World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Large-scale arrests of Tamils following bomb blast

இரத்மலானை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழர்கள் கைது

By Dianne Sturgess
17 June 2000

Use this version to print

கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குணரத்னவையும் இன்னும் 22 பேரையும் பலி கொண்டஜூன் 7ம் திகதிய குண்டு தாக்குதலைத்தொடர்ந்து, கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் தமிழ் மக்களுக்குஎதிராக பொலிசார் ஒரு இனவாத வேட்டையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தமிழர்கள்வசிக்கும் இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள்இடம்பெற்றதோடு, ஒரு தொகைதமிழ் இளைஞர்கள் கொழும்பு நகர்ப்புற-கிராமப்புற பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.

பொலிசார் இந்தக்குண்டு வெடிப்பின் பேரிலான சந்தேகத்தில்63 பேரை கைது செய்துள்ளதாக தொடர்புச்சாதனங்களுக்கு தெரிவித்துள்ள போதிலும்,உலக சோசலிச வலைத் தள நிருபர்களின்தகவல்களின்படி கைதானோரின் எண்ணிக்கைபெரிதும் அதிகமாகும். இந்தக் குண்டு வெடிப்புகொழும்புக்கு தெற்கே- 16 கி.மீ. அப்பால்உள்ள- இரத்மலானையில் இடம்பெற்றது.பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் வாழும்'சொய்சாபுர' தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்துக்கு சமீபமாக இது இடம்பெற்றது.

குண்டு வெடிப்பு இடம் பெற்ற ஒரு சிலநிமிடங்களில் ஆளும் பொதுஜன முன்னணி குண்டர்களும், இனவாத சக்திகளும் சம்பவம் நடைபெற்றஇடத்துக்கு சமீபமாக உள்ள தமிழருக்குச்சொந்தமான பல கடைகளை உடைத்துதிறந்தனர். எந்த ஒரு தாக்குதலும் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பலதமிழ் ஊழியர்கள் இந்த இடங்களில் இருந்துவெளியேறினர். கதவடைப்புச் செய்துகொண்டுஉள்ளே இருந்த சில தமிழ் கடை ஊழியர்கள்பொலிசாரின் முன்நிலையில் குண்டர்களால்ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டனர். பின்னர்பொலிசார் குண்டர்களுடன் சேர்ந்து-சிவில் உடை தரித்த பொலிசார் உட்பட-இந்த சொய்சாபுர வீடமைப்புத் திட்டத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்களை கைதுசெய்வதில் ஈடுபட்டனர். இந்த வீடமைப்புத்திட்டத்தில் வசிப்பவரும் தமிழ் அரசாங்கஊழியருமான ஒரு பெண், உலக சோசலிசவலைத் தளத்துக்கு பின்வருமாறு தெரிவித்தார்:"அவர்கள் (காடையர்கள்) தமிழர்கள்வசிக்கும் வீடுகளை காட்டி 'புலிகள் இந்தவீடுகளில் வசிக்கின்றனர்' எனக் கூச்சலிட்டனர்.அவர்கள் பிரதான வாசல் கதவை திறக்கும்படிகோரினர். நாம் பயத்தினால் அப்படியேசெய்தோம். நாம் அங்ஙனம் கதவுகளைத்திறக்காது போயிருந்தால் அவர்கள்உள்ளே நுழைந்து கதவுகளை உடைத்துதிறந்திருப்பார்கள். பொலிசார் தமிழர்கள்வாழும் சகல மாடி வீடுகளையும் சோதனையிட்டனர். வேலைக்கு சென்று திரும்பாதவர்களின்-பூட்டப்பட்டுக் கிடந்த- கதவுகளை பொலிசார்துவக்கால் அடித்து அல்லது கதவு பூட்டுதுவாரங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுதிறந்தனர்".

தமது வீடமைப்புத் திட்டபகுதியில் மட்டும் 15-20 க்கும் இடைப்பட்டவர்கள்கைது செய்யப்பட்டதாக அந்த தமிழ்அரசாங்க ஊழியர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் "மொரட்டுவைபல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தைச்சேர்ந்தவர்கள். எனது பெறாமகன்பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பும்வழியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.அவர் கல்கிசை பொலிஸ் நிலையத்துக்குகொண்டு செல்லப்பட்டார். அவர்மேலதிக விசாரணைக்காக குற்றவியல்புலனாய்வு பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஆனால்அவருக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமானதொடர்பும் கிடையாது. இவர்கள் அப்பாவிகள்."

