சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

The struggle for the marxism and the tasks of the Forth  International

மார்க்சிசத்திற்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

கீழ்வரும் அறிக்கை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 12 வது கூட்டத்தொடருக்கு டேவிட் நோர்த்தால் வளங்கப்பட்டதாகும்.

By David North
11 March 1992

use this version to print | Send feedback

சோவியத் யூனியனாக இருந்ததிலிருந்து உருவாக்கப்பட்ட அரசுகளை தொழிலாளர் அரசுகள் என வரையறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியால் ஏற்படுத்தப்பட்ட சொத்துறவுகளை, அதன் திரிக்கப்பட்ட வடிவத்திலும் கூட, இந்த அரசுகள் பாதுகாக்கவில்லை. இந்த அரசுகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகவே தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களை இல்லாமல் செய்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவற்றை தொழிலாளர் அரசுகள் என வரையறை செய்வது, இந்தப் பதத்திற்குரிய எந்தவிதமான மார்க்சிச உள்ளடக்கத்தையும் பறித்து விடுகிறது. 1930ல் சோவியத் யூனியனை தொழிலாளர் அரசு என்ற வரையறையை நிராகரித்தவர்களுடன், ட்ரொட்ஸ்கி சர்ச்சையில் இறங்கினார். ஸ்ராலினிஸ்டுக்கள் செய்த குற்றங்களுக்காக, அவர்களுக்கு எதிராக வார்த்தைகளால் பழிவாங்கக்கூடாது, மாறாக இன்னும்  எஞ்சியிருக்கும் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை - மிக முக்கியமாக இருந்து கொண்டிருக்கின்ற தேசியமயமாக்கப்பட்ட சொத்தையும் அரசு திட்டமிடலின் அடிப்படைகளையும்- பாதுகாக்க வேண்டும் என்றார். அதிகாரத்துவத்தின் நலன்கள் இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட மட்டம்வரை சோவியத் அரசு இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும் அக்டோபர் புரட்சியினால் ஏற்படுத்தப்பட்ட சொத்துவடிவங்கள், ஆழமான சீரழிவுக்குள்ளான போதிலும் தொழிலாளர் அரசு என்ற வரையறை இன்னும் மதிப்புள்ளதாகவே இருக்கின்றது. என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

1939 சர்ச்சையின்போது  ட்ரொட்ஸ்கி விவரித்தார், சோவியத் யூனியனை பாசிஸ்டுக்களாலோ அல்லது அந்த அர்த்தத்தில் ''ஜனநாயக'' ஏகாதிபத்தியத்தாலோ அடையும் இராணுவத் தோல்வியின் விளைவு என்பது, ஸ்ராலினிச சர்வாதிகார ஆட்சியின் அழிவு மட்டுமல்ல, அது சமூக உறவுகள், சொத்துவடிவங்களின் எல்லைகளிலும் எதிர்ப்புரட்சிக்கு இட்டுச் செல்லும், ஆகவே இது வெறுமனே வார்த்தைகள் சம்பந்தப்பட்ட சர்ச்சை அல்ல. 1939ல் பேர்ன்ஹாமிடம் ட்ரொட்ஸ்கி கூறியதாவது, (நான் இங்கே சுருக்கித் தருகிறேன்) ''நல்லது, நீங்கள் சோவியத் யூனியனை தொழிலாளர் அரசு அல்ல எனக்கூற ஆசைப்படுகிறீர்கள்,- நான் அதனை ஏற்றுக் கொண்டால் செய்ய வேண்டிய வேலையின் கண்ணோட்டத்தில் இருந்து என்ன அரசியல் முடிவை நாம் எடுக்கவேண்டுமென்று கேட்பீர்களா? நீண்டகாலத்துக்கு முன்பே, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கி வீசுவது அவசியமானது என்பதில் உடன்பட்டோம். நாம் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று கருதுகிறீர்கள்? வரையறையில் மாற்றக் கோரி நீங்கள் முன் வைப்பது எதைக் குறிக்கிறது?''

அது தெளிவானது- பர்ன்ஹாம், சாட்மன் ஆகிய இருவரதும் பரிணாம வளர்ச்சியினால் அது உறுதிப்படுத்தப்பட்டது- அதாவது சோவியத் யூனியனை ஒரு தொழிலாளர் அரசாக வரையறை செய்வதை கைவிடுதலானது ஏகாதிபத்தியத்துடனான போரில் சோவியத் யூனியனை தொழிலாளர் வர்க்கம் பாதுகாக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கே வழிவகுக்கும். இன்னும் சரியாகக் கூறினால் ஹி.ஷி.ஷி.ஸி மீதான ஏகாதிபத்திய வெற்றிக்கே சாதகமாக இருக்கும். இது சார்பு ரீதியான குறைந்த காலத்தில் பேர்ன்ஹாமின் நிலைப்பாடாக இருந்தது. கொரியப்போர் காலகட்டத்தின் போது அது சட்மன் உடையதாகவும் இருந்தது.

சோவியத் யூனியன் தொழிலாளர் அரசு என்ற வரையறை, அக்டோபர் புரட்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சொத்து வடிவங்களைப் பாதுகாப்பதுடன் எப்பொழுதும் கட்டுண்டிருந்தது. புதிய அரசுகளாகத் தோன்றிய ரஷ்யா, உக்ரெயின், உஸ்பேஸ்கிடூஸ்தான், கஜக்ஸ்தான், ஜோர்ஜியா மற்றும் ஏனைய சுதந்திர குடியரசுகளின் கூட்டமைப்பு ஆகியன ஏதோ ஒரு வழியில் அரசுசொத்துடமையைப் பாதுகாக்கின்றன என்று, இன்னும் பேணுவது சாத்தியமற்றதாகும். டிசம்பர் 1991 அன்று ஜெல்ட்சின், கிராவ்சக், ஷாஷ்கேவிச் ஆகியோர் கையெழுத்திட்ட ஆவணங்களில் சிமிஷி தனிச்சொத்துடமையை ஏற்படுத்துவதில் உறுதிகொண்டுள்ளது என்று தெளிவாகவே குறிப்பிட்டனர். இந்த அடிப்படை மாற்றமானது, கொர்ப்பசேவ் அரசினால் 1985 இருந்து முன்னெடுத்து வரப்பட்ட கொள்கைகளின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஸ்டாலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரப் பண்பின் இறுதி முடிவாகும்.

புதிய சொத்துடமை வடிவங்களை ஏற்படுத்தும் நோக்கில்தான் சிமிஷி ஐ உள்ளடக்கிய இந்த அரசுகள் அமைக்கப்பட்டன இதுவே, இந்த அரசுகளைப் பற்றிய வரையறையை சரிபார்ப்பு செய்வதை வேண்டி நிற்கிறது. இது சிலருக்கு தொந்தரவாக இருக்கலாம்- நம்மை விமர்சிப்பவர்களின் நிலைப்பாடு பற்றி நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்- ஆனால் இந்த தேவையான திருத்தங்கள் நமது இயக்கத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தில் வேரூன்றி உள்ளன. நாம் பாரம்பரிய முறைப்படுத்திக் கூறல்களை, வர்க்கப் போராட்டத்தின் ஸ்தூலமான அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் மறு சரிபார்ப்புச் செய்ய கடமைப் பட்டவர்கள். அப்போதுதான் நம்முடைய முறைப்படுத்திக் கூறல்கள் புறநிலை யதாத்தத்திற்கு பொருந்தக் கூடியதாக இருக்கும். நம் முன்னே உள்ள பணி புதிய அரசுகளுக்கு பொருத்தமான வரையறையை வழங்குவது மட்டுமல்ல, இந்த மாற்றங்களின் தாற்பரியங்களை பரந்த வரலாற்று உள்ளடக்கடத்தில் புரிந்து கொள்ளவும் வேண்டும். இது வெறுமனே வார்த்தைகளையும், சொற்பதங்களையும் மாற்றுகின்ற விடயமல்ல. சோவியத் யூனியன் இனியும் தொழிலாளர் அரசு அல்ல என்று சொல்வது மட்டும் போதாது. தொழிலாள வர்க்கத்தின் புறநிலை வரலாற்று அனுபவத்தின் உள்ளடக்கத்தில் இந்த மாற்றம் எதை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிகமாகப் பயன்படுத்துவதால் சர்வ சாதாரணமாக்கப்பட்ட சொற்றொடராகவும் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் உண்மையாகச் சொல்ல முடியும், 1917ல் திறக்கப்பட்ட முழு வரலாற்றுக் கட்டத்தினதும் முடிவுக்கு நாம் வந்து விட்டோம் என்று. அக்டோபர் புரட்சியானது நவீனகால வரலாறு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் தீர்க்கமான நிகழ்ச்சியாகும். தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் வெற்றி கொள்ளப்பட்டது, வரலாற்று அபிவிருத்தியின் புதிய கட்டத்தைக் குறிக்கின்றது. கம்யூனிஸ்ட் கட¢¤ அறிக்கையில் கார்ல் மார்க்ஸ், ஏங்கல்சால் தொடக்க வடிவம் கொடுக்கப்பட்ட, உலக சோசலிசத்தின் வரலாற்று முன்னோக்கு யதார்த்தமாக்கப்பட்டது. சோசலிசப் புரட்சி நடைமுறைப் பிரச்சனையாகி விட்டது.

தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அபிவிருத்தி

அக்டோபர் புரட்சி ஆகாயத்திலிருந்து விழவில்லை. அது சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அபிவிருத்தி மற்றும் வர்க்கப் போராட்டம் ஒரு புறநிலையான வரலாற்று வளர்ச்சிப் போக்கின் சாதக உச்ச நிலையாக இருந்தது. வர்க்கப் போராட்டத்தின்  சூழலில் மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் 1917க்கு முன்னர் 70 வருடங்களாக மக்களின் அரசியல் நனவு, வரலாற்று ரீதியாக முன்னிருந்திராத வகையில் வியப்பூட்டும் அளவுக்கும் அபிவிருத்தி அடைந்திருந்தது. 19ம் நூற்றாண்டு பற்றிய வரலாற்றுப் படிப்பினையை இந்த கட்டமைப்புக்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது.. மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் நனவு பூர்வமான அரசியல் சக்தியாக மக்களின் வளர்ச்சியும்தான், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளுக்கும் தனிச் சிறப்பான பண்புகளை வழங்கின. எண்ணிப் பாருங்கள் பெப்ரவரிப் புரட்சி ஆண்டிலும் 1848ன் ரத்த யூலை நாட்களிலும் பிறந்த ஒரு பாரிஸ் தொழிலாளி, 1871ல் பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் இளைஞனாகப் பங்கெடுத்திருப்பார், அவருக்கு 41 வயது மட்டுமே ஆகியிருக்கும் போது 2ம் அகிலம் அமைக்கப்பட்டிருக்கும் அவரது 70தாவது பிறந்தநாளை அடைவதற்கு முன்னரே 1917ல் ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தை வெற்றி கொண்டதைப் பார்ப்பதற்கு அவர் இன்னும் உயிர் வாழ்ந்திருக்க முடியும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட காலப்பகுதியில் பிறந்த ஒரு தொழிலாளியின் வாழ்க்கைக் காலம், அக்டோபர் புரட்சியை உள்ளடக்கிய அரசியல் அபிவிருத்தி காலப்பகுதியின் சுழற்சியைக் கொண்டிருந்தது.

