World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The Terrorist

சினிமாவிமர்சனம்: பயங்கரவாதி

By David Walsh
9 October 1998

Use this version to print

1998 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ரொறொன்டோவில் நடைபெற்ற 23வது சர்வதேசத் திரைப்படவிழாவில் இந்தியாவில் இருந்து பங்குகொண்ட The Terrorist (பயங்கரவாதி) படத்தின்இயக்குனரான சத்தோஷ்சிவனுடனும்அதில் மல்லி பாத்திரத்தில் நடித்த நடிகைஆயிஷா தர்க்காருடனும் உலக சோசலிசவலைத்தளத்தின் ஆசிரியர் குழு(கலை) உறுப்பினரான டேவிட் வோல்ஷ்நடாத்திய பேட்டி இங்கு பிரசுரமாகின்றது.இத்திரைப்படம் பற்றிய விமர்சனமும் இத்துடன்வெளியாகிறது.

சந்தோஷ்சிவனின் The Terrorist (பயங்கரவாதி) என்ற தமிழ்ப்படம் ஒரு நேர்மையானதும் தெளிவான பார்வையும் கொண்டஒரு இந்தியத் திரைப்படமாகும். இது ஒருபெயர் குறிப்பிடப்படாத தேசியவாதஇயக்கத்துக்காகத் தொழிற்படும் ஒருதற்கொலைக் குண்டுதாரியைப் பற்றியது.மல்லி என்ற இளம் பெண் ஒரு கொடியஅடக்குமுறை மிக்க வாழ்க்கைப் பின்னணியைக்கொண்டவள். அவளது சகோதரன்இராணுவ ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டவன். அவளுக்கென்று எதுவுமே கிடையாது.கல்வி, எதிர்காலம் எதுவுமே கிடையாது.தனது சகோதரன் எந்த நோக்கத்துக்காகதனது உயிரைத் தியாகம் செய்தானோஅந்த வழியையே மல்லியும் கடைப்பிடிக்கிறாள்."எமது இயக்கத்துக்கு பெரும் தடை"ஆக இருந்து கொண்டுள்ள ஒரு முக்கியஅரசியல் புள்ளியை படுகொலை செய்யும்அவளது ஆபத்து மிக்க பணியை 'தலைவர்'விளக்குகின்றார். அவள் வெடிகுண்டைக்கொண்ட இடுப்புப் பட்டியை அணிந்துகொண்டு ஒரு முக்கிய பிரமுகர் கலந்துகொள்ளும் ஒரு பொது வைபவத்தில்அதை வெடிக்க வைக்க வேண்டும்.

மல்லி காட்டு முகாமில் இருந்து தற்கொலைக்குண்டு வெடிப்பு இடம்பெற வேண்டியநகருக்குச் செல்கின்றாள். தன்னை ஒருவிவசாயக் கல்வி கற்கும் மாணவியாகக்காட்டிக் கொண்டு அவள் ஒரு விவசாயியின்வீட்டில் இருப்பிடம் தேடிக் கொள்கிறாள்.விவசாயியின் மனைவி தனது மகன் இறந்துபோனதில் இருந்து மயக்க நிலையில் இருந்துகொண்டுள்ளாள். விவசாயியும் அவரதுதொழிலாளிகளில் ஒருவரும் மல்லி மேல்இரக்கம் காட்டுகிறார்கள். அவர்கள்சற்று விசித்திரமானவர்களும் பெரிதும் சுறுசுறுப்பும் கொண்டவர்கள். திட்டமிட்ட படுகொலைக்குஇன்னும் 4 நாட்கள் இருந்து கொண்டுள்ளது.அவள் தான் கர்ப்பம் தரித்துவிட்டதைஉணர்கிறாள். அவள் மீண்டும் சிந்திக்கத் தள்ளப்படுகின்றாள். "உனது தியாகம் எதிர்காலச் சந்ததிகளுக்கு ஊக்கமளிக்கும்" என அவளின் மேலதிகாரிகள்அவளுக்குக் கூறுகின்றனர். ஆனால் அவளோ"நான் சரியானதைச் செய்கின்றேனா?"என ஆச்சரியப்படுகின்றாள். இறுதியில் அவள்பொத்தானை (Button) அளுத்த இலாயக்கற்றவளாகிப் போய்விடுகின்றாள்.

