World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Research suggests a more complex evolution and spread of modern humans

நவீன மனிதர்களின் மேலும் சிக்கல் தன்மை வாய்ந்த கூர்ப்பு பரம்பல் பற்றி ஆய்வுகள் பிரேரிப்பு

By Walter Gilberti
20 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

நவீன மனிதர்களின் பிறப்புரிமைப் பரம்பரை (மரபுவழி) பற்றிய புதிய ஆய்வானது எம்மைத் தோற்றத்திலும் நடத்தையிலும் பெருமளவில் ஒத்திருக்கின்ற மக்களின் மரபுமூலம் (தோற்றுவாய்), உலகளாவிய ரீதியிலான பரம்பல் என்பனவற்றை விளக்குகின்ற, பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட "ஆபிரிக்காவிலிருந்து வெளியே" என்ற கொள்கையில் திருத்தங்களை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.

St. Louis நகரத்தின் வாஷிங்டன் பல்கலைக்கழக குடியியல் உயிரியலாளர் டாக்டர் அலன் டெம்பிளேடன் மேற்கொண்ட ஆய்வானது 100,000 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன ஹோமோ சேப்பியன்கள் (Homo sapien) ஆபிரிக்காவிலிருந்து "குடிபெயர்ந்த போது" அவர்கள் ஏனைய மனித குடித்தொகையினரை முற்றாக பிரதியீடு செய்தார்கள் என்ற கருத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் டெம்பிளேடன் வழங்கிய பேட்டியின்போது "அது பெருமளவில் ஆபிரிக்காவிற்கு வெளியே ஆனால் முற்று முழுதாக அல்ல", "மனிதர்கள் மீண்டும் மீண்டும் ஆபிரிக்காவிலிருந்து வெளியே பரம்பலடைந்த போதும் இப்பரம்பல்களின் விளைவுகள் மீள் குடியேற்றங்களாக அன்றி இடைஇனங்கலத்தல்களாக அமைந்தமையால் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித குடித்தொகைகளுக்கிடையே பிறப்புரிமைப் பிணைப்பை இவை வலுப்படுத்தின" எனத் தெரிவித்தார்.

ஆபிரிக்காவின் தென்பகுதியில் போடர் குகை (Border cave) மற்றும் கிளசிஸ் ஆற்றிலுமிருந்து (Klasies River) பெறப்பட்ட உயிர்ச்சுவட்டு ஆதாரங்கள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டவாறு நவீன மனிதர்கள் முதன் முதலில் ஆபிரிக்கா கண்டத்தில் ஏறத்தாள 70,000 முதல் 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதியானதும் நவீனமானதுமான மனித இயல்புகளின் கலவையாக காணப்பட்ட மனிதனான பண்டையகால ஹோமோசேப்பியன்களின் (Homo sapiens) ஏமாற்றந்தருகின்றதான மீதிகள் 300,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாகத் திகதியிடப்பட்டுள்ளன.

"ஆபிரிக்கவிலிருந்து வெளியே" என்ற கொள்கையானது, மனிதர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களிலும் மிக ஆதியான 'ஹோமோ இரக்டஸ் (Homo erectus) களிலிருந்து அதிகளவிலோ சிறிதளவிலோ ஏககாலத்தில் முழுமாக நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என்ற கருத்துடைய பல்பிராந்தியக் கருதுகோளில் பாரியளவு பிரதியீடுகளை செய்துள்ளது.

பல்பிராந்தியக் கருதுகோளின் எதிர்மறையான அம்சங்களில் ஒன்று எதுவெனில் இக் கருதுகோளானது தன்னை; தற்காலத்தில் உயிர்வாழ்கின்ற குடித்தொகைகளதும் அவற்றுக்கு தொலைவிலுள்ள, ஒவ்வொரு புவியியல் பிராந்தியத்திலும் உள்ள கூர்ப்புப் பாதையின் மூதாதையர்களதும் இன அடிப்படையிலான குணவியல்புகளை கொண்ட வழித்தோன்றல்கள் வாழ்த்தனர், என்ற இனவாத அடிப்படையிலான பகுத்தாய்விற்கு இட்டுச்சென்றமையாகும்.