முதலாளித்துவத்துக்கு எதிரான குரூரமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான தோற்றத்தினாலும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வெகுஜன அமைப்புக்கள் உருவாக்கப்பட்டதாலும், தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் பிரிவின் நனவு ஒழுங்கமைக்கப்பட்டது.

அந்த காலகட்டத்திற்கும், நாம் கடந்து செல்லும் காலகட்டத்திற்கும் இடையிலான உறவை ஒருவர் கருத்தில் கொள்கையில், இந்த வரலாற்று உள்ளடக்கத்தை நினைவில் கொள்ள வேண்டும். 1914 ஆகஸ்டின் நிகழ்ச்சிகளில் திகைப்படைந்த போதிலும், இந்த தொழிலாளர்கள் அவற்றை, சோசலிசத்தின் தோல்வி என்று அல்லாமல், சோசலிசத்தின் காட்டிக்கொடுப்பு என்று புரிந்து கொண்டார்கள். 3 ஆண்டுகள் கழிந்து, போல்ஷிவிக் கட்சியால் அதிகாரம் வென்றெடுக்கப்பட்டதை, மார்க்சிசத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராக, மார்க்சிசத்தினால் தொடுக்கப்பட்ட எதிர்த் தாக்குதலாக, வர்க்க நனவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த பிரதிநிதிகள் கண்டார்கள்.

ரஷ்யப்புரட்சி, ஐரோப்பா முழுமையும் புரட்சிகரப் போராட்டங்களின் அலையை எழுப்பி விட்டது. எவ்வாறாயினும் அவை சமூக ஜனநாயகத்தின் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டன. இத் தோல்விகள் சோவியத் அரசின் தனிமைப்படலை நீடிக்கச் செய்ததுடன், அதனுடைய சீரழிவுக்கும் வழிவகுத்தன. அதிகாரத்துவமானது அதிகாரத்தைப் பிடுங்கி, அக்டோபர் புரட்சியின் ஆழமான கீர்த்தியைப் பயன்படுத்தி, அது அடிப்படையாகக் கொண்டிருந்த ஒவ்வொரு கொள்கையையும், காட்டிக் கொடுத்தது. இந்தக் கட்டத்தில் தொழிலாள வர்க்கத்துக்குள் ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்ற வேலைத் திட்டத்தின் விளைபயன்களை மதிப்புரை செய்வது தேவையில்லாதது. குறைந்த பட்சம் சில பெரிய முதலாளித்துவ நாடுகளில் புரட்சி முன்னெடுக்கப்படாவிடில், இறுதியில் சோவியத் யூனியன் அழிய நேரும் என்று நமது இயக்கம் எப்பொழுதும் வலியுறுத்தி வந்தது.

1920 நடுப்பகுதியிலிருந்து, சோசலிச சர்வதேசியம் பற்றிய முக்கிய விஷயம் மீதான தாக்குதலானது, தவிர்க்கமுடியாதபடி இதர அனைத்து விஷயங்களிலும் மோதுதல்களை தோற்றுவித்தது. அது சோசலிச பொருளாதார அபிவிருத்தியின் வளர்ச்சிப் போக்குடன் தொடர்பானவற்றையும் உள்ளடக்கியிருந்தது. சோசலிசத்தை நோக்கிய சோவியத் பொருளாதாரத்தின் அபிவிருத்தியானது, அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத்திட்டத்திலும், தொழிலாளர்களது ஜனநாயகத்தின் சுவடுகளை நசுக்கும் அதனுடைய சர்வாதிகாரத்திலும் எதிர் கொண்டுள்ளது என இடது எதிர்ப்பு வலியுறுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகள் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளின் வியப்பூட்டும் விஞ்ஞான முன் ஆய்வை உறுதிப்படுத்துகின்றன. 1931ல் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு பந்தியை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள். ''இறுதி ஆய்வில், சோவியத் யூனியனின் அபிவிருத்திகளின் அனைத்து முரண்பாடுகளும் இந்த வகையில் தனிமைப் படுத்தப்பட்ட தொழிலாளர் அரசுக்கும் அதனைச் சுற்றிய முதலாளித்துவ சுற்றிவளைப்புக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு இட்டுச் செல்லும். தனி ஒரு நாட்டுக்குள் தன்னிறைவு சோசலிசப் பொருளாதாரத்தை நிர்மாணிப்பதில் சாத்தியமற்றதானது, ஒவ்வொரு புதிய கட்டத்திலும் நீட்டப்பட்ட அளவிலும் மிக ஆழமாயும் சோசலிசக் கட்டுமானத்தின் அடிப்படை முரண்பாடுகளை புதுப்பிக்கின்றது. இந்த அர்த்தத்தில், உலகின் எஞ்சிய பகுதிகளில் உள்ள முதலாளித்துவ அரசு, இன்னொரு நீண்ட வரலாற்று காலகட்டத்திற்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திறமையுடையதாக நிரூபிக்கப் படுமானால், சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தவிர்க்கமுடியாதபடி பேரழிவுகளை சந்திக்க நேரிடும்.''

இந்தக் கட்டுரையின் முடிவில், அவர் எழுதினார், ''சோவியத் யூனியனின் உள்ளும் புறமுமான முரண்பாடுகளில் இருந்து அது முழுமையாகவும், இறுதியாகவும் விடுபடுவதை, உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிகரமான புரட்சி அரங்கில்தான் காணமுடியும். அங்கே மட்டும்தான் காணமுடியும்''

சோவியத் அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்பு, ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் வெற்றியைத் தடுத்ததுடன், சர்வதேச மார்க்சிச இயக்கத்தை ஊனமடையச் செய்தது என்பதனை, சோவியத் யூனியனதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினதும் வரலாற்றை நன்கு கற்றவர்கள் அறிவார்கள். சோவியத் யூனியனின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான தனிமைப்படலுக்கு ஸ்ராலினிசம் இடைவிடாது செயல்பட்டதால், அது இறுதியில் இன்றைய திடீர் (பல்டிக்கு) வழிவகுத்தது. சோவியத் யூனியனில் இருந்தது சோசலிச பொருளாதாரம் அல்ல. கிழக்கு ஐரோப்பாவில் போருக்கு பிந்தைய உடன்படிக்கைகள் மூலம் மேலும் ஆதாரம் வழங்கப்பட்டதே தவிர முடிவுக்கு கொண்டுவரப்படாத -தேசிய தன்னிறைவு ஆட்சி என்ற கட்டமைப்புக்குள்- முன்னேறிய முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார செயல்பாடுகளை சோவியத் யூனியன் முன்னேறி கடந்து செல்வது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு போதும் அவற்றிற்கு சமமாக கூட வர முடியவில்லை. சர்வதேச வளங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் தன்னிறைவு ஆட்சியின் வேலைத்திட்டம் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களை புறநிலையான எந்த உற்பத்தித் திறன் அளவீடுகளிலிருந்தும் பிரித்தது. அத்துடன் திட்டமிடல் முறைகளை குற்றமான வகையில் தகாது உபயோகிப்பதை மறைப்பதையும் அதனைத் தொடர்ந்து செய்வதையும் சாத்தியமாக்கியது. உற்பத்தி சக்திகளை அறிவு பூர்வமாக பயன்படுத்துவதற்கும், விஞ்ஞான ரீதியாக திட்டமிடுவதற்கும் அதிகாரத்துவம் பெரும் தடையாக, மற்றைய  ஒவ்வொன்றிலும் இருப்பது போலவே இருந்தது. ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய கூறாக மாறியுள்ள அந்த வகையான கம்பியூட்டர், செய்தித் தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களில் அதன் பரந்த அளவிலான விளைபயன்களை கொண்டுள்ளதால், சமுதாயத்தின் மீதான அதிகாரத்துவத்தின் சர்வாதிகார மேலாதிக்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அதனை அதிகாரத்துவம் பார்த்தது. சோவியத் யூனியனில் பொருளாதார முன்னெடுப்புக்கள், ஏற்கனவே தமது வரலாற்று சுழற்சியின் முடிவை நெருங்கி விட்டிருந்த பழம் தொழிற்துறைக்குள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் நீண்ட பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருந்த போதிலும், 1970களில் சோவியத் பொருளாதாரம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விட பின்னுக்கு மேலும் மேலும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது.

1973ல் இருந்து முதலாளித்துவ அமைப்பை பாதித்த பொதுவான தேக்கமும் அநேக அதிர்ச்சிகளும் சோவியத் பொருளாதாரத்தின் நெருக்கடியை ஆழப்படுத்தின. இது அரசியல் ரீதியாக சோவியத் யூனியன் இராணுவ செலவை செய்யும்படி ஏகாதிபத்தியம் கொடுத்த பிரமாண்டமான அழுத்தம், எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றவாறாக பல்வேறு விதமான வழிகளில் வெளிப்படுத்தப்பட்டது. இறுதியாக சோவியத் யூனியனின் மீது ஏகாதிபத்தியத்தால் கடுமையாக திணிக்கப்பட்ட பொருளாதார, அரசியல் அழுத்தமானது தேசியவாத வழியில் சோசலிசத்திற்கான பாதை இருக்க முடியாது என்ற அடிப்படை உண்மையையே கோடிட்டுக் காட்டியது. உலகப் பொருளாதாரத்தின் அழுத்தத்தினின்று தப்பிப்பதற்கு அப்பால், சோவியத் யூனியன் மேலும் மேலும் அதன் தாக்கத்திற்கு கீழ் வந்தது. போலியான சோவியத் அமைப்பின் தேசிய தன்னிறைவு ஆட்சியின் தோல்வி இன்னும் கூடுதலாகத் தெளிவாகத் தொடங்கியது.

ஸ்ராலினிச அமைப்பின் மீதான வரலாற்று  நிந்தனை

சோவியத் யூனியனுள்ளும் ஐரோப்பாவினுள்ளும் இடம்பெற்ற நிகழ்ச்சிகள், ஸ்ராலினிச அமைப்பின் மீதான வரலாற்று நிந்தனையாகும். ஆனால் ஸ்ராலினிசம் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகியிருக்கவில்லை. குறிப்பிட்ட மட்டத்திற்கு சோவியத் யூனியனுள்ளும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாள வர்க்கம், அதிகாரத்துவத்தின் அரசியலால் பொறிக்கிடங்குக்குள் வீழ்த்தப்பட்டுள்ளதால் அதிகாரத்துவத்தின் கிரிமினல் கொள்கைகளின் விளைபயன்களாக பாதிக்கப்பட்டுளௌது.

முதலாளித்துவ மீட்சியின் அதிர்ச்சி பல இலட்சக் கணக்கான தொழிலாளர்களால் உணரப்பட்டு வருகிறது. சோவியத் யூனியனில் சமூக கலாச்சார வாழ்க்கையானது, அரை நூற்றாண்டாக காணாத மட்டத்திற்கு மிக வேகமாக குறைந்து வரும் உண்மையான அபாயம் நிலவுகிறது.