சந்தோஷ் சிவன் புகழ்பெற்ற ஒரு சினிமா படப்பிடிப்பாளர்.அவர் மணிரத்னத்தின் படங்களில் படப்பிடிப்பாளராக விளங்கியவர். என்னதான் வரையறைகள்இருந்த போதிலும் நேர்மையான ஒன்றாககோடிட்டுக் காட்டப்படும் ஒரு படத்தைஅவர் தயாரித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) வகையறாவைச் சேர்ந்தஇயக்கங்கள் பற்றிய அதனது விமர்சனங்கள்தாராண்மை மனிதாபிமான மட்டத்தில்இருந்து கொண்டதாக ஒருவர் குறிப்பிடலாம்.ஆனால் அது விடயத்தின் மையத்தில் இருந்துநழுவுவதாக விளங்கும். படத்தில்,எந்தவொரு அரசியல் அல்லதுசமூகப் புரிந்துணர்வும் இல்லாமல் "தனது நாட்டுக்காக" சிந்திக்காமல் மரணிக்க முன்வரும் ஒருஇளம் பெண்ணான மல்லியின்பாத்திரம் (ஆயிஷா தர்க்கர்மிக அழகாக செய்திருக்கிறாா்)முக்கியமாக செல்லுபடியானஒன்றாகும்.

எந்த ஒரு சுய தியாக நடவடிக்கையும்தவறான வழியில் நடாத்தப்பட்டது; அல்லது ஒருவர் சுயநலத்துடன் வாழவேண்டும் என்ற முடிவுக்குஎந்தவொரு பார்வையாளரும்வருவது வேறொரு விடயமாக இருக்கும்.எவ்வாறெனினும் படத்தின் உந்து சக்தி அதுஅல்ல. அல்லது சந்தோஷ்சிவன் இராணுவத்தையோ அல்லது அதிகாரிகளையோ ஒரு சாதகமானவெளிச்சத்தில் நிறுத்தவில்லை. அவர் ஒருபுறநிலை ரீதியான ஒரு சிந்தனாசக்தி மிக்கபணியைச் செய்துள்ளார்.

TheTerrorist (பயங்கரவாதி)- அத்தகையஇயக்கங்களின் காட்டுமிராண்டித்தனத்தையும்காடைத் தனங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையிலும், தாம்பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்ளும்மக்களுக்கு அவை எந்தவிதமான முன்நோக்கையும் வழங்குவதில்லை என்பதை தெளிவுபடுத்தும்வரையிலும் அது ஒரு நிஜமான பெறுமதிமிக்கதாக விளங்குகின்றது.

 

(The Terrorist) பயங்கரவாதி திரைப்படத்தின்இயக்குனரான சந்தோஷ்சிவன்மற்றும் அதன் முன்னணி நடிகைஆயிஷாவுடான ஒரு பேட்டி.

டேவிட் வோல்ஷ்: இந்தப் படத்துக்கானஉடனடித் தொடக்கப் புள்ளி என்ன?

சந்தோஷ்சிவன்: நாம் தற்கொலைக்குண்டுவீச்சாளன் போன்ற ஒருவரைப்பற்றிப் பேசும்போது எம் நினைவுக்குவருவது ராஜீவ் காந்தியின் படுகொலையே.இந்தப் படத்தை எடுப்பதற்கு காரணமானநிஜ தொடக்கப்புள்ளி அதுவேதான். தான்வைத்துள்ள வெடிகுண்டு நாடாவை ஒத்திஇழுக்க வைத்து வெடிக்கச் செய்பவர்எத்தகைய ஒரு பேர்வழி என நான் ஆச்சரியப்பட்டதுண்டு.

இதைப் போன்ற ஒன்றைஒருவர் எப்படிச் செய்ய முடியும் எனநான் ஆச்சரியப்படுவது வழக்கமாகிவந்தது. இதை அவளைச் செய்யவிடாதுதடுத்திருக்கக் கூடியது என்ன? ஒரு மனிதம்நிறைந்த கண்ணோட்டத்தில் இருந்துபார்க்கும் போது பொதுவில் ஒரு பெண்எதிர்கொள்ளும் இயற்கையின் விதிகளுக்குஅவள் அம்பலமானால் என்ன நடக்கும்?

