சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

“Robert Service has written a diatribe, not a scientific polemic!”

A conversation with Professor Hermann Weber

ரொபேர்ட் சேர்விஸ் ஒரு விஞ்ஞானபூர்வ எதிர்வாதத்தை அல்ல, ஒரு பழியுரையை எழுதியுள்ளார்!”

பேராசிரியர் ஹெர்மான் வேபருடன் ஒரு கலந்துரையாடல்

28 November 2011

use this version to print | Send feedback

ரொபேர்ட் சேர்விஸ் ட்ரொட்ஸ் பற்றி எழுதிய வாழ்க்கைச்சரிதம் 2009ல் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. ட்ரொட்ஸ்கி மீதான இப்புத்தகத்தின் விடாப்பிடியான தாக்குதல் சேர்விஸுக்கு பிற்போக்குத்தனமான பிரிட்டிஷ் ஊடகங்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றுத் தந்தது, இதற்கு பதிலளிக்கு முகமாக உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த்தினால் லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து என்ற நூல் மேஹ்ரிங் புக்ஸ் மூலம் 2010ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் கணிசமான பகுதி சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதத்திற்கான ஒரு விரிவான மறுப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ரொபேர்ட் சேர்விஸின் ஆங்கில மூல நூலை எதிர்வரும் மாதங்களில் ஜேர்மன் மொழியில் பிரசுரம் செய்ய Suhrkamp புத்தக வெளியீட்டாளர்கள் எடுத்த முடிவிற்கு எதிராக பல சரித்திர பேராசிரியர்களும், வரலாற்றாசிரியர்களும் ஒரு ஆட்சேபனைக் கடிதத்தை வெளியீட்டாளர்களுக்கு எழுதியுள்ளனர். அக்கடித்ததில் அவர்கள் நோர்த்தால் எடுத்துக்காட்டப்பட்ட சேர்விஸால் செய்யப்பட்டுள்ள வரலாற்று திரிபு மற்றும் தவறான பெயர்கள், தவறான இடங்கள் போன்றவை குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி இப்புத்தகத்தை வெளியிடுவதற்கு எடுத்த முடிவை மீளாய்வு செய்யுமாறு கேட்டிருந்தனர். அக்கடித்தத்தில் கையெழுத்திட்டிருந்த ஜேர்மன் மான்ஹெய்ம் பல்கலைக்கழக பேராசிரியர் ஹேர்மான் வேபர் உடனான கலந்துரையாடலை இங்கு வெளியிடுகின்றோம். அக்கடிதத்தில் பின்வருவோரும் கையெழுத்திட்டிருந்தனர்.

Professor for Sociology, Dr. Helmut Dahmer (Technical University, Darmstadt)

Professor for Political Science and Contemporary History, Dr. Hermann Weber

(Mannheim University)

ஏனையோர்:

·  Bernhard Bayerlein, Centre for Contemporary Research, Potsdam

·  Heiko Haumann, Professor for East European History, University of Basel

·  Wladislaw Hedeler, Historian and author, Berlin

·  Andrea Hurton, Historian and author, Vienna

·  Mario Kessler, Professor at the Centre for Contemporary Research, Potsdam

·  Hartmut Mehringer, Institute for Contemporary History, Berlin

·  Oskar Negt, Professor for Sociology, University of Hanover

·  Hans Schafranek, Historian and author, Vienna

·  Oliver Rathkolb, Professor at the Institute for Contemporary History, University of Vienna

·  Peter Steinbach, Professor at the University of Mannheim, Director of The German Resistance Memorial Center

