World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

 The collapse of the WTO talks: What this means for global capitalism

உலக வர்த்தக அமைப்பின் (WTO) பேச்சுவார்த்தையின் வீழ்ச்சி: உலக முதலாளித்துவத்திற்குஎதனை அர்த்தப்படுத்துகின்றது.

By Nick Beams
8 December 1999

Use this version to print

வாஷிங்டனில் உள்ள சியாற்றில் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தின் தோல்வியானது உலக முதலாளித்துவத்தின் பிரச்சனைகளில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனையென நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடம் பெற்றவற்றின் முக்கியத்துவத்தை எவரும் மறுக்காதபோது பிரதான முதலாளித்துவ நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உடைவை வெறுமனே ஒரு தடங்கல் அல்லது ''இடைவேளை' எனவும் பாதகமான நிலைமையில் நல்ல முகத்தை காட்ட முயற்சித்தன.

இது ஒரு குறிப்பிட்ட பொருளாதார, வர்த்தகப் பிரச்சனைகள் தொடர்பான ஒரு தொடர் பேச்சுவார்த்தைகள் அல்ல. ஆனால் அடுத்த நூற்றாண்டுக்கான உலக முதலாளித்துவ பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு வடிவமைப்பை உருவாக்கும் முயற்சியாகும். ஆச்சரியமான முறையில் இப்பேச்சுவார்த்தைகள் உடைந்துபோக வேண்டியிருந்ததுடன் இறுதியான ஆவணம் ஒன்றில் எழுத முடியாத அளவுக்கு முரண்பாடுகள் மிக ஆழமாக இருந்ததற்கு ஆழ்ந்த காரணங்கள் இருக்க வேண்டும்.

கடந்தகாலங்களில் பிரதான முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் சீர்குலைந்து போகும் தன்மை பெரிதும் அதிகரித்துள்ளது. ஆனால் இறுதியில் குறைந்தபட்சம் உடன்படிக்கையின் வெளித்தோற்றம் ஒன்றை வளங்குவதற்கான சூத்திரமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை அப்படி எதுவும் நிகழவில்லை.

இந்தச் சீர்குலைவை அடுத்து, இதில் கலந்து கொண்ட முக்கிய புள்ளிகள் இதற்கான பழியை ஆளுக்காள் சுமத்த முனைந்தனர். முக்கியமாக பெரும்பான்மை மாநாட்டு பிரதிநிதிகளின் கோபத்தை தூண்டிய மகாநாட்டில் மூர்க்கமான தலைமைத்துவம் வகித்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான சார்ளின் பாஸ்ப்ஸ்கி (Charlene Barshefsky) அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த மற்றைய அரசாங்கங்களின் மீது இவ்வுடைவிற்கான பொறுப்பை சுமத்தினார். பிரச்சனைகளின் "சிக்கலும் விசித்திரமான தன்மையும்" பிரதிநிதிகள் முடிவெடுப்பதற்கான கூட்டுத் தகமையை சிக்கலாக்கியது எனவும் அரசாங்கங்கள் ஒரு பாய்ச்சலை எடுக்க விரும்பின" எனவும் அவர் கூறினார். விவசாய மானியங்கள் மீதான வெட்டுக்களை ஏற்றுக்கொள்ள மறுத்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் தலைவரான பஸ்கல் லாமி யின் நிலைப்பாடு ஒரு முக்கிய தடையாக இருந்ததோடு இது ஒரு "தெளிவான நனவுபூர்வமான" முடிவுமாகும். "நாங்கள் சியாற்றிலுக்கு தெளிவான தைரியத்துடனும், நிகழ்ச்சி நிரலுடனும் வந்தோம். இத்தோல்விக்கான பொறுப்பு உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பிலே தங்கியுள்ளது எனவும் அபூர்வமான தொழிலாளி ஒருவரால் மட்டுமே அதன் "மத்தியகால" விதிமுறைகளில் இருந்து ஒரு பெறுபேற்றை பெற முடியும்" என லாமி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் இப்படியான விளக்கங்கள் நீண்ட தூரம் செல்ல முடியாது. பினான்சியல் டைம்ஸ் (Financial Times) தனது திங்கள் கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல் உலக வர்த்தக அமைப்பானது அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் சிருஷ்டியே தவிர "அன்நியமான பேய்" அல்ல. உலக வர்த்தக அமைப்பின் பெரும்பான்மையை உள்ளடக்கிய வறிய நாடுகள் மத்தியில் இது தொடர்பாக ஏகோபித்த கருத்தேயிருந்தது. இப்பேச்சு வார்த்தைகள் உடைந்ததற்கான காரணம் முக்கிய முதலாளித்துவ அரசுகளும், குறிப்பாக அமெரிக்காவும் தமது திட்டத்தை உலகின் ஏனைய பாகங்கள் மீது திணிக்க முயன்றதாகும்.

