World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Franco-German sumit agrees to close military and political cooperation

ஜேர்மன்-பிரெஞ்சு உச்சி மாநாடு நெருங்கிய இராணுவ அரசியல் ஒத்துழைப்பிற்கு முடிவெடுத்துள்ளது

By Peter Schwarz
16 June 2000

Use this version to print

ஜேர்மன்-பிரெஞ்சு அரசாங்கங்கள் ஐரோப்பிய கூட்டமைப்பை சீர்திருத்தம் செய்வதற்காக நெருக்கமாக்கூடி இயங்குவதற்கும் இராணுவத்தை மேலும் ஆயுத மயமாக்குவதற்கும் முடிவெடுத்துள்ளனர். இது ஆனி 9ம் திகதி மைன்ஸ் (Mains) இல் நடைபெற்ற75 வது ஜேர்மன்-பிரெஞ்சு உச்சிமகாநாட்டின் தீர்மானங்களாகும்.

இதுவரை ஜேர்மன் பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடருக்கும் பிரெஞ்சு அரசின் தலைமையான ஜனாதிபதி ஜக் சிராக், பிரதமர் லியனல் ஜோஸ்பன்ற்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இருக்கவில்லை எனக்கருதப்பட்டது.ஆனால் தற்போது பத்திரிகைகள் "ஜேர்மன்-பிரான்ஸ் உறவுகள் மீண்டும் தளிர்த்துள்ளதாகவும், இரண்டு அரசுகளுக்கிடையேயும் காதல் தோன்றியுள்ளதாகவும்" குறிப்பிட்டுள்ளன.

மைன்ஸில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால ஐரோப்பாவை எப்படி உருவாக்க வேண்டும் என்பது மட்டுமல்லாது அத்திலாந்திக்கு இடையிலான உறவுகள் தொடர்பாகவும் நடைமுறையில் தூரநோக்கான விளைவுகளைக்்கொண்டுள்ளன. இது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அதிகரித்துவரும் முரண்பாடுகளின் சைகையாகும்.

அரசியல் அடித்தளத்தில் ஷ்ரோடரும் சிராக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பின் சீர்திருத்தம் தொடர்பாக நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகளில் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை எடுக்க இணக்கம் கண்டுள்ளனர்.

அடுத்த அரை வருடத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமையை பிரான்ஸ் எடுக்க இருக்கையில், கூட்டமைப்பின் அதிகாரக்கட்டமைப்பு புதிதாக ஒழுங்கமைக்கப்பட வேண்டியுள்ளது. இது கிழக்கு ஐரோப்பாவிலிருந்து புதிய அங்கத்தவர்களை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கும் திட்டத்திற்கு முன்நிபந்தனையாக அமைந்துள்ளது. தனித்தனி நாடுகள் முழு ஐரோப்பிய கூட்டமைப்பை தடைசெய்வதை இல்லாமல் செய்வதற்காக இதுவரை இருந்த ஏகமனதான வடிவில் முடிவெடுப்பது பெரும்பான்மை வடிவில் முடிவெடுப்பதால் மாற்றப்படவேண்டும், அங்கத்துவ நாடுகளுக்கான வாக்கு எண்ணிக்கை அந்நாடுகளின் மக்கள் தொகையின் அளவிற்கு ஏற்றமாதிரி கணிப்பிடப்படுவதுடன் இதுவரை ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளாலும் பிரதிநிதித்துவபடுத்தப்பட்ட ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணைக் குழுவின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும், இவையே ஜேர்மனியும் பிரான்சும் இணக்கம் கண்டுள்ள சீர்திருத்தங்களாகும்.

ஜேர்மனியும் பிரான்சும் இணக்கம்கண்ட இக்கேள்விகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வருமாயின் எதிர்கால ஐரோப்பிய கூட்டமைப்பை தாம் விரும்பிய விதத்தில் ஒழுங்கமைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் ஐரோப்பிய கூட்டமைப்பினுள் அரசியல் ரீதியாக குரல் எழுப்பக்கூடிய"மத்திய ஐரோப்பாவை" அதாவது ஒரு"உயர்மட்டக் குழுவை" அமைப்பதற்கான முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளனர்.

