ரஷ்ய புரட்சியும்
முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

WSWS : Tamil : நூலகம
ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்
 
1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?
 
வரலாற்றின் நீண்ட 
நிழல்: மாஸ்கோ 
வழக்குகள்
, 
அமெரிக்க தாராளவாதம்
மற்றும்
 அமெரிக்காவில் 
அரசியல்
 சிந்தனையின் 
நெருக்கடி

 

அங்கே ஸ்ராலினிசத்திற்கு 
ஒரு
 மாற்றீடு இருந்ததா?

 

சோசலிசத்திற்கு தொழிற்சங்கங்கள் ஏன் குரோதமாக இருக்கின்றன
 
ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும், புரட்சியும்
 

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

 

லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்

 
 
 

The Long Shadow of History: The Moscow Trials, American Liberalism and the Crisis of Political Thought in the United States1

வரலாற்றின் நீண்ட நிழல்: மாஸ்கோ வழக்குகள், அமெரிக்க தாராளவாதம் மற்றும் அமெரிக்காவில் அரசியல் சிந்தனையின் நெருக்கடி1

Use this version to printSend feedback

ஒருமாதத்திற்கு முன்னர்தான், நியூயோர்க் டைம்ஸ் காலஞ்சென்ற ரஷ்ய வரலாற்றாளர் ஜெனரல் டிமிட்ரி வோல்கொகோனவ் ஆல் எழுதப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியின் புதிய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூல் மதிப்புரை ஒன்றை வெளியிட்டது. மதிப்புரை செய்தவர் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் ரிச்சார்ட் பைப்ஸ் ஆவார். பைப்ஸ், வோல்கொகோனவ் இருவரது எழுத்துக்களிலும் பரிச்சயமுள்ளவன் என்றவகையில் அந்த மதிப்புரை லியோன் ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஒரு வசைபாடலைத் தவிர வேறு எதையும் கொண்டிருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எப்படி இருந்தாலும், டைம்ஸ் வோல்கொகோனவின் புத்தகத்தின் ஒரு விமர்சன மதிப்புரையை உருவாக்குவதற்கு ஆர்வம் கொண்டிருந்திருக்குமாயின், ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் ஏனைய அநேக உறுப்பினர்களைப் போல, ஒரு குளிர்யுத்த மூலோபாயவாதியும் கருத்தியல்வாதியும் என்ற வகையில் தனது கல்வியியல் வேலையை அமெரிக்க அரசாங்கத்திற்கான சேவையின் வெறுமனே ஒரு நீட்டிப்பாக கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த பணியைக் கொடுத்திருந்திருக்காது.

மதிப்புரையானது நாம் கணித்த வழிகளிலே மேற்செல்கிறது. ட்ரொட்ஸ்கி பற்றிய வோல்கொகோனவின் வாழ்க்கை வரலாற்றின் குற்றஞ்சாட்டலை பைப்ஸ் ஆராய்வது, ஒரு நனவான வரலாற்றாசிரியன் என்றவாறாக அல்ல, மாறாக குற்றஞ்சாட்டும் தரப்புக்கான ஒரு சாட்சியாக இருக்கிறது. பைப்ஸ் வரலாற்று உள்ளடக்கத்தில் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை ஆய்வு செய்வதில் வோல்கொகோனவ் செய்த அளவிற்கும் குறைவாகக் கூட, அக்கறை கொள்ளவில்லை. பதிலாக, பேராசிரியர் பைப்ஸ் அங்கீகாரம் வழங்காத இந்த வரலாற்றில் ஒவ்வொன்றுக்கும் ட்ரொட்ஸ்கியை குற்றஞ்சாட்ட அவர் முயல்கிறார். வோல்கொகோனவ் அல்லது அவரது சொந்த முடிவுகள் உண்மைத் தரவுகளால் ஆதரிக்கப்படுகிறதா இல்லையா என்பது பைப்சுக்கு முக்கியத்துவம் அல்ல. வோல்கொகோனவின் வாழ்க்கைவரலாற்றில் அடங்கியுள்ள அநேக கடும் தவறுகள்பால் கவனத்தை ஈர்க்கவைப்பதற்கு மாறாக, பழைய ஸ்ராலினிச வரலாற்றுப் பொய்ம்மைப்படுத்தல் பள்ளியிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட பொய்கள் உட்பட, கணிசமான எண்ணிக்கையில் அவரது சொந்த பொய்களையும் பைப்ஸ் சேர்க்கிறார்.

எடுத்துக்காட்டாக, பைப்ஸின் மதிப்புரை, ட்ரொட்ஸ்கியை கட்டுப்பாடற்ற வீண்பெருமை கொண்ட, திமிர் பிடித்த, அடிக்கடி முரட்டுத்தனமான....வராக சித்தரிக்கிறது. ட்ரொட்ஸ்கியின் பண்பு பற்றிய இந்த குரோதம் நிறைந்த கேலிச்சித்திரம் சோவியத் பாடப்புத்தகங்களில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக தர அளவீடாக இருந்தன. போல்ஷிவிக் கட்சி தனது உறுப்பினர்களுக்கு தேவைப்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட குழு வேலையை2 ஏற்பதற்கான ட்ரொட்ஸ்கியின் திறனின்மையை பைப்ஸ் கண்டனம் செய்கிறார். ஸ்ராலினிசத்தால் திணிக்கப்பட்ட அதிகாரத்துவ ஒழுங்கிற்கு ட்ரொட்ஸ்கியின் வளைந்து கொடுக்காத எதிர்ப்பானது, ஒரு தனிப்பட்ட மற்றும் அரசியல் தோல்விகளின் பாரதூர வெளிப்பாடுகளாக இருந்தனபோல் முன்வைக்கப்படுகிறது.

அதே மதிப்புரையில் ஆயிரம் வார்த்தைகளுக்கும் குறைவாக உள்ள ஒரு மதிப்புரையில் எத்தனை பொய்கள் காணப்படுகின்றன என்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறமைகள் பற்றி லெனின் மிகக் குறைந்த மதிப்பீட்டைக் கொண்டிருந்தார் என பைப்ஸ் வலியுறுத்துகிறார்.3 இப் பொய்க்கூற்று சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினின் முற்றுமுழுதான சர்வாதிகாரம் நிறைந்திருந்த வருடங்களின் பொழுது திரும்பத்திரும்ப கூறப்பட்டுக்கொண்டிருந்த வரலாற்றின் வடிவத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது. இந்த பொய்யானது லெனினின் 1922 டிசம்பர் அரசியல் மரண சாசனத்தில் அவரால் மறுக்கப்படுகிறது. அதில் அவர், ட்ரொட்ஸ்கி தனித்துவமிக்க திறமையால் மட்டும் மிகத் திறமை மிக்கவர் அல்ல. தற்போதைய ம.கு வில் [மத்திய குழுவில்] ஒருவேளை தனிப்பட்ட ரீதியாகவும் மிகவும் திறமை மிக்கவர்.... என்று எழுதி இருந்தார்.4

இறுதியாக பைப்ஸ் ஸ்ராலினை லெனின் உண்மையான மாணவர் மற்றும் முறையான வாரிசு5 என்று குறிக்கிறார். இதுதான் துல்லியமாக ஸ்ராலின் விரும்பியது, அல்லது, அதை இன்னும் சரியாகக் கூறுவதென்றால், ஸ்ராலின் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும் என்று அவர் கோரியதும் இதுதான். சோவியத் வரலாற்றில் நன்கு பரிச்சயம் உள்ளவர்கள், லெனின் அரசியல் ரீதியாக செயலூக்கமாக இருந்த வாழ்க்கைப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், ஸ்ராலினை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அகற்றுவத்ற்கு அழைப்பு விடுத்தார் மற்றும் பின்னர் அவருடனான அனைத்துவிதமான தனிப்பட்ட உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அச்சுறுத்தலும் விடுத்தார் என்பதை அறிவர். நன்கு தெரிந்த இந்த உண்மையை வோல்கொகோனவ் கூட மறுப்பதற்கு முயற்சிக்கவில்லை.

குளிர் யுத்த கருத்தியலும் ஸ்ராலினிச பொய்களும் ஊடறுத்தல்

மேலும் ஏதாவது மேற்செல்வதற்கு முன்னர், புரியாப் புதிராக கட்டாயம் தோன்ற இருப்பதை தெளிவுபடுத்துவதற்கு நான் முயல்வேன். ஸ்ராலினிச ஆட்சி தனது அரசியல் எதிராளிகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க அதனால் புனையப்பட்ட பொய்களை குளிர்யுத்த சோவியத் எதிர்ப்பு கருத்தியலாளர் பைப்ஸ் ஏன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? இந்த புரியாப் புதிர் குளிர் யுத்த சகாப்தத்தின் கருத்தியல் வார்ப்புருக்களால் பலகாலமாக மறைக்கப்பட்டு வந்த அரசியல் நலன்களை ஆய்வதால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட முடியும்.

அவர்களுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்காமல், ஒருபுறம் சோவியத் அதிகாரத்துவமும் மற்றொருபுறம் அமெரிக்க முதலாளித்துவமும் பொதுவான மற்றும் அரசியல் ரீதியாக பிரிக்க முடியாத ஒரு பொய்யை சோவியத் தலைவர்கள் அர்ப்பணிப்புக் கொண்ட மார்க்சிஸ்டுகளாக இருந்தார்கள் மற்றும் சோவியத் ஒன்றியம் கிட்டத்தட்ட ஒரு சோசலிச சமூகமாக இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டனர். சோவியத் அரசின் தலைவர்கள் அதிகாரத்துவ ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை பாதுகாக்க இந்தப் பொய்யை பயன்படுத்தியது. 1956 பிப்ருவரி இரகசிய உரையில் ஸ்ராலினின் குற்றங்களை குருஷ்சேவ் கண்டனம் செய்தபொழுது, அதிகாரத்துவ ஆட்சி அதன் நலன்களுக்காக புரிந்த கொடுமைகளிலிருந்து, அதனை குற்றப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதை முறையாக அறிவிப்பதற்கு அவர் கஷ்டப்பட்டார். மாபெரும் பயங்கரத்தை ஒரு தலைவரின் வரம்பு கடந்த செயலின் விளைவாக மட்டுமே சித்தரித்த தனிநபர் வழிபாடு தத்துவம் ஸ்ராலினின் குற்றங்களுக்கும் ஆளும் அதிகாரத்துவத்தால் அரசியல் அதிகாரம் பலப்படுத்தப்படுவதற்கும் இடையிலான உறவை ஆய்வுசெய்வதற்கு முன்னர் அது நிகழாதவாறு தடுத்தது.

அமெரிக்காவிலுள்ள குளிர்யுத்த கருத்தியலாளர்களை பொறுத்தவரை, ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடனும் சோசலிசத்துடனும் அடையாளம் காட்டல் முதலாளித்துவத்திற்கு எதிரான இடது-சாரி எதிர்ப்பை செல்வாக்கிழக்க வைப்பதற்கு தேவைப்பட்டது. ஸ்ராலினிசத்தின் எழுச்சி சோவியத் ஒன்றியத்திற்குள்ளே பத்தாயிரக் கணக்கான சோசலிஸ்டுகளால் இடது புறத்திலிருந்து எதிர்க்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை குளிர்யுத்த கருத்தியலாளர்கள் பெரும்தொல்லையாகவே கண்டனர். மொத்தத்தில், அமெரிக்க வரலாற்றாளர்களும் பத்திரிகையாளர்களும் ஸ்ராலினிச ஆட்சியை பலப்படுத்தல் உண்மையில் சோவியத் ஒன்றியத்தில் உள்ள முழு சோசலிச தொழிலாள வர்க்கத்தையும் புத்திஜீவிகளையும் சரீர ரீதியாக கொன்றொழித்ததன் மூலம் நிறைவேற்றப்பட்டது என்பதை அங்கீகரிப்பார்களேயாயின் ஸ்ராலினிசம் மார்க்சிச தத்துவம் மற்றும் 1917 அக்டோபர் புரடசியின் தவிர்க்க முடியாத விளைபொருளாக இருந்தது என்று அமெரிக்காவில் சோவியத் ஒன்றியம் பற்றி என்றுமில்லா அளவு எழுதப்பட்ட அனைத்திலும் 98 சதவீதத்திற்கு அடிப்படையை வடிவமைத்த கருதுகோள் என்னவாக இருந்திருக்கும்?

1936க்கும் 39க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்தில் முழுவீச்சில் நடந்த மாபெரும் பயங்கரத்தின் போக்கில் சோவியத் மார்க்சிஸ்டுகளை சரீரரீதியாக துடைத்தழித்தது இடம்பெற்றது. இந்த பயங்கரத்தின் முக்கிய நிகழ்வுகள், மூன்று அச்சமூட்டும் பொய்விசாரணைகள் ஆகும், அவற்றில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் புரட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் மற்றும் லெனின் காலத்தில் சோவியத் ரஷ்யாவை வழிகாட்டி நடத்திய மத்திய குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர். அவர்கள், நாசவேலை முதல், ஸ்ராலினை படுகொலை செய்ய சதித்திதிட்டம் தீட்டுதல் வரையிலான குற்றங்கள் சுமத்தப்பட்டநிலையில் இருந்தார்கள். இந்த விசாரணைகளின் போக்கில், அனைத்து பிரதிவாதிகளும் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களை மானக்கேடான வகையில் ஒப்புக்கொண்டனர். நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மற்றும் இல்லாதபொழுது குற்றம் சாட்டப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கி மட்டுமே இவ்விசாரணைகளை பொய்புனைவு என கண்டனம் செய்தார்.

இது வோல்கொகோவினது பற்றிய பைப்ஸின் மதிப்புரைக்கு என்னைத் திரும்பக் கொண்டுவருகிறது. ஹார்வர்ட் பேராசிரியர் அமெரிக்க சோவியத்தியல் புலத்தில் அந்த அளவுக்கு பொதுவாகக் காணப்படும் பொய்களின் திரட்டிற்குள் தன்னை எல்லைப் படுத்திக் கொள்வாராயின், அவரது மதிப்புரை எந்தவித சிறப்புக் கூறலுக்கும் தகுதியைக் கொண்டிருக்காது. ஆனால் பைப்ஸ் சேர்த்துக்கொண்ட ஒரு பகுதி அதனை அலட்சியம் செய்யமுடியாததாக்கி விட்டது: ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் நெருங்கிய உதவியாளருமாகவும் விளங்கிய லெவ் செடோவ், ஸ்ராலினது ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் மற்றும் ஸ்ராலின் தாமே படுகொலைசெய்யப்பட்ட வேண்டும் என்று அடிக்கடி பேசியும் எழுதியும் வந்தார் என்பது.

