World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The Ontario Tory Government and the crisis of working - class perspective in Canada

Part 2: The Political lessons of the 1995-97 anti-Tory movement

ஒன்ராறியோ ரோறி அரசாங்கமும் கனடாவில் தொழிலாள வர்க்க முன்னோக்கின் நெருக்கடியும்

பகுதி-2: 1995-97 ரோரி எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் படிப்பினைகள்

By Lee Parsons and Keith Jones
25 May 2000

Use this version to print

கடந்த ஜூன் மாதம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் ஒன்ராறியோ ரோறி அரசாங்கம் பாரியளவு எதிர்ப்பு இன்றி ஒன்றின்மேல் ஒன்றாக வலதுசாரி நடவடிக்க்ைகளை எடுத்தது. தொழிலாளவர்க்க எதிர்ப்பின் வெளிப்படையான உடைவினால் உறுதியடைந்த கனேடிய கூட்டுறவாதத் தட்டின் முக்கியபிரிவு புதிதாக உருவாக்கப்பட்ட கனேடியக்கூட்டினால் Mike Harris ஒன்ராறியோ ரோறி அரசாங்கத்தைப்போல் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க முயல்கின்றது.

ரோரியினர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பல தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நிச்சயமாக ஏமாற்றத்திற்கும் திகைப்பிற்கும் உள்ளாக்கியிருக்கும். ஏழைகள் மீது தாக்குதல்செய்தும், பொதுச்சேவைகளுக்கான நிதிகளை வெட்டியும், தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை செய்த ஒரு அரசாங்கம் 45% வாக்குகளை பெற்று ஒன்ராரியோ சட்டசபையில் தேவையான பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது எவ்வாறு?.

இக்குழப்பமும் வெறுப்பும் தொழிற்சங்கங்களினதும் சமூக ஜனநாயகவாத புதிய ஜனநாயகக் கட்சியினதும் வெளிப்படையான அடிபணிவுடன் ஒன்றிணைந்ததாகும். தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களில் முன்னைய புதிய ஜனநாயக்கட்சி பிரதமரான Bob Rae ரோரியின் எதிர்ப்பாளர்கள் தட்சர்-மேஜர்,றேகன்-புஷ் அரசாங்கங்களை வெற்றி கொண்ட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரினதும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனதும் சைகைகளை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் "வடிவம்மாறி விட்டது" என்பதை உணரந்து கொள்ளவேண்டும் எனக்கூறி "Harris இன் மாற்றங்கள் பலவற்றை தளர்த்துவதை அடிப்படையாக்கொண்ட முன்நோக்கு சிறுபான்மையினரின்ஆதரவை பெற தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது"எனவும் தெரிவித்தார்.

அரைவருடத்தின் பின்னர் Harris இன் ரோரி அரசாங்கத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை என கனடியகார் தொழிலாளர்களின் தலைவரான Buss Hargrove விடம் கேட்டபோது "இதுவரைஅரசாங்கம் எம்மீது தாக்குவதற்கோஅல்லது அவர்களுக்கு இன்னொரு போராட்டம் தேவையென்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை என கபடமாக பதிலளித்தார்.

ரோரியினரின் தேர்தல் வெற்றிக்கான பல திறமையான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன சிலர் அண்மைய வருடங்களில் ஒன்ராரியோ பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியை காரணம் காட்டுகின்றனர். ஆனால் இது இக்காலகட்டத்தில் ரோரி அரசாங்கத்தின் நடவடிக்கையினால் சமூக சமத்துவமின்மை கூர்மையடைந்ததை குறைந்தளவில் கூட எடுத்துக்காட்ட நிராகரிக்கின்றது. அதிகரித்துவரும் வருமானத்தில் பெரும்பங்கை சமுதாயத்தின் செல்வம்மிக்க சிறிய பிரிவினர் சொந்தமாக்கக்கொள்கையில் பொது சமூக சேவைகளைஅழிப்பதனூடாக நிறுவனங்களின் இலாப அதிகரிப்பிற்கான முடிவற்ற போட்டி உழைக்கும்மக்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளதுடன் கவலைக்கிடமாக்கியும் உள்ளது.