ஆதலால் நான் இதைப் போன்ற படத்தைத்தயாரிக்க வேண்டும் என நினைத்தேன்.அதே சமயம் ஒருவர் அத்தகைய ஒருபடத்தை எடுக்கையில் அது வன்முறையைமகத்துவமானதாக்கிக் காட்டுவதுடன்முற்றுப் பெறுவதை நான் அறிவேன். வன்முறையைக் கொண்ட படங்களில் பலவும் பெருமளவுக்குவன்முறையைக் காட்டுவதோடு "இறுதியில்இல்லை அது சரி அல்ல" எனக் கூறுவதுடன்முற்றுப் பெறுகின்றன. மேலும், நான்மிகவும் ஒரு வன்முறையான விடயத்தைவைத்துப் படம் எடுத்தேன். ஆனால்நான் ரசிகர்களை ஒரு நீண்ட போக்கினைதரிசிக்க வைக்கவும் இறுதியில் அவர்கள்"வேண்டாம் நான் இந்தக் குண்டுவெடிப்பைபார்க்க விரும்பவில்லை" எனச் சொல்லவைக்கவும் விரும்பினேன்.

நான் இதில்பெரும்பாலானவற்றை தவிர்த்துவிட்டுஒரு நோக்கத்துக்காக போராடும்பெண்ணின் கதையை எளிமையாகச் சொல்லமுயன்றுள்ளேன். இப்படத்தின் கதாநாயகியைசாதாரணமானவளாகவும், ஒரு நோக்கத்துக்காகப் போராடுபவளாகவும் பிறரால்மனம்மாற்றப்பட்டு -மூளைச்சலவைசெய்யப்பட்டு- தனது நாட்டின்எதிர்காலத்தின் பொருட்டு தனது வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்பவளாகவும்சித்தரிக்க முயன்றேன். அதுதான் என்னைஇப்படத்தை எடுக்கத் தூண்டியது.

டேவிட் வோல்ஷ்: "தலைவரின்" வீரவழிபாடு பற்றிய பிரச்சினை எப்படி?

சந்தோஷ்சிவன்: அது பெருமளவுக்குஇடம்பெற்றுள்ளது. இங்கு ஒரு கூட்டம்இளைஞர்கள் உள்ளனர். இளம் பருவத்தினர்.அவர்கள் 22 வயதை அடையும் வரை கல்வி,பாலுறவு, புகைத்தல் ஆகியன எல்லாம்மறுக்கப்படுகின்றது. அவை எல்லாமேதீங்கானதாகக் கொள்ளப்படுகின்றது.எல்லோரும் ஒரு மாவீரர் ஆகுவதேசிறந்தது என நம்பச் செய்யப்படுகின்றனர்.அத்தோடு அவர்களுக்கு மகத்தானமரணச் சடங்குகளும் கிடைக்கின்றது. அந்தவகையிலான ஒரு சூழலில் ஒரு ஆளுக்குக்கிடைக்கக் கூடிய இறுதிக் கெளரவம் அதுவேஎன்ற விதத்தில் அமைகின்றது.

இந்தப்படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது.உண்மையில் எதுவும் இல்லை. இதில் நடித்தவர்கள்எல்லோரும் தொழில்சார் நிபுணர்கள்அல்ல. நான் வர்த்தகப் படங்களைபடம் எடுப்பதன் மூலம் என் வாழ்க்கையைஓட்டினாலும் மிகவும் யதார்த்தமாகவேபடங்களை எடுக்க விரும்புகிறேன். ஆனால்நான் ஒரு படம் எடுக்கும் போது அவற்றைமுடிந்த மட்டும் யதார்த்தமாகவும்ரசனையுள்ளதாயும் எடுக்க முயற்சிக்கிறேன்.ஆதலால் நான் அவற்றை சண்டைகள்,பாடல்கள் போன்ற பொழுது போக்குஅம்சங்கள் இல்லாமலே தயாரிக்கிறேன்.அத்தகைய படங்களை குறைந்த வரவுசெலவுத் திட்டத்தில் தயாரிக்கும் போதும்ஏதோ ஒன்றைச் சொல்லும் போதும்எனக்கு அந்தச் சுதந்திரம் கிடைக்கின்றது.

டேவிட் வோல்ஷ்: இது மிகவும் அழகாகஇருக்கின்றது.