·  Reiner Tossdorf, University of Mainz

·  Rolf Wörsdörfer, Technical University of Darmstadt

பேராசிரியர் ஹெர்மான் வேபர் (வயது 83), ஐரோப்பாவில் கம்யூனிச இயக்கம் மற்றும் ஸ்ராலினிசம் குறித்த ஆராய்வின் மூத்தவராக  மதிக்கப்படுகிறார். 1975இல் இருந்து 1993 வரையில் அவர் மான்ஹெய்ம் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சமகால வரலாற்றுத்துறையின் தலைவராக இருந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சியான SED, கம்யூனிச அகிலம், மற்றும் ஸ்ராலினிச பயங்கரம் ஆகியவை குறித்து பல தரமான படைப்புகளை அவர் பதிப்பித்துள்ளார். அவருடைய கிழக்கு ஜேர்மனி 1945—1990[i] (The German Democratic Republic 1945—1990) புத்தகம் இன்னமும் சிறந்த விற்பனையில் உள்ளது. அதன் ஐந்தாவது திருத்திய பதிப்பு சமீபத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மான்ஹெய்ம் ஐரோப்பிய சமூக ஆராய்ச்சி மையத்தில் ஜேர்மன்-சோவியத் வரலாற்று ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் மூன்றாம் அகிலம் (“Comintern”) ஆய்வு திட்டத்தின் தலைவராகவும், Yearbook for Historical Studies on Communism இன் ஸ்தாபகராகவும் பாத்திரம் வகிப்பதோடு, பல்கலைக்கழக பேராசிரியராக அவர் ஓய்வுபெற்ற பின்னரும், 18க்கு மேற்பட்ட ஆண்டுகளாக அவர் வரலாற்று விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஹெல்முட் டாஹ்மர் மற்றும் ஏனைய பன்னிரெண்டு முக்கிய வரலாற்றாளர்களோடு இணைந்து, ரொபேர்ட் சேர்விஸால் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் சுயசரிசத்தை ஜேர்மன் மொழியில் வெளியிடவிருக்கும் Suhrkamp பதிப்பகத்தின் முடிவுக்கு பலமாக எதிர்ப்பு தெரிவித்து அதன் உடமையாளரான ஊலா உன்செல்ட்-பெர்கீவிட்சுக்கு வேபர் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சார்பில், வொல்வ்காங் வேபர் அவருடன் பின்வரும் கலந்துரையாடலை நிகழ்த்தினார்.

உலக சோசலிச வலைத் தளம்: ஒரு வரலாற்றாளராக நீங்கள் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்குள் ஆழமான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இருப்பினும், நீங்களே லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களின் ஓர் ஆதரவாளராக இல்லையே?

ஹெர்மான் வேபர்: ஆமாம், உண்மை தான். என்னுடைய இளம்வயதில் நான் மேற்கு ஜேர்மனியில், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு காரியாளராக இருந்தேன். அதற்காக நான் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னுடைய சிறைவாசத்திற்கு முன்னரே ஸ்ராலினிசத்தின் ஒரு விமர்சகராக இருந்த நான் கட்சி தலைமையோடு ஏற்கனவே முரண்பாட்டிற்கு வந்திருந்தேன். பின்னர், 1954இல், என்னுடைய மனைவி ஹெர்டா உடன் சேர்த்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். அந்த ஆண்டுகளில் சோசலிசத்திற்கு ஆதரவான அரசியல் அமைப்புகளைத் தேடுவதில் கவனம் செலுத்தினேன். அதே நிலைப்பாட்டிலிருந்து ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும் போராடினேன். 1950களின் ஆரம்பங்களில், ஜோர்ஜ் யுங்கிளாஸ்[ii] போன்ற ஜேர்மனியிலிருந்த ட்ரொட்ஸ்கிச அமைப்பின் அப்போதைய-முன்னனி உறுப்பினர்கள், என்னோடு நிறைய உரையாடினார்கள். ஆனால் இறுதியாக அவர்களால் என்னை அரசியல்ரீதியாக நம்பிக்கையூட்ட முடியவில்லை. 1951இல் அவர்கள் UAPனுள்[iii] செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் டிட்டோயிசம் (Titoism) பற்றிய அதிகமாக சாதகமாக குறிப்பிட்டனர். என்னளவில் அதை நான் ஸ்ராலினிசத்தின் வேறொரு வடிவமாகவே கருதினேன்.

ஸ்ராலினின் குற்றங்கள் (1956) குறித்து குருச்ஷேவ் இன் வெளியீடுகளுக்குப் பின்னர், பொருளாதார-அரசியல் நெருக்கடி மற்றும் இளைஞர்களின் கிளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையில், 1960களில் ஒருவிதமான ட்ரொட்ஸ்கிச மறுமலர்ச்சி இருந்தது. ஆனால் அது சுமார் 10-15 ஆண்டுகளுக்கு பின்னர் பின்னடைவை கண்டது. பல ஆண்டுகளாக இன்று வரையில் நான் ட்ரொட்ஸ்கியின் வடிவத்திலும் மற்றும் அவரின் கருத்துக்களிலும் ஒரு புத்துயிர்பெற்ற ஆர்வத்தை கண்டுள்ளேன். அதுவும் குறிப்பாக, அராஜகவாதத்திலும்- (anarchism) மற்றும் மக்ஸ் ஸ்டெர்னர் போன்ற அதன் பிரதிநிதிகளிடமும் கூட அதை கண்டுள்ளேன். ஒருவிதத்தில் ட்ரொட்ஸ்கியும் ஸ்டெர்னரும் இருவருமே ஒப்பீட்டளவில் நடைமுறையிலுள்ள அரசியல் கருத்துக்களுக்கு "முரண்பட்டவர்களாக" (heretics) உள்ளனர். இருவருமே வெவ்வேறு சமூக தத்துவங்கள் மற்றும் வெவ்வேறு அரசியல் முன்னோக்குகளோடு முதலாளித்துவத்தை விமர்சிக்கின்றனர். இந்த இயல்நிகழ்வை நான் Yearbook of Historical Studies on Communism நூலின் அடுத்த பதிப்பில் ஒரு கட்டுரையில் கையாளவிருக்கிறேன். அந்த கட்டுரையைத் தயாரிக்கையில் தான், ரொபேர்ட் சேர்விஸ் எழுதிய ட்ரொட்ஸ்கியின் சுயசரிதத்தோடும், டேவிட் நோர்த்தின் லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து [iv] புத்தகத்தோடும் ஆழமாக தொடர்புபட வேண்டியிருந்தது.

