சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama and Castro at the OAS summit

OAS உச்சி மாநாட்டில் ஒபாமாவும் காஸ்ட்ரோவும்

Bill Van Auken
14 April 2015

Use this version to printSend feedback

பனாமாவில் கூட்டு-அமெரிக்க உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் மற்றும் அவரது சமதரப்பினரான கியூபாவின் ராவுல் காஸ்ட்ரோவுக்கும் இடையே நேருக்கு நேர் சந்திப்பு, ஏறத்தாழ உலகெங்கிலும் வெகுஜன ஊடகங்களில் "வரலாற்று" சம்பவமாக வர்ணிக்கப்பட்டது.

எவ்வாறிருந்த போதினும், அந்த வாரயிறுதி சம்பவம் மீது வெளியான திரளான ஊடக செய்திகளுக்கு இடையே, அங்கே அவ்விரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் உண்மையான முக்கியத்துவம் குறித்தும் சிறிது விவாதங்கள் இருந்தன. உண்மையில் அண்மித்த ஆறு தசாப்தங்களில் இதுபோன்ற முதல் நேருக்குநேரான சந்திப்பானது, அமெரிக்க ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலத்திற்குள் கியூபா திரும்புவதன் ஒரு பிரதான அடியைக் குறித்தது, இந்தவொரு நிகழ்வுபோக்கு காஸ்ட்ரோயிச ஆட்சியாலேயே முழுமையாக ஆமோதிக்கப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கிய கியூபா அரசாங்கத்தின் அடிபணிந்த மனோபாவம், அந்த உச்சிமாநாட்டில் ராவுல் காஸ்ட்ரோவின் உரையில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அவரது "அடக்கமான தொடக்கத்தால்" உண்டான மனோபாவங்களைக் கொண்டுள்ள ஒரு "நேர்மையான மனிதராக" ஒபாமாவை வர்ணித்து, ராவுல் காஸ்ட்ரோ மிகப்பணிவுடன் அந்த அமெரிக்க அரசு தலைவர் மீது பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். இந்த கருத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக அவர் அந்த விடயத்தை ஆழமாக பரிசீலித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரது 49 நிமிட உரையில் ஒபாமாவின் பெயரை அவர் பத்து முறை குறிப்பிட்டார்.

கியூபாவிற்கு எதிரான அமெரிக்ககாவின் ஆக்ரோஷமான தசாப்தங்களை மீளாய்வு செய்கையில், ஒபாமாவின் "மன்னிப்பை" யாசித்த காஸ்ட்ரோ, “இதில் எதற்கும் அவர் [ஒபாமா] பொறுப்பில்லை,” என்று அறிவித்தார்.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியைக் குறித்த அவரது லிங்கனிக் சித்தரிப்பைச் (Lincolnesque portrayal) செவியுறும் எவரொருவராலும், சட்டவிரோத போர்கள், டிரோன் ஏவுகணை படுகொலைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரிய உளவுபார்ப்பு வேலைகள், அத்துடன் ஹோண்டுராஸ் மற்றும் வெனிசூலாவிலிருந்து உக்ரேன் வரையில் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை நடத்துவதற்குரிய சூழ்ச்சிகள் என இவற்றை தலைமைதாங்கிய ஒரு மனிதரை காஸ்ட்ரோ வர்ணித்துக் கொண்டிருந்தார் என்பதை அனுமானிக்க முடியாது. ஒபாமா, அமெரிக்க இராணுவ-உளவுத்துறை பிணைப்பின் அசைக்க முடியாத ஊதுகுழலாக தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

கியூபா உடன் "இயல்பாக்குவதை" நோக்கிய அவரது திருப்பம் வாஷிங்டன் ஸ்தாபகத்தின் மேலோங்கிய பிரிவுகளது தீர்மானத்தைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நீண்டகால தடைகளை அகற்றுவதன் மூலமாக அப்பிராந்தியத்தில் அதன் நலன்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியுமென்றும், மற்றும் கியூபாவை அமெரிக்க அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு திரும்ப கொண்டு வரும் நிலைமைகளை உருவாக்க, அமெரிக்க மூலதனத்தால் அத்தீவு நாட்டிற்குள் ஊடுருவுவதை வாஷிங்டன் ஸ்தாபகம் கணக்கிடுகிறது.

