World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

On the threshold of the twenty-first century

இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில்

By Peter Schwarz
18 January 2000

Use this version to print

நான்காம் அகிலத்தின்ஜேர்மன் பகுதியான சோசலிச சமத்துவக்கட்சியின் வெளியீடான கிளைஹைற் (சமத்துவம்) றின் ஜனவரி/பிப்ரவரி இதழில் பின்வரும்ஆசிரியர் தலையங்கம் வெளிவந்துள்ளது.

நிறைவு விழாக்களைப் பொறுத்தவரை மறுப்பதற்கு இடமின்றி, ஏதோ ஒரு தற்செயல்பொருத்தம் இருக்கின்றது. வரலாற்றின்போக்கு, கிரிகோரியன் ஆண்டு கணிப்பேட்டுடன்(13-ம் கிலிகரி போப்பாண்டவர் 1582-ல் திருத்தியமைத்த)ஒரு நிலைப்படுவதில்லை. இருந்தபொழுதும்நூற்றாண்டின் முடிவானது, திரும்பிப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தருகின்றது- மற்றும்எதிர்காலத்தினுள் பார்க்கவும் தருணத்தைஅளிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டு எப்படிமதிப்பிடப்பட வேண்டும்? அதன் வரலாற்றுமுக்கியத்துவம் தான் என்ன? வரும் இருபத்தொன்றாவது நூற்றாண்டிடம் இருந்து எதைஎதிர்பார்க்க முடியும்?

பத்தொன்பதாம்நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டிற்குமாறிய பொழுது வாழ்ந்தவர்கள், அதுதன்னம்பிக்கை மற்றும் விழிப்பூட்டல் மனப்பான்மையும் கொண்டிருந்தது என்று ஒருமனதுடன்கூறியுள்ளனர். அறிவியற் துறையில் ஒரு சகாப்தத்தை உருவாக்கும் கண்டுபிடிப்பு அதற்கு முந்தையதின்இடத்தைக் கைக்கொண்டு முன்னேறிச்சென்றது. கலாச்சாரத் துறையில் - இசை,ஓவியம், இலக்கியம் மற்றும் அண்மையில்பிறந்த இயங்கும் படக்காட்சிகள் என்பனவற்றில்ஒரு புதிய புனைவு மற்றய புதிய புனைவைஉடனடியாகப் பின் தொடர்ந்தது.

தந்தியும், மேலும் திறன் பெற்ற போக்குவரத்துமுறைகளும் தூரங்களை குறைத்தன.மனிதன் புதிதாகப் புனைந்து புதியனவற்றைஉருவாக்கும் ஆற்றலுக்கும், கண்டுபிடிக்கும்ஆர்வ எழுச்சிக்கும் எல்லைகளே இல்லாததுபோல இருந்தது. இவற்றிற்கு மகுடம்சூட்டியது போல, தொழிலாளர் இயக்கமானது நம்பிக்கையும், சுய உறுதி கொண்டதாகவும்இருந்தது. இது முன்னணி மார்க்சிச தத்துவஅறிஞரான ஃபிரான்ஸ் மேரிங்ஙை ''பத்தொன்பதாம் நூற்றாண்டாக நூற்றாண்டு நம்பிக்கைஇருந்தது போல, இருபதாம் நூற்றாண்டுநிறைவுறும் நூற்றாண்டாக இருக்கும்,''என்று கூறச் செய்தது.

இருபதாம்நூற்றாண்டு முடிவுற்றுள்ளது. ஆனால்இந்த விழிப்புணர்வு மனப்பான்மையில் எதுவும்மிச்சமாக இல்லை. பிரமாண்டமான செலவுகளுடனும், பெரும் குவியல் வெடிமருந்துகளுடனானவான வேடிக்கைகளுடனுமான நம்பிக்கையின்ஆயிரம் ஆண்டுகளின் நிறைவு விழாக்கள் அறிகுறிகள்அல்ல, ஆனால் உளவியல், உணர்வுகளைஅடக்க எடுத்த முயற்சிகளின் வடிவமாகும்.ஒழுக்க நெறிக்கு விடுத்த அறை கூவலையும்,எல்லோரும் அறிந்தவற்றை எடுத்துக்கூறுவதையும் தவிர, புதுவருடத்தின் வருகைக்காக நடத்திய அரசியல் உரைகள் எதிர்காலத்திற்கானஉத்தரவாதங்கள் சிலவற்றைத் தான்கொண்டிருந்தன.

