - அரசியல்எதிர்காலம்

இதற்கானபின்னணி என்னவெனில், அமெரிக்காவின் புதிய Ballistic Missile Defence [BMD] ஏவுகணை எதிர்ப்புத்திட்டத்தின் நோக்கமாகும். அமெரிக்காவின்இம் முயற்சியினால் ரஷ்யா தன்னிடமுள்ளகடைசி அணுச்சக்தியும் பறிபோய்விடும் என்றுபயப்படுவதுடன், தென்எல்லைப்பகுதியில்அதனது வல்லரசுக் கொள்கையில் நேரடிவிளைவுகளை கொண்டிருக்கும் என்பதுமாகும்.

Welt am Sonntag என்ற பத்திரிகைக்கு புட்டின்வழங்கிய பேட்டியில் "அமெரிக்கா இப்படியானஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை உருவாக்கினால்அது 1972 இன் ABM உடன்படிக்கையையும், ஏனைய ஆயுதக்குறைப்பு, உறுதிப்பாட்டுஉடன்படிக்கைகளையும் முடிவிற்கு கொண்டுவரும் என எச்சரித்ததுடன், பேர்லினில்எனது விஜயத்தின் போது அனைத்து ஐரோப்பியநாடுகளின் பாதுகாப்பிற்கான ஒரு பொதுவான ஏவுகணை எதிர்ப்புத்திட்டத்திற்கான எமதுமுன்னெடுப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளேன்" எனவும் தெரிவித்தார்

அமெரிக்க வெளிநாட்டமைச்சரானமடலின் அல்பிரைட், "கவனத்திற்குரிய நாடுகள்"எனக்குறிப்பிடப்பட்ட ஈரான், வடகொரியா,லிபியா போன்றவற்றிலிருந்து எதிர்நோக்கும்அபாயம் தொடர்பாக தெரிவித்த கருத்திற்குபதிலளிக்கையில், புட்டின் "மொஸ்கோவின்வல்லுநர்களின் ஆய்வின்படி இப் "பிரச்சனைக்குரியநாடுகளில்" இருந்து இன்றோ அல்லதுஅண்மைக்காலத்திலோ ஏவுகணை அபாயம்எதுவுமில்லை" என மறுதலித்தார்.

ஜேர்மன்பிரதமர் ஷ்ரோடர் ஐரோப்பாவும்ரஷ்யாவும் இணைந்த ஒரு ஏவுகணை எதிர்ப்புத்திட்டத்திற்கான முன்மொழிவை "கவனத்திற்குரியதாகவும்", இது நேட்டோவும் ரஷ்யாவும் அடங்கியகூட்டுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டும்எனவும், ரஷ்யா இல்லாத ஐரோப்பியபாதுகாப்புக்கொள்கையை நினைத்துப்பார்க்க முடியாது எனவும் கூறினார்.

இந்தக்கருத்தின் மூலம் ஜேர்மனின் முரண்பாடானநிலைமையை வெளிப்படுத்துகின்றார். ஒருபக்கம்ரஷ்யாவை நோக்கி சுயமாக அணிதிரண்டுகொள்ள முயல்வதுடன் மறுபக்கத்தில்ஐரோப்பியக்கூட்டமைப்பினதும், நேட்டோவினதும் கட்டமைப்பிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.அமெரிக்காவுடனான ஒரு உடைவு பற்றிமுக்கிய அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

New York Times ஜேர்மன்- ரஷ்ய உறவுதொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,"திரு. ரோடருக்கும் ஜனாதிபதி கிளின்டனுக்கும்இடையிலான அவ்வப்போதான ஒவ்வாதஉறவுகளின் தெளிவான வெளிப்பாட்டின்மூலமே இதை சுலபமாக விளங்கிக்கொள்ளமுடியும். அமெரிக்காவின் புதிய ஏவுகணைஎதிர்ப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதவிர்க்கமுடியாதபடி நேட்டோவினுள்முரண்பாடுகளை அதிகரிக்கும் எனவும்இப்படியான ஒரு முடிவு புட்டினை ஒருமூலையில் தள்ளி ஆத்திரப்படச்செய்யும்எனவும், ஒரு ஜேர்மன் அதிகாரி குறிப்பிட்டதுபோல நேட்டோ கூட்டினுள் தேவையற்றநெருக்கடிகளை உருவாக்கும்" எனக்குறிப்பிடுகின்றது.

இதனால் ஜேர்மன் ரஷ்யாதொடர்பாக மிக கவனமாக கையாள்வதுடன்எல்லாத்திசையிலும் கதவுகளை திறந்துவைத்திருப்பது போன்ற தோற்றத்தைஉருவாக்க முயல்கின்றது. புட்டினின் விஜயத்தின்போது செச்சேனிய யுத்தம் தொடர்பாகபேசப்படாததுடன், அடுத்தபக்கம்ரஷ்யாவின் முக்கிய கடன் பிரச்சனைகள்தொடர்பாக எந்தவொரு சலுகையும்செய்யப்படவில்லை. ஜேர்மன் வெளிநாட்டுஅமைச்சகம் ரஷ்யாவை உகண்டா மாதிரிஅணுக முடியாது என்று எழுந்தமானமாககூறியது.

ஜேர்மன் இராணுவத்தை மறுசீரமைப்பு செய்வது சம்பந்தமான விவாதம் எடுத்துக்காட்டுவது என்னவெனில், இதுவரை ஓரளவுஉறுதியாக இருந்த அத்திலாந்திக்குக்குஇடையிலான இராணுவக்கூட்டு வெகுவிரைவில்வேறுவடிவத்தை எடுக்கலாம் என்பதாகும்.ஐரோப்பிய கூட்டமைப்பின் அமைப்புக்கள்சுயமாக இயங்குவதற்காக, "முக்கியநலன்களை" பாதுகாப்பதற்காக திட்டமிட்டவகையில் தொழில்நுட்ப, கட்டமைப்புக்களைஉருவாக்குகின்றது. இந்த ஆயுதமயப்படுத்தப்படும் திட்டம் பரந்ததும், விலையுயர்ந்ததுமாகும்.

எனவே ஜேர்மனிக்கு குறிப்பிட்ட சிந்திக்கும்காலம் தேவையாக இருப்பதுடன்,முதலாவதாக தனது கிழக்கு பின்புலத்தைமுதலேயே உறுதிப்படுத்திக்கொள்ளபொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த அடித்தளத்தில் ரஷ்யாவுடனான உறவுகளின் புதிய ஆரம்பத்தை"இந்த உள்ளடக்கத்தில் பூரணப்படுத்தமுடியுமா என" பொறுத்திருந்து பரிசோதிக்கின்றனர்.