World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lankan soldiers speak:
'Most of us do not feel that this war is our war'

 

இலங்கை இராணுவத்தினர் பேசுகின்றனர்:

 

'எங்களில் பெரும்பாலானவர்கள்&ஸீதீsஜீ;

இது எங்களுடைய யுத்தம் என உணர்வதில்லை'

 

By a correspondent
19 May 2000

 

Use this version to print

 

கடந்த மாதத்தில் இலங்கை பாதுகாப்புப்படை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் (LTTE) பாரிய தோல்விகளைக் கண்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ் சிறுபான்மையினருக்குதனிநாடு அமைப்பதற்காக நாட்டின்வடக்கு- கிழக்கு பகுதிகளில் போராடிவருகிறது.வடக்கின் யாழ்க்குடாநாட்டுக்கானஒரே பிரதான பாதையான ஆனையிறவுமுகாமைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில்தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர்.நான்கு வாரமாகத் தொடர்ந்த யுத்தத்தின்பின்னர் 17 வருட கால யுத்தத்தில் முதற்தடவையாக ஏப்பிரல் 22ம் திகதி அடிப்படை முக்கியத்துவம்வாய்ந்த தளம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சிகண்டது. இந்த மோதுதலின் போது கிடைத்த இராணுவத் தகவல்களின்படி சுமார்1,000 படையாட்கள் கொல்லப்பட்டும்பொருந்தொகையானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

 

ஆயுதம் தாங்கிய படையினரால்மிகவும் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தத்தளம் வீழ்ச்சியடைந்தது எப்படி? ஆனையிறவில்தங்கியிருந்த 17,500 இராணுவத்தினரைவிட கெரில்லாத் தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின்எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும்.கொழும்பு பிரதேசத்தில் மேற்கொண்டஒரு ஆய்வின்போது உலக சோசலிசவலைத் தளத்துக்கு கிடைத்த தகவல்கள்இங்கே வெளியாகின்றன. இராணுவத்தினர்தங்களின் கருத்துக்களை தாங்களாகவேவெளிப்படுத்தினர்: இந்த இராணுவ நெருக்கடியானது யுத்தத்துக்கு எதிராக வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பு, இராணுவத்தினருக்கிடையிலானஅதைரியமான நிலைமையுடன் இணைந்துகொண்டுள்ளது.

 

ஏப்பிரல் 22ல் இருந்துவிடுதலைப் புலிகள் யாழ்க்குடாநாட்டில்மேலும் முன்னேறிவருகின்றனர். தற்போதுமோதுதல்கள் குடாநாட்டின் வட பகுதியில்யாழ்ப்பாண நகரை -500,000 மக்களைக்கொண்ட நகரம்- அண்டிய பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. கொழும்பு அரசாங்கம்இராணுவத்தை விட்டு ஓட்டம் பிடித்தவர்களுக்குதற்போதைக்கு மண்ணிப்பு வழங்கியுள்ளது.இது பெரும் இராணுவப் பற்றாக்குறையைதீர்ப்பதற்காகும். ஆனால் யாரும் இணைவதற்கு விரும்பவில்லை. சில உத்தியோக பூர்வ தகவல்கள்இராணுவத்தை விட்டு ஓட்டம் பிடித்தவர்களின்எண்ணிக்கை 10,000 என அறிவித்துள்ளது.

 

இங்கு வெளியாகும் தகவல்கள் காயமடைந்துகொழும்பு மருத்துவமனைகளில் தங்கியுள்ளபடையாட்களிடம் எடுத்த பேட்டிகளின்தொகுப்பாகும். தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்தில் காயமடைந்த சுமார்200 இராணுவத்தினர் நாட்டின் பிரதான மருத்துவமனையான தேசிய மருத்துவமனையில் உள்ளனர். யுத்தம் இடம்பெற்றுவரும் வட மாகாணம் உட்பட்ட நாட்டின்பல பாகங்களிலும் உள்ள பிரதான மருத்துவமனைகள் ஆயிரக்கணக்கான காயமடைந்தஇராணுவத்தினரால் நிரப்பப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிய படையாட்கள்தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன் ஒரு மாதத்திற்கு முன்னர்இடம் பெற்ற ஆனையிறவு மோதல்களில்காயமடைந்த படையினரும் இதில் அடங்குவர்.