2002ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்கவிருக்கும் தாய்லாந்தின் பிரதி பிரதம அமைச்சரான சுபாச்சி பனிச்பக்டி (Supachi Panitchpakdi) "இப்பேச்சுவார்த்தையின் தோல்வியானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் நசுக்கிஅழிக்கப்பட முடியாது என்பதை வசதி படைத்த நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் எச்சரிக்கை மணியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய உணர்வுகள் கரிபியன் மற்றும் லத்தீன் அமெரிக்கன் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்க்ைகளிலும் எதிரொலிப்பதைக் காணலாம். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், "சகல அங்கத்தவர்களதும் போதிய சம பெறுபேறுகளுக்கான தெளிவானதும் திறந்ததும் பங்களிப்பும் கொண்ட நிலைமைகள் இருந்து கொண்டிராத வரை இந்த அமைச்சர் மட்ட மகாநாட்டின் புறநிலைகளை அடையத் தேவையான உடன்பாட்டுக்கு நாம் வரமாட்டோம்". இது இராஜதந்திர மொழியில் பேசப்பட்டாலும் அதன் உள்ளடக்கம் சரியானது.

பினான்சியல் டைம்ஸ் (Financial Times)இல் வெளியான அறிக்கையில் மாநாட்டு மண்டபத்திற்குள் இறுதி நேரத்தில் நிலவிய சூழ்நிலை சம்பந்தமாக தெரிவிக்கையில் "பூகோள வர்த்தக ஒழுங்கமைப்பின் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தலாம் என நம்பிய இப்பேச்சுவார்த்தை ''கெட்ட கனவாக'' மாறியதுடன், அமைச்சர்களுக்கிடையில் தரங்கெட்ட குடும்பச் சண்டையாக சீரழிந்து ஒரு பரிதாபகரமான தோல்வியில் முடிவடைந்தது."

"சிலசமயங்களில் மகாநாட்டு மண்டபத்தினுள் நிலவிய குழப்பம் சுற்றியிருந்த தெருக்களில் இருந்ததுபோல் சூடுபிடித்ததாக இருந்தது. நிலைமைகள் மேலும் குழப்பம் அடைந்து போகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் மேசைகளில் குத்தியும், கேலிக்கூச்சலிட்டும் சார்ளின் பார்ப்ஸ்கி (Charlene Barshefsky) யின் தலைமையை அவமரியாதை செய்யும் வகையில் கூச்சலிட்டனர். சிலர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே வெளிநடப்புச் செய்யப்போவதாக பயமுறுத்தினர்."

முக்கியமான முதலாளி வர்க்க அரசியல்வாதிகளின் ''முட்டாள்தனமான கோழை செயல்களே'' பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என பினான்சியல் டைம்ஸ் (Financial Times) தெரிவித்துள்ளது. அசாதாரண கசப்பும் கடுமை போக்கும் நிறைந்த அவர்களது இயல்பானது இறுதியாய்வுகளில் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தினுள் வேரூன்றியுள்ள தவிர்க்க முடியாத முரண்பாடுகளின் வெளிப்பாடாகும்.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஆரம்ப வரலாற்றை ஆய்வு செய்கையில் இந்த முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. பிரதான முதலாளித்துவ நாடுகளின் தூண்டுதல்களினால் WTO 1995இல் ஆரம்பிக்கப்பட்டது. அதுவரைக்கும் உலக வர்த்தகம் தீர்வை வரிக்கும் வர்த்தகத்திற்குமான பொது உடன்படிக்கையின் (General Agreement on Tariffs and Trade-GATT) ஆசீர்வாதத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு வந்தது. 1930களில் தோன்றிய பெரும் பொருளாதார மந்த நிலையின் பண்பு கொண்ட எடுத்துக்காட்டப்பட்ட அழிவுமிக்க வர்த்தக யுத்தத்தை தடுத்து நிறுத்தவும் பிரதான கைத்தொழிற் பொருட்களின் மீது வரிகளை விதிக்கும் நோக்கத்துடனும் 23 அங்கத்தவ நாடுகளைக் கொண்ட இவ்வமைப்பு 1948இல் உருவாக்கப்பட்டது.