"EVE" கருதுகோள்

1980களின் பிற்பகுதிகளில் மூலக்கூற்று உயிரியலாளர்கள் தற்போது வாழ்கின்ற எல்லா மனிதர்களும் பூரணமாக ஆபிரிக்க பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்ற கருத்திற்கு மேலும் உறுதுணையாகும் வகையில் இழைமணி தொடர்பான "ஈவ்" (EVE) கருதுகோளினை விருத்திசெய்தனர். "ஈவ்" கருதுகோளானது பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மனிதர்களின் கலங்களிலுள்ள இழைமணிகளின் பாரம்பரியப் பதார்த்தத்தின் (DNA) விகாரம் நிகழும் வீதத்தினை மதிப்பிடுவதன் மூலம் மனிதர்களின் வழியானது ஆபிரிக்காவில் வாழ்ந்த ஒரு ஊர்ஜிதப்படுத்தப்படாத (hypothetical) பெண்ணுடன் தொடர்புபட்டது.

இழைமணிகள் எனப்படுபவை மனிதக்கலங்களில் குழியவுருவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்ற மென்சவ்வால் சூழப்பட்ட கலச்சுவாசத்திற்குப் பொறுப்பான அலகுகள் அல்லது சிறிய அங்கங்களாகும். இழைமணிகள் கலத்தின் கருவிலன்றி குழியவுருவிலேயே காணப்படுவதால் இவற்றின் பரம்பரைப் பதார்த்தமானது (DNA) ஒரு சந்ததியிலிருந்து மறு சந்ததிக்கு பெண்ணின் மூலமே கடத்தப்படலாம். ஆண் விந்துக்கள் உண்மையில் குழியவுருவை கொண்டிராததால் இவை இழைமணி (Mitochondria) பற்றாக்குறை உடையன. இழைமணிக்குரிய பாரம்பரியப் பதார்த்தமானது (DNA) மனித பிறப்புரிமையமைப்பில் பங்குவகிக்காதபோதும் அதன் இருப்பானது பின்னர் உயிர்களின் கூர்ப்பின் சிக்கலான கலங்களாக மாற்றமடைந்தவற்றிற்கு பொருத்தமற்றதான சுயாதீன-வாழ் பக்ரீரியா போன்ற உயிர்ப்பொருளாக இருந்திருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது.

"ஆபிரிக்காவிலிருந்து வெளியே" கருதுகோளானது பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சடுதியானதாக தென்படுகின்ற ஹோமோ சேப்பியன்களின் தோற்றமும் அவற்றின் மிக விரைவான பரம்பலும் பேலியோ (Paleo) சகாப்தத்துக்குரிய மனித வர்க்க ஆய்வாளர்களை முன்பு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வாழ்ந்த மனிதர்கள் உயிரியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேற்றமடைந்த நவீன மனிதர்களால் முற்றுமுழுதாக பிரதியீடுசெய்யப்பட்டனர் என்ற முடிவிற்கு வரச்செய்ய வழிவகுத்துள்ளது. தற்போது இடம்பெறுகின்ற மூலக்கூற்றுப் பிறப்புரிமையியல் (Molecular genetics) ஆய்வானது இந்த ஆபிரிக்காவிலிருந்து வெளியேறிய மனிதப் பரம்பல் பற்றிய காட்சி விளக்கத்தை உறுதிப்படுத்த ஏதுவாக இருந்ததுடன் இந்த ஆய்வின் விளைவாக ஹோமோ நியன்டதாலென்சிஸ் (Homo Neanderthalensis- இது தொடர்பான விபரங்கள் 1857 இல் ஜேர்மன் நாட்டின் Neanderthal கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெறுகின்றது) மனிதனுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் நியன்டதாலென்சிஸ் (Homo sapiens Neanderthalensis) எனப்படுகின்ற ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற நியண்டதாஸ் "குகை மனிதன்" வேறுபட்ட ஒரு இனமாக மீள் பெயரிடப்படுவதனையும், நவீன மனித பரம்பரையலகிற்கு ஒரு பங்களிப்பு செய்தவன் என்று கருதப்படுவதில் இருந்தும் நீக்கப்படுவதனையும் விளைவாக்கியுள்ளது.

