சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Scientists directly image an extra-solar planet’s orbit around a young star

சூரியமண்டலத்திற்கு வெளியே ஓர் இளம் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கோளின் சுற்றுவட்டப்பாதையை விஞ்ஞானிகள் நேரடியாக படமெடுத்தனர்

By Bryan Dyne
19 July 2010

Use this version to print | Send feedback

Beta Pictoris
Beta Pictoris | Credit: ESO/A.-M. Lagrange

சூரிய மண்டலத்திற்கு வெளியே கோள்களை தேடும் ஆய்வின் வரலாற்றில் முதன்முதலாக, விண்ணியலாளர்கள், ஒரு கோள் அதன் தாய் நட்சத்திரத்தின் ஒருபக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்வதைக் கண்டறிந்துள்ளார்கள்.

நம்முடைய சூரியன் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கிறது என்ற கணிப்போடு ஒப்பிடுகையில், ஒருசில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கும் இந்த இளம் நட்சத்திரத்திற்கு பீட்டா பிக்டோரிஸ் (Beta Pictoris) என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். வெகு சமீபத்தில் தான் தோன்றியது என்பதற்கும் அப்பால், இது சூரியனின் நிறையை விட இரண்டு மடங்கு அதிகமான நிறையையும், சூரியனின் பிரகாசத்தைவிட ஒன்பது மடங்கு அதிகமான பிரகாசத்தையும் கொண்டது. அறுபத்திமூன்று ஒளியாண்டுகள் தூரத்திலிருக்கும் (சுமார் 370 ட்ரில்லியன் மைல்கள்) பீட்டா பிக்டோரிஸ் நட்சத்திரத்தை, ஹெமிஸ்பியரின் (southern hemisphere) தெற்கு பகுதியில் வெறுங்கண்களாலேயே பார்க்கலாம்.

இங்கே காட்டப்பட்டிருக்கும் படம், European Southern ஆய்வகத்தில் 8.2 மீட்டர் (27 அடி) விட்டமுடைய தொலைநோக்கியால் படமெடுக்கப்பட்டதாகும். இப்படத்தின் மையத்தில் இந்த நட்சத்திரம் ஒரு புள்ளியாக தெரிவதைப் பார்க்கலாம். ஆனால் நட்சத்திரத்தின் உண்மையான பிரகாசம் ஏனைய எந்த பிரகாசத்தையும் இல்லாமல் செய்துவிடும். நட்சத்திரத்தின் படத்தைப் புகைப்படமெடுக்க, புகைப்படக்கருவியின் உள்ளே ஓர் உலோக தகடு பயன்படுத்தப்பட்டது. அதுவே படத்தின் மையத்தில் பெரிய தகடு போன்று காணப்படுகிறது. இதைக்கொண்டு தான் நட்சத்திரத்திற்கருகில் மிக மங்கலான பொருட்கள் இருப்பதை விண்ணியலாளர்கள் கண்டறிந்தனர்.

பல படங்களை ஒன்று சேர்த்து இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கோளின் முதல் படம் 2003இல் எடுக்கப்பட்டது. 2009இல், இந்த கோள் மீண்டும் நட்சத்திரத்தின் மறுபக்கத்தில் தென்பட்டது. 2008இல் கிடைத்த தரவுகளை மதிப்பாய்வு செய்தபோது, அந்த கோளைக் காண முடியவில்லை. தொலைநோக்கியால் பார்க்க முடியாத நிலையில், அப்போது இந்த கோள் நட்சத்திரத்திற்கு மிக சமீபத்தில் இருந்திருக்கக்கூடும் என்று கருதப்பட்டது. புகைப்படத்தில் சிக்கிக்கொண்ட ஏதோவொரு பின்புல பொருளல்ல, இது உண்மையில் ஒரு கோள் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இது மிகவும் முக்கியமான தகவலாக இருக்கிறது. அதினும் மிக முக்கியமாக, பீட்டா பிக்டோரிஸைச் சுற்றி இந்த கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் பாதியளவை முடித்திருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள் என்பது உறுதியாக உள்ளது.

அதன் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்க அது எடுக்கும் காலத்தைக் கொண்டு, விண்ணியலாளர்கள் நட்சத்திரத்தின் நிறையைக் கணக்கிட்டார்கள். மேலும், சுற்றுவட்டப்பாதையின் பெரும்பாலான விளிம்பையே நம்மால் பார்க்க முடிகிறது என்ற உண்மைக்கு இடையில், சுற்றுவட்டப்பாதையானது வலதுபுறத்தைவிட மேலும் அதிகமாக இடதுபுறத்திற்கு செல்கிறது என்ற உண்மை கோளின் பாதை அதிகளவில் முட்டைவடிவத்தைப் (elliptical) பெற்றிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒருவேளை, இந்த கோள் நம்முடைய சொந்த சூரிய மண்டலத்தில் இருந்திருந்தால், செவ்வாய்கிரகத்திற்கு அப்பாலிருக்கும் அனைத்து கோள்களும் இந்த கோளின் ஈர்ப்புவிசையால் உறுதியாக பாதிப்பைப் பெற்றிருந்திருக்கும்.

வெளிப்புறத்தில் நீலநிறத்தில் புகைப்போன்றிருப்பது, உண்மையில், பீட்டா பிக்டோரிஸ் அமைப்பில் மீதமிருக்கும் வாயும், தூசுக்களுமாகும். இந்த நட்சத்திரம் தோன்றி சில மில்லியன் ஆண்டுகளே ஆகியிருக்கிறது என்பதால், புதிதாக தோன்றும் நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் கலவையான ஃபோலோட்சம் (flotsam) மற்றும் ஜெட்சம்மின் (jetsam) அருகிலிருக்கும் அதன் ஸ்டெல்லர் (steller) நீக்கப்படாமல் இருக்கிறது. இந்த புகைமண்டலங்கள் 1996லேயே முதன்முதலாக படமெடுக்கப்பட்டன. அந்த படத்தின் வடிவம் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கோள் வலம் வந்து கொண்டிருக்கலாம் என்ற கணிப்பை அளித்தது. எவ்வாறிருப்பினும், அப்போதைய தொழில்நுட்பத்தால் நட்சத்திரத்தின் பிரகாசத்தைக் கடந்து, இதுபோன்றவொரு மங்கலான பொருளைப் பார்க்க முடியாமல் இருந்தது.