தற்போது அபிவிருத்தியடைந்துள்ள பூகோளமயமான பொருளாதாரத்திற்கு 1980களில் 'வர்த்தக தீர்வை வரி சம்பந்தமான பொது உடன்படிக்கையின்' (GATT) வரையறைகள் மிகவும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருந்தது. GATT உருவாகிய காலகட்டம் உலக பொருளாதார உறவுகள் தேசியப் பொருளாதாரங்களுக்கிடையேயான வர்த்தக உறவுகளால் ஆளுமை செலுத்தப்பட்டிருந்தது. இது உண்மையாகவும் சரியாகவும் அன்று பொருந்தியிருந்தது. சேவை மற்றும் அறிவியல் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பின் முக்கியத்துவத்துடன் பூகோளமயமான உற்பத்தியின் அபிவிருத்தி, வங்கிகளினதும், ஏனைய நிதி நிறுவனங்களினதும் அதிகரித்துவரும் எதிர்பார்ப்பும் அதிகரித்துவரும் பூகோளமயமான முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிரச்சனைகளை ஒழுங்குபடுத்த ஒரு புதிய அமைப்புமுறை உருவாக்கப்படவேண்டியுள்ளது.

அதேபோல் WTO இன் நோக்கம், உற்பத்திப் பொருட்களினதும் விவசாயப் பொருட்களினதும் வர்த்தகத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாது வங்கி, தொலைத்தொடர்பு, காப்புறுதி, ''கணனி மென்பொருள் தொடர்பான தனிநபர் அறிவியல் வளங்களின் உரிமை'' தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றின் மீதும், 'வர்த்தக தீர்வை வரி சம்பந்தமான பொது உடன்படிக்கை (GATT) உருவாக்கப்பட்டபோது இல்லாதிருந்த கைத்தொழில்கள் மீதும் தனது ஆளுமையை செலுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டது.

சுருக்கமாக கூறின் WTO வை முக்கிய முதலாளித்துவ நாடுகள் உருவாக்கியதன் நோக்கம், உற்பத்திப் தொழில் நுட்பங்களில் விஞ்ஞான ரீதியான புதிய கண்டுபிடிப்புக்களை பிரயோகிப்பதன் மூலம் சாத்தியமான உற்பத்தி சக்திகளின் பாரிய முன்னேற்றத்தினாலும், போக்குவரத்து, தொலைதொடர்புகளில் ஏற்பட்ட புரட்சிகர அபிவிருத்திகளினாலும் உருவாகிய பூகோளமயமான உற்பத்தியின் அடித்தளத்தில் ஒரு பூகோளமயமான அமைப்பை உருவாக்குவதேயாகும்.

பூகோளமயத்தின் விளைவால் WTO உருவாக்கப்பட்டிருந்தும் கூட, அது முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறைக்கு அடித்தளமாக இருந்த தேசிய அரச அமைப்பு முறையினுள்ளேயே வேரூன்றியுள்ளது. ஆகையால் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு இசைவான ஒரு அமைப்பாக இயங்குவதற்குப் பதிலாக ஆரம்பத்தில் இருந்தே இது முதலாளித்துவ சக்திகளுக்கிடையே சந்தைக்கும் இலாபத்திற்குமாக அதிகரித்து வரும் கசப்பான போராட்டங்களை நடாத்துவதற்கான ஒரு மேடையாகியுள்ளது.

வேறுவார்த்தைகளில் சொன்னால் 1999 இன் இறுதிக் கிழமைகளில் 20ம் நூற்றாண்டில் உலக முதலாளித்துவத்தை கலவரப்படுத்திய மத்திய முரண்பாடுகளான- அதாவது, தன்னகத்தே முற்போக்கான வளர்ச்சியைக் கொண்ட உற்பத்தி சக்திகளின் பூகோளரீதியான அபிவிருத்திக்கும், தனிச்சொத்துடமையையும் தேசிய அரச அமைப்பு முறையையும் அடித்தளமாகக் கொண்ட காலவதியான முதலாளித்துவ சமூக உறவுகளுக்கும் இடையேயான முரண்பாட்டினுள் WTO தலை மூழ்கியது. இந்தத் தவிர்க்க முடியாத முரண்பாடுகள் அமைச்சர்களின் கூட்டத்திலும் எந்தவொரு உடன்பாட்டையும் எட்டமுடியாதுபோன அவர்களது தவறான நிலைப்பாட்டிலும் பிரதிபலித்தது.