.சோ..: சேர்விஸின் நூலைக் குறித்த உங்களின் முதல் உணர்வு என்னவாக இருந்தது?

ஹெர்மான் வேபர்: சேர்விஸ் மற்றும் Suhrkamp பதிப்பகத்தின் திட்டங்கள் மீது டேவிட் நோர்த்தால் எடுக்கப்பட்ட விமர்சனம் குறித்து உங்களிடமிருந்து நான் முதன்முதலில் கேள்விபட்ட போது, 'ட்ரொட்ஸ்கி குறித்து என்ன வேண்டுமானாலும் ரொபேர்ட் சேர்விஸ் எழுதலாம், Suhrkamp பதிப்பகமும் அதை பிரசுரிக்கலாம்' என்று தான் நினைத்தேன். ஆனால் நிறைய படித்து ஆராய்ந்ததும், அந்த புத்தகத்தால் நான் மிகவும் திகைத்து போனேன். ஏனென்றால் அது ட்ரொட்ஸ்கியின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கண்ணோட்டங்களுக்கு எதிராக வாதிடுகிறது என்பதற்காக அல்ல. உண்மையில் அதை ஒவ்வொருவரும் சுதந்திரமாக செய்யலாம். ஆனால் சேர்விஸ் பொய்கள், வரலாற்று திருத்தல்வாதங்கள், போலி ஆதாரங்கள், மற்றும் யூத-எதிர்ப்பு (anti-Semitic) விரோதங்களையும் கூட கையாள்கிறார். அத்தகையவொரு வெளியீடுகள் Suhrkamp போன்ற ஒரு தாராளவாத பாரம்பரியமும், அவ்வாறான ஒரு வரலாறையும் கொண்ட ஒரு கல்விசார் பதிப்பகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடாது.

முற்றிலும் ஒரு விஞ்ஞானபூர்வ கண்ணோட்டத்திற்காக ஒருவர் அதிலிருந்து தொடங்கினால், அவர் நம்பமுடியாத பல படுமோசமான தவறுகள், குருட்டுத்தனமான பிழைகள் மற்றும் திரித்தல்களில் மாட்டிக் கொள்வார். தேதிகளில் கூட சேர்விஸ் ஒழுங்காக கையாளவில்லை. யாருடைய படுகொலை முதல் உலக யுத்தத்தைத் தூண்டிவிட்டதோ, ஆஸ்திரியாவின் அந்த ஆர்ஸ்டூக் பிரன்ஸ் பேர்டினான்டின் பெயரைக் கூட சேர்விஸால் நினைவுக்கூர முடியவில்லை என்பதே உண்மை. அவர் பிரெஞ்சு கவிஞர் அந்திரே பிரெட்டோனை (André Breton) மெக்சிகன் ஓவியர் டியேகோ றிவேரா (Diego Rivera) உடன் குழப்புகிறார். ட்ரொட்ஸ்கி கடுமையாக விமர்சித்த கலையின் ஒருவித போக்கான "பாட்டாளி வர்க்க கலாச்சாரம் ("Proletkult”) குறித்து ட்ரொட்ஸ்கியின் அணுகுமுறையை அவர் தலைகீழாக்கிவிடுகின்றார். இவையனைத்தும் வியப்பூட்டும் விதத்தில் எழுத்தாளரின் தரப்பில் இருக்கும் மட்டமான கல்வியையும், அதிர்ச்சியூட்டும் விதத்தில் பதிப்பகத்தாரின் தரப்பிலிருக்கும் ஊக்கமின்மையும் எடுத்துக்காட்டி அம்பலப்படுத்துகின்றன.

