World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Indian foreign minister's balancing act in colombo

கொழும்பில் இந்திய வெளிநாட்டமைச்சரின் சமநிலைப்படுத்தும் நடவடிக்கை

By Dianne Sturgess
16 June2000

Use this version to print

இந்திய வெளிநாட்டமைச்சர் ஜஸ்வந் சிங் ஆனி 11ம் திகதி ஸ்ரீலங்காவிற்குவிஜயம் செய்துள்ளார். அவர் அங்கு வடக்கு,கிழக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்யுத்தம் தொடர்பாக அரசாங்கத்துடனும்,ஏனைய அரசியல் தலைவர்களுடனும்பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களாக பிரிவினைவாததமிழீழ விடுதலை புலிகள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்குஎதிராக குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியடைந்துள்ளார்கள்.

ஜஸ்வந் சிங் இன் விஜயம் இந்தியாவினுள்இருந்தும், சர்வதேச ரீதியாகவும் எழுந்துள்ளமுரண்பாடான அழுத்தங்களை சாதுர்யமானமுறையில் சமநிலைப்படுத்தும் நோக்கத்தைகொண்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஸ்ரீலங்கா அரசின் ஐக்கியத்தை உறுதிப்படுத்திஇவ்யுத்தத்தினை சமாதான ரீதியாக முடிவிற்குகொண்டுவர பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிதலைமையிலான இந்திய அரசினை வலியுறுத்துகின்றன. இந்தியாவும் ஏனைய முக்கிய நாடுகளும்த.ஈ.வி.புலிகளின் ஆதிக்கத்தின் கீழான தனியானஅரசின் உருவாக்கத்திற்கான எந்தவொருதீர்வும் இந்திய உபகண்டம் முழுவதும் பிரிவினைவாதஇயக்கங்களின் தோற்றத்தினை ஊக்குவிக்கும்என பயமுற்றிருக்கின்றனர்.

பிராந்தியஆதிக்க சக்தியாக வளரும் நோக்கத்தைகொண்ட இந்தியா தனது போட்டியாளர்கள்ஸ்ரீலங்காவின் நெருக்கடியை பாவித்துஅங்கு காலூன்றுவதை விரும்பவில்லை. ஸ்ரீலங்காபாக்கிஸ்தானிலிருந்தும் சீனாவிலிருந்தும் ஆயுதங்களைபெற்றுக்கொண்டதை புதுடெல்லி நிச்சயமாகஅவதானித்திருக்கும். தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் பாகிஸ்தான்தகுந்த நேரத்திற்கு தந்து உதவியதாககொழும்பு பகிரங்கமாக புகழ்ந்திருந்தது.சீனா, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு Multibarreled rocket launchers அன்பளிப்பு செய்திருந்தது.

இதேவேளை இந்திய அரசாங்கம் ஆளும்தேசிய ஜனநாயக கூட்டணி இனுள் இருந்தும்நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.இக்கூட்டணியில் உள்ள பலகட்சிகள் தென்மாநிலமான தமிழ்நாட்டை அடித்தளமாக கொண்டுள்ளன.இவை ஸ்ரீலங்கா தமிழ் சிறுபான்மையினரின்தலைவிதி மீது குறிப்பிடத்தக்க அக்கறைகொண்டுள்ளனர்.

ஒரு கிழமையின் முன்னர் தேசிய ஜனநாயககூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றகழகத்தின் தலைவரும், தமிழ் நாட்டின்முதலமைச்சருமான மு.கருணாநிதி ஸ்ரீலங்காவினைசெக்கோசிலோவாக்கியாவின் மாதிரியில்பிரிக்கலாம் என கூறியது புதுடெல்லியிலும்கொழும்பிலும் முக்கியகவனத்திற்குரிய விடயமாகியது. பாதிப்பை உருவாக்க கூடிய இப்பிளவானதுஉடனடியாக மூடப்பட்டது. த.ஈ.வி.புலிகளுக்குஎதிரான ஸ்ரீலங்கா இராணுவத்தின் யுத்தத்திற்குஇந்திய அரசாங்கம் நேரடியான உதவியளிப்பதற்கான நோக்கமெதனையும் வெளிக்காட்டுவதில் கவனமாக இருப்பதாக ஆகக்குறைந்ததுவெளிப்படையாக காணகூடியதாக உள்ளது.

