சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

The pseudo-left and the Libyan catastrophe

போலி-இடதும், லிபிய பேரழிவும்

By Bill Van Auken
21 April 2015

Use this version to printSend feedback

மத்தியத்தரைக்கடலின் மனிதயின துன்பியலுக்கு அரசியல்ரீதியிலும் மற்றும் தார்மீகரீதியிலும் பொறுப்பாவதில் பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன், பிரான்சின் நிக்கோலா சார்க்கோசி மற்றும் இங்கிலாந்தின் டேவிட் கேமரூன் ஆகியோருக்கு கூடுதலாக, அங்கே ஏனையவர்களும் உள்ளனர்: லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ போரை ஒரு "மனிதாபிமான" மீட்பு நடவடிக்கையாக ஆதரித்தும், லிபிய சம்பவங்களை ஒரு "புரட்சி" என்றே கூட பிரகடனப்படுத்தி, ஏகாதிபத்திய தலையீட்டை ஊக்குவித்த தலைவர்களாக போலி-இடது புத்திஜீவிகள் மற்றும் குழுக்களின் ஒரு சர்வதேச சகோதரத்துவம் அங்கே உள்ளன.

இந்த சமூகஅரசியல் அடுக்கின் பிரதிநிதியாக உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல், பரந்தளவில் வாசிக்கப்படும் அவரது "Informed Comment வலைத் தளத்தை, ஏகாதிபத்திய போருக்கான ஒரு பகிரங்க பிரச்சார வாகனமாக மாற்றி இருந்தார்.

"இடதுக்கு ஒரு பகிரங்க கடிதம்" என்பதில் பேராசியர் கோல் மார்ச் 2011 இல் எழுதுகையில், அந்த சுதந்திர இயக்கத்தை நான் சிறிதும் தயக்கமின்றி ஊக்குவிக்கின்றேன், நசுக்கப்பட்டு வருவதிலிருந்து அவர்களை ஐ.நா. பாதுகாப்பு அவையின் [UNSC] அங்கீகரிக்கப்பட்ட தலையீடு காப்பாற்றி உள்ளதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

ஒரேநேரத்தில் நடந்து கொண்டே சுவிங்கம் மெல்வதற்கு, இடது தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்த" விரும்புவதாக நையாண்டியுடன் எழுதினார், அதன் மூலமாக, "ஒவ்வொரு சம்பவத்தின் அடிப்படையிலும்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ, அத்தகைய ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போர்களில் எதை அது ஆதரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில், அது ஏகாதிபத்தியத்துடன் நடைமுறைவாத ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை அர்த்தப்படுத்தினார்.

அவரது "சுதந்திர இயக்கம்", அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட கூறுபாடுகளின் தலைமையில் இருந்தது என்ற எந்தவொரு கருத்தையும், அந்நேரத்தில் அதற்கு போதிய ஆதாரங்கள் இருந்ததற்கு இடையிலும், அவற்றை அவர் நிராகரித்தார், அதற்குப் பிந்தைய இரத்தந்தோய்ந்த நிரூபணங்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை. அதேபோல ஒபாமா நிர்வாகம் எந்தவிதமான பூரண "மனிதாபிமான அக்கறைகளிலும்" நகரவில்லை என்ற எவ்வித கருத்தையும் அவர் தாக்கினார். லிபியா மற்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீது மேலாதிக்கத்தை பெறுவதும் மற்றும் அத்தகைய ஆதாரவளங்களை அதன் விரோதிகளுக்கு, குறிப்பாக சீனாவிற்கு, கிடைக்காமல் செய்வதுமே அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் நோக்கமாகும் என்ற குற்றச்சாட்டுக்கள், கோல் இனால் "இயல்புக்கு மீறிய வினோதமாக" வர்ணிக்கப்பட்டன.

அவரது விசுவாசிகளுக்கு சந்தேகத்திற்கே இடமளிக்காமல், கோல் பெரும் பெருமிதத்துடன் அறிவித்தார், நேட்டோவிற்கு அவசியமானால், நானே அங்கிருப்பேன், என்றார்.

