World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
Thousands protest at World Trade Organization meeting in Seattle

Political first principles for a movement against global capitalism

பூகோளரீதியான முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு இயக்கத்திற்கு முதன்மையானது அரசியல் அடிப்படைக் கொள்கைகளே

Editorial Board
30 November 1999

உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மட்டக் கூட்டம் இடம் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாரம் கூட இருக்கிறார்கள். இந்த வெகுஜன எதிர்ப்புக்கான சாத்தியம் பிரித்தானிய 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகை அனைத்துலக முதலாளித்துவத்துக்கு ஆதரவாக ஒரு ஆசிரியத் தலையங்கத்தை எழுதத் தூண்டியது.

"முதலாளித்துவத்தின் விமர்சகர்கள்" என்ற தலைப்பிலான இந்த ஆசிரியத் தலையங்கம் "பூகோளரீதியான முதலாளித்துவத்துக்கு எதிரான கொதிப்பு மிகுந்த தாக்குதல்களும்" அந்த "ஆர்ப்பாட்டங்களும் ஒரு எச்சரிக்கை சமிக்கை என்ற முறையில் நிஜ முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்கள் முதலாளித்துவத்துடனும் பூகோளமயமாக்கத்தின் சக்திகளுடனும் மனக்கிலேசம் அடைந்து மனங் குமுறுவதை எடுத்துக் காட்டுகின்றது."

ஆசிய பொருளாதார நெருக்கடிக் (Asian Economic Crisis) காலப்பகுதியில் "இரகசியமாக பதுக்கி வைத்த நிதியங்களின் ஆசாபாசங்கள் உலகின் ஏனைய பாகங்களில் உள்ள பெரும் அளவிலான வறுமையைச் சிருஷ்டிக்கத் துணைபோனது எப்படி என்பதை அறியாவண்ணம் மக்கள் வன்முறையான விதத்தில் தடுக்கப்பட்டார்கள்" என பினான்சியல் டைம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகின்றது. அது மேலும் கூறுவதாவது: "சுதந்திர வர்த்தகம் பெருமளவிலானதும் துன்பகரமானதுமான கிளர்ச்சிகளுக்குக் காரணமாகும் என்பதை மறுப்பது மடைத்தனமானது" என்கின்றது. ஆனால் அது முடிவுரையாகக் கூறுவதாவது: "ஒரு பெரிதும் சுதந்திரமானதும் ஒன்றிணைக்கப்பட்டதுமான பூகோளரீதியான பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்துக்கு வெற்றிகரமான நலன்களைப் பெற்றுக் கொடுப்பதேயாகும்" என வலியுறுத்துகின்றது.

பினான்ஷியல் டைம்சின் (Financial Times) ஆசிரியத் தலையங்கம் பெரிதும் தெளிவான அதன் தற்காப்புத் தொனிக்கு முக்கியமானது. இருப்பினும் 'வோல் ஸ்ரீட்' (Wall Street) பங்குமுதல் சந்தையின் பங்குகளின் விலை அதிகரிப்பின் சாதனைகளுக்கிடையேயும் ஒரு தசாப்தத்துக்கும் குறைவான காலத்தினுள் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கம்பீர இராகத்தின் தொனியில் இருந்து முன்னணி பொருளாதார, அரசியல் வட்டாரங்களின் மனோநிலை பெரிதும் அப்பாற்பட்டுள்ளதைக் குறித்து நிற்கின்றது.

பூகோளரீதியான முதலாளித்துவத்தின் விமர்சகர்களின் பேரிலான 'பினான்சியல் டைம்சின்' பிரதிபலிப்புக்கள் சந்தையின் அதிசயங்கள் எனப்படுவதால் ஏற்கனவே வசீகரிக்கப்பட்டு விடாத எவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்வது சாத்தியம் அல்ல. உதாரணமாக அந்த ஆசிரியத் தலையங்கம் "உலகப் பொருளாதாரத்துக்குப் பெரும் நலன்களை" வழங்குவது பற்றிப் பேசும்போது அது கெஞ்சிக் கேட்பதாவது: அதனது "உலகப் பொருளாதாரம்" என்ற நிலைப்பாட்டுக்குள் சரியாக வீழ்ந்து கொள்வது யார்?"

