சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

The growing impact and dangers of global warming

உலக வெப்பமயமாதலால் வளர்ந்து வரும் பாதிப்பும் ஆபத்துக்களும்

By Bryan Dyne
27 November 2012
use this version to print | Send feedback

தட்பவெப்ப மாறுதலும் மற்றும் வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளிலும் அதன் தாக்கம் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வது கடந்த சில மாதங்களில் தீவிர முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. உலகில் பெரும் பகுதிகளில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த வரட்சி, கிரீன்லாந்தின் மேற்பகுதி பனிப்படிவு திடீரெனக் கரைதல் மற்றும் சாண்ட் பெரும்புயலின் தீவிரம் ஆகிய தீவிர தட்பவெப்ப நிகழ்வுகள் உலக காலநிலை வடிவமைப்புக்களில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு உதாரணமாகும். இவை பூமியின் மேற்பகுதி வெப்பநிலையில் பொதுவாக ஏற்படும் உயர்வினால் எதிர்பார்க்கக் கூடியவை ஆகும்.

வெப்பநிலை உள்ளே வரும் சூரியசக்தியினால் நிர்ணயிக்கப்படுகிறது. இது எவ்வளவு சூரிய ஒளி வளிமண்டலத்தால் விண்வெளிக்குள் பிரதிபலிக்கப்படுகிறது, மேற்புறத்தில் இருந்து ஒளிக்கதிரின் சக்தி மறுகதிர்வீச்சிற்குட்படுகின்றது மற்றும் மறுகதிர்வீச்சிற்குட்பட்ட ஒளி எப்படி வளிமண்டலத்தால் உள்வாங்கப்படுகின்றது என்பவை இதில் அடங்கும்.

உள்வரும் சூரிய ஒளியின் சராசரி 30% ஐப் பிரதிபலிக்கும் பூமி அதன் மேற்புறத்தைத்தாக்கும் அனைத்து ஒளியையும் உள்ளிழுத்து, அந்த ஒளியை அதே வரிசைகளில் மீண்டும் வெளியிட்டால், பூமியின் மேற்புற வெப்பநிலை கிட்டத்தட்ட -18º C என்பதாக இருக்கும். இது உண்மையில் நாசாவினால் 14º C என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள உலக சராசரி வளிமண்டல வெப்பநிலையை விட மிகவும் குறைவு. இச்சுற்றுச்சூழல் வழிமுறை இத்தகைய வேறுபாட்டிற்குக் காரணம், “பசுமை இல்ல தாக்கம்” (green house effect) என அழைக்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலம் சூரிய கதிர்வீச்சினால் தாக்கப்படும்போது, வளிமண்டலம் ஒளியை மீண்டும் கதிர்வீச்சிற்கு உட்படுத்துகிறது. ஆனால் பூமி என்பது சூரியனைவிட மிகவும் குளிர்ச்சியை உடையது ஆகையால், மீண்டும் கதிர்வீச்சிற்கு உட்படுத்துவது பெரும்பாலும் உள்சிவப்பு ஒளியாகும்—அதாவது வெப்பம். தெரியும் ஒளியைப் போல் இல்லாமல், உள்சிவப்பு ஒளி பூமியால் உடனே உள்ளிளுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் பின் அது வளிமண்டலத்தை நோக்கி உட்பட அனைத்துத் திசைகளிலும் மறுகதிர்வீச்சைச் செலுத்துகிறது. இதனால் ஒரு சூடான சுற்றுச்சூழல் உருவாகிறது, இந்த நிகழ்போக்குத்தான் பசுமை இல்ல தாக்கம் எனப்படுகிறது.

 

சூரிய ஒளி பூமியைத் தாக்குகிறது, மீண்டும் அது வெப்பமாக வெளியேற்றப்படுகிறது, சுற்றுச்சூழலால் உள்வாங்கப்படுகிறது. படம்: NASA.

 

(சுற்றுச் சூழல் வழியே சூரிய ஒளி கடந்து பூமியின் மேற்பகுதியைச் சூடாக்குகிறது. இந்த வெப்பம் மீண்டும் விண்வெளிக்குள் கதிர்விச்சுவழியில் செலுத்தப்படுகிறது. வெளியேறும் வெப்பத்தில் பெரும்பாலானது பசுமை இல்ல வாயு மூலக்கூறுகளால் ஏற்கப்படுகிறது.  அனைத்துத் திசைகளிலும் கதிர்வீச்சின் மூலம் செல்கிறது.இது பூமியின் மேற்பகுதியையும் விண்வெளியின் கீழ்ப்பகுதியையும் வெப்பமாக்குகின்றது.)