எவ்வாறெனினும் டெம்பிளெடன் ஆய்வானது முற்றான மீள்குடியேற்றம் பற்றிய விளக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. டெம்பிளெடன் ஜியோடிஸ் (Geodis) எனப்படும் கணினி வேலைத்திட்டம் மூலம் இழைமணிக்குரிய பாரம்பரியப்பதார்த்தம் (DNA), சீ நிறமூர்த்தத்திற்குரிய தந்தை வழியாக பெற்றுக்கொள்ளப்பட்ட Y-chromosome உள்ளடங்கிய பாரம்பரியப் பதார்த்தம் (DNA), மற்றும் மனித பரம்பரையலகுகள் ஏனைய எட்டு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட DNA நிறமூர்த்தத்திற்குரிய இரு X-chromosome என்பவற்றையும் உள்ளடக்கி பகுத்தாய்வு செய்தார். மேலும் டெம்பிளெடன் குடித்தொகைகளின் வேறுபட்ட மாதிரிகளுக்கு உரிய பரம்பரையலகுகளையும் (DNA/பாரம்பரிய பதார்த்தத்தின் சிறிய பிரிவுகள்) ஆராய்ந்தார். இந்த வேலைத் திட்டமானது தனி அலகுகளாக தலைமுறையுரிமை அடைகின்ற பரம்பரை அலகு கூட்டங்களை ஆராய்வதன் மூலம் குடித்தொகைகளுக்கு இடையிலும் குடித்தொகையினுள்ளும் உள்ள பிறப்புரிமை தொடர்புகளை தீர்மானிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

DNA பற்றிய புள்ளிவிபரவியல் ரீதியிலான பகுத்தாய்வு டெம்பிளெடன் தயாரித்த ஜியோடிஸ் (Geodis) என்ற வேலைத் திட்டமானது, பிற்காலத்தில் டேவிட் பொசாடா (David Posada) மற்றும் கீத் கிரன்டால் (Keith Crandall) ஆகியோரது உதவியுடன் Brigham young பல்கலைக்கழகத்தில் சிறிது மாற்றியமைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டமானது தரவுகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கான மனிதக்கூர்ப்பின் முன்னைய மாதிரிகளின் தேவையற்ற விதத்திலான புள்ளிவிபரவியல் அணுகுமுறையை கையாண்டிருப்பதன் மூலம் தற்போதைய தரவுகளுடன் முன்னர் அனுமானிக்கப்பட்ட முடிவுகளை பொருந்தச் செய்ய வேண்டுமென்ற விருப்பத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவர்களது கண்டுபிடிப்புகள், ஹோமோசேப்பியன்கள் ஏனைய மனிதக் கூட்டங்களுடன் இடையினங்கலத்தலில் ஈடுபட்டிராவிட்டால் எதிர்பார்க்க கூடியதைவிடவும் மிகவும் பழமையான DNA இன் விசேட அடையாளங்களை வெளிக்காட்டுகின்றன. டெம்பிளெடனின் செயற்பாடுகள், குறைந்தது இரண்டு ஆபிரிக்காவிலிருந்து வெளியேறும் பரம்பல் நிகழ்வுகள் இடம்பெற்றன எனவும் அவற்றுள் பழமையானது 420,000 முதல் 840,000ற்கு இடைப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரும், அண்மையானது 80,000 முதல் 150,000ற்கு இடைப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரும் இடம்பெற்றன எனத் தெரிவிக்கின்றன.

