World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Algerian refugee commits suicide in Frankfurt airports asylum zone

பிராங்பேட் விமான நிலையித்தின் அரசியல் தஞ்சம் கோரும் பிரதேசத்தில் அல்ஜீரிய அகதி தற்கொலை

by Elisabeth zimmermann

16 may 2000

Use this version to print

 

மே 12ம் திகதி சனிக்கிழமைபிராங்போட் விமான நிலையத்தின் இடைக்காலதங்கும் அறையிலுள்ள குளிப்பறையில் அரசியல்தஞ்சம் கோரிய 40 வயதான Naimah.H தூங்கித்தற்கொலை செய்துகொண்டார். இந்த அல்ஜீரிய பெண்மணி7 மாதங்களுக்கு மேலாக இங்கு கைதுசெய்துவைக்கப்பட்டிருந்தார். இந்த இடைக்காலவிமானநிலைய பிரதேசம் ஒரு நாட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள பிரதேசம் போல் சட்டஉரிமைகளைக் கொண்டுள்ளது. விமானத்தில்வந்திறங்கும் தஞ்சம் கோருவோர்"ஜேர்மன் எல்லைக்குள்" நுழைவதைதடுத்து இங்கு தங்கவைக்கப்படுவர்.இதன்மூலம் ஜேர்மனியில் இருப்பதற்கானஉரிமையும் அவர்களது அரசியல் தஞ்சத்திற்காகஉறுதியாக போராடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

 

Naimah.H அவரது கணவன்பயங்கரவாதி எனத் தேடப்பட்டதாலும்,அவர் பலதடவை அல்ஜீரியப் பொலிசாரால்பலாத்காரம் செய்யப்பட்டதாலும்அங்கிருந்து வெளியேறினார். அல்ஜீரியாவிலிருந்துஜேர்மனிக்கு தப்பிவருவதில் அவர் வெற்றியடைந்திருந்தாலும் அவருடைய கஷ்டங்களுக்கு இந்தநாட்டில்கூட ஒரு முடிவு வரவில்லை. வெளிநாட்டுஅகதிகளை அங்கீகரிக்கும் சமஷ்டி காரியாலயம்அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததுடன்,செப்டெம்பர் இறுதியில் பிராங்போா்ட்நிர்வாக நீதிமன்றமும் அவரது கோரிக்கையைபெறுமதியற்றது என நிராகரித்தது.

 

பிராங்போா்ட் விமான நிலையத்தில் உள்ளதைப்போல் சிறைகளிலுள்ள அகதிகளுக்கு உதவிஅளிக்கும் அமைப்புக்களான பிராங்போா்ட்புரட்டஸ்தாந்து பிரதேச அமைப்பு, கத்தோலிக்க தர்மஸ்தாபனமான ஹரிதாஸ் போன்றவற்றின்அறிக்கைகளிலிருந்து Frankfurter Rundschau என்ற பத்திரிகை Naimah ஐ தற்கெலைசெய்ய இட்டுச்சென்ற கவலைக்குரியசந்தர்ப்ப சூழ்நிலைகள் தொடர்பாகஆழ்ந்த பார்வையை செலுத்தியிருந்தது.

 

அவரது தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டபின்னரும், அவரிடம் ஆள் அத்தாட்டசிப்பத்திரம்இல்லாததாலும் Naimah.H மாதக்கணக்கில் அல்ஜீரியாவிற்கு திருப்பி அனுப்ப்படுவதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.அவரின் ஆதரவாளர்களின்படி 1999 இல் பிராங்போா்ட்டிற்கு வந்ததிலிருந்தே மோசமானபிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்தார்.விமான நிலையத்தில் உள்ள சமூகசேவையாளர்கள் அவர் இவ்வருட பெப்ரவரி மாதம் மணித்தியாலகணக்கில் நரம்பு வியாதியுள்ளவர் போல்அழுததாக கூறினர். பெப்ரவரி 26ம் திகதிமுதல் தடவையாக மூர்ச்சையடைந்துவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து அவரின் வழக்கறிஞ்ஞர் Andreas Metzner உள்நாட்டு அமைச்சிடம்மனிதாபிமான அடிப்படையில் Naimah.H நாட்டினுள் புக அனுமதிக்குமாறு விண்ணப்பித்தார்.இக்கோரிக்கைக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

 

இவ் உத்தியோகபூர்வ விமான நிலைய தஞ்சமுறையானது 1993ம் ஆண்டு கோல்[Kohl] அரசாங்கத்தின் உள்நாட்டு அமைச்சரானகந்தரால் [Kanthar] அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசியல்தஞ்ச-உடன்பாடுஎன அழைக்கப்பட்டதன் மூலம் பொதுவாகஇவ்வுரிமை ஏற்றுக்கொள்ளப்பட கூடியதாகஇருந்தாலும் தஞ்சம் கோரும் உரிமையைகட்டுப்படுத்துவதன் ஒரு அம்சமாகும்.இச்சட்டம் அன்றைய எதிர்க்கட்சியானசமூக ஜனநாயக கட்சியின் ஆதரவுடன்மட்டுமே மாற்றக்கூடியதாக இருந்தது.ஏனெனில் தஞ்ச உரிமை தொடர்பானஅரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்க்குமாநில அரசுகளின் 2/3 பெரும்பான்மைதேவையாகும்.