ஏனையோர் தேர்தல் வாக்களிப்புமுறையை ரோரியினரின் வெற்றிக்கு காரணமாக்குகின்றனர். இது முழுவாக்காளர் தொகையில்25% இனர் மட்டுமே Harris இன் ரோரிக்குவாக்களித்த்தன் மூலம் நிராகரிக்கப்படுகின்றது.ஆனால் இது பின்வரும் கேள்வியை முன்வைக்கின்றது.ஒன்ராரியோ வாக்காளர்களில் 40% ற்குமேற்பட்டோர் இவர்களுள் பெரும்பான்மையானோர் தொழிலாளர்கள் எந்தவொரு கட்சியையும் தமது ஆதரவிற்கு உரியதாகஏன் நோக்கவில்லை?. மேலும் ஒன்ராரியோவில் பல பத்தாண்டுகளாக மிகவும் தெளிவாக முதலாளித்துவ ஆதரவான அரசாங்கம் சிறுபான்மையாக இருந்த போதும் தொழிலாளர்களினதும் வசதி குறைந்த மத்தியதர தட்டினரினதும் வாக்குகளின்முக்கியமான பகுதியை எவ்வாறு சேகரிக்கமுடிந்தது?.

இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் எதிர்கால போராட்டத்திற்கு ஒரு புதியவழியை கண்டுகொள்வதற்கும் ஒன்ராரியோவின் கடந்த பத்துவருட வர்க்கப் போராட்டம் தொடர்பான, முக்கியமாக 1995-97 ரோரிஎதிர்ப்பு போராட்டத்தினதும் கணக்கெடுப்பை செய்யவேண்டியுள்ளது. இப்படியானஒரு ஆய்வு தொழிலாள வர்க்கம் தலைமையினதும் அரசியல் முன்னோக்கினதும் அடிப்படையான நெருக்கடியை எதிர்நோக்குவதை எடுத்துக்காட்டும்.

பெருமூலதனத்தால் வேலைத்தளங்கள் மீதும், தொழில்நிலைமைகள் மீதும், சமூகபொதுச்சேவைகள் மீதும் செய்த தாக்குதல்களுக்கு எதிரான ஒன்ராரியோ தொழிலாளர்களின் எதிர்ப்பு மீண்டும் மீண்டும் தொழிற்சங்கங்களுடனும்புதிய ஜனநாயக கட்சியுடனும் பகிரங்கமோதுதலுக்கு இட்டுச்சென்றுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் கனடிய-அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் கனேடிய முதலாளித்துவத்தை ஒழுங்கமைக்கும் தீங்கு விளைவிக்க்கூடியமுயற்சிகளிலிருந்து சமூகஜனநாயக வாதிகள்தம்மை பாதுகாப்பர் எனக்கருதி 1990இல் ஒன்ராரியோவில் புதிய ஜனநாயககட்சியை தொழிலாளர்கள் தெரிவுசெய்தனர்.இதற்கு மாறாக 1990-95 இல் புதிய ஜனநாயககட்சி அரசாங்கம் சமூகசேவைகளுக்கான செலவை பாரியளவில் வெட்டவும் வரி உயர்வுகளை சுமத்தவும் முயற்சிகளை எடுத்ததுடன்பத்து இலட்சம் பொதுச்சேவை ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட உரிமைகளைதடைசெய்ததன் மூலம் வேலை, சம்பளவெட்டுக்களை திணித்தது.

1997 நவம்பரில் மாநில ரீதியான ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் Harris இன் ரோரி அரசாங்கத்தை முடிவிற்கு கொண்டுவர தொழிலாளவர்க்க எதிர்ப்பின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும் எழுப்பியது. தொழிற்சங்கங்கள் ஆசிரியர்களினது கோரிக்கையை கைவிட்டதுடன்,வேலைநிறுத்தத்தை அடக்கி ரோரி எதிர்ப்பு நடவடிக்க்ைகளை முடிவடையச்செய்தனர்.

இக்காட்டிக்கொடுப்புகள் பலரை ஆத்திரம் அடையச்செய்த போதும் தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தை அபிவிருத்தி செய்ய ஒரு மாற்றீடான அரசியல் நோக்கை கண்டுகொள்ள வேண்டியுள்ளது.ஒரு முக்கிய தட்டினர் மத்தியில் பழைய அமைப்புகளுடனான கோபம் முழு அரசியலுக்குமான எதிர்ப்பான வடிவத்தை எடுத்துள்ளது.ரோரியினர் அரசியல் விவகாரங்கள் மீதானதமது தாக்குதல்களுடன் இப்படியானமனநிலையை நோக்கி நனவுபூர்வமாககோரிக்கை விடுகின்றனர். இன்னுமொருபரந்ததட்டினர் தொழிற்சங்கங்களிலும் புதிய ஜனநாயக கட்சியிலும் குறைந்த நம்பிக்கையை கொண்டிருந்த போதிலும் அரசியல் போராட்டத்தை நிறுவனங்கள் மீதும் பெருமூலதனஅரசாங்கங்கள் மீதும் கூட்டான கொடுக்கல்வாங்கல்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள்,வாக்குப்பெட்டிகள் மூலம் அழுத்தங்களை பிரயோகிப்பதுடன் கட்டுப்படுத்தி கொண்டனர்.

வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குதல்

அரச தொலைத்தொடர்பு சாதனங்கள் Harris இன் ரோரி அரசாங்கம் அரசியல் ரீதியாக வெல்லப்பட முடியாது என விவரிப்பதன்மூலம் தொழிலாள வர்க்கத்தை பயமுறுத்த முயல்கின்றது. உண்மையில் ரோரிகளின் எழுச்சியானது இலாபத்திற்கும் சந்தைகளுக்குமான உலகரீதியான போட்டி கனடிய முதலாளித்துவத்தின் மீது பாரிய அழுத்தத்தை பிரயோகிப்பதன் விளைவாகும். கனடிய மூலதனத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்க்ைகள் வர்க்க முரண்பாடுகளை தீவிரமாக்குவதுடன் சமூக எழுச்சிகளை உருவாக்கவும் அச்சுறுத்துகின்றது.

உண்மையில் 1997ல் குறுகியதாக இருந்தபோதும் ஆசிரியர்கள் பொது கல்வி முறையை பாதுகாக்கதீர்மானித்தது ரோரியினரின் மத்திய தட்டு ஆதரவை இல்லாது ஒழித்ததுடன் அரசாங்கத்தை தனிமைப்பட்டுள்ளதாக உணரவைத்தது.

சுருக்கமாக கூறினால், அதிகமான தொழிலாளர்கள் தமது அரசியல் நடவடிக்க்ைகளுக்குஅடித்தளமாக கொண்டிருந்த தொழிற்சங்க சீர்திருத்தவாத முன்னோக்கின் முடிவும்,அவ்வமைப்புகள் நீண்டகாலத்திற்கு முன்னரேஅரசுக்கு தமது விசுவாசத்தை தெரிவித்தகாட்டிக்கொடுபினூடாக தொழிலாளவர்க்கத்தினுள் இருந்த அரசியல் நெருக்கடியைரோரியினர் சாதகமாகப்பாவித்து கொண்டனர்.

ரோரியினரின் 1995 தேர்தல் வெற்றிக்கானஅரசியல் விளைநிலம் Rae இன் புதிய ஜனநாயககட்சியால் தயார்செய்யப்பட்டது.புதிய ஜனநாயக கட்சி ரோரியினரின் நடைமுறைப்படுத்திய கொள்கைகளான பரந்த சமூகசேவை, வேலைத்தளங்கள் மீதான வெட்டுக்களைமேற்கொண்டதோடு, Rae உம் அவரது சமூக ஜனநாயக வாதிகளும் மீண்டும் மீண்டும்தமது பாரம்பரிய சீர்திருத்த முன்நோக்கைஏளனம் செய்ததுடன் முதலாளித்துவ சந்தையின் கட்டளைகளுக்கு "எந்தவிதமாற்றீடும்" இல்லை எனக்கூறினர். ஆயினும்1995 ஜூன் தேர்தல்களை அடுத்த ஒருசில கிழமைகளுக்குள்ளேயே வரப்போகும்ரோரி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு (OFL) சமூக நலக் கொடுப்பனவுகள் மீதான ரோரியினரின் 21.5% வெட்டுக்கு எதிரான ஆரம்ப நடவடிக்கைகளிலிருந்து தூரவிலகி நின்றது.ஆனால் 5 மாதங்களின் பின் தொழிலாளர்கள்கூட்டமைப்பு தனது நிதி, அமைப்பு போன்றவற்றின் பலத்தை பாவித்து எதிர்ப்பு இயக்கத்தினை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தவும் அடக்கவும்அதன் தலைமையை எடுத்துக்கொண்டது.

வெற்றிகரமான பாரிய ஆர்ப்பாட்டங்களும்,ஒன்ராரியோவின் பல முக்கிய நகரங்களின் பிரதேசரீதியான ஒரு நாள் வேலை நிறுத்தங்களும் ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பைமாகாண ரீதியான பொதுவேலை நிறுத்தத்திற்குஉடனடியாக அழைப்பு விடச்செய்தது.ஆனால் 1996 ஏப்பிரலில் ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான Gord Wilson, "Harris இன் அரசாங்கத்தை பதவி இறக்குவதற்கான தொழிற்சங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லையெனவும் Harris ஆட்சிசெலுத்துவதற்கு அரசியல் சட்டரீதியான பிரதிநிதி என்பதை தான்ஏற்றுக்கொள்வதாக" உறுதியாக கூறினார்.