வெளிநாட்டு அரசியலில் அமெரிக்கா நினைப்பதுபோல் ஐரோப்பிய கூட்டமைப்பானது கையாளும் திறமையற்ற, அரசியல் வடிவமற்ற ஒருபாரிய பொருளாதாரக்கூட்டாகும்.அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் தனது அண்மைய ஜேர்மன் விஜயத்தின்போது ஐரோப்பிய கூட்டமைப்பை ரஷ்யாவிற்கு திறந்து வைத்திருக்கவேண்டுமென்ற முன்மொழிவானது ஜேர்மனியினதும் பிரான்சினதும் ஆளும் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பேச்சுவழக்கிலுள்ள கதையான காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டகதை ஞாபகப்படுத்தப்பட்டதாக உணர்ந்து, இச்சட்டபூர்வமற்ற பிள்ளை தங்களது அரசியல் நோக்கங்களை நீண்டகாலத்திற்க்கு இயக்கமற்றதாக்கிவிடுமென அஞ்சுகின்றனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பினை சீர்திருத்தம் செய்வதைவிட ஜேர்மன்-பிரெஞ்சு உச்சிமகாநாட்டில் இராணுவத் துறையிலான கூட்டுழைப்பு,ஆயுதங்கள் தொடர்பான உடன்பாடுகள்அரசியல் ரீதியாக மேலும் முக்கியமானவை.

ஜேர்மன் அரசாங்கம் தற்போதுள்ள விமானப்போக்குவரத்து பற்றாக்குறையை பூர்த்திசெய்ய 75 A400M Airbus வகை இராணுவப்போக்குவரத்து விமானங்களை வாங்கசம்மதித்துள்ளது. இதன் மூலம் விலை மலிவானரஷ்ய-உக்ரேனிய தயாரிப்பான அன்டனோவ்விமானங்களை வாங்கும் முன்னைய முடிவு செல்லுபடியாகிவிட்டது. பிரித்தானியாவும் பிரான்சும் ஏற்கனவே Airbus வாங்கத்தீர்மானித்துள்ளபடியால் தற்போதுமூன்று முக்கிய ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்திலும் விநியோகத்திலும் தங்கியிராத ஒரேமாதிரியான விமானப்போக்குவரத்து வகையை கொண்டிருக்கின்றன.அதேவேளை பிரான்சும் ஜேர்மனியும் மாநாட்டு இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி Airbus நிறுவனத்துடன் ரஷ்யாவையும் உக்ரேனையும் இணைந்துஇயங்க விரும்புகின்றனர்.

இதைவிட மேலதிகமாகஅவர்கள் ஒரு பொதுவான சற்றிலைட் அமைப்பையும் (Sattelite System) விண்வெளிக்குஅனுப்பும் நோக்கத்தினையும் தெரிவித்துள்ளனர்.இவ் வேவுபார்க்கும் அமைப்பு "சுயாதீனமாக"இருக்கவேண்டுமென கூறப்படுகின்றது.இதன்மூலம் தற்போதுள்ள நேட்டோகட்டமைப்பிற்கு வெளியே இயங்கும் எனக்கருத்ப்படுகின்றதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.இதுவரை ஐரோப்பா நவீனயுத்தத்தின் தீர்க்க கரமான பிரதேசமான சற்றிலைட் வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது.

Airbus,சற்றிலைட் அமைப்பு தொடர்பானஇரண்டு முடிவுகளும் இராணுவரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் நிலைமையிலிருந்து விலகி தங்களது பூகோள நலன்களை சுயாதீனமாக தொடர்வதற்கான ஐரோப்பாவின் முயற்சிகளின் முக்கிய விடயங்களாகும்.

தற்போது நேட்டோவில் தங்கியிராத ஐரோப்பிய கட்டளையிடும் அமைப்பையும்,கூட்டுக்களையும் உருவாக்குவதற்கான முயற்சி வெளிப்படையாகியுள்ளது. கொசவோயுத்தத்தின் உச்சநிலைமையின் போது நடைபெற்ற 1999 கேளின் (Köln) உச்சிமாநாட்டில் இருந்தே இதற்குத் தேவையான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த இலையுதிர்காலத்தில் ஹெல்சிங்கி (Helsinki) உச்சிமாநாட்டில்60,000 பேரைக்கொண்ட ஐரோப்பிய படையைஉருவாக்க முடிவெடுக்கப்பட்டு விட்டது.

ஆனால் இதன்போது நேட்டோ கூட்டாக தலையிடாத சந்தர்ப்பத்தில் மட்டுமே சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத்தலையீடு இடம்பெறும் என அமெரிக்காவுடன் உடன்பாடுசெய்து கொள்ளப்பட்டது.அதாவது அமெரிக்க ஆழுமைக்குரிய நேட்டோவிற்கு போட்டியாக ஐரோப்பிய அமைப்புக்கள் இருக்காது என்பதாகும். இதற்குப ்பிரதியீடாக ஐரோப்பிய அமைப்புக்களுக்குஆயுத, ஆள், திட்டமிடும்தகமை, ஆணையிடும்கட்டமைப்பு போன்றவற்றை நேட்டோவழங்கும் என அமெரிக்கா உறுதியளித்தது.ஆனால் இதுவரை இது நிகழவில்லை. ஐரோப்பிய கூட்டமைப்பின் இரகசியத்தை பாதுகாக்கும் தராதரம் நேட்டோவின் அளவில் இல்லை என்ற சாக்குபோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இரகசிய ஆவணங்களை வழங்க அமெரிக்கா மறுத்து வருகின்றது.