ஜஸ்வந் சிங் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்,எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா,சில தமிழ்கட்சிகளின் தலைவர்களுடனும் இரண்டுநாட்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார். ஆனி 12ம் திகதி வெளிநாட்டு அமைச்சால்வெளிவிடப்பட்ட கூட்டு அறிக்கையில் குமாரதுங்காவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்குமுக்கிய அரசியல், பொருளாதார உதவிகள்வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் இது மட்டுப்படுத்தப்பட்டதே.

ஜஸ்வந் சிங் ஸ்ரீலங்காவின் ஐக்கியத்திற்கும்,தேசிய இறைமைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்க்குமான தொடர்ந்த பங்களிப்பையும்,அரசியல் உடன்பாடு ஒன்றினூடாக நிரந்தரஅமைதியை நிலைநாட்டுவதற்கான இந்தியாவின்ஆதரவையும் வழங்க உறுதியளித்தார்.இந்தியா தன்னுடனான வர்த்தக அடித்தளத்தில்கோதுமை, அரிசி, சீனி போன்றவற்றை வாங்குவதற்கான வசதியளிப்பதற்காக 100மில்லியன்$ கடன்வழங்குவதாக அறிவித்துள்ளது.

தனதுதமிழ்நாட்டு கூட்டுக்கள் மீது கவனம் செலுத்தியவாறு, இப்பொருளாதார உதவிகள் "மனிதாபிமானஅடிப்படையில் மட்டுமே" என இந்தியாவலியுறுத்தியுள்ளது. வெளிப்படையாக இந்தியஅரசு கொழும்பின் யுத்த முயற்சிகளுக்குஆதரவளிக்கவில்லை என கூறலாம். ஆனால்தனிப்பட்டரீதியில் கட்டாயமாக அது ஸ்ரீலங்காஅரசுடனான தனது நெருங்கிய உறவினைகொண்டுள்ளது. இந்நிதி உதவியானது நீடித்தபோக்கில் கொழும்பின் திறைசேரியின் ஆழமானபற்றாக்குறையை நிரப்பப்போகின்றதுஎன்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்ததே.

ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு சேமிப்பானதுஇரண்டரை மாதத்திற்கு போதுமானவழமையான இறக்குமதியை சமாளிப்பதற்க்குபோதுமானளவிற்கு குறைந்து போயுள்ளது.யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவச்சீரழிவை தடுத்துநிறுத்தும் நோக்கத்திலானஅண்மைய பாரிய ஆயுதகொள்வனவானதுநாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

கூட்டறிக்கையின்படி ஜனாதிபதிகுமாரதுங்கா "மனிதாபிமான, பொருளாதாரரீதியான இந்தியாவின் உதவியை ஸ்ரீலங்காதற்போது எதிர்நோக்கும் எவ்வித நெருக்கடியையும் இலகுவாக்க உதவியாக இருக்குமென"வரவேற்றுள்ளார். ஸ்ரீலங்கா அரசுஇவ்உதவி மனிதாபிமான ரீதியாக மட்டுமல்ல,கொழும்பு அரசாங்கத்தின் மேலதிகநவீன ஆயுதத்திற்கான அதிகரிக்கும் செலவீனத்திற்கான பொருளாதார ரீதியாக உதவியும் கூடஎன்பதை விளங்கிக்கொண்டுள்ளது.

மேமாத நடுப்பகுதியில் இந்திய விமானப்படைத்தளபதி ரிப்னிஸ் இன் விஜயத்தின் கலந்துரையாடலின்போது இந்திய இராணுவ உதவிகோரி குமாரதுங்காகண்ணீரில் மூழ்கிவிட்டதாக டைம்ஸ் ஒவ் இந்தியா குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஜஸ்வந் சிங் உடனானகலந்துரையாடலின் பின்னர் அவர் கரையேறிவிட்டார். அவர் ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டிற்கானஇந்தியாவின் பங்களிப்பை வரவேற்றுள்ளார்.