மாஸ்கோ விசாரணைகள்

ஒரு உரைப்பகுதி எப்போதும் அமைதியற்ற வகையில் இறந்துபோனவர்களின் பேயுருக் காட்சிகளை உள்ளத்தின் நினைவாழத்திலிருந்து வெளிவரச்செய்யுமாயின், அது ட்ரொட்ஸ்கியும் அவரது மகனும் ஸ்ராலினின் படுகொலைக்காக அழைப்பு விடுத்தனர் என்ற பைப்ஸின் குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டுதான், டசின் கணக்கான அப்பாவி பிரதிவாதிகள் மீது மரணதண்டனை விதிக்கப்பட்ட, மற்றும் விசாரணைகளின் பின்புலத்தில் இடம்பெற்ற அரசியல் ரீதியாக வழிநடத்தப்பட்ட சோசலிச எதிர்ப்பு இன அழிப்பு பிரச்சார மாஸ்கோ விசாரணைகளுக்கான ஒரு சட்டரீதியான சாக்குப் போக்கை வழங்கியது. 7

விசாரணைகள் ஆரம்பித்த நேரத்தில், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகாலம் உண்மையில் வரையற்ற அரசியல் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருந்தார். 1923ல் அதிகாரத்துவத்தின் வளர்ந்து வரும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமைக்கப்பட்ட இடது எதிர்ப்பு, இறுதியில் 1927ல் தோற்கடிக்கப்பட்டது. எதிர்ப்பின் தலைவர்கள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் நெடுந்தொலைவுப் பிரதேசங்களுக்கு நாடுகடத்தப்பட்டனர். ட்ரொட்ஸ்கி, சீனாவின் எல்லப்புறத்தில் உள்ள கஜக்கஸ்தானில் உள்ள அல்மா அட்டாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இடது எதிர்ப்பின் அமைப்பு ரீதியான தோல்வி இருப்பினும், ஸ்ராலினின் கொள்கைகள் பற்றியதில் மகத்தான மார்க்சிச விமர்சகராக ட்ரொட்ஸ்கி கணிசமான அரசியல் மற்றும் நெறி செல்வாக்கை செலுத்தினார். 1929ல் ஸ்ராலினால் மேலாதிக்கம் செய்யப்பட்ட அரசியல் குழு, ட்ரொட்ஸ்கியை நாடுகடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ட்ரொட்ஸ்கி முதலில் துருக்கி கடற்கரையோரப் பகுதியில் உள்ள பிரின்கிபோ தீவிற்கு நாடுகடத்தப்பட்டார்; பின்னர் 1933ல் பிரான்சிற்கும், 1935ல் நோர்வேக்கும் நாடுகடத்தப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியை நாடுகடத்த எடுத்த முடிவு, ஸ்ராலின் என்றும் செய்த அரசியல் பிழைகளிலேயே மிகவும் மோசமானதாகும். கம்யூனிஸ்ட் கட்சியிலும் சோவியத் அரசில் உள்ள அதிகாரத்துவ எந்திரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தனது அதிகாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தவர் என்ற வகையில், ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட நிலையிலும் கூட, சிந்தனை அரங்கில் தனது நிபுணத்துவத்தின் ஊடாக கோலோச்ச முடிகின்ற அவரது ஆற்றலை ஸ்ராலின் குறைமதிப்பீடு செய்திருந்தார்.

1930களின் தொடக்கத்தில், சோவியத் ஒன்றியத்திற்குள்ளே, கம்யூனிஸ்ட் கட்சியின் கீழணிகளில் கூட ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பானது சீராக வளர்ந்தது. ஸ்ராலினது கூட்டுப் பண்ணைமயமாக்கல் கொள்கைகளின் அழிவுகரமான விளைவுகள், சாகச ஐந்தாண்டு திட்டங்கள் விளைவாக சோவியத் தொழிற்துறையில் நிலவிய பொதுக் குழப்பங்கள் மற்றும் சுதந்திரமான அரசியல் சிந்தனையை நசுக்கலின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஸ்ராலினுக்கு எதிர்ப்பைத் தூண்டிவிட்டன. பல வரலாற்று படைப்புக்கள் 1934ல் பதினேழாவது கட்சி காங்கிரசில் வியப்பூட்டும் விளைவுகள் பற்றிய பரந்துபட்ட ஒரு எதிர்ப்பின் ஒரு அடையாளத்தை ஏற்கனவே மேற்கோள்காட்டின. அதில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஸ்ராலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. மிக அண்மைய அரசியல் ஆய்வுகள், குறிப்பாக மார்க்சிச வரலாற்றாளர் வாடிம் ரோகோவினால் செய்யப்பட்டவை, ஸ்ராலினுக்கு எதிரான அரசியல் பகைமையின் ஆழத்தின் மீதும் ட்ரொட்ஸ்கியின் வளர்ந்துவரும் செல்வாக்கு மீதும் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சி இருந்தது.

1933ல் ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதற்காக ஸ்ராலின் பிரதான பொறுப்பு என ட்ரொட்ஸ்கி கருத்துக்கொண்டிருந்ததுடன், அவர் ஒரு புதிய அகிலத்தைக் கட்டுவதற்கும் ஒரு அரசியல் புரட்சியில் ஸ்ராலினிச ஆட்சியைத் தூக்கி வீசவும் அழைப்பு விடுத்தார். அவரது எழுத்துக்கள் சர்வதேச பார்வையாளர்கள் மீது ஆளுமை செலுத்தியதுடன், இடது எதிர்ப்பின் புல்லட்டின் ஊடாக அவர்களுக்கு சோவியத் ஒன்றியத்திற்குள் பார்க்க வழி அமைத்தும் கொடுத்தது. 1930களின் மத்தியில், ஒடுக்குமுறை வருடங்களின் பின்னரும் கூட, அக்டோபர் புரட்சி மற்றும் பழைய போல்ஷிவிக் கட்சியின் மரபுகள், கோட்பாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் சோவியத் மக்களது பரந்த பகுதியினரது நனவில் சக்திமிக்க காரணிகளாக தொடர்ந்தும் இருந்துவந்தன. நிகழ்வுகளின் திடீர் மாற்றத்தில், சிறப்பாக கொந்தளிக்கும் சர்வதேச நிலைமைகள் சோவியத் தொழிலாளர்களுக்குள்ளே இருந்த புரட்சிகரக் கூறுகளை பலப்படுத்தியதுடன் உண்மையான போல்ஷிவிசத்திற்கான அதாவது, ட்ரொட்ஸ்கியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு பரந்த ஆதரவைப் புதுப்பித்தலை உண்டுபண்ணியது.

அதனால்தான் ஸ்ராலின், ட்ரொட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும், அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்தையும் மரபுகளையும் எந்த வகையிலாவது பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரையும் அழிப்பதற்கு முடிவு செய்தார். 1934 டிசம்பரில் லெனின்கிராட் பகுதி கட்சித் தலைவரான கிரோவ் படுகொலை செய்யப்பட்டமை முன்னாள் எதிர்ப்பாளர்களை பரந்த அளவில் கைது செய்வதற்கு ஒரு சாக்குப்போக்காக அமைந்தது. அடுத்த ஆண்டு பழைய போல்ஷிவிக் கட்சியில் லெனினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சினோவியேவ் மற்றும் காமனேவ் கேமரா முன்னர் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் படம்பிடிக்கப்பட்டு, நீண்டகால சிறைவாசம் விதிக்கப்பட்டனர். 1935ல் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட பல கட்டுரைகள், போல்ஷிவிசத்தின் எஞ்சி இருக்கும் பிரதிநிதிகள் மீது ஒட்டுமொத்த தாக்குதலை நடத்துவதற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கு, ஸ்ராலின், கிரோவின் சந்தேகத்திற்கிடமான படுகொலையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று  எச்சரித்தன. ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் நிரூபிக்கப்பட்டன. 1935ன் கைதுகளும் வழக்குகளும் 1936 ஆகஸ்டில் அக்டோபர் புரட்சியின் முக்கிய தலைவர்கள் மீதான மாஸ்கோ பொய்ப்புனைவு வழக்குகளின் முதல் பகுதிக்கான அரங்கை அமைத்தன.

மீண்டும் ஒருமுறை சினோவியேவும் காமனேவும் வழக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், ஆனால் இம்முறை மரணதண்டனை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆகும். முதலாவது மாஸ்கோ பொய்புனைவு வழக்குகளின் இதர பிரதிவாதிகளில் மார்க்கோவ்ஸ்கி (Mrachkovsky), டெர்வகானியன் (Ter-Vaganian) மற்றும் ஸ்மிரோவ் (Smirnov) போன்ற அத்தகைய பழைய போல்ஷிவிக்குகளும் முன்னாள் இடது எதிர்ப்பின் தலைவர்களும் உள்ளடங்கி இருந்தனர்.

ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்களுள் முதன்மையானவர் ட்ரொட்ஸ்கி ஆவார். அவர் வராதநிலையில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பரந்த சதியை ஏற்பாடு செய்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டுப் பத்திரம் சோவியத் ஒன்றியத்தை துண்டுதுண்டாக்கவும் அதன் முன்னாள் பகுதிகளுக்கு முதலாளித்துவத்தை மீளக் கொண்டுவரவுமான நோக்கத்திற்காக ட்ரொட்ஸ்கி, நாஜி ஜேர்மனியுடனும் ஜப்பானுடனும் ஒரு கூட்டுக்குள் சென்றிருந்தார் என கூறியது. அப்பத்திரத்தின் படி, ஸ்ராலினும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏனைய முன்னணி தலைவர்களும் படுகொலை செய்யப்பட இருந்தனராம். எப்படியோ, ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த தமது உள்ளாட்களிடம் இந்த சதியைப் பற்றி அறிவித்திருந்தார் எனவும், அவர்களும் அதனை நிறைவேற்ற ஆர்வத்துடன் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வழிகாட்டல் என்று கூறப்படுவனவற்றின் கீழ், தொழிற்துறை நாசவேலைகளின் எண்ணிறைந்த செயல்பாடுகளினூடாக இந்த சதி நிறைவேற்றப்பட வழிவகை செய்யப்பட்டது, அது பலபேர் இறப்பை விளைவித்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமே ஒப்புக்கொண்டதான குற்றச்சாட்டுக்களைத் தவிர இவற்றுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை. அரசு வழக்குரைஞர் விஷின்ஸ்கியால் (Vyshinsky) அவர்களுக்கு வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து பிரதிவாதிகளும் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டார்கள். சான்று காட்டுவதற்கு யதார்த்த அம்சத்தை உரித்தாக்குவதற்கான ஸ்ராலினால் ஆன ஒரு முயற்சி துன்பகரமான வகையில் தவறாகப் போனது. மிகக் குறைந்த அளவே அறியப்பட்டிருந்த பிரதிவாதி ஈ.எஸ். கோல்ட்ஸ்மேன் (E.S. Goltsman) 1932 கோபன்ஹேகனுக்கு பயணம் செய்திருந்தார் என சான்றளிக்கப்பட்டிருந்தார், அங்கு அவர் செடோவை சந்தித்ததாகவும் அவர் பின்னர் தனது தந்தையுடன் சதி ஆலோசனைக்கான சந்திப்பு இடத்தை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. கோல்ட்ஸ்மேனின்படி, செடோவுடனான முதல் சந்திப்பு ஹோட்டல் பிரிஸ்டலின் வராந்தாவில் இடம்பெற்றது. ஆனல் அது விரைவிலேயே, டேனிஷ் பத்திரிக்கையாளர்களால் ஹோட்டல் பிரிஸ்டல் 1917லேயே தகர்ந்து போயிருந்ததாக நிறுவப்பட்டது. இந்த அழிவுண்டாக்கும் அம்பலப்படுத்தல், வழக்கு விசாரணையின் வெளிப்பாட்டின் மீது எந்த பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை. 1936 ஆகஸ்ட் 24ல் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மரணதண்டனை விதிக்கப்பட்டனர். இருபத்திநான்கு மணிநேரத்திற்குள்ளேயே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வழக்கு விசாரணை ஆரம்பமான பொழுது, ட்ரொட்ஸ்கி, நோர்வேயில் வாழ்ந்துவந்தார். அவர் அப்போதுதான் சோவியத் ஒன்றியத்தையும் ஸ்ராலினிச ஆட்சியையும் பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வை காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற தலைப்பில் முடித்திருந்தார். அவர் உடனடியாக வழக்கு விசாரணையை ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று கண்டனம் செய்ததோடு, அதனை அம்பலப்படுத்தப் போவதாகவும் கூறி இருந்தார். ஆனால் அவரது முதல் முயற்சிகள் நோர்வே அரசாங்கத்தால் குறுக்கீடு செய்யப்பட்டது. வழக்குவிசாரணை பற்றிய ட்ரொட்ஸ்கியின் அம்பலப்படுத்தலும் ஸ்ராலின் பற்றிய கண்டனமும் சோவியத் ஒன்றியத்திற்கும் நோர்வேக்கும் இடயிலான உறவைப் பாதிக்கும் என அரசாங்கம் அஞ்சியது. சமூக ஜனநாயக அரசாங்கம் ட்ரொட்ஸ்கியையும் அவரது மனைவியையும் வீட்டுக் காவலில் வைத்தது, அங்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு தனிமைச் சிறையை ஒத்த நிலைமைகளில் அவர் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் 1936 டிசம்பரில், ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவியும் மெக்சிகோவை பயண இலக்காகக் கொண்ட விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். அங்கு அவர் லசாரோ கார்டினஸ் (Lazaro Cardenas) தீவிரப்போக்கு தேசியவாத அரசாங்கத்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டது.

மாஸ்கோவில் இரண்டாவது பொய்புனைவு வழக்கு விசாரணை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக, 1937 ஜனவரி 9 அன்று ட்ரொட்ஸ்கி மெக்சிகோவை வந்தடைந்தார். புதிய பிரதிவாதிகளுள் முன்னாள் சோவியத் தொழில்துறை தலைவர் யூரி பியட்டகோவ் (Yuri Piatakov); சோவியத் நிதித்துறையின் முதல் தலைவர்கள் மத்தியில் இருந்த கிரிகோரி சொக்கோல்நிக்கோவ் (Grigory Sokolnikov); உள்நாட்டு யுத்தத்தின் கதாநாயகன் முரலோவ் (Muralov); இன்னொரு பழைய போல்ஷிவிக்கான மிகையீல் பொகுஸ்லாவ்ஸ்கி (Mikhail Boguslavsky); புகழ்பெற்ற மார்க்சிச பத்திரிகையாளர் கார்ல் ராடெக் (Karl Radek) போன்ற உலகப் புகழ்பெற்ற போல்ஷிவிக்குகள் இருந்தனர். குற்றச்சாட்டுக்கள் முதல் வழக்கு விசாரணையில் வைக்கப்பட்டவை போன்று வியப்பூட்டுவனவாக இருந்தன, மீண்டும் ஒருமுறை வழக்கு விசாரணை முழுவதும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமே ஒப்புக்கொள்ளலின் மீதே சார்ந்து இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு ஆதரவாக கொஞ்சம் உள்ளூர்ச்சாயம் பூசி இன்னொருதடவை முயற்சித்தபொழுது இரண்டாவது வழக்குவிசாரணையின் நம்பகத்தன்மை ஒரு அழிவுகரமான அடியால் பாதிக்கப்பட்டது, ஸ்ராலின் முகத்தில் அமைதி இழந்து கோபத்தை வருவித்தது. பியட்டகோவ் (Piatakov) 1935 டிசம்பரில் ட்ரொட்ஸ்கியை சந்திக்கவும் சோவியத் ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்காக அவரது வழிகாட்டல்களை பெறுவதற்காகவும் பேர்லினில் இருந்து ஒஸ்லோவிற்குப் பயணித்தார் என்று சான்றளிக்கப்பட்டார். துரதிரஷ்டவசமாக வழக்கு விசாரணையை ஏற்பாடு செய்தவர்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொள்ளும் வகையில், ஒஸ்லோ விமான நிலைய அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதிவுச்சான்றுகள், மோசமான வானிலையின் காரணமாக 1935 டிசம்பரில் ஒரு விமானம் கூட அந்த இடத்தில் தரை இறங்கியிருக்கவில்லை என்பதை நிலைநாட்டியது. இந்த நிகழ்வில் ட்ரொட்ஸ்கி குறித்த பியட்டகோவின் மாய விமானம் ஒருபோதும் இடம்பெறவில்லை. இந்த திடீர் அம்பலப்படுத்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஸ்ராலினின் துரதிரஷ்டம், ஜிபியு நோர்வேயின் காலநிலையை, விமானங்களின் சர்வதேச இயக்கத்தை, அல்லது எனது எண்ணங்களின் இயக்கத்தை, நான் இணைந்துள்ளவற்றின் தன்மையை மற்றும் எனது செயல்பாடுகளின் முன்னேற்றத்தைக் கூட தீர்மானிக்க முடியாது. அதனால்தான், முன்பின்பாராது பெரும் உயரத்திற்கு எழுப்பப்பட்ட பொய்புனைவின் விரிவாக்கம், இல்லாத விமானத்திலிருந்து கீழே விழுந்தருக்கிறது, தூள்தூளாக நொறுங்கிப் போயிருக்கிறது, ஆனால் எனக்கு எதிரான குற்றச்சாட்டு பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர், சதிக்கு தூண்டுகோலாக இருந்தவர், ஒழுங்கமைப்பாளர், இயக்குநர் ஆகியன பெரிதும் பொய்யான சான்றின் அடிப்படையில் எழுப்பப்பட்டிருக்குமானால், மிச்சம் உள்ளவற்றை என்ன சொல்வது? 8

எந்த புறநிலை ரீதியான தரஅளவினாலும் குற்றச்சாட்டுப் பத்திரத்தின் நம்பகத்தன்மையும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட வழக்கு நடைமுறைகளும் தகர்ந்து நொருங்குவனவாக இருந்தன. இது இருப்பினும், பிரதிவாதிகளுள் இருவரைத்தவிர அனைவரும் மரணதண்டனைக்கு ஆளாகினர். ஒதுக்கி வைக்கப்பட்ட இருவரும், ராடெக்கும் (Radek) சோகோல்னிக்கோவும் (Sokolnikov) பத்து ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டனர், ஆனால் விரைவிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்ராலினிச வழக்குத்தொடுப்பாளர்களால் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதாக ஒரு சுதந்திரமான புலனாய்வு விசாரணையை நடத்துவதற்கு ஒரு சர்வதேச நடுவர் மன்றத்தை நியமிக்குமாறு மெக்சிகோவிலிருந்து, ட்ரொட்ஸ்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார். செய்தி கேமரா முன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையில் ட்ரொட்ஸ்கி விளக்கினார்:

எனக்கு எதிரான ஸ்ராலினின் வழக்கு விசாரணை ஆளும் கும்பலின் நலன்களின் பேரில் நவீன எரிச்சலூட்டக் கூடிய நீண்ட விசாரணையால் வன்முறை கொண்டு பெறப்பட்ட, பொய்யான குற்றம் ஏற்பின் மீது எழுப்பப்பட்டுள்ளது. தீவிரத்தில் அல்லது நிறைவேற்றுவதில் சினோவியேவ்-காமனேவ் மற்றும் பியட்டகோவ்-ராடெக் இவர்களது மாஸ்கோ வழக்கு விசாரணைகளை விடவும் மிகப் பயங்கரமானது வரலாற்றில் வேறு எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த வழக்கு விசாரணைகள், கம்யூனிசத்திலிருந்து அல்லது சோசலிசத்திலிருந்து அபிவிருத்தி அடையவில்லை, மாறாக ஸ்ராலினிசத்திலிருந்து, அதாவது மக்கள் மீதான, அதிகாரத்துவத்தின் பதில் கூறமுடியாத எதேச்சதிகாரத்திலிருந்து அபிவிருத்தி அடைகிறது!

