ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:

“இந்தியாவிலும் சீனாவிலும்  [இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியின்] தேசிய இயக்கங்கள் சிதறிக் கிடந்த மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துகின்ற முற்போக்கான கடமையை முன்நிறுத்தின; இந்தக் கடமை தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் எட்டப்பட முடியாது என்பது நிரூபணமானது. தேசியவாதத்தின் இந்த புதிய வடிவமானது நடப்பு அரசுகளை உள்ளூர் சுரண்டல்காரர்களின் நலன்களுக்கேற்ப பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இன, மொழி மற்றும் மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த இயக்கங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதோடு அவை எந்த அர்த்தத்திலும் ஒடுக்கப்பட்ட வெகுஜன மக்களின் ஜனநாயக அபிலாசைகளை வடிவப்படுத்துவதில்லை. அவை தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வர்க்கப் போராட்டத்தை இனவாத-வகுப்புவாத சண்டையாக திசைதிருப்புவதற்கே சேவைசெய்கின்றன.”

இன்று தெற்காசியாவைச் சூழ்ந்துள்ள பல்தரப்பட்ட தேசிய துன்பங்களும் சுதந்திர முதலாளித்துவ ஆட்சியின் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வியில் வேர்கொண்டுள்ளன. ஜனநாயகப் புரட்சியின் மற்ற நிறைவேற்றப்படாத கடமைகளைப் போலவே, தேசிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் நீக்குவதென்பதும் உலக சோசலிசப் புரட்சியுடன் பிணைந்துபட்டிருக்கிறது. நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தைப் பின்பற்றி, நடப்பு முதலாளித்துவ ஒழுங்கை தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே உண்மையான ஜனநாயகமும், தேசிய சமத்துவமும் மற்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்தான சுதந்திரமும் காக்கப்பட முடியும் என்பதை விளங்கப்படுத்தி தொழிலாள வர்க்கம் உழைக்கும் வெகுஜன மக்களுக்கான தலைமையை முதலாளித்துவத்திடம் இருந்தும் மற்றும் குட்டி முதலாளித்துவத்திடம் இருந்தும் கைப்பற்ற வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாத்து சோசலிச சமத்துவக் கட்சி (முன்னதாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) நிகழ்த்தி வந்திருக்கக் கூடிய கோட்பாடுடனான போராட்டத்தை பாகிஸ்தான் தொழிலாளர்கள் படிக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவானது தான் ஸ்தாபிக்கப்பட்ட 1968 ஆம் ஆண்டு முதல், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தின் மையத்தில் இருத்தி  வந்திருக்கிறது.

மூன்று தசாப்த கால இலங்கை உள்நாட்டுப் போரில் சோசலிச சமத்துவக் கட்சியானது இலங்கை முதலாளித்துவம் மற்றும் அதன் அரசிடம் ஒரு புரட்சிகரத் தோற்கடிப்புவாத (defeatist) மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்தது. முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும்  அணிதிரட்டுவதற்கும் அத்துடன் சிறிலங்கா - தமிழீழ சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காகவுமான அதன் போராட்டத்தின் பகுதியாக தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து இலங்கைத் துருப்புகளும் மற்றும் பாதுகாப்புப் படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அது கோரியது, தொடர்ந்து கோரி வருகிறது.  

சோசலிச சமத்துவக் கட்சியானது உள்நாட்டுப் போருக்கான பொறுப்பை சிங்கள முதலாளித்துவத்தின் மீதும் ஏகாதிபத்தியத்தின் மீதும் சுமத்தியதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும் தமிழ் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைக்கும் இடையிலுள்ள தொடர்பை தளர்ச்சியின்றி விளக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இனச் சண்டையின் மூலமாகவும் இந்திய அரசாங்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்தான  இராஜதந்திர கூட்டுவேலைகளின் மூலமாகவும் ஒரு புதிய முதலாளித்துவ தேசிய-அரசை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சியை அது எதிர்த்தது.

இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த கிளர்ச்சியின் தோல்வி அதன் சுயநல வர்க்க நோக்கங்களில் வேரூன்றியிருந்தது. அது சிங்களத் தொழிலாள வர்க்கத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் அழைப்பு விடுக்க முடியாததாய் இருந்தது; அதன் கட்டுப்பாட்டில் இருந்த தீவின் பகுதிகளில் அது நிறுவிய போலிஸ் ஆட்சி பெருகியமுறையில் தமிழர்களை அந்நியப்படுத்தியது. தெற்காசிய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுரீதியாய் உகந்ததான ஒரே வேலைத்திட்டம் சோசலிசப் புரட்சி மட்டுமே என்பதற்கான புதிய உறுதிப்படுத்தலை இந்த அனுபவம் வழங்கியிருக்கிறது.  