 

19 வயது படைவீரர்: கொழும்பிலிருந்து150 கிலோ மீட்டர் அப்பால் உள்ள டம்புள்ளயைச்சேர்ந்த இவர், ஆட்டிலரித் தாக்குதல்ஒன்றின் போது தனது இடது கையின் ஒருபாகத்தை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏனைய8 படையாட்களுடன் ஒரு பாதுகாப்புமுன் அரணில் இருந்துள்ளார். அவர்களில்ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பிரதேசத்தின்அனைத்து பிரிவுகளும் விடுதலைப் புலிகளின்மோட்டார் மற்றும் ஆட்டிலரித் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தது. முன்னர் ஒரு பிரிவில்600 தொடக்கம் 700 பேர் வரை இருந்தனர்,ஆனால் தற்போது இந்தத் தொகை100 தொடக்கம் 200 பேர் வரை குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெளிவுபடுத்தினார்.

 

இராணுவத்தினர் தாக்குதலுக்கு ஏற்றவகையில்தயார் செய்யப்படவில்லை என அவர்குற்றம் சாட்டினார். ஆனால் அவர்உடனடியாக குறிப்பிட்டதாவது: "நாங்கள்இந்த யுத்தத்தில் இணைந்து கொண்டதுநாட்டை பாதுகாப்பதற்காக மட்டும்அல்ல, வாழ்வதற்கும் ஒரு வழி தேடிக்கொள்வதற்காகும். எமது படையினரில் பெரும்பாலானவர்கள் தமது உயிரைப் பாதுகாப்பதற்குமுயற்சிப்பார்களே ஒழிய கடுமையானதாக்குதலில் ஈடுபடமாட்டார்கள்.சிலர் மொத்தமாக மோதலையேதவிர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.அவர்கள் பின்வாங்குவார்களே ஒழியமோதுதலில் இணைந்து கொள்ளமாட்டார்கள்.சிலர் மோதல் ஆரம்பித்த இடத்திலேயேசாவுக்கு முகம் கொடுப்பார்கள்.புலிப் போராளிகள் எங்களைக் கடுமையாகத்தாக்குவார்கள்,"

 

அவர் மேலும்குறிப்பிடுகையில்: தான் 17 வயதிலேயே ஒருமேலதிகாரியின் உதவியுடன் இராணுவத்தில்சேர்ந்ததாகவும் குடும்ப நிலையின் காரணமாக அவர் தனது கல்வியை இடையிலேயே நிறுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

25 வயது படைவீரர்: இவர் நாட்டின்மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவராகும்."நான் இராணுவத்தில் சேர்ந்த போதுஎனக்கு யுத்தத்தைப் பற்றி எதுவுமேதெரியாது. என்னால் வேறு ஒரு தொழிலைதேடிக்கொள்ள முடியாததனாலும்,என் இளமை உணர்வுகள் காரணமாகவும்நான் இந்தத் தொழிலை ஏற்றுக் கொள்ளத்தள்ளப்பட்டேன். 1999ல் ஒரு காயத்திலிருந்துவிரைவாக குணமடைந்த நான் வவுனியாவிலிருந்து(வடமாகணத்தில் தென்பகுதியில் உள்ள ஒருநகரம்) மீண்டும் யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டேன்.

 

"வவுனியாவிலிருந்து நாங்கள் ஆனையிறவுக்கு அனுப்பப்பட்டோம். இந்த முறையும்விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மீண்டும்எனக்கு அதே இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.(அவர் தனது முழங்காலின் மேல் பகுதியைஎனக்குக் காட்டினார்) எங்களால்உதறித்தள்ளிவிட்டு (மோதுதலை) வீட்டுக்குப்போக முடியாது. நாங்கள் யுத்தக்களத்துக்கு செல்லத் தள்ளப்படுகின்றோம்.நாங்கள் சாகும்வரை போராட வேண்டும்.எனது குடும்பத்தினர் என்னை போகவேண்டாம்என்கின்றனர், ஆனால் நாங்கள் உதவியின்றிதவிக்கின்றோம்".