Harrisஐ இராஜிநாமா செய்ய வற்புறுத்திய அல்லது புதிய தேர்தலுக்கான எந்தவொரு போராட்டத்தையும் எதிர்த்த ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒன்ராரியோ அரசாங்கத்தின் பிற்போக்கான அரசியல் Harris இன் அரசியல் விருப்பங்களும் தனிப்பட்ட விசேட தன்மைகளுமே காரணம் என்ற அபிப்பிராயத்தை உருவாக்க முயன்றது.தொழிற்சங்க பிரச்சாரத்தில் ஒன்ராரியோ தொழிலாளர்கள் மேல் செய்த தாக்குதல்கள்அனைத்திற்கும் முற்றுமழுதான காரணம் Harris தான் என்பது எதிர்ப்பு இயக்கத்தை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரித்துவத்தின் முயற்சியில் முக்கிய பங்குவகித்தது.

அனைத்திற்கும் Harris ஐ காரணம்காட்டி போராட்டத்தின் முக்கிய நோக்கங்களை மழுங்கடிக்க செய்ததும் ஒன்ராரியோ தொழிலாளர்களின் அதிகரித்துவரும் தீவிரமயமாக்கலை அரசியல் ரீதியாக கனடாவிலுள்ள அவர்களின்ஏனைய வர்க்க சகோதரர்களிடமிருந்துதனிமைப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.ரோரியினரின் தாக்குதல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஆனால் அவை ஒவ்வொருகட்சிகளிலும் உள்ளடக்கி இருக்கும் மூலதனத்தின் எதிர்ப்பின் முதற்படியாகும்.

Harris ரோரிஅரசாங்கம் சமூக, பொதுச்சேவைகளை வெட்டுவதனூடாக சமூகக்கொள்க்ைகளை புதிதாக எழுதும் முயற்சிக்கு எதிரான ஒன்ராரியோ தொழிலாளர்களின் எதிர்ப்பு தனியே ஒருகட்சியின் கொள்க்ைகளுக்கு எதிரானது மட்டுமல்ல,முழு கனடிய முதலாளித்துவத்தின் வர்க்கமூலோபாயங்களுக்கு எதிரானதாகும்.ஒன்ராரியோ அமைதியின்மையுற்றிருந்தரோரி எதிர்ப்பு போராட்ட காலகட்டப்பகுதியில் தாராளவாத கூட்டரசாங்கமும் Parti Quebecois இன் அரசாங்கமும் சமூக சேவைகளுக்கான செலவின்மீது பாரிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்தின.

1996 அக்டோபர்ரொரன்டோ தின நடவடிக்கையின் வெற்றியின்பின்னர் ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 1/3 அங்கத்தவர்களை கொண்ட13 தொழிற்சங்கங்கள் தாம் ரோரி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். அதிகாரத்துவத்தின் இந்தப்பிரிவினர்ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்தின் கட்டளைக்கு கீழ்ப்பணிய மறுத்து ரொரன்டோமாநகர போக்குவரத்துச் சேவையைமூடியதன் மூலம் தீங்கு விளைவித்ததாக கூறியது.ரோரி எதிர்ப்பு இயக்கம் மிகத்தீவிரமான வடிவத்தை எடுப்பதையும், இது அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடலாம்என்ற பயத்தினாலும் அபிப்பிராய பேதமுற்ற தொழிற்சங்கங்கள் ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பினை குறைத்துக்கொள்ள கோரிக்கை விட்டதுடன் 1999 அல்லது 2000ஆண்டு திகதியிடப்பட்ட புதிய தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டுவர தனது வளங்களை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டது.

ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு நடவடிக்கை தினங்களில் புதிய ஜனநாயக கட்சிக்கு முக்கிய இடமளிக்க எதிர்த்தது. ஏனெனில் அடிப்படை தொழிற்சங்க உரிமைகள் மீது முரட்டுத்தனமாக நடந்து கொண்ட, சமூகநல செலவினங்களைஅழித்த கட்சியுடன் தன்னை நெருக்கமாகஅடையாளம் காட்டிக்கொண்டால்அது அரசியல் உடன்பாட்டுக்கு சென்றதாக தோற்றமளிக்கும் என்ற பயத்தினால் ஆகும்.

இறுதியாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சகல பிரிவினருக்கிடையேயுள்ள முக்கியஉடன்பாடும், தொழிலாளர்களின் சுயாதீனமான அணிதிரளலுக்கு எதிரான அவர்களது ஒன்றிணந்த எதிர்ப்பும் ஆசிரியர்களினது வேலைநிறுத்தத்தின்போது வெளிப்பட்டது. 1997 இல் இரண்டு கிழமைகளாக 120,000 ஆரம்ப, உயர்பாடசாலைஆசிரியர்கள் மாநிலத்தின் பிற்போக்கான தொழிற்சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வேலைநிறுத்தம் கல்வி அமைச்சின் கைகளில் கல்வித்துறைக்கான நிதி உதவியினையும் திட்டங்களையும் மத்தியப்படுத்தும் ரோரியின் திட்டங்களை கைவிடச் செய்ய நிர்ப்பந்திக்கும் வெளிப்படையான அரசியல் நோக்கங்களுக்காக அழைப்பு விடப்பட்டிருந்தது. இப்புதிய திட்டம் Harris இன் அரசாங்கம் செலவீனங்களை வெட்ட நிர்ப்பந்திக்கவும் பிற்போக்கான பாடத்திட்ட மாற்றங்களை செய்யவும் ஆசிரியர்களின் வேலை நிலைமைகளை அழிக்கவும் அனுமதிக்கும்.

ரோரியினர் இவ்வேலைநிறுத்தம் சட்டமறுப்பு பயமுறுத்தல்களின் கீழும், ஆசிரியர்கள் பத்து லட்சம் ஒன்ராரியோபாடசாலை மாணவர்களை பணயக்கைதிகளாக்கி உள்ளனர் என்ற தொலைதொடர்பு சாதனங்களின் மோசமான பிரசாரத்தின்கீழும் சீர்குலைந்து போகுமென முற்றுமுழுதாக எதிர்பார்த்தனர். ஆனால் வேலைநிறுத்தம் தொழில் புரியும் பெற்றோர்களுக்கு கேள்விக்கு இடமின்றி கஷ்டங்களை உருவாக்கிஇருந்த போதும் ஆசிரியர்கள் பொதுகல்விச்சேவையை பாதுகாக்கவே போராடுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டுமக்கள் அவர்களின் பின் அணிதிரண்டனர். ரோரியினர்ஆச்சரியப்படும் வகையில் அரசாங்க கருத்துக்கணிப்பீடும் கூட பெரும்பான்மை ஒன்ராரியோவினர் வேலைநிறுத்தத்தை ஆதரித்ததை எடுத்துக்காட்டியது. ஆசிரியர்களது ஊர்வலங்களும் மறியல் போராட்டங்களும் மாணவர்களாலும், பெற்றோர்களாலும்,ஏனைய தொழிலாளர்களாலும் எண்ணிக்கையில்அதிகரித்திருந்தது.

ஒன்ராரியோ ஆசிரியர்கூட்டமைப்பினை உருவாக்கும் 5 ஆசிரியர்தொழிற் சங்கங்களது தலைவர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிட்டிருந்தனர்.அவர்கள் அதனை அரசியல் வேலைநிறுத்தமெனஅழைக்காது, "எதிர்ப்பு நடவடிக்கை"என கூறியதுடன், அரசாங்கம் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆசிரியர்களை வேலைக்குத்திரும்ப உத்தரவிடுமென எதிர்பார்த்தனர். இது வேலைநிறுத்தத்தைமுடிவிற்க்கு கொண்டுவரவும், அரசாங்கத்துடன்உடன்பாட்டிற்க்கு போவதற்கான சாக்குபோக்குகளை கூறுவதற்கான நிலைமைகளை உருவாக்கலாம் எனகருதினர்.

ஆனால் ரோரியினரின் தடை உத்தரவு மறுக்கப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த ஒன்ராரியோ நீதிபதி வேலைநிறுத்தத்திற்கான பொதுமக்களின் ஆதரவு கூடுதலாக இருப்பதால் அதற்கெதிரான அரசதலையீடு நீதிமன்றத்தின் ஆழுமையை ஆபத்தான முறையில் இல்லாதொழித்துவிடலாம் என முடிவிற்க்குவந்தார். உண்மையில் அவர் வேலைநிறுத்தத்தைமுடிவிற்க்கு கொண்டுவரும் பொறுப்பை நேரடியாக ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் வழங்கினார்.

ஒன்ராரியோ ஆசிரியர்கூட்டமைப்பு ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (OFL) முழு ஆதரவுடனும் ஊக்குவிப்புடனும் உடனடியாக ஒத்துக்கொண்டது. அரசாங்கத்தின் நீதிமன்ற தடை உத்தரவுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலைமை உடனடியாக அரசாங்கத்துடன் ஒருதொடர்உடன்பாடுகளுக்கு அழைப்புவிட்டது.அரசாங்கம் அவர்களது கோரிக்கைளை நிராகரித்தவுடன் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது என கூறி ஆசிரியர்களைவேலைக்குத் திரும்ப உத்தரவிட்டது.

