World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Hacked climate emails used to attack scientists

அபகரிக்கப்பட்ட காலநிலை பற்றிய மின்னஞ்சல்கள் விஞ்ஞானிகளை தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன

By Chris Talbot
9 December 2009

Use this version to print | Send feedback

இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்திலுள்ள CRU எனப்படும் வானிலை ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த உயர்மட்ட விஞ்ஞானிகளுக்கு இடையே இருந்த தகவல்கள் பரிமாற்ற மின்னஞ்சல்களை திருடி வெளியிடப்பட்டது, உலகம் வெப்பமயமாதல் என்ற உண்மையை மறுப்பதற்கு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள், பெருநிறுவன செல்வாக்கு தேடுபவர்களின் பிற்போக்குத்தன பிரச்சாரத்தை உயர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, CRU வின் தலைவர் பேராசிரியர் பில் ஜோன்ஸுக்கும் மற்ற விஞ்ஞானிகளுக்கும் இடையே இருந்த சொந்த தகவல்கள் பரிமாற்றத்தில் இருந்து சில சொற்றொடர்களை அவற்றின் பின்னணியில் இருந்து மாற்றி எடுத்து, அவர்களைத் தாக்கவும், அவர்கள் பணியை குறைமதிப்பிடவும் சுற்றுச் சூழல் மாற்ற எதிர்ப்பின் செல்வாக்குக்குழு பயன்படுத்தியுள்ளது.

செளதி அரேபியாவின் காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகள் நடத்தும் மகம்மது அல்-சபான் இந்த மின்னஞ்சல்களில் உள்ள பொருளுரை புவி வெப்ப வாயுக்களின் (Greenhouse Gas) வெளிப்பாடுகளை குறைப்பது பற்றிய கோபன்ஹேகன் விவாதங்களை கவிழ்த்துவிடக்கூடும் என்று கூறியுள்ளார். "இந்த அவதூறு பற்றிய விவரங்களில் இருந்து மனிதச் செயல்களுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தோன்றும்" என்று அவர் BBC இடம் கூறினார்.

காலநிலை மாற்ற எதிர்ப்பு பிரச்சாரகர், வாஷிங்டன் கேடோ இன்ஸ்ட்டிட்யூட் என்னும் வலது சாரி அமைப்பின் பாட்ரிக் ஜே. மைக்கேல், இந்த மின்னஞ்சல்கள் ஏடுகளில் தன் கருத்துக்களை வெளியிட மறுப்பதைக் காட்டுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். "இது பற்றித்தான் அனைவரும் அஞ்சினர். உலக வெப்பமயமாதலே உலகம் முடியப் போகிறது என்ற பிரச்சினையாக காணாத எவருக்கும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவது பெருகிய முறையில் கடினமாகிவிட்டது. இது வெறும் வினாவிற்குரிய நடைமுறை மட்டும் இல்லாமல் அறநெறிக்கு ஒவ்வாதது ஆகும்" என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் வலதுசாரி Daily Express, "காலநிலை மாற்ற 'மோசடி' " என்னும் தலைப்பில் ஆஸ்திரேலிய சுரங்கத் துறை பொறியியல் வல்லுனர் பேராசிரியர் Ian Plimer உடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளது. காலநிலை மாறுதலுக்கு ஆதரவு கொடுக்கும் விஞ்ஞானிகள் ஆதரவு கொடுப்பதற்குக் காரணம் அவர்களுக்கு ஆய்விற்கு கூடுதலான நிதி கிடைப்பதுதான் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். "காலநிலை தோழர்கள் ஊக்கமாக உணவருந்தும் நிலையைத் தொடர விரும்புகின்றனர். அரசாங்கங்களும் நம்முடைய பைகளில் இருந்து எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அதற்கு முயல்கின்றன."

காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களுடைய விடையிறுப்பு எதிர்பார்த்தபடிதான் உள்ளது. ஆனால் தங்கள் பணியில் அவர்களுக்கு செய்தி ஊடகத்தின் தாராளவாதப் பிரிவுகளின் ஆதரவு உதவுகிறது. விஞ்ஞானத்தை பாதுகாப்பதாக பொதுவாகக் காட்டிக் கொள்ளும் செய்தியாளர்கள், உலகம் வெப்பமயமாதலின் பாதிப்பு பற்றியும் கவலை கொள்ளவதாகக் காட்டிக் கொண்டு, UEA விஞ்ஞானிகிளை தாக்கியுள்ளனர். ஜோன்ஸும் அவருடைய சக பணியாளர்களும் விடையிறுக்க வேண்டும் என்பது போல் நடந்து கொள்ளுகின்றனர்.

விஞ்ஞானிகளுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் எதுவுமே இரண்டு வார விசாரணைக்கு பின்னர் சாரம் இல்லாமல்தான் உள்ளன. ஆனால் செய்தி ஊடகத்தின் "அக்கறையை ஒட்டி" பேராசிரியர் ஜோன்ஸ் CRU வின் இயக்குனர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்; கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் பணி பற்றி விசாரணை நடத்துகிறது; இக்குழுவிற்கு ஒரு முன்னாள் அரசாங்க அதிகாரி தலைமை தாங்குகிறார். ஐக்கிய நாடுகளும் இதில் நுழைந்து, ஐ.நா.வின் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்க இடைக்குழுவின் தலைவரான ராஜேந்திரி பசெளரி, தானும் இவ்விஷயம் பற்றி விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

"தொழில்நுட்ப அறிவின் எல்லைகள் இயந்திரங்களால் முன்னேற்றுவிக்கப்படவில்லை ஆனால் தவறு செய்யக்கூடிய மனிதர்களால் என்பதைத்தான் நாம் அனைவரும் நினைவுறுத்தப்படுகிறோம்.... வெளிப்படையை முற்றிலும் விஞ்ஞானிகள் கையாளவில்லை என்ற கருத்து அவர்களுடைய நம்பகத்தன்மையை தூளாக்கிவிடும்" என்று கார்டியன் கூறியுள்ளது.

விஞ்ஞானிகளின் நம்பகத்தன்மை நசுக்கித் தூளாக்கப்படும் என்பது அவர்களுடைய செயல்களால் அல்ல, செய்தி ஊடகத்தினால்தான். பேராசிரியர் ஜோன்ஸைச் சூழ்ந்துள்ள புயல் பரபரப்பு செய்தி ஏடுகள் செயலைப் போலவே கெளரவமான ஏடுகள் செய்தவற்றின் பொறுப்பை ஒட்டித்தான் வந்துள்ளது. செய்தி ஊடகம் ஒரு கோழைத்தனமாக, பாசாங்குத்தனமான விதத்தில் பெருநிறுவன நலன்களுடைய தாக்குதலுக்கு விடையிறுத்துள்ளது; இதற்காக விஞ்ஞானிகளை இழிவுபடுத்தி, விஞ்ஞானத்தையும் கூட இழிவுபடுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் முக்கியமான காலநிலை செய்தியாளர்களில் ஒருவரான George Monbiot பெரும் திகைப்புடனும் தன்னையே பரிதாபத்துடன் காட்டிக் கொள்ளும் விதத்திலும் இதை எதிர்கொண்டுள்ளார். "இந்த அளவிற்கு நான் தனிமைப்பட்டதில்லை. விரிவான விளக்கங்கள் எப்படி இருந்தபோதிலும்கூட, பெரும்பாலான மக்கள் இதை உணர முடியாது, தொடர்ந்து கவனம் செலுத்தவும் மாட்டார்கள். பில் ஜோன்ஸிற்காக நான் பெரிதும் வருத்தப்படுகிறேன்: நரகத்தில் நடந்து செல்வது போல் அவர் உணர்வார். ஆனால் வேறு வழியில்லை; அவர் போய்த்தான் தீர வேண்டும்; அதிக நாட்கள் அவர் இல்லாவிட்டால், இது இன்னும் மோசமாகிப்போகும். இன்னும் சில நாட்கள் உள்ளன; அவர் ஒருவேளை கெளரவமாக விலகிக் கொள்ளுவதற்கு."

பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தை நடத்திய முறை பற்றி Monbiot குறைகூறியுள்ளார்; "இது ஒரு முழு இரயில்பெட்டிகள் உடைப்பு போன்றது... நான் காணும்வரை ஒளிக்கதிர்களில் படுமாறு ஒரு முயல் உட்காருகிறது, பேரழிவுத்தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில்."

வாஷிங்டன் போஸ்ட்டின் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில் சுற்றுச் சூழல் மாற்றம் பற்றி கூறுவது: "சமாதானகால வரலாற்றில் அரசாங்கம்-செய்தி ஊடகம்-கல்விக்கூட வளாகம் வேறு எந்தப் பொருளைப் பற்றியும் தொடர்ந்து பிரச்சார முறையில் தீவிரமாக இந்த அளவிற்கு ஈடுபட்டதில்லை."

UEA விஞ்ஞானிகள் "அறிவுத்துறைத் திமிர் பிடித்தவர்கள்", "தீர்க்கதரிசி போல் தோன்றும் நினைப்புடையவர்கள்", என்று அவர் குற்றம் சாட்டியுள்ளதுடன், "உண்மைகளை தம் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இழைவதில் நேர்த்தியானவர்கள், உறுதிப்பாடுகளை மிகைப்படுத்துபவர்கள், தங்கள் கருத்திற்கு பொருந்தாத தகவல்களை நசுக்கிவிடுபவர்கள், அறிவார்ந்த முறையில் மாறுபட்ட கருத்துக்களை கூறுபவர்களை சக ஊழியர் ஆய்வு என்ற முறையில் திரித்துவிடுபவர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

இன்னும் சற்றே நிதானமான விடையிறுப்பு அறிவியல் ஏடான Nature இடம் இருந்து வந்துள்ளது; இது முதலில் மின்னஞ்சல்கள் திருடப்பட்டவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது முக்கிய கருத்து, ஏனெனில் மின்னஞ்சல்கள் வெளியிடப்பட்டது ஏதோ தொடர்புடைய ஊதிக் கெடுப்பவருடைய செயல் அல்ல. இது ஒரு முக்கியமான குற்றமத்சார்ந்த செயற்பாடு." (See Nature's report here)

அது கூறுவது: "மின்னஞ்சல்களில் இருக்கும் எதுவும் உலகம் வெப்பமயமாதல் என்ற உண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை--அல்லது மனிதனுடைய செயல்கள்தான் இதற்குக் காரணம் என்பதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. இந்த நிலைப்பாட்டிற்கு பலவித, வலுவான சான்றுகள் உள்ளன; அவற்றுள் பல மின்னஞ்சல்களில் விவாதிக்கப்படும் சுற்றுச்சூழல் மறு கட்டமைப்பு முறைகளில் இருந்து முற்றிலும் சுதந்திரமானவை ஆகும்."

"மின்னஞ்சல்களை பாரபட்சமின்றிப் படித்தால், மறுப்பாளர்களின் சதித்திட்ட கோட்பாடுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்பது நன்கு வெளிப்படும்" என்று Nature கட்டுரையில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான திருடப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து அதிக அளவில் வெளியிடப்பட்டுள்ள சுருக்கங்களில் ஒன்றில் UEA விஞ்ஞானிகள் இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் Fourth Assessment Report of the International Panel on Climate Change (ICC) உடைய பரிசீலனைக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மாற்றம் ஒரு மோசடி என்பதை நிரூபிக்கும் "புகைந்து கொண்டிருக்கும் கைத்துப்பாக்கிக்கு" இது ஒரு சான்றாகும் எனக் கூறப்படுகிறது. உண்மையில் Nature இரு கட்டுரைகளும் ஆதாரக் குறிப்புக்களைக் கொண்டவை, 2007 மதிப்பீட்டு அறிக்கையில் விவாதிக்கப்பட்டவை என்று சுட்டிக்காட்டியுள்ளது. UAE விஞ்ஞானிகளோ, IPCC யோ எதையும் மறைக்கவில்லை.

