World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

A Scare on US bond markets

அமெரிக்க பங்குப்பத்திர சந்தையின்குழப்பம்

By NickBeams
12 February 2000

Use this version to print

அமெரிக்க நிதிச்சந்தையின் ஸ்திரமின்மையும்,பாரிய நிதிநெருக்கடிக்கான சாத்தியக்கூறுகளும் பங்குப்பத்திர சந்தையின் ஒரு தொடர்அண்மைக்கால நிகழ்வுகளால் தெளிவாகஎடுத்துக்காட்டப்பட்டன.

கடந்தகிழமை சந்தையில் ஒன்றோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட பாரிய நிதிநிறுவனங்கள் உடையும்தறுவாயில் உள்ளது என்ற வதந்தியை தொடர்ந்து, இதனை மறுத்து New York Federal Reserve நிதி உதவியினை ஒழுங்கு செய்வதாக அறிக்கைவெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டது. Lehman Brothers உட்பட பாரிய நிதிநிறுவனங்கள்இதேபோன்ற மறுப்புகளை வெளியிடநிர்ப்பந்திக்கப்பட்டன.

சந்தை அமைதியடைந்து, அண்மைய நெருக்கடிகள் முடிவடைந்துவிட்டனபோல் தற்போதைக்கு தோன்றினாலும்இந்நிலைமைக்கு இட்டுச்சென்ற சந்தர்ப்பசூழ்நிலைகள் இது இறுதியானதல்ல என்பதைதெளிவாக்குகின்றது.

இவ் அபிவிருத்திகளுக்குகாரணமான பிரத்தியேக சந்தர்ப்பசூழ்நிலைகள் பங்குபத்திர சந்தையில் அசாதாரண நிபந்தனைகளை உருவாக்கியுள்ளன. சாதாரணகாலகட்டங்களில் நீண்ட கால பங்குப்பத்திரங்களுக்கான இலாபம் [நடப்பு வட்டி விகிதம்]10-30 வருடங்களிலும் பார்க்க குறுகிய காலத்திற்குரியவையிலும் அதிகமாகும்.

எவ்வாறிருந்தபோதும்கடந்த கிழமைகளில் சந்தை எதிரிடையானஇலாப வளைவு என அழைக்கப்பட்டநீண்டகால பங்குப்பத்திரங்களின் இலாபம்அதற்கு எதிரான குறுகியகாலத்திற்குரியவையிலும்பார்க்க வீழ்ச்சியடைந்ததை சந்திக்கவேண்டியிருந்தது. New York Federal Reserve ஆல் வட்டிவிகிதம்அதிகரிக்கப்பட்டதால் சந்தையின் பொதுவானஎதிர்பார்ப்பு இலாபவிகிதம் சாதாரணஒழுங்கிற்கு திரும்பிவிடும் என்பதாகும். அதாவதுநீண்டகால பங்குப்பத்திரங்களின் விலைவீழ்ச்சியடையும், அதற்கேற்ப்ப அதனதுஇலாபம் அதிகரிக்கும் என்பதாகும்.

இவ்எதிர்பார்ப்பின் அடித்தளத்தில் பாரியநிதிநிறுவனங்கள் குறுகிய விற்பனையை செய்தன.அதாவது விலைகள் வீழ்ச்சியடையும் என்றஎதிர்பார்ப்பு இல்லாது தமது பத்திரங்களைவிற்றனர். அதன்பின் சந்தையினுள் நுழைந்துமுன்னர் குறைந்த விலையில் விற்ற பத்திரங்களைவாங்குவதனூடாக இலாபமடையலாம்என எதிர்பார்த்தனர்.

ஆனால் நிகழ்வுகள்எதிர்பார்த்ததை போல் இருக்கவில்லை.வீழ்ச்சியடைவதற்கு பதிலாக நீண்ட காலபங்குபத்திரங்களின் விலை அதிகரித்தது. இதுகுறுகியவிற்பனை செய்த நிறுவனங்கள் தமதுகொடுப்பனவுகளை சந்திக்கையில் பாரியஇழப்புக்களை எதிர்நோக்கவேண்டியநிலைமையை உருவாக்கியது.

அமெரிக்கதிறைசேரி தான் பங்குப்பத்திரங்களைதிரும்ப வாங்கபோவதாகவும், கடன்குறைப்புதிட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்கால ஏலத்தினைகுறைக்கப்போவதாக அறிவித்தனைதொடர்ந்து இணைந்த ஒரு வித்தியாசமானசூழ்நிலை தோன்றியது.