தொழிற்சங்க தலைமையின் அடிபணிவிற்க்கு வேலை நிறுத்தத்திற்கான ஆதரவின்மையோஅல்லது ஆசிரியர்களின் போராட்டத்தன்மை,ஓற்றுமை இல்லாமையோ காரணமல்ல.அதற்கு மாறாக வேலைநிறுத்தம் Harris இன் அரசாங்கத்திற்கு எதிரானபரந்துபட்ட இயக்கமொன்றினை உருவாக்கிவிடுமோ என்ற அபாயமும், இது தமது கட்டுப்பாட்டை உடைத்து, முழு தேசிய அரசியல் நிலமையையும் ஸ்திரமற்றதாக்கி விடும் என்ற பயத்தினாலேயே தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலைநிறுத்தத்தை நாசமாக்கியது.

ஆசிரியர்களை காட்டிக்கொடுத்த ஒருசில கிழமைகளுக்குள்ளேயே ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பு (OFL) நடவடிக்கை தினத்தை எதிர்த்த அதிகாரத்துவ பிரிவிலிருந்து தனது புதிய தலைமையை தேர்ந்தெடுத்தது. எதிர்பார்த்தபடியே ரோரி எதிர்ப்பு பிரசாரம் அடுத்த கோடைகாலத்தின் போது உத்தியோகபூர்வமாக புதைக்கப்பட்டது.

இதை அடுத்து,1999 தேர்தலில் ரோரியினரின் முதலாளித்துவ அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (OFL) தலைமை மீண்டும்பிளவுற்றனர். ஏனெனில் பெரும்பான்மையினர் புதிய ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்க தூண்டுகையில், "இடது பிரிவினர்" என கூறிக்கொண்டவர்களால் தலைமை தாங்கப்பட்ட கருத்துவேறுபாடான பிரிவான CAW ரோரி வேட்பாளர்களை தோற்க்கடிக்க கூடிய சாத்தியத்தை கொண்டிருந்த தாராளவாத கட்சியின் வேட்பாளர்களுக்கு "மூலோபாய வாக்களிக்க" அழைப்பு விட்டனர்.

ரோரியினர் பதவிக்குவந்ததும் இத்தேர்தல் தமது "சாதாரணதீர்வுக்குரிய புரட்சிக்கான" சர்வசன வாக்கெடுப்பு என கூறினர். ஆனால் உண்மை என்னவெனில் ரோரியினருக்கு எதிரான உண்மையான மாற்றீட்டை உருவாக்ககூடிய ஒரேயொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்கம் ஆசிரியர்களது வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக அமைதியாக்கப்பட்டதாலாகும். பெருமூலதனத்தின் நலன்களான "நிதிப்பொறுப்பு", "சமப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டம்","போட்டியான வரிவிகிதம்" போன்றவற்றை பாதுகாக்கும் மூன்று கட்சிகளுக்கும் மத்தியில் தொழிலாள வர்க்கத்தினால் ரோரியினரின்"சாதாரண தீர்வுக்குரிய புரட்சிக்கான"எதிர்ப்பை உண்மையாக வெளிப்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் இல்லை.

ரோரியினர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவருடத்தின் பின்னர் தொழிற்சங்கங்களும், புதிய ஜனநாயககட்சியும் மேலும் வலதுசாரிப்பக்கம் சென்றுள்ளன. ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பின் (OFL) தலைவரான Wayne Samuelson பரந்த ரோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு திரும்பும் நோக்கமெதுவும் இல்லையென வாக்குறுதியளித்துள்ளார்.அண்மையில் ஒன்ராரியோ கட்டிட தொழிலாளர் தொழிற்சங்கம் ரோரியின் கைத்தொழில்அமைச்சருடனும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து கட்டிட தொழிலாளர் தொடர்பாகநிர்வகிக்க கூடி இயங்கவுள்ளனர். கட்டிட நிர்மாண வர்த்தகர் சபையின் பிரதிநிதியான Patrick Dillon "இவ்சட்டமைவு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்க்கும் இடையில் ஒன்றில்ஒன்று தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்வதால்ஒரு உறுதியான தொழிற்துறையை உருவாக்கும்.இது தொழிற்சங்கமயப்படுத்தப்பட்டதொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டிடத்துறையானது போட்டியிடக்கூடியதாகவும், தரமுடையதாகவும் இருக்க உறுதிப்படுத்துவதை உருவாக்கும் ஒருகட்டமைப்பைஉருவாக்க விரும்புவதற்கான ஆதாரம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரோரியினர் முன்மொழியும் சட்டம் தன்னிச்சையான முறையில் தொழிலாளர்களின் சம்பளத்தையும்,நன்மைகளையும் பிராந்திய ரீதியில் வெட்டுவதற்கும், உள்ளூர் கட்டிட தொழிற்துறையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் செய்யும்உரிமைகளையும்,2001 இலையுதிர் காலத்தில் காலாவதியாகவிருக்கும்ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்துவதை தீவிரமாக கட்டுப்படுத்தவும்உதவும்.

