wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 4


அதிகாரத்துவவாதமும் புரட்சியும்
(உரையாற்றமுடியாமல் போன ஆசிரியரின் அறிக்கையின் சுருக்கம்)

Use this version to print | Send feedback

1. ஒரு சோசலிச உயர் இலக்கை அடைவதில் தடுப்பை ஏற்படுத்தும் முக்கிய நிலைமைகள், மேலும் புரட்சிக்கு சில நேரங்களில் வேதனை தரும் சோதனைகளாகவும் புரட்சிக்கு பெரும் ஆபத்தாகவும் உள்ளன என்பது நன்கு தெரிந்ததே. அவையாவன: அ) போர்க்கால கம்யூனிசத்தில் இயல்பாகவே அழுத்தி வைக்கப்பட்டிருந்த புரட்சியின் உள் சமூக முரண்பாடுகள்; ஆனால் இவை புதிய பொருளாதார கொள்கையின் (NEP) கீழ் தவிர்க்கமுடியாது வெளிப்பட்டு தனது அரசியல் வெளிப்பாட்டை காண முற்படுகின்றன; ஆ) சோவியத் குடியரசிற்கு, ஏகாதிபத்திய அரசுகளினால் பிரதிநிதித்துவப்படும் நீடித்த எதிர்ப்புரட்சிகர அச்சுறுத்தல்.

2. புரட்சியின் சமூக முரண்பாடுகள் என்பன அதன் வர்க்க முரண்பாடுகளாகும். எமது நாட்டின் முக்கிய வர்க்கங்கள் பின்வருமாறு: அ) பாட்டாளி வர்க்கம். ஆ) விவசாயிகள், இ) புதிய முதலாளித்துவ வர்க்கமும் அதனை சுற்றியுள்ள முதலாளித்துவ புத்திஜீவிகளும் ஆகும்.

பொருளாதார பங்கு மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ற நிலைப்பாட்டில் இருந்து நோக்கினால் முதலாவது இடத்தில் அரசினுள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பாட்டாளி வர்க்கமும், எமது பொருளாதாரத்தில் ஆதிக்கம் செய்யும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் உள்ளனர். புதிய முதலாளித்துவ வர்க்கம் முக்கியமாக சோவியத் தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும், அதேபோன்று சோவியத் தொழிற்துறையின் வேறுபட்ட பிரிவுகளிடையேயும் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் வேறுபட்ட பிரிவுகளிடையேயும் ஒரு இடைத்தரகர் பங்கை வகிக்கின்றது. தனது வர்த்தக இடைத்தரகர் என்ற தனது பங்குடன் மட்டும் நின்றுவிடாது உற்பத்தியை ஒழுங்கமைப்பது என்ற பங்கையும் வகிக்கின்றது.

3. மேற்கில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வளர்ச்சியின் விரைவு பற்றிய கேள்வியை சற்று ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், எமது புரட்சியின் போக்கு எமது பொருளாதாரத்தின் மூன்று அடிப்படை கூறுபாடுகளின் ஒப்புமையிலான வளர்ச்சியானால் நிர்ணயிக்கப்படும்; அரசு தொழிற்துறை, விவசாயம், தனியார் வர்த்தக-தொழிற்துறை மூலதனம்.

4. தாராளவாதிகளாலும், மென்ஷிவிக்குகளினாலும் தங்களது சொந்த வளர்ச்சிக்கும், மனச் சமாதானத்திற்குமாக செய்யப்படும் பெரும் பிரெஞ்சுப் புரட்சி (ஜாக்கோபின்களின் வீழ்ச்சி) உடனான வரலாற்று ஒப்புமைகள் மேம்போக்கானவை, முரண்பாடானவை. ஜாக்கோபின்களின் வீழ்ச்சி என்பது சமூக உறவுகளில் முதிர்வடையாத தன்மையினால் முதலிலேயே உறுதியாகியிருந்தது; இடது பிரிவு (அழிவிற்குட்பட்டிருந்த கைவினைஞர்களும் வணிகர்களும் நிறைந்த), பொருளாதார வளர்ச்சி வரக்கூடும் என்ற வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், புரட்சிக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்க முடியாமற் போயிற்று; (பூர்ஷுவாவான) வலது பிரிவு தவிர்க்கமுடியாமல் வளர்ச்சியுற்றது; இறுதியில், பொருளாதார, அரசியல் ரீதியில் கூடுதலாக பின்தங்கியிருந்த ஐரோப்பா பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி பரவுதலை தடுத்துவிட்டது.