கலாச்சாரத்தில் மனம் கவரும் வெற்றிகள் வேகமாகவே அழியக்கூடும். இலட்சக்கணக்கான சோவியத் இளைஞர்கள், சீர்குலைந்து வரும் கல்வி முறையுடன் மோதலில் உள்ளனர். அவர்களது பெற்றோர்களுக்கும் ஏன் பாட்டனாருக்கும் கூட கிடைத்த கல்வி வளங்கள், அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும். பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்திற்கு பழகிப்போன எல்லாப் பயங்கரங்களும் சோவியத் யூனியனுக்குள் தோன்றுகின்றன. பிரதான சோவியத் நகரங்கள் சுகாதாரமின்மையும் நம்பிக்கையின்மையும் ஆசியா, லத்தீன் அமெரிக்கா உட்பட உலகில் எங்கும் சமமாகச் சொல்லமுடியாத அளவுக்குக் காணப்பட்டதை தான் கவனித்ததாக, Financial Times ல் இவ்வார இறுதியில் செய்தியாளர் ஒருவர் எழுதினார். முதலாளித்துவ மீட்சியின் முழுமையான முடிவுகள் இன்னும் நிறைவேற்றப்படாத வேளையில், இது வெளியிடப்பட்டுள்ளது. அவை உற்பத்தி சக்திகளின் பல்வேறு எல்லைப் பரப்புகளின் ஊடாக படிப்படியாக அவற்றின் வழியில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஒருவர் கட்டாயம் கேட்கவேண்டும் உதாரணமாக போக்குவரத்துத் துறை செயல்படுவது நிற்கும்போது என்ன நிகழும்? இதன் விளைபயன்கள் உண்மையிலேயே பயங்கரமானவை என்பதுடன் அவை, சோவியத் யூனியனில் முதலாளித்துவ மீட்சியானது, மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளில் பயங்கரமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற நமது எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்கின்றன.

அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சி முயற்சிகளிலிருந்து புரட்சியின் சமூக வெற்றியைப் பாதுகாக்க அரசியல் புரட்சி இன்றியமையாதது என நாம் வலியுறுத்தினோம். ஆனால் ஸ்ராலினிச ஆட்சியின் வீழ்ச்சி, சோசலிசப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் அணிதிரளல் மூலம் அல்லாமல், அதிகாரத்துவத்தின் சதியினாலே நிறைவேறியது என்பதை நாம் கட்டாயம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கம் தோல்வியினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த தோல்வியை ஆய்வு செய்வது அவசியமானது.

1991, டிசம்பர் 8ல் மின்ஸ்கில் நடந்ததும், உண்மையில் சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு நடந்து வந்ததும் அனைத்துத் தொழிலாள வர்க்க இயக்கங்களின் நீடித்த சீரழிவினதும், சிதைவினதும் உச்ச நிலையாகும்.

இத் தோல்வியானது, பல பத்தாண்டுகளாக புரட்சிகர தொழிலாளர் இயக்கம் காட்டிக் கொடுக்கப்பட்டதன், வழிமாறியதன் விளைபொருளாகும். சோவியத் யூனியனிலும் உலகம் முழுவதிலும், தொழிலாள வர்க்கம் அதனுடைய சொந்த அமைப்புக்களின் ஆழமான சிதைவு, சீரழிவினது விளைபயன்களை எதிர்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய காலம், வர்க்கப் போராட்டம் அதிகாரத்துவ தில்லுமுல்லுகள் மற்றும் நசுக்குதலுக்கு ஆளான பண்பினைக் கொண்டிருந்தது. இந்த முழுமையான காலப்பகுதியும், தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகர முன்முயற்சிகளுக்கு பிரதியீடாக அனைத்து சக்திவாய்ந்த எந்திரங்களை அவை ஸ்ராலினிசமாகவோ அல்லது சமூகஜனநாயகமாகவோ இருந்தாலும் சரி பொதுவாகவே பிற்போக்கு அரசியல் தன்மை கொண்ட காலப்பகுதியாக இருந்தது.

இங்கேதான் நான் முன்னர் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். அது 1847லிருந்து 1917 பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியது, அந்தக் காலகட்டத்தை நாம் புகழ்ந்தேத்தவோ அல்லது அதன் பல முரண்பாடுகளை மூடிமறைக்கவோ கூடாது. ஆனால் சாராம்சத்தில் அது இறுதியாக ரஷ்யப்புரட்சியில் தனது உச்ச அளவு வெளிப்பாட்டைக் கண்டுகொண்ட மக்களின் புரட்சிகர நனவின் ஆழமான வளர்ச்சியின் பண்பினைக் கொண்டிருந்தது. இன்னொரு விதத்தில் போருக்கு பிந்திய காலகட்டத்தின் அரசியலானது, தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகாரத்துவங்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

போருக்குப் பிந்தைய பெரும்பாலான காலகட்டத்தில் இந்த அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்க இயக்கத்துள் நியாயமான, ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தையும் கூட வகித்ததாக தோன்றியிருக்கலாம். நிச்சயமாக பப்லோவாதம் அந்தக் கருத்தைத்தான் வலியுறுத்த முயற்சித்தது. தொழிற்சங்கங்கள் அதிக பலம் கொண்டவையாக வளர்ந்தன. ஸ்டாலினிஸ்டாகவோ அல்லது சமூக ஜனநாயகவாதியாகவோ இருந்தாலும் சரி தம்மை தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உரிமை கோரிக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசியல் மேல் கட்டுமானத்தில் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகளாக அமைந்தன. வாழ்க்கைத்தரங்கள் உயர்ந்தன. சீர்திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திர அரசியல் நடவடிக்கையின் அபிவிருத்தி மற்றும் அதனுடைய புரட்சிகர நனவின் நிலைப்பாட்டிலிருந்து கருதுகையில், அந்தக் காலகட்டம் தேக்கம், சீரழிவு, சிதைவின் காலகட்டமாகும். பொருளாதார விரிவாக்கக் காலங்களில் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த பெரும் போராட்டங்கள் தேவைப்படாதிருந்தபோது, சீரழிவின் ஆழமோ அல்லது அதன் வரலாற்று விளைபயன்களோ முழுமையாகத் தெளிவாகவில்லை. ஆனால் உலக நெருக்கடியின் அபிவிருத்தி இந்த நெருக்கடியை மேல்மட்டத்திற்கு கொண்டுவந்தது. உலகம் முழுமையும் அதிகாரத்துவ மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களின் பிற்போக்கு பண்பு அம்பலமானது. அவற்றின் கையாலாகாத் தன்மையும் அம்பலமானது என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

மண்டேல் பிரமைகளை விதைக்கிறார்.

அனைத்துலகக் குழுவின் ஆய்வினைத் தாக்குபவர்கள் சமீபத்திய நிகழ்ச்சிகளை அகன்ற வரலாற்று உலகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் முயற்சியில்லாதவர்கள் என்பது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. எர்ன்ஸ்ட் மண்டேல், ''மிக்கையில் கொர்பச்சேவின் தடுக்கமுடியாத வீழ்ச்சி'', என்ற கட்டுரையை இப்போது எழுதியிருக்கிறார். இது கோர்பச்சேவ் இருபதாம் நூற்றாண்டின் மிக அறிவாற்றல் படைத்த அரசியல்வாதி என்று நம்மிடம் அண்மையில் சொன்னவரிடமிருந்து வந்துள்ளது. சிறப்பாக இந்தக் கட்டுரை சோவியத், ரஷ்ய தொழிலாளர்களைத் துன்பத்துக்கு ஆளாக்கிய தோல்வியின் விளைபயன்களை மூடிமறைப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கொர்பச்சேவின் அரசியல், எதிர்ப்புரட்சிகர அரசியல் என்பதை மண்டேல் இன்றுவரை மறுத்து வருகின்றார். அவர் இப்பொழுது, ''கொர்பச்சேவ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பது ஒரு பிரமையாகும்'' என்கிறார். ஆனால் திருவாளர் மண்டேலின் அரசியல், இந்த பிரமையைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அவர் மேலும் எழுதுகின்றார் ''சோவியத் யூனியனுள் கொர்பச்சேவின் கீழ் ஆழமான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்பட்டது சம்பந்தமாக ஒருவர் கண்களை மூடிக்கொண்டால், அது ஒரு தவறாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாராம்சத்தில் கிளாஸ்நோஸ்ட்டில் சுருக்கி கூறப்பட்டுள்ளது. அல்லது நீங்கள் விரும்பியவாறு கூறினால், ஜனநாயக சுதந்திரங்களின் கணிசமான அளவு விரிவுபடுத்தலை நடைமுறையில் சோவியத் மக்கள் அனுபவித்தனர்.''

''சோவியத் யூனியனில் கொர்பச்சேவின் கீழ் சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்தது'' என்று மண்டேல் பேசும் பொழுது, ஒருவர் உண்மையில் பழைய சொல்வாடையை நினைவு கூருவார், ''ஆப்பரேசன் வெற்றிதான் ஆனால் ஆள்தான் காலி'' ஆம், பப்லோயிசத்தின் பிற்போக்கு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, கிளாஸ்நோஸ்த் அபாரமான வெற்றிதான். மண்டேல் பாராட்டும் ஜனநாயக வளர்ச்சிப் போக்குகள் என்பது, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் உச்சநிலைக்கான சமூகச் சூழலை அவர்கள் உண்டு பண்ணுவதற்காக, ஆளும் பிரிவுகளுக்குள்ளேயே ஏற்படும் தகராறுகளை பகிரங்கமாய் வெளிப்படுத்தலன்றி வேறல்ல. இந்த வளர்ச்சிப் போக்குகளுக்கு மண்டேல் துணை நின்றார். அவர் அதற்கு துணை செய்ததில் சிறிய பங்கு வகிக்கவில்லை. சில நாடுகளில், மற்றவற்றில் செய்வதைவிட அதிகம் செய்தார். செக்கோஸ்லாவோக்கியா, ஜேர்மனி அல்லது போலந்தாக இருந்தாலும் சரி அங்கே வலதுசாரிகளுக்கு, அவரது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு அரசியல் முகமூடியை வழங்கினார். இவ்வாறு செய்ததன் மூலம் அவர் இறுதியாக சோவியத் யூனியன் நொறுங்க வழிவகுத்த அரசியல் சூழ்நிலைகளுக்கே பங்களிப்புச் செய்தார். மண்டேல் கொர்பச்சேவுக்கு ஆதரவளித்தார். மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவர் உருவாக்கிய அரசியல் நபர் தாரிக் அலி எழுதிய புத்தகம் வேறெவருக்கும் அல்ல பொறிஸ் ஜெல்ட்சினுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டது.  இப்பொழுது ஷீலா டோரன்சின் ''நியூஸ்லைனில்'' மார்டின் பூத் எழுதிய கட்டுரையின் பக்கம் திரும்புவோம். அது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத் யூனியன் இல்லாமல்  போய்விட்டது என்று நாம் சொன்னதாக ஆத்திரப்படுகிறார். இது கடந்த 4 மாத நிகழ்ச்சிகள் ஏதோ அனைத்துலகக் குழுவினால் இட்டுக் கட்டி கூறப்பட்டதைப் போன்று இருக்கின்றது. பகுத்தறிவாளர்கள் இதை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் என்பதை ஆச்சரியப்படுமளவுக்கு, நீயூஸ் லைனால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடு அபத்தமானதாக இருக்கின்றது. டோரன்சையும், பூந்தையும் பொறுத்தமட்டில் அதிகமாக ஒன்றும் நிகழவில்லை. அவர்கள் சோவியத் யூனியனின் சட்டரீதியான கலைப்பைச் சுற்றிய எந்த நடவடிக்கைகளையும் கவனத்தில் கொண்ட அளவில், அதனை தொழிலாள வர்க்கத்தின் இடைவிடாத புரட்சிகர தாக்குதலின் சமீபத்திய வெளிப்பாடுகள் என்று புகழாரம் செய்தனர். இந்த தாக்குதல் அதன் 47வது வருடத்தை அடைந்துள்ளது என்று டோரன்ஸ் கூறுகிறார். உண்மையில் ஹீலி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அனுபவங்களை எந்தவிதமான ஆய்வு செய்வதன் அவசியத்தையும் தவிர்க்க, ''தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கம்'' என்ற அதி அற்புத ஸ்தூலமற்ற அருவமான சொல்லை உருவாக்கினார். இந்தோனேசியாவில் இரத்தக்குவியல், சிலியில் மக்கள் மீது ஒடுக்குமுறை, சிறீலங்காவில் இன அழிப்பு, சோவியத் யூனியனில் முதலாளித்துவ மீட்சி, இவ்வாறாக என்னதான் நிகழ்ந்திருந்தாலும்கூட -இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தாக்குதல் என்றும், அல்லது அதே சர்வவியாபகமான, உன்னதமான வரலாற்று சாராம்சத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும்- தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தாக்குதல் என்றும் எடுக்கப்பட வேண்டும்.    