சுற்றுச்சூழல் மாற்றத்தை மறுப்பவர்களிடம் இருந்து Nature கூடத் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது; அவர்கள் UEA விஞ்ஞானிகளிடம் இருந்து வந்து வெளியிட்ட கட்டுரைகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். ஏட்டின் ஆசிரியர்குழு இந்த முறையீட்டை கொள்கை நிலைப்பாட்டில் நிராகரித்துள்ளது. "Nature உடைய கொள்கை அத்தகைய விஷயங்களை விசாரித்தல், கவலைக்கு தக்க காரணங்கள் இருக்குமேயானால்; ஆனால் இதுவரை இந்த மின்னஞ்சல்கள் அத்தகைய தகுதியைக் கொண்டிருக்கவில்லை."

மின்னஞ்சல்களைத் திருடுவது என்பது மிகவும் நேர்த்தியாக அமைக்கப்படும் செயல்பாடு என்பது வெளிப்படையாகியுள்ளது. "தன்னிச்சையாக ஏதோ சில ஆவணங்களை எடுக்காமல் கவனத்துடன் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல்களும் ஆவணங்களும் திருடப்படுகின்றன" என்று பேராசரியர் Jean-Pascal van Ypersele, IPCC யின் துணைத் தலைவர் இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட Indendent ஏட்டிடம் கூறினர். "இது 13 ஆண்டுகளின் தகவல், இது ஒன்றும் தகுதி அற்றவர்களால் செய்யப்படுவது இல்லை."

BBC வட்டார வானிலைத் தகவல் அளிப்பவர் திருடப்பட்ட ஆவணங்கள் உட்பட ஏராளமான மின்னஞ்சல்களை பெற்றார். நவம்பர் 17ம் தேதி 4,000 ஆவணங்கள் ஒரு காலநிலை வலைத்தளத்திற்கு துருக்கியில் உள்ள ஒரு கணினியில் இருந்து ஏற்றப்பட்டன. நவம்பர் 19ம் தேதி செளதி அரேபியாவில் ஒரு கணினியில் இருந்து தொடர்பு ஒன்று ஒரு ரஷ்ய கணினிக்கு ஜிப் பைல் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பேரசரியர் Ypersele ரஷ்ய இரகசியப் பிரிவான FSB இந்ந நடவடிக்கையின் பின்னணியில் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். இவை சைபீரிய நகரமான Tomsk ல் இருந்து அனுப்பப்பட்டன; அது Tomcity என்று அழைக்கப்படும் இணைய தளப் பாதுகாப்பு வணிக நிறுவனத்திற்கு சொந்தமானது. நகரத்தில் உள்ள FSB ரஷ்ய நலன்களுக்கு விரோதம் எனக் கருதப்படும் தளங்களை வெற்றிகரமாக சூறையாடும் மாணவர்களை பாரட்டியதற்கு சான்றுகள் உள்ளன. ரஷ்யாவின் அண்டை நாடுகள்மீது இணைந்த தாக்குதல்களை நடத்த அவை சூறையாடுபவர்களை நியமிப்பதாகக் கருதப்படுகிறது.

UEA மின்னஞ்சல்களை திருடியதற்கு எவர் இறுதியில் பொறுப்பானாலும், இச்செயல்பாடு ரஷ்யா, செளதி அரேபியா, ஐரோப்பா அல்லது அமெரிக்கா எதுவானாலும் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் நலன்களுக்குத்தான் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் எந்த அளவிற்கு தங்கள் இலாபங்களை உலகின் பெரும்பாலான மக்களுடைய இழப்பில் காப்பாற்றிக் கொள்ள செல்வார்கள் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.