லிபியா மீதான கோல் இன் கடைசி பிரதான கட்டுரை ஜூன் 2012 இல் எழுதப்பட்டது. அந்நாட்டில் ஒரு சில நாட்கள் இருந்த பின்னர், அவர் ஒரு பிரகாசமான கணக்கை வழங்கினார், லிபியா குறித்து ஒரு விதமான இழிவார்ந்த கட்டுக்கதை என்னவென்றால், அதுவொரு தோல்வியடைந்த அரசாக அலங்கோலமாக மாறிவிட்டது, அங்கே எங்கெங்கிலும் ஆயுதமேந்திய இராணுவ சிப்பாய்களே உள்ளனர், அங்கே ஒவ்வொருவரும் பிரிவினைவாதியாகி உள்ளனர், அங்கே இடைமருவு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை, அந்த துணை-சஹாரா ஆபிரிக்க மக்களின் பாரம்பரியம் வீதிகளில் சீரழிகிறது, இன்னும் இதுபோல பல, என்று ஏளனத்துடன் எழுதினார்.

அந்த "இழிவார்ந்த கட்டுக்கதையின்" ஒவ்வொரு கூறுபாடும் இப்போது மறுக்கமுடியாதவாறு வெளிப்படையாக உள்ளது, கோல் இன் மதிப்பீடு என்ன?

கோப்டிக் கிறிஸ்துவர்களை பாரியளவில் தலைதுண்டிக்கும் நடவடிக்கைக்கு விடையிறுப்பாக லிபியா மீது எகிப்திய குண்டுவீச்சு குறித்து கடந்த பெப்ரவரியில் கோல் ஒரு அவசரமான துணுக்கில் எழுதுகையில், ஓர் அதிகார வெற்றிடத்தின் காரணமாகவே" ISIS, "லிபியாவில் சிறியளவில் சில இடங்களை" வென்றுள்ளதாக எழுதினார். புதிய சட்ட வடிவங்களை ஸ்தாபிக்கும் நிகழ்வுபோக்கின் பாகமாக, 1789க்குப் பிந்தைய பிரான்சின் விவசாயிகள் கிளர்ச்சியைப் (Vendee) போன்று, புரட்சிகர அரசுகள் பெரும்பாலும் அரசியல் வன்முறைக்குள் வீழ்கின்றன, என்பதை மறுநம்பிக்கை அளிப்பதற்காக சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரச்சார தேவைகளுக்கு சேவை செய்ய, கோல் வெட்கமின்றி கல்வித்துறையில் அவருக்கிருக்கும் செல்வாக்கை விபச்சாரம் செய்து வருகிறார். அங்கே லிபியாவில் ஓர் "அதிகார வெற்றிடம்" இருக்கிறதென்றால், அது துல்லியமாக அங்கே லிபிய மக்களின் பற்றுறுதிக்கு கட்டளையிடுகின்ற எந்தவித "புரட்சிகர அரசும்" இல்லை என்பதனாலேயே ஆகும். மேலும் லிபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டுக்காக இஸ்லாமிஸ்டுகள் மற்றும் படைத் தளபதிகளின் தலைமையிலான தற்போதைய பலதரப்பு மோதலை, பிரெஞ்சு புரட்சிக்கு எதிராக கத்தோலிக்-மற்றும் முடியாட்சியாளர்களின்-தலைமையிலான விவசாய கிளர்ச்சி மீதான ஜாகோபின்களது ஒடுக்குமுறை உடன் ஒப்பிடுவது, ஒரு புத்திஜீவித கோணல்புத்தி நடவடிக்கையாகும்.

அமெரிக்க-நேட்டோ மனிதாபிமான போர் வாகனத்தில் ஏறுவதில், எவ்விதத்திலும் கோல் தனியாளாக இருக்கவில்லை. லிபியா மீதான போரின் ஒரு பற்றார்வ ஆதரவாளராக பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) இருந்தது. போர் அதன் இரத்தந்தோய்ந்த முடிவை நோக்கி இறங்கியபோது, NPA அறிவித்தது, இந்த "புரட்சிகர நிகழ்வுபோக்கின்" ஒரு விளைவாக, லிபிய மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை திறந்துள்ளது. மக்களின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் செல்வத்தைப் பயன்படுத்துவது, சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இப்போது இந்த நிகழ்ச்சிநிரலில் உள்ளன, என்று ஆர்ப்பரித்தது.

