ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

நடப்பு நெருக்கடி

வெகுகாலமாக ஆழமான வர்க்க குரோதங்களாலும் மற்றும் தேசிய-இன மற்றும் வகுப்புவாத உரசல்களாலும் நொருங்கிப் போய்க் கிடந்த பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாய் ஆப்கானிஸ்தானை அடிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் குற்றவியல் செலுத்தத்திலும் பங்கேற்று மேலும் ஸ்திரம்குலைந்த நிலைக்குச் சென்றிருக்கிறது. 2008 இலையுதிர்காலத்தில் விளைந்த உலக முதலாளித்துவ நெருக்கடியின் வெடிப்பின் மூலம், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதின் மூலமும் நாட்டின் வறுமைப்பட்ட தொழிலாளர்களை உலகச் சந்தைக்கான மலிவு உழைப்பு உற்பத்தியாளர்களாக வழங்குவதன் மூலமும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருந்த திட்டங்களின் அடித்தளம் அகன்று போய் விட்டது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முஷாரப்பின் சர்வாதிகாரம் அவிழ்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது மக்கள் கொண்டிருந்த உற்சாகம் எல்லாம் துரிதமாய் வடிந்து விட்டிருக்கிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கம் பரந்த மக்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் மறுத்து, முந்தைய இராணுவ ஆட்சியின் அதே கொள்கைகளையே தொடரவும் தீவிரப்படுத்தவும் செய்திருக்கிறது. இது ஆப்கான் போருக்கு அச்சாணியான உதவியை வழங்கியிருக்கிறது, தனியார்மயமாக்கங்களையும் மற்ற சந்தை ஆதரவு “சீர்திருத்தங்களையும்” முன்செலுத்தியிருக்கிறது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளைத் திணித்திருக்கிறது.

அத்துடன் இராணுவ நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகப்படுத்தி வந்திருக்கிறது. ஜெனரல் பர்வேஸ் முஷாராபிடம் முன்னாளில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்த ஜெனரல் கியானியால் இப்போது தலைமை நடத்தப்படும் இராணுவம் அமெரிக்கா அளிக்கும் ஊக்கம் மற்றும் உதவியுடன் தனது அரசியல் மேலாதிக்கத்தைப் பெருகிய முறையில் நிலைநிறுத்தியிருக்கிறது. சமீப வாரங்களில் ஜனாதிபதி சர்தாரியும் பிரதமர் கிலானியும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அரசியலமைப்புக்கு விரோதப்பட்ட சதிகள் நடப்பதாக தொடர்ந்து எச்சரிக்கைகளை விநியோகித்தனர். அதேசமயத்தில், இராணுவத்திடம் இருந்தான நெருக்குதலின் கீழ், கியானிக்கு அவரது இராணுவத் தலைமைப் பதவியை ஓய்வுக்குப் பின் மூன்று வருடங்களுக்கு நீட்டிப்பதற்கு முன்காணாத வகையில் அவர்கள் ஒப்புதலளித்ததும் மற்றவையும் நிகழ்ந்தன. ஆனாலும் எல்லாம் செய்தும் வீண். பாகிஸ்தான் அரசாங்கத்தின் “மறுசீரமைப்பு” கோருவதில் இராணுவத்தையும் சேர்ப்பதற்கு அமெரிக்கா மும்முரமாய் சிந்தித்து வருவதாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை தெரிவிக்கின்றன.

இந்தக் கோடையில் சிந்துப் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளங்கள் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஊழல், அலட்சியம், மற்றும் கையாலாகாத்தனத்தை திடுக்கிடச் செய்யும் வகையில் புரியவைத்தன. வெள்ளம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னரும் பாதிக்கப்பட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் பெரும்பான்மையினருக்கு அரசாங்க நிவாரண நடவடிக்கையில் இருந்து எந்த உதவியும் கிட்டவில்லை.

வெள்ள சேதாரப் பேரழிவு என்பது பெருமளவில் மனிதனால் ஆக்கப்பட்டதாகும். வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு பரிதாபகரமான வகையில் பற்றாக்குறையானதாய் இருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல, ஆளும் உயரடுக்கு பொருளாதாரத்தை ஒரு இயைந்துபட்ட பகுத்தறிவான வழியில் அபிவிருத்தி செய்யத் தோற்று இராணுவச் செலவினங்களுக்கு முன்னுரிமையளித்ததின் பின்விளைவாகவும் இது இருந்தது. அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய இராணுவங்கள் மற்றும் அவர்களின் ஆப்கன்-பாகிஸ்தான் போர் மற்றும் பல்வேறு பெரும் நிலச் சொந்தக்காரர்கள் மற்றும் அவர்களது அரசியல் கூட்டாளிகள் ஆகியோரின் நலன்களுக்காக அணை வலைப்பின்னல்கள் இஷ்டம் போல் கைப்புரட்டு செய்யப்பட்டதன் விளைவாக மில்லியன்கணக்கான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டனர்.

