World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The "Third Way" loses its allure :Clinton, Europien leaders head up ProgressiveGovernance Confrence in Berlin

"மூன்றாவது பாதை"தனது வசீகரத்தை இழக்கின்றது.

"21ம் நூற்றாண்டினை நவீனமாக ஆட்சிசெய்தல்"என்ற பேர்லின் மகாநாடு

By PeterSchwarz
6 June 2000

Use this version to print

ஆனிமாதம்5ம் திகதி ஜேர்மன் பிரதமர் ஹகார்ட் சுரோடர் [Gerhard Schröder] நான்கு கண்டங்களிலிருந்து13 "முற்போக்கான" அரசுகள் என அழைக்கப்படும் சமூக ஜனநாயக அல்லது சமூகஜனநாயகத்திற்கு நெருக்கமான அரசாங்கங்களின் தலைவர்களை "21ம் நூற்றாண்டினை நவீனமாக ஆட்சிசெய்தல்" என்ற மாநாட்டிற்கு பேர்லினுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் ஜேர்மனி விஜயம் இதன் இம்மாநாட்டின் உச்சகட்டமாக கருதப்படுகின்றது. இம் மூன்று மணித்தியால மாநாடு, பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர்,கிளின்டன், சுரோடர் போன்றவர்களின் விசேட அடையாளமாக நீண்ட காலமாக குறிப்பிடப்பட்ட "மூன்றாவது பாதையை"முன்கொண்டு செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள ஒரு தொடர் கூட்டங்களின் ஒன்றெனகூறப்படுகின்றது.

ஆனால் நிகழ்வுகள் குறிப்பிட்டபடி நடைபெறவில்லை. இம்மாநாடு அவர்களின் "மூன்றாவது பாதை" நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது.எதிர்காலத்தில் இப்படியான மாநாடுகூட்டப்படுமா என்பது கேள்விக்குரியதாகிஉள்ளது. Die Zeit பத்திரிகை எதிர்காலத்தில்போதியளவு "முற்போக்கான அரசுகள்"இருக்காது என கேலியாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த கார்த்திகை மாதம் புளொரன்ஸ்இல் நடந்த இதேமாதிரியான மாநாட்டில்கலந்து கொண்ட ஆறுபேரில் இரண்டுபேர் பேர்லினில் கலந்து கொள்ளவில்லை. பிரித்தானியபிரதமர் ரொனி பிளேயர் தனது புதிதாகப்பிறந்த மகனை காரணங்காட்டி கலந்துகொள்ளவில்லை. இது நம்பக்கூடியதல்ல,ஏனெனில் மேயில் நடக்கத்திட்டமிருந்த கூட்டம் தனது குழந்தை பிறக்கும் திகதியை ஒட்டிவருவதால் பிளேயரின் கோரிக்கையிலேயைபின்போடப்பட்டது. மற்றவர் இத்தாலியின்முன்னாள் பிரதமரான சமூக ஜனநாயகவாதியாக மாறிய முன்னாள் கம்யூனிஸ்ட் என கூறிக்கொண்ட Massimo d'Alema ஆவார். இவர் தற்போதுஇராஜினாமா செய்துவிட்டார். இவரதுஇடத்தை எடுத்துக்கொண்ட சோசலிசக்கட்சியை சேர்ந்த தற்காலிகமான பிரதிநிதிஎனக் கருதப்படும் Giuliano Amato இக்கூட்டத்தில்கலந்து கொண்டார். இம்மாநாட்டிற்கு தேவையான வசீகரத்தை வழங்கவேண்டியவரான அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனும் எதிர்வரும் ஜனவரியில் பதவிவிலக இருப்பதால் "நொண்டிவாத்து" ஆகவே கருதப்படுகின்றார்.

"மூன்றாவது பாதை" என்ற பதம் மாநாட்டின்இறுதியில் உத்தியோக பூர்வ வெளியீடுகளில் காணப்படவில்லை. இதற்கு பதிலாக "நவீனமாகஆட்சிசெய்தல்", "முற்போக்காக ஆட்சிசெய்தல்"போன்ற புதிய பதங்கள் வழக்கத்திற்க்குவந்தன.

பதப்பிரயோகங்களில் இன்னொருமாற்றமும் நிகழ்ந்துள்ளது. ரொனி பிளேயரின் கையெழுத்திற்க்கு பதிலாக பிரெஞ்சுபிரதமர் லியனல் ஜொஸ்பன் இனதால் மாற்றமடைந்திருந்தது. அவரது அரசு பொருளாதாரத்தில் மீண்டும் முக்கிய அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ளது.மாநாட்டு அறிக்கையொன்று "திறமையான ஒழுங்கமைப்பும், மேற்பார்வையும்,கணக்கீடும், சட்டரீதியான நிர்வாகமும்சர்வதேச நிதிசந்தைக்கு தேவையெனகோருவதுடன், செல்வத்தினதும், சந்தர்ப்பத்தினதும் பரந்த நீடித்த சர்வதேச பங்கீட்டிற்கான சாதகமான நிலையையும்" வேண்டுகின்றது.