இப்போது எனது பிரதான பணி என்ன? உண்மையை வெளிக்கொண்டுவருவது. உண்மையான குற்றவாளிகள் குற்றம் சுமத்தியவர்களின் அங்கிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதும் விளக்குவதும் ஆகும். இந்தத்திசையில் அடுத்த அடிவைப்பு என்ன? அது பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள், போட்டியிடமுடியாத வகையில் செல்வாக்கை அனுபவிப்பவர்களை கொண்டவர்கள் உள்ளடங்கிய ஒரு அமெரிக்க, ஒரு ஐரோப்பிய மற்றும் அதைத்தொடர்ந்து ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைப்பதாகும். எனது சிந்தனை மற்றும் செயல்பாட்டின் அபிவிருத்தி எந்த இடைவெளியும் இல்லாமல் நாள்தோறும் பிரதிபலித்த எனது அனைத்து கோப்புகளும், ஆயிரக்கணக்கான எனது தனிப்பட்ட மற்றும் பகிரங்க கடிதங்கள் அனைத்தையும் அத்தகைய குழுவின் முன் வைப்பதை நான் பொறுப்பெடுப்பேன். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை! வெளிநாடுகளில் உள்ள டசின் கணக்கான சாட்சிகள் வைத்திருக்கும் விலைமதிப்பற்ற உண்மைகள் மற்றும் பத்திரங்கள் மாஸ்கோ பொய் புனைவுகளின் மீது வெளிச்சம் போட்டுக்காட்டும். விசாரணைக் கமிஷனின் வேலை மாபெரும் எதிர்வழக்கு விசாரணையை கட்டாயம் முடிக்கும். எதிர் வழக்குவிசாரணை நாஜியின் கெஸ்டாபோ மட்டத்திற்கு வீழ்ந்துவிட்ட ஸ்ராலினின் போலீசான ஜிபியு வை மூலமாகக் கொண்டிருக்கும் ஏமாற்று, அவதூறு, பொய்மைப்படுத்தல், ஜோடனைகளின் கிருமிகள் கொண்ட சூழலைத் தூய்மைப்படுத்துவதற்கு அவசியமானதாகும்.

பெரும் மரியாதைக்குரிய பார்வையாளர்களே! கடந்த நாற்பது ஆண்டுகளாக எனது கருத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கை தொடர்பாக பல வேறுபடும் நோக்குகளை நீங்கள் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நடுநிலையான விசாரணையானது, தனிப்பட்ட ரீதியிலானாலும் சரி அரசியல் ரீதியிலானாலும் சரி எனது கௌரவத்தின் மீது கறை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். நியாயம் என்பக்கம் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன், புதிய உலகின் குடிமக்களுக்கு நான் இதயபூர்வமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 9

மாஸ்கோ விசாரணைகள் உலகம் முழுவதிலும் அதிர்ச்சி விளைவுகளை உண்டுபண்ணின. பழைய மற்றும் சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்ற புரட்சியாளர்கள், சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்தவர்கள், ஸ்ராலினை படுகொலை செய்யவும் முதலாளித்துவத்தை மீட்பதற்கும், நாஜி ஜேர்மனியுடன் ஒரு கூட்டுக்குள் நுழைந்ததாக ஒப்புக்கொண்ட காட்சி, பொது மக்களை எளிதில் நம்பவியலாததாக்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அத்தகைய குற்றங்களை செய்திருக்கக்கூடுமா? மாஸ்கோவில் நடைபெற்ற விசாரணைகள் நீதிப்படியான முறையான செயல்பாடாக இருந்தனவா? வழக்கு விசாரணை தொடர்பாக பரந்த அளவிலான ஐயுறவாதம் இருந்தபொழுதும், ஒரு சர்வதேச விசாரணைக் குழுவிற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு கடுமையான அரசியல் தடைகளை சந்தித்தது. சோவியத் இரகசிய போலீசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்த உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த வழக்கு விசாரணைக்கான ஆதரவை, குறிப்பாக தீவிரப் போக்கினர் மத்தியில், ஐரோப்பிய, அமெரிக்க புத்திஜீவிகளின் கணிசமான இடது தாராளவாதிகள் மத்தியில் கட்டி எழுப்பும் சர்வதேசப் பிரச்சாரத்தை முன்னெடுத்தன.

அமெரிக்காவில் ஸ்ராலினிஸ்டுகளின் முயற்சிகள் நியூயோர்க் டைம்ஸ் ஆல் ஊக்கம் பெற்றன. இதன் மாஸ்கோ செய்தித்தொடர்பாளர் வால்ட்டர் டுராண்ட்டி (Walter Duranty) வழக்கு விசாரணைகளின் சட்டபூர்வதன்மையிலும் குற்ற ஒப்புகைகளிலும் தனது நம்பிக்கைத்தன்மையை அறிவித்தார். குற்ற ஒப்புகைகளின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கொண்டிருப்பவர்கள் டோஸ்டோவ்ஸ்கியினதை (Dostoevsky) வாசிப்பதனாலும் ஸ்லாவிய ஆன்மா வின் துன்பங்கள் பற்றி கற்றுக்கொள்வதாலும் பயனடைவர் என்று அவர் கருத்துரைத்தார். வழக்கு விசாரணைகளை ஆதரித்த இன்னொருவர் சோவியத் ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதரான ஜோசப் டேவிஸ் (Joseph Davies) ஆவர். அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குற்றங்களை நம்புவதாக அறிவித்தார்.

பொதுவில் பாராட்டுப் பெறுவதைக்காட்டிலும் மிகப் பெரிய அளவுக்கு மாஸகோ வழக்கு விசாரணைகள் அமெரிக்க அரசியல் வாழ்வில், குறிப்பாக அதன் உட்கூறுகளில் மிக முக்கியமான ஒன்றான, தாராளவாதத்திற்கானதில் விமர்சன ரீதியான நிகழ்வாக இருந்தன. இதனைப் புரிந்துகொள்வதற்கு, மாஸ்கோ வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் உள்ளடக்கத்தை ஒருவர் கட்டாயம் மீளாய்வு செய்ய வேண்டும்.

அமெரிக்க தாராளவாதிகளும் மாஸ்கோ விசாரணைகளும்

1929ன் இறுதியில் ஆரம்பித்த மாபெரும் பொருளாதார மந்தநிலை அமெரிக்காவிற்குள்ளே புத்திஜீவித மற்றும் அரசியல் சூழலையை மாற்றியது என்ற முக்கியத்துவம் பெரிதும் மறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உள்நாட்டு யுத்தத்திலிருந்து அமெரிக்கா அத்தகைய அடிப்படை நெருக்கடியை எதிர்கொண்டதில்லை. 1860-61 பிரிவினை நெருக்கடி ஒன்றியம் தப்பி இருப்பதை கேள்விக்குரிய தாக்கியது. வோல் ஸ்ட்ரீட் நெருக்கடியும் மாபெரும் பொருளாதார மந்தநிலையும் முதலாளித்துவ அமைப்பின் செல்தகைமையையும் தார்மீக நெறியையும் கேள்விக்குள்ளாக்கியது. இப்போது, வெற்றிகரமான வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் பெருவர்த்தக விற்பன்னர்கள் அமெரிக்கா அன்பாய்வைத்திருக்கும் அனைத்துவிதமான மனிதப் பொதிவு என பொது ஊடகங்களில் புகழந்து ஏற்றப்படுகின்றனர், அத்தகைய தனிநபர்கள், ஜனாதிபதி பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்டால் (Franklin Delano Roosevelt) மாபெரும் செல்வத்தின் பொருளீட்டாக் காரணிகள் என்று பகிரங்கமாக கண்டனம் செய்த காலத்தை கற்பனை செய்து பார்த்தல் என்பது கடினமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் முதலாளித்துவம் என்பது ஒரு வகை கெட்டவார்த்தையாக இருந்தது.

அமெரிக்க புத்திஜீவிதத்தன்மையின் தாராளவாதம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல் பொருளாதாரக் கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அது வார்த்தை தன்னிலேயே வரையறுக்கப்பட்ட வடிவம் இல்லாததாக இருந்தது, அது பொதுவாகவே சமூக நிலைமைகளை படிப்படியாக முன்னேற்றுவித்தல் மற்றும் நகர்ப்புற அரசியலில் ஊழலைத் தடுத்தல் இவற்றுக்கு ஒரு தெளிவற்ற அர்ப்பணிப்பு என்பதைத்தவிர வேறு எதுவுமில்லை. பொருளாதாரத் தாழ்வு இந்த சமூகத் தட்டினுள் சமூகப் பிரச்சினைகளில் ஆர்வத்தை உணர்த்தும் ஒரு குறிப்பிட்ட அவசர உணர்வை உருவாக்கியது, தீவிரப் போக்குடைய அரசியலின்பால் ஓரளவு ஆதரவையும் கூட உருவாக்கியது. அமெரிக்க தாராளவாத புத்திஜீவிகள் பகுதியின் மத்தியில், சோவியத் ஒன்றியம் பற்றிய கௌரவம் கணிசமான அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது. தொழிலாளர் தொகுப்பில் 25 சதவீதம் வேலை இல்லாதிருத்தல், சந்தைகளை சுயமாய் ஒழுங்குபடுத்திக்கொள்ளும் போதனைகள், கட்டுப்பாடு எதுவுமில்லாத போட்டிகள், முரட்டுத்தனமான தனிநபர்வாதம், 1929 அக்டோபருக்கு முன்னர் இருந்ததைவிடவும் மிகவும் குறைந்த நம்பிக்கை ஊட்டக்கூடியதாகவே இருந்தன. வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் அபிவிருத்தி அடைந்த நிலைமைகள் சந்தைப் பொருளாதாரங்கள் சமூக முன்னேற்றத்துடன் ஒத்திசைவாய் போவன என்பது பற்றிய பழைய கருதுகோள்களை கீழறுத்துவிட்டன. அமெரிக்க நெருக்கடியின் பின்புலத்தில், சோவியத் பொருளாதாரத்தின் வெளிப்படையாக தெரியும் வெற்றிகள், கூட்டுப் பண்ணைமயமாக்கலில் கிடைத்த அதிகப்படியானவை ஆதரவாய் இல்லாவிடினும், நன்மதிப்பை ஏற்படுத்தின மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் என்னும் கருத்துருவுக்காக பாராட்டையும் கூட பெற்றது. உலகம், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கற்றுக் கொள்ள சில இருக்கின்றன என்று தாராளவாத புத்திஜீவிகளுக்கு தோன்றியது.

USSR க்கு பெருகி வரும் அனுதாபம், சோவியத் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றங்கள் மூலம் வேகப்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் பாசிசத்தின் தோற்றம், ஐரோப்பா முழுவதும் பிற்போக்கு இயக்கங்களின் பலம் வளர்ந்து வருதல் ஆகியன பல தாராளவாதிகளால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொதுவான பொறிவின் முன்னறிவிப்பாளராக பார்க்கப்பட்டன. இந்த முக்கியமான புள்ளியில், ஜனநாயக தாராளவாதத்திலிருந்து, உலக அரசியலில் சோவியத் ஒன்றியத்தின் முக்கியத்துவம் திடீரென மாறியது. 1935ல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது காங்கிரசில் சோவியத் ஒன்றியம் மக்கள் முன்னணிவாதம் (popular frontism) கொள்கையை திறந்துவிட்டது. நாஜி ஜேர்மனியால் முன்வைக்கப்பட்ட ஆபத்தால் அச்சமுற்ற சோவியத் அதிகாரத்துவம், இப்போதிருந்து ஜனநாயக ஏகாதிபத்தியங்களான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் கூட்டுக்களை வைப்பதை நோக்கி தனது சக்திகளை வழிநடத்தியது. இந்தக் கொள்கையின் அவசியமான பின்விளைவாக, உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள், தாம் ஜனநாயக முதலாளித்துவ வர்க்கம் எனக் குறிக்கும், தாராளவாத மற்றும் முற்போக்குக் கட்சிகளுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரவு கொடுத்ததுடன், தங்களைக் கூட்டிலும் சேர்த்துக் கொண்டன. கட்சிகளோ, அரசியல்வாதிகளோ, அரசாங்கங்களோ அவை சேவைசெய்யும் வர்க்க நலன்களின் அடிப்படையில் இனியும் ஆய்வு செய்யப்படவோ வரையறுக்கப்படவோ போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஒன்றில் பாசிஸ்ட் அல்லது பாசிச எதிர்ப்பு என்று மதிப்பிடப்பட இருந்தன. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் சோசலிசத்தின் இலக்கு ஆகியன உண்மையில் சோவியத் வெளியுறவுக் கொள்கையின் ஆணையின் நலன்களின் பேரில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தியாகம் செய்யப்பட இருந்தன.

இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சோவியத் ஒன்றியமும், தேசிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தாராளவாத மற்றும் தீவிரப் போக்குடைய புத்திஜீவிகளை ஆதரவு வேண்டி நயந்து நாடின. கம்யூனிஸ்ட் கட்சியின் நாளாந்த அரசியல் அதிகரித்த அளவில் தாராளவாத வண்ணம் தீட்டுதலை எடுத்தன, மிகவும் கவனிக்கத்தக்க வகையில் ரூஸ்வெல்ட்டுக்கும் புதிய பேரம் எனும் பொருளாதாரக் கொள்கைக்கு அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் அங்கீகாரம் வழங்கலில் வடிவம் எடுத்தன. பல தாராளவாத புத்திஜீவிகள், ஸ்ராலினிஸ்டுகளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய கவனத்தால் புகழப்பட்டனர், அவர்களின் கருத்துக்களும் அக்கறைகளும் கவனத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மகிழச்சிகொண்டனர். சோவியத் ஒன்றியத்துடன் அவர்களின் தனிப்பட்ட இனம்காட்டல், குறைந்த பட்சம் அவர்களின் சொந்தக் கண்களில், அமெரிக்காவில் தீவிரப் போக்குடைய நடவடிக்கைக்கான வேலைத்திட்டங்கள் கணிசமாக இல்லாதிருந்தமையை மூடிமறைக்கும் முகப்பூச்சாக பார்க்கப்பட்டது.