இப்போது பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் இன்னுமொரு இரத்த ஆறு பாயச் செய்யும் வகையில் பலூசிஸ்தானில் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் மிக ஏழ்மைப்பட்ட மாகாணத்தில் உள்ள வெகுஜனங்களின் துயரமான நிலைமைகளுக்கு ஆளும் வர்க்கம் காட்டுகின்ற முழுமையான அலட்சியத்துடன் பின்னிப்பிணைந்து நிற்கும் இந்த பிரச்சாரங்கள் பல்வேறு வகையிலும் பாகிஸ்தான் அரசிடம் இருந்து வெகுஜனங்களை அந்நியப்படுத்தி எதிர்ப்பைப் பெருக்கியிருக்கிறது. ஆனால் பலூசிஸ்தானின் தேசியவாதிகள், கூடுதல் மாகாண சுதந்திரத்திற்கும் அல்லது சுதந்திரத்திற்கும் ஒரு பெரும் பலூசிஸ்தானை உருவாக்குவதற்குமான அவர்களது கோரிக்கைகளின் மூலம் எந்த அர்த்தத்திலும் ஒரு முற்போக்கான மாற்றினை வழங்கவில்லை. தொழிலாளர் அமைப்புகளை தேசிய அடிப்படையில் பிரிப்பது, பஞ்சாபி, ஹசரா மற்றும் பஸ்தூன் தொழிலாளர்கள் மீதும் அத்துடன் பிற தேசங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீதுமான அவர்களது தாக்குதல், அத்துடன் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தான உதவியை ஏற்க தாங்கள் தயாராய் இருப்பதாய் பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் (BLA) செய்தித்தொடர்பாளர்களான பிரஹம்தா புக்தி மற்றும் நவாப்ஸ்தா ஹியார் பியார் மரீ போன்றோர் செய்த பிரகடனங்கள் ஆகியவை மூலம் இவர்களது பிற்போக்கான நோக்கங்கள் தெட்டத் தெளிவாக ஆகியிருக்கின்றன. அபாயசகுனமான வகையில், ஒரு சுதந்திரமான பலூசிஸ்தான் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக, அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் அரவணைப்பினாலும் யூகோஸ்லேவியாவுக்கு எதிரான 1999 ஆம் ஆண்டின் நேட்டோ போரின் பின்விளைவாகவும் கொசாவோ சுதந்திரம் பெற்றதை பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் தலைவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அரசின் எல்லைக்கோடுகள், 1893ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட துராந்த் கோட்டை (Durand line) சேர்த்துக் கொண்டு, பஸ்தூன் மக்களைப் பிரித்திருக்கின்றன. ஏகாதிபத்தியத்தை ஒரு வர்க்க அடிப்படையில் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே அவர்களது ஐக்கியமும் உண்மையான விடுதலையும் சாதிக்கப்பட முடியும். ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் ஆப்கான்-பாகிஸ்தான் போரையும் ஆதரிப்பதில், அவாமி தேசியக் கட்சியைச் சேர்ந்த பஸ்தூன் தேசியவாதிகள் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் இரத்தத்தில் மூழ்கச் செய்ய உதவியிருக்கின்றனர்.

காஷ்மீர் பிரச்சினையானது பிற்போக்குத்தனமான இந்திய-பாகிஸ்தான் அரசுப் போட்டியில் ஆற்றியிருக்கிற தொடர்ந்தும் ஆற்றிக் கொண்டிருக்கிற பாத்திரத்தைக் கொண்டு பார்க்கையில் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய மற்றும் பாகிஸ்தானிய உயரடுக்கு இரண்டுமே காஷ்மீர் மக்களை துஷ்பிரயோகம் செய்தும் ஒடுக்கியும் இருக்கின்றன. இந்தியாவின் பிடியில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் 1987ல் நடந்த மாநிலத் தேர்தலில் இந்திய அரசாங்கம் செய்த அப்பட்டமான மோசடி கிளர்ச்சியைத் தூண்ட உதவியதென்றால், பாகிஸ்தானோ கிளர்ச்சியாளர்களிடையே மிகவும் வகுப்புவாத சிந்தனை கொண்ட மற்றும் இஸ்லாமியக் கூறுகளை (அவர்கள் தான் தனது கட்டுப்பாட்டிற்கு எளிதில் இலக்காவார்கள் என்று கணக்கிட்டு) ஊக்குவிக்க துரிதமாகத் தலையீடு செய்தது.