இதனால் பிரான்சு ஜனாதிபதி சிராக் நேட்டோவிலிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பினை முற்றாக சுயாதீனமாக்க நிர்ப்பந்திக்கின்றார். மைன்ஸ்இன் சந்திப்பிற்கு சற்று முன்னர் "வேறுஎங்காவது எடுக்கப்படும் முடிவுகளில் தங்கியிருக்காது" இயங்குவதற்காக "ஐரோப்பியகூட்டமைப்பு சகல இராணுவச் சாதனங்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும், இதற்கு திட்டமிடுவதற்கான அமைப்பு,தீர்மானிக்கும் கட்டமைப்பு, இராணுவ தலைமை உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன்மூலம் நெருக்கடிகளை வெற்றிகரமாக தீர்க்கலாம்"எனவும் கூறினார்.

ஜேர்மனி தனது கருத்தைமிக எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.ஒரு சுயாதீனமான ஐரோப்பிய ஆயுததொழிற்துறையை திட்டமிட்டவகையில் கட்டியமைக்க முயல்வது அமெரிக்காவிலிருந்து அதிகரித்தவிதத்தில் இராணுவ சுயாதீனமடைதலையே எடுத்துக்காட்டுகின்றது. பூகோளமயமாக்கலின் கீழ் ஏனைய தொழிற்துறைகள் ஒன்றுடன் ஒன்று இணைவது அதிகரித்து வருகையில், ஆயுதத்தயாரிப்பாளர்கள் அத்திலாந்திக்கின் இருபக்கங்களிலும் மேலும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச்செல்கின்றனர்.இது எவ்வாறு தமது பாரிய நிறுவனங்கள் ஒன்றிணைவதை அரசுகள் தீவிரமாக ஆதரிக்கின்றனவோ அதேபோல் இதனையும் ஆதரிக்கின்றனர்.ஐரோப்பிய திட்டங்களை கூடுதலாக ஐயுறவுடன் நோக்கும் பிரித்தானியாவும்கூட ஐரோப்பிய ஆயுத தொழிற்துறையின் ஒன்றிணைப்பில் பங்கெடுக்கின்றது.

இத்திசையில்மிக ஆர்வமாக முன்மொழியப்பட்டது ஒரு ஐக்கிய ஐரோப்பிய வான்வெளிக் கூட்டமைப்பினை (EADC) உருவாக்குவதாகும். இது பிரெஞ்சு Aerospatiale, பிரித்தானிய Aerospace, ஜேர்மன் Daimler Chrysler Aerospace, ஸ்பெயினின் CASA சுவீடனின் SAAB இத்தாலியின் Finmeccanica-Alenia போன்ற நிறுவனங்களை உள்ளடக்கும். இது மூன்று அமெரிக்க நிறுவனங்களான Boeing, Lockheed,Raytheon போன்றவை கவனம் செலுத்தும்,அமெரிக்க ஆயுதத் தொழிற்துறையின் முன்னிற்கும் இராணுவ விமானங்கள், வானூர்திகள், வான்வெளியிலான திட்டமிடல், தொலைவிலிருந்து இயக்கும்ஆயுதங்கள் மற்றும் எனைய ஆயுதங்களை ஐரோப்பாவிற்காக உற்பத்தி செய்யவுள்ளன.