சுதந்திரம், சமாதானம்,தனிப்பட்ட பொறுப்பு மற்றும் இறுதியாகஆனால் எந்தவிதத்திலும் குறைவாக அல்லாதுதனியுடமை என்பன பற்றி மிக உயர்வாகப்புகழ் பாடும் பேச்சுகளாகத்தான்புத்தாண்டு சொற்பொழிவுகள் இருந்தன.ஆனால் மிகவும் பரவலாக உள்ள சமூகஇல்லாமை மற்றும் ஏதும் நிச்சயமற்றநிலமைகள் மத்தியில் இவை நாட்பட்டு மட்கிப்போனவையாக எல்லோர் காதுகளிலும்ஒலித்தன. ''கண்களை மூடிக் கொண்டுஎப்படியும் முடித்துவிடு'' என்று பின்னனியில்ஒலிப்பதை மிகவும் துல்லியமாகக் கேட்கமுடிந்தது. அதாவது எப்படிச் சாதிப்பதுஎன்று திட்டவட்டமாக எதுவும் தெரியாதுஒரு வேளை மீண்டும் எப்படியோ சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கை வெளிப்பட்டது.

அண்மையில் உலகப் பொருளாதாரத்தில்ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிய கட்டுரைஒன்றை டைய்ம்லர் பென்ஸ் கார் கம்பெனியின்முன்னாள் தலைவர் எட்ஸாட் ரொயிட்டர்எழுதியுள்ளார். ''நிற்கதியாக நிற்கும் மந்திரவாதியின்பயிற்சியாளன்'' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை, மேல் தட்டுக்களின் பிரதிநிதிகளுள்கூடிய சிந்தனை ஆற்றல் படைத்தவர்களைவேதனைக்குள்ளாக்கி வரும் அச்சங்களைத்தெளிவுபடுத்தியுள்ளது. டி சைற் பத்திரிகையில்டிசம்பர் 9-ம் தேதி எழுதுகையில் ''ஒவ்வொருநபரும் தான் விரும்புவதை அடைய நிலையானவேலை, முதிர்ந்த வயதில் பாதுகாப்பு,பெற்ற குழந்தைகளுக்கு ஒரு நல்லகல்வி, ஒருவரின் தலையின் மேல் ஒரு தரமானகூரை மற்றும் சுகாதாரமான சூழல்என்பனவற்றை அடைவதென்பது இன்றுஒருவரின் கைகளுக்குட்படாது அகன்றுவிட்டது. இதோடு சேர்ந்து ஜனநாயகநிறுவனங்கள் பற்றி நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. 150 வருடங்களுக்கு முன்னர் மார்க்சும்ஏங்கெல்சும் அவர்களது கம்யூனிஸ்ட்அறிக்கையில் குறிதவறாது சரியாகக் கூறிவிட்டார்கள் என்று எண்ணற்ற எழுத்தாளர்கள்எண்ணிப் பார்க்கின்றார்கள் என்பது அதிசயப்படக் கூடியதொன்றா?

ஆனால் இதிலிருந்துவெளியேற வழி ஏது? சமுதாயத்தைக் கட்டுப்படுத்தி அதை மேன்மைப்படுத்த முடியும் என்றுநூறு வருடங்களிற்கு முன்னர் எவ்வளவுநம்பிக்கையுடன் ஃபிரான்ஸ் மேறிங்எடுத்துக் கூறிய அந்தப் பரந்து பட்டிருந்தநம்பிக்கையில் மிக அற்ப அளவு நம்பிக்கைதான்இன்று மீதமாக இருக்கின்றது. சோவியத்ஒன்றியம் ஸ்ராலினிச சீரழிவுற்று இறுதியில் அதுபொறிந்ததுடன், ஒவ்வொரு சமூக உயர்கனவும் இகழ்ச்சிக்கு என்றென்றும் உள்ளாக்கப்பட்டுள்ளது என்ற கருத்து குறிப்பாக புத்திஜீவிகள் வட்டங்களிலும், ''இடதுசாரிகள்''என்று கூறப்படுபவர்களின் அணிகளினுள்ளும்ஆழமாய் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