நாம் முன்வைத்த நிலைப்பாடுகளை பூத்தும் டோரன்சும், புரூனோ ரிசியின வின் நிலைப்பாட்டுடன் ஒப்பீடு செய்கின்றனர். சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டுவிட்டது. சோவியத் யூனியன் இனியும் தொழிலாளர் அரசாக இருக்க முடியாது என்று கோரியவர்களுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி செய்த விவாதங்களின் உள்ளடக்கத்தை அவர்கள் ஒரு போதுமே புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அவர்களது கட்டுரையை வாசித்தால், ட்ரொட்ஸ்கி எழுப்பிய அடிப்படைப் பிரச்சனையை -சோவியத் அரசால் என்ன சொத்து உறவுகள் காப்பாற்றப்படுகின்றன?- என்பதை ஒதுக்கித் தள்ளுவதைக் காணலாம். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ''எண்ணங்கள்'' ''நோக்கங்களை'' நாம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நமது பதப்பிரயோகம் முழுமையாக ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களையே அடிப்படையாய் கொண்டுள்ளது. தொடக்க காலத்தில், அதிகாரத்துவம் அரச சொத்துடமையைக் காப்பாற்றும்படி ''நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது'' என்று நாம் கூறியபோது, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொத்துடமை வடிவங்களுக்கும் அதிகாரத்துவத்தின் சட ரீதியான நலன்களுக்கும் இடையிலான புறநிலை உறவைப்பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருந்தோம்.

சிடுமூஞ்சித்தனமான, மடைத்தனமான வழியில் நியூஸ்லைன் பத்திரிகை, அரசின் கைகளில் எஞ்சியிருக்கும் சொத்துடமை, வீதாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்த வண்ணம், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனிச்சொத்துடமை சம்பந்தமான அரசியல் நோக்கின் அடிப்படைப் பிரச்சனையினது கவனத்தைத் திசைதிருப்புவதற்காக முயற்சிக்கின்றது. டோரன்சின் பகுத்தறிவுப்படி, போருக்குப் பிந்தைய பெரும்பாலான காலப்பகுதியில், இங்கிலாந்தில் பெரும் தொழிற்துறைகள் அரசின் கையில் இருந்ததால், அது ஒரு தொழிலாளர் அரசாக இருந்தது என்று ஒருவர் விவாதிக்க முடியும்.

ஆனால் எம்மை பொறுத்த அளவில், என்ன விதாச்சார சொத்துக்கள் அரசுடமையானது அற்றது என்று ஒப்பிடும் ஒரு பிரச்சனையாக ஒரு போதுமே இருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை  சரியாகச் சொன்னால், அது அரசின் வரலாற்றுத் தோற்றத்திற்கும் அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சொத்து வடிவங்களை அழிப்பதற்காகவே சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பு CIS ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப வரலாற்றுக்கட்டத்தில் ஸ்ராலினிச அரசாங்கம் அரச சொத்துடமையைப் பாதுகாத்தது. அதற்கு காரணம், அது தனிப்பட்ட ரீதியில் சோசலிசத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதனால் அல்ல. மாறாக ஆளும் தட்டின் சலுகைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொத்துவடிவங்களில் கட்டுண்டு கிடந்தமையால்தான். ஆனால் முதலாளித்துவ மீட்சியின் நலன்களுடன் கட்டுண்டு கிடக்கும் சமூகத் தட்டினால் உருவாக்கப்பட்ட அரசே, CIS ஆகும்.

ஜனவரி அறிக்கையில் நாம் கூறியவாறு, இந்த தனிநபர்களின் நிலைப்பாட்டின்படி 51% சொத்துடமை  தனியார் மயப்படுத்தப்படவில்லை. எனில் ஒருவர் CIS ஐ  தொழிலாளர் அரசு என இன்னும் கருதமுடியும். ஒருவர் இது அவர்களது கண்ணோட்டத்தினை மிகைப்படுத்திக் கூறுவதாக நினைத்திருக்க முடியும். ஆனால் இதற்கிடையில் அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள், ''அதுதான் சரியான விடயம். ஆனால் பொருளாதாரம் 51% வரை தனியார்மயப்படுத்தும் மட்டத்தை அடைவதற்குத் தேவையானது என்ன என்பதே  முழுமையான விஷயமாகும். இவ்வாறு சிமிஷி ன்  வர்க்கப்பண்பு பற்றிய பிரச்சனை. எவ்வளவு சதவீதம் சொத்து அரசுடமையில் உள்ளது, எவ்வளவு சதவீதம் தனியாருக்கு உடமையானது என்ற ரீதியில் தீர்மானிக்கும் அளவியல் ரீதியான பிரச்சனையாகவும், வெறும் தோற்றம் பற்றிய பிரச்சனையாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எழுப்பிய மிகமுக்கியமான விவாதம் இந்த பந்தியில் தரப்பட்டுள்ளது. வேர்க்கஸ் லீக்கின் முன்னோக்குகளின் தீர்மானங்களில் நாம் குறிப்பிட்டோம், ''ஸ்ராலினிச அரசாங்கங்களின் தகர்வானது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நனவின் அபிவிருத்தியைக் காட்டிலும் அதிக வேகத்தில் நடந்துள்ளது'' என்று. இதனை மேற்கோள் காட்டி டோரன்சும், பூத்தும் கூப்பாடு போட்டார்கள், ''என்ன கருத்துவாத பிதற்றல் தனது ஒடுக்குமுறையாளரை இந்த அம்சத்தில் ஏகாதிபத்தியத்தின் ஸ்ராலினிச ஏஜண்டுகளை தூக்கி வீசும் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான போராட்டத்துக்கு வெளியிலும் புரட்சிக்கட்சியின் நனவுபூர்வமான தலையீடு இல்லாமல் எப்படி புரட்சிகர நனவு அபிவிருத்தி அடையமுடியும்?''

புரட்சிக் கட்சிபற்றி அவர்கள் குறிப்பிடுவது, பின்யோசனையின் பின்னர் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான இயக்கத்தில் இருந்து தோன்றுவதுதான் புரட்சிகர நனவு என்பதே அவர்களது நிலைப்பாட்டின் மையமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தினுள் ''உண்மையான போராட்டத்தைத் தவிர வேறு எவ்வழியிலும் அங்கு புரட்சிகர அரசியல் நனவுக்கான அபிவிருத்தி கிடையாது'' ஆனால் இந்த அம்சம்தான் முக்கியமானது என்று நாம் வலியுறுத்துகின்றோம். அக்டோபர் புரட்சியை சாத்தியமாக்கிய அரசியல் நனவின் மட்டம் 1917 பெப்ரவரிக்கும், அக்டோபருக்கும் இடையில் மட்டும் உருவாக்கப்படவில்லை. அது கடந்த 70 வருட காலத்தில் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சிசத்திற்கான நீண்ட வரலாற்றுப் போராட்டத்தின் விளைவாலாகும். 1917 வெற்றியின் மிச்ச மீதங்களாக எவை இருந்தபோதிலும், அவற்றைப் பாதுகாக்க சோவியத் தொழிலாளர்கள் ஏன் கிளர்ந்து எழவில்லை என ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால், கடந்த 70 வருடகால அரசியல் அபிவிருத்தியை,1917க்கு முந்திய 70 வருடகால அரசியல் அபிவிருத்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரஷ்ய புரட்சிக் காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் நோக்கு நிலை, பெரும்பாலும் சந்தர்ப்பவாதத்திற்கும், ஏனைய முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கும் எதிரான மார்க்சிசத்திற்கான போராட்டத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக, பல தசாப்தங்களை உள்ளடக்கிய நீண்ட போராட்டம், ரஷ்ய, ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த புரட்சிகர மற்றும் சோசலிச கலாச்சாரத்தை உண்டுபண்ணியது.

ஆனால் கடந்த 70 வருடங்கள் போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடியின் முதல் சமிக்ஞையுடனும் அதிகாரத்துவத்தின் விரைவான வளர்ச்சியுடனும் ''ஒரே சமயத்தில் ஏற்பட்ட வெகுஜனங்களின் அரசியல் நனவின்மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலால் பண்பிட்டுக் காட்டப்படுகிறது. மார்க்சிசத்தின் மகத்தான வெற்றியை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் நனவின் அபிவிருத்தியை, ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்கள் நனவு பூர்வமான வரலாற்று சக்தியாக மாற்றம் அடைந்ததை ஸ்ராலினிசம் அழிக்கக் கிளம்பியது. ஆனால் டோரன்சும், பூத்தும் மார்க்சிசத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதென்பது ஒருபுறமிருக்கட்டும். அதன் சாதனையை அறிந்திருக்கவில்லை. அதுதான் அரசியல் சம்பந்தமாக அவர்களின் முற்றுமுழுதான குட்டிமுதலாளித்துவ மற்றும் சந்தர்ப்பவாத அணுகுமுறையின் உண்மையான அடித்தளமாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதான ஸ்ராலினிசத்தின் பாதிப்பை ஒருவர் பிரதிபலிக்கும் பொழுதுதான், ''தொழிலாள வர்க்கத்தின் தோற்கடிக்கப்படாத இயல்பு'' பற்றிய தத்துவத்தின் ஆழ்ந்த மார்க்சிச விரோதப் பண்பினை ஒருவர் சரியாக மதிப்பிட முடியும். உண்மையில் அந்த மிகப்பெரிய தோல்வி என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் காரியாளர்களை மொத்தமாக அழித்ததும், அதன் அரசியல் நனவின் மட்டத்தை மோசமான கீழ்நிலைக்கு கொண்டு வந்ததுமாகும்.