சேர்விஸ் பல விஷயங்களை எழுதுகிறார். அவை குறித்து அவர் குறைந்தளவே அறிந்துள்ளார் அல்லது அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. ட்ரொட்ஸ்கியை அவர் ஒரு ஆணவம்மிக்க, தரக்குறைவான எழுத்தாளராகவும், அவரால்மேலோட்டமாக மட்டுமே எழுத" முடியுமென்றும் காட்டுகிறார். அது முற்றிலும் முட்டாள்தனமாக உள்ளது. இங்கே சேர்விஸ், வாசகர்களின் அறியாமையோடு விளையாட முயல்கிறார். ட்ரொட்ஸ்கியின் வெளிநாட்டில் நாட்குறிப்பு (Diary in Exile) இற்கு 1983இல் நான் என்னுடைய பின்னுரையில்: ட்ரொட்ஸ்கி அவருடைய காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த அரசியல் எழுத்தாளர்களில் ஒருவராக உள்ளார்; அவருடைய மிகவும் கடுப்பான அரசியல் எதிரிகளும் கூட அவ்வாறே ஒப்புக்கொண்டுள்ளனர். அவருக்கு "பேனா!” ("the pen!”) என்ற புனைபெயர் ஏதோ சந்தர்ப்பவசமாக ஏற்பட்டதல்ல என்று எழுதினேன்.

.சோ..: நீங்கள் இன்னும் பல வரலாற்றாளர்கள் மற்றும் அரசியல் விஞ்ஞானிகளின் கையொப்பத்தோடு, Suhrkamp பதிப்பகத்திற்கு எழுதியுள்ள ஒரு முறையீட்டில், இந்த புத்தகத்தின் பிரசுரத்திற்கு பலமாக மறுப்பு தெரிவித்துள்ளீர்கள். அதை செய்வதற்கான முக்கிய காரணம் என்ன?

ஹெர்மான் வேபர்: அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்த நூல் ஓர் ஆழ்ந்த விஞ்ஞானபூர்வ எதிர்வாதமாக இல்லை, ஒரு பழியுரையாக உள்ளது.

ஒருவேளை யாரேனும் ஒருவர் ஜேர்மன் பதிப்பில், பெரும் முயற்சியோடு உண்மைசார்ந்த அனைத்து பிழைகளையும், குருட்டுத்தனமான பிழைகளையும் திருத்த முனையலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக, அந்த நூல் முற்றிலும் ஒருதலைபோக்கில், ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்களுக்கு எவ்வித நம்பகத்தன்மையும் இல்லையென்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவே, அவரை இழிவுபடுத்தும் ஒரே நோக்கத்திற்காக, அது வேண்டுமென்றே முழுவதும் தவறான-விளக்கங்களோடும், குளறுபடிகளோடும் எழுதப்பட்டுள்ளது. வேறு இயல்போடும், வேறு உள்ளடக்கத்தோடும் ஒரு நூலை எழுதாமல் இதை திருத்துவது என்பது சாத்தியமே இல்லை.

ஒரு வரலாற்றாளராக ஒருவர் பலமுறை எதிர்வாதங்களை எழுதலாம், எழுதவும் வேண்டும். ஆனால் அது ஒரு பழியுரைக்கு நேரெதிராக இருக்கக்கூடிய ஒன்றாகும்.

.சோ..: கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக 1964இல் நீங்கள் எழுதியிருந்த உல்பிறிஸ்ட் வரலாறை திரிக்கிறார் (Ulbricht falsifies history” )[v] என்ற படைப்பு, அல்லது 1930களில் ஸ்ராலினிச இரகசிய பொலிசால் ஆயிரக்கணக்கான ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் தூக்கிலிடப்பட்டதை மற்றும் படுகொலை செய்யப்பட்டதை மறுக்கவும், மூடிமறைக்கவும் ஜேர்மன் ஐக்கிய சோசலிசக் கட்சியின் (SED)இன் மற்றும் அதன் மேற்க்கு ஜேர்மன் துணை அமைப்பான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (DKP) முயற்சிகளுக்கு எதிராக 1980களின் இறுதியில் நீங்கள் எழுதியவரலாற்றில் வெள்ளை கறைகள்” (“Blind Spots in History” ) [vi] நூல் போன்றவற்றில் நீங்கள் எதிர்வாதத்தை வைத்துள்ளீர்கள்.

ஹெர்மான் வேபர்: ஆமாம், அவை நேர்மையான விஞ்ஞானபூர்வ எதிர்வாதங்கள். எதிர்வாதங்கள் ஏதேனும் மதிப்பைப் பெற வேண்டுமானால், அதாவது அவை மக்களை உடன்பட செய்ய வேண்டுமானால், முக்கியமாக அது மிகவும் மதிப்புடையதாகவும், ஒருவர் கூறும் அனைத்து வாதங்களும் துல்லியமாக நிரூபிக்கப்பட்டதாகவும், அனைத்து ஆதாரங்களும் கவனமாக பரிசோதிக்கப்பட்டதாகவும் இருப்பது இன்றியமையாததாகும். சேர்வீஸின் நூலில் இவை முற்றிலும் எதிராக உள்ளன: அதாவது ட்ரொட்ஸ்கி பற்றி ஏனைய வரலாற்றாளர்கள் பாராட்டியிருந்த ஒவ்வொரு மதிப்பும் வெட்டப்பட்டுள்ளனஅந்நூலில் எந்தவித உண்மையோ அல்லது நேர்மையோ இல்லை.