 

விமான நிலைய தஞ்சமுறையானது ஆரம்பத்திலிருந்தே மனித உரிமை, அகதிகள்நல அமைப்புகளாலும் விமர்சிக்கப்பட்டுஇது அகற்றப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இப்புதிய சட்டத்தின்படி விமானநிலயத்தில் தங்கியிருக்க 19நாட்களே அனுமதிக்கப்படுவர். இக்கால கட்டத்தில் தஞ்சவிண்ணப்பம்அங்கீகரிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும்ஒரு விரைவான வழக்கினால் தீர்மானிக்கப்படும்.இது சாத்தியமற்றதொன்றாகும். 19 நாட்களுக்குள் தீர்மானிக்கப்பட முடியாவிட்டால் தஞ்சம்கோருபவர் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படவேண்டும். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

 

விண்ணப்பம் தொடர்பான விசாரணைநீடித்தால் அல்லது வேறுகாரணங்களால்உடனடியாக திருப்பியனுப்புதல் சாத்தியப்படாவிடின் [உ-ம் ஆள் அத்தாட்டசிப்பத்திரம் இல்லாதநிலைமை] விமான நிலயத்தில் நீண்டகாலம்தடுத்துவைப்பதை சட்டரீதியாக பாதுகாத்துக்கொள்ள தஞ்சம் கோரியவர் "சுயாதீனஉறுதிப்பத்திரம்" என அழைக்கப்படும்ஒன்றில் சுயமாக கையெழுத்திடவேண்டும்.இது நிர்ப்பந்தபடுத்தலை தவிர வேறொன்றுமில்லை. இதை தவிர கூடுதலான தஞ்சம் கோருவோர் கையெழுத்திடுவதற்கான காரணம்இல்லாவிடின் திருப்பி அனுப்ப்படுவோருக்கானசிறையிலிடப்படுவர் என்று பயமுறுத்தப்படுவதாலாகும்.

 

1999 செப்டம்பர்மாதம் தஞ்சவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின்னர் Naimah.H இச்சர்ச்சைக்குரியபத்திரத்தில் கையெழுத்திட்டார். ஆனால்மனநிலை குழம்பிய நிலையில் அவர் பெப்ரவரி29ம் திகதி சட்டரீதியாக அதனை இரத்துச்செய்தார். இதனையடுத்து அவர் பிராங்போா்ட்-Preungesheim என்ற இடத்திலுள்ள நாடுகடத்தும் சிறையிலிடப்பட்டார்.

 

அங்குள்ள நிலைமைகளைதாங்கிக்கொள்ள முடியாது [-இது ஏற்றுக்கொள்ளகூடியது-] அவர் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்படுவதற்கான மீண்டும் "சுயாதீன உறுதிப்பத்திரம்" என அழைக்கப்படுவதில் கையெழுத்திட்டார்.மே மாதம் 4ம் திகதி தேசிய எல்லைக்காவல்படையினர் விமானநிலையித்தின் இடைக்காலதங்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் தற்கொலை செய்துகொண்டார்.மிக அத்தியாவசிய தேவையான உளவியல்ரீதியான ஆதரவு, ஆகக்குறைந்த அடிப்படைமனிதாபிமான புரிந்துணர்வு கூட மறுக்கப்பட்டஅவரால் அல்ஜீரியாவில் அனுபவித்த துன்பங்களுக்குஈடுகொடுக்கமுடியாது போய்விட்டது.

 

Naimah.H இன் தற்கொலையானதுஇப்புதிய மோசமான தஞ்சநடைமுறைஅமுலுக்கு வந்த பின்னர் பிராங்பேர்ட்விமானநிலயத்தில் முதலாவது தற்கொலையாகும். ஆனால் நிச்சயமாக யாராவது ஒருவர்தனது உயிரைபோக்கிக்கொள்ள எடுத்தமுதல் முயற்சியாக இருக்காது. 1997 இலிருந்து18 தற்கொலை முயற்சிகள் நிகழ்ந்திருப்பதாககிறிஸ்தவ மத அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.ஹரிதாஸ்சின் நிர்வாகியின் கருத்தின்படி இது தஞ்சம்கோருபவர்கள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்படுவதால் ஏற்படும் தாங்கமுடியாதமனநெருக்கடியின் விளைவாகும். வழக்கறிஞர் Andreas Metzner இத் தற்காலிக பிரதேசத்தைபற்றி "நெருக்கடியான தங்குமிடம், விமானங்களின்இரைச்சல், பசுமையான இடமின்மை,ஆண்-பெண்பாலாருக்கு பொருத்தமானதனிவசிப்பிடமின்மை" என மேல்வருமாறுகூறினார்.