இது அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்பாக மட்டுமல்லாது பாதுகாப்புஅரசியல் தொடர்பான கவனங்களையும் எழுப்பியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புநிபுணர்களான John Deutch, Arnold Kanter, Brent Scowcroft ஆகியோர் Foreign Affairs என்ற சஞ்சிகையில்"அமெரிக்க ஐரோப்பிய பாதுகாப்புதொழிற்துறை அடித்தளத்தில் தீவிரமாகபிரிந்து செல்வது அமெரிக்க ஐரோப்பியகூட்டமைப்பினது அரசியல் அடித்தளத்தை சீர்குலைத்துள்ளது" எனவும், மேலும் அவர்கள்"ஐரோப்பிய ஆயுததொழிற்துறை ஐரோப்பியகூட்டமைப்பிற்கு முக்கியமானதொருவிடயமாகவும், அமெரிக்காவிற்கு எதிராகஅரசியல் ரீதியாக சமநிலையாக நிற்கலாமெனபல முக்கிய அரசியல் தலைவர்கள் கருதுவதாகதோன்றுகின்றது" எனக்குற்றம் சாட்டுகின்றனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை அமைப்பதற்கான நோக்கம் ஐரோப்பாவில் மீண்டும் அவநம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதிபில் கிளின்டனின் அண்மைய ஜேர்மன் விஜயத்தின்போது ஜேர்மன் பிரதமர் ஷ்ரோடர் இத்திட்டத்தை பலதடவை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவால் அதன் தேசிய ஏவுகணை எதிர்ப்பால் எதிர்கால எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமானால் அது ஒரு புதிய ஆயுதப்போட்டிக்கு வழிவகுத்துவிடும் எனவும், ஐரோப்பா இருபக்க நெருக்கடிகளுக்குள் அல்லது அமெரிக்காவின் உலக அரசியலின் பணயக்கைதியாகவோ மாறவேண்டியிருக்கும் என்ற பயமும்,தோன்றியுள்ளது.

கூடுதலாக கொசவோயுத்தத்தின் பின்னர், அமெரிக்காவின் இராணுவஆளுமைக்கு எதிரான அதிருப்தியின்மையை ஐரோப்பாவில் தெளிவாக கேட்ககூடியதாகவுள்ளது. உத்தியோக பூர்வ பேச்சுக்களில் யூகோஸ்லாவியா மீதான தாக்குதல்இன்னமும் நேட்டோவின் கூட்டான நடவடிக்கைஎன கூறப்படுகின்றது. ஆனால் ஐரோப்பாவைஒரு சிந்திக்காத நடவடிக்கையில் தள்ளிவிடுவதற்காக தனது இராணுவ பலத்தினை உபயோகித்ததாக அமெரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் இணைந்து யுத்தத்திற்கு எதிரான விமர்சனங்கள்அதிகரித்து கொண்டிருக்கின்றன.

இப்படியானஒரு கருத்து முன்னாள் சமூக ஜனநாயகக்கட்சி தலைவரும் பிரதமருமான வில்லி பிராண்ட் (Willy Brand) இன் கிழக்குத் தேச அரசியல்ஆலோசகரான ஈகோன் பாஹ்ர் (Egon Bahr) Die Zeit என்ற பத்திரிகையில் "யூகோஸ்லாவியா யுத்தம் அமெரிக்கா ஐரோப்பாவின்பாதுகாப்பு அரசியலின் பாதுகாவலனாகபார்ப்பது தெளிவாகி உள்ளது. பெல்கிராட்மீதான யுத்தத்தில் தலைமை தாங்குதலினதும்,யுத்தத்தை நடாத்தியதிலும் அமெரிக்காவின்ஆளுமை, தாக்கும் இடத்தை தேர்ந்துஎடுப்பதில் புதிய தொழில்நுட்பத்தை பிரயோகித்தலும் பிரச்சாரமும், இதில் நேட்டோ ஓர்ஆயுதமாக்கபட்டதுடன் யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிட பாவிக்கப்பட்டமை மறைக்கப்பட முடியாதவை" என எழுதியுள்ளது ஒரு உதாரணமாகும்.

அமெரிக்கா,ஐரோப்பாவின் சுயாதீனமான இராணுவமுயற்சிகளை அதிகரித்துவரும் அமைதியின்மையுடன்நோக்குகின்றது. அவர்கள் நேட்டோவின் கட்டமைப்பினுள் ஐரோப்பாவின் பாரியஇராணுவ பங்களிப்பினை வேண்டி நிற்கையில்,இது நேட்டோவில் அமெரிக்காவின் ஆளுமையைமீறி சென்றுவிடுமோ என்பது வாஷிங்டனில் விமர்சனத்திற்குள்ளாகின்றது.

அமெரிக்கவெளிநாட்டமைச்சர் மடலீன் அல்பிரைட் (Madeleine Albright) அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள முரண்பாடுகளை பின்வருமாறுசுருக்கமாக குறிப்பிடுகின்றார் "ஐரோப்பா தனது பொதுவான பாதுகாப்பு அரசியல்கொள்கையினால் நேட்டோவிலிருந்தும்எம்மிலிருந்தும் விலகிப்போகலாம் என்பதுதொடர்பாக நாம் முக்கியமாக கவலைகொண்டுள்ளோம். இதேவேளை எமதுதேசிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தால் நாம் தம்மிடமிருந்து விலகிப்போகலாமென ஐரோப்பா பயப்படுகின்றது".