எவ்வாறிருந்த போதினும், டேவிட் நோர்த்தின் நூல் ஒரு அருமையான எதிர்வாதமாகும். அதன் தொனியில் சிலநேரங்களில் மிகவும் கூர்மையாக இருக்கிறது. ஆனால் உண்மைசார்ந்து அது மிகவும் குறிப்பிடத்தக்க, அருமையாக எழுதப்பட்ட ஒன்றாகும். டேவிட் நோர்த், அவர் ஏற்றிருந்த பொறுப்புகளோடு, உண்மைசார்ந்தும், புறநிலைரீதியிலும் வாதிட்டு இருப்பதே பெரிய சாதனையாகும். அதிலிருக்கும் உண்மைசார்ந்த விபரங்களின் துல்லியத்தையும், வளத்தையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன். அவற்றைக் கொண்டு அவர் ரொபேர்ட் சேர்விஸின் தட்டிக்கழிப்புகள், அவதூறுகள் மற்றும் திரித்தல்களைக் குத்திக்காட்டுகிறார். அதேநேரத்தில், அவர் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் வேலைகளின் சித்திரத்தையும் வாசகர்களின் பார்வைக்கு உருவாக்கிவிடுகிறார். அவை வரலாற்று உண்மைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன.

.சோ..: இரண்டாவது காரணம்

ஹெர்மான் வேபர்:பல பத்திகளில் ரொபேர்ட் சேர்விஸ், யூத-எதிர்ப்பு தப்பெண்ணங்களை கொண்டு ஏமாற்றுகிறார். அது மிகவும் வெட்கக்கேடாக உள்ளது! Suhrkamp பதிப்பகம் ஜேர்மனின் அனைத்து இடங்களிலும் உள்ள அவர்களின் குறிப்பிடத்தக்க வாசகர்களின் பார்வைக்கு இத்தகைய தப்பெண்ணங்களை அனுமதித்ததென்பது இன்னும் அதிகமாக வெட்கக்கேடாக உள்ளது. ஒருவேளை அவர்களும் ரஷ்யாவிலுள்ள அதையொத்த வட்டாரங்களை நோக்கமாக கொண்டிருந்தார்கள் போலும். இங்கேயும் கூட, ரொபேர்ட் சேர்விஸ் ஒரு செய்யத்தகாத பழியுரை அணுகுமுறையைத் தொடர்கிறார். போல்ஷ்விக் கட்சியின் தலைமை, ஒரு யூத கும்பலென பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்ததாக" அவர் எழுதும்போது கூட"பரவலாக"? என்பதன் மூலமாக அவர் எதைக் குறிக்கிறார். ரொபேர்ட் சேர்விஸால் அவரின் வலியுறுத்தலை நிரூபிக்க ஒரேயொரு ஆதாரத்தைக் கூட அளிக்கமுடியாது. அதுபோன்ற சொற்கள் பாசிச போக்குகள் மற்றும் ஜேர்மனியிலிருந்த நாஜிகளுக்கு மத்தியில் இருந்ததை தவிர, அவை அப்போதைய காலகட்டத்தில் வழக்கத்திலேயே இருக்கவில்லை.

ட்ரொட்ஸ்கி குறித்து வரலாற்றில் ஏதோவொரு சமயத்தில் ஸ்ராலினாலோ அல்லது அவரது ஆதரவாளர்களாலோ அல்லது நாஜிகளாலோ பரப்பப்பட்ட எந்தவித எதிர்மறை பிம்பத்தையும், தவறான விளக்கங்களையும் விட்டுவிடாமல் இருக்க ரொபேர்ட் சேர்விஸ் வெளிப்படையாகவே கடினமான முயற்சிகளை எடுத்துள்ளார். இது யூத-எதிர்ப்பு ஏளனங்களையும், தப்பெண்ணங்களையும் கூட உட்கொண்டுள்ளது. 1921இன் பாசிச பூச்சுமிக்க ஆவணங்களில் வேரூன்றியிருந்த ஆதாரங்களைக் குறிப்பிடாமலேயே, ரொபேர்ட் சேர்விஸ் யூத-எதிர்ப்பு நையாண்டிகளை அவருடைய நூலில் சேர்த்துள்ளார். ரொபேர்ட் சேர்விஸ் ஒருவேளை யூத-எதிர்ப்பாளராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் யூத-எதிர்ப்பு வாசகர்களின் இதயங்களை சூடாக்கக்கூடிய பல பத்திகளை அவர் அவருடைய நூலில் ஒழுங்கமைத்திருக்கிறார். டேவிட் நோர்த் அவற்றை விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