இத்துறைகள் அனைத்திலும் எமது நிலைமை ஒப்பிடமுடியாத அளவிற்கு சாதகமான தன்மைகளை கொண்டிருந்தது. நம்மை பொறுத்தவரையில், புரட்சியின் இடது அணியாகவும் மற்றும் கருவுமாக பாட்டாளி வர்க்கம் இருந்தது; இதன் பணிகளும் இலக்குகளும் சோசலிச கட்டமைப்பிற்கான பணிகளுடன் முற்றிலும் இயைந்து இருந்தன. சில வரம்புகளுக்குள் ஒரு புதிய முதலாளித்துவ வர்க்க அமைப்பை அனுமதித்திருந்தபோதிலும்கூட, பாட்டாளி வர்க்கம் அரசியல் ரீதியாக மிகவும் வலுவுற்றிருந்தது; அரசு அதிகாரத்தில் விவசாயிகள் பங்கெடுத்துக் கொள்வதற்கு அது பூர்ஷ்வா, குட்டி முதலாளித்துவ கட்சிகளை இடைத்தரகராக நாடாமல், நேரடியாக கொண்டிருந்தது; இதன் விளைவாக பூர்ஷ்வா அரசியல் வாழ்வில் பங்குபெறுதல் தடைக்குட்பட்டது. ஐரோப்பாவில் இருக்கும் பொருளாதார, அரசியல் நிலைமை புரட்சியின் பரவுதலை தனது எல்லைக்குள் தடுக்கமுடியாத தன்மையை கொண்டுள்ளது என்பதோடு, தன்னுடைய பகுதிக்கு அப்பாலும் புரட்சி பரவுதலை தவிர்க்க முடியாதாக்கியது.

இதன் விளைவாக, பிரான்சில், ஜாகோபின்களின் மிக தீர்க்கதரிசனமான கொள்கையால் கூட நிகழ்வின் போக்கை தீவிரமாய் மாற்றுவதற்கு ஆற்றலற்ற நிலையில், நம்மை பொறுத்தவரையில், நிலைமை முடிவிலா வகையில் பெரும் சாதகத்தை கொடுத்ததால், அதுவும் மார்க்சிச முறையின் படி பெறப்பட்ட சரியான அரசியல் நிலைப்பாடு, புரட்சியை பாதுகாக்கப்பதில் ஒரு தீர்மானகரமான காரணியாக கணிசமான காலத்திற்கு இருக்கும்.

5. வரலாற்று முன்கருத்து ஒன்று நமக்கு கூடுதலான சாதகமற்றதாக இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். தனியார் மூலதனத்தின் விரைவான வளர்ச்சி ஏற்பட்டது என்றால், கூட்டுறவு உட்பட சோவியத் தொழிற்துறை, வர்த்தகம் விவசாய பொருளாதார தேவைகளை திருப்திப்படுத்துவதை உறுதிசெய்யவில்லை என்பது பொருளாகும். மேலும் தொழிலாளர் அரசிற்கும் விவசாயிகளுக்கும் இடையே தனியார் மூலதனம் கூடுதலான வகையில் குறுக்கீடு செய்வதுடன், அது கூடுதலான பொருளாதார செல்வாக்கையும், எனவே பிந்தையதன் மீது அரசியல் செல்வாக்கையும் கொள்ளுகிறது என்பதை காட்டும். சோவியத் தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே அத்தகைய முறிவு ஏற்படுதல் என்பது பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கு வெற்றியை கொடுக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது என்பதும் புலனாகும்.

6. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார முன்கருத்து அடையப்படக் கூடியது என்றால், எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கான அரசியல் வழிவகைகள் யாவை? பலவிதங்களில் அது நேரலாம்: தொழிலாளர்கள் கட்சி நேரடியாக தூக்கி எறியப்படலாம்; அல்லது அது கூடுதலான வகையில் சீரழிவை அடையலாம்; அல்லது இறுதியாக ஓரளவு சீரழிவு, பிளவுகள், எதிர்ப்புரட்சிகர எழுச்சிகள் அனைத்தும் ஒன்றாகத் தோன்றலாம்.

இத்தகைய விளைவுகளில் ஏதேனும் ஒன்று ஏற்படுதல் என்பது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை பொறுத்து இருக்கும். அரச மூலதனத்தை ஆதிக்கத்திற்குட்படுத்துவதில் தனியார் மூலதனம் சிறிது சிறிதாக நாளடைவில் வெற்றி பெற்றால், அரசியல் நடைமுறை பாதை அரச எந்திரத்தின் சீரழிவு முக்கியமாக பூர்ஷ்வா திசையில் வடிவத்தைக் கொள்ளும்; இதை ஒட்டி கட்சியிலும் விளைவுகள் ஏற்படும். தனியார் மூலதனம் விரைவில் பெருகி விவசாயிகளுடன் பிணைப்பு காண்பதில் வெற்றி கொண்டால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இயக்கப்பட்ட தீவிர எதிர்ப்புரட்சிகர சக்திகள் ஒருவேளை வெற்றியடையக் கூடும்.

இத்தகைய வெளிப்படையான முன்கருத்துக்களை தைரியமாக வைக்கிறோம் எனக் கூறினால், வரலாற்று ரீதியாக அவை சாத்தியமானவை என்பதற்காக அல்ல (மாறாக, அப்படி ஏற்படக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவுதான்); அவ்விதத்தில் பிரச்சினையை எழுப்புவதுதான் இன்னும் சரியான வகையில் ஆராய உதவும் என்பதற்காகவும், பன்முக வகையில் வரலாற்று திசைவழி கொண்டு அதன் விளைவாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் இப்படிக் கருதி ஆராய்கிறோம். புதிய போக்குகளையும், புதிய ஆபத்துக்களையும் அவை கரு நிலையில் இருக்கும்போதே உணர்ந்து வேறுபடுத்தி ஆராய்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் எமது மார்க்சிசவாதிகளின் மேம்மபட்டநிலை உள்ளது.

7. பொருளாதாரத் துறையில் நாம் ஏற்கனவே கூறியுள்ளதில் இருந்து கிடைக்கக் கூடிய முடிவு நம்மை "கத்திரிக்கோல்" பிரச்சினைக்கு கொண்டு வருகிறது: அதாவது தொழிற்துறையை அறிவார்ந்த முறையில் ஒழுங்கமைத்தலும், அதை விவசாயச் சந்தையுடன் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லுதலும் ஆகும். இதில் காலத்தை நழுவவிட்டால் அது தனியார் மூலதனத்திற்கு எதிரான எமது போராட்டம் மெதுவான வேகத்தை கொண்டு விடும். அங்குத்தான் எமது முக்கிய பணி, அதாவது புரட்சி, சோசலிசம் பற்றிய பிரச்சினையின் முக்கிய திறவு கோல் உள்ளது.

8. நாம் கூறியபடி சில சமூக உறவுகளை ஒட்டி, எதிர்ப்புரட்சிகர ஆபத்து எழுச்சியுறுகிறது என்றால், ஒரு அறிவார்ந்த கொள்கையினால் அந்த ஆபத்தை தடுத்துவிட முடியாது என்று பொருள் ஆகாது (புரட்சியில் சாதகமற்ற பொருளாதார நிலைமையிலும் கூட அத்தன்மைதான்); அதேபோல் அந்த ஆபத்தை குறைத்தல், அகற்றல், ஒத்திப்போடுதல் என்பவை நிகழாது என்றும் பொருளாகாது. அப்படி ஒத்திப்போடுதல், மாறாக சாதகமான பொருளார மாற்றத்தை உள்நாட்டில் கொள்ளுவதனாலும் அல்லது ஐரோப்பாவில் வெற்றிகரமான புரட்சியுடன் தொடர்புபடுத்தும் வரையிலும் புரட்சியை பாதுகாப்பது சாத்தியமாகும்.