ஒபாமாவுடன் அவரது சந்திப்பிற்கு கூடுதலாக, காஸ்ட்ரோ அமெரிக்க வர்த்தக சபையின் தலைவர் தோமஸ் டோனஹ் உடனும் பனாமாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். கியூபாவின் மக்களை மற்றும் ஆதாரவளங்களைச் சுரண்டும் நோக்கில், கியூபாவிற்குள் மீண்டும் நுழைவதற்கு உள்நோக்கம் கொண்ட அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கான ஒரு முன்னணி மத்தியஸ்த பிரதிநிதியாக டோனஹ் நீண்டகாலமாக இருந்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது பரந்த நலன்களின் வரையறைகளில் பார்த்தால், ஒரு காலத்தில் அதன் சொந்த "கொல்லைப்புறமாக" கூறப்பட்ட ஒரு மண்டலத்தின் ஏனைய நாடுகளுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் ஓர் இடர்பாடாக சேவை செய்துள்ள ஒரு கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் விருப்பத்தால், கியூபா உடனான சமரசம் பெரிதும் உந்தப்பட்டுள்ளது.

அப்பிராந்தியம் எங்கிலும் பிரதான வர்த்தக பங்காளியாக மற்றும் முதலீட்டாளராக சீனா அமெரிக்காவை ஓரங்கட்டிவரும் நிலைமைகளின் கீழ், இலத்தீன் அமெரிக்காவுடனான அமெரிக்க உறவுகள் ஆளும் வர்க்கத்திற்கு கவலைகளை அதிகரித்திருந்தன. பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசூலா மற்றும் பெருவில் ஏற்கனவே சீனா முதலிடத்தில் உள்ளது, அத்துடன் அடுத்த தசாப்தத்திற்குள் அப்பிராந்தியத்தில் கூடுதலாக 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் பெய்ஜிங் உறுதி அளித்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒப்பீட்டளவிலான பலத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியானது, இந்த கூட்டு-அமெரிக்க உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதும், வாஷிங்டனை மையமாக கொண்டதுமான அமெரிக்க மாநிலங்களது அமைப்பின் (Organization of American States) நலிந்துவரும் அரசியல் முக்கியத்துவத்தில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. கொலம்பியாவின் கார்டஜெனாவில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கடந்த உச்சி மாநாட்டிற்குப் பின்னர், வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான கொலம்பியா உட்பட பல்வேறு நாடுகள், அடுத்த அமர்வில் கியூபா கலந்து கொள்ளவில்லை என்றால் அவையும் கலந்து கொள்ளப் போவதில்லையென எச்சரித்திருந்தன.

பனாமா உச்சி மாநாட்டில் காஸ்ட்ரோவின் பிரசன்னமும் மற்றும் ஒபாமாவை அவர் அரவணைத்தமையும், அவரது சகோதரர் பிடலால் வெறும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் "இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கௌரவத்திற்கு அவமதிப்பை மட்டுமே செய்துள்ள" “ஒரு மோசடியான, மட்டரகமான, வெறுக்கத்தக்க அமைப்பாக" கண்டிக்கப்பட்ட ஒரு அமைப்பிற்கு மறுவாழ்வளித்துள்ளது.

கியூபாவிற்குள் இருக்கும் ஆளும் அடுக்குகளது தீர்க்கமான சடரீதியிலான நலன்களும் இந்த திருப்பத்திற்கு அடியிலுள்ளன. பேச்சுவார்த்தையில் ஒரு கூட்டாளியாக மற்றும் அன்னிய மூலதனத்திற்கான ஒரு மலிவு உழைப்பு ஒப்பந்ததாரராக அந்நாட்டை பேண முடியுமென்ற நம்பிக்கையில், அந்த அடுக்குகள் அதன் தனிச்சலுகைகள் மற்றும் அதிகாரத்தைத் தக்கவைக்க தீர்மானகரமாக உள்ளன.

ஏகாதிபத்தியத்துடன் கியூபா அரசாங்கத்தின் சமரசம் அந்த ஆட்சியின் இயல்பைக் குறித்தும் மற்றும் 1959 இல் அதை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த புரட்சியைக் குறித்தும் ஒரு பெரும் விடயத்தை எடுத்துரைக்கிறது. பல தசாப்தங்களாக, இலத்தீன் அமெரிக்க இடது தேசியவாதிகளும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள குட்டி-முதலாளித்துவ தீவிர கொள்கையினரும், பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான தேசியவாத புரட்சி கியூபாவில் தொழிலாளர்களின் அரசை உருவாக்கி விட்டதாக அறிவித்து, அதை சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதையாக தூக்கி பிடித்திருந்தனர்.