ட்ரொட்ஸ்கியைக் குறித்து ரொபேர்ட் சேர்விஸ் ஏற்படுத்திக் காட்டும் கண்ணோட்டத்தை பின்வருமாறு ஒரு வாசகருக்கு தொகுத்து அளிக்கமுடியும்: அதாவது, ஸ்ராலினிஸ்டுகள் ட்ரொட்ஸ்கியை ஒரு குற்றவாளியாக முத்திரை குத்தினர். நாஜிகள் அவரை ஒரு யூத போல்ஷ்விக் என்று குற்றஞ்சாட்டினர் ரொபேர்ட் சேர்விஸ் இவை இரண்டையும் ஒன்றிணைக்கிறார்.

.சோ..: இதுபோன்றவொரு பழியுரையைச் சந்தைக்குக் கொண்டு வரும், மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால் அவ்வாறு செய்யப்படுவதில் இருக்கும் உண்மையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?[vii]

ஹெர்மான் வேபர்: உண்மையில் ரொபேர்ட் சேர்விஸின் தனிப்பட்ட நோக்கங்கள் குறித்து எனக்கு தெரியாது. அவருடைய மண்டைக்குள்ளே சென்று ஒருவரால் பார்க்க முடியாது. ஆனால் இலண்டனில் நடந்த புத்தக அறிமுக கூட்டத்தில் அவரே அவருடைய நூலைக் குறித்து என்ன கூறினார் என்பதை சார்ந்து என்னால் கூற முடியும். பழைய ட்ரொட்ஸ்கி பையனுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது.ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த, ஸ்ராலினின் உளவாளியின் பனிக்கோடாரி அவரை கொல்லும் வேலையைச் செய்யாமல் இருந்திருந்தால், நான் அதை என்னுடைய நூலைக் கொண்டு செய்திருப்பதாக நம்புகிறேன்,” [viii] என்பது போல் அவர் கூறியிருந்தார். மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரமான அறிக்கை இது! ஒரு எழுத்தாளர் இதுபோன்ற ஒன்றை கூறுவதும், அதை ஒரு கல்வித்துறைசார் பதிப்பகம் ஆதரிப்பதென்பதும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட கொடூரமாகும்.

ராமொன் மெர்காடர் ஓர் உளவாளி. அவர் தீர்க்கமான நலன்களையும் அரசியல் நோக்கங்களையும் கொண்டிருந்த ஸ்ராலினிச அமைப்பினுள் வலுவாக ஒருங்கிணைந்திருந்த ஒரு படுகொலை இயந்திரத்தின் ஒரு இயங்கும் சக்கரத்தின் பல்லாக வேலை செய்து வந்தார். அந்த கருவிக்கு, ட்ரொட்ஸ்கியும் அவரது கருத்துக்களும் எப்போதுமே ஓர் அச்சுறுத்தலாக இருந்தன. ஆகவே ஒரு வரலாற்று உள்ளடக்கத்தின்கீழ் ராமொன் மெர்காடரின் குற்றத்தை ஒருவரால் விவரிக்க இயலும். ஆனால் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் யாராவது இன்று வந்து, மெர்காடர் அவருடை அரசியல் கொலையில் செய்ய தவறிய ஒன்றை ஒரு புத்தகத்தைக் கொண்டு முடிக்க வேண்டியிருப்பதாக அல்லது முடிக்க விரும்புவதாக, அதாவது ட்ரொட்ஸ்கியின் மதிப்பையும், மரியாதையையும் அழிக்க விரும்புவதாக கூறும்போது, பின் அது கொடூரமானதாகவும், மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவுமே இருக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், அது அந்த புத்தகத்தின் எழுத்துநடையையும் விவரிக்கிறது. இதுபோன்றவொரு நோக்கத்தை ஒருவர் கொண்டிருக்கும்போது, அங்கே எதையும் ஆராய்வதற்கும், மதிப்பிடுவதற்கும் ஒன்றும் அவசியமே இல்லை. ஆதாரங்களை மனச்சாட்சியோடு சரிபார்ப்பதற்கும், உண்மைசார்ந்து குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கும் ஒருவர் கவனம் எடுக்கமாட்டார். ஏதோவொன்றை வேகமாக ஒன்றுகூட்டி வெறுமனே உருட்டிதிரட்டி வைக்கலாம். இது ரொபேர்ட் சேர்விஸிற்கு வரலாறு தெரியவில்லை என்பதோ அல்லது அதை அவர் முழுமையாக ஆராயவில்லை என்பதோ அல்ல. அவரைப் பொறுத்தவரையில், வரலாறு குறித்து கவலையில்லை. ட்ரொட்ஸ்கியை முடிக்க வேண்டும்! என்ற இந்தவொரு நோக்கத்தில் மட்டுமே அவர் ஆர்வமாக இருக்கிறார்.