தொழிலாளர்களுக்கு ஒர் புதிய அரசியல் முன்நோக்கு தேவை

ஒன்ராரியோ தொழிலாளர்களின் அனுபவங்களின் முக்கியத்துவம் உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு பொதுவானதாகும்.எங்கும் அவர்களது அமைப்புக்களானதொழிற்சங்கமானாலும், சமூக ஜனநாயவாதிகளானாலும், ஸ்ராலினிச "கம்யூனிஸ்ட்" கட்சிகளாக இருந்தாலும் முதலாளித்துவம் உருவாகியபொருளாதார அடித்தளத்தை ஏற்றுக்கொண்டு ஒர் சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டு கடந்த இருபதுஆண்டுகளுக்கு மேலாக சம்பளத்தையும்,வேலைத்தலங்களையும், பொதுநலசேவைகளுக்கான செலவை வெட்டுவதை வலியுறுத்துவோராக உள்ளனர்.

இப்படி செய்வதன் ஊடாக இவ் அமைப்புக்களுக்கு தலைமைதாங்கும் அதிகாரத்துவத்தட்டு தொழிலாளவர்க்கத்தை ஒழுங்கமைக்க தாம் அவசியமென்பதை முதலாளித்துவத்திற்கு நிரூபிப்பக முயல்வதுடன்,இதனூடாக தமது சொந்த நலன்களையும் பாதுகாக்க முயல்கின்றன. CAW இன்தலைவரான Buzz Hargrove அண்மையில் வெளியிட்டதனது சுயசரிதையில் "நான்கிற்கு மூன்றுதொழிலாளி தாம் தொழில் வழங்குனரை நம்பவில்லை என கூறுகின்றனர். தொழிற்சங்கங்களின் முக்கியவேலை இவ் ஆத்திரத்தை இல்லாமல் செய்வதாகும். தொழிற்சங்கங்கள்அந்த பாதகமான, நஷ்டத்துக்குரிய தொழிலாளரின் எதிர்ப்பை (உற்பத்தி குறைவு, சமூகமளிக்காமை)இல்லாதொழிக்கவேண்டும். தொழில்நிலைமைகளுக்கு அப்பால் உண்மையாகஎன்ன நிகழ்கின்றது என எமது விமர்சனங்கள் விளங்கிக்கொள்ளப்படுமானால் தொழிற்சங்கதலைமைகள் வேலை நிறுத்தங்களை தவிர்ப்பதை விட திறமைவாய்ந்தவர்களெனஅவர்கள் (தொழில்வழங்குனர்) எமக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள்"என விளக்கமளித்துள்ளார்.

15,000 அங்கத்தவர்களை கொண்ட மின்சார தொழிலாளர் சங்க ( PWU) தலைவரான John Murphy இன் அண்மையநடவடிக்கை தொழிற்சங்கங்க, புதிய ஜனநாயக கட்சியின் தலைமை ஒரு குட்டிமுதலாளித்துவ சமூகத்தட்டு என்பதையும்,அவர்களது நலன்கள் அவர்கள் கருதும்தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானதுஎன்பதை கோடிட்டுக்காட்டுகின்றது.கடந்த மாதம் John Murphy, Harris உடனும் கனடிய கூட்டின் தலைவரான TomLong உடனும் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து கட்சியின் வருடாந்த நிதிதிரட்டும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டார். மே மாதம்16ம் திகதி மின்சார தொழிலாளர் சங்கத்தைவிட்டுவெளியேறி அரசுரிமையான ஒன்ராரியோ மின்உற்பத்தி நிலையத்தின் மனித வளங்களுக்கானஉப-தலைவராக ரோரியினரின் நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