மாநாடு முடிந்த பின்னர் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் கிளின்ரன் சமூகநீதிக்காகவும்,ஏழ்மை, நோய், சமத்துவமின்மை என்பவை அகற்றப்படவேண்டுமென உரத்தகுரல்எழுப்புகையில், ஜேர்மன் பிரதமர் ஹகார்ட்சுரோடர் அரசியலின் மீதான சந்தையின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், நிதிசந்தை மீதுஓர் திறமையான ஒழுங்கமைப்பிற்கும்,மேற்பார்வைக்கும் அழைப்புவிட்டார்.

எவ்வாறிருந்தபோதும் இதனை "இடதுநோக்கிய திருப்பம்" எனவோ அல்லதுபாரம்பரிய சமூக ஜனநாயக சீர்திருத்தத்தைநோக்கிய திருப்பமாகவோ கருதமுடியாது.இது பேர்லினில் கூடிய அரசு தலைவர்களின்நாளாந்த நடைமுறையிலேயை அவர்கள்எவ்வாறு சமூகநீதியை அவமரியாதை செய்கின்றார்கள் என்பதில் இருந்து தெளிவாக தெரிகின்றது.மாநாட்டின் உத்தியோக பூர்வவெளியீடுகளில் ஏழ்மைக்கு எதிராக எவ்வாறு போராடுவது எனவோ அல்லது சந்தையை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதோ திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இவ் அறிக்கையானது கிளின்ரன், பிளேயர், சுரோடரின் அரசியல் பாடசாலைக்குள்ளால் வந்தற்கானசரியான உதாரணமும், ஓர் விமர்சனத்தில்குறிப்பிடப்பட்டது போல் "வெறும் காற்றால்நிரம்பிய ஏமாற்று வேலைகளும், வெற்றுபேச்சும், எதையும் பற்றி கவலைப்படாது கூறும்கதைகளுமாகும்".

இம்மாறிய தொனியானது அவர்களது அரசியலில் மாற்றம் ஏற்ப்படபோகின்றது என்று பொருட்படவில்லை. மாறாக இது சியாற்றில் உலக வர்த்தக அமைப்புகூட்டத்தின் போதும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் அவர்களது அரசியலுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் தீவிர எதிர்ப்பிக்கான பிரதிபலிப்பாகும்.சிறிய அல்லது பொருளாதாரபலம் குறைந்தநாடுகளின் பிரதிநிதியான தென்ஆபிரிக்க ஜனாதிபதி Thabo Mbeki போன்றோரையும், நுழைவாசலில்[அபிவிருத்தியின்] உள்ள நாடுகளின் பிரதிநிதிகளான Fernando Cardoso [பிறேசில்] Fernando de la Rua [ஆர்ஜென்ரீனா] Ricardo Lagos [சிலி] போன்றோரை "முன்னேற்றமான அரசுகளுடன்" சேர்த்துக்கொள்வது ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதாரஆழுமைக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்திலாகும்.

வெளிப்படையான தோற்றங்களில் ஏற்பட்ட மேலெழுந்தவாரியான மாற்றங்கள் இச் சமூகஜனநாயக, ஜனநாயக்கட்சிகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இவர்கள் 90களின்ஆரம்பத்தில் தமது முன்னைய பழமைவாதஅரசுகளின் பொருளாதார, சமூக அரசியலுக்கான எதிர்ப்பினால் பதவிக்கு வந்தனர். தாம்பதவிக்கு வருவதற்காக அவர்கள் அவ்அரசியலுக்கு தமது எதிர்ப்பை காட்டவேண்டியிருந்தது. இதேவேளை அவர்கள் சமூகசீர்திருத்தஅரசியலுக்கு திரும்புவதற்கு விரும்பாமலும்,முடியாமலும் இயலாமையுற்றிருந்தனர்.இதனூடாகத்தான் "மூன்றாவது பாதை"தோன்றியது.