அதில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆர்வத்தில், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் எழுத்துக்களை நேர்மையாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் ஆராய்ந்து, இன்றும் அதிகாரபூர்வமாக விளங்கும் மிகவும் தரமான படைப்புகளை அளித்த அனைத்து வரலாற்றாளர்களையும் அவமதிக்கும் அளவிற்கு அவர் செல்கிறார். அவர் பிரெஞ்சு வரலாற்றாளர் பியர் புருவே (Pierre Broué[ix]) ஒரு "பூசித்து பேணுபவராக" குறிப்பிடுகிறார். மேலும் ஐசாக் டொய்ச்சர் (Isaac Deutscher) அவருடைய அருமையான மூன்று தொகுப்பு சுயசரிதத்தில்[x] ட்ரொட்ஸ்கியின் மீது ஒரு புனித வழிபாட்டு முறையை (cult) உருவாக்க விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த இரண்டு எழுத்தாளர்களுமே, ரொபேர்ட் சேர்விஸைப் போலில்லாமல், நேர்மையோடு புதிய ஆதாரங்களையும், புதிய வரலாற்று உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்கள். அவர்களின் அனைத்து மதிப்பீடுகளோடும் உடன்பட வேண்டுமென்பது அவசியமல்ல. சான்றாக, நானே ஸ்ராலினிச அதிகாரத்துவம் குறித்த ஐசாக் டொய்ச்சர் இன் பகுப்பாய்வும், மனோபாவமும் போதியளவிற்கு தெளிவாகவும், கூர்மையாகவும் இருந்ததாக ஒருபோதும் காணவில்லை. அவர் அவருடைய எழுத்துக்களில் ஸ்ராலினிசத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு குறைத்துமதிப்பிட்டிருந்ததை நான் கண்டேன். உங்களுக்கே தெரியும், அந்த என்னுடைய எழுத்துக்கள் ஜேர்மனியில் பல தொழிற்சங்கவாதிகளிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பியர் புருவே உடனும் கூட எனக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு. ஆனால் நிறைய எழுதப்பட்டிருப்பதன் அடிப்படையிலும், அவர்களின் திறமையான வெளிப்படுத்தும் முறையினாலும், அந்த இரண்டு சுயசரிதை எழுத்தாளர்களுமே நிச்சயமாக, வரலாற்றில் ஆர்வமுடைய அனைவருக்கும் முழுமையான மற்றும் ஆழமாக மதிப்புடைய படைப்புகளை அளித்துள்ளனர்.

அதற்கு நேரெதிராக, ரொபேர்ட் சேர்விஸால் பட்டியலிடப்பட்ட நம்பமுடியாத பெரும் ஆதாரங்கள், வெறுமனே ஒரு விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையை ஏமாற்றும் நோக்கமாக கொண்டுள்ளது. பதிப்பகத்தால் அளிக்கப்பட்ட அனைத்து செய்திகளுக்கும் மற்றும் அவரின் சொந்த குற்றச்சாட்டுகளுக்கும் முரண்பட்ட விதத்தில், என்னை பொறுத்தவரையில், அவர் எவ்வித புதிய படைப்பை அபிவிருத்தியும் செய்யவில்லை, வெளிப்படுத்தி இருக்கவும் இல்லை. மாறாக, அவர் இல்லாத ஆதாரங்களை மேற்கோளிடுகிறார் அல்லது அவர் என்ன குற்றஞ்சாட்டுகிறாரோ அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஏதோவொன்றை நிரூபிக்கிறார். விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படாத அல்லது ஆவணப்படுத்தப்படாத ட்ரொட்ஸ்கி குறித்த பல்வேறு பொய்மைகளும், அவதூறு குற்றச்சாட்டுக்களும் பெரும்பாலும் ஸ்ராலினிச பிரச்சாரத்திற்கு மிகவும் பழக்கமானவை.