இரண்டு அரசுகளது பிராந்திய உரிமை கோரல் போட்டியையும், தொழிலாள வர்க்கம் தீர்மானத்துடன் எதிர்க்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானால் முன்வைக்கப்படுகிற காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பது, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்வது, கூடுதல் தன்னாட்சி மற்றும் இன்னபிற  தீர்வுகள் எல்லாமே நடப்பு சண்டையின் வேரில் அமைந்திருக்கும் அதே வகுப்புவாதக் கொள்கைகளின் ஒரு தொடர்ச்சியின் அடிப்படையில் அமைந்திருப்பவையே. இவை புதிய பதற்றங்கள் எழுவதற்கே வழி செய்யும். அதேபோல் ஒரு சுதந்திர காஷ்மீருக்கு காஷ்மீர் தேசியவாதிகள் வைக்கும் கோரிக்கைக்கும் தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்க முடியாது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தானை எல்லைகளாகக் கொண்டு அத்துடன் ரஷ்யாவுக்கும் நெருக்கமாய் அமைகின்ற நிலையில் ஒரு சுதந்திரமான காஷ்மீர் பெறக் கூடிய பூகோள-மூலோபாய முக்கியத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காஷ்மீர் உயரடுக்கின் பிரிவுகள் போடும் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு தெற்காசியாவில் இன்னுமொரு புதிய முதலாளித்துவ தேசிய அரசை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமாகவே அது இருக்கிறது.

காஷ்மீரத்து மக்களை ஒரு முற்போக்கான அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதும், இன்னும் பொதுவாய்ச் சொன்னால், தெற்காசியாவின் அனைத்து பல்தரப்பட்ட மக்களிடையேயும் சமத்துவமான உறவுகளை அபிவிருத்தி செய்வதும், கிழடு தட்டிப் போன முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகவும் தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கு ஆதரவாகவுமான ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத் தலைமையிலான போராட்டத்தின் விளைவாக கீழிருந்து பிரிவினையை இல்லாது செய்வதன் பாகமாக மட்டுமே சாத்தியமாகும்.

ஆப்கான்-பாகிஸ்தான் போரையும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பையும் எதிர்ப்போம்!
பாகிஸ்தான்-அமெரிக்கா கூட்டை நொருக்குவோம்!

பிற்போக்குத்தனமான ஆப்கான்-பாகிஸ்தான் போரை தொழிலாள வர்க்கம் தீவிரமாய் எதிர்க்க வேண்டும். மத்திய ஆசியாவில் அமெரிக்க இராணுவ-மூலோபாய பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவால் இப்போர் அதன் நேட்டோ கூட்டாளிகள் மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவத்தின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் அநேக காலத்திற்கு சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெருமளவில் விலக்கி வைக்கப்பட்டிருந்த இந்தப் பிராந்தியம் அமெரிக்காவாலும் வோல் ஸ்ட்ரீட்டினாலும் மிகவும் ஆர்வம் காட்டப்படும் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் ஏற்றுமதி செய்யத்தக்க எண்ணெய் மற்றும் பிற மதிப்புமிகுந்த வளங்களில் உலகின் கையிருப்பு மிகுந்த இடங்களில் இது இரண்டாவது இடத்தில் இருப்பதும், அத்துடன் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சவால் விடும் சாத்தியம் கொண்டதாய் கருதப்படுகிற சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை ஒட்டி இப்பிராந்தியம் அமைந்திருப்பதுமே ஆகும்.  

புஷ் மற்றும் ஒபாமாவின் போர்ப் பிரச்சாரத்தை எதிரொலிக்கும் விதமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பாகிஸ்தானின் மதிப்பிழந்து போன தாராளவாத முதலாளித்துவத்தின் மற்ற பிரதிநிதிகளும் ஆப்கான்-பாகிஸ்தான் போர் இஸ்லாமிய பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போர் என்று (”அமெரிக்காவின் போர்” அல்ல, மாறாக “பாகிஸ்தானுக்கான போர்” மற்றும் “கண்ணியமான இஸ்லாமிற்கான போர்”) அறிவித்ததன் மூலம் அதற்கு ஆதரவைத் திரட்ட முனைந்து வருகின்றனர். இந்த வாதத்தை வைக்கையில் அவர்கள் தலிபான்களாலும் தலிபானுடன் தொடர்புபட்ட போராளிக் குழுக்களாலும் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவம் மற்றும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் ஜனநாயகத்தின் நலன்களுக்காக செயல்பட முடியும் என்பதான கூற்று பாகிஸ்தானின் ஒட்டுமொத்த வரலாற்றினாலும் மறுக்கப்படுவதாய் உள்ளது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான காலத்திற்கு, அமெரிக்கா பாகிஸ்தான் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இராணுவ சர்வாதிகாரங்களின் தொடர்ச்சிக்கு அரணாகச் சேவை செய்வதும், இராணுவத்தை பாகிஸ்தான் அரசுக்கும் அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டணிக்குமான தூணாக ஊக்குவிப்பதுமாக இருக்கிறதென்றால், அதற்குத் துல்லியமான காரணம் இராணுவப் படையதிகாரிகள் பாகிஸ்தானிய மக்களிடம் இருந்து மிகவும் தனிமைப்பட்டவர்களாக, மக்களுக்கு குரோதப்பட்டவர்களாக உள்ளனர் என்பது தான்.