சோவியத் சாதனைகளுக்காக தாராளவாதிகளின் விமர்சனமற்ற புகழ்ச்சி, அமெரிக்காவினுள்ளே புரட்சிகர மாற்றத்திற்கான ஒரு ஆதரவை குறிக்கவில்லை. அதிலிருந்து தூரவே இருந்தது. பெரும்பாலான தாராளவாத புத்திஜீவிகள் அமெரிக்காவில் சமூக சீர்திருத்தத்திற்கான தங்களின் சொந்த கோழைத்தனமான நிழ்ச்சி நிரலைப் பலப்படுத்தும் மற்றும் ஐரோப்பாவில் பாசிசத்தை நெருங்கவிடாமல் தடுக்கும் சாதனமாக USSR உடனான கூட்டைப் பார்க்கும் மனப்போக்கு உடையவராக இருந்தனர். சோவியத் ஒன்றியம் புரட்சிகர எழுச்சிகளின் ஒரு முன்னணிப்படை என இனியும் பயப்படப்போவதில்லை. ட்ரொட்ஸ்கியின் தோல்வி, சர்வதேச புரட்சிகர அபிலாஷைகளை சோவியத் ஒன்றியம் கைவிட்டதையே குறிக்கிறது என மிதவாதிகள் புரிந்தகொண்டனர். 1930களின் நடுவில் ஸ்ராலினிச ஆட்சி அரசியல் மதிப்பின் ஒரு ஒளிவட்டத்தை ஈட்டியிருந்தது.

மாஸ்கோ விசாரணைகளுக்கு தாராளவாத பதிலை ஆய்கையில், இன்னொரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், 1936 ஜூலையில் ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் வெடித்தது. ஸ்பெயின் பாசிசத்திற்கான அச்சுறுத்தலில் இருந்தது, அதன் வெற்றியோ நிச்சயமாய் இரண்டாவது உலக யுத்தம் வெடிப்பதற்கே வழி வகுக்கும். சோவியத் ரஷ்யா, பாசிச எதிர்ப்பு சக்திகள், குடியரசுக் கட்சிகாரரால் மிக முக்கியமான கூட்டாளியாகப் பார்க்கப்பட்டது. சில தாராளவாத புத்திஜீவிகளே ஸ்பெயினில் ஸ்ராலினிச அரசியலின் உண்மையான முக்கியத்துவத்தை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதற்கு நாட்டம் கொண்டனர். மிகப் பெரும்பாலான பகுதியினர், அரசியல் பயங்கரத்தின் ஊடாக ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை அழித்து, இறுதியில் பிராங்கோவின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்தனர் என்பதை அலட்சியம் செய்தனர். மேல்தோற்றத்தில் சோவியத் ஒன்றியமானது ஸ்பெயினில் பாசிசம் தோற்கடிக்கப்படுவதற்காக “முற்போக்கு சக்திகளின் அனைத்து நம்பிக்கைகளும் சார்ந்து இருக்கும் ஒரு மலையாகப் பார்க்கப்பட்டது சில தாராளவாதிகள் அதற்கு அப்பாலும் பார்ப்பதற்கு கவனம் எடுத்தனர்.

இதனால்தான் மாஸ்கோ வழக்கு விசாரணைகளை ஆய்வு செய்வதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பானது, சிறப்பாக அமெரிக்காவிற்குள்ளே, தாராளவாத புத்திஜீவிகள் மத்தியில் பரந்த அளவிலான பகையை எதிர்கொண்டது. இந்த அடுக்கின் கருத்துக்களை பிரதிநிதித்துவம் செய்த மிக முன்னணி பத்திரிகைகளுள் இரண்டான, தி நியூ ரிபப்ளிக் (The New Republic) மற்றும் தி நேஷன் (The Nation) இந்த வழக்கு விசாரணைகளுக்கு அதிகாரபூர்வ ஆதரவை தெரிவித்ததுடன், சுதந்திரமான புலன்விசாரணைக்கான அழைப்பை எதிர்த்தன. தி நேஷன் வழக்கு விசாரணைகளுக்கு ஆதரவளிக்க பின்னால் சாய்ந்து, சந்தேகங்களை வெளிக்காட்டுபவர்கள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள குற்றவியல் நீதி அமைப்புமுறை உடன் பரிச்சயமில்லாதவர்களாக இருந்தார்கள் என்று தெரிவித்தது. சோவியத் பொதுச்சட்டம் பல அத்தியாவசிய அம்சங்களில் நம்முடையதிலிருந்து வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்று தி நேஷன் எழுதியது. 10

தி நியூ ரிபப்ளிக் இன் ஆசிரியர் மால்கொம் கோலி (Malcolm Cowley), அமெரிக்க தாராளவாதிகளின் புத்திஜீவித சோம்பேறித்தனம் மற்றும் ஒருவகை அஞ்சுகின்ற அரசியல் முட்டாள்தனத்தின் ஒரு எடுத்துக்காட்டு ஆவார். அமெரிக்க எழுத்து வட்டாரங்களில் முக்கிய நபராக அவர் இருந்தார். இன்றும் கூட எண்ணிறைந்த நூல் திரட்டுக்களை அல்லது கோலியால் முன்னுரைகள் எழுதப்பட்ட பிரதான அமெரிக்க நாவல்களின் தற்போதைய பதிப்புக்களை நீங்கள் பார்க்க நேரிடலாம். இந்த நவீன மற்றும் நகர்ப்புற தாராளவாதி ஒரு வழக்குவிசாரணையின் பதிவு என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், மாஸ்கோ விசாரணைகள் மீதான தனது கருத்தை வழங்கினார், இது தி நியூ ரிபப்ளிக் ஏப்பிரல் 7, 1937 இதழில் வெளியிடப்பட்டது.

அனைத்துவிதமான கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இந்த ஆண்டு நான் வாசித்த மிக மகிழ்வூட்டும் புத்தகம் மாஸ்கோவில் அண்மையில் நடந்த வழக்கு விசாரணையின் சுருக்கெழுத்து பதிவுச்சான்று ஆகும். இது நீதித்துறை மக்கள் கமிசாரகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. கடமை உணர்வோடு நான் படிக்கத் தொடங்கினேன்: விசாரணை தொடர்பாக பல விவாதங்களைக் கேட்டிருந்து, சோவியத் நீதிமன்றங்களின் நன்னம்பிக்கை மீதான பல தாக்குதல்களைப் படித்திருந்து, மூல வளங்களில் இருந்து அதிகமான அளவுக்கு கற்றுக்கொள்ள விரும்பினேன். நான் பெரிய அளவில் கற்றுக்கொண்டேன், ஆனால் முக்கியமாக விஷயதானங்கள் உடனான சுத்தமான கவர்ச்சியிலிருந்து தொடர்ந்து விலகி இருந்தேன். இலக்கியமாக தீர்மானிக்கையில் சோவியத் எதிர்ப்பு ட்ரொட்ஸ்கிச மையம் வழக்கு என்பது ஆங்காங்கே நகைச்சுவை தொடுதல் இருக்கும் உயர் எலிசபெத் காலத்திய துன்பியல் மற்றும் உண்மையான துப்பறியும் கதை ஆகியவற்றின் ஒரு அசாதாரணமான சேர்க்கை ஆகும். மார்லோவும் வெப்ஸ்டரும் அதனை அரங்கேற்றியதில் உள்ளாளாய் இருந்தனர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அது புனைவு செய்யப்பட்ட நிகழ்வு என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். தகவலாக தீர்மானிக்கையில், வழக்கு விசாரணை பற்றிய சுருக்கமான செய்தித்தாள் விவரங்களால் எனது சொந்த மனதில் எழுந்த பெரும்பாலான கேள்விகளுக்கு அது விடை அளிக்கிறது.

ஆனால் சான்றை விவாதிப்பதற்கு முன்னர், கடந்த சில ஆண்டுகளாக அபிவிருத்தி அடைந்துள்ள ரஷ்ய விவகாரங்களை நோக்கிய எனது மனப்பான்மையை நான் சிறப்பாக விளக்க முடியும். இதுவரைக்கும் சோவியத் ஒன்றியத்தின் குறிக்கோள்களுடன் ஆழமாக அனுதாபம் உடையவன் என்பதைத்தவிர, நான் ஒரு ஸ்ராலினிஸ்ட் அல்ல, மற்றும் இதுவரைக்கும் ஸ்ராலினும் அவரது அரசியல் அவையும் அவரது பகைவர்களால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை விடவும் அறிவார்ந்த கொள்கைகளை பொதுவாகப் பின்பற்றினர். ஆனால் ஸ்ராலினுக்கு கடப்பாடு எதுவும் கொள்ளாமல், நிச்சயமாக நான் ட்ரொட்ஸ்கிக்கு எதிரானவன். எனது எதிர்ப்பு, பகுதி அளவில் உளப்பாங்கு பற்றிய பிரச்சினை: ஒவ்வொரு மனிதப் பிரச்சினையையும் சலிப்பூட்டும் முக்கூற்று முடிவாக குறைப்பது, அதில் ஒவ்வொரு புள்ளியிலும் எப்போதும் அவர்கள் சரி, அதிசயமாக சரி, அவர்களது பகைவர்கள் எப்பொழுதும் முட்டாள்கள் மற்றும் இழிவுக்குரியவர்கள் என்பது, இவற்றுடன் அவரை மாதிரி பெருநகர புத்திஜீவியை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். நான் ட்ரொட்ஸ்கியின் புத்தகங்களை ஒரு போதும் விரும்பவில்லை ... பெரும்பாலான அனைத்திலும் அரசியல் அடித்தளத்தில் நான் ட்ரொட்ஸ்கிக்கு எதிரி. அநேக வருடங்களாக அது எனக்கு -ஸ்ராலினை வெறுப்பதுதான் அவரது தீர்க்கமான கொள்கை, மற்றும் அவரது நிரந்தரப் புரட்சி எனும் முழக்கம், இப்பொழுது தனிஒருநாட்டில் நிலவும் சோசலிசத்தை தாக்குவது மற்றும் பலவீனப்படுத்துவதன் மூலம் புரட்சியை நிரந்தரமாக அழிப்பது என்று- எனக்குப்படுகிறது... ஸ்ராலின் அவரது அனைத்து தவறுகள் மற்றும் நற்குணங்களுடன் கம்யூனிஸ்ட் புரட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். ட்ரொட்ஸ்கி இரண்டாவது புரட்சியை பிரதிநிதித்துவம் செய்ய வந்திருக்கிறார், அது பாசிச சக்திகளின் தாக்குதல்களுக்கு முன்னே அதனைப் பலவீனமாக்க முயற்சிக்கிறது. 11

பொறுக்கமுடியாத ஆரவாரம் மற்றும் பகட்டு இறுமாப்புடன், இக்கட்டுரை வருந்தத்தக்க விளக்கமாக இருக்கிறது, அவை அனைத்தும் அமெரிக்க தாராளவாதத்தின் இற்றுபபோன மற்றும் நாற்றமெடுத்த தன்மையதாக இருந்தது. பழைய புரட்சியாளர்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் கோலி போன்ற பேர்கள் கொடூரங்களை அறிவுபூர்வமானதாக்க வழிகளைக் கண்டார்கள் மற்றும் அவர்களின் முகங்களின் மேல் புன்னகை பூத்தார்கள். அவர்கள் மாபெரும் வரலாற்று மற்றும் தார்மீக விஷயங்களை தங்களின சொந்த குறுகிய மற்றும் தனிப்பட்ட சில்லறை விஷயங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தார்கள். ஸ்ராலினிச ஆட்சியின் சர்வதேச கொள்கை, தங்களின் சொந்த அரசியல் நிகழ்வுக்கு ஒத்துப்போகும் அளவுக்கு கோலி போன்ற தாராளவாதிகள் ட்ரொட்ஸ்கியின் தொந்திரவுதரும் நடவடிக்கை என்று தாங்கள் கருதுவதில் தங்கி இருந்தார்கள் மற்றும் எதிர்த்தார்கள். சோவியத் சமுகம் பற்றிய அவரது ஆய்வு இந்த தட்டினர் மத்தியில் தொல்லைதருவதாக உணரவைத்தது. கோலி போன்றோரை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சிகர தன்மையின் மீது வலியுறுத்துவதன் மூலம், அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற அரசியல் மற்றும் தார்மீக சிக்கல்களை அறிமுகப்படுத்தினார் என்று கவலைப்பட்டனர்.

ஜோன் டுவேயும் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்புக்கான குழுவும்

ஸ்ராலினிச எதிர்ப்பு மற்றும் தாராளவாத புத்திஜீவிகளின் பரந்த பகுதியினரின் எதிர்ப்பு இருப்பினும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தியது. அது தாராளவாதிகள் மற்றும் இடது தீவிரப்போக்கினரின் சிறு பகுதியினர் மத்தியில் ஆதரவைப் பெற்றது. ட்ரொட்ஸ்கியின் முக்கிய பாதுகாப்பாளர்களுள் மிக முக்கியமானவர் Studs Lonigan trilogy இன் ஆசிரியரான எழுத்தாளர் ஜேம்ஸ் டி. ஃபாரெல் (James T. Farrell) ஆவார். இக் குழு அப்போதைய எழுபத்தெட்டு வயது நிரம்பியவரும் முக்கிய அமெரிக்க மெய்யியலாளரான ஜோன் டுவேயை அதன் தலைவராக இருக்க சம்மதிக்க வைத்ததில் அதன் மாபெரும் வெற்றியை ஈட்டியது. டுவே மெக்சிகோவுக்கு பயணித்து மாஸ்கோ பொய்ப்புனைவு வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ட்ரொட்ஸ்கியின் அத்தாட்சிகளை எடுத்து விசாரணை செய்ய இருந்த துணைக்குழுவிற்கு தலைமை ஏற்க சம்மதித்தார்.

ஜோன் டுவே (1859-1952), பல பத்தாண்டுகளாக, அமெரிக்க தாராளவாதத்திற்குள்ளே இருந்த உண்மையான ஜனநாயக மற்றும் கருத்துவாதப் போக்கின் முக்கிய பிரதிநிதியாக இருந்தார். அவர் கட்டுரைகளை எழுதிய மற்றும் உரைகளை நிகழ்த்திய தாராளவாத சமூகத்தின் மத்தியில் புத்திஜீவிதரீதியாக புகழேணியில் இருந்தார். தங்களை தாராளவாதிகள் என்று அழைத்துக் கொண்ட பரந்த பெரும்பான்மையினருக்கு மாறாக, டுவே தனது ஜனநாயக ரீதியான நம்பிக்கைகளை மிக அக்கறையுடன் எடுத்தார். லியோன் ட்ரொட்ஸ்கி பாதுகாப்புக்கான குழுவுடன் உடன்படுவதாகவும், மேலும் அதனது தலைவராக ஆகவும் அவர் எடுத்த முடிவு அவரது சிந்தனையில் மேலோங்கி இருந்த ஜனநாயக கருத்துவாதத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது.

டுவே, லியோன் டரொட்ஸ்கியின் பாதுகாப்புக்கான குழுவுடன் சேர்ந்தார் ஏனெனில், முதலாவது, ட்ரொட்ஸ்கி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டிய உரிமையை மறுக்க மாட்டார் என்று அவர் நம்பினார். டுவே சந்தர்ப்பவாத வகையறா அல்ல, ஜனநாயகம் மற்றும் உண்மையின்பால் ஐம்பதுக்கு ஐம்பது மனப்பாங்கு கொண்ட மக்கள் முன்னணி தாராளவாதி அல்ல. மால்கம் கோலியை போன்றவர்களுக்கு உண்மை என்பது பொதுவில் மிகச்சிறந்த விஷயமாகும். அதுவும் சிறப்பாக நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழும்பொழுது அது அனைத்து சொற்திறனுடனும் பாதுகாக்கப்பட வேண்டியதாக இருந்தது. உண்மையுடனான அவர்களது பிரச்சினை அவர்களது அந்தஸ்து, அவர்களது வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக் கட்சியின் தலைவிதி போன்ற மிகவும் அழுத்துகின்ற தனிப்பட்ட மற்றும் அரசியல் அக்கறைகளின் வழியில் அது ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது மட்டுமே எழும்.