முதலாவது எடுத்துக்காட்டாக, முக்கிய முதலாளித்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றின. அவர்களால் விவசாயமும் ஏனைய உற்பத்தி பொருட்களைப்போல் அணுகப்படவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பாகவோ அல்லது தமது பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்னஎன்பது தொடர்பாகவோ ஒரு உடன்பாட்டுக்கும் வரமுடியவில்லை.

அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கும், அபிவிருத்தியடையாத அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கிடையேயான இரண்டாவது முக்கிய பிளவு என்னவெனில் அமெரிக்காவாலும் ஏனைய முக்கிய வல்லரசுகளாலும் முன்வைக்கப்பட்ட வெவ்வேறான பிரேரணைகள் பெரும்பான்மையான வறிய நாடுகளின் இழப்பு மூலம் தமது நலன்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தை உடையதாக இருந்தது.

பிளவிற்கான மூன்றாவது காரணி பூகோளமயமாக்கத்தை முதலாளித்துவ இலாப அமைப்பு முறையின் கட்டளைகளுக்கு அடிபணியச் செய்வதன் விளைவால் தோன்றிய சமூக துருவப்படுத்தலாகும். சியாற்றில் வீதி ஆர்ப்பாட்டங்களும், தமது பொருளாதார சமூக வாழ்க்கையின் முழு விடயங்களிலும் முதலாளித்துவ சந்தையின் ஆளுமை அதிகரித்து வருவதையும் தமது வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து வருவதையும் அவதானித்த உலகம் பூராவுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் அனுபவங்களின் வெளிப்பாடாகும். வரலாற்றில் ஒரு நீண்டகாலம் தடையற்ற உற்பத்திக்கும் முன்னொருபோதும் இல்லாதவாறு பங்குச் சந்தைகளின் வளர்ச்சிக்கும் மத்தியிலும் அமெரிக்காவில்தான் வேறெங்குமில்லாதவாறு இந்த அனுபவங்கள் வெளிப்பட்டுள்ளது. இம்மாநாடு குழம்பிய நாளன்று டோ ஜோன்ஸ் (Dow Jones ) தனது உச்சப் புள்ளியை அடைந்தது. இச் சந்தையின் இயக்கமானது இலட்சக்கணக்கான மக்களுக்கு சமூக அழிவை உருவாக்கியது.

உலகின் முக்கிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் விசேடமான பங்கு பற்றி ஆய்வு செய்யாமல் தோல்வியடைந்த WTO மாநாடு தொடர்பான ஆய்வு முழுமையானதாக இராது. உலக முதலாளித்துவம் தன் வரலாறு முழுவதும் உற்பத்தி சக்திகளை பூகோளரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான இயல்பான உந்துதலுக்கும் போட்டி தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையேயான முரண்பாடுகளால் முட்டி மோதிக்கொண்டுள்ளது.

ஆனால் சில குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் இம் முரண்பாடுகள் ஒரு தனி வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரம் ஒழுங்கமைக்கப்பட அல்லது கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஒரு வரலாற்றுத் தொடர்புடைய காலங்களில் இவ்வகையான முரண்பாடுகள் திட்டமிடப்பட்டு ஒரு உயர்ந்த சக்தியுள்ள ஒரு தனிநாட்டின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதார நிறுவனத்தினூடாக அடக்கக்கூடியதாக இருந்தது. 1870 தொடக்கம் 1913 வரையிலான முதலாளித்துவ விரிவாக்க காலத்தின்போது சுதந்திர வர்த்தக அமைப்பை உருவாக்குவதற்கு உலகச் சந்தை மீதான பிரித்தானிய முதலாளித்துவத்தின் ஆளுமையின் பலம் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதன் போட்டியாளராக துரித வளர்ச்சி கண்ட ஜேர்மன் முதலாளித்துவத்தின் தோற்றம் முதலாம் உலக மகாயுத்தத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