ஜனநாயக சோசலிசக் கட்சியின் முன்னணிதத்துவவாதியான அண்டிரே பிரேயின் பங்களிப்புஒன்றில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெர்மன்பழமை பற்றாளர் பத்திரிகையான பிராங் போட்டர் அல்கெமைய்னர்சைட்டுங் பத்திரிகையில் எழுதியிருப்பதுஇதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.பிரே ஸ்ராலினிசத்திற்கான காரணிகள் எவைஎன்பது பற்றி எழுதினார். அப்பொழுதுஅவர், ''எவ்வளவு தான் முரண்பட்டதாகஅது இருந்த பொழுதும் அரச சோசலிசசர்வாதிகாரத்திற்கான ஆரம்பப் புள்ளிமனித நேய தொலைநோக்கு எவ்வகையிலும்குறைவானதாக இருக்கவில்லை. ஏனென்றால்அது ஒரு புறம் தனி நபர்களை, சமூகவர்க்கங்களை, அரசியல் சக்திகளை, பொருளாதாரத்தை மற்றும் கலாச்சாரத்தைஒரு உன்னத கனவைச் செயற்படுத்துவதற்காக கீழ்படியச் செய்கின்றது. மறுபுறம் ஒத்திசைவான, முரண்பாடுகள் அற்று சுதந்திரமான,வேறுபாடுகள் இல்லாத சமுதாயம்ஒன்றிற்கும் முற்று முழுதாக வேறுபட்டசமூக மற்றும் தனி நபரின் வளர்ச்சிக்கும்இடையில் உள்ள தீர்க்க முடியாத முரண்பாடு,முழு சமுதாயத்தின் மேல் முழுமையானஅதிகாரத்தைச் செலுத்தாது கம்யூனிசஆட்சியை என்றென்றும் பேணிக்காக்கமுடியாமற் போனமைக்கு ஒரு காரணமாகும்.எல்லா முறைகளிலும் இந்த வழிகளை திரித்து,திசை திருப்ப முடியும். ஆனால் அவை எந்தஒரு முற்போக்கான சமூக முன்நோக்கையும்கண்டிப்பதோடு, நிலவும் நிலமைகளுக்குஒரு புனிதத் தன்மையை ஊட்டுவதில் முடிகின்றது.

பிரேயின் கருத்தை மனித இனம் ஏற்றிருக்குமாயின்,அது இன்றும் மரங்களிற்தான் வாழ்ந்துகொண்டிருக்கும் அல்லது புராதன பழங்குடிசமுதாயங்களில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும்.

தனி நபர்கள், சமூகவர்க்கங்கள் மற்றும் இன்னோரன்னவற்றை''ஓர் ஏற்ற முற்போக்கான முறையில்வளர்த்தெடுக்கப்பட்ட ''உன்னத கருத்திற்குக்''கீழ்படியச் செய்யாது எந்த ஒரு சமூகமுன்னேற்றத்தையும் எண்ணிப் பார்க்கமுடியாது. போலீஸ் குண்டாந்தடியின் (''முழுமையான ஆட்சியதிகாரம்'') உதவி கொண்டு ''ஒத்திசைவான,முரண்பாடுகள் அற்ற சமுதாயத்தை''உருவாக்க முடியும் என்று மட்டும் பிரேயினால்கற்பனை செய்ய முடியுமாயின், அது அவரின்சொந்த ஸ்ராலினிச கல்வியறிவைப் பற்றி நிறையஎடுத்துக் கூறுகின்றதே ஒழிய சமூக சமத்துவம்இன்மையை முற்போக்கான முறையில்வெல்லுவதன் மூலம், வர்க்கமற்ற சமுதாயம்ஒன்றிற்காகப் போராடும் மார்க்சிசத்தைப்பற்றி எதையும் கூறவில்லை.