அன்று மாலை சில இராணுவத்தினர் தடிகளைக்கொண்ட காடையர்களுடன் சேர்ந்துவீடமைப்புத் திட்டத்தை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்ததைக் காணக் கூடியதாகஇருந்தது.

பல்கலைக் கழக விடுதிகளிலும்இந்த வீடமைப்புத் திட்டத்திலும் இருந்துசுமார் 69 மொரட்டுவை பல்கலைக்கழகபொறியியல் பீட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்புச் சம்பவத்தைத்தொடர்ந்து பொலிசார் பல்கலைக்கழக விடுதிகளை சோதனையிட்டனர். இத்தருணத்தில் மாணவர்கள் எதிர்வரும் பரீட்சைக்குத்தயாராகிக் கொண்டு இருந்தனர். மாணவர்களிடையே இருந்து வந்த இனவாதக் கோஷ்டிகள்பொலிசாருக்கு ஒத்தாசை வழங்கினர்.பொறியியற் பீட மாணவர் சங்க அலுவலர்களும்இந்த விதத்திலேயே நடந்து கொண்டனர்.பல்கலைக் கழகத்தில் உள்ள சில இனவாதமாணவர்கள், முன்னர் ஜே.வீ.பி.யில் இருந்துபிளவுபட்ட பயங்கரவாதத்துக்கு எதிரானதேசிய இயக்கம் (NMAT) என்ற பாசிசகும்பலுடன் உறவு கொண்டவர்கள்.

பொதுஜன முன்னணி ஆதரவு மாணவர்தலைவர்கள் சிலரும் இந்த பொலிஸ் பாய்ச்சலுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். பொலிசார்அங்கு வருவதற்கு முன்னரே மாணவர்சங்க தலைமைப் பீடத்தின் ஆதரவைக்கொண்ட ஒரு இனவாத கும்பல், தமிழ்மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைசோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டது.பிரதீபன் என்ற மாணவன், இறுதி ஆண்டுப்பரீட்சை நெருங்கி கொண்டு இருப்பதால் இதில் தலையிடுமாறு மாணவர் சங்க தலைவர்களை வேண்டினார். ஆனால் இனவாதிகளோ"எமது தேசம் உங்களைக் காட்டிலும்எமக்கு பெறுமதி மிக்கது" எனக் கூறினர்.

இப்போதைய கைதுக்கு முன்னதாககொழும்பில் அரச படைகளால் ஐந்துதடவைகள் கைது செய்யப்பட்ட மாணவர்ஒருவரும் இந்த குண்டு வெடிப்பைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.ஆனால் அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டவர் என்பதற்கான சாட்சியங்களைபொலிசார் முன்வைக்க முடியாது போனதால்அம்மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இனவாதிகள் ஒரு மாணவரை பல்கலைக்கழகவளாகத்தினுள் பிடித்து, பல்கலைக்கழகபாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் பொலிசார் அவரையும் கைதுசெய்துகொண்டு சென்றனர். இரண்டுதமிழ் மாணவர்கள் தங்கியிருந்த அறைகள்உடைத்துத் திறக்கப்பட்டதோடு அங்குதேடுதலும் இடம்பெற்றுள்ளது. இதுஅவர்கள் பொலிஸ் கைதில் இருந்த சமயம்இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவு

பொலிஸ் குறுக்கு விசாரணைகளின் பின்னர் 19 மாணவர்கள் மறுநாள் விடுதலைசெய்யப்பட்டனர். மேலும் 36 பேர் அதைத்தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டனர்.புஷ்பாகரன், பிரபாகரன், லீலா, ரமேஷ்என்ற மூன்றாம் ஆண்டு மாணவர்களும்நஷீர் என்ற (பட்டதாரி மாணவர்) மாணவரும்மொரட்டுவை பொலிசாரால் றிமான்டில்தள்ளப்பட்டனர். புஷ்பாகரன், பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் கடந்த வருடதலைவராக விளங்கியவர். அவருடன் பேரின்பநாயகம் சேந்தன், சியாம் சந்திரன் உட்பட9 மாணவர்கள் கல்கிசை பொலிசாரால்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் பயங்கரவாத விசாரணைபிரிவிடம் கையளிக்கப்பட்டதாக பொலிசார்தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுவிடுதலையான ஒரு தமிழ் மாணவர் உலகசோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில்கூறியதாவது: "சில சிங்கள மாணவர்களேஎம்மைப் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தனர். சில மாணவர்கள் அவர்கள் வரவேண்டும்எனக் கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களுள் பெண்மாணவர்களும் அடங்குவர். இவர்கள்பல்கலைக் கழகத்துக்கு வெளியில் வசித்தமாணவர்களின் முகவரிகளைப் பொலிசாருக்குகொடுத்துள்ளனர். ஒரு சகோதரியும்சகோதரனும் ஒரு சிறிய வாடகை வீட்டில்வசித்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்துதமது குடும்பத்தவரை இவர்கள் அங்குகொணர இருந்தனர். இவர்களும் கூடபொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

"உண்மையில் சில சிங்கள மாணவர்கள் எம்மைக்காப்பாற்றினர். பொலிசார் சில விடுதிகளுக்குள்நுழைய முயன்ற சமயம் அவர்கள் அங்குதமிழர்கள் இல்லை எனக் கூறி அவர்கள்கைதுகளை நடாத்துவதை தடுத்தனர்.எமது பரீட்சைகள் வெகு விரைவில் இடம்பெறஉள்ளன. ஆனால் மனநிம்மதி இல்லாமல்பரீட்சைக்குத் தயார் செய்வது எப்படி?"

பல்கலைக்கழக அதிகாரிகள் ஆரம்பத்தில்கைது செய்யப்பட்ட மாணவர்கள் பற்றிவிசாரித்தனர். ஆனால் பின்னர் உப-வேந்தரும்,பொறியியல் பீடத் தலைவரும் விசாரணையைதுரிதப்படுத்தும்படி கோருவதை விடநாம் வேறொன்றும் செய்ய முடியாதுஎன மாணவர் சங்கத்திடம் தெரிவித்தனர்.இந்த நிலைமையில் பல்கலைக் கழக அதிகாரிகள்இறுதி ஆண்டு பரீட்சைகளை ஒத்திப் போடத்தள்ளப்பட்டனர்.

மாணவர்கள் மட்டுமன்றிபொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.குண்டு வெடிப்பு இடம் பெற்ற மூன்றுநாட்களின் பின்னர் வெகுஜனத் தொடர்புசாதனங்கள் பொலிசாரை மேற்கோள்காட்டி, குண்டு வெடிப்பைத் திட்டமிட்டமுக்கிய விடுதலைப் புலி அங்கத்தவர்கள்கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தன."குண்டுதாரி சகோதரர்கள்" கைது செய்யப்பட்டு விட்டதாக அந்த பத்திரிகை தலைப்புச்செய்தி வெளியிட்டது. அவர்கள் இருவரும்கோடிஸ்வரர்கள் எனவும் மேலும் குறிப்பிட்டது.ஆனால் மறுநாள் வெளிவந்த மற்றொருபத்திரிகை அந்த செய்தியை பொலிஸ் அதிபர்மறுத்ததாகத் தெரிவித்தது. தெகிவளையிலும்கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் தமிழ்மக்கள் பொலிசாரின் சுற்றி வளைப்பு தேடுதல்களுக்கு இலக்காகினர்.

அரசாங்கமும்வெகுஜனத் தொடர்பு சாதனங்களும்இந்தக் குண்டு வெடிப்பை யுத்தத்துக்குஆதரவு திரட்டவும் இனவாத பதட்டநிலையை உருவாக்கவும் உளவியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கும் சாதனமாக்கிக்கொண்டது. இதன் மூலம் அரசாங்கம்முகம் கொடுத்துள்ள அரசியல் நெருக்கடிநிலைமையில் இருந்தும் யுத்த சுமைகளைபொதுமக்களின் தலையில் மேலும் மேலும்கட்டி அடிக்கும் நடவடிக்கையில் இருந்தும்மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் முயற்சித்தன.