அதன் பிரகாசமான எதிர்நோக்குதல்கள் குறித்து NPA இப்போது என்ன கூறப் போகிறது? இடையறா வன்முறை, பொருளாதார பொறிவு மற்றும் சமூக சீரழிவின் ஓர் எதார்த்தமே, லிபியர்களுக்கு அது உறுதியளித்த "புதிய வாழ்க்கையாக" உள்ளது.

சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளா"? சித்திரவதை, முறையான விசாரணையின்றி மரணதண்டனைகள் மற்றும் எதேச்சதிகார சிறைக்காவல்களே மூர்க்கமாக மேலெழுந்துள்ளன. இயற்கை வளங்களைக் கொண்டு செல்வத்தை உருவாக்குவது" என்பதைப் பொறுத்த வரையில், அந்த பொருளாதாரம் கடந்த ஆண்டு 30 சதவீதம் சுருங்கியதுடன், சுதந்திரமான வீழ்ச்சியில் உள்ளது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 80 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ள எண்ணெய் உற்பத்தி, அமெரிக்க-நேட்டோ போருக்கு முன்னர் என்ன இருந்ததோ, அதில் ஐந்தில் ஒரு பங்கை விட குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒருகாலத்தில் அப்பிராந்தியத்தில் மிகவும் முன்னேறியதாக இருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள், சண்டையால் மூடப்பட்டுள்ளன. உணவு, எரிபொருள் மற்றும் மருந்து வினியோகங்களின் பற்றாக்குறைகளோடு, மின்சார வெட்டுக்களும் பொதுவானதாகி உள்ளன.

ஜேர்மனியில் இடது கட்சி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு, பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஏனைய பல இதேபோன்ற போலி-இடது குழுக்கள் அனைத்துமே, ஏகாதிபத்தியத்திற்கு அவற்றின் சேவையை வழங்கின. எண்ணெய் மற்றும் புவிசார் மூலோபாய நலன்களுக்கான ஒரு அப்பட்டமான தலையீட்டை, அவை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மற்றும் மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சிலுவைப்போராக ஜோடனை செய்ய உதவியதுடன், ஏகாதிபத்திய-ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களை" ஆதரித்தன.

மனிதாபிமான" ஏகாதிபத்தியத்திற்கு இந்த ஈர்ப்பாற்றல், லிபியாவின் குற்றகரமான போருடன் தொடங்கவும் இல்லை, அதனோடு முடிந்துவிடவும் இல்லை. ஏகாதிபத்தியத்திற்கான இந்த புதிய போலி-இடது வட்டாரம், 1999 இல் முன்னாள் யூகோஸ்லாவியா மீது நடத்தப்பட்ட "மனிதாபிமான" அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்கு அவற்றின் ஆதரவை வழங்கி அதன் அரங்கேற்றத்தைச் செய்தது. பெரும்பாலும் லிபிய விடயத்தைப் போலவே, அந்த தலையீடும் சேர்பியர்கள் கரங்களில் படுகொலை செய்யப்படுவதாக கருதப்பட்ட கொசோவோ அல்பானியர்களை காப்பாற்றும் சாக்குபோக்கின் மீது அரங்கேற்றப்பட்டது, பின்னர் அது விண்ணைத்தொடும் அளவிற்கு மரணங்களின் எண்ணிக்கையில் போய் முடிந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்ட "சுதந்திரத்திற்கான" இந்த "மனிதாபிமான" போரின் விளைவு என்னவாக இருந்துள்ளது? கொசோவா, 1.8 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு பிராந்தியம் கொசோவோ, வறுமை, திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழலால் நிரம்பி, பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும் மற்றும் சமூகரீதியிலும் இயங்கவியலாத நிலையில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 45 சதவீதமாகும்இளம் தொழிலாளர்களை பொறுத்த வரையில் அது 60 சதவீதமாகும்; பத்தாயிரக் கணக்கானவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மத்திய கிழக்கில், இன்னும் சொல்லப்போனால், சிரியாவில், இத்தகைய அரசியல் அமைப்புகள் அனைத்துமே, மிகவும் பிற்போக்குத்தனமான முடியரசு ஆட்சிகளுடன் சேர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒரு பினாமிப் போரை ஆதரிக்க அணிவகுத்து நின்றன. மீண்