எனவேதான், மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருளாதார கொள்கையின் அடிப்படையில், நாம் திட்டவட்டமான அரசு மற்றும் கட்சிக் கொள்கைகளை கொள்ள வேண்டும் (இதில் கட்சிக்குள் கடைபிடிக்கப்படவேண்டிய உறுதியான கொள்கையும் அடங்கும்); அத்தகைய கொள்கை பொருளாதார வளர்ச்சி சந்திக்கும் இடர்பாடுகள், தோல்விகள் ஆகியவற்றால் ஊட்டமுற்று, அதனால் தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான போக்குகளின் குவிதல் மற்றும் ஒருங்கிணைக்கப்படுதல் ஆகியவற்றை எதிர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கும்.

9. எமது கட்சியில் சமூக கூட்டமைப்பின் பன்முகத்தன்மை புரட்சியின் வளர்ச்சியின் புறநிலை முரண்பாடுகளை பிரதிபலிக்கிறது; அத்துடன் அதில் இருந்து விளையும் போக்குகள், ஆபத்து ஆகியவையும் வெளிப்படுத்தப்படுகின்றன.

10. கட்சியின் தொடர்பு புரட்சியின் அடிப்படை வர்க்கத்துடனான உறவிற்கு உத்தரவாதம் கொடுக்கும் தொழிற்சாலை கருக்கள் இப்பொழுது கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பகுதி என்றுதான் உள்ளது.

அவற்றின் அனைத்து எதிர்மாறான பக்கங்கள் இருந்தபோதிலும்கூட, சோவியத் அமைப்புக்களின் சிறு குழுக்கள் கட்சிக்கு தன்னுடைய அரச எந்திரத்தின் மீதான தலைமையை உத்தரவாதம் அளிக்கின்றன; இந்த குழுக்களின் மிகப்பெரிய விஷேடமான பலத்தையும் இவைதான் நிர்ணயிக்கின்றன. பழைய போராளிகளின் மிகப் பெரிய விகிதத்தினர் கட்சியின் வாழ்வில் இந்த சோவியத் குழுக்கள் மூலம்தான் பங்கு பெறுகின்றனர்.

இந்த கிராமப்புற சிறுகுழுக்கள் கட்சிக்கு கிராமப்புறத்துடன் உறுதியான தொடர்புகளை (மிக பலவீனமாக இருந்தாலும்) உருவாக்குகின்றன.

இராணுவ சிறுகுழுக்கள் கட்சியின் தொடர்பை இராணுவத்துடன் முறையாக வைத்திருக்கின்றன; (எல்லாவற்றிற்கும் மேலாக) இராணுவத்தின் மூலம் கிராமப்புறத்துடனும் தொடர்பை கொண்டுள்ளன.

இறுதியாக, கல்விக் கூடங்களில் இருக்கும் சிறுகுழுக்களில், இந்தப் போக்குகள், செல்வாக்குகள் அனைத்தும் ஒன்றாக கலந்து பரவி நிற்கின்றன.

அவற்றின் வர்க்கச் சேர்க்கையினால், தொழிற்சாலை சிறுகுழுக்கள் அடிப்படையானவை என்பதை கூறத்தேவையில்லை. ஆனால் அவை கட்சியில் ஆறில் ஒரு பங்கை தான் கொண்டுள்ளன என்பதால், அவர்களுடைய மிகத் தீவிரமான பிரிவுகள் எடுக்கப்பட்டு கட்சிக்கு அல்லது அரச எந்திரத்திற்கு வழங்கப்படுகின்றன; எனவே கட்சி துரதிருஷ்டவசமாக, தற்போதைக்கு பிரத்தியேக முறையிலோ, ஒரு கொள்கைவழிப்பட்ட முறையில்கூட அவர்களை சார்ந்திருப்பதற்கு முடியவில்லை.