 

பொறியிற்துறையைச்சேர்ந்த ஒரு சார்ஜன்டும் ஆனையிறவில் காயமடைந்துள்ளார். ஒருஆட்டிலரித் தாக்குதலின்போது இவர்தனது முகம் உட்பட உடலின் பல பாகங்களில்கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். எனது சுவாசக் குழாயில் காயமேற்பட்டுள்ளதனால் ஒரு பிரத்தியேகக் குழாய் ஒன்றுஎனது தொண்டைக்குள் பொருத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் நான் அதிக வலியிலும்பேசமுடியாமலும் இருந்தேன். அந்தக்குழாய் ஏழு நாட்களின் பின்னரே அகற்றப்பட்டது. நான் குணமடைந்த பின்னர் நான் விரும்பியோவிரும்பாமலோ யுத்தத்துக்கு செல்லவேண்டும். அதுதான் எங்கள் தலை விதி."

 

காயமடைந்த படை வீரர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக அவர் இராணுவ அதிகாரிகள்மீது வெறுப்படைந்துள்ளார். "காயமடைந்தபடை வீரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.வைத்திய பிரிவு எங்கள் நிலைமை பெரிதும்ஆபத்தானது அல்ல எனத் தீர்மாணிக்குமானல்நாங்கள் மீண்டும் யுத்தத்துக்கு செல்லவேண்டும். இந்தத் தீர்மாணங்கள் தொடர்பாக எமக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.நான் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை.நான் யுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாகஎமது குடும்பத்தினருக்கு எப்போதும்உடன்பாடு கிடையாது. நான் 18 வயதில்இராணுவத்தில் சேர்ந்தேன். இன்னும்நான்கு வருடங்களுக்குள் நான் ஓய்வுபெறவேண்டும். 12 வருட சேவையின் பின்னர் என்னால்ஓய்வு பெற முடியாது".

 

ஆனையிறவில்ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பாகவிபரிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது: "நாங்கள்தோற்கடிக்கப்படுவோம் என்பதுஎங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்குத்தேவையான முறையில் கைவிட்டுவிட்டு வரநாங்கள் அனுமதிக்கப்படவில்லை. கைவிடும்முதல் எங்களது முகாம்களையும் தளபாடங்களையும் சேதப்படுத்திவிடுமாறு மேலதிகாரிகளால்பணிக்கப்பட்டோம். விடுதலைப் புலிகள்தாக்கும் போது எமது அங்கத்தவர்கள்பல திசைகளிலும் (புலிகளின் பக்கமும்) சிதறிப்போயிருந்தார்கள். பெரும்பாலானவர்கள்புலிகளின் கைகளில் சிக்கிக் கொண்டார்கள்.சிலர் தங்கள் வழியை இழந்தார்கள்."

 

ஆனையிறவில் இடம்பெற்ற மோட்டார்தாக்குதலில் காயமடைந்த 23 வயதுகமான்டர் ஒருவர் கமான்டோபிரிவில் இருந்த பெரும்பாலானவர்கள்உயிரிழந்தும் காயமடைந்தும் இருந்ததாககுறிப்பிட்டார். "ஆயுதங்களை அழிக்குமாறுஆனை பிறப்பிக்கப்பட்டது. எவ்வாறெனினும்எங்களால் அனைத்தையும் தீர்க்க முடியாமல்போனது. கைவிடப்பட்ட ஆயுதங்கள்நிச்சயமாக புலிகளின் கைக்கே சென்றிருக்கும்.

 

"முன்னர் நான் ஒரு நகைக் கடையில் தொழில்செய்தேன். நாங்கள் தேர்வு செய்துகொண்டதை எங்களால் இராஜினாமா செய்யமுடியாது. நான் இராணுவத்தில் சேர்ந்ததுமிகவும் மடைத்தனமானதாகும் நான்முன்பு செய்த தொழிலையே செய்திருந்தால்இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுத்திருக்கமாட்டேன்."