ஆனால் மாஸ்கோ வழக்குகளில் எழுப்பப்பட்ட டுவேயின் கவலைகள், வெறுமனே நேர்மையான மனித உரிமை பற்றியதல்ல. அல்லது, அதனை ஒருவகையில் வேறுபட்டவிதத்தில் வைப்பதெனில், மனித உரிமைகள் பற்றிய அவரது அக்கறைகள் சமூகப் பொருளாதார வாழ்வின் மிக ஆழ்ந்த பிரச்சினைகளுடன் அவர் கொண்ட முன்னீடுபாட்டுடன் பிணைந்து இருக்கின்றது. சமூக முன்னேற்றத்தில் ஆழமாய் நம்பிக்கை கொண்ட மற்றும் ஜனநாயகம் மற்றும் சந்தைப் பொருளாதாரங்களை அடையாளம் காணுவதை ஆராயாமல் ஏற்காத, அமெரிக்க தாராளவாதியின் மனம்சார்ந்த கடும்முயற்சிக்காக டுவே பேசினார். சமூக சமத்துவம் இல்லாத ஜனநாயகம் என்பது ஒரு வெற்றுக் கூடு என்று நம்பப்படுகிறது. முதலாளித்துவத்தை தொடாமல் விட்டுவிடும் சீர்திருத்தவாத, அப்போதைக்கு மட்டும் தணிக்கின்றதற்குமேல் ஒன்றும் வழங்காத, அதன் அடிப்படையில் புதிய பொருளாதார பேரத்தை டுவே எதிர்த்தார். 1930களின் ஆரம்பத்தில் இருக்கின்ற முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்து டுவே மூன்றாவது அரசியல் கட்சியை அமைப்பதற்காக, சக்திமிக்க வகையில் இல்லாதபோதும், கடுமையாக உழைத்தார். அவர் மாபெரும் பொருளாதார மந்தநிலையை முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத விளக்கிக்காட்டலாகக் கருதினார்.

தான் புரிந்துகொண்டவாறு, தாராளவாதத்தின் தலைவிதியை முதலாளித்துவ அமைப்பின் தலைவிதியுடன் முடிச்சுப்போடுவது அதற்கு தேவைப்படுவதால், தாராளவாதத்திற்கு அத்தியாவசியமானது எதுவுமில்லை என்று டுவே சில அப்பாவித்தனத்தோடு வாதிடுகிறார். ஜனநாயகக் கோட்பாடு அமெரிக்க தாராளவாதத்தால், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சமத்துவத்திற்கு அளிக்கும் அர்ப்பணிப்பால் ஆதரவு கொடுக்கப்பட்டது, அவை நிகழ்கால முதலாளித்துவ சமுதாயத்தின் அபிவிருத்தியுடன் சமரசமற்ற மோதலில் இருக்கிறது என்று அவர் வியுறுத்தினார். அதனது வரலாற்று அபிவிருத்தியில் தாராளவாதம் முதலாளித்துவ பொருளாதார நலன்களின் வெளிப்பாடு மற்றும் அதன் பொதுவான உலகப் பார்வையும் ஆகும் என்று டுவே உறுதிப்படுத்தினார். பத்தொனபதாம் நூற்றாண்டில் தாராளவாதத்தால் பலப்படுத்தப்பட்ட ஜனநாயக குறிக்கோள்கள் இருபதாம் நூற்றாண்டின் சமூக மற்றும் அரசியல் யதார்த்தங்களுடன் மோதலுக்கு வந்திருந்தன. வரலாற்று நிலைமைகளில் மாற்றத்தை உணரத்தவறும் அவர்கள், டுவேயின்  கண்களில் போலிதாராளவாதிகள் ஆகியிருந்தனர், அவர்கள் சந்தைப் பொருளாதாரங்களை மற்றும் அது உருவாக்கிய அனைத்து சமூக அநீதி மற்றும் துன்பத்தை சட்டப்படி முறையாக்குகின்ற அதேவேளை, ஜனநாயகத்திற்கு வாயளவில் மட்டும் மரியாதை தருகின்றனர். டுவே மார்க்சிஸ்டோ அல்லது புரட்சியாளரோ அல்ல. சோசலிசம் அடைந்தாக வேண்டிய அல்லது அடையக்கூடிய ஒரு வழிமுறையான வர்க்கப் போராட்டத்தை வெளிப்படையாகவே அவர் நிராகரிக்கிறார். சோசலிசம் எப்படி அடையப்பட முடியும் என்ற அவரது சொந்த அல்லது வேறு எவரது திருப்திக்கும் அவரால் ஒருபோதும் விடை கூற இயலாது. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சினை. பழைய திரு. டுவேயின் அரசியல் மற்றும் சமூக எழுத்துக்களில் ஒருவர் கவனத்துக்கு வருவது என்னவெனில், அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய அவரது விமர்சனங்களில், நமது சமகால தாராளவாத புத்திஜீவிதத்தின் பிரதிநிதிகளை விட, அத்தகைய குழுக்கூடலில் தற்போதுள்ள நிலையில் ஒருவர் பேசக்கூடிய அளவுக்கு கூட எவ்வளவு தூரம் மேலும் போகத் தயாரிப்பு செய்திருந்தார் என்பதாகும்.

விசாரணைக் கமிஷனின் தலைவராக அவர் பொறுப்பேற்றபொழுது, தன்னைப் பாதுகாக்கும் ட்ரொட்ஸ்கியின் உரிமையை எதிர்த்த தாராளவாதிகளின் புத்திஜீவித நேர்மையின்மையை டுவே கண்டனம் செய்தார். வரலாற்று உண்மைக்கான போராட்டத்திலிருந்து வரலாற்று முன்னேற்றத்தின் காரணமாக இருப்பதை பிரித்தல் இயலாதது என்று அவர் குறிப்பிட்டார், சோவியத் ஒன்றியத்துடன் ஆதரவாக இருக்கும் தாராளவாதிகளை எதிர்கொள்ளும் பிரச்சினகள் தவிர்க்கப்பட முடியாததவை. மெக்சிகோவிற்குப் புறப்படுவதற்கு சற்று முன் வழங்கிய அவரது உரையில் டுவே அறிவித்தார்:

ஒன்றில், லியோன் ட்ரொட்ஸ்கி ஒட்டுமொத்த படுகொலைக்கும் சதித்திட்டம் தீட்டல், உயிரையும் உடைமைகளையும் அழித்தலுடன் படிமுறைரீதியாக சேதம்விளைத்தல், சோசலிசத்தை அழிக்கும்பொருட்டு சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பகைவர்களுடன் கூட்டுச்சதிக்கு அடித்தளம் அமைத்தலின் தேசத்துரோகம் இவற்றில் குற்றவாளியாக இருப்பார் அல்லது அவர் நிரபராதியாக இருப்பார். அவர் குற்றவாளி என்றால், அளவுக்கதிகமாய் கடுமையாக இருக்கும் வன்மையான கண்டனம் வேறு எதுவும் இருக்க முடியாது. அவர் குற்றவாளி இல்லை என்றால் சோவியத் ரஷ்யாவில் இப்போது உள்ள ஆட்சி படிப்படியான, திட்டமிடப்பட்ட களையெடுப்பு மற்றும் பொய்மைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவேண்டும், வேறு வழி இல்லை. ரஷ்யாவில் சோசலிச அரசைக் கட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு தருபவரை எதிர்கொள்பவருக்கு இவை சந்தோஷமற்ற மாற்றீடுகள் ஆகும். எளிதான மற்றும் சோம்பலான பாதை, மாற்றீடுகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதாகும். ஆனால் மகிழ்ச்சி அற்றதை எதிர்கொள்வதற்கு விருப்பமின்மை தாராளவாதிகளின் பலவீனம் ஆகும். விவகாரங்கள் இதமாகச்செல்லும்பொழுது அவர்கள் துணிவாக இருப்பதற்கு அளவுக்கதிகமாக விருப்பப்படுவார்கள். மகிழ்வற்ற நிலைமைகள், முடிவையும் நடவடிக்கையையும் கோருகின்றபோது அப்போது நடுங்கத் தொடங்குவார்கள். தனி ஒரு உண்மையான தாராளவாதி, அவர் ஒருமுறை மாற்றீடுகளை எதிர்கொண்டால், ஒரு நீடித்த சோசலிச சமூகத்தை கட்டுவதற்கு களைஎடுத்தலும் பொய்மைப்படுத்தலும் ஒரு உறுதியான அடித்தளமாக இருக்கும் என்று கொண்டிருப்பார் என்பதை என்னால் ஏற்க முடியாது.12  Dreyfus வழக்கின் காலகட்டத்தில் சோலாவால் எழுதப்பட்ட வார்த்தைகளை, உண்மை நடைபோடுகிறது ஒருவரும் அதனை நிறுத்தமுடியாது என்பதை மேற்கோள்காட்டி டுவே அவரது பேச்சை நிறைவு செய்தார்.

1937 ஏப்ரலில் டுவே மெக்சிகோவிற்கு பயணித்தார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியால் செய்யப்பட்ட கண்டனங்களாலும் சரீரரீதியான அச்சுறுத்தல்களாலும் அஞ்சிய அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்தப் பணியை அவர் ஏற்பதிலிருந்து கைவிடச்செய்ய முடியவில்லை. ட்ரொட்ஸ்கியை கேள்விகேட்பது, 1937 ஏப்ரல் 10 முதல் 17 வரை ஒரு வாரத்திற்குமேல் நீண்டது. ட்ரொட்ஸ்கியின் அத்தாட்சிகள் கிட்டத்தட்ட 600 அச்சிட்ட பக்கங்களாக நீண்டன. அது ட்ரொட்ஸ்கியின் அரசியல் வாழ்க்கை மற்றும் ஏற்கவைத்தல் என ஒரு விவரமான கணக்கை வழங்கியது.

ட்ரொட்ஸ்கியும் டுவேயும் கவர்ச்சியூட்டும் வேறுபாட்டை முன்வைத்தார்கள். முன்னவர் புரட்சிகர உணர்வு மற்றும் சக்தி கொண்ட, நவீன வரலாற்றில் மிகவும் குலுக்கிய சம்பவங்களின் மையப்புள்ளியாக நின்றிருந்தவர், மாஸ்கோவில் வழக்கு விசாரணைகளை எழ வைத்திருந்த அரசியல் மற்றும் சமூக சிக்கல்களை விளக்குவதற்கு பொறிதட்டும் உவமைகளை பயன்படுத்திய இயங்கியல் நிபுணர். டுவேயோ முற்றுலும் வேறுபட்ட மனிதர்: வெர்மாண்டிலிருந்து வரும் வடபுலத்தவர், கவர்ச்சியற்ற மற்றும் தனது கருத்துக்களால் குத்துச்சண்டைப் பயிற்சி அளிக்கும், பரந்த மக்கள் அணிவகுப்பின் மனிதர் அல்ல மற்றும் யுத்தக் களத்தின் மனிதரும் அல்ல, கல்லூரி விரிவுரை அரங்கின் மனிதர். இருப்பினும், மனப்பாங்கு மற்றும் அரசியல் கருத்துருக்களில் அவர்களது அனைத்து வேறுபாடுகளும் இருப்பினும், முன்னேற்றத்தின் புத்திஜீவித மற்றும் அறவழிப்பட்ட பிரதான ஸ்பிரிங் எனக்கருதும், உண்மைக்கு உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அவரது சொந்த வழியில் ட்ரொட்ஸ்கி, டுவேக்கு அபூர்வமான மற்றும் கிளர்ச்சியூட்டும் பங்களிப்பை செய்தார். மெக்சிகோவில் விசாரணையின் இறுதி கூட்டத்தில், ட்ரொட்ஸ்கி அவரது வாழ்வை, நம்பிக்கைகளை மற்றும் புகழைப் பாதுகாக்கும் நான்கு மணிநேர உரையை அளித்தார். அவரது பேச்சாற்றல் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றும் மிகத் தீவிரமான புத்திஜீவித ஒருங்குவிப்பு தேவைப்பட்ட அவரது பேச்சைத் தொடர்ந்து துல்லியமான தன்வயப்பட்ட அமைதி இருந்தது.

ட்ரொட்ஸ்கி அவரது பேச்சின் முடிவுக்கு வந்தபொழுது மதிப்பிற்குரிய கமிஷனர்களே, என்று கூறினார்:

எனது வாழ்க்கையின் அனுபவத்தில், வெற்றிகளுக்கோ அல்லது தோல்விகளுக்கோ ஒன்றும் பஞ்சம் இருக்காது, மனிதகுலத்தின் தெளிவான, ஒளிமயமான எதிர்காலத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையை அழிக்காதிருந்தது மட்டுமல்ல, மற்றொரு வகையில் அதற்கு அழியா உறுதியையும் வழங்கியுள்ளது. பதினெட்டு வயதில் மாநில ரஷ்ய நகரமான நிக்கோலெய்வ் தொழிலாளர் குடியிருப்புக்கு என்னுடன் எடுத்துச்சென்ற, பகுத்தறிவில், உண்மையில் மற்றும் மனித ஒற்றுமையில் எனக்கிருந்த  இந்த நம்பிக்கையை முழுமையாகவும் நிறைவாகவும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அது இன்னும் பக்குவம் அடைந்திருக்கிறது, ஆனால் ஆர்வத்தில் சற்றும் குறையவில்லை. உங்களது விசாரணைக்குழு அமைந்தது என்ற உண்மையில் அதன் தலைமையில் நடுங்காத அறவழிப் பொறுப்புக்கொண்ட ஒரு மனிதர் இருக்கிறார் என்ற உண்மை, அவரது வயதின் காரணமாக அரசியல் அரங்கில் சலசலப்புக்களுக்கு அப்பால் தொடர்ந்து இருக்கவேண்டிய உரிமை உடைய ஒரு மனிதனாய் இருக்கிறார் என்ற உண்மை எனது வாழ்வில் அடிப்படை அம்சத்தைக் கொண்டிருக்கும் புரட்சிகர நம்பிக்கைவாதத்தின் ஒரு புதிய மற்றும் உண்மையான சிறப்புவாய்ந்த வலிமைபெருகிய நிலையை நான் பார்க்கிறேன்.

விசாரணைக் குழுவின் சீமான்களே! சீமாட்டிகளே! திருவாளர் அட்டர்னி ஃபினேர்ட்டி! மற்றும் எனது நண்பர் மற்றும் பாதுகாப்பாளர் கோல்ட்மேன்! உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை வெளிப்படுத்துவதற்கு என்னை அனுமதியுங்கள். அது, இந்த விஷயத்தில் தனிப்பட்ட தன்மையைப் பெறாது. முடிவில், கல்வியூட்டுபவர், மெய்யியலாளர் மற்றும் உண்மையான அமெரிக்க தாராளவாதத்தின் உருவமாகத்திகழும், உங்கள் குழுவிற்கு தலைமை தாங்கும் அறிஞருக்கு எனது ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். 13

இதற்கு டுவே பதிலளித்தார், நான் கூறக்கூடிய எதுவும் உச்சக்கட்ட நிகழ்வுக்கு எதிராக இருக்கும் என்று பதிலளித்து, அவர் விசாரணைக் கேட்பை விரைவாக ஒரு மேன்மையுடையதாக்கும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

டுவே குழு கண்டறிந்தவை

கமிஷனர்கள் அமெரிக்காவிற்கு திரும்பினர். ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் விரிவான கண்டறிதல்களை வழங்கினர், அவை மாஸ்கோவில் வழக்கு விசாரணைகளில் ஸ்ராலினிச ஆட்சியால் வைக்கப்பட்டிருந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் மறுத்தன. மிக முக்கியமான கண்டறிதல்களை மேற்கோள் காட்டுவதற்கு என்னை அனுமதியுங்கள்:

·         கண்டறிதல் எண் 16: மாஸ்கோ வழக்கு விசாரணைகளில் பல்வேறு பிரதிவாதிகளுக்கு சதிச்செயல் அறிவுறுத்தல்கள் என்று கூறப்படுவதை அறிவித்தார் என்று கூறப்படும் கடிதங்கள் ஒருபோதும் இருந்ததில்லை என்று நாம் நம்புகிறோம்; மற்றும் அவை தொடர்பான அத்தாட்சி வெறுமனே புனையப்பட்டது.