1917-ம் ஆண்டுஅக்டோபர் புரட்சி பற்றியும் அதன் தலைவர்கள் லெனினதும், ட்ரொட்ஸ்கியினதும் கொள்கைகள்,பின்னர் ஸ்ராலின் கீழ் சோவியத் ஒன்றியம் சீரழிந்ததற்குப் பொறுப்பாய் இருந்தன என்ற பொருளின்கீழ், ஒரே கருத்து ஆயிரம் வேறுபாடுகளுடன்கூறப்படுவதில் பிரேயின் வார்த்தைகள்ஒரு உதாரணம் மட்டுமேயாகும். இருபதாம்நூற்றாண்டின் படிப்பினைகளை அகழ்ந்தெடுத்துமக்களின் பரந்துபட்ட தட்டுக்களின் நனவிற்குக்கொண்டுவருவது எவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்தவை என்பதை பிரேயின் வார்த்தைகள்வெஸிப்படுத்தாவிட்டால் அவற்றை ஓரம்கட்டி ஒதுக்கிவிடலாம். புதிய நூற்றாண்டின்வளர்ச்சி இதில் தங்கியுள்ளது.

அக்டோபர்புரட்சியானது இருபதாம் நூற்றாண்டின்மிக முக்கியமான நிகழ்வாக இருந்ததோடுதொடர்ந்தும் அப்படி இருந்து வருகின்றது.அதுவே சர்வதேச பாட்டாளி வர்க்கத்தால் ஒரு நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றி அதன்விருப்பத்திற்கேற்ப சமுதாயத்தை மறுவடிவமைக்க அது எடுத்த முதல் முயற்சியாகும். அன்றுரோஸா லக்சம்பேக்கைவிட வேறுயாரும் இதை அதிகமாக பேசவில்லை.லக்சம்பேக் சில விஷயங்களில் லெனினைவிமரிசித்தார். இதனால் அவர் அக்டோபர்புரட்சிக்கு எதிரானவர் என்று பொய்யாகஅடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுவந்துள்ளார். ஆனால் லக்சம்பேக்1918-ல் ''ரஷ்யப் புரட்சி'' என்ற கட்டுரையில்எழுதுகையில் ''உலகப் பட்டாளி வர்க்கப்புரட்சியின் மேல் அவர்களது கொள்கையில்முழுமையாக நிறுத்தினார்கள் என்பதுஅவர்களது அரசியல் தூர நோக்கின் கோட்பாடுகள் பற்றி அவர்களுக்குள்ள இறுக்கமானபற்றினதும், அவர்களது கொள்கைகளின்நெஞ்சுறுதியான குறியிலக்கினதும் மிகவும்துல்லியமான நிரூபணமாகும்''.

அக்டோபர்புரட்சி சீரழிந்து பொய்த்துப் போனதுஅதன் ஆரம்பங்களும், இலக்குகளும்போலியானவை என்றதன் காரணமாகஅல்ல மாறாக எதிர் கொண்ட அது சக்திமிக்கதடைகளை அது முதல் முயற்சியில் வெல்லமுடியாமற் போனதாகும். இளம் சோவியத்ஒன்றியம் 17 ஆக்கிரமிப்புப் படைகளினால்சூழப்பட்டிருந்தது. ஜேர்மன் புரட்சியின்தோல்வியினால் அது சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இறுதியில் அது வழிவழியாகவந்த ரஷ்யாவின் பொருளாதார மற்றும்கலாச்சார பின்தங்கிய நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தபொழுதும்வெளித் தோன்றிய பிரதான தடை எதுவென்றால்சமூகப் பிற்போக்காகும். இது உள்ளேயிருந்துஸ்ராலினிசம் என்ற வடிவத்தில் தோன்றியது.

வரலாற்று ஆசிரியர் வடிம் ரோகோவின்பின்வருமாறு இதை எடுத்துக் கூறுகின்றார்:உலகப் புரட்சியின் ஒருமித்த பகுதியாகஇருந்த அக்டோபர் புரட்சி எவ்வளவோசக்திமிக்க வரலாற்று சம்பவமாக இருந்ததினால் அதற்கு எதிரான பிற்போக்கும் (ஸ்ராலினிசமும்)பகட்டான அளவுகளைப் பெற்றது.அது வரலாற்றில் என்றும் காணாத அளவிற்குபொய்களையும் ஒடுக்குதல்களையும்திரட்டிக் கொள்ள வேண்டியதாக இருந்தது. (1937: ஸ்ராலினின் பயங்கரவாத ஆண்டு, மெஹிரிங்புத்தகங்கள், 1988, பக்கம் 209)