பினான்சியல் டைம்ஸ் குறிப்பிடுவது உலகப் பெரும்பான்மை மக்களையா? அப்படியானால் அதன் ஆசிரியர்கள் கிழக்கு ஐரோப்பாவின் உள்ளும் முன்னைய சோவியத் யூனியனின் உள்ளும் ட்ரான்ஸ்நஷனல் மூலதனமும் நிதியமும் விரிவுப்படுத்தப்பட்டமையானது உழைக்கும் மக்களுக்கு ஒரு பேரழிவை சிருஷ்டிப்பதைத் தவிர வேறெதையும் சிருஷ்டிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தப் பெரிதும் தள்ளப்படுவர். சர்வதேச நாணய நிதியத்தினதும் மேற்கத்தைய அரசாங்கங்களினதும் கட்டளைகளின் பேரில் கடந்த இரண்டு தசாப்த காலங்களாக இடம்பெற்ற பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்க மக்களது வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சி காணச்செய்ததோடு- சில தருணங்களில் பெரிதும் பேரழிவு நிறைந்த முறையிலும் வீழ்ச்சி காணச் செய்தது எனக் கூறமுடியும்.

அல்லது முதலாளித்துவ தொழிற்துறையினதும் நிதியினதும் மையங்களான அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, யப்பானில் வாழும் தொழிலாளர்கள் ட்ரான்ஸ்நஷனல் மூலதனத்தின் பெருக்கத்தினால் நன்மை கண்டுள்ளார்களா? வாழ்க்கைத் தரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது அல்லது வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதார பந்தோபஸ்த்து அற்ற நிலை கேவலமாகியுள்ளது. ஓய்வு நேரங்கள் நீண்ட நேர வேலைக்கு இட்டுச் சென்றுள்ளது. சந்தையின் தடுமாற்றத்துக்கு எதிராக முன்னர் வழங்கப்பட்ட அரசாங்கம் நிதியீட்டம் செய்த சில திட்டங்கள் எலும்பு வரை சீவப்பட்டுவிட்டன.

மறுபுறத்தில், பினான்சியல் டைம்ஸ் "உலகப் பொருளாதாரம்" என்பதன் மூலம் பொருளாதார ஏணியின் உச்சியில் இருந்து கொண்டுள்ளவர்களையே உண்மையில் கருதுமானால் அப்போது பத்திரிகைக்கு தலைசிறந்த நிகழ்ச்சி இருந்து கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சமூக ஈர்ப்பின் ஒரு ஆட்டங்கண்ட பெருக்கத்தைப் பட்டியல் போட்டுக் காட்டும் ஒரு தொகை புள்ளிவிபரத் தகவல்கள் கிடைத்தன. ஒரு உண்மை தெளிவாகியுள்ளது: உலகின் கோடீஸ்வரர்களான 475 பேர்வழிகளின் செல்வம், உலகச் சனத்தொகையின் -300 கோடி மக்களின்-50 வீதத்துக்கும் மேலானவர்களின் வருடாந்த வருமானங்களின் மொத்தத் தொகைக்குச் சமமானதாகும்.

பூகோளரீதியான முதலாளித்துவத்தின பலன் அந்த விதத்தில் இருந்து கொண்டுள்ளது. பினான்சியல் டைம்சிற்கு ஆசிரியத் தலையங்கம் தீட்டுபவர்களை இது கிலியடையச் செய்துள்ளது. அதிக அளவிலான மக்கள் இதை இனங்கண்டு வருகின்றனர். அத்தோடு இதன் தாக்கங்களையும் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பல்லின மக்களைக் கொண்ட அமைப்புக்களும் சியாட்டிலில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அணிதிரட்டப்பட்டனர். இதில் உழைப்பும், மனித உரிமைகளின் தரமும் தொழில் உடன்படிக்க்ைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என உலகளாவிய ரீதியில் அணிதிரண்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், றெயின் போறஸ்ட் அக்சன் நெட் வேர்க், (Rain Forest Action Net Work) கிறீன் பீஸ் (Green Peace) போன்ற வேஷதாரிகளான "இடதுசாரி" குழுக்களைக் கொண்ட ஏ.எப்.எல்.- சீ.ஐ.ஒ. (AFL- CIO) அதிகாரத்துவத் தொழிற்சங்கங்கள், புக்கானன் வகையறாக்கள் [குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்] போன்ற வலதுசாரி தேசியவாத போக்குகள் அடங்கும்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் எந்த ஒரு குழுவினருடனும் தொடர்பு கொண்டிராத பல மாணவர்கள் உட்பட ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க சமூகத்தின் போக்கினால் பின்தள்ளப்பட்டுப் போனதாலேயே அவர்கள் சியட்டிலுக்கு வருகின்றார்கள்: வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவற்றின் மேலாதிக்கம்; சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி; அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வம் திரட்டும் வெறி; "சட்டமும் ஒழுங்கு" வெறியும் இராணுவ வழிபாடும்; பொது மக்களின் அவசியங்களையிட்டு அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலான பாகுபாடு.