 

ஆனையிறவு மோதுதல்கள்சில உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின்காட்டிக் கொடுப்புக்களின் பெறுபேறாகுமோ என சில இராணுவ வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.உயர்மட்ட அதிகாரிகள் இராணுவத் திட்டங்களைஎதிரிகளுக்கு விற்பனை செய்துவிட்டதாகவதந்திகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.விடுதலைப் புலிகள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே இராணுவத்தின் திட்டத்தை முன்கூட்டியேதகர்த்து ஒரு தாக்குதலைத் தொடுத்தனர்என இந்த படையாட்கள் குறிப்பிட்டார்கள்.இந்த சந்தேகம் சரியானதோ அல்லதுபிழையானதோ. இந்த அவநம்பிக்கையின்பிரதிபலிப்புக்கள் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்மத்தியில் அதிருப்தியை வளர்ச்சியடையச்செய்துள்ளது.

 

ஆனையிறவு நெருக்கடியின்பின்னர் மிகக் குறுகிய காலத்தில் விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ச்சியடைந்த பளைமுகாமில் இருந்த ஒரு கமான்டோ, இராணுவத்திலும் யுத்தக் களத்திலும் இருந்தநிலைமைகளை கிரமமாக விபரித்தார்.

 

"ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதானது குறிப்பிடத் தக்க ஒரு தோல்வியாகும்.நாங்கள் ஒரு தோல்விக்கு மட்டும் அல்லஒரு தொடர்ச்சியான தோல்விகளுக்குமுகம் கொடுத்து வருகின்றோம். கடந்தமாதத்துக்குள் இடம்பெற்ற மோதுதல்களில்மாத்திரம் 2,000 த்துக்கும் அதிகமான படையாட்களை நாம் இழந்துள்ளோம். தற்போதையைசூழ்நிலையில் நாங்கள் கடலை நோக்கித்தள்ளப்பட்டுக் கொண்டுள்ளோம். யுத்தத்தைப் பற்றி பத்திரிகைகள் உற்சாகமூட்டுகின்றசித்திரங்களை தீட்டும்போது எங்களுக்குவெறுப்பேற்படுகிறது.

 

நாங்கள்எண்ணற்ற சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.சில வேளைகளில் எங்களுக்கு பல நாட்கள்பட்டினி கிடக்க வேண்டியிருந்தது. யுத்தகளத்துக்கு உணவுப் பொருட்களை போக்குவரத்து செய்ய வழியில்லாததன் காரணமாகமுகாம்களில் உணவுப் பற்றாகுறை நிலவியது.இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர்முகாமுக்குத் திரும்பிய பின்னரே எங்களுக்குமுகம் கழுவ சந்தர்ப்பம் கிடைக்கும்.

 

"ஆனையிறவு மோதல் மிகவும் சக்திவாய்ந்தஒன்றாகும். சில விடயங்களை நான் மேல்நாட்டுதிரைப்படங்களில் இடம்பெறும் துணீகரச்செயல்களைப் போல் கண்டேன். விடுதலைப்புலிகள் கடுமையாகத் தாக்கினார்கள்.நாங்கள் காயமடைந்த படையாட்களைபின்னால் தள்ள வேண்டியிருந்தது. தங்களைதூரத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கெஞ்சும்படையினரின் அவலக் குரல்களை எத்தனைதடவை நான் கேட்டிருப்பேன்!

 

ஒரு தடவை படையினர், தங்களால்இந்த யுத்தத்தை வெற்றி கொள்ள முடியும்என நினைத்தனர். கடந்த சில மாதங்களுக்குள்நிலைமை முழுமையாக மாற்றம் அடைந்துவிட்டது. ஏதாவது ஒரு வகையில் யுத்தத்தை நிறுத்தவேண்டிய அவசியம் எல்லோருக்கும்உள்ளது. எங்களில் பெரும்பாலானவர்களுக்குஇந்த யுத்தத்தில் வெற்றிபெற முடியாதுஎன்ற எண்ணம் உள்ளது. யுத்தத்தில் காயமடைந்த படைவீரர்களை அவர்களின் தலைவிதிப்படிவிட்டுவிட்டு வரும்போது தனிமைப்படுத்தப்பட்டஒரு மனோபாவம் பரவுகிறது. கீழ் மட்டத்தில்உள்ளவர்கள் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்குஅடிபணியாத நிலை ஒன்றும் வளர்ச்சியடைந்துவருகிறது. எங்களுக்கிடையிலான சினேகிதத்தன்மை அழிந்துவருகிறது.