டெம்பிளெடனின் கருத்துப்படி தற்போதைய மனித பரம்பரையலகில், இந்த முன்னைய இயக்கத்தின் பரம்பரையலகுகள் காணப்படுவதுடன் இவை குறித்த புவியில் பிராந்தியங்களுக்கு தனித்துவமானவையாகவும் உள்ளன. இவ்வகையில் ஐரோப்பியர்களின் பிறப்புரிமை ஒழுங்கமைப்பில் Neanderthal- ஆதிகாலமனிதனுக்குரிய பரம்பரையலகுகளின் மீதிகளும், ஆசியக் குடித்தொக்ைகளில் ஒருவரின் பாலியல் தொடர்பான (ஹோமோ இரெக்டஸ்களின்-Homo erectus) பரம்பரையலகுகளும் காணப்படலாம். டெம்பிளெடன் எழுதுகிறார்: "அங்கு ஒரு பிரதியீட்டு நிகழ்வு இடம்பெற்று இருப்பின் பழமையான பரம்பல் நிகழ்வின் மூன்று முக்கிய பிறப்புரிமையின் விசேட அடையாளங்களும், மீண்டும் நிகழ்ந்த பழமையான பரம்பரையலகுப் பாய்ச்சலின் பிறப்புரிமையின் ஆறு விசேட அடையாளங்களும் நீக்கப்பட்டிருக்கும்.

காலத்துடன் மனிதர்களின் அசைவால் குடித்தொகையின் உள்ளேயோ வெளியேயோ பரம்பரையலகுகளின் அசைவான "பரம்பரையலகுப் பாய்ச்சல்" பற்றிய டெம்பிளெடனின் குறிப்பானது, முக்கியமாக பழைய பரம்பலின் பரந்த வீச்சிலான திகதிகளுக்கு விளக்கமளிக்க உதவுகின்றது. இது பேலியோ (Paleo) சகாப்தத்திற்குரிய மனிதவர்க்க ஆய்வாளர்கள் தாமதப்படுத்தப்பட்ட ஒரு கூர்ப்புச் செயன்முறைக்கு ஒப்பானதை மீளக் கட்டியெழுப்ப முற்படுகின்றபோது எதிர்நோக்குகின்ற சிரமங்களைசுட்டிக்காட்டுகின்றது. நவீன பார்வையில் ஒரு புராதனமான தாய்மண்ணிலிருந்து புதிய இடத்திற்கு மக்கள் குடிபெயர்ந்ததை விட, உதாரணமாக ஆபிரிக்காவின் பன்ட்டு (Bantu) குடிபெயர்வை விடவும் ஆதிகால மனிதர்கள் மிகவும் மெதுவாகப் பரவி உலகின் வெவ்வேறு பாகங்களிலும் தம்மை பல ஆயிரம் தசாப்தங்களுக்கு மேலாக நிலைப்படுத்தி வந்தனர்.

பூகோளத்தின் குறுக்கேயான இந்த மனிதப்பரம்பலின் உயிர் நாடியைத் தூண்டிய காரணி ஆனது அநேகமாக மேலும் விரும்பத்தகுந்த கால நிலை நிபந்தனைகளுடனான உயிரியல் மற்றும் கலாசார கூர்ப்பை உள்ளடக்கி இருந்துள்ளது. சிக்கல் தன்மை அதிகரித்துச் செல்கின்றதான ஒரு சமூகவியல் கட்டமைப்பின் மூலம் வழிநடத்தப்படும் வகையில் மனிதவழித் தொடரானது பெரிய மூளையை கொண்டிருக்க கூடிய விதத்திலான திசையில் கூர்ப்படைந்து சென்றமையின் பிரதிபலனாக, மேலும் சிலவேளைகளில் உரையாடலின் முதற்படியான வடிவத்தில் மேம்படுத்தப்ட்ட தொடர்புகளுக்கு அனுமதித்திருக்கலாம்.