எவ்வாறெனினும் உலக முதலாளித்துவத்துக்கு எதிராகத் தாக்கிப் பிடிக்கக் கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது பெரும் வரலாற்று, அரசியல் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. நாடு ஒரு இறுதிக்கட்டத்தை அண்மித்துக் கொண்டுள்ளது. இன்று ஒரு முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ள இந்நூற்றாண்டு ஒரு சிக்கலானதும் கசப்பானதுமான அனுபவங்களைக் கொண்டுள்ளது. ஸ்ராலினாலும் அவரது வாரிசுகளாலும் 1920 பதுகளின் கடைப் பகுதியில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட அதிகாரத்துவத்தின் கீழ் சோவியத் யூனியன் முகம் கொடுத்த துயரம் நிறைந்த தலைவிதியையும் 1917ம் ஆண்டின் மாபெரும் ரஷ்யப் புரட்சியினையும் ஆய்வு செய்வதே போதுமானது. மார்க்சிசத்தினதும் கம்யூனிசத்தினதும் பெயரால் தொழிலாளர் வர்க்கத்துக்கும் அனைத்துலக சோசலிசத்தின் நலன்களுக்கும் எதிராகப் பயங்கரமான அட்டூழியத்தைச் செய்யவே இதைச் செய்தனர். இந்த அனுபவங்களின் படிப்பினைகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடாத்துவது என்பதுமுடியாத காரியமாகும் என்பதை இது நிரூபிக்கும்.

Mயட்னாமிய யுத்தத்துக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் உட்பட்ட கடந்த கால எதிர்ப்பு இயக்கங்களின் போராட்ட வரலாறானது செயற்பாட்டுவாதமும் மாபெரும் தியாகங்களைச் செய்வதற்கான விருப்பமும் மட்டும் போதுமானது அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது. மனித இனம் முகம் கொடுத்துள்ள மிகவும் சிக்கலான பணி, இன்று இருந்து கொண்டுள்ள அமைப்புக்கு எதிராக ஒரு இயக்கத்தினை அணிதிரட்டுவதேயாகும்.

அத்தகைய ஒரு இயக்கத்துக்கான சமூக, அரசியல் அடிப்படை எதுவாக இருக்கவேண்டும்? எமது கருத்தின்படி தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியம் அத்தியாவசியமான அத்திவாரமாக வேண்டும்.

பூகோளரீதியான மூலதனத்திற்கு எதிரான எந்த ஒரு இயக்கத்தினதும் அத்தியாவசியமான முதுகெலும்பாகவும் முன்னணி சமூக சக்தியாகவும் பரந்த அளவிலான தொழிலாளர் வர்க்கம் இருந்து கொண்டுள்ளது. அளவிலோ அல்லது முக்கியத்துவத்திலோ எதுவிதத்திலும் சுருங்கிவிடாத வகையில் தொழிலாளர் வர்க்கம் முழு அளவிலும் சமூகக் கனதியிலும் உலகளாவிய ரீதியில் வளர்ச்சி கண்டுள்ளது.