இத்தகைய தத்துவங்களில் மிகவும் அழிவுண்டாக்க கூடியது, 1950களில் நான்காம் அகிலத்துடன் உடைத்துக் கொண்ட ஒரு திரித்தல்வாத போக்கான பப்லோயிசத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டது. அது சோசலிச புரட்சிக்கு, ட்ரொட்ஸ்கிச கட்சி தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான மற்றும் நனவுபூர்வமான தலையீடு இனியும் அவசியமில்லையென வலியுறுத்தியது. தொழிலாளர்களை செயலூக்கமற்ற வெறும் பார்வையாளர்களினும் சற்று மேலதிகமான நிலைக்கு குறைத்துவிட்டு, அரசுக்கு எதிராக ஓர் ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தும் சிறிய கெரில்லா படைகள் உள்ளடங்கிய "முனைமழுங்கிய ஆயுதங்களின்" வழிவகைகளைக் கொண்டு அதை அடைய முடியுமென அவர்கள் பேணிவந்தனர்.

காஸ்ட்ரோயிசம் மற்றும் கெரில்லாயிசத்தின் ஊக்குவிப்பு இலத்தீன் அமெரிக்காவில் ஒரு பேரழிவுகரமான அரசியல் தாக்கத்தைக் கொண்டிருந்தது. அது தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர கட்சியை அபிவிருத்தி செய்வதற்குரிய போராட்டத்திலிருந்து இளைஞர்களின் புரட்சிகர பிரிவுகளைத் திசைதிருப்பவும் மற்றும் அரசுடன் ஆயுதமேந்திய தற்கொலை தாக்குதலுக்குள் அவர்களைத் திருப்பிவிடவும் சேவை செய்தது. அதுபோன்ற நம்பிக்கையற்ற நடவடிக்கைகளில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், அது ஒரு தொடர்ச்சியான மூர்க்கமான இராணுவ சர்வாதிகாரம் அதிகாரத்தை ஏற்பதற்கு பாதையைத் திறந்துவிட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த பிற்போக்குத்தனமான முன்னோக்கிற்கு எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்தியது. காஸ்ட்ரோ ஆட்சியின் தேசியமயமாக்கல்களும் மற்றும் சமூக சீர்திருத்தங்களும் அதையொரு தொழிலாளர்களது அரசாக ஆக்கியது அல்லது சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதைக்கு சமிக்ஞை காட்டியது என்ற வாதங்களை அது நிராகரித்தது. அதற்கு மாறாக, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் போது பல முன்னாள் காலனித்துவ நாடுகளில் அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் மிக தீவிரமயப்பட்ட உருவடிவங்களில் ஒன்றாக கியூபா ஆட்சியை அது எடுத்துக்காட்டியது.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் காலனித்துவத்தின் மரபாக இருந்த, கியூபாவின் வரலாற்று பிரச்சினைகளான பின்தங்கியநிலைமை மற்றும் சார்ந்திருக்கும் தன்மையைத் தீர்க்கவியலாமல், ஹவானா அரசாங்கம் சோவியத் மானியங்களை பெரிதும் சார்ந்திருந்தது. மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கரங்களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் அதுவும் வறண்டு போனது.

அதற்கடுத்து கியூபா ஆட்சி வெனிசூலாவிடமிருந்து கிடைத்த மலிவு எண்ணெய் வினியோகங்கள் மற்றும் ஐரோப்பா, சீனா, ரஷ்யா, கனடா மற்றும் பிரேசிலிடமிருந்து வந்த மூலதன முதலீடுகள் மூலமாக தன்னைத்தானே மிதக்க விட்டு கொண்டிருந்தது. இப்போதோ, அது இரட்சிப்பு கோரி அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் திரும்புவதன் மூலம், முழு வட்டத்திற்குள் வந்துள்ளது.

இந்த அரசியல் பரிணாமம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பாதுகாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு ஒரு சக்திவாய்ந்த நிரூபணமாகும். புரட்சியின் தலைமையைத் தொழிலாள வர்க்கம் கைப்பற்றி, அதன் சொந்த அரசை ஸ்தாபித்து, சர்வதேச அளவில் சோசலிச புரட்சியாக அதை விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ நாடுகளின் சுதந்திர போராட்டம் வெற்றி அடைய முடியுமென்பதை அது ஸ்தாபித்து காட்டியது.

இந்த முன்னோக்கையும் மற்றும் காஸ்ட்ரோயிசம் உடனான இந்த நீடித்த வரலாற்று அனுபவத்தின் கசப்பான படிப்பினைகளையும் உள்ளீர்த்துக் கொள்வது, இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் மற்றும் கியூபாவிலேயே கூட தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர கட்சிகளைக் கட்டியமைப்பதற்கு தீர்க்கமானவை ஆகும். அங்கே, கியூபாவில், அமெரிக்க முதலாளித்துவத்தை நோக்கிய திருப்பம் தவிர்க்கவியலாமல் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க போராட்டங்களைக் கூர்மைப்படுத்த மட்டுமே இட்டுச் செல்லும்.