·         கண்டறிதல் எண் 17: ட்ரொட்ஸ்கி அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைத்தொழில் முழுவதும் தனிநபர் பயங்கரத்தின் தொடர்ச்சியான எதிராளியாக எப்பொழுதும் இருந்திருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். குழுவானது ட்ரொட்ஸ்கி மாஸ்கோ வழக்கு விசாரணையில் உள்ள பிரதிவாதிகள் அல்லது சாட்சிகள் எவருக்கும் எந்த அரசியல் எதிராளியையும் படுகொலை செய்வதற்கு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என மேலும் காண்கிறது.

·         கண்டறிதல் எண் 18: ட்ரொட்ஸ்கி மாஸ்கோ வழக்கு விசாரணையில் உள்ள பிரதிவாதிகள் அல்லது சாட்சிகள் எவரையும் நிர்மூலமாக்குவதில், தகர்ப்பதில், மற்றும் திசைதிருப்புவதில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அறிவுறுத்தி இருக்கவில்லை என்று நாம் காண்கிறோம். மாறாக, அவர் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச தொழிற்துறையையும் விவசாயத்தையும் கட்டி எழுப்புவதை தொடர்ச்சியாக ஆதரித்து வருகின்றார் மற்றும் ரஷ்யாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தற்போதைய ஆட்சியின் நடவடிக்கைகள் தீங்குபயப்பதன் அடிப்படையில் அதனை விமர்சித்து வந்திருக்கிறார். அவர் எந்த அரசியல் ஆட்சியையும் எதிர்க்கின்ற ஒரு வழிமுறையாக நாசவேலைக்கு ஆதரவாக இருந்ததில்லை.

·         கண்டறிதல் எண் 19: ட்ரொட்ஸ்கி மாஸ்கோ வழக்குவிசாரணைகளில் குற்றம்சாட்டப்பட்ட அல்லது சாட்சியாக இருந்த எவரையும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தங்களுக்குள் நுழையுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை என்று கண்டறிகிறோம். மாறாக, அவர் எப்பொழுதும் சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதை சமரசமற்றவகையில் ஆதரித்தார். அவர் சேர்ந்து சதித்திட்டம் வகுத்ததாக குற்றம் சாட்டப்படும் அந்நிய அரசுகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பாசிசத்திற்கெதிரான மிகவும் ஒளிமறைவின்றிப் பேசும் கருத்தியல் ரீதியான எதிராளியாகவும் இருந்திருக்கிறார்.

·         கண்டறிதல் எண் 20: சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சிக்கு ட்ரொட்ஸ்கி ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை, சதித்திட்டம் தீட்டவில்லை மற்றும் முயற்சிக்கவில்லை என அனைத்து சான்றுகளின் அடிப்படையில் நாம் கண்டறிந்தோம். மாறாக, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியையும் வேறெங்கும் அதன் இருப்பையும் அவர் எப்போதும் சமரசத்திற்கிடமின்றி எதிர்த்து வந்திருக்கிறார்.

விசாரணைக் குழுவானது பின்வரும் முடிவுரையோடு அதன் கண்டறிதலை தொகுத்தளித்தது: ஆகையால் மாஸ்கோ வழக்குகள் பொய்புனைவுகளாய் இருப்பதாக நாம் காண்கிறோம். ஆகையால் நாம் ட்ரொட்ஸ்கியையும் செடோவையும் குற்றவாளிகள் அல்ல என்று அறிகிறோம். 14

விசாரணைக் குழுவானது அவரில், சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து குற்றவாளி அல்ல என்று கண்டறிதலுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கமுடியும் என்று ட்ரொட்ஸ்கி ஒரு புள்ளியைக் குறிப்பிட்டார். அது அதற்கும் அப்பால் சென்று, மாஸ்கோ விசாரணைகள் பொய்புனைவுகளாக இருந்தன என்று ஐயத்திற்கிடமல்லாத வகையில் விளக்கியது. செயல்முறை அளவில், விசாரணைக் குழுவானது, வழக்கு விசாரணைகளை ஒழுங்கு செய்தவர்கள், பிரதானமாக ஸ்ராலின், உலக வரலாற்றிலேயே மோசமான குற்வாளிகளின் மத்தியில் மிக மோசமானவர்களாக இருந்தனர் என்று கண்டறிந்தது. ஸ்ராலினும் அவரது கூட்டாளிகளும் வழக்கில் பிரதிவாதிகளாய் இருந்தவர்களை மட்டுமல்லாமல், நூறாயிரக்கணக்கான ஏனைய அப்பாவி நபர்களையும் படுகொலை செய்வதற்கான ஒரு சட்டரீதியான மூடு திரையை வழங்கும்பொருட்டு அரசு பொய்புனைவுகளை ஜோடித்திருந்தனர்.

இப்பொழுது, சோசலிச சமத்துவக் கட்சியானது, ரிச்சார்ட் பைப்ஸின் மாஸ்கோ விசாரணைகளின் நன்றிப்பெருக்குடைய புனருத்தாரணத்தை ஏன் பகிரங்கமாக எதிர்க்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஸ்ராலினது குற்றவியல் வழக்கு சட்ட நவடிக்கைகள், பயங்கரத்தினை சட்டபூர்வமாக்கியது, நூறாயிரக் கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாகியது மற்றும் சர்வதேச சோசலிசத்தின் ஆக்கநலத்திற்கு பலத்த அடியைக் கொடுத்தது. வழக்கு விசாரணைகளை அம்பலப்படுத்துவதற்கான அவரது போராட்டம் ட்ரொட்ஸ்கியினது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளை விழுங்கியது. மாஸ்கோ வழக்கு விசாரணைகள் இறுதியில் அவநம்பிக்கைக்கு ஆளாயின. சோவியத் ஒன்றியம் 1991ல் வீழ்ச்சி அடைவதற்கு சற்று முன்னர், சோவியத் அதிகாரத்துவம் கூட இந்த சட்ட நடவடிக்கைகள் சட்டரீதியான போலித்தன்மை கொண்டவை என்று ஒப்புக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டது. அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்ட அனைவரும் உத்தியோகபூர்வமாக புனருத்தாரணம் செய்யப்பட்டனர்.

இந்த வரலாற்று வெளிச்சத்தில், பைப்ஸ் அவரது பிற்போக்கு அரசியல் நலன்களிலன் பேரில், மாஸ்கோ விசாரணைகளை புணருத்தாரணம் செய்வதற்கான அவரது முயற்சியை நம்மால் மன அமைதியுடன் செயலற்று பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அத்தகைய நிகழ்வுகள் பற்றி பொய்கள் கூறப்படும்பொழுது, மனிதகுலத்தின் வரலாற்று நனவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்படுகிறது. யூத இன ஒழிப்பு பற்றிய உண்மையை மறுக்கும் முயற்சிகளைப் பற்றிப் படிக்கும்பொழுதோ அல்லது கேட்கும்பொழுதோ நாம் ஒவ்வொருவரும் சினம் கொள்கிறோம். பாசிசத்தால் ஆறு மில்லியன் யூத மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை மறுப்பதன் பின்னே இன அழிப்புக்கான எதிர்கால நடவடிக்கைகளின் தாயாரிப்பு இருக்கிறது. நவீன வரலாற்றில் யூத இன ஒழிப்புடன் மிக நெருக்கமாக ஒப்பிட தகுதிபெற்ற சம்பவம் சோவியத் ஒன்றியத்தின் புத்திஜீவிகள் மற்றும் சோசலிச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஸ்ராலினிச பயங்கரமாகும்.

நாஜிக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட யூத இன ஒழிப்பு மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் பயங்கரம் இரண்டும் ஐரோப்பா முழுவதிலும் சோசலிச தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் இயக்கத்திற்கு எதிர்ப்புரட்சிகர எதிர்வினையின் குற்றகரமான உற்பத்திப்பொருட்களாகும். நாஜி மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகளின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளங்கள் முற்றிலும் வேறானவை என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் அரசியல் நோக்குநிலையில், இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டுகளின்பொழுது, மார்க்சிசத்தின் செல்வாக்கின் கீழ், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக ஆகி இருந்த சர்வதேச சோசலிசத்திற்கு, ஒரு பிற்போக்கு தேசியவாத பதிலளிப்பின் பண்புருவாக ரஷ்ய ஸ்ராலினிசம், ஜேர்மன் பாசிசம் இரண்டும் விளங்கின. மார்க்சிசத்தால் தொழிலாள வர்க்க இயக்கத்தில் தலைமுறை தலைமுறைகளாக கட்டி எழுப்பப்பட்டு வந்த அரசியல், புத்திஜீவித, கலாச்சார மற்றும் அறநெறிப்பட்ட அடித்தளத்தை அழிப்பதற்கு, ஹிட்லரும் ஸ்ராலினும் தங்களது சொந்த வழிகளில் முயற்சித்தனர். ஹிட்லர் இன அழிப்பு முறையைப் பயன்படுத்தினார். ஸ்ராலின் மிகவும் துல்லியமாக: அவரது இனப்படுகொலை, அரசியல் தேர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர்களை அவர் அக்டோபர் புரட்சியை தூண்டிவிடக்கூடிய சோசலிச மரபுகளின் செல்வாக்கை பிரதிபலிக்கும் அரசியல் மற்றும் புத்திஜீவித சாதனைகள் மூலமாக இனம்கண்டார்.

இந்த விரிவுரையின் தலைப்பில் எழுப்பப்பட்ட விஷயத்திற்கு மாஸ்கோ வழக்கு விசாரணைகளும் அமெரிக்காவில் அரசியல் வாழ்வின் தற்போதைய நெருக்கடியும் இப்பொழுது நேரடியாக திரும்பிவருவோம். விசாரணைகள், இந்த நாட்டின் அரசியல் வாழ்வின் அபிவிருத்தி மீது ஆழ்ந்த மற்றும் நீடித்த பாதிப்பை உருவாக்கின. மக்கள் முன்னணி தாராளவாதிகளின் ஒரு பகுதியினர் ஸ்ராலினிச இடதுகளுடன் கொண்ட விளையாட்டுக்காதல் கசப்பான அரசியல் பின்சுவையை விட்டுச்சென்றிருக்கிறது. ஒரு அடிப்படை அர்த்தத்தில், மாஸ்கோ விசாரணையால் பல தாராளவாத புத்திஜீவிகள் முற்றிலும் செல்வாக்கு இழக்காவிட்டாலும், ஆழ்ந்த தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். 1938 மார்ச்சில் மூன்றாவது விசாரணையால் இம்முறை பிரதான பிரதிவாதியாக புக்காரின் இருந்தார் அனைத்தும் சோவியத் நீதிமுறையுடன் நன்றாகப் போகிறது என்ற பாசாங்கை பராமரிப்பது இயலாததாக ஆகியது. ஆயினும் எங்கும் இருக்கும் ஸ்ராலினிசத்தின் தாராளவாத பாதுகாப்பாளர்கள் தாங்கள் தவறு செய்துவிட்டதாக அல்லது ஏன் தங்களது கணிப்பு தவறாக இருந்தது என்று ஆய்வு செய்ய ஒப்புக்கொள்வதற்கு மனநாட்டம் கொள்ளவில்லை. இந்த வட்டாரங்களில் ஒரு புதிய மனநிலை எழ ஆரம்பித்தது. ஸ்ராலினிசத்தின் தாராளவாத புகழ்ச்சியாளர்கள் இப்பொழுது வழக்குவிசாரணைகளை ஒருவேளை நீதியின் போலித்தன்மை என்று உணரத்தொடங்கினார்கள். ஆனால் மாஸ்கோவில் துரதிரஷ்டவசமான சம்பவங்கள், சமூக மாற்றம் புரட்சிகர வழிமுறையினூடாக நாடப்படும்பொழுது என்ன நிகழும் என்று காட்டியது என அவர்கள் கூறிக்கொண்டார்கள். வன்முறை வன்முறையைக கொண்டுவருகிறது! மாஸ்கோ விசாரணைகள் போல்ஷிவிசத்தின் அறம்பிறழ்ந்த முறையிலிருந்து இல்லையென்றால் அறமற்றதன்மையிருந்து எழுகிறது. 1937ல் நிகழ்ந்தது 1917ல் தொடங்கிவிட்டது. ஸ்ராலின் கெட்டவராக இருக்கலாம், ஆனால் ட்ரொட்ஸ்கியோ மிக மோசமானவராக இருந்திருப்பார்!

பெரிய அளவுக்கு, சோசலிசத்தை இழிவுபடுத்துவதற்கு வருடக்கணக்கில் திரும்பத்திரும்ப முடிவற்ற வகையில் பட்டுப்பழமை ஆகிப்போயிருந்த அதே விவாதங்கள், 1930களின் இறுதியில் திகிலூட்டும் சம்பவங்களில் அதன் குற்ற உடந்தைக்காக அமெரிக்க தாராளவாதத்தால் செய்யப்பட்ட பாதுகாப்பு நியாயப்படுத்தல்களில் அற்றின் மூலத்தைக் கொண்டிருக்கிறது. ஸ்ராலினிசத்துடனான தாராளவாத நம்பிக்கைத் தகர்வானது, குறைந்த எதிர்ப்பின் வழியே மேற்சென்றது அது சோவியத் அதிகாரத்துவம் பற்றிய புரட்சிகர மார்க்சிச விமர்சனத்தை நோக்கியதாக அல்ல, மாறாக சோசலிசத்திற்கான எந்தவித ஆதரவையும் அல்லது எந்தவித செயலூக்கமான நலனையும் பொதுவில் கைவிடுவதை நோக்கியதாக இருந்தது. இந்தப் போக்கு 1939ல் ஸ்ராலின்ஹிட்லர் ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் சிறப்பாக உச்சரிக்கப்பட்டது, அது சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் நண்பர்கள் தொழிலாள வர்க்கத்தை மற்றும் சர்வதேச சோசலிசத்தை காட்டிக்கொடுத்ததாக புரிந்துகொள்ளப்படவில்லை அதனை அவர்கள் மன்னித்து விடவும் கூடும் மாறாக அவர்கள் ரூஸ்வெல்ட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் காட்டிக்கொடுப்பாளர்களாகவே புரிந்துகொள்ளப்பட்டனர்.

1941 ஜூனில் நாஜி ஆக்கிரமிப்பை தொடர்ந்து டிசம்பரில் இரண்டாம் உலக யுத்தத்திற்குள் அமெரிக்கா நுழைந்ததை தொடர்ந்து, ஸ்ராலினிசத்திற்கும் தாராளவாத புத்திஜீவிகளுக்கும் இடையில் தற்காலிக சந்தர்ப்பவாத ஊடாடல் இருந்தது. தங்களது புகழ் மற்றும் பிழைப்புக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல், சோவியத் ஒன்றியத்தின் நட்பு ரீதியான உணர்வுகளின் வெளிப்பாட்டுடன் இணைக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த மகிழ்ச்சியான நிலைமை யுத்தம் முடிவடைவது வரைக்கும் மட்டுமே நீடித்தது, அல்லது இன்னும் துல்லியமாகச் சொன்னால், சேர்ச்சில் அவரது இரும்புத்திரை உருவகத்தை 1946 மார்ச்சில், மிசோரியில் புல்டனில் அவரது உரையில் வடிவமைக்கும் வரைக்கும் நீடித்தது.