பூகோளரீதியான பொருளாதார ஒருங்கிணைப்பு எனும்போது அது பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளின் பிராந்தியங்களுக்குக் கைத்தொழில்களை விரிவடையச் செய்வதைக் குறிக்கின்றது. அங்கு முன்னர் எதுவிதமான கைத்தொழிலும் இல்லாது இருந்ததோடு தொழிலாளர் வர்க்கத்தினை மில்லியன் கணக்கில் வளர்ச்சி காணச் செய்துள்ளது. முன்னேறிய நாடுகளில் பொருளாதார வாழ்க்கையிலான மாற்றங்கள், [கணனிமயமாக்கம், முகாமைத்துவத்தின் மத்திய தட்டினர் நீக்கம், நிறுவனங்களின் பரிமாணவெட்டு, வரவு செலவுத் திட்ட வெட்டு] முன்னர் மத்தியதர வர்க்கத்தினர் என வரைவிலக்கணம் செய்யப்பட்ட சனத்தொகையினரின் பரந்த எண்ணிக்கையினரை பாட்டாளிமயமாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

பூகோளமயமாக்கமானது செல்வந்த பிரமுகர்களுக்கும் சனத்தொகையில் பரந்த எண்ணிக்கையிலானோருக்கும் இடையே முன்னொரு போதும் இல்லாத அளவிலான அனைத்துலக சமூகத் துருவப்படுத்தலைச் சிருஷ்டித்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்துக்கும் மூலதனத்துக்கும் இடையேயான போராட்டம் ஒழிந்து போய்விடவில்லை. அது பரிமாணத்தில் விஸ்தரிக்கப்பட்டுள்ளதோடு ஆழம் கண்டும் உள்ளது.

தமது தொழில்களையும் வாழ்க்கைத் தரங்களையும் கட்டிக் காக்கும் தொழிலாளர்களின் போர்க்குணம் ஒன்றும் குறைவு கண்டு போய்விடவில்லை. உலகின் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் சமூக முரண்பாடுகளின் குமுறல்களைக் காணக் கூடியதாக உள்ளது. மிகவும் சமீபத்தில் அரசியல் ரீதியில் குழப்பமான வடிவிலும் இந்தோனேஷியாவில் இக்குமுறல்கள் ஏற்பட்டன.

தொழிலாளர் வர்க்கம் அதன் பெரிதும் முன்னேற்றமான மூலகங்களால் அனைத்துலகவாதத்தின் சித்தாந்தங்களால் வழி நடாத்தப்படும் போதே அது வரலாற்று ரீதியில் மாபெரும் தேட்டங்களை ஈட்டிக் கொள்ள முடிந்தது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரே நலன்களைக் கொண்டுள்ளனர் என்ற கருத்து, 1917 அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கிய ரஷ்ய சோசலிஸ்டுகளை ஊக்குவித்தது. இன்றுள்ள முக்கிய சிக்கல் உலகின் சகல பாகத்திலும் உள்ள தொழிலாளர்கள் அவர்களின பழைய அமைப்புக்களான கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட், தொழிற் கட்சிகள் எனப்படுபவற்றாலும் தொழிற்சங்கங்களாலும் கைவிடப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளதேயாகும். முதலாளித்துவச் சார்பு, தேசியவாத தொழிலாளர் அதிகாரத்துவங்களின் பல தசாப்த கால மேலாதிக்கத்தின் பெறுபேறு காரணமாகப் பிரமாண்டமான அளவிலான மக்களின் அரசியல் நனவு பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரையறுக்கப்பட்டதும் பெரிதும் வெளிவராததுமான அரசியல் விவாதத்தில் பூகோள முதலாளித்துவமும் "பூகோளமயமாக்கமும்" முக்கியமாக ஒத்த கருத்தையே கொண்டுள்ளன. எவ்வாறெனினும் உற்பத்தியினதும் பண்டங்களதும் பரிமாற்றத்தினதும் அதிகரித்த அளவிலான பூகோள ரீதியான பண்புக்கும் -கணனி விஞ்ஞானத்திலும் தொலைத் தொடர்புகளிலும் போக்குவரத்திலும் ஏற்பட்ட புரட்சிகர முன்னேற்றங்களால் எண்ணெய் வார்க்கப்பட்ட ஒரு முற்போக்கு அபிவிருத்தி- பூகோளமயமாக்கத்தில் இருந்து அல்லாது அராஜகமான முறையில் தனிப்பட்ட இலாபத்தினால் உந்தப்படுவதும் காலவதியான தேசிய வடிவிலான அரசியல் அமைப்பைத் திருமணம் புரிந்து கொண்டதனாலும் ஓட்டிச் செல்லப்படும் ஒரு அமைப்பின் பொருளாதார வாழ்க்கைக்கு தொடர்ந்து அடிபணிந்து போனதன் பெறுபேறாக பெருக்கெடுக்கும் சமூக ரீதியில் நாசகரமான விளைவுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை இனங்கண்டு கொள்வது அவசியம்.