குறுகிய-விற்பனைநடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதொகை சிறியஅளவானதல்ல. குறுகிய-விற்பனையில்குவிக்கப்பட்டுள்ள உத்தரவாதநிதி[Hedge Bond],தரகு, முதலீட்டு நிறுவனங்களின்30 வருடகால பத்திரங்களின் பெறுமதி 7 பில்லியன்$ஆகும். இது US Commordity Futures Trading Commission ஆவணப்படுத்த தொடங்கிய காலத்திலிருந்துஆகக்கூடிய தொகையாகும்.

இந்நெருக்கடிதொடர்பாக Financial Times ஆசிரியதலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது."வரவுசெலவு திட்டங்கள் மேலதிகமாகஇருக்கையில் கடன்களை திரும்ப வாங்குவதென்பது வரவுசெலவு நல்லநிலையில் உள்ளதுபோல் இருக்கின்றது. அமெரிக்க கடன்வழங்குஅதிகாரிகள் அவர்களது திட்டங்களுடன் உருவாகிய நிதி பதட்டத்தினை கிட்டத்தட்டவெற்றிகொண்டது போல் இருக்கின்றது."

"நீண்ட அமெரிக்க பொருளாதார வட்டத்தின்பல சாதகமான முடிவுகள் தொடர்பாகவிவாதிக்கப்பட்டது. அமெரிக்க திறைசேரிநிதி இழப்பினை எதிர்நோக்கவேண்டியிருக்கலாம்என்ற கருத்திற்கு, இது பண்பற்ற பண்டிதர்களுக்கு கூட மாறாக அது நிகழவில்லை. சில வேளைகளில்அவர்கள் மேலும் விவாதிக்கவேண்டியிருக்கும்"எனவும் குறிப்பிட்டது.

எதிர்பாராதவிதமாக PBS தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுஅமெரிக்க Hedge Fund, Long Term CapitalManagement இன் உடைவு தொடர்பாகவிபரிக்கையில் 1998 செப்ரம்பரில் அண்மையநெருக்கடி நிகழ்ந்தது. அவ்வேளையில்அமெரிக்க Federal Reserve Board 36 பில்லியன்$ பிணையில்விடுவித்து அமெரிக்க, உலகநிதியமைப்பில்ஒரு "திட்டவட்டமான" நெருக்கடியைதடுத்தனர்.

இத்திட்டம் தெளிவாக்கியதுபோல் LTCM நடைமுறைப்படுத்தியஅபாயத்தை மதிப்பிடும் கணிப்பீடு நடவடிக்க்ைகள்நீண்ட ஆய்வுகளையும், கணிதவியல் ஆய்வினையும்அடித்தளமாக கொண்டது. எவ்வாறிருந்தபோதும் பிரச்சனை என்னவெனில் அவர்கள் அனைவரும்சந்தையில் ஏற்ப்படும் ஏற்றத்தாழ்வுகளின்நிகழ்வுகளிலும், நிலைமைகள் வரலாற்றுவழமைக்கு திரும்பிவிடும் என்ற எதிர்பார்ப்பினையையும் அடிப்படையாக கொண்டதாகும்.

தனது முதல் வருடத்தின் இயக்கத்தின்போது LTCM பாரிய இலாபத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் கொள்கை விபரிப்பவர்களின்வார்த்தைகளின்படி "1997 கோடைகாலத்தில்தாய்லாந்தில் சொத்துக்களின் விலைகள்ஊசலாடிக்கொண்டிருந்தன. இது ஆசியாமுழுவதும் பயப்பீதியை தூண்டிவிட்டது. ஜப்பானிலிருந்து இந்தோனேசியா வரை வங்கிகள் பொறிந்தபோது மக்கள் வீதிகளுக்கு இழுக்கப்பட்டு நடக்கக்கூடாதது நடந்தது போல் அவர்கள் எந்தவொருவரின் அமைப்பின் உள்ளும் தம்மை இணைத்துக்கொள்ளாது இருந்தனர்."

பின்னர் ரஷ்யாவின்தவறு 1998 ஆகஸ்ட்டில் வந்தது. இதன்போதும் LTCM இன் மாதிரிகள் முன்னரைப்போல்கணக்கிடப்படவில்லை. அமெரிக்காவினதும்,உலக நிதிச்சந்தையினதும் இயக்கத்தின் எதிர்பார்க்கக்கூடிய தன்மைகள் எதிர்வரும் காலங்களில்"அசாதாரண" நிகழ்வுகளாக தோற்றமளிக்கும்.இது அமெரிக்க திறைசேரியின் பிரச்சனையற்ற,தீங்கற்ற மீள்கொள்வனவு செய்யும்நடவடிக்கையாக தோற்றும். வர்க்கப்போராட்டத்தின் கிளர்ச்சியை பற்றி பேசாதுவிட்டாலும், ஒரு பாரிய நிதி இழப்பினை கிளப்பிவிடகூடும். இதற்கான எச்சரிக்கை சைகைகள்ஏற்கனவே தெளிவாகவுள்ளன.