சமூக ஜனநாயகத்தின் மற்றும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களின் விளைபயன்களை அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அவர்கள் அதனை வெல்லமுடியும். தொழிலாள வர்க்கம் ஒரு தோல்வியினால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்திக் கொள்ளல், அங்கு சோசலிசப் புரட்சிக்கான முன்னேற்றம் கிடையாது என அர்த்தப்படுத்தாது. ஜனவரியில் நாம் வலியுறுத்திக் கூறியவாறு, சோவியத் யூனியனை சட்டரீதியாக இல்லாதொழிப்பதற்கும், சோவியத் தொழிலாளர் வர்க்கம் தனது சக்தியை அணிதிரட்டி எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை நசுக்குவதற்கும் இடையில் பெரிதளவு வேறுபாடு காணப்படுகின்றது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், சோவியத் தொழிலாளர்களை பாதிப்புக்குள்ளாக்கிய பின்னடைவானது, முதலாளித்துவ மீட்சியின் வெற்றி தவிர்க்க முடியாதது என அர்த்தப்படுத்தவில்லை. சோவியத் யூனியனுக்குள் மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச ரீதியில் நிலமை மிகவும் ஸ்திரமற்றிருக்கிறது. அதனால் இந்த வகையான நியாயப்படுத்த முடியாத, அபத்த முடிவுகளுக்கு வரமுடியாது. சோவியத் யூனியனின் உடைவு தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரும் அபாயங்களை முன்வைத்துள்ளது. ஆனால் அது, முதலாளித்துவம் எப்படியோ தனது சொந்த முரண்பாடுகளை வெற்றி கண்டுவிட்டது அல்லது புதிய உள் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது என்று அர்த்தப்படுத்தவில்லை. முன்னாள் சோவியத் யூனியனில் வெற்றிகரமாக முதலாளித்துவ ஆட்சி  நிலைநாட்டப்படுமாயின், அது நிச்சயமாக உலக முதலாளித்துவத்தைப் பலப்படுத்தும் குறிப்பிடத்தக்க புதிய சேமிப்புக்களையும் வழங்கலாம். ஆனால் முன்கணிக்கக்கூடிய எதிர்காலத்துக்குள் அது அனேகமாக நிறைவேற்றப்படமாட்டாது. அதேவிதமாக சோவியத் யூனியனின் உடைவும், அதன் விளைவாக நிகழும் நெருக்கடிகளும் சமூக எழுச்சிகளும் உலக முதலாளித்துவத்தின் பொதுச்சமநிலையின்மைக்கு பங்களிப்புச் செய்யும். இது முறைப்படி கிழக்கைரோப்பா முழுமையும் அதன் அபிவிருத்திப் போக்கில் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தும். முன்னாள் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் மேலாதிக்கத்திற்கான போராட்டமானது, ஏகாதிபத்திய சக்திகளுள் முன்னைக் காட்டிலும் அதிக மோதலை உண்டு பண்ணும். நாம் ஏற்றுக்கொண்ட அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளின் தீர்மானத்திலிருந்து வளர்த்தெடுத்த ஆய்வு மற்றும் பேர்லின் மாநாட்டுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையையே தொடர்ந்தும் நாம் அடித்தளமாகக் கொண்டுள்ளோம். அவற்றில் உலக முதலாளித்துவத்தின் அரசியல் நிலமையின்மையும், உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்திக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான மோதுதல் பற்றிய பொது அம்சங்களையும் நாம் வலியுறுத்தியிருந்தோம். இந்த முன்னோக்கு தவறு என்றோ, அல்லது அது சோவியத் யூனியனில் நிகழ்ச்சிப் போக்குகளால் மேலாளுமை செய்யப்பட்டு விட்டது என்றோ நம்பச் செய்ய ஒன்றுமில்லை. இந்த நிகழ்ச்சிகளுள் எமது முன்னோக்கின் உறுதிப்பாட்டைத்தான் கண்டோம்.

உலக அளவிலான அபிவிருத்திகள் எதையாவது சுட்டிக் காட்டுமாயின், அது 1991 ஏப்ரலில் பேர்லின் மாநாட்டு அறிக்கை எழுதப்பட்டதில் இருந்து ஏகாதிபத்திய நெருக்கடி, நிச்சயமாக பண்பியல் ரீதியாக அபிவிருத்தி அடைந்துள்ளதை பற்றியதையே ஆகும். இன்றைய உலக அரசியல், அதிக அளவில் பைத்தியக்கார விடுதியின் உட்புறத்தை ஒத்திருக்கின்றது. தேசிய அரசு அமைப்புமுறையின் உடைவைப்பற்றி அடிக்கடி பேசியும், எழுதியும் வருகின்றோம். அதனுடன் 1945 லிருந்தும் வரும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்களைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு ஏற்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கட்டமைப்பான கனடாவின் உடைந்து நொருங்கும் தன்மையைக்கூட நாம் கவனித்தோம். கடந்த ஆண்டு அறிக்கையில் பால்கனில் வரவிருக்கும் உடைவைப் பற்றியும் பேசினோம். இப்பொழுது, இக்கூட்டத்தில், பிரிட்டனின் இறுதி உடைவுக்குச் சாத்தியமான அரசியலை, ஆய்வுக்கான தலைப்பாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சுதந்திர ஸ்கொட்லாந்து பிரச்சனை மற்றும் வேல்ஸ் கூட பழைய எல்லாவித பொருளாதார உறவுகளின் உடைவின்மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.

பழைய தேசிய அரசு முறையின் உடைவு

இந்த பொருளாதார அபிவிருத்தியின் மட்டத்தில் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்புடன் இத்தகைய விடுபடத் துடிக்கும் குட்டி அரசுகள் ஏதும் தொடர்ந்து உயிர் வாழும் என நம்புவது அபத்தமானதாகும். அவை பூகோள ரீதியிலான பொருளாதார சக்திகளின் அழுத்தத்தின் கீழ் பழைய தேசிய அரசுமுறை உடைந்து நொருங்குவதையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. திட்டவட்டமாக, உற்பத்தி சக்திகளின் பூகோள ரீதியான ஒருங்கிணைப்பே தேசியவெறி வெடிப்பைத் தூண்டிவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகள், எல்லா சர்வதேசப் போட்டிக்கும் எதிராக தங்களது கிழடு தட்டிப்போன தேசங்களைப் பாதுகாக்கப் போவதாக வலியுறுத்துவதன் மூலம், தங்கள் வயிற்றுப் பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது என்னவெனில், உற்பத்தி சக்திகளின் உலக ரீதியான அபிவிருத்தியினால் உண்டு பண்ணப்பட்ட பிரச்சனைகளுக்கு, முதலாளித்துவத்தின் குழப்பமான எதிர்விளைவைத் தவிர வேறொன்றுமல்ல. முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி சக்திகளின் உலக அளவிலான விரிவாக்கத்தின் முற்போக்கான அரசியல் வெளிப்பாடாக, தேசிய இயக்கங்கள் இருந்த 19ம் நூற்றாண்டு காலத்தைப் போன்று அல்லாமல், தற்போதைய விடுபடத் துடிக்கும் தேசிய இயக்கங்கள் மற்றும் தேசிய அரசுகள், உலகப் பொருளாதாரத்தின் சக்திகளை ஒருங்கிசைவான முறையில் அணிதிரட்டுவதற்கு முதலாளித்துவத்தின் இயலாத்தன்மையின் அரசியல் குழப்பத்தின் எதிர்வினையைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

இந்த நெருக்கடி முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலான உறவினுள்ளும் முதலாளித்துவ அரசுகளுக்குள்ளேயும் கண்டு கொள்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் ஸ்திரமின்மை, உலக முதலாளித்துவ அமைப்பின் பொதுவான ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் பெரும்பிரதி விளைவுகளை கொண்டுள்ளது. வெளிப்படையாகவே பொருளாதார வளங்களிலும் வீழ்ச்சி இருந்த போதிலும் தனது பூகோள மேலாதிக்க நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா செய்யும் அழிவு முயற்சிதான் இன்றைய உலக அரசியலில் மிகவும் வெடிக்கக்கூடிய காரணியாகும். 1991 மார்ச்சில் நமது கடைசி பிளீனக் கூட்டத்தில், வளைகுடாப் போருக்குப் பின் அமெரிக்காவில் சுபீட்ச மனோநிலை இருந்த போதிலும் புஷ் நிர்வாகம் ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது என்பதை விளங்கினோம். உண்மையில் நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்து செய்யப்பட்ட முயற்சியான போரும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, ஆயுதங்களின் பலாத்காரத்தின் மூலம் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவும் இருந்தது. இப்பொழுது போருக்குப் பிறகு ஒரு வருடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் புஷ் நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. நேற்றைக்கு முந்தைய நாள் ஹெரால்ட- டிரிபியூன் பத்திரிகை பூகோள ஆதிக்க நிலையை சவால் செய்யும் எவரையும் தடுப்பதற்கான திட்டத்தினை பென்டகன் மூலோபாய வல்லுனர்கள், ''புதிய உலக ஒழுங்கில்'' ஒரேயொரு ''வல்லரசுக்கே'' இடமுண்டு என்று வெட்கங்கெட்ட முறையில் பிரகடனம் செய்கின்றனர். இந்த வகையில் யுத்தக் கோடுகள் ஏற்கனவே வரையப்பட்டுவிட்டன.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அசியல் ஸ்திரமின்மை, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் பிரதிபலித்தன. அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் உலகப் பிரச்சனைகளிலிருந்து பிரிட்டனை விடுவிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பிரிட்டனில் தற்போது அழைப்பு விடப்பட்டிருக்கும் தேர்தல், பிரிட்டனுள் சமூக உறவுகளை நிலைபெறச் செய்ய ஒன்றும் செய்யப் போவதில்லை. பிரான்சில் மித்திரோன் அரசு செல்வாக்கு இழந்துவிட்டது, ஜப்பானிலும் ஜேர்மனியிலும் பொருளாதார மந்தம் தொடங்கிவிட்டது. CIS (சுதந்திர நாடுகளின் பொதுநல அமைப்பு) ஏற்படுத்தப்பட்டபோது ஆட்சியிலிருந்த பெரும்பாலான முதலாளித்துவ தலைவர்கள், நீண்ட காலத்திற்கு பதவியில் இருக்க மாட்டார்கள் என்பதைக் காண்பது அதிகரித்து  வருகிறது. சோவியத் யூனியனின் உடைவு, உலக முதலாளித்துவம் புதுவாழ்க்கை பெறும் குத்தகைக்கான எவ்வித தானியங்கி வழியையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், நான்காம் அகிலத்தின் ஆற்றல் உலக நெருக்கடியால் எழுப்பப்பட்ட வாய்ப்புக்களை கிரகித்து நாம் கடந்து வந்த முழு வரலாற்றுக் காலகட்டத்தின் படிப்பினைகளைத் தொகுத்து புரிந்து கொள்வதற்கானதாக இருக்கும். திட்டவட்டமாக அந்த அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் பணிகளை விளக்கக் கூடியதாக இருக்கும். தொழிலாள வர்க்கத்தினுள் மகத்தான மார்க்சிசத்தின் அரசியல் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான பொறுப்பு, அது அனைத்துலகக் குழுவினால் தலைமை தாங்கப்படும் நான்காம் அகிலத்தின் மேல் விழுகிறது. அதுவே உண்மையான புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை கட்டி அமைப்பதற்கான ஒரேயொரு அடித்தளமாகும்.