இன்றுள்ள பெரும் பிரச்சினை பெரிதும் கட்டுக்கதை யுகமான தனிமைப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதார வாழ்க்கைக்கு அபிவிருத்தியை பின்நோக்கி உருண்டோடச் செய்ய வைப்பது எப்படி என்பது அன்று. பிரச்சினை இதுதான்: பூகோளரீதியானபொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தப் போவது யார்? யாரின் நலன்கள் நிர்ணயம் செய்யப்படப் போகின்றன? இதனது பிரமாண்டமான தொழில்நுட்ப கலாச்சார இயல்புகள் எங்ஙனம் பயன்படுத்தப்படப் போகின்றன? பூகோள ரீதியான பொருளாதாரத்தை ஒரு முற்போக்கான பாணியில் அணிதிரட்டக் கூடிய ஒரே சமூக சக்தியாக அனைத்துலகத் தொழிலாளர்வர்க்கம் மட்டுமே இருந்து கொண்டுள்ளது.

சியாட்டிலுக்கு வருகை தருவதில் சேர்ந்து கொண்ட ஏ.எப்.ல்.- சீ.ஐ.ஒ. அதிகாரத்துவம் தேசியவாதத்தின் பிற்போக்குச் சாராம்சத்தின் பொழிப்புரையாக விளங்குகின்றது. இது தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அணிதிரட்டவில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் நெழிவு சுழிவுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பல்வேறு தரப்பட்ட வர்த்தகப் பகுதியினரதும்- உண்மையில் அதன் சொந்த சுய நலன்களையும் அணிதிரட்டிக் கொண்டுள்ளது.

அதிகாரத்துவத்தின் தேசியவாதத்தின் அவலட்சணங்களை சிறப்பாக வெளிக்காட்டும் விதத்தில் யுனைட்டட் ஸ்டீல் வேர்க்கர்ஸ் யூனியன் (United Steel Workers Union) அதிகாரிகள் எதிர்வரும் புதன்கிழமை "கப்பல் துறைகளில் உருக்கு கும்பல்களை குவிப்பதை நிறுத்தும்படி" கோர உள்ளனர். அப்போது அவர்கள் சீன உருக்கினை சியாட்டில் துறைமுகத்தில் குவிக்க உள்ளனர்.

ஏ.எப்.எப்.- சீ.ஐ.ஓ.வின் தேசியவாதம் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நோய்களுடன் இணைந்து கொண்டுள்ளது. கொறியன் அல்லது பிரேசில் உருக்கினை விடுத்து, சீன உருக்கினை பொறுக்கி எடுப்பது ஏன்? ஏனெனில் அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு பீக்கிங் ஸ்ராலினிச ஆட்சியாளர்கள் "கம்யூனிஸ்டுகள்", சீனாவை எதிரி அரசாகப் பெயர்சூட்டி ஒரு குளிர் யுத்தத்தை தூண்டிவிட அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த நோக்கானது அவர்களை அதிதீவிர வலதுசாரி புக்கானனுக்கு [அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்] மிக நெருக்கமானவர்கள் ஆக்குகின்றது.

அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் பின்தங்கிய அனைத்தையும் ஏ.எப்.எல்.- சீ.ஐ.ஒ. தலைமை உள்ளீர்த்துக் கொண்டுள்ளது. கடந்தகால தொழிலாளர் தலைமுறைகளால் வெற்றிகொள்ளப்பட்ட சகலதையும் தொடர்ந்து கைவிட்டுவரும் நிலையிலும் இது புக்கானனுடன் நிஜமான ஒரு சித்தாந்தக் கூட்டினை ஏற்படுத்தி வருகின்றது.