 

தற்போது 42 தஞ்சம் கோருபவர்கள் இப்பிரதேசத்தில் தங்கியுள்ளார்கள்.இவர்களில் 10 பேர் 100 நாட்களுக்கு மேல்தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறிதுகாலத்திற்கு முன்னர் 30 தஞ்சம் கோருபவர்கள்சர்வதேச மனித உரிமைக்குழுவின் பிராங்போா்ட் குழுவிடம் "மனிதத்தன்மையற்ற கீழ்த்தரமானநிலைமைகள்" தொடர்பாகவும், "தமதுவாழ்க்கையின் அடிப்படை மனித உணர்வினைகூட பகிர்ந்துகொள்ள முடியாதுள்ளது"தொடர்பாகவும் முறையிட்டனர்.

 

தஞ்சம் கோருபவர்களுக்கு ஆதரவானஅமைப்பான Pro Asyl நாடுகடத்தப்படுவோர் மீதான துன்புறுத்தலைநிறுத்தவும், இம் முழு விமான நிலைய தஞ்சமுறையை இல்லாமல் செய்யுமாறும் கேட்டுள்ளது.ஆனால் இதற்கான சிவப்பு-பச்சை[சமூகஜனநாயக-பசுமைக்கட்சி] கூட்டினரின்பதில் என்னவெனில் "நாடுகடத்தப்படுவோரின்தடுத்து வைக்கும் கால எல்லையும்,விமானநிலைய தஞ்ச முறையும் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வழக்கின் அடிப்படையில் மறுபரிசீலனைசெய்யப்படுமென" கூறியுள்ளது. இது கூடகவனிக்கப்படுவதாக தெரியவில்லை.

 

சிவப்பு-பச்சை[சமூக ஜனநாயக- பசுமைக்கட்சி]கூட்டினரின் பதவியிலிருக்கும் 1997-1999 காலகட்டத்தில்19 நாட்களுக்கு கூடுதலாக தடுத்துவைத்தருப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதாக பிராங்போர்ட் விமானநிலைய சமூகசேவையாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.1997 இல் 13%ஆகவிருந்த இத்தடுத்துவைத்திருப்போரின் எண்ணிக்கை 1999இல் 21% ஆகியுள்ளது. 1997 இல்100நாட்களுக்கு மேல் தடுத்துவைத்திருப்போரின்அளவு 2 வீதமாகும். 1999இல் இது 33 வீதமாகஅதிகரித்துள்ளது.

 

குழந்தைகள் கூடஇந்நிலைமைகளின் கீழ் தடுத்துவைக்கப்படுவதற்க்கு விதிவிலக்கல்ல. இப்படியான ஒரு நிகழ்வுகடந்த ஆவணி மாதம் UNICEF அறிக்கை ஒன்றில் இது சிறுவர்களின் உரிமைமீதான ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானத்தைமீறுவதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இதுவிதிவிலக்கான ஒன்றல்ல. ஆனால் அடிக்கடிநிகழும் ஒன்றாகும். இச்சம்பவம் Christian Wagner இன் தொலைக்காட்சிநாடகமொன்றில் "Ten Crazy Days" -பத்து கோமாளித்தனமான நாட்கள்-என்ற பெயரில் Arte என்றஜேர்மன்-பிரெஞ்சு கலாச்சார ஒளிபரப்பில்மே மாதம் 12ம் திகதி ஒளிபரப்பப்பட்டது.

 

Frankfurter Rundschau பத்திரிகை மே மாதம்12ம் திகதி "தஞ்சம் கோருபவர்களுக்குபிராங்போர்ட் விமான நிலையம் முன்னையஉள்நாட்டமைச்சரான கந்தரின் கீழ்இருந்தது போல்-ஜேர்மன் குடியரசின்கோட்டை வாசலில் சட்டபூர்வ வரம்புகளைகொண்ட உட்புகவிடாத முகாமாகும்.இது மனிதரை நோயாளராக மாற்றுவதுமட்டுமல்லாது Naimah.H இன் பிரச்சனையில் தெரியவந்தது போல்அவர்களை தற்கொலை செய்யவும்தூண்டுகின்றது" என குறிப்பிட்டுள்ளது.

 

சமூக ஐனநாயக-பசுமைக்கட்சியினரின்தஞ்சம் தொடர்பான கொள்கைகளின்போக்கில் இம் முதலாவது தற்கொலையானது ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தும்என்பதற்கான தன்மைகள் குறைவாகவேஉள்ளன. உள்நாட்டமைச்சர் Otto Schily உம் ஜேர்மன் அதிகாரிகளும்தஞ்சம் கோருபவர்களை மனிதாபிமானத்துடனோ அல்லது அவர்களது உரிமை தொடர்பாககவனமெடுக்கப்போவதோ இல்லை.அதற்கு மாறாக இன்னும் கடுமையானநடவடிக்கைகளையே மேற்கொள்வர்.