 

"அவர்கள்தைரியமாய் இருப்பது ஏன், எங்களிடம்அவை இல்லாதது ஏன்? யாருக்காவதுஅது ஏன் என விளக்க முடியுமா? அவர்மேலும் தொடர்ந்தார்: "பெரும்பாலானபடையாட்கள் வாழ்வதற்கு வழி தேடிக்கொள்வதற்காகவே இராணுவத்தில் சேர்ந்தனர்,அதாவது ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள.நாங்கள் ஒரு சக்திவாய்ந்த மோதுதலுக்குமுகம் கொடுக்கும் போது எங்கள்குடும்பம்தான் நினைவுக்கு வரும். பெரும்பாலானவர்கள் இந்த யுத்தத்தை எங்களுடையயுத்தமாக உணர்வதில்லை. ஒரு யுத்தத்தில்அங்கவீனமாக்கப்பட்டு, கொல்லப்படும்போது அது எந்த வகையிலும் எங்களுடையவாழ்க்கையோடு தொடர்புடையதாகநாங்கள் உணர்வதில்லை.

 

"எங்களுக்குஉற்சாகம் அளிப்பதற்காகவும் யுத்தத்துக்குமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும்இராணுவத்தின் பொறியியற் பிரிவு 100,000 பதாகைகளைத் தொங்கவிடப் போவதாக நான் தொலைக்காட்சி மூலம் அறிந்தேன். ஆனால் தற்போதுஇராணுவத்தினரின் உளவியல் பிரச்சினையைஇந்த ஒரு மில்லியன் பதாகைகளால் மாற்றியமைக்க முடியும் என நான் நினைக்கவில்லை."

 

வேலை நிறுத்தங்களையும், கண்டனங்களையும்தடை செய்துள்ள அரசாங்கத்தின் புதியஅவசர காலச் சட்டம் பற்றிக் கேட்டபோதுஅவர் சத்தமிட்டார்: "தொழிலாளர்களுக்குஎதிராக அவற்றைப் பாவிப்பதற்கு (சட்டங்களை) பொலிசும் இராணுவமும் எங்கே உள்ளது?15,000 படையினரைத் திரட்டுவதற்கு அரசாங்கம்அழைப்பு விடுத்த போதிலும் 1,000 க்கும்சற்றுக் கூடியவர்களே இணைந்து கொண்டுள்ளார்கள்."

 

தமிழ் மக்களின் நிலை குறித்து கேட்டபோது அவர் குறிப்பிட்டதாவது: "அது ஒரு அருவெறுக்கத்தக்க கதை. அவர்கள் இரண்டுப் பக்கத்தாக்குதல்களிலும் நசுக்கப்படுகின்றார்கள்.அவர்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு இட்டத்துக்கிடம் புகலிடம் தேடிஓடவேண்டியதாகவுள்ளது. அவர்கள்சிறுபிள்ளைகளைத் தூக்கிச் செல்வதை நாம்காணும்போது- ஒரு சில பிள்ளைகள் எனதுகடைசிப் பிள்ளையைப் போல- நாங்கள்கவலையடைவோம். படையினருக்குக்கூட இன்னும் போதுமானளவு உணவும்மருந்தும் கிடைக்கவில்லை. அவர்களின் நிலைமைஎன்னவாக இருக்கும் என்பதை உங்களால்விளங்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில்எந்த வகையிலான படிப்பினையை பிள்ளைகளால்பெற்றுக் கொள்ள முடியும்?

 

இறுதியாகஎன்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது அவர் இந்த யுத்தம் நோர்வேயின்தலையீட்டிலாவது நிறுத்தப்பட வேண்டும்என்றார் -(இலங்கை அரசாங்கத்துக்கும்விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வேதூதுவனாக தொழிற்பட்டுவருகிறது). அவர்மேலும் சேர்த்துக் கொண்டதாவது:நாங்கள் மிகவும் உதவியற்றவர்களாகவும்அதேபோல் சோர்வும் அடைந்துள்ளதாகஉணர்கிறோம்" என்றார்.