அனைத்துலகவாத முன்னோக்குடன் இணைந்து கொள்வதானது அடிப்படையான பிரச்சினை அல்லாத ஒன்றல்ல: தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அமைப்பு, இந்த வாரம் சியாட்டிலில் எழுப்பப்பட்ட விவகாரங்களை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தீர்த்துவிட முடியாது. எவ்வளவுதான் பாரதூரமான விதத்திலும் உலக வர்த்தக அமைப்பின் மீதோ அல்லது எந்த ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் மீதோ நெருக்குவாரங்களைப் பிரயோகிப்பதன் மூலம் உலகத் தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்படும் வெகுஜனங்களும் முகம் கொடுக்கும் நிலைமையை மாற்றிவிட முடியாது.

இன்று இருந்து கொண்டுள்ள நிலைமைகளை எதிர்ப்பவர்கள் பிரச்சினையின் மூலவேருக்கு- இலாபத்துக்கான உற்பத்தி முறையை ஆராயக் கடமைப்பட்டுள்ளார்கள். இது சமுதாயத்தை ஒரு புதிய சமூக அடிப்படைக் கொள்கையின் மீது மீளமைப்புச் செய்வதற்கான ஒரு போராட்டத்தை குறிக்கின்றது. இது ஒரு அரசியல் போராட்டம். இதற்குத் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தக் கருவியை- அதனது சொந்த அரசியல் கட்சியை வேண்டி நிற்கின்றது.

அமெரிக்காவில் இது இரு கட்சி முறையின் இரும்புப் பிடியில் இருந்து திட்டவட்டமான முறையில் விடுபடுவதைக் குறிக்கின்றது. உபாய வேறுபாடுகளுக்கு மத்தியிலும் கிளின்டன், புஷ், புக்கானன் சகலரும் இலாப முறையைக் கட்டிக் காப்பதைப் பற்றியே பேசிக் கொள்கின்றனர். இரு கட்சி முறையை பராமரித்த வண்ணம் பூகோள முதலாளித்துவத்துக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் எந்தவொரு பேச்சும் வெட்கக் கேடானது அல்லது நப்பாசைகள் நிறைந்தது.

சோசலிசக் கருத்து என்னதான் தப்பெண்ணங்களாலும் தடுமாற்றங்களாலும் சுற்றிவளைக்கப்பட்டு இருந்தாலும் -மார்க்சிசம் அதனது எதிரிடையான ஸ்ராலினிசத்துடன் பெருமளவில் பிணைக்கப்பட்டு ஒரு தவறான முறையில் இனங்காணப்படுதல்-சமத்துவமானதும், ஜனநாயக ரீதியிலானதும் அனைத்துலகவாத அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டதுமான சோசலிசமே பகுத்தறிவற்றதும், அநீதியானதுமான முதலாளித்துவத்துக்கான ஒரே பதிலீட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றது. ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளதும் மேலாதிக்கத்தை எதிர்ப்பதையிட்டு இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டோர் அனைத்துலக சோசலிச முன்நோக்கினை ஆய்வு செய்யவும் உள்ளீர்க்கவும் போராடவும் தாம் தள்ளப்பட்டுள்ளதைக் காண்பர்.

எதிர்வரும் மாதங்களும் வருடங்களும் உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு சமூக, அரசியல் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் குறைவற்ற விதத்தில் வழங்கும். உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழு தொடர்ச்சியான மார்க்சிச மதிப்பீட்டு மூலங்களையும் அரசியல், சமூக, கலாச்சார அபிவிருத்திகள் பற்றிய ஆய்வுகளையும் வழங்கும். இது தீர்க்கமான கலந்துரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் வெளிச்சம் போடும். கொள்கைப் பிடிப்பானதும் பெரிதும் சுயதியாகம் மிக்கதுமான மாணவர்களையும் புத்திஜீவிகளையும் ஈர்க்கும். ஒரு புதியதும் நிஜமானதுமான அனைத்துலக, சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் தோற்றத்துக்கு அரசியல் அத்திவாரமிடும்.