சந்தோஷ் சிவன்: நான் ஒரு தொழில்சார் சினிமாப் படப்பிடிப்பாளன். இது 17 நாட்களில் படமாக்கப்பட்டது.இது சென்னையில் தயாரிக்கப்பட்டது.சிறிய அளவில் கேரளாவிலும் செய்யப்பட்டது.

நான் சினிமாக் கலை பயின்றவன். நான்ஒரு சினிமாப் படப்பிடிப்பாளனாகப் பிரசித்திபெற்றவன். நான் இதற்கு முன்னர் குழந்தைகளுக்காக ஒரு படம் தயாரித்தேன். இப்போதுநான் குழந்தைகளுக்காக மற்றொருபடத்தை தயாரிக்கிறேன். நான் இந்தப்படத்தை தயாரிக்க விரும்பினேன். ஆதலால்நான் ஒரு காத்திரமான படத்தை எடுப்பேன்எனக் கூறினேன். இன்னும் சில படங்களைநான் எனது நிபந்தனைகளுக்கு அமையஎடுக்க விரும்புகிறேன். நான் அவற்றைநிச்சயம் எடுப்பேன்.

டேவிட்வோல்ஷ்: அவள் சேர்ந்து வசிக்கும்விவசாய மக்கள் மிகவும் அற்புதமானவர்கள்.

சந்தோஷ் சிவன்: இந்த மக்கள்எல்லாம் கூடவோ அல்லது குறையவோநிஜ மக்கள். நான் எனது பாத்திரங்களைஎல்லாம் மிகவும் யதார்த்தமாக இருத்தவிரும்பினேன். ஏனெனில் எனக்கு இது போன்றமக்களை தெரியும். ஆதலால் நான் அவர்களுக்கு அதைப் பற்றி அவ்வாறு விபரித்தேன். நான்இதனை முடிந்த மட்டும் யதார்த்தமாக்கமுயன்றேன் ஆதலால் அவை நேர்மையாகஅமைந்துள்ளன. சும்மாவேனும் சிரிப்புக்காகவிடயங்களை முன்வைக்கவில்லை....

வனாந்திரத்தின் மத்தியில் அந்தச்சிறுவன் அவளுக்கு ஒரு சேவலைகொடுக்கும்போது சொல்கிறான்,"கொக்கோ கோலா" என. இது மிகயதார்ததமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் நகைச்சுவையான விடயம்என்னவெனில் இவைகளுக்கும்மத்தியில் அங்கே ஒரு சேவல்நின்று கொண்டிருந்தது என்பதுதான்.

டேவிட் வோல்ஷ்: இன்றைய நிலைமைக்கான பதிலீடு என்ன?

சத்தோஷ்சிவன்: எனவே தான் நாம்ஒரு தனியாளின் மீது கவனத்தைச் செலுத்தினோம்.ஏனெனில் நீங்கள் முழு நிலைமையையும் சரிசெய்யப் போனால்... நல்லது. முழுநிலைமையைப் பற்றி பேசுவதைக் காட்டிலும்தனியாளைப் பற்றி பேசுவது இலகுவானது.காட்சிகள் அவள் அனுபவிக்கும் நிலைமைகளைஎடுத்துக் காட்டுகின்றது.

டேவிட்வோல்ஷ்: நிலைமைகள் மக்களுக்குப்பெரிதும் சங்கடமானவை. அவர்கள்நிலைமைகளை மாற்றுவதற்கான ஒருவழியைத் தேடுகின்றார்கள்.

சந்தோஷ்சிவன்: ஒரு படத் தயாரிப்பாளன் எதையும்மாற்றிவிட முடியாது. நாம் வெறுமனேசிலவற்றைப் பற்றி கவனத்தை ஈர்க்கச்செய்யலாம்.

டேவிட் வோல்ஷ்: இந்திய நிலைமை பற்றிய உங்கள்பார்வை என்ன?

சந்தோஷ்சிவன்: இது, ஒருவர் இலைகளை கூட்டிஒன்றாக அள்ளும்போது காற்றுவந்து அவைகளை அடித்துச்செல்வதுபோன்றதாகும். மீண்டும் அவர்அவைகளை கூட்டி அள்ளுகிறார்காற்றுவருகிறது, அவைகளை அடித்துச்சென்றுவிடுகிறது. இது ஒரு மறையாதவடு போன்றது. யுத்தம் நடக்கும்என நான் நினைக்கவில்லை.அணுவாயுதங்களை கொண்டிருப்பதுஅவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.அதற்கான சாத்தியம் தவிர்க்கப்பட்டுவிட்டது. அங்கேயும் இங்கேயும் நடக்கும் அணுக்குண்டு வெடிப்புகள்ஒரு உயிராபத்தான பரிசோதனையாக வந்துள்ளது. ஆனால் மறைமுகமானவழிமுறைகளும் அங்கு இருக்கின்றன.