தாராளவாதமும் குளிர்யுத்தமும்

குளிர்யுத்தம் தொடங்கியதும், பொதுக் கருத்தானது விரைந்து வலது புறத்திற்கு நகர்ந்தது. அமெரிக்க தாராளவாதத்தின் அணிகளில்  மூர்க்கமான  கம்யூனிச எதிர்ப்பு அடித்துச்சென்றது, அது தீர்க்கமான வகையில் பிற்போக்கு சூழலுக்கு பங்களித்தது, அது இல்லாமல் 1940களின் பின்னரும் 1950களின் ஆரம்பத்திலுமான வேட்டையாடல்கள் இடம்பெற்றிருக்காது.

அமெரிக்காவில் புத்திஜீவித மட்டம் மற்றும் அரசியல் சூழல் மீது அத்தகைய அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்த இருந்த அரசியல் பிற்போக்கு அலைக்கு பங்களிப்பு செய்வதில் அமெரிக்க தாராளவாதம் இழிவான பங்காற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நிச்சயமாக, யுத்தத்தை தொடர்ந்து வந்த பொருளாதார மேல்நோக்கிய திருப்பம், தீவிர அரசியல் போக்குகளை பலவீனப்படுத்துவதில் தீர்க்கமான சடரீதியான காரணியாக இருந்தது. செல்வச்செழிப்பு திரும்பி வருதலும் உலக விவகாரங்களில் அமெரிக்காவின் புதிய மேலாதிக்கமும் முதலாளித்துவத்திற்கான வாய்ப்பு வளத்தில் ஒரு நம்பிக்கை புத்துயிர்ப்பை உருவாக்கியது. அமெரிக்க நூற்றாண்டு என்று சொல்லப்படுவது ஆரம்பமானது. சமூக நிலைமைகள் மேம்பாடடைந்தது அல்லது குறைந்த பட்சம் அமெரிக்க முதலாளித்துவம் அதன் அன்றாடம்நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளை கையாள்வதற்கு சடரீதியான வளங்களைக் கொண்டிருந்தது என்ற அர்த்தத்தில், பழமைவாதம் அதிகரிப்புக்கும் தாராளவாதத்தின் மிகையான திருப்திக்கும் பங்களிப்பு செய்தது.

ஆனால் அமெரிக்க கம்யூனிச எதிர்ப்பின் விசித்திரமான கொடு மனப்போக்கு, சிறப்பாக அந்த அளவு சிறு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பையே சந்தித்தது என்ற உண்மையானது, போருக்குப் பிந்தைய செழுமையின் சடரீதியான சூழலுக்கு இயற்பண்பாய் அமைந்திருக்க முடியாது. ஏனைய அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான காரணிகள் கட்டாயம் எண்ணிப்பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக, அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் சிடுமூஞ்சித்தனமும் நேர்மையற்றதன்மையும் அவர்களை தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதிகளுக்கு அப்பட்டமாய் வெறுப்புகொள்ள வைத்ததில் வெற்றி அடைந்திருந்தது அந்த அளவை ஒருவர் குறைத்து மதிப்பிடமுடியாது. ஸ்ராலினிச கூலி என்ற பதம் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் நாளாந்த கலைச்சொல் தொகுப்பில் அங்கமாகி இருக்கிறது, மற்றும் அது இரு முகங்கொண்ட குட்டி தொழிலாளர் அதிகாரத்துவத்தை திடீரென்று தோன்றச்செய்து - அது தொழிலாள வர்க்கத்தின் நலன் மீதாக அதன் பாதிப்பு பற்றி எந்த அக்கறையும் இன்றி அண்டிப் பிழைக்கும் நிலை கொண்டது.

1940 ஆகஸ்டில் ட்ரொட்ஸ்கியை படுகொலைசெய்வதற்கு இட்டுச்சென்ற ஜிபியு சதியில் அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர், மற்றும் அவர்கள் 1941ல் ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கட்சித் தலைவர்களை மக்களை அரசுக்கு எதிராகத்தூண்டுதல் என்று ஜோடிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்குத் தொடுப்பதை ஆதரித்தனர். எந்தச் சட்டங்கள் பல ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட இருந்ததோ அதே சட்டங்களை அவர்கள் தொழிலாள வர்க்கத்தில் உள்ள அவர்களது அரசியல் எதிராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை அங்கீகரித்தார்கள். நாஜி எதிர்ப்பு அமைப்புக்களில் அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் தங்களின் புகழை அழிவிலிருந்து காப்பாற்றிக்கொண்ட, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஸ்ராலினிச கட்சிகளைப் போலல்லாமல் அமெரிக்காவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்துறைப் போர்க்குணத்தின் வெளிப்பாடுகள் அனைத்தையும் எதிர்த்தது மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது அரசியல் தீவிரமயமாக்கத்தையும் எதிர்த்தது. இவ்வாறு யுத்தத்தின் முடிவில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணம் மிக்க பகுதியினர் மத்தியில் உண்மையில் அனைத்து செல்வாக்கையும் இழந்திருந்தனர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி போன்று கோட்பாடற்ற, சிடுமூஞ்சித்தனமான மற்றும் ஏமாற்றுத்தனமான அமைப்பு மட்டுமே, சிஐஓ (CIO) அதிகாரத்துவத்தில் உள்ள தங்களின் வலதுசாரி எதிராளிகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நலன்காப்பவராக தங்களைக் காட்டிக்கொள்வதை சாத்தியமாக செய்திருக்க முடியும்.

அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளின் நடவடிக்கைகளோ, அதற்காக, சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகளோ தாராளவாத புத்திஜீவிகளின் போருக்குப் பிந்தைய வலது புறம் நோக்கிய வேட்கைக்கான போதுமான விளக்கத்தை தரமுடியவில்லை கட்டாயம் விடையளிக்கப்பட வேண்டிய கேள்வி, ஏன் ஸ்ராலினிசத்திற்கு அவர்களது எதிர்ப்பானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குளிர்யுத்தக் கொள்கைகளுக்கான ஆதரவில் முதன்மை வகை வெளிப்பாட்டைக் கண்டது. இந்தக் கேளவிக்கான விடையின் முக்கியமான பகுதி கட்டாயம் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியின் தோற்றம் மற்றும் இயல்பு பற்றிய தத்துவார்த்த மற்றும் அரசியல் இரண்டையும் அவர்கள் புரிந்துகொள்வதில் அடிப்படைத் தோல்வியில் காணக்கிடைக்கும். 1936க்கும் 1946க்கும் இடையில் சோவியத் ஒன்றியம் தொடர்பாக தாராளவாத புத்திஜீவிகளின் மனப்பாங்கில் திடீர் மாற்றம் இருந்தது. இருப்பினும், அங்கு சோவியத் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகளுக்கு இடையில் ஒரு திட்டவட்டமான அரசியல் மற்றும் தத்துவார்த்த தொடர்ச்சி இருந்தது. அவர்கள் ஸ்ராலினுக்கு எதிராக ட்ரொட்ஸ்கியை ஆதரித்தபொழுது, பின்னர் ஸ்ராலினுக்கு எதிராக ட்ரூமெனை ஆதரித்தபொழுது, தாராளவாத புத்திஜீவிகள் ஸ்ராலினிசம் மற்றும் மார்க்சிசத்தின் அடையாளத்திலிருந்து மேற்சென்றனர்.

இது தாராளவாத புத்திஜீவிகளை அரசியல் ரீதியாக மற்றும் புத்திஜீவித ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிராத நிலையில் வைத்துள்ளது. மார்க்சிசத்திற்கும் சோசலிசத்திற்கும் ஸ்ராலினிசத்தை சமப்படுத்தும் கவனமாக சிந்திக்கப்படாத சூத்திரத்தின் அடிப்படையில், தாராளவாதிகள் இரண்டே மாற்றீடுகளுக்கு தங்களை விட்டிருக்கிறார்கள்: முதலாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் என்றவகையில் வலது பக்கத்திலிருந்து ஸ்ராலினிசத்தை எதிர்ப்பது; இரண்டாவது ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களாக சேவை செய்வது. தி நியூ ரிபப்ளிக் முதலாவது முகாமில் வந்து சிக்கிக்கொண்டது; தி நேஷன் இரண்டாவது முகாமில் சிக்கிக்கொண்டது.

அமெரிக்காவில் உள்ள தாராளவாத மற்றும் ஜனநாயக புத்திஜீவிகள் ஆகியோரது தலைவிதியானது சோவியத் ஆட்சியின் இயல்பைப்பற்றிய புரிதல் இல்லாமல் ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் ஒன்றுசேர்ந்த கோட்பாட்டு அடிப்படையிலான தீவிர எதிர்ப்பின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டியது. 1930களில் தாராளவாத புத்திஜீவிகள், சில விதிவிலக்காக, ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் அடையாளம் காணலை ஏற்றுக்கொண்டனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, அது இன்னும் இந்தப் பொய்யான மற்றும் பிற்போக்கு அடையாளத்தின் அடிப்படையில் மேற்செல்கிறது. சோவியத் ஒன்றியம் பற்றிய தங்களின் மதிப்பீட்டை எதிர்நிலைக்கு திருப்பிக்கொண்டவர்கள், 1930களில் ஸ்ராலினிசத்திற்கு அளித்த சாதகமான அம்சங்களை பத்தாண்டுகளுக்கு பின்னர் எதிர்மறையாக மாற்றிக்கொண்டவர்கள், தவிர்க்க முடியாத வகையில் அரசியல் மற்றும் கலாச்சார வேட்டையாடலின் பின்னே உள்ள நிலைக்குள் வீழ்ந்தார்கள்.

இறுதி ஆய்வில், 1940களின் இறுதியில் தாராளவாத புத்திஜீவிகளின் பரிணாமம் ஆனது குட்டிமுதலாளித்துவ சமூக அடுக்கின் சடரீதியான நலன்களில் வேரூன்றி இருந்தது, அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் அதிலிருந்துதான் ஆட்சேர்க்கப்பட்டார்கள். இந்த சமூகத்தட்டிற்குள்ளே பெருமளவில் பொதுவாகக் காணப்படும் தனிப்பட்ட குணாம்சங்கள் வறட்டுக்கௌரவம், தன்னலம், கோழைத்தனம் முதலியன இந்த நிகழ்ச்சிப்போக்கில் பல்வேறு தனிநபர்களால் ஆற்றப்பட்ட பங்கை தீர்மானிப்பதில் பங்களிப்புச்செய்யும் காரணிகளாக இருந்தன. ஆனால் புத்திஜீவித காரணியை அதாவது, அக்டோபர் புரட்சி பற்றிய பொதுவான தத்துவார்த்த புரிந்துகொள்ளும் திறமின்மை மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசத்தின் அரசியல் தோற்ற மூலங்களும் முக்கியத்துவமும் பற்றிய புரிதலின்மையை கட்டாயம் தள்ளுபடி செய்துவிடக்கூடாது. 1940களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னே அணி வரிசையில் நின்றது தாராளவாதிகள் மத்தியில் உள்ள கயவர்கள் மற்றும் கோழைகள் மட்டும் அல்லர். ஜோன் டுவே கூட அவரது புத்திஜீவித்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் துணிவு ஆகியவற்றினைக் கைவிடாதிருந்தும், வழக்கு விசாரணையை தொடர்ந்து இடறி விழுந்தார். அவர் வழக்கு விசாரணைகள அம்பலப்படுத்தினார் ஆனால் அவற்றை விளக்க முடியவில்லை. டுவே, போல்ஷிவிச வழிமுறைகள் தவிர்க்க முடியாதவாறு ஸ்ராலினிச குற்றங்களுக்கு வழிவகுத்தன என்ற வெற்றுரையில் அடைக்கலம் புகுந்தார். இந்த அடிப்படையில், அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் தாராளவாத முகாமில் இருந்த அவரது தரம்தாழ்ந்த ஏனையோரின் குளிர்யுத்த கருத்துருக்களுடன் பகிர்ந்து கொண்டார். டுவே உண்மையான வாரிசை, அவர் விட்டுச்செல்லவில்லை என்றால், அமெரிக்க தாராளவாதத்திற்கு அறவே முற்போக்கானது என்று சொல்வதற்கு இனியும் அதனிடம் எதுவும் இல்லை என்பதன் காரணத்தினால் ஆகும்.

தாராளவாத புத்திஜீவிதத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான சிக்கலான உறவு எப்படி அமெரிக்காவில் அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கையின் தேக்கத்திற்கு பங்களித்தது என்று காட்டுவதற்கு நாம் முயற்சிக்கிறோம். சமூக சிந்தனையின் செயல்முடக்கமானது ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் தவறாக அடையாளம் காணலுடன் கலங்கிக்கிடக்கிறது. பைப்ஸ் போன்ற போலி அறிஞர்களின் பொய்களை மனம்-மரத்துப்போன ஊடகத்தால் ஊதிப்பெருக்கிக்காட்டுவது, அமெரிக்காவில் பிற்போக்கு மற்றும் பெரும்பான்மை வழியைப் பின்பற்றும் அரசியலை மீளத்திணிப்பதற்கு சேவை செய்யும். அக்டோபர் புரட்சியின் தோற்றம், சரிவு மற்றும் வீழ்ச்சி பற்றி புரியாமல் இந்த முட்டுச்சந்திலிருந்து வெளியே வருவதற்கு வேறு வழி இல்லை. இது ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் தொடுக்கப்பட்ட போராட்டங்களை கவனமாக ஆய்வு செய்வதன் அடப்படையில் அல்லாமல் அடையப்பட முடியாது.

புத்திஜீவித பெரும்பான்மைவழி வாதமும் அமெரிக்க சமூகத்தின் நெருக்கடியும்

இந்த பிரச்சினையுடன் பற்றிக்கொள்ள வருவதற்கான தேவை, நிகழ்கால அரசியல் வாழ்நிலையால் விளக்கிக்காட்டப்பட்டது. அமெரிக்காவானது ஒரு சமூக நெருக்கடியினூடாக கடந்து செல்கிறது, அதன் அறிகுறிகள் தங்களது கண்களைத் திறக்க விரும்புபவர்களுக்கும் அத்தோடு தமக்கு நேர்மையாக இருப்பவர்களுக்கும் வெளிப்படையாக இருக்கின்றன. நிலவும் பொருளாதார அமைப்பை பற்றி எந்த சீரிய கேள்வியைக் காண்பதும் உண்மையில் இயலாததாக இருக்கிறது. நிச்சயமாய், வெகுஜன ஊடகத்தினதாய் எதிர்பார்க்கப்படும் அந்தவகையானது எதுவும் இல்லை. ஆனால் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகைகளில் கூட கொச்சையான, ஆர்வ ஈடுபாடு கொள்ளச் செய்யாத மற்றும் ஒரேசீராக இல்லாத கருத்துக்களைத்தவிர வேறொன்றையும் ஒருவர் காணமாட்டார்தான். முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீடை கண்டாக வேண்டும் என்று ஒரு ஆலோசனை கூட அங்கு அருமைதான். அநேகமாக தற்செயலாக ஒரு எழுத்தாளர் அல்லது விரிவுரையாளர் புத்திசாலித்தனமாக ஏதோ சொல்ல முயற்சிப்பதாக தோன்றுவதாக காணநேரும்பொழுது கூட, இந்த தனிநபர், சுய தணிக்கையில் ஈடுபட்டிருப்பார் என்று ஒருவர் உணர்வார், முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளே எது சாத்தியமானது மற்றும் எது அனுமதிக்கக்கூடியது எனும் எல்லைகளுக்கு அப்பால் போகாதவாறு கவனம் எடுப்பார்.