நான்கு முக்கிய பசுமை இல்ல வாயுக்கள், பசுமை இல்ல விளைவிற்குத் தங்கள் பங்களிப்பை கொடுப்பவை பின்வரும் வரிசையில் இருப்பவை, நீராவி, கார்பன் டயாக்சைட், மெதேன் மற்றும் ஓசோன் (water vapor, carbon dioxide, methane and ozone) ஆகியவை ஆகும்.

மேக மறைப்பு பசுமை இல்ல தாக்கத்தில் இரட்டைப் பங்கைக் கொண்டுள்ளது. பனிப்படலத்தின் மறைப்புடன் மேக மறைப்பின் அளவு கூடுதலாக பூமியின் பிரதிபலிக்கும் தன்மையை நிர்ணயிக்கிறது. மேகங்கள் அல்லது பனிக்கட்டி ஆகியவற்றின் அளவில் ஏற்படும் மாற்றம் என்பது பூமியின் மேற்பகுதி கூடுதல் அல்லது குறைவான சக்தியுடன் தாக்கப்பட்டும் என்ற பொருளைத்தரும். சற்று எளிதான வகையில், மேகங்கள் வளிமண்டலத்தில் இருந்து உள் சிவப்பு கதிர்விச்சை உள்வாங்கி, வெளியேற்றுகின்றன.

உலகம் வெப்பமயமாதல் என்பது மனிதன் தூண்டிவிட்டுள்ள பசுமை இல்ல விளைவின் தீவிரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர் ஆகும். மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியதில் இருந்து, இன்னும் தீவிரமாக தொழில்துறை வளர்ச்சிச் சகாப்தத்தில் இருந்து மனித இனம் கடுமையான சராசரி உலக மேற்பரப்பு வெப்பநிலை உயருவதற்கு காரணமாகியுள்ளது. இது கூடுதலான கார்பன் டயாக்சைடை (CO2) சுற்றுச்சூழலில் செலுத்துவதால் ஏற்படுகிறது; அது படிம எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவதாலும் நிகழ்கிறது.

கூடுதலான கார்பன் டயாக்சைடை சுற்றுச்சூழலில் இருத்துவது மற்றும் பூமியின் அதை அகற்றும் திறன் அகன்றுவிட்டதும் ஆகியவை சுற்றுச்சூழலில் அதன் அளவைப் பெரிதும் அதிகரித்துவிட்டது, குறிப்பாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில். ESRL எனப்படும் நில முறை ஆய்வுச் சோதனைக் கூடம் ஹவாயில் உள்ள மௌனா லோவாவில் இருந்து கொடுக்கும் பதிவுகள் 1961ம் ஆண்டில் இருந்து சுற்றுச்சூழலில் இருக்கும் CO2 மில்லியனுக்கு 318 துகள்களில் இருந்து 392 (ppm) என உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இது தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தையகால அளவை விட 27 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த 650,000 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள வேறு எந்த அளவையும் விட மிகவும் அதிகமாகும்.

இதேபோன்ற தகவல்கள் உயரும் மெதேன் அளவுகளைப் பற்றியும் காணப்படுகின்றன. அவை நிலநிரப்பல்கள், கால்நடை, எண்ணெய் எரிவாயு நிலையங்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. 1750ம் ஆண்டு சுற்றுச்சூழலில் மெதேனின் எண்ணிக்கை பில்லியனுக்கு 700 துகள்கள் (ppb) என்று இருந்தது. 2008ல் இந்த அளவுகள் 1,800 ppb  என உயர்ந்துவிட்டன. ஒரு நூற்றாண்டில் மெதேன் பசுமை இல்ல வாயுவான CO2 போல் 72 மடங்கு அதிகமாக உள்ளது.

சுற்றுச்சூழலில் இருக்கும் இன்னும் கூடுதலான பசுமை இல்ல வாயுக்களின் தவிர்க்க முடியாத பாதிப்பு சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை சுற்றுச்சூழலில் அகப்பட்டுக் கொள்ள வைக்கிறது. அதையொட்டி உலகில் கூடுதல் வெப்பநிலை நிலவுகிறது. இயற்கை வழிவகைகள் உலக வெப்பத்தட்ப நிலைகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான், பசுமை இல்ல வாயு அளவுகளும் ஊசலாட வைக்கப்படுகின்றன என்பதும் உண்மைதான்—கடல்பகுதி வெப்பநிலைகளில், கார்பன் வட்டம் ஆகியவற்றில் இந்த ஊசல்கள் உள்ளன. ஆனால் கடந்த நூற்றாண்டில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் உலக வெப்பநிலை மாற்றங்களின் அடித்தளத்தில் இருப்பவை  உலக வெப்பத்தட்ப நிலையில் அதிகரிப்பு என்பதையும், இதற்குக்காரணம் மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்துவிட்டது என்பதுதான்.