டேவிட் வோல்ஷ்: படத்துறையின்தற்போதைய நிலைமை என்ன?

சந்தோஷ் சிவன்: அது மிகவும்கெடுதியான முறையில் சென்றுகொண்டிருக்கிறது.

டேவிட்வோல்ஷ்: நிதிஅல்லது கலைத்துவரீதியிலா, அல்லது இரண்டுமா?

சந்தோஷ் சிவன்: கலைத்துவரீதியல் எப்போதுமே அது சிறந்ததாகஇருக்கவி்ல்லை. (சிரிக்கிறார்)நிதியடிப்படையிலும் கூட. இதுமட்டும் பிரதான காரணமல்ல,மக்கள் தொலைக்காட்சியில்படம் பார்ப்பதால் படங்களின்எண்ணிக்கை கூட குறைந்து விட்டது.இன்னோரு காரணம் பாதாள உலகமாபிய குழுக்கள் போன்றவைகளின் கெடுபிடியாகும். அத்துடன்அவர்கள் பணத்தை இழந்துவிட்டிருப்தால் அவர்கள் தற்போது தமது பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் படங்களை தயாரிப்பவர்களிடமே கவனம் செலுத்துகிறார்கள். அங்கு சில கொலைகளும் நடந்திருக்கின்றன. எம்மிடம் பணம்இல்லை ஆகையால் படம் தயாரிக்கவில்லை என அவர்கள் சொல்வதைநாம் கேட்கலாம்். இது தான்இன்றைய நிலைமையாகும்.

டேவிட் வோல்ஷ்: நீங்கள் விரும்பும் பட இயக்குனர் யாரும் இந்தியாவில் உண்டா?

சந்தோஷ்சிவன்: நிறையப்பேர் இருக்கிறார்கள்.அதில் மணிரத்தினமும் ஒருவர்.நீங்கள் அவர் படங்களையும்மற்றும் அவரது "இருவர்" படத்தையும் கூட பார்த்திருப்பீர்கள்என

நான் நினைக்கிறேன்.

ஆயிஷா தர்க்கர்

டேவிட்வோல்ஷ்: இத்திரைப்படத்தில் நடித்தபோது உங்கள் அனுபவங்கள் என்ன?

ஆயிஷா தர்க்கர்: எனது அனுபவம்சற்றுக் கடினமானது. இது நிதானமாகக்கையாளக்கூடிய ஒரு பாத்திரம் அல்ல.இதில் வரும் பெண் அக்குழுவினருடன் அவளுடையஇளமைக் காலத்தில் இருந்தே வாழ்ந்துவந்திருக்கின்றாள். அவள் வழமையாகநாம் காணும் நபரல்ல. அவள்இப்படியான விதிவிலக்கானமக்களின் உற்பத்தி. அவள்அக்குழுவினரது கொள்கைகளுக்கு அமையவேஉருவாக்கப்பட்டுள்ளாள். இக்கதாபாத்திரம்நடிப்பதற்கு கடினமாக அமைந்ததற்கானஒரு காரணம் அதனை நாம் ஒளிப்பதிவு செய்த முறையேயாகும். இந்த முறைஅந்தப் பாத்திரத்தினை அனுபவரீதியாகவெளிக் கொணர உதவியதனால் இது ஒருசிறந்த முறை என நான் எண்ணுகின்றேன்.இதனால் நீண்ட நேரத்திற்கு மேற் கூறியவாறுநடிப்பது சிரமமாக இருந்தது. மேலும்இப்படத்தில் நான் செய்யவேண்டி இருந்தசில சாகஸங்களினால் எனது கால்களைமுறித்துக் கொண்டதும் சிரமமான அனுபவத்தைத் தந்தது.