அவர்களின் வளர்ச்சி தொழில்துறையிலும், பொருளாதாரத்திலும் பொதுவாக கட்சியின் வெற்றிக்கு உறுதியான அளவுகோலாக இருக்கும்; அதே நேரத்தில் கட்சி தன்னுடைய பாட்டாளி வர்க்க தன்மையை தக்க வைத்துக் கொள்ளும் என்பதற்கு உறுதியான உத்தரவாதமாகவும் இருக்கும். ஆனால் அவற்றின் விரைவான வளர்ச்சியை உடனடி வருங்காலத்தில் எதிர்பார்ப்பது என்பது மிகவும் கடினமாகும். இதன் விளைவாக, கட்சி அடுத்த காலக்கட்டத்தில் தன்னுடைய உள் சமநிலையை உறுதியாக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்; அதன் புரட்சிகர வழிவகையை காத்துக் கொள்ளுவதற்கு பன்முகப்பட்ட சமூக சேர்க்கையை சார்ந்திருப்பதும் கட்டாயமாகும்.

11. எதிர்ப்புரட்சிகர போக்குகள் தங்களுக்கான ஆதரவை, கட்சிக்காரர்களைவிட, குலாக்குகள் (kulak- ருஷ்ய பெரும் நிலச்சுவாந்தார்கள்), இடைத்தரகர்கள், சில்லறை வியாபாரிகள், சுருங்கச் சொன்னால் அரசாங்க அமைப்பை சூழ்ந்து நிற்கும் ஆற்றல் உடைய சலுகை பெறுபவர்களிடையேதான் பெறமுடியும் என்று ஆகும். விவசாயிகள் மற்றும் இராணுவ சிறுகுழுக்கள் தான் இன்னும் கூடுதலான முறையில் குலாக்குகளின் ஊடுருவலுக்கும் நேரடிச் செல்வாக்கின் அச்சுறுத்தலுக்கும் உட்படக்கூடும்.

ஆயினும்கூட, விவசாயிகளை வேறுபாடு கண்டறிதல் நமக்கு ஆதரவு கொடுக்கும் காரணியை பிரதிபலிக்கிறது. குலாக்குகளை இராணுவத்தில் இருந்தும் (பிராந்திய பிரிவுகளில் இருந்து உள்பட) ஒதுக்குவது என்பது, கடுமையான விதியாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல், கூடுதலான வகையில் கிராமப்புற இளைஞர்கள், இராணுவ பிரிவுகள், இராணுவ குழுக்கள் ஆகியவற்றின் அரசியல் கல்வியூட்டல்களுக்கான முக்கியமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இராணுவ சிறுகுழுக்களில் தங்களுடைய பிரதான பாத்திரத்திற்காக தொழிலாளர்கள், புத்துயிர் பெற்றுவந்துள்ள குலாக்களுக்கு எதிராக கிராமப்புறத்து தொழிலாளர் திரட்டை அரசியல்ரீதியாக செல்வாக்கு செலுத்தும்வகையில் எதிர்கொண்டு நிற்பர். கிராமப்புற குழுக்களிலும் இத்தகைய எதிர்த்துநிற்கும் முறை பயன்படுத்தப்படும். நீண்டகாலப்போக்கில், எந்த அளவிற்கு அரசு தொழிற்துறை கிராமப்புற மக்களின் தேவைகளை திருப்தி செய்வதில் வெற்றி அடைகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தப்பணியின் வெற்றி அமையும்.

ஆனால், எமது பொருளாதார வெற்றியின் வேகம் எப்படி இருந்தாலும், இராணுவ சிறுகுழுக்களில் எமது அடிப்படை அரசியல் நிலைப்பாடு, இடைத்தரகர்களுக்கு (Nepmen) எதிராக மட்டுமாக மட்டும் இல்லாது, முக்கியமாக புத்துயிர் பெற்றுள்ள குலாக் பிரிவினருக்கு எதிராகவும் இருக்க வேண்டும்; அவர்கள்தான் வரலாற்று ரீதியாக அனைத்து எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கும் தீவிர ஆதரவு கொடுப்பவர்களாக வரக்கூடும். இவ்விதத்தில் இராணுவத்தின் பல பிரிவுகளை பற்றியும் நாம் இன்னும் கூடுலான, விரிவான ஆய்வை அவர்களின் சமூகச்சேர்க்கையின் நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்வது தேவையாகும்.