கடந்த நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சிறந்த அளவைகள் உலக வளிமண்டல வெப்பநிலை 0.8C அதிகரித்துவிட்டன என்பதைக் காட்டுகின்றன. இந்த அளவு குறைவாகத் தோன்றினாலும், பூமியின் மேற்பகுதிக் காற்று தரையில் இருந்து பத்து மீட்டருக்குள் இருப்பதை எடுத்துக் கொண்டால், உலக வெப்பநிலையின் சராசரி உயர்வு என்பது சுற்றுச்சூழலில் 5 x 1018 யூல் (joules) சக்தியாக உட்செலுத்தப்படுகிறது என்று பொருளைத்தரும். இது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார சக்தியில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேல் அதிகமான சக்தி சுற்றுச்சூழலில் உலவிவருகிறது என்று பொருளாகும்.

இச்சக்தி சீராக உலக சுற்றுச்சூழலில் படர்ந்தால், உலகம் வெப்பமயமாதல் என்பது ஒரு சிறிய பிரச்சினை ஆகிவிடும். ஆனால் இயக்கத்தின் அளவுதான் சக்தி என்பதால், இதனால் முற்றிலும் சீரற்ற இயக்கத்தில் சுற்றுச்சூழல் துகள்களாக உள்ளது எனத் தெரியவரும். சுற்றுச்சூழலின் பெருகிய இயக்கம் தீவிர வேறுபாடு உடைய வானிலையை ஏற்படுத்தும்—மிகப் பெரிய வெள்ளங்கள், சக்திவாய்ந்த சூறாவளிகள், நீடித்த, வெப்பம் மிகுந்த வரட்சிகள் என; அவை இன்னும் சர்வ சாதாரணமாகிவிடும்.

ஆனால் அதிக பிரச்சனை கொடுப்பது உலக வெப்பமயமாதல் குறித்து சாதகமான பின்னூட்ட முறைகள் வெளிப்பட்டுள்ளதுதான். திடீரென உலக காலநிலை மாற்றங்கள் ஏற்படுவது கடந்த நான்கு தசாப்தங்களில் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இவை ஒருவேளை பெருகிய உலக வெப்பநிலையின் நீண்ட கால விளைவுகளாக இருக்கலாம்.

சாதகமான பின்னூட்டம் என்பது முதல் வழிவகை இரண்டாவதைத் தோற்றுவிக்கிறது, இரண்டாவது முதலாவதைத் தோற்றுவிக்கிறது, முதலாவது இன்னும் அதிக இரண்டாவதைத் தோற்றுவிக்கிறது என முடிவில்லாமல் செல்லும் வழிவகையைக் குறிப்பிடுவது ஆகும். ஒரு பெரிய சாதகமான பின்னூட்ட அமைப்பு என்பது ஆர்க்டிக் பனி மெதுவாக குறைந்தநிலைக்கு வருவது ஆகும். பனி என்பது மிக அதிகம் பிரதிபலிக்கும பொருட்களில் ஒன்று என்பது அறியப்பட்டுள்ளதுடன், பூமியை அது மறைத்தலில் குறைப்பு ஏற்படுவது என்றால் அதன் பொருள் சுற்றுச்சூழல் சூரியனிடம் இருந்து அதிக ஒளியை ஏற்றுக் கொள்ளுகிறது, சுற்றுச்சூழலின் வெப்பநிலை அதிகரிக்கிறது என்பதுதான்.

உலக வானிலையில் முதல் மாற்றம், வானிலை ஆராய்ச்சியாளர்களால் முதலில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது என்பது, 1977இல் உலகம் வெப்பமயமாகும் வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டதுதான். 1950களில் இருந்து இருக்கும் சான்றுப் பதிவுகள் CO2அளவு 310 இருந்து 332ppm என்று ஆனாலும்கூட நிலப்பகுதி வெப்பநிலையில் மாற்றத்தைக் காட்டவில்லை. ஆனால் 1977ம் ஆண்டு சராசரி மேற்பகுதி வெப்பநிலை அதன் தற்போதைய விகிதமான நூற்றாண்டிற்கு 2º C என உயரத் தொடங்கிவிட்டது.