நீண்ட அரசியல் போராட்டம்

இந்த அபிவிருத்திகளின் வேகத்தை ஒருவராலும் துல்லியமாக முன்கணிக்க முடியாது. ஆனால் ஒரு நீண்ட அரசியல் போராட்டத்திற்கு நமது இயக்கம் தயார் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பு போராட்டங்களை வழிபடும் போக்கினை ஹீலி வளர்த்தெடுத்தார். புரட்சிகரக் கட்சியின் அபிவிருத்திக்கும் வர்க்கப் போராட்டத்தின்  தன்னியல்பான அபிவிருத்திக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான அபிவிருத்தியை தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்களின் விளைவாக பார்ப்பது பெரும் தவறாகும். அல்லது இந்தப் பொருளாதாரப் போராட்டங்களில் கட்சியின் தேவையான தலையீடுகளின் உடனடி மற்றும் நேரடி விளைவாகக் கூட பார்ப்பது பெரும் தவறாகும். அல்லது தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்களில் கட்சி கட்டாயம் தலையீடு செய்ய வேண்டும். ஆனால் அது ஒன்றே பரந்த புரட்சிகர இயக்கத்தை உருவாக்காது. ஆழமாகிச் செல்லும் வர்க்கப் போராட்டம் புரட்சிகர இயக்கத்தின் பொதுவான அடித்தளத்தை வழங்குகிறது.

ஆனால் அது தானாகவோ நேரடியாகவோ அல்லது தன்னியல்பாகவோ அதன் வளர்ச்சிக்குத் தேவையான அரசியல், அறிவார்ந்த இன்னும் சொல்லப்போனால் கலாச்சாரத்தையும் கூட உடனே தோற்றுவிக்காது. மேற்கூறியவையே ஒரு உண்மையான புரட்சிகர நிலைமைக்கு வரலாற்று தயாரிப்பாகும்.

புரட்சிகர இயக்கத்தின் பொதுவான புறநிலை அடிப்படைக்கும் அது மேலாதிக்கம் செய்யும் வரலாற்றுச் சக்தியாக மாறுவதற்காக கடந்து செல்லும் சிக்கலான அரசியல் சமூக மற்றும் கலாச்சார செயல்முறை போக்குகளுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை நாம் கிரகிக்கும் பொழுதுதான், ஸ்ராலினிசத்திற்கு எதிரான நமது வரலாற்றுப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். மற்றும் இன்று நம்முன் நிறுத்தப்பட்டுள்ள பணிகளைப் பார்க்க முடியும். நாம் முதலாளித்துவ மறுமலர்ச்சிக்  காலத்துக்குள் நுழைந்துள்ளோம் என நம்புவதற்கு அப்பால், சோசலிசத்திற்கான புறநிலை ரீதியான பொருளாதார முன் தேவைகள் 1917ஐ விட இன்று அதிகம் அபிவிருத்தி அடைந்துள்ளன என்று சொல்ல முடியும். மேலும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இருப்பு, அது 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட அதிகம் சோசலிசத்துக்கு பக்குவமானதாக இருக்கிறது. உலக அளவில் பொருளாதார வாழ்வில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் செல்வாக்கும் அது 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கின்றது. 75 வருடங்களுக்கு முன் உலகின் பல பகுதிகள் பெரும்பாலும் கிராமப் புறங்களாக இருந்தன. அவை இப்பொழுது தொழிற்துறைப் பாட்டாளிகளிடமிருந்தும் பொருளாதார துறைகளுடன் தொடர்புடைய பாட்டாளிகளிடமிருந்தும் உபரி மதிப்பைக் கறந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மையங்களாக இருக்கின்றன.

ஆனால் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை அபிவிருத்தியும் 1917ல் இருந்ததைவிட மிக அதிகமாக இருக்கையில், தொழிலாள வர்க்கத்தின் அகநிலை அரசியல் நனவு இன்று மிகவும் குறைந்த நிலையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நம் சொந்த இயக்கத்தையும் அது எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதற்கு இந்த உண்மை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வரலாற்று சுய முரண்பாடுள்ள உண்மையை சோசலிசப் புரட்சிக்கு தாண்டிச் செல்ல முடியாத தடையாகப் பார்க்கக் கூடாது. ஆனால் நாம் பேச்சுக்கு கூறினால் வெல்லப்படவேண்டிய பிரச்சனையாக பார்க்க வேண்டும். மிக ஆரம்பத்தில் இருந்து தொடங்கவில்லை. இது 1992 ஆகும் 1917 அல்ல. சோவியத் யூனியனின் முடிவு வரலாற்றின் முடிவல்ல. முழு வரலாற்றின் நிகழ்வுப் போக்குகள் தற்போதைய சூழ்நிலையில் புறநிலை ரீதியாக பொதிந்திருக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்கப்படுகிறதோ இல்லையோ நவீன சமுதாயமும் தற்போதைய அரசியல் சூழலும் கடந்த காலத்தின் விளைபொருளாகும். தற்போது மறைந்து கிடக்கும் குழப்பமான வடிவத்தினின்று கடந்துபோன இவற்றை அகழ்ந்தெடுக்க வேண்டும். 1942ன் ஓடுகாலிகள் கடந்தவற்றை நிராகரித்தனர். அந்த வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை பற்றி முழுமையாக மேழெழுந்தவாரியான மதிப்பீடு செய்தனர். அவர்கள் பாசிசத்தின் வெற்றியை மட்டும்தான் பார்த்தனர். அத்துடன் அவர்கள் அந்தக் காலகட்டத்தின் நிகழ்ச்சிகளை அவற்றைத் தோற்றுவித்த வரலாற்று வளர்ச்சிப் போக்குகளில் இருந்து துண்டித்தனர்.  இவ்வாறு அவர்கள் சோசலிசத்தை நிராகரிப்பதையே உயிர் வாழக்கூடிய முன்னோக்காக வந்தடைந்தது. மோசமான ''ஜனநாயக'' வாதிகளாக மாறினர். சோசலிசத்தைப் பற்றி பேசுவதை அர்த்தமில்லாததாக அவர்கள் முடிவு செய்தனர். மார்க்ஸ் செய்தவற்றை, சுதந்திரமான தொழிலாள வர்க்க கட்சியை கட்டியெழுப்புதலை செய்யாது கடந்த காலத்தை புதுப்பிக்க 1845க்கு திரும்புவது இன்றியமையாதது என்று அவர்கள் கருதினர். இதிலும் பார்க்க அவர்கள் தங்களது பணியை முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு புதிய வீரகதாகாலத்தை மறு உற்பத்தி செய்வதாக கண்டுகொண்டனர். ஆனால் அது 1942ல் பிற்போக்கு முன்னோக்காக இருந்தது. இன்றும் அது அந்நிலையை விட சிறப்பாக எதையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அபிவிருத்திக்கு, இன்றைய சூழ்நிலை 70 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட மிகக் குறைவான இணக்கம் உடையதாகவே இருக்கின்றது.

ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை உட்கிரகித்தல்

ரஷ்யப் புரட்சியின் முழு வரலாற்றினையும் உட்கிரகிப்பதன் அடிப்படையில் நாம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். தற்போது தொழிலாள வர்க்கத்திற்குள் மிகப் பெரிய குழப்பம் காணப்படுகின்றது. அதன் கண்ணோட்டங்கள் சரியான வரலாற்று நனவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மக்கள் கடந்துவந்த முந்தைய வரலாற்று அனுபவங்களில் இந்தப் போலியான நனவு வேரூன்றியிருக்கிறது. இந்த வரலாற்று அனுபவங்களை கட்சியின் தலையீடு இன்றி உட்கிரகிக்க முடியாது.

ஸ்ராலினிசம்தான் மார்க்சிசம் என்றும் சோவியத் யூனியனின் உடைவு மார்க்சிசத்தினை, சோசலிசத்தினது தோல்வியை நிரூபிக்கின்றது என்றும் பல லட்சக்கணக்கானோரை திசைதிருப்ப மிகப் பெரிய பொய்கள் உருவாக்கப்பட்டன. ஸ்ராலினிசம், மார்க்சிச எதிர்ப்பு கோட்பாடு, வரலாற்றில் மிகப் பயங்கரமான எதிர்ப்புரட்சியின் விளைபொருள் என்பதை நிரூபித்தது. இப் பொய்களை மறுக்கவேண்டியது இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்துக்குள் அதன் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஏனையவை பற்றிய பாதுகாப்பு சம்பந்தமாக நமது இயக்கம் கட்டாயம் எடுக்க வேண்டிய நாளாந்தப் போராட்டங்களுக்கு, இதனை ஒரு பிரதியீடாகவோ அல்லது மாற்றாகவோ நான் முன்வைக்கவில்லை. அவ்வித தலையீடுகள் நமது வேலையில் மிக இன்றியமையாததாக மிக முக்கியமான அம்சம் என்பதால் நாம் உடன்படுகிறோம் ஆனால் நமது இயக்கம் எடுத்தாக வேண்டிய புரட்சிகர முன்னோக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பின் ஒரு பகுதியாக, இத்தகைய போராட்டத்தை அகன்ற வரலாற்று கட்டமைப்புக்குள் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியின் மீது இத்தகைய பேரழிவிலான பாதிப்பை ஏற்படுத்திய அரசியல் சக்தி வேறெதுவும் இருந்ததில்லை என்று கூறியாக வேண்டும். ஹிட்லர், அவன் யாராக இருக்க வேண்டுமோ அவ்வாறே இருந்தான். அவன் ஒரு பாசிச, ஏகாதிபத்திய அரசியல்வாதியாவான். ஆனால் ஸ்ராலினும், சோவியத் அதிகாரத்துவமும், அதேபோல் உலகம் முழுவதிலும் இருந்த பரந்த ஸ்ராலினிச கட்சிகளும் அக்டோபர் புரட்சியின் பேரில் உரிமை கோரிக் கொண்டு பேசினார்கள்.

சோவியத் யூனியனில் இன்று KGP யின் கோப்புக்கள் திறக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து வெளிவரும் தகவல்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள், அளவிட முடியாத அளவுக்கு இருந்ததை எடுத்துக் காட்டும். மொஸ்கோ வழக்குகள் பற்றிய அவரது கண்டனங்களை எழுதிக் கொண்டிருக்கையில் கூட சோவியத் யூனியனில் நடைபெற்றுக் கொண்டிருந்த இரத்தக் குளியலின் அளவை ட்ரொட்ஸ்கியினால் எளிமையாக அறிந்திருக்க முடியாது. இப்படிக் கூறுவதனால் ட்ரொட்ஸ்கியின் எழுத்துப் படைப்புக்களில் அது எதையாவது வெளியே எடுப்பதாக நான் நினைக்கவில்லை. 1937ல் மொஸ்கோவில் ஒரு நாளைக்கு 1000 கம்யூனிஸ்ட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். லெனினுடன் இணைந்து வேலை செய்தவர்கள் மிகச் சிறந்த மார்க்சிச அறிஞர்கள், தத்துவார்த்தவாதிகள். 30 அல்லது 40 வருடங்களான புரட்சிகர வரலாற்றைக் கொண்ட இந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் 10 அல்லது 15 நிமிடங்களே வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்டது. குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு பின்புற அறைக்கோ அல்லது நீதிமன்ற வளாகத்திற்கோ இழுத்துச் செல்லப்பட்டு கழுத்தின் பின்புறம் சுட்டனர். அவர்களுடைய உடல்கள் அடையாளம் இடப்படாத புதைகுழிகளில் புதைக்கப்பட்டன. உயர்ந்த கல்விபெற்ற இந்த மனிதர்களின் கையெழுத்துப் பிரதிகள் எரிக்கப்பட்டன. பெரும் மார்க்சிச கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு அவ்வித மகத்தான பங்களிப்புச் செய்த புரட்சியாளர்களின் அறிவார்ந்த மரபின் விளைவாகவே ரஷ்யப்புரட்சி தோன்றியது. அது இல்லாமல் ரஷ்யப்புரட்சி  நடைபெற்றிருக்க முடியாது. அந்த மரபு அழிக்கப்பட்டது. மொஸ்கோ வழக்குகளில் ட்ரொட்ஸ்கியையும் பிற முக்கிய பிரமுகர்களையும் நாம் அறிவோம். 1936க்கும் 1940க்கும் இடையில் அழிக்கப்பட்டவை மார்க்சிசத்தின் மலர்கள் அல்ல. அதன் அடிவேர்கள் ஆகும்.