பாசிசத்திலிருந்துமிகவும் வேறுபட்ட ஒரு சமூக அடித்தளத்தில்ஸ்ராலினிசம் தோன்றினாலும் கூட, அது ஒன்றைபாசிசத்துடன் பொதுவாக பங்கிட்டுக்கொள்ளுகின்றது: இறுதி ஆய்வில் அக்டோபர்புரட்சியும், சர்வதேச கம்யூனிச இயக்கமும்உலக முதலாளிகளின் ஆட்சிக்கு விடுத்த அபாயத்திலிருந்து அவர்களை இரண்டும் காப்பற்றின.நீண்டகாலப் பார்வையில் ஸ்ராலினிசம் பாசிசத்திலும்பார்க்க கூடிய அளவு இதில் வெற்றிகரமாகஇருந்தது. அது ஒரு தடவை ஸ்ராலினேவீம்புடன் கூறியது போல அனைத்து பாசிசஆட்சிகளும் ஒட்டு மொத்தமாகக் கொன்றகம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கஅதிக கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்துள்ளது.இதன் மூலம் ஸ்ராலினிசம் தொழிலாளர்இயக்கத்தின் சோசலிச மரபுகளுக்குஎதிராக நிலைத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சோசலிச மரபுகளை அது பொய்மைப்படுத்தியதாடு, அவற்றை அது தவறானவழிகளில் பயன்படுத்தி அபகீர்த்தி பெறச்செய்தது.

மார்க்சிசத்தின் முன்நோக்கிலிருந்து அப்படியானஒரு பின்னடைவு எதிர்பார்க்கப் படாததொன்றல்ல. லூயிஸ் பொனபாட்டின் பதினெட்டாவதுபுருமெயரில், 150 வருடங்களுக்கு முன்னரேமார்க்ஸ், ''பாட்டாளி வர்க்க புரட்சிகள்தம்மைத் தொடர்ச்சியாக விமரிசிக்கின்றன,தொடர்ச்சியாகத் தம்மை இடை நிறுத்திக்கொள்ளுகின்றன, ஏனென்றால் மீண்டும்ஒரு தடவை புதிதாக ஆரம்பிப்பதற்காகஅவை அவற்றின் முதல் முயற்சிகளின் அற்பமானதன்மையை அரை குறையான நடவடிக்கைகளை, பலவீனங்களை, கோரமான முற்றூடாகஏளனம் செய்கின்றன. அவை அவற்றின் எதிர்ப்பாளர்களை கீழே தள்ளி விழுத்துவது பின் கூறியவர்கள்மண்ணில் இருந்து புதிய பலத்தைப் பெற்றுமீண்டும் அவற்றின் முன் முன்னர் ஒரு பொழுதிலும்பார்க்க பெரிய ராட்சச வடிவில் தோன்றுவதற்காக'' இந்த முறையில் பார்க்கும் பொழுதுஇருபதாம் நூற்றாண்டானது உழைக்கும்மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிதமது தலைவிதியை தமது கைகளுள் எடுத்துக்கொள்ள எடுத்த வீரம் செறிந்த முதல்முயற்சி என்று எடுத்துக் கொள்ளப்படும்.இந்த முயற்சி தவறி விட்டது. ஆனால் அதுஅரசியல் அனுபவங்களின் பெரும் செல்வங்களைக் கொண்டுள்ளது. இவை பரந்த சமூகத்தட்டுக்களால் நனவாக்கப்பட்டு, ஆளுமைசெய்யப்பட்டு அவை புதியதொரு முயற்சிக்குஅடித்தளமாக அமைய வேண்டும்.

அதன்பின் மேரிங் கூறியது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டை நம்பிக்கையின் நூற்றாண்டாகவும்,இருபதாம் நூற்றாண்டை, அனுபவம்தந்த நூற்றாண்டாகவும், இருபத்தொன்றாவது நூற்றாண்டை, நிறைவேற்றும் நூற்றாண்டாகவும், வரலாறு காணும். எப்படிப் பார்த்தாலும்முதலாளித்துவமானது- இரு உலக யுத்தங்களையும், பாசிசத்தையும், பாசிசம் யூத மக்களின்மேல் தொடுத்த வெறும் களப்பலியையும்தந்ததோடு, இன்று பெருகியுள்ள வறுமையையும், அவல நிலையையும் தரும் நிலையில் அதுமனித இனத்திற்கு ஓர் எதிர்காலம் ஒன்றைத்தர அதனிடம் எதுவும் இல்லை.