12. கிராமப்புற, இராணுவ சிறுகுழுக்களின் மூலம், ஏறக்குறைய கிராமப்புறத்தை பிரதிபலிக்கும் போக்குகள், தனித்தன்மையுடன், நகரத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் போக்குகள் கட்சிக்குள் வடிகட்டப்படும் மற்றும் தொடர்ச்சியாக வடிகட்டும். அப்படியில்லை என்றால், கிராமப்புற சிறுகுழுக்கள் கட்சியினுள் எந்தவித மதிப்பையும் கொண்டிருக்க முடியாது.

இக்குழுக்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளில் ஏற்படும் மாறுதல்கள் கட்சிக்கு ஓர் எச்சரிக்கையாக அல்லது நினைவூட்டலாக என்று இருக்கும். இந்த குழுக்களை கட்சியின் திசையில் இயக்கும் தன்மை கட்சியின் பொதுவான திசையின் சரியான தன்மையை பொறுத்தும், அதன் உள் ஆட்சியின் தன்மையை பொறுத்தும் இருக்கும்; இறுதி ஆய்வில் "கத்தரிக்கோல்" பிரச்சினையை தீர்ப்பதை அல்லது தணிப்பதை நோக்கி நெருங்குகின்றோமா என்பதே நிர்ணயிக்கும்.

13. அதிகாரத்துவவாதத்தின் முக்கியமான ஆதாரமாக அரசு எந்திரம் உள்ளது. ஒரு புறத்தில், இது ஏராளமான செயற்பாட்டு கட்சிப் பிரிவினரை உள்ளிழுத்துக் கொள்ளுகிறது; அவர்களில் மிகத் திறமையானவர்களுக்கு மனிதர்களையும், பொருட்களையும் நிர்வகிக்கும் வழிவகைகளை கற்பிக்கிறது; வெகுஜனங்களின் அரசியல் தலைமைக்கு பதிலாக ஆகும். மறு புறத்தில், இது தன்னுடைய நிர்வாக முறைகளின் ஆதிக்கத்தின் மூலம் கட்சியின் கவனத்தையும் பெரிதும் கவர்ந்துகொண்டுவிடுகிறது.

எனவே, மிகப் பெரிய வகையில், கட்சியை மக்களிடம் இருந்து பிரிக்கும் அச்சுறுத்தலை கொண்டவகையில் அமைப்பின் அதிகாரத்துவ மயமாக்கம் அமைந்து விடுகிறது. இப்பொழுது நேரடியாகவும், வெளிப்படையாகவும், துல்லியமாக காணப்படுவது இந்த ஆபத்துத்தான். இப்பொழுதுள்ள நிலைமையில் மற்ற ஆபத்துக்களுக்கு எதிரான போராட்டம் அதிகாரத்துவவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்தான் தொடங்க வேண்டும்.

14. அதிகாரத்தில் இருப்பவர்களுடைய தீய பழக்கங்களின் கூட்டுத்தான் அதிகாரத்துவம் என்று கருதுவது மார்க்சிசவாதிகளுக்கு ஏற்புடையதன்று. அதிகாரத்துவம் என்பது மனிதர்களையும் பொருட்களையும் நிர்வகிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாக முறை உள்ள ஒரு சமூக நிகழ்வுப்போக்காகும். சமூகத்தின் பன்முகத்தன்மையில்தான் இதன் ஆழ்ந்த காரணங்கள் உள்ளன; மக்கட்தொகையின் பல குழுக்களின் அன்றாட, அடிப்படை நலன்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டில் இதன் ஆழ்ந்த தன்மை உள்ளது. மக்கட்தொகுப்பின் பரந்த பிரிவினரிடையே கலாச்சாரம் இல்லாத உண்மையால் அதிகாரத்துவம் கூடுதலான சிக்கலுக்குரியதாகின்றது. நம்மைப் பொறுத்தவரையில், அதிகாரத்துவத்தின் அடிப்படை ஆதாரம் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும் விவசாயிகளின் நலன்களையும் ஒன்றிணைக்கும் மற்றும் சரியான இயைபுடைய ஒரு பொருளாதாரத்தில் கொண்டு வந்து தக்க வைத்துக் கொள்ளும் ஓர் அரசு எந்திரத்தை உருவாக்கும் தேவையில் உள்ளது; ஆனால் அத்தகைய இயைபு அடைவதிலிருந்து நீண்டதூரத்தில் உள்ளோம். இதேபோல்தான் நிலையான இராணுவத்தை தக்கவைத்துக்கொள்ளுவதும் அதிகாரத்துவத்தின் மற்றொரு முக்கிய ஆதாரமாகும்.