வெளிப்படையாக எவ்வாறிருந்தபோதும்கொழும்பு அரசாங்கம் மேலதிகமாகவேஎதிர்பார்க்கின்றது. கடந்த ஏப்ரலில் ஆனையிறவுஇராணுவமுகாமை இழந்த பின்னர் பெளத்தபீடங்கள் உட்பட தீவிர வலதுசாரி குழுக்களும்இந்தியாவின் நேரடி இராணுவ தலையீட்டைகோருகின்றன. இந்திய அரசாங்கம் நேரடிஇராணுவ உதவியை வழங்காததற்குகாரணம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில்அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் எதிர்ப்பைகவனத்திற் கொண்டாகும்.

இந்து நாளிதளுக்குவழங்கிய பேட்டியில் இந்தியா இராணுவஉதவி வழங்காதது தொடர்பாக நீங்கள்ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணரவில்லையா?என கேட்கப்பட்ட போது குமாரதுங்கா"அரசியலில் எவரும் எதற்காகவும் எவராலும்ஏமாற்றப்பட்டதாக உணரக்கூடாது.உண்மையாக ஒருவர் கேட்கும்போதுமற்றயவரிடமிருந்து அதற்கு சாதகமானபதிலையே எதிர்பார்ப்பர். இல்லாவிடின்ஒருவர் கேட்கப்போவதில்லை. நான் தெற்கு ஆசியாவில் இந்தியா முக்கியபங்குவகிக்கவேண்டும் என எப்போதும் கூறிவந்துள்ளேன்".என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும்இந்தியாவின் தலையீட்டின் மட்டுப்படுத்தப்பட்டதன்மை இலங்கை ஆளும் வட்டாரங்களில்ஆழ்ந்த கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. ஐலன்ட் பத்திரிகையின் 14ம் திகதி ஆசிரியர்தலையங்கம் "திரு. சிங் இனால் வழங்கப்பட்டமனிதாபிமான உதவிகளும் கடன்உதவிகளும்மட்டும் ஸ்ரீலங்காவிற்கு முக்கியமானவைஅல்ல. நிதிவசதிகளும் ஆசிகளும், இராஜதந்திரபேச்சுக்கள் மூலம் பிளவுகளை பூசிமெழுகுதலும்ஸ்ரீலங்காவிற்கு தற்போது அவசியமானதல்ல.இந்நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்காகநாம் எமது நலனைக் கருதும் அனைவரையும்திட்டவட்டமான வழியில் உதவியளிக்க கேட்கவேண்டும். எமது நெருங்கிய அயலவரிடமிருந்து பாரியஆயுதங்களுக்கான உதவிதேவை என்பதேவெளிப்படையான உண்மையாகும். இதுகிடைக்கவில்லை என்றால் நாம் வேறெங்காவது பார்க்கவேண்டும். இராஜதந்திர சுத்துமாற்று பேச்சுக்கள் இதனை செய்யப்போவதில்லை"என எழுதியுள்ளது.

"வேறெங்காவதுபார்க்கவேண்டும்" என பயமுறுத்துவதன்மூலம் ஸ்ரீலங்கா ஆழும்தட்டினர் வடக்கு,கிழக்குதமிழ் மக்களுக்கு எதிரான மூர்க்கமானயுத்தத்திற்கு இந்திய அரசாங்கத்தின் நேரடிஆதரவை வழங்க வலியுறுத்த தெளிவாகமுயல்கின்றனர். 1987 இல் இந்திய-இலங்கைஒப்பந்தத்தின் கீழ் வடக்கு, கிழக்கிலுள்ளதமிழ் மக்களை காவல்காக்க இந்தியாஆயிரக்கணக்கான "சமாதானப்படை"என அழைக்கப்பட்ட படையை அனுப்பியிருந்தது.ஆனால் இவ்வுடன்படிக்கை விரைவில் உடைந்ததுடன், த.ஈ.வி.புலிகளுடனான கசப்பான மோதலுக்கு இட்டுச்சென்றதுடன், ஆயிரக்கணக்கானஇந்திய படையினரின் இழப்பிற்கு காரணமானதுடன்இறுதியில் இந்தியாவை வாபஸ்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தியா மீண்டும் ஒருதடவை விரைவாகதலையிட தயங்குவதற்கு இவ்அனுபவங்களும்இன்னொரு காரணமாகும்.