டேவிட் வோல்ஷ்: அவளது பொறுப்புணர்ச்சி உண்மையானது.ஆனால் அவளுக்கு வழங்கப்பட்ட கடமையின்சார்பாக நோக்கும் போது ஆழமற்றது.அவளது பொறுப்பு ஒரு அரசியல் நிகழ்வுக்கானஒன்றல்ல. மாறாக அது இரத்தத்திற்குஇரத்தம் என்ற பழிவாங்கும் படலமாகவேஉள்ளது. இதைப்பற்றி தங்கள் கருத்து?

ஆயிஷா தர்க்கர்: திரைப்படத்தில்வரும் கதாபாத்திரங்கள் உண்மையாகவேஅவர்கள் செய்த பிரமாண்டமான அரசியல்எதிர்ப்புத் தொடர்பாக அதிகம் அறிந்திருக்கஇல்லை. உண்மையில் அவர்கள் தமது நடவடிக்கையின் விளைவுகளைக் கூட அறிந்திருப்பதில்லை.சிலவேளை நீங்கள் இத்தகைய ஒரு சமூகத்தில்உருவாகி இருப்பீர்களானால் தியாகிகள்தான்உங்களது தீவிரவாத அமைப்பின் மாவீரர்களாகஇருந்திருப்பார்கள் என நான் எண்ணுகின்றேன்.நீங்கள் அடிக்கடி உங்கள் தலைவர்களாலும்நீங்கள் சந்திக்க வேண்டியிருந்த மக்களாலும்மாறுபட்ட சிந்தனைகள் உங்கள் மனதில்புகட்டப்படுகின்றன. எனக்கு 18,19 வயதானஐந்து பெண்களின் புகைப்படம் கிடைத்தது.அவர்கள் உயிராபத்து விளைவிக்கக் கூடியவர்கள்.அவர்கள் எந்தவிதமான பச்சாதாபமும்இன்றி கொலை செய்கின்றனர். இது ஒருதொழில். அவர்கள் இதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். எனது கருத்து என்னவென்றால்,அவர்கள் ஒவ்வொருவரும் தாம் அனைவராலும் அறியப்பட்டிருக்க வேண்டும் எனவும்அனைவராலும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய மனிதர்களாக வாழ வேண்டும் எனவும்எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது மனிதஇயல்பு என்றே நான் எண்ணுகின்றேன்.இந்த இயல்பு அசாதாரணமான சுயநலன்களின்கலவை. ஏனெனில் அவர்களது ஆசைகள்மிக உறுதியானவை. அவர்கள் தன்னலம்கருதாது தாம் காணமுடியாத ஒன்றிற்காகத்தமது வாழ்க்கையையே தியாகம் செய்பவர்கள்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டியவற்றைத்தானே தெரிந்து கொள்ளும் ஆற்றல்இல்லாதவனெனின் அவன் ஒரு மனிதனேஅல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால்மல்லியின் தெரிவுகள் அவளது சுயமான தெரிவுகள்அல்ல. அவளது தெரிவு வாழ்வதற்கானது.அவளிடம் சிறிதளவாகக் காணப்படும் மனிதநேயத்தினால் தன்னை மீட்டுக் கொள்ளமுடிகின்றது. மீட்டுக்கொள்ள முடியும் என்றநம்பிக்கையும் உள்ளது.

இவளைப் போன்றபெண்கள் உண்மையில் அவர்களது குடும்பங்களினாலேயே இத்தகைய அமைப்புகளுக்குஅனுப்பப்படுகின்றனர். குடும்பத்தினரால்இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவோ,கல்வி கற்பிக்கவோ வசதி இல்லாத நிலையில்இவர்கள் அங்கு அனுப்பப்படுகின்றனர்.இவர் இறந்தால் சிறிதளவு பணம் நஸ்ட்டஈடாக இவர்களது குடும்பங்களுக்குவழங்கப்படும். ஆகவே ஒட்டு மொத்தமாகஇவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில்ஈடுபடுவது தமது குடும்பத்தினரது நல்வாழ்வுக்காக கூட இருக்கலாம்.

டேவிட்வோல்ஷ்: உங்களது கண்ணோட்டத்தில்இந்தியத் திரைப்படத்துறை தொடர்பானதற்போதைய நிலை என்ன?