ஆப்கான்-பாகிஸ்தான் போரானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவத்தால் இழைக்கப்பட்ட முந்தைய குற்றங்களில் இருந்து நேரடியாக எழுகிற ஒன்றாகும்.

1978-1979  தொடங்கி ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு, அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான தனது பிற்போக்குத்தனமான பனிப் போர் பிரச்சாரத்தில் ஆப்கானிஸ்தானை ஒரு முக்கிய போர்க்களமாக ஆக்கும் பொருட்டு பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒழுங்குபடுத்தவும் பயிற்றுவிக்கவும் ஆயுதமளிக்கவும் இஸ்லாமாபாத்தின் மனதை வெற்றிகரமாக கரைத்திருந்தது. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், இந்த கூறுகளில் பலவும் எண்ணெய் வளம் செறிந்த மத்திய ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் தடைக்கற்களாகி இருப்பதைக் கண்ட பின் அமெரிக்கா இப்போது ஒரு தசாப்த-காலப் போராக ஆகியிருக்கும் போரைத் தொடக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் மக்களின் வாழ்வையும் ஜனநாயக உரிமைகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

பாகிஸ்தானின் உயரடுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தனது கொள்ளையடிக்கும் வர்க்க நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதென்பது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். ஜின்னாவின் “அபாயத்தில் இஸ்லாம்” பிரச்சாரம் மற்றும் உலமாவின் பகுதிகளை பிரிவினைக்கான கிளர்ச்சியில் சேர்த்தது வரை இது பின்னோக்கிச் செல்கிறது. இந்த கொள்கையை ஸ்தாபனமயமாக்கிய ஜெனரல் ஜியா இஸ்லாமிய வலதுசாரி அரசியல் கட்சிகளையும் மற்றும் அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் போராளிக்குழுக்களின் ஒரு வலைப்பின்னலையும் ஊக்குவித்தார். ஆயினும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியில் ஜெனரல் ஜியாவின் “இலட்சியத்தை”ப் ”பூர்த்தி செய்வதாய்” அவரது கல்லறையில் உறுதியெடுத்துக் கொண்ட இதன் தலைவரான நவாஸ் ஷெரிப்பில் ஆரம்பித்து “இஸ்லாமிய சோசலிசம்” பேசும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வரை அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் தலிபானுடன் தொடர்புபட்ட கிளர்ச்சியானது அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளால் இழைக்கப்பட்டுள்ள பயங்கரங்களால் தோன்றியுள்ள பஸ்தூன் கோபம் மற்றும் வெறுப்பிற்கு எண்ணெய் வார்த்திருக்கிறது. அத்துடன் நிலப்பண்ணைத்துவம், ஆளும் வர்க்கத்தின் ஊழல் மற்றும் உத்தியோகப்பூர்வ அலட்சியம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றில் பிறந்த சமூகத் துயரங்களுக்கு (பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய ஆறு தசாப்த காலங்களாக  கூட்டரசினால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் மக்கள் இத்துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர்) இது மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பையே செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான்-பாகிஸ்தான் போர் ஆகியவற்றுக்கான எதிர்ப்பில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஹமிது குல் போன்ற இராணுவ-உளவு ஸ்தாபகத்தில் இருக்கும் அவர்களது ஆதரவாளர்களும் ஏகபோகம் செய்ய தொழிலாள வர்க்கம் விட்டுவிடக் கூடாது.

போருக்கான எதிர்ப்பினை அவசர அவசியமாய் உள்ள நிலப்பண்ணைத்துவத்தை ஒழிப்பது, பாகிஸ்தானின் பாதுகாப்பு அரசைப் பிரித்தெறிவது, அனைவருக்கும் வேலைகளும் அடிப்படைப் பொதுச் சேவைகளும் கிட்டும் வகையில் பொருளாதாரத்தின் உத்தரவிடும் மேலிடங்களைத் தேசியமயமாக்குவது போன்ற ஜனநாயக மற்றும் சோசலிச நடவடிக்கைகளுடன் இணைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கமானது பாகிஸ்தானிய உழைக்கும் மக்களின் தலைவனாய் எழும் என்பதோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அழைப்பினையும் அதிரடியாகக் கீழறுக்கும்.  

ஆப்கான்-பாகிஸ்தான் போருக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஒரு இயக்கம் எழுவதென்பது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் தொழிலாளர்கள் இடையேயும் போருக்கும் ஏகாதிபத்தியத்திற்குமான எதிர்ப்பு அபிவிருத்தியுறுவதற்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுசக்தியாய் அமையும். அதன்மூலம் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானிய மக்கள் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தளைகளில் இருந்து உடைத்து விடுதலையாகும் நாட்கள் துரிதப்படும்.