பாரம்பரிய தொழிலாளவர்க்க அமைப்புக்கள் ஆளும்வர்க்கத்தின் நேரடியான கையாட்களாகமாறியது தனிமனிதர்களின் சீரழிவு காரணமல்ல,மாறாக முதலாளித்துவத்தின் கட்டமைப்பில்ஏற்ப்பட்ட அடிப்படையான மாற்றத்தின் விளைவாகும். இவ் அமைப்புக்களின் அடித்தளமான தேசிய தொழிற்துறையையும், தேசியசந்தையையும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியாலும், முன்னொரு போதுமில்லாதவாறான மூலதனத்தின் அசைவினாலும் இல்லாதொழிந்துள்ளது. பூகோளமயமான மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்கள் தமது போராட்டத்தை சர்வதேச முன்நோக்கின் அடித்தளத்தில்நனவுபூர்வமாக ஒழுங்கமைப்பதாலும்,தொழிலாளர்களின் நலன்களை முதலாளித்துவசந்தையின் கட்டளைகளுக்கு அடிபணியவைக்கமறுப்பதன் மூலமே பதிலளிக்கமுடியும்.

சோசலிச சமத்துவ கட்சியும் அதன் முன்னோடியான அனைத்துலக கம்யூனிஸ்ட் கட்சியும் 1995-97ரோரி எதிர்ப்பு இயக்கத்தினுள் தலையீடுசெய்து தொழிற்சங்க அதிகாரத்திடமிருந்து தலைமையை எடுத்து அதனை தொழிலாளவர்க்கத்தின் உண்மையான சுயாதீனமான அரசியல்இயக்கமாக மாற்ற அழைப்புவிட்டது.சோசலிச சமத்துவ கட்சி கடந்தகாலசமூகநலன்களை பாதுகாப்பது குறுகியவடிவிலான கூட்டான கொடுக்கல் வாங்கல்களாலும்,முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் எதிர்ப்புதெரிவிப்பதால் அல்லாது தொழிலாளர்அரசு ஒன்றை உருவாக்குவதன் மூலமாகதொழிலாளர்களின் நலன்களுக்காக பொருளாதார வாழ்வை மறு ஒழுங்கமைப்பதற்கான தனது சொந்த முன்நோக்கை தொழிலாளர்கள் முன்கொண்டுவருவதாலேயே முடியும் என விளக்கியது.

புதிய ஜனநாயககட்சியினதும் ஒன்ராரியோ தொழிலாளர்கள் கூட்டமைப்பினதும் அரசியல் ஆழுமையை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு, அவற்றை இடது நோக்கி திரும்ப தமதுசக்தியை பாவிக்கவேண்டும் என்ற மத்தியதரவர்க்க "இடது" களின் அரசியல் தொடர்பாக சோசலிச சமத்துவ கட்சி எச்சரித்தது.1996இல் நாம் "ரோரியினருக்கு எதிரானஅரசியல் மாற்றீடாக இவ் இயக்கங்கள்அமைதியாக இருக்கின்றன அல்லது தொழிற்சங்கங்களுடன் இணைந்து புதிய ஜனநாயக கட்சியை மீண்டும் ஆட்சிக்குவர முன்மொழிந்தனர்"எனக் குறிப்பிட்டிருந்தோம்.

சோசலிச சமத்துவ கட்சி எச்சரித்ததை ஒன்ராரியோவின்நிகழ்வுகள் உறுதிப்படுத்தின. ஆனால் அதிகாரத்துவம் தொழிலாளர்களின் எதிர்ப்பை சுமூகமாக்ககூடியதாக இருந்தமைக்கு காரணம் தொழிலாளர்கள் கடந்த இரு தசாப்தங்களின் கூரிய மாற்றங்கள் தொடர்பான பாடங்களை உள்ளீர்த்துக்கொள்ளாததும், முதலாளித்துவத்துடன் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் ஒத்துப்போகலாம் என்ற அதிகாரத்துவத்தின் கருத்துக்களை நிராகரித்து மாற்றீடான முன்நோக்கின் அடித்தளத்தில் அணிதிரளாததால்ஆகும்.

கடந்த காலங்களில் பழையஅதிகாரத்துவ அமைப்பின் மீதிருந்த தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கை அழிந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. சோசலிஸ்ட்டுக்களின் முன்னால் உள்ள கடமை, பழைய அமைப்புக்களான தொழிற்சங்கங்களிலிருந்தும், புதிய ஜனநாயக கட்சியிலிருந்தும் அமைப்பு ரீதியாகமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் உடைத்து,ஒரு புதிய சோசலிச கட்சியை கட்டுவதனூடாக ஒரு புதிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் தோற்றத்திற்கான அரசியல் அடித்தளத்தை வழங்குவதாகும்.