ஆயிஷாதர்க்கர்: இந்தியத் திரைப்படத்துறையானது தற்போது மிகச் சிறந்தநிலையில் உள்ளது. இது இன்றும் வர்த்தகரீதியாக பலம் வாய்ந்ததாக உள்ளது.வர்த்தகமே இத்துறையின் முதுகெலும்பாகஉள்ளது. ஆனால் அதே சமயம் கடந்தஐந்து ஆண்டுகளாக குறிப்பாக பல புதியதிரைப்படத் தயாரிப்பாளர்கள் இத்தகையபாடல்கள் அற்ற பலமான திரைக்கதைஉள்ள படங்களை தயாரித்து வருகின்றனர்.வர்த்தக அங்கீகாரம் பெருமளவு கிடைக்காததால் தாம் விரும்பிய வகையிலான திரைப்படங்களைத் தயாரிப்பாளர் எடுக்கின்றனர். ஒரு நடிகைஎன்ற வகையில் நான் இது ஒரு நல்ல திருப்புமுனைஎன்றே நினைக்கின்றேன்.

வர்த்தகத்திற்காகவே எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில் இருந்துகூடுமான வரை ஒதுங்கிக் கொள்ளவேநான் விரும்புகின்றேன். ஏனெனில் இத்தகையபடங்களில் எனக்கு இதுவரை கிடைத்தகதாபாத்திரங்கள் ஒரு மரத்தையேசுற்றிச் சுற்றி ஓடும் ஒரு பெண்ணின் பாத்திரமேயாகும். இந்த வகையான படங்களில் நடிப்பதில்அதிக சிரமம் கிடையாது. அத்துடன் இக்கதாபாத்திரம் தொடர்பாக அதிகம் சிந்திக்க வேண்டியஅவசியமும் இல்லை. எனவே இத்தகையஒரு திரைப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகைக்குஇது உத்வேகத்தை தருகின்றது. இதனால்மேலும் மேலும் இத்தகைய படங்கள்உருவாகிக் கொண்டுள்ளன.

எனக்குமணிரத்தினத்தின் திரைப்படங்களை மிகவும்பிடிக்கும். ஏனெனில் ஒரு வர்த்தக அடைப்பினுள்இருந்தவாறும் அவர் ஆழமான கருத்துக்களுள்ள படங்களைத் தருகின்றார். அவர் தனதுவர்த்தக ரீதியான திரைப்பட தயாரிப்புமுறையினால் பல மக்கள் கூட்டத்தினருடன்தொடர்புபடுகின்றார். ஆனால் அதேவேளைஇவர் அவர்களை தனது திரைப்படத்தின்தொனிப்பொருள் தொடர்பாகவும்சற்றுச் சிந்திக்க வைக்கின்றார்.

சந்தோஷ்சிவன் இப்படத்தைக் கேரளாவிலும் வெளியிடத்திட்டமிட்டுள்ளார். ஏனெனில் கேரள ரசிகர்கள்சினிமா அறிவுள்ளவர்கள். அங்குள்ள ஒருவாகனச் சாரதியிடம் பேசினால் அவர்"அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு சிறந்த முறையில்அமைந்துள்ளது." என்றுதான் கூறுவார்.அவர் கூறியதைக் கேட்டு நான் ஆச்சரியம்அடைந்தேன். ஏனெனில் நான் அவரிடம்இருந்து இத்தகைய ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. சாதாரணமாக மக்கள் நடிகர்நடிகைகளைப் பற்றித்தான் பேசுவார்கள்.ஆனால் அங்கு மக்கள் திரைப்படத்துறைதொடர்பாக சிறிதளவாவது அறிந்து வைத்துள்ளனர். நான் நினைக்கின்றேன் மும்பாயிலும்இத்திரைப்படத்தை திரையிடலாம்.

டேவிட் வோல்ஷ்: இத்தகைய திரைப்படங்கள் வசூலைத் தருகின்றனவா?

ஆயிஷாதர்க்கர்: என்னிடம் இதை நிரூபிப்பதற்குஎந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது ஒருபுதிய வகையான திரைப்படம். ஏனென்றால்முன்பு நடந்தது என்னவென்றால் மாபெரும்வசூலைத் தரும் திரைப்டங்கள் ஒரு புறமும்கலையம்சம் கொண்ட வருவாயே இல்லாதபடங்கள் ஒரு புறமும் இருந்தன. ஆனால்இத்திரைப்படம் வருமானம் ஈட்டும்நிலையில் இருந்து தொலைவில் இருந்தாலும்முற்றுமுழுதாக வருமானம் இல்லாதுபோகாது.