இதன் இரகசியம் என்னவெனில்,சகல சமூக நலன்களையும் அழிக்கும் அரசியலுக்கு புதிய தத்துவார்த்த போர்வையை போர்த்துதலும் விரைவாக நடைமுறைப்படுத்துவதும் ஆகும். அரசியல் கலையானது நடிப்புக்கலையாக மாறியது. பொதுஜன அபிப்பிராயத்தைதிரிக்கும் கட்டுக்கதை கூறுவோரும், ஏனையபண்டிதர்களும் எழுச்சியடைந்தனர்.கிளின்ரன், பிளேயர், சுரோடா் போன்றோர்அரசியல் கொள்கை வகுப்பாளர்களாகஅல்லாது அரசியலின் விற்பனை பிரதிநிதிகளாகபிரதிபலித்தனர். அவர்களது பலம் தொலைத்தொடர்பு சாதனங்களை கையாளுதல்,கவர்ச்சிகரமாக பொதுநிகழ்ச்சிகளில் தோற்றமளித்தல், நப்பாசைகளை கற்பனையாக உருவாக்குதலாகவேஇருந்தது.

இவ் வழிமுறைகள் வெற்றியளித்ததாகவே தோன்றியது. பிளேயர், ஜொஸ்பன், சுரோடர்ஆகியோரின் தேர்தல் வெற்றிகளுடன் அநேகமாக ஐரோப்பா முழுவதும் சமூகஜனநாயகவாதிகள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அவர்கள்தமது வெற்றிக்கு தங்களது முயற்சியைவிடமுன்னர் இருந்த ஆட்சிமீதான வெறுப்புத்தான்காரணமென்பதை கவனிக்காததுடன்,பரந்துபட்ட மக்கள் முழு உத்தியோகபூர்வஅரசியலிலும் இருந்து விலகியிருந்தமைக்கு நன்றி கூறவேண்டியிருந்தது. இதனால் தமதுசொந்த அரசியலுக்கான எதிர்ப்பையும் அவர்களால் பார்க்க முடியாதிருக்கிறது.

ஒரு ஆங்கிலப் பழமொழி கூறுவது போல்"ஒருவன் சிலரை எப்போதும் மடையராக்கலாம், பலரை ஒருதடவை மடையராக்கலாம்ஆனால் எல்லோரையும் எப்போதும்மடையராக்க முடியாது. நப்பாசைஅரசியல், குறுகிய வாழ்க்கைக் காலமுடையது.இங்கிலாந்தில் பிளேயர் லண்டன் நகரசபை தேர்தலில் மிகதீவிரமாக ஈடுபட்டிருந்தும்கென் லிவிங்ஸ்டனிடம் முதலாவது தோல்வியை சந்திக்கவேண்டியிருந்தது. இத்தாலியில் முன்னாள்கம்யூனிஸ்ட்டுகள் அரச பதவியேற்க காத்திருக்க50 வருடம் வேண்டியிருந்தது. ஆனால் குறுகியகாலத்தில் மதிப்பிழந்து போயினர். ஜேர்மனியில்சமூகஜனநாயக, பசுமைக்கட்சியின் கூட்டரசுஒரு வருடகாலத்தில் முடிவிற்கு வந்துள்ளது.இவர்கள் கிறிஸ்தவ ஜனநாயக்கட்சியின் நெருக்கடியினால் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். பிரான்சில் ஜொஸ்பன் அரசாங்கம் அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

பேர்லின் மாநாட்டின் வெற்று வாயடிப்புத்தன்மை, பெரும்பாலான முதலாளித்துவ பத்திரிகைகளாலேயே அலட்சியம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டதாலேயே வெளிப்படையாகியுள்ளது. "மூன்றாம் பாதை" என்ற பேரில் கட்டப்பட்ட நப்பாசைகள் மிக்க மாளிகையின்உடைவானது உண்மையான சமூக, அரசியல்பிரச்சனைகளை தவிர்க்கமுடியாதவாறு முன்கொண்டுவந்துள்ளது. சமூக ஜனநாயகஅரசுகளின் கீழ் திரண்டுள்ள சமூக நெருக்கடிகளும்,முரண்பாடுகளும் ஒரு அரசியல் வடிவமெடுக்கவேண்டும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் அரசுகள் குறிப்பிட்ட வர்க்க நலன்களின்பிரதிநிதிகளாக தாம் எப்படியானவை எனவெளிப்படையாகவும், நேரடியாகவுமே இயங்கத் தொடங்கும். கிளின்டன் நேரடியாகபோகவுள்ள ரஷ்யாவில் இது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது. புதிய ஜனாதிபதியானவிளாடிமீர் பூட்டின் தனது முன்னைய தலைவர்களது ஜனநாயக வழக்கங்களை முடிவிற்கு கொண்டுவந்து "சட்டத்தின் சர்வாதிகாரம்"என்ற பேரில் ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்கின்றார். இப்படியான அபிவிருத்திகள் தற்போதய சமூக வளர்ச்சிக்கு மாறான ஒரு மாற்றீட்டின் தேவையினை மீண்டும் மக்களின் கவனத்தின் முக்கிய விடயமாக்கியுள்ளது.