அதிகரித்த மண்டையோட்டுக் கொள்ளளவுடன் இணைந்தவாறான நுட்பம் மிக்க கலாசார முன்னேற்றங்கள் மனிதர்களுக்கு மேலும் வெற்றிகரமான ஒரு வாழ்க்கை முறையை வழங்கியதுடன் இவை குடித்தொகை அதிகரிப்பிற்கும் இதனுடன் இணைந்தனவான நெருக்கடிகளுக்கும் இட்டுச் சென்றன. Paul Ehrlich என்ற உயிரியலாளரால் "ஆபிரிக்காவிலிருந்து வெளியே 2" என அழைக்கப்படுகின்ற இரண்டாவது பாரிய குடி பெயர்வு இடம்பெற்ற காலகட்டத்தில் உண்மையான மொழியானது ஏற்கனவே உருவாகியிருந்திருக்கலாம்.

"திரெலிஸ்" (Trellis) மாதிரி (குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட மரச்சட்ட மாதிரி)

சில விடயங்களில் டெம்பிளெடனின் முடிவுகள் ஹோமோ சேப்பியன்களின் கூர்ப்பு பரம்பல் என்பவற்றை "குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட மரச்சட்டத்தை" ஒத்ததாகக் காட்டுகின்றதான பல்பிராந்திய கருதுகோளின் தற்போதைய திரிபுபட்ட வடிவத்திற்கு சிறிதளவு நம்பிக்கை வழங்குவதாகத் தென்படுகின்றன. மனித கூர்ப்புடனான, பரம்பல் பற்றிய இந்த மாதிரியனது 20ம் நூற்றாண்டின் சிறந்த, பேலியோ சகாப்தம் தொடர்பான மனித இன ஆய்வாளர்களுள் ஒருவரும், தற்போது ஹோமோ இரெக்டஸ் என இனங்காணப்பட்டுள்ள சீனாவின் செளகெளடியன் (Soukoudien) இற்குரிய பீக்கிங் மனிதனை வெளிக்கொணர்ந்த உண்மையான அகழ்விற்கு பிரதான பொறுப்புடையவருமான ஃப்ரான்ஸ் வெய்டென்ரிச்சின் (Franz Weidenreich) முயற்சியால் 1930ல் உருவாக்கப்பட்டது.

வெய்டென்ரிச்சின் மனிதக் கூர்ப்பின் மாதிரியானது "பல கிளைகளுடைய மெழுகுவர்த்தி தாங்கியை" ஒத்திருப்பதன் மூலம் அவரை ஒரு உறுதியான பல்பிராந்திய கொள்கைவாதியாக காட்டியது. எனினும் இவர் இவரது சமகாலத்தவர்களைப் போலல்லாது, மனித இனங்களுடன் தொடர்புடையதான குணவியல்புகள் அண்மையில் ஏற்பட்டவையோ மிக குறுகிய காலத்திற்குறியவையோ அல்ல, வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரித்தார். வெய்டென்ரிச், தொடர்மாறல் பற்றிய கருத்துக்களை அல்லது நேர்வழிவந்த கூர்ப்பு பற்றிய கருத்துக்களை விருத்தி செய்வதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பிராந்திய ரீதியிலான அபிவிருத்திக்கும் மனித இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் இடையில் தென்பட்ட முரண்பாட்டை விளக்க முயன்றார். வெய்டென்ரிச், மனித வழித்தொடரானது வெளிப்பட்ட உடனேயே அது ஒரு குறிப்பிட்ட வழியில் கூர்ப்படையும் வகையில், உதாரணமாக பெரிய மூளையைக் கொண்டிருக்கும் வகையில் உள்ளார்ந்த ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்.