இரு யுத்தத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுதந்திர வர்த்தக ஒழுங்குமுறை வீழ்ச்சிகண்டு ஆழ்ந்த போட்டிக்கும் பொருளாதார மந்தத்துக்கும் இறுதியில் ஒரு இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தத்திற்கும் வழிவகுத்தது. முப்பது ஆண்டுகால இரத்தம் தோய்ந்த முரண்பாடுகளின் பின்னர், யுத்தத்திற்குப் பின்னைய முதலாளித்துவ அமைப்பு மறுசீரமைக்கப்பட்டது. ஒரு புதிய முதலாளித்துவ மேலாதிக்கம் கொண்ட அமெரிக்காவின் முயற்சி மூலம் சாதிக்கப்பட்டது. அது உலகப் பொருளாதாரத்தை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது.

குளிர் யுத்தத்தின் வரம்பினுள் இக்காலப் பகுதியில் அமெரிக்கக் கொள்கை பலதரப்பு பதாகையின் கீழ் இடம் பெற்றது. இது என்றும் தனது நலன்களை ஊர்ஜிதம் செய்து கொண்டதோடு அமெரிக்கா, உலகப் பொருளாதார விவகாரங்களை பெரும் முதலாளித்துவ வல்லரசுகளும் அத்தோடு ஓரளவுக்கு வறிய நாடுகளும் பொருளாதார விஸ்தரிப்பில் ஈடுபடும் விதத்தில் ஒழுங்குசெய்து கொண்டது.

இன்று அமெரிக்கப் பாத்திரம் மாற்றம் கண்டுள்ளது. பலதரப்பு வாதத்துக்கு பதிலாக அது பூகோளரீதியான சந்தைகளின் விஸ்தரிப்பை அறிமுகம் செய்தது. இன்று அதனது அனைத்துலகப் பொருளாதாரக் கொள்கைகள், ஒரு அதிகரித்த அளவில் சண்டை போடும் ஒருதலைப் பட்சமானது என வருணிக்கத்தக்க பண்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சலுகைகளை வழங்க மறுத்ததோடு பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகிக் கொள்ளத் தீர்மானம் செய்தது. ஒரு அதிகாரியின் வார்த்தையில் -நியூஜோர்க் டைம்ஸ் சுட்டிக் காட்டியவாறு- "நாம் கிடைக்கும் என எதிர்பார்த்த உடன்படிக்கையை விட ஒரு உடன்பாடும் இடம் பெறாதது என்பதே மோசமானது".

இப்பேச்சுவார்த்தையின் தோல்வியானது புதிய உடன்படிக்கை ஒன்றை விரைவில் உருவாக்குவதற்கான அழைப்பை விட்டுள்ளது என்ற நம்பிக்கையை ஏனையோர் தெரிவிக்கையில் WTO இன் வீழ்ச்சியானது எதிர்கால உலக முதலாளித்துவத்திற்கான என்ன முன்னறிவித்தலை கொடுக்கின்றது? எனக் கூறிய WTO இன் பணிப்பாளர் நாயகம் மைக் மூர் (Mike Moore) சுட்டிக்காட்டியதாவது GATT பின்னடைவுகளை சந்தித்தபோதும் தப்பித்துள்ளது என்றுள்ளார்.

ஆனால் பலதரப்புவாதக் காலகட்டம் முடிவடைந்துவிட்டது என்ற பயம் அதிகரித்து வருவதுடன் மற்றும் எதிர்காலத்தில் கூடுதலாக இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்பாடுகளும் வர்த்தகக் கூட்டுக்களும் உலக வர்த்தக உறவுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும். கடந்தகாலத்திற்கான உறுதியற்ற தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வர்த்தக உறவுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துவிடும்.

இந்தப் பயம் அவுஸ்திரேலிய பினான்சியல் ரிவியூ (Australian Fnancial Review) திங்கள்கிழமை ஆசிரியத் தலையங்கத்தில் ''நினைக்கமுடியாதது நடந்துவிட்டது'' என சுருக்கமாகக் குறிப்பிட்டது.