நாம் தற்பொழுது பட்டியலிட்டுள்ள எதிர்மாறான நிகழ்வுப்போக்குத்தாம் அதிகாரத்துவத்தை வளர்த்து, இன்னும் வளர்ந்த நிலையில் புரட்சியை பேராபத்திற்கு உட்படுத்தக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இந்த முன்கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்: அரசிற்கும் விவசாய பொருளாதாரத்திற்கும் இடையே பெருகும் பிளவு, நாட்டில் குலாக்குகளின் வளர்ச்சி, தனியார் வர்த்தக, தொழிற்துறை மூலதனத்துடன் அவர்கள் கொண்டுள்ள கூட்டு, ஆகியவை நாட்டில் கிராமப்புறத்தில் இருக்கும் உழைக்கும் மக்களுடைய குறைவான மட்டத்திலான கலாச்சார தரத்தோடு சேர்த்துப் பார்க்கப்படுகையில், ஓரளவு நகரங்களிலும் என்றும் கூறலாம், எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகள் பின்னர் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைந்துவிடும்.

வேறுவிதமாகக் கூறினால், அரசிலும் கட்சி எந்திரத்திலும் அதிகாரத்துவம் என்பது எமது நிலைமையில் இயல்பாக இருக்கும் பெருந்துன்பம் தரும் தன்மையின் வெளிப்பாடு ஆகும்; எமது பணியில் இருக்கும் குறைபாடுகள், வேறு திசை செல்லும் தன்மை இவற்றின் வெளிப்பாடும் ஆகும்; இவை சில சமூக நிலைமைகளின் கீழ் புரட்சியின் அடிப்படையை உறிஞ்சிவிடக் கூடும். எனவே பலவற்றைப் போல், இதிலும், அளவு என்பது ஒரு கட்டத்தில் பண்பாகவும் மாற்றப்படும்.

15. அரசு எந்திரத்தின் அதிகாரத்துவவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது அசாதாரண முறையில் முக்கியமான, நீடித்த பணியாகும் இது எமது மற்ற அடிப்படை பணிகளான பொருளாதார மறுசீரமைப்பு, மக்களுடைய கலாச்சார தரத்தை உயர்த்துதல் என்பவற்றிற்கு கிட்டத்தட்ட இணையாக மேற்கொள்ளப்படவேண்டும். இப்பணிகள் அனைத்தையும் சாதிப்பதற்கு மிக முக்கியமான வரலாற்றுக் கருவி கட்சியாகும். இயல்பாக கட்சி கூட நாட்டின் சமூக, கலாச்சார நிலைமைகளில் இருந்து தன்னை பிரித்துக்கொள்ள முடியாது. ஆனால் முன்னணிப்படையின் தானாக முன்வந்த இயக்கம் என்ற வகையில், தொழிலாள வர்க்கத்தின் மிகச் சிறந்த, செயலூக்கமுள்ள மற்றும் மிக நனவுடைய கூறுகள், அது அரசு எந்திரத்தை அதிகாரத்துவ போக்குகளில் இருந்து தாமே காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்காக அது ஆபத்தை தெளிவாக உணர்ந்து, சிறிதும் தளராமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.

எனவேதான் தனிப்பட்ட முயற்சியின் அடிப்படையில், புதிய முறையில் அரச எந்திரத்தை இயக்குவதற்கும், அதனை முற்றாக மாற்றுவதற்கும் தேவையான வகையில் கட்சி இளைஞர்களுக்கு பயிற்றுவித்தல் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

 

The Lessons of October

 


Copyright 1998-2006
World Socialist Web Site
All rights reserved