ஸ்ராலினின் அரசியல் இன அழிப்பு

ஸ்ராலின் என்ன செய்ய விழைந்தார்? தொழிலாள வர்க்கத்தினுள்ளும் சமுதாயத்தினுள்ளும் மார்க்சிச கலாச்சாரத்தின் அனைத்து சுவடுகளையும் அழித்தொழிப்பதற்கான முயற்சி இது என்பதை தவிர்த்து, பரந்த அளவு படுகொலைகளை ஒருவரால் விளக்க முடியாது. ஒரு எழுத்தாளர், ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இன ஒழிப்பு என்ற புத்தகத்தை எழுதினார் என நான் அறிந்தேன். அது மிகப் பொருத்தமான தலைப்புத்தான். ஸ்ராலினினது இன அழிப்பு, அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்டதாகும். அவரது பலியாட்களை தேர்வு செய்வதில் மதம் அல்லது இனம் இவற்றின் பின்னணியும் ஒரு முக்கிய பங்கு வகித்த போதிலும் கூட, முக்கியமாக அந்தக் காரணங்களுக்காக அவர் மக்களைக் கொல்லவில்லை. ஆனால் ஸ்ராலினது பிரதான அக்கறை, அவரது பலியாட்களின் அரசியல் மற்றும் அறிவுஜீவிக் கண்ணோட்டத்துடன் இணைந்திருந்தது. மார்க்சிச இயக்கங்களிலும், கம்யூனிச இயக்கங்களிலும் அரசியல் வரலாற்றைக் கொண்டிருந்தவர்களும், தங்களது தலையிலும் சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களும் அழித்தொழிக்கப்படும் அபாயத்தை எதிர் கொண்டனர். அரசியல் கோட்பாடுகளை முன்னெடுத்தவர்கள், சிந்தனைக்குரிய அரசியல் பத்திரங்களை எழுதியவர்கள், கலைத்துறையில் குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்தவர்கள், முக்கிய இசையைத் தொகுத்தவர்கள், எழுச்சியூட்டும் கவிதையை எழுதியவர்கள் அல்லது புதுமையான திரைப்படத்தை தயாரித்தவர்கள் இவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டனர். இந்த பரந்தளவு கொலையின் நோக்கம், 1917 அக்டோபரை தயாரித்த அரசியல், சமூக, கலாச்சார சூழ்நிலைகளைத் தழுவிய தனி நபர்களை வேரோடு கலைவதற்கேயாகும்.

இந்தக் குற்றத்தின் மிகப்பெரிய அயோக்கியத் தனத்தை ஒருவர் கிரகிக்க முடியவில்லையெனில், கடந்த ஆண்டு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை. அதனால்தான் அங்கு பலாத்கார எதிர்ப்புரட்சி நடைபெறவில்லை. எனவே முதலாளித்துவ மீட்சி பற்றி நாம் பேசக் கூடாது என்று டோரன்ஸ் பேசுகையில் -இதை அவர்களது வசதியான லண்டன் மனையில் இருந்து அவர்கள் நமக்கு கூறுகையில்- சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிகரப் பலாத்காரத்திற்கு பற்றாக்குறையே இல்லையென்பதை நாம் சற்றும் பொறுமையின்றி எடுத்துக் கூறவேண்டியுள்ளது. அரசியல் எதிர்வினையானது, அக்டோபர் புரட்சியின் தலையை அழிப்பதை நாடி நின்றது. சோவியத் யூனியனில் அது வெறுமனே ஒன்று அல்லது இரண்டு தலைகளை அல்ல, இலட்சக்கணக்கான தலைகளாக இருந்தது. இவ்வாறு இறந்து போனோருள் தோழர்களுக்குப் பரிட்சயப்படாத பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் ரஷ்ய மற்றும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காக கல்வியில் ஆழமான பங்களிப்புச் செய்த ஆட்களையும் அது உள்ளடக்கியிருந்தது. சர்வதேச சோசலிச இயக்கத்துடன் கட்டுண்டு கிடந்த அறிவுஜீவி வாழ்வின் உச்சத்தில் ட்ரொட்ஸ்கி இடம்பெற்றிருந்தார். ஆனால் அதன் செல்வாக்கு ரஷ்ய மற்றும் ஐரோப்பிய கலாச்சார வாழ்க்கையில் பரந்து விரிந்திருந்தது. அதையே ஸ்ராலினிசம் துடைத்துக்கட்ட விரும்பியது.

மார்க்சிசத்திற்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவின் வரலாற்று அடித்தளத்தைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை பிளெஹனேவ் ஆவர். ஆனால் அவரது எழுத்து செர்னி செவ்ஸ்கி என்பவரின் முந்தைய சாதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த தலைமுறையின் ஒரு பகுதியாக இருந்த புகழ்பெற்ற சிந்தனையாளர்களாகிய அவரது அரசியல் கண்ணோட்டங்கள் 1840களில் ஒரு வடிவத்தை எடுத்தன. அவை அலெக்சாண்டர் ஹெர்ஜன் மற்றும் பெலின்ஸ்கி போன்ற அத்தகையோரையும் உள்ளடக்கியிருந்தன. ஜெனிவாவில் சார்பு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1883லிருந்து பிளெஹனேவ் வேலை செய்தார். பின்னர் 1890களின் நடுப்பகுதியில் லீனா தங்க வயல்களில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது வர்க்க உறவுகளில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணியது. ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் வரலாற்றின் மேடைக்கு அதன் வருகையை அறிவித்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுக்கள், பாட்டாளி வர்க்கத்தின் கல்வியைப் பொறுப்பெடுத்துக் கொண்டனர். இந்த மகத்தான மார்க்சிஸ்டுக்களால் கல்வி புகட்டப்பட்ட பாட்டாளி வர்க்கம்தான் ரஷ்யப் புரட்சியை நடாத்தியது.

எப்படி லெனினும், ட்ரொட்ஸ்கியும் 1917ல் மக்கள் செல்வாக்கைப் பெற்றனர்? பெப்ரவரி புரட்சிக்குப் பின் அவர்கள் ரஷ்யாவுக்குத் திரும்பியபொழுது, பெட்ரோகிராட் குட்டி முதலாளித்துவ தீவிரவாத அலையில் மூழ்கியிருந்தது. கட்சியின் தலைமை அங்கு நிலவிய சந்தர்ப்பவாத மனோநிலைகளுக்கு ஒத்துப்போனது, இடைக்கால அரசாங்கத்திற்கும் போரைத் தொடர்வதற்கும் அங்கீகாரம் அளித்திருந்தது. இந்த நிலைப்பாட்டுக்கு  எதிராக லெனின் , ''ஏப்ரல் ஆய்வை'' முன்னெடுத்தார். மத்திய குழுவுக்குள் அவர் மோத நேரிட்ட எதிர்ப்பு இருந்தபோதிலும், லெனின் கட்சி ஊழியருள் சிறந்த சக்திகளை அணிதிரட்டினார். பிராவ்தா பத்திரிகையில் ஸ்ராலினது கட்டுரையை வாசித்தபோது, தலையை பிய்த்துக் கொண்ட ஆயிரக்கணக்கான கட்சி மற்றும் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த தொழிலாளர்கள்  இவற்றுள் அடங்குவர். இதெல்லாம் என்ன? காப்ரியில் கட்சி பள்ளியில் லெனினிடம் நான் கற்றுக் கொண்டது அதுவல்லவே. நான் எப்பொழுதுமே வேறுவிதமாக அல்லவா சிந்தித்தேன் என்று அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

போல்ஷிவிக் கட்சிக்குள்ளான அவரது போராட்டத்தில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மீதுதான் அவர் தங்கி நின்றார் என லெனினுக்குத் தெரியும். இடைக்கால அரசாங்கம் பற்றிய பிரச்சனையிலும், எழுச்சிக்கான திட்டத்திலும் லெனினை எதிர்த்தவர்கள், பல்லாயிரக்கணக்கான அரசியல் ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த தகராறுகளைப் படித்திருப்பர் என்றும் பிராவ்தாவில் வெளியிடப்பட்ட தத்துவார்த்த வாக்குவாதங்களை ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் தொழிலாளர்கள் கவனித்துக் கொண்டு வருகின்றதுடன், முறைப்படி இந்தப் பிரச்சனையை அவர்கள் மக்களுக்கு விளக்குவார்கள் என்றும் அறிவார்கள். இவ்வாறாக, ''நீங்கள் எனது வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் நான் இராஜினாமா செய்துவிட்டு, பரந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுப்பேன்'' என லெனின் மத்தியகுழு உறுப்பினர்களிடம் கூறியபொழுது, அவரது எதிரணியினர் அசட்டையாக எடுத்துக் கொள்வதற்கான அச்சுறுத்தலாக அது இல்லை. ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் தொழிலாளர்கள் கலந்துகொள்ளக் கூடிய கூட்டத்தை தன்னால் கூட்ட முடியுமென்றும், இந்த தொழிலாளர்கள் பின்னர் அவசர மாநாட்டை கூட்டுமாறு கோரி, போல்ஷிவிக் கட்சியின் தற்போதிருக்கும் தலைமைகளை வெளியேற்றி விட்டு, புதிய மத்திய குழுவை தேர்ந்தெடுப்பர் என்றும் லெனின் அறிவார். லெனினது எதிராளிகளும் அதை அறிந்து கொண்டிருந்தனர். அதுவே அவரது அரசியல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தது.

ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் சக்தியிழந்த தன்மை

1917க்குப் பின்னர் உள்நாட்டு யுத்தம் வந்ததுடன், அது தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவிலான விளைவை ஏற்படுத்தியது. வர்க்க நனவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் கணிசமான பகுதி 1921ல் துடைத்தொழிக்கப்பட்டது. அதில் தாக்குப் பிடித்து எஞ்சியிருந்தோருள் அனேகர் அரசினுள்ளும் இழுக்கப்பட்டார்கள். ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தில் சக்தியிழந்த தன்மை மேலோங்கி வருவதாக ட்ரொட்ஸ்கி அடிக்கடி எழுதினார். போல்ஷிவிக் செல்வாக்கின் கொத்தளங்களாக இருந்த பல தொழிற்சாலைகளில் அரசியல் ரீதியாக கல்வி புகட்டப்பட்ட தொழிலாளர்கள் இல்லாது போயினர் அல்லது அமைப்புக்குள் உள்ளிழுக்கப்பட்டனர். இதுதான் 1923-24ல் அந்தளவு கவனத்தை ஈர்த்த மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. கட்சி அமைப்பின் சீரழிவு போல்ஷிவிக் கட்சிக்குள் பரந்த அளவு எதிர்ப்பினை தூண்டி விட்டது. இது ''46 பேர்களின் கடிதம்'' என்கின்ற அந்தவகையான பத்திரங்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ட்ரொட்ஸ்கியின் ''புதிய போக்கு'' (New Course) வெளியிடப்பட்ட பின், கல்வியூட்டப்பட்ட தொழிலாளர்களின் பரந்த தளத்தின் ஆதரவை இனி சார்ந்திருக்க முடியாது என்று கட்சிக்குள் இருந்த மார்க்சிஸ்டுக்கள் உணர ஆரம்பித்தனர். அது சற்றேறக்குறைய துடைத்துக் கட்டப்பட்டிருந்தது. மேலும் லெனினுடைய மரணத்திற்குப் பின்னர், அதிகாரத்துவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அவமானகரமான ''லெனின் லெவி'' போல்ஷிவிக் கட்சியை உண்மையில் அழித்தது. இலட்சக்கணக்கான விவசாயிகளும், கொஞ்சமும் கல்வியூட்டப்படா தொழிலாளர்களும் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டனர். அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களும், விவசாயிகளும் கட்சிக்குள் எஞ்சியிருந்த மார்க்சிச காரியாளர்களுக்கு மேலாக நிரம்பி வழிந்தனர். இந்த மார்க்சிச காரியாளர்கள், ஸ்ராலினிச பிரிவினரால் எளிதாக வளைக்கக்கூடிய மக்கள் மத்தியில், தாம் தனிமைப்பட்டிருப்பதைக் கண்டனர். 

நிச்சயமாக தொழிற்சாலைகளில் மார்க்சிச தொழிலாளர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் சிறுபான்மையாகவே இருந்தனர். ஆயினும் அவர்களைக் கண்டு ஸ்ராலின் அஞ்சினார். களையெடுப்பின் பிரதான நோக்கத்துள் ஒன்று, அவர்களை சரீர ரீதியாக துடைத்துக் கட்டுவதன் மூலம் ஆலைகளில் மீண்டும் மார்க்சிசம் வேரூன்றாமல் செய்வதாகும். தொழிற்சாலைகளுள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெளிப்பாடுகளை, ஸ்ராலினிஸ்டுக்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை பல தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன. ஒரு தொழிற்சாலையில் ஒரு ட்ரொட்ஸ்கிச தொழிலாளியைக் கண்டுபிடித்தால், KGP அந்த தனிநபரை மட்டும் விடுவதில்லை. அவரது பகுதியில் உள்ள ஏனைய ஒவ்வொரு தொழிலாளியையும் சுட்டுக் கொன்றது.

இந்த நிகழ்ச்சிப் போக்கு, வரலாற்றின் எந்த எதிர்ப்புரட்சியைப் போலவும் இரத்தவெறி கொண்டதாகும். அது அவ்வாறாக அரசின் பண்பை மாற்றவில்லை. சோவியத் யூனியன் சீரழிந்த அரசாக நீடித்து இருந்தது. ஆனால் பழைய மார்க்சிச அரசியல் கலாச்சாரத்தில் சிறிதளவே எஞ்சியிருந்தது. அவற்றை களையெடுப்புக்கள் துடைத்துக் கட்டின. அதன் விளைவுகள் சோவியத் யூனியன் எல்லைகளுக்கு அப்பால் உணரப்பட்டன.

ஸ்ராலினிசம்தான் மார்க்சிசம் என்ற பொய்க்கு பதிலாக, ஸ்ராலினிசத்தின் கைங்கரியங்களை நாம் அம்பலப்படுத்துவது தேவையானது. ஸ்ராலினிசம் என்றால் என்ன என்பதை அறிவதற்கு, ஸ்ராலினிசம் யாரைக் கொலை செய்தது என்பதை ஒருவருக்கு காட்ட வேண்டும். எந்த எதிரிக்கு எதிராக ஸ்ராலினிசம் தனது பகிரங்கமான தாக்குதல்களை தொடுத்தது? என்ற கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும். ஸ்ராலினிசம் நிறைவேற்றிய குற்றங்களின் தொலைதூர அரசியல் முக்கியத்துவத்தினை அம்பலப்படுத்துவதன்மூலம், வரலாற்று உண்மைகளை மீண்டும் நிலைநாட்டுவதே நமது இயக்கத்தின் மகத்தான அரசியல் பணியாக இருக்க வேண்டும். வழக்குகள், களையெடுப்புகளை, அழித்தொழிப்புகளை, ட்ரொட்ஸ்கியின் படுகொலை சம்பந்தமான தஸ்தாவேஜுக்களை பகிரங்கப்படுத்துவதே இந்த அம்பலப்படுத்தல்களின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் பற்றிய ஆவணக் காப்பகத்தை பகிரங்கப் பார்வைக்கு திறக்க அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம்

ரஷ்யாவில் ஆவணக் காப்பகங்கள் திறக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் சூழ்நிலை மிகவும் தெளிவாக இல்லை. ஆவணக் காப்பகத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், யார் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையில் ஒருவருக்கும் தெரியாது. ஆவணங்கள் பணத்திற்கு விற்கப்படுகின்றதாகவும் கூட செய்திகள் வருகின்றன. ஸ்ராலினிஸ்டுக்களும் அவர்களது அடியாட்களும் இவர்களுள் பெரும்பாலோர் அரசு எந்திரங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், முதலாளித்துவ மீட்சியில் முன்னணியில் நிற்பவர்களாவர். இவர்கள் வரலாற்று உண்மையை நிலைநாட்டுவதற்கு தேவையான சான்றுகளை அழிப்பதற்கு அங்கு நிலவும் குழப்ப நிலைமைகளைப் பயன்படுத்தலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு எதிரான மார்க்சிஸ்டுகளை அழிப்பதுடன் தொடர்புடைய எல்லாவித குற்றச் செயல்களையும் அம்பலப்படுத்துவதற்கு, ஸ்ராலினிஸ்டுக்களதும் GUP, NKVD, KGP, யினதும் ஆவணக் காப்பகத்தை திறப்பதற்கான பிரச்சாரத்தை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவசியம் முன்னெடுக்க வேண்டும். துன்பத்துக்குள்ளான பலியாக்கப்பட்ட அனைவரும் இனம் காணப்பட வேண்டும். அவர்களது அரசியல் செயல்பாடுகள் தெளிவாக்கப்பட வேண்டும். கொடிய இக் குற்றங்களுக்கு ஏற்பாடு செய்தவர்களின், அவற்றை நிறைவேற்றியவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ் ஆவணக் காப்பகங்களின் பகிரங்கத் திறப்பானது, ஸ்ராலினிச ஆட்சியின் உண்மையான வரலாற்று, சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தினை நிலைநாட்டுவதற்கு தேவையானதாகும். தனது எதிர்ப்பாளர்களான சோசலிஸ்டுக்களை அழிப்பதற்காக சோவியத் அரசினால் நடாத்தப்பட்ட அரசியல் இனப்படுகொலை தொடர்பான தஸ்தாவேஜுக்கள், சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிடுமூஞ்சித்தனமாகவும் போலியாகவும் ஸ்ராலினிசம் தன்னை மார்க்சிசத்துடன் இனம் காட்டிக் கொண்டதை செல்லாக் காசாக்கும்.

நாம் இதனை எல்லா நேரமும் தொழிலாள வர்க்கத்துக்குள் விளக்குகின்ற அதேவேளையில், அறிவுஜீவிகள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் பரந்த மட்டத்தின் ஆதரவுக்கான பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் இந்த தாக்குதலை ஒன்று குவிக்காமல் சர்வதேச மார்க்சிச இயக்கத்தை திருப்பிக் கட்டுவது சாத்தியமில்லை.

வரலாற்று உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரத்தைப் பற்றி நாம் பேசுகையில், குறுகிய அர்த்தத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் நன்மை பயப்பதாக அல்லாமல் எல்லா முற்போக்கு மனித சமுதாயத்தினருக்கும் நன்மை பயப்பதாக இந்தப் பணியை நாம் பார்க்கிறோம். லுபியான்காவில் நடந்த விவகாரம் போராடும் அனைத்து மனித குலத்திற்கும் அக்கறையுள்ள விஷயமாகும். ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவது, சமூக சிந்தனைக்கும் அரசியல் சிந்தனைக்கும் அவர்கள் விளைவித்த பாதிப்பை வெற்றி கொள்வதற்கான மிக அத்தியாவசியமானதன் ஒரு பகுதியாகும்.

எல்லா அரசியல் விஷயங்கள் சம்பந்தமான நிலைப்பாட்டில் அனைத்துலக குழுவுடன் ஒத்துப் போகிறவர்களுடன் மட்டுமோ அல்லது அந்த அர்த்தத்தில் தங்களை சோசலிசத்தின் முன்மொழிபவர்களாகக் கருதிக் கொள்பவர்களுடன் மட்டுமோ நாம் அணுகக் கூடாது. மொஸ்கோ வழக்குகளை அம்பலப்படுத்துவதற்கான தனது போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி எடுத்த அதே அணுகு முறையை நாம் எடுத்தாக வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நாம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும்  அறிவுஜீவிகளிடம் போகவேண்டும்.. ஆவணக் காப்பகங்களை பகிரங்கப் பார்வைக்குத் திறப்பதற்கு விசாரணைக் குழு அமைப்பதற்கான இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தருமாறு கோரவேண்டும். அந்தக் குழு லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை தொடர்பாக சுற்றி நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மொஸ்கோ வழக்குகளின் பதிவுக் குறிப்புகளையும் வெளிக் கொணர்வதற்கான அக்கறையுடன் கூடிய அறிவுபூர்வமான பணியினை ஏற்படுத்துவதில் குற்றமற்ற மேன்மை கொண்டவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதுதான் நாம் தொடங்கவிருக்கும் இடம். இந்த பேரழிவான குற்றங்களின் அரசியல் தன்மையை அம்பலப்படுத்துவதன் மூலம்தான், உண்மையில் ஸ்ராலினிசம் என்னவாக இருந்தது என்பதை அம்பலப்படுத்த முடியும்.

நான்காம் அகிலம் மட்டுமே இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க முடியும். அதற்கு தேவையான அரசியல் பார்வையையும் நேர்மையான பொறுப்புக்களையும் அது மட்டுமே கொண்டிருக்கின்றது. ஸ்ராலினிசம் வெல்ல முடியாத சக்தியாக தோற்றமளிக்கின்ற பொழுது, பல பத்தாண்டுகளாக மார்க்சிசத்தின் பாரம்பரியங்களையும், கோட்பாடுகளையும் காத்து வந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம், வரலாற்று உண்மையை நிலைநாட்டுவதற்கு செய்யக்கூடிய அத்தனை முயற்சிகளையும் செய்யவேண்டும். அந்த அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மறுமலர்ச்சிக்குத் தேவையான அடித்தளங்களை அமைக்க வேண்டும்.