மேலும் அது, ''இந்த நூற்றாண்டின் முதல் அரைப்பாகமானது இரண்டு உலக யுத்தங்களைத் தோற்றுவித்துள்ளது சில நாடுகள் தமது பொருட்களை ஏனைய நாடுகளுக்குள் தடையின்றி கொண்டு செல்வதன் மூலம் இலாபம் ஈட்டலாம் என்ற நோக்கம் இந்த யுத்தங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த நூற்றாண்டின் மற்றைய இரண்டாவது அரைப்பகுதி தமக்கிடையேயான வர்த்தகத்தில் ஒரு உடன்பாடு கொண்டதன் மூலமாக தடையற்ற வளர்ச்சியும் ஒரு புதிய மட்டத்திலான அபிவிருத்தியையும் தோற்றுவித்துள்ளது."

"புதிய மில்லேனியம் ஆரம்பமாக உள்ள நேரத்தில் ஒரு புதிய சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகள் உடைந்ததை பார்ப்பதற்கு முடிந்துகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் இரண்டு அரைவாசிப் பகுதிகளின் உள்ளடக்கத்திலும் பார்க்க எந்தவிதமான சிறந்த சந்தர்ப்பமும் கிடையாது."

 

"அது இரண்டு கிழமைக்குக்குள் GATT இன் முன்னாள் தலைவரான பீட்டர் சுதர்லண்ட் (Mr. Peter Sutherland) வெளிப்படையான தோல்வியின் உணர்வு [சீயற்றிலில் நடைபெற்ற உலகவர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளின் தோல்வி] ஒரு விருப்பமான சம்பவமல்ல. அப்படியான விளைவு WTO இல் பிரதிநிதித்துவம் வகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் நன்மை விளைவிக்காததுடன் இவ்வமைப்பை, உடைவிற்கு இட்டுச்செல்வதற்கான பரிசோதனையாகிவிடும்."

 

"இருப்பினும் அந்தத் தெளிவான உரைநடையானது கிட்டத்தட்ட புதுவருடத்தின் முற்பகுதியில் பேச்சுவார்த்தையைத் திரும்பத் தொடங்குவது சம்பந்தமானதும், நடந்துகொண்டிருக்கும் உருகுவே வட்ட (Uruguay Round) பேச்சுவார்த்தையிலிருந்து எடுக்கப்படவேண்டிய தொடர்பான திடீரென தோன்றிய கருத்துகளுக்கும் மத்தியில் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. புதிதாக வளர்ச்சி கண்டுவரும் அமெரிக்க பொருளாதாரத்தின் பசுபிக்கினை அடித்தளமாக கொண்ட Boeing இற்கும் Microsoft இற்கும் சியாற்றிலில் நடைபெற்ற உடைவானது மிகவும் கவனத்திற்கு உரிய விடயமாகும். இது இப்புதிய நூற்றாண்டில் எவ்வகையான புதிய பூகோளரீதியான பொருளாதாரம் தோன்றப் போகின்றது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது."

 

பொருளாதார சக்திகள் தொடர்ந்தும் பூகோளமயமாக்கலை முன்னோக்கி தள்ளுகின்றது. ஆனால் இப்போக்கின் நலன்கள் உலக வர்த்தக கட்டுப்பாடுகளையும் நிதி சமநிலையற்ற நிலையையும் கூட்டுமானால் இப்புதிய நூற்றாண்டானது 1930இனது அயல்வீட்டு பொருளாதார சிந்தனைகளை பிச்சை எடுப்பதன் மூலம் புதிய வடிவத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

உலக பொருளாதாரத்தை முதலாளித்துவ இலாப அமைப்புக்கு அடிபணியச் செய்வதானது ஏற்கனவே வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியையும் நீடித்த வேலை நேரத்தையும் பாரிய பொருளாதார பாதுகாப்பின்மையையும் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகள் மட்டுமல்லாது வறிய நாடுகளிலும் உள்ள பெரும்பான்மையான உலக மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இப்பொழுது அது ஒரு யுத்தத்தையும் பொருளாதார மந்த நிலையையும் கொணரப் போவதாக பயமுறுத்துகின்றது. WSWS கூறியது போல் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதென்பது தொழிலாள வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்தின் அடித்தளத்தில் பூகோளமயமாக்கத்தினதும் தொழில்நுட்பத்தினதும் அனுகூலங்களை இலாப அமைப்பின் நோக்கங்களிற்கு அல்லாது மனித சமுதாயத்தின் தேவைகளுக்கு நலன்பயக்கும் முறையில் செய்வதற்கு பயன்படுத்தி ஒரு புதிய சமூக பொருளாதார ஒழுங்குமுறையை உருவாக்குவதேயாகும்.