1982 மற்றும் 1997ல் உலக வரட்சிகள் ஏற்பட்டன. இவை பொதுவாக சுற்றுச்சூழல் ஊசல்களினால் ஏற்படுவதை விட நீடித்த காலம் இருந்தன. 1998, 2005, 2007ம் ஆண்டுகளில், வரண்ட, சூடான வெப்பநிலை அமேசன் மழைக்காடுகளை கிட்டத்தட்ட மிகப் பெரிய அளவில் எரிய வைக்கும் நிலையில் தள்ளியது. கடலின் மட்டம் ஏற்கனவே உயரத் தொடங்கிவிட்டன. பெருங்கடல்கள் சூடேறுவதால் இது ஏற்பட்டுள்ளது; ஏனெனில் அதனால் நீரின் விரிவாக்கம் ஏற்படுகிறது, அதைத்தவிர உறைந்த பனியின் கரைப்பும் உள்ளது.

பெருங்கடலின் அளவுகளில் உயர்வு என்பது சாண்டி சூறாவளியின்போது நியூயோர்க் நகரத்தினுள் நீர் வெள்ளமெனப்புகுந்ததற்கு நேரடி பங்களித்தது. லோயர் மன்ஹாட்டனில் பாட்டரி என்னும் இடத்தில் பதிவுசெய்யப்பட்ட கடல் அளவு கடந்த நூற்றாண்டில் 12 அங்குலங்கள் உயர்ந்தன. இது உயர்ந்த சூறாவளி என்று மாற்றப்படும்போது, 100 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட பெரும்புயலுக்கு ஒப்பாகிறது.

உள்ளூர் நிகழ்வுகளைத தவிர, உலகம் வெப்பமயம் ஆகுதல் தடுக்கப்படாமல் விட்டால், உலகப் பேரழிவு என்னும் உண்மையான பேரழிவு உள்ளது. இதற்கான உதாரணங்கள்: பெருங்கடலில் அமிலக் கரைப்பு என்பது பவள, அலைவாழ் உயிரினங்கள் ஏராளமாக இறந்துபோவதற்கு வகை செய்யும். அவைதான் புவியின் உணவுச் சங்கிலிக்கு அடிப்படை ஆகும். வெப்பப் பிரதேசத்தின் மழையளிக்கும் காடுகள் முற்றிலும் அழிந்துவிடும். கிரீன்லாந்து அல்லது அன்டார்க்டிகா அளவு இருக்கும் பனிப்பாறை பெருங்கடலில் விழும். இது கிட்டத்தட்ட உடனடியாக உலகம் முழுவதும் கடலின் அளவுகளை ஐந்துமீட்டர்கள் உயரத்திற்கு அதிகரிக்கும்.

இக்காட்சிகளில் ஏதேனும் ஒன்றுகூட இன்னும் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நிகழலாம். ஆனால் அத்தகைய பரந்த பிரச்சினைக்கான தீர்வுகள் விளைவைக் கொடுக்கவும் பல தசாப்தங்கள் ஆகும். அத்தகைய இலக்கை நோக்கிச் செயல்படுவதற்கு மாறாக, உலக முதலாளித்துவம் இந்த நெருக்கடி பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை. உண்மையில் நாடுகளும் பெருநிறுவனங்களும், கார்பன் வணிகத் திட்டங்கள் மூலம் உலகம் வெப்பமயமாதலில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டுகின்றன. நாடுகள் பனிக்கட்டிக் கரைப்பினால் திறக்கப்படும் புதிய ஆர்க்டிக் வணிகப் பாதைகளை பயன்படுத்த எதிர்பார்த்து நிற்கின்றன.

எதிர்கொள்ளும் சவால்களைக் கடப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்திறனை மனிதகுலம் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய சமூகப்-பொருளாதார முறையின் தடைகளினால் அது அவ்வாறு செய்ய இயலாது. சமூகம் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கூடாக செல்வதால்தான், அத்தகைய கடினமான விடயங்கள் தனியார் இலாபம் என்று இல்லாமல் சமூகத் தேவை என்று அணுகப்படும்போது உலகம் வெப்பமயமாவதால் எற்படும் பிரச்சினைகள் தீவிரமாக ஆராயப்படும்.