ஏற்கனவே ஆழமடைந்திருந்த பொருளாதார நெருக்கடியை வெள்ளம் மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதன் சுமையை பாகிஸ்தானிய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தி விடும் தீர்மானத்துடன் முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பால் சமீப வருடங்களில் வாழ்க்கைத் தரங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறைச் சுமையைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சாரம், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்களை அகற்றுவதற்கும் மீண்டும் சமூகச் செலவினங்களை வெட்டுவதற்கும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வருகின்றன.

ஜனவரி மாதத்தில் ஹைத்தியில் நடந்த பேரழிவான பூகம்ப விஷயத்தில் நடந்தது போல, சர்வதேச மூலதனமானது, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பாகிஸ்தானிய உயரடுக்கின் பிரகடனங்கள் சான்றளித்தவாறு, வெள்ளங்களை முதலாளித்துவ மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளன. வெள்ளத்தால் சேதாரப்பட்டுள்ள உள்கட்டமைப்பு அரசு-தனியார் கூட்டுமுயற்சிகளின் மூலம் மறுகட்டுமானம் செய்யப்படும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது பெருவணிகங்களுக்கு அரசு நிதிகளைக் கைப்புரட்டு செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளைக் காவு கொடுத்து அவற்றின் உத்தரவாதமான இலாபங்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு வழியை வழங்குவதற்கு உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு உத்தி ஆகும்.

சென்ற வருடத்தில் பாகிஸ்தான் எங்கிலும் வெகுஜனப் போராட்டங்களும், ஆங்காங்கே உணவுக்கான கலவரங்களும் வேலைநிறுத்தங்களும் நடந்தன. இப்போது வெள்ள நிவாரணப் பற்றாக்குறை, மின் வெட்டு, விலை ஏற்றங்கள், மற்றும் பல சமூகப்பொருளாதார மற்றும் அரசியல் துன்பங்களுக்காக தினந்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. பைசலாபாத்தில் மின் வெட்டிற்கு எதிராக நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் PTCL (தொலைத்தொடர்பு) தொழிலாளர்களின் தொடர்ந்த போர்க்குணமிக்க போராட்டங்கள் ஆகியவற்றால் வெளிப்பட்டவாறு, பாகிஸ்தானிய தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைந்ததென்பது அரசியல் சூழ்நிலையைத் தீர்மானகரமாக உருமாற்ற நம்பிக்கையளிக்கிறது.

ஆளும் வர்க்கம் தனது பங்கிற்கு அதிகரித்தளவில் அச்சமுற்றுவருகின்றது. ஒரு சமூக வெடிப்பு நிகழக் கூடும் என்று முன்னணி செய்தித் தாள்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து எச்சரிக்கைகளை விநியோகித்து வருகின்றனர். கீழிருந்தான இந்த அபாயத்திற்கு அஞ்சி பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் இராணுவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இன்னும் இறுக்கமாய்ப் பற்றிக் கொள்வதோடு இன மற்றும் வகுப்புவாத பிளவுகளுக்கும் தூபம் போடுகிறது.

அடிப்படை மனித சுதந்திரங்களை உறுதியளிப்பது மற்றும் பெண்களுக்கான சமத்துவம் ஆகியவை தொடங்கி, கல்வி, சுகாதாரம், மற்றும் வேலையளிப்பது மற்றும் குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை நீக்குவது ஆகியவை வரை பாகிஸ்தானிய மக்களின் அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால், நிலப் பிரபுத்துவத்தைக் கலைப்பது, அமெரிக்க ஆதரவிலான இராணுவப் பாதுகாப்பு அரசைப் பிரித்தெறிவது, மற்றும் வங்கிகள் மற்றும் அடிப்படை தொழிற்துறைகளை தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது ஆகியவை அவசியமாய் இருக்கின்றன. முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த உழைப்பாளிகளின் தலைவிதியை நனவுடன் பிணைக்கிற ஒரு தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதன் மூலமாக மட்டுமே இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட முடியும்.

இந்த போராட்டத்திற்கு தலைமையெடுக்க ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சி கட்டப்பட்டாக வேண்டும். இத்தகையதொரு கட்சி தனது வேலைத்திட்டத்தையும் முன்னோக்குகளையும் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தெற்காசியாவின் தொழிலாளர்கள் உட்பட்ட உலகத் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை அடித்தளமாய்க் கொண்டு அமைக்க வேண்டும்.