இவ்விதத்தில் ரொபேர்ட் சேர்விஸ் வெறுமனே ஜொவ்றே ஸ்வைன்  மற்றும் இயான் தாட்சர் ஆகிய ஏனைய இரண்டு பிரிட்டிஷ் வரலாற்றாளர்களின் அடிகளைப் பின்பற்றியுள்ளதாக, டேவிட் நோர்த் அவருடைய நூலில் சரியாக குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆனால் ரொபேர்ட் சேர்விஸ் அதற்குமேல் ஒருபடி செல்லவேண்டும் என்ற நெருக்குதலுக்குள்ளானது போன்ற உணர்வை ஒருவருக்கு  தோற்றுவிக்கின்றது.

.சோ..: Suhrkamp பதிப்பகம் ஜேர்மன் மொழி பதிப்பை திட்டமிட்டு வருவதற்கிடையில், ரொபேர்ட் சேர்விஸின் புத்தகம் ஸ்பானிய மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு உலக வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு பிரபல நபரை முற்றிலுமாக முடிவுகட்ட இந்தளவிற்கு சக்தியை செலவிட்டிருக்கும் ஒரு மதிப்பற்ற ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஒருவரின் செயலை பிரதான பதிப்பாளர்களும், அமைப்புகளும், ஊடகங்களும் ஆதரிப்பதும் குறித்தும், ஒரு வரலாற்றாளராக, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக ட்ரொட்ஸ்கி 1940இல் படுகொலை செய்யப்பட்டு, அவர் இறந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ஆகிவிட்டிருக்கிறது!

ஹெர்மான் வேபர்: இதை ஒரு பரந்த உள்ளடக்கத்தில் தான் பார்க்க வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, சமீபகாலத்தில் வெளியாகும் ட்ரொட்ஸ்கியினுடைய மற்றும் அவரைக் குறித்த பல வெளியீடுகள் அவரைக் குறித்த ஆர்வம் அதிகரித்துவருவதையே காட்டுகிறது. ஒருபுறம், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஸ்ராலினிசத்தின் பொறிவும், மறுபுறம் தற்போதைய நிதியியல் நெருக்கடியோடு முதலாளித்துவத்தின் குற்றத்தனமான வெற்றியின் முடிவும் உள்ளது. ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள் பாரியளவில் பரவுவதையும், அது பின்தொடரப்படுவதையும் தடுப்பதற்காக, அவரையும் அவர் கருத்துக்களையும் "முடித்துக்கட்ட" எந்தளவிற்கு வேண்டுமானாலும் போகக்கூடிய சக்திகள் இருக்கின்றன என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்குழுவின் குறிப்பு:

இந்த உரையாடல் இந்த ஆண்டின் ஜூலை மற்றும் அக்டோபரில் மான்ஹெய்ம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. எதிர்பாரா சந்தர்ப்பசூழலால், அதை முடித்த வெகுசில காலத்தில், பேராசிரியர் ஹெர்மான் வேபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி ஹெர்டா வேபர் மற்றும் அவரது மருத்துவ உதவியாளர் திரு. பாஸிம் ஆவைஸ் இன் உதவியுடன் மருத்துவமனையிலேயே இந்த உரை சரிபார்க்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் ஆசிரியர்குழு அதன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


[i] Hermann Weber, Die DDR 1945-1990 (München 2011, fifth edition)

[ii] Georg Jungclas (1902-1975), leader of the Pabloite organization in Germany until the late 1960s. The Pabloite tendency under the leadership of Michel Pablo and Ernest Mandel broke with the perspectives of Trotskyism in the early 1950s and adapted opportunistically to the Stalinist bureaucracies.

[iii] UAP = Independent Workers Party, a party which the Pabloites helped to launch in support of Tito in Yugoslavia, who criticized the Moscow bureaucracy under Stalin from a nationalist, not an internationalist point of view.

[iv] David North, In Defense of Leon Trotsky (Detroit: 2009, Mehring Books).

[v] Hermann Weber, Ulbricht fälscht Geschichte, Kommentar und Dokumente zu dem Buch „Grundriss der Geschichte der deutschen Arbeiterbewegung”Ulbricht falsifies History – Commentary and documents to the Book “A basic outline of the German workers’ movement” (Cologne 1964).

[vi] Hermann Weber, Weiße Flecken in der Geschichte. Die KPD-Opfer der Stalinistischen Säuberungen und ihre Rehabilitierung -- Blind Spots in history. The KPD victims of Stalinist purges and their rehabilitation (Frankfurt am Main 1989)

[vii] Harvard University Press (Cambridge, Mass., USA) and Macmillan (London) have published the original edition under the title Trotsky – A Biography.

[viii] see article in London Evening Standard on 22 October, 2009

[ix] Pierre Broué, Trotsky (Paris 1988)

[x] Isaac Deutscher, The Prophet Armed: Trotsky, 1879-1921 (1954); The Prophet Unarmed: Trotsky, 1921-1929 (1959); The Prophet Outcast: Trotsky, 1929-1940 (1963)