கலாச்சாரக் கூர்ப்பின் விளைவு மீது ஒருமுகப்படுத்தப்பட்ட ஒத்த கருத்தானது மனிதக் குடித்தொகைகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபிரிப்பதற்கான உடலமைப்பு இயல்புகளின் மாறல்களின் முக்கியத்துவத்தை குறைப்பதன் மூலம் உயிரியல் கூர்ப்பைத் தீர்த்து வைக்க உதவியது. இதற்கான தெட்டத்தெளிவான உதாரணமாக அமைவது, இன்று கடும் நிறமான சருமமுடைய மனிதர்களால் தேவையானளவு உயிர்ச்சத்து 'டி'யை சூரிய சக்தி அகத்துறிஞ்சல் மூலம் தயாரிக்க முடியது போயினும், குளிரான சூரியஒளி குறைவான காலநிலையிலும் வெற்றிகரமாக தப்பிப்பிழைக்க முடியும் என்ற உண்மையாகும். மேலும் திருத்தமாகக் கூறின் அவர்கள் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களை பாற்பொருட்களின் நுகர்வு மூலமோ உணவுப் பிரதியீடுகள் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

பல்பிராந்தியக் கருதுகோளின் தற்கால ஆதரவாளர்களான மிச்சிகன் (Michigan) பல்கலைக் கழகத்தின் மனித வர்க்க ஆய்வாளரான மில்போர்ட் வொல்பொஃப் (Milford Wolpoff) மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித இன ஆய்வாளரான அலன் தோர்ன் (Alan Thorne) ஆகியோர் புதிதாக வந்த குடித்தொகைகளுடன் பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டிருந்த தொடர்பின் விளைவான தொடர்ச்சியான பரம்பரையலகுப் பாய்ச்சலை பிராந்திய ரீதியிலான அபிவிருத்தியுடன் இணைக்கின்றதான குறுக்கு நெடுக்காக அடுக்கப்பட்ட மரச்சட்டத்தை (Trellis) ஒத்த மனித கூர்ப்பின் மாதிரியை விருத்தி செய்தனர்.

வொல்பொஃப்பும் தோர்னும் (Wolpoff, Thorne) பிராந்திய ரீதியிலான தொடர்ச்சியை எடுத்துக்காட்டுகின்ற உயிர்ச்சுவட்டுப் பதிவுகளில் உள்ள நிராகரிக்க முடியாத ஆதாரத்தை மேற்கோள் காட்டுவதுடன் இழைமணி தொடர்பான "ஈவ்" கருதுகோளை விமர்சனத்துடன் நோக்குகின்றனர். அவர்கள் குடித்தொகைகளில் அல்லது உயிரினவகைகளில் உள்ள "மையத்திற்கும் விளிம்பிற்கும்" உள்ள தொடர்ச்சியை வலியுறுத்தினர். ஆபிரிக்கா ஹோமோ சேப்பியன்களை சாத்தியமான கூர்ப்பின் மையமாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை வொல்பொஃப் மற்றும் தோர்ன் ஆகியோர் சுற்றயலுக்குரிய அல்லது "விளிம்பு", குடித்தொகை, புதிய சூழலுக்குரிய சவால்களுக்கான இசைவாக்கங்களாலும் அவற்றுடன் இணைந்தவகையில் குறிப்பிடத்தக்களவு புவியியல் தனிப்படுத்துகையாலும் விளைந்த பரம்பரையலகு மாற்றங்களின் காரணமாக பிராந்திய ரீதியிலான ஒரே இயல்புகளை விருத்தி செய்திருக்கலாம் என வலியுறுத்துகின்றனர்.

எவ்வாறிருப்பினும் நவீன மனிதனின் பரம்பரையலகியல் வடிவமைப்பிற்கு சாதாரண குடித்தொகைகள் உறுதியானவையாகவும் பங்களிப்பு செய்பவையாகவும் இருத்தலானது சுட்டிக் காட்டப்பட்டபோதும், நவீன மனிதனின் பிறப்புரிமை அமைப்பியலானது வெற்றிகரமாக ஆபிரிக்காவிற்குரியது என்பதை டெம்பிளெடன் பேணி வந்துள்ளார். டெம்பிளெடனின் ஆய்வு கூர்ப்பு, நவீன மனிதப் பரம்பல் பற்றிய வாதங்களுக்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ள அதே சமயம், இச்செயற்பாடு எவ்வாறு வியக்கத்தக்கவகையில் வளமானதும் சிக்கல்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.

Top of page