இந்த புத்திஜீவித தேக்கமானது நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது, போருக்குப் பிந்தைய காலகட்டம் வரை தாராளவாத புத்திஜீவிகளின் பரந்த தட்டினருக்குள்ளே ஒரு சமூக அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் வாழுந்தன்மையில் சீரிய சந்தேகங்கள் வருவது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்பதை ஒருவர் அரிதாகத்தான் நினைவுகூர முடியும். புத்திஜீவித மற்றும் அரசியல் பெரும்பான்மையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களை பொறுத்தவரை, 1930களின் தொடக்கத்தில் இருந்து ஜோன் டுவேயின் அரசியல் எழுத்துக்களின் தொகுப்பை எடுத்துப்பார்த்தால் அது மிகவும் வியப்பூட்டுவதாகத்தான் வரும். டுவே ஒரு மார்க்சிஸ்ட் அல்ல. அவர் புரட்சியாளர் அல்லர். உண்மையில், ஒருவர் அதி சிறப்புக்கவனத்தை அவருக்கு ஒதுக்கிவைத்துப்பார்த்தால் அவரை சோசலிஸ்ட் எனக் கருதலாம். ஆனால் இன்றைய தேக்கநிலை மற்றும் பெரும்பான்மைநிலை ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் வாசித்தால் பழைய தாராளவாத மரபின் இந்த போற்றத்தக்க கனவான் அவரது சொந்தநாட்களில் செய்ததைவிடவும் மிகவும் தீவிரமானவராக தோன்றலாம், மற்றும் நிச்சயமாக மிகவும் துணிவுள்ளவராக, மற்றும் இன்று தன்னைத்தானே தாராளவாதி அல்லது தீவிரப்போக்கினர் என்று வரையறுத்துக்கொள்ளும் எந்தப்போக்குக்கும் அதி இடதில் இருப்பதாகத் தோன்றலாம்.

ஒருவர் நூலகத்திற்கு சென்று டுவேயின் அரசியல் மற்றும் சமூக எழுத்துக்களின் ஒரு தொகுதியை புரட்டிப்பார்த்தால், அவர் வாழுகின்ற பகுதிகளை ஒருவர் காணமுடியும், மற்றும் அத்தகைய விஷயங்களை இன்று எழுதுவதென்பது எந்த பெரிய அமெரிக்க பல்கலைக்கழகத்திலும் அவர் வேலைசெய்வதை தடுக்கும் அல்லது, குறைந்த பட்சம் அவரை முக்கியத்துவம் அற்ற நிலைக்கு அனுப்பிவிடும்.

பொருளாதாரத் தாழ்வின்போது எழுதப்பட்ட தனிச்சிறப்பான பகுதி ஒன்றை மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும்:

தற்போதைய நெருக்கடி, அதன் வெளிநோக்கிய உணர்வுபூர்வமான சிறப்பியல்புகளில் முடிந்துவிடும்பொழுது, விஷயங்கள் இயல்பு நிலைமை என்றழைக்கப்படும் ஒப்பீட்டளவில் மிகவும் வசதியான நிலைமைக்கு திரும்பிவிட்டிருக்கும் பொழுது, அவர்கள் மறப்பார்களா? சமூகம் துன்பத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்பதுடன் பரந்த மனப்பான்மையில் அவர்கள் தங்களைத்தாங்களே திருப்தியுடன் பாராட்டிக்கொள்ளக்கூட செய்வார்களா? அல்லது வேலையின்மை துன்பத்தின் காரணங்களை அவர்கள் கண்டறிந்து சமூக அமைப்பை மாற்றி அமைப்பார்களா? முன்னையதை அவர்கள் செய்தால், சமூக அமைப்பு பலாத்காரத்தினால் மாற்றி அமைக்கப்படும் வரை, பொருளாதார தாழ்வின் வேளை விரைவிலோ அல்லது பின்னரோ புதுப்பிக்கப்பட்ட வன்முறையுடன் மீண்டும் நிகழலாம். மாற்றீடு என்பது, சமுதாயத்தின் பொருளாதார மற்றும் நிதி அமைப்பு தம்மை மாற்றி அமைப்பதற்கான ஆழ்ந்து சிந்திக்கபப்பட்ட தேர்வால் ஆன மற்றும் திட்டமிடப்பட்ட முன்கணிப்பால் ஆன விருப்பாக, துன்பத்திற்கான சமூகப் பொறுப்பின் அத்தகைய ஒரு அங்கீகாரமாக இருக்கும்.

அமைப்பு முறையில் ஒரு மாற்றம் மட்டுமே, ஒவ்வொருவரும் வேலைபார்ப்பதற்குரிய உரிமையை உறுதிப்படுத்தும் மற்றும் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கு வகைசெய்யும். 15

அத்தகைய வெளிப்படையான உண்மைகள் இன்று அரிதாகத்தான் பேசப்படுகின்றன. அனைத்து சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஒரு மாபெரும் பொய்யால் மார்க்சிசத்தை ஸ்ராலினிசத்துடன் அடையாளப்படுத்துவதால் சிக்கலுக்குள்ளாக்கப்படுகிறது. சிறப்பாக இன்று, சோவியத் ஒன்றியத்தின் பொறிவு சோசலிசம் சாத்தியமில்லை மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்று எதுவுமில்லை என்று பறைசாற்றப்படுகிறது. இந்தப் பொய்யின் அரசியல் விளைவு யாதெனில், ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியைப் புரிந்துகொண்டு கையாள வருவதற்கான எந்த அக்கறை கொண்ட முயற்சியையும் தடுப்பதாகும். இந்த நெருக்கடியின் இருப்பு பற்றி எங்கு உறுதிப்படுத்தினாலும் விளக்கினாலும் கூட அக்கறை கொண்ட தீர்வு வழங்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக எம்ஐடி (MIT) பொருளியலாளர் லெஸ்டர் துறோ (Lester Thurow) ஆல் அண்மையில் வெளியிடப்பட்ட முதலாளித்துவத்தின் எதிர்காலம் என்ற நூலை எடுத்துக்கொள்வோம். வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கும் பொருளாதார தரவுகளைக் கொண்ட இந்நூல், முதலாளித்துவம் ஒரு சமூக அமைப்பு என்ற அதன் தோல்வியை தெளிவாக விளக்குகிறது.

எவ்வாறாயினும், துறோ முடிவை வரையவில்லை. தங்களைத் தாங்களே தணிக்கை செய்துகொள்வோருள் அவரும் ஒருவராக இருந்தார். இருப்பினும், வளர்ந்துவரும் சமத்துவமின்மை மற்றும் பொதுவான வறுமையின் அதிர்ச்சியளிக்கும் ஆவணப்படுத்தலை அளித்திருக்கிறார். 1980களின் பொழுது ஆண்கள் சம்பாத்தியத்தில் பெற்ற அனைத்து இலாபங்களும் தொழிலாளர் தொகுப்பின் உயர் 20 சதவீதத்தினருக்கு சென்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். அந்த இலாபத்தின் அறுபத்தி நான்கு சதவீதம் உயர் 1 சதவீதத்துக்கு போய்ச்சேர்ந்தது. அதிர்ஷ்டம் கொண்ட 500 நிர்வாக அதிகாரிகளின் சம்பளம், சராசரி உற்பத்தித் தொழிலாளியின் சம்பளத்தைப்போல 35 மடங்கிலிருந்து 157 மடங்காக அதிகரித்தது. கடந்த கால் நூற்றாண்டில் ஆண்களுக்கான உண்மைக்கூலிகள் திடீரென்று வீழ்ச்சி அடைந்ததை துறோ குறிப்பிடுகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி 1973லிருந்து 29 சதவீதம் உயர்ந்திருந்தபோதிலும் சராசரி இடைநிலை ஊதியங்கள் 11 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்தன. இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் உயர் மற்றும் உயர்நடுத்தர வர்க்கங்களில் உள்ளவர்கள் மட்டுமே, அவர்களது வாழ்க்கைத் தரங்களில் உண்மையான வருமான அர்த்தங்களில் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை கண்டிருந்தனர். மற்றொருபுறம், கீழ்ப்படிகளில் இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருபத்தைந்து வயதிற்கும் முப்பத்திநான்கு வயதிற்கும் இடைப்பட்ட வயதினரின் உண்மை சம்பளங்கள் 1970களின் தொடக்கத்தில் இருந்து கால்பங்கு வீழ்ச்சி அடைந்தது. இருபத்திநான்கு வயதிற்குக் கீழே உள்ள நான்குபேரை கொண்ட குடும்பத்திற்கான இளம் தொழிலாளர்களை பொறுத்தவரை, உத்தியோகபூர்வ வறுமை மட்டத்திற்கு கீழ் சம்பாதிக்கும் வீதாச்சாரம் 1979ல் 18 சதவீதத்தில் இருந்து 1989ல் 40 சதவீதமாக அதிகரித்தது.

ஒருவேளை துறோவால் முன்வைக்கப்பட்ட மிகவும் கவனத்தை ஈர்க்கின்றவகையில் வழக்கத்திற்கு மீறிய மற்றும் வியப்பூட்டுகிற உண்மை பின்வருமாறு: 1950க்கும் 2000க்கும் இடையிலான காலகட்டத்தில், தற்போதைய போக்கு இந்த தசாப்தத்தின் முடிவு வரைக்கும் தொடர்ந்தால், அது அமெரிக்க வரலாற்றில் வாழ்க்கைத்தரங்கள் உண்மையான அர்த்தத்தில் உண்மையில் வீழ்ச்சி அடைகின்ற நிகழ்ச்சிக்காலம் என்றவகையில், முதல் அரைநூற்றாண்டைக் குறிக்கும். அங்கு உழைக்கும் மக்களின் பரந்த தொகுதியினரிடையே வாழ்க்கைத் தரங்கள் மீது அத்தகைய பேரழிவுகரமான தாக்கத்தை விளைவிக்கும் பெருநிறுவன ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பின் பரந்த அலைக்காக எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டும் என்கிற விதி என்று உண்மையில்  எதுவும் இல்லை என்று துறோ விளக்குகிறார்.

அளவு வெட்டிக்குறைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் இவற்றின் பாதிப்பு கடுமையானதாகவும் நீண்டு-நீடிப்பதாகவும் இருக்கிறது. 1980களில் ஆட்குறைப்பின் முதலாவது அலையில் வேலை இழந்த 12 சதவீதத்தினர் ஒருபோதும் உழைக்கும் திரளினரிடையே திரும்ப நுழைந்ததில்லை மற்றும் 17 சதவீதத்தினர் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது அப்படியே தொடர்ந்து இருந்தனர். மீண்டும் வேலைக்குச்சேர்ந்த 71 சதவீதம் பேர்களில், 31 சதவீதத்தினர் 25 சதவீதம் அல்லது அதற்கு மேலும் சம்பளக்குறைப்பை பெற்றனர். துறோ, வீடற்றோர் மற்றும் நீடித்தகாலம் வேலையற்றோரின் விரிவடைந்துவரும் உதிரிப்பாட்டாளிகள் பற்றியும் எழுதுகிறார். வீடற்ற மற்றும் திருமணமாகாத ஆண்களில் 40 சதவீதத்தினர் சிறைகளில் இருந்துவருகின்றனர்.

சமூக அவலங்கள் மற்றும் சமத்துவமின்மையின் வளர்ச்சி பற்றி அவர் பின்வருமாறு தொகுத்துக்கூறுகிறார்:

கடந்த இரு தசாப்தங்களில் ஒரு புரட்சியை அனுபவிக்காமல் அல்லது படையெடுப்பைத் தொடர்ந்து ஒரு இராணுவத் தோல்வியை அனுபவிக்காமல், அமெரிக்காவில் நிகழ்ந்ததுபோல சமூக சமத்துவமின்மை அதிகரிப்பில் விரைவாக அல்லது பரவலான பாதிப்பை அநேகமாக எக்காலத்தும் கொண்டிருக்கும் நாடு வேறுஎதுவும் இல்லை. உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) தலைவீத வருவாய் உயர்வை எதிர்கொள்கையில், தற்போதைய வடிவில் உண்மைக்கூலி குறைப்பை முன்னொருபோதும் அமெரிக்கர்கள் பார்த்திருக்கவில்லை. 16

இறுதியாக, துறோ முடிப்பதாவது:

சமத்துவமின்மையை குறைப்பதை தொடங்குவதற்கும் உண்மைக் கூலிகள் உயர்வதை விளைவிப்பதற்கும் தேவையாக இருக்கும் பேரளவிலான மறுசீரமைப்பு முயற்சிகளை உருவாக்கக்கூடிய எந்த தொலைநோக்கும் இல்லாத நிலையில், என்ன நிகழும்? ஜனநாயகத்தில் ஏதாவது முறிபடும் முன்பு, எவ்ளவு தூரத்திற்கு சமத்துவமின்மை பரவலாக முடியும் மற்றும் உண்மைக்கூலிகள் வீழ்ச்சி அடைய முடியும்? அது முன்னர் ஒருபோதும் நிகழ்ந்திராததால் ஒருவருக்கும் தெரியாது. இந்தப் பரிசோதனை ஒருபோதும் முயற்சிக்கப்பட்டிருக்கவில்லை. 17

இங்கு எழுகின்ற கேள்வி, துல்லியமாக பரந்த அளவிலான சமூக மறுசீரமைத்தலின் வகைக்கு வழிகாட்டுவதற்கு, ஏன் அங்கு தொலை நோக்கு இல்லை எனபதுதான், அது அந்த அளவு வெளிப்படையாக தேவைப்படுகிறது. துறோவால் கொடுக்கப்படும் விடை விளக்குகின்ற அதேபுள்ளிதான், இந்த விரிவுரையில் நான் செய்ய விழைவதாகும். அவர் எழுதுகிறார், கம்யூனிசம் மற்றும் சோசலிசத்தின் இறப்புடன் முதலாளித்துவமானது தற்போது ஒரு சாதகமானதை கொண்டிருக்கிறது, அதனிடம் ஒரு போட்டியாளர் என்ற வகையில் குறிப்பிட்ட சூழலில் ஏற்புக்குரியதும் பொருத்தமானதுமான சமூக அமைப்பு இல்லை. ஒரு மாற்று கருத்தியல் இல்லாமல் எதற்கும் எதிராக புரட்சியை வரவேற்பது சாத்தியமானதல்ல. 18

துறோவின் முடிவுரையானது, ஸ்ராலினிசத்தையும் சோசலிசத்தையும் அடையாளம் காணுவதன் பாதிப்பை விளக்குகிறது. மார்க்சிச கோட்பாடுகள் மற்றும் உண்மையான சோசலிச மரபுகளின் அடிப்படையில் புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு வரலாற்றை பொய்மைப்படுத்துவதற்கு எதிரான ஒரு சமரசத்திற்கிடமில்லாத போராட்டம் தேவைப்படுகிறது. இந்தப் போராட்டம் வெல்லும், வரலாறு எதையாவது நிரூபிக்குமானால், நீண்ட காலப்போக்கில், அது இதுதான், உண்மை பொய்களைவிட மிக சக்திவாய்ந்தது.

1 Lecture delivered on April 23, 1996 at Michigan State University in East Lansing.

2 Available: http://www.nytimes.com/1996/03/24/books/the-seeds-of-his-own-destruction.html?pagewanted=all&src=pm

3 Ibid.

4 V.I. Lenin, Collected Works, Volume 36 (Moscow: Progress Publishers, 1966) p. 595.

5 Available: http://www.nytimes.com/1996/03/24/books/the-seeds-of-his-own-destruction.html?pagewanted=all&src=pm

6 Ibid.

7 See Appendices 1 and 2 beginning on page 363.

8 Writings of Leon Trotsky 193637 (New York: Pathfinder Press, 1978), pp. 173174.

9 Ibid., pp.17980. Also available: http://www.youtube.com/watch?v=b3nD5bFm3Jg

10 The Nation, February 2, 1937.

11 The New Republic, April 7, 1937, pp. 267269.

12 Jo Ann Boydston, ed., The Later Works of John Dewey, 19251953, Volume 11, (Carbondale: Southern Illinois University Press, 1987) p. 318.

13 The Case of Leon Trotsky: Report of Hearings on the Charges Made Against Him in the Moscow Trials (New York: Merit Publishers, 1968), pp. 584585.

14 The Later Works of John Dewey, Volume 11, pp. 322323.

15 Jo Ann Boydston, ed., The Later Works of John Dewey, 19251953, Volume 6 (Carbondale: Southern Illinois University Press, 1985), p. 155.

16 Lester C. Thurow, The Future of Capitalism (New York: William Morrow, 1996), p. 42.

17 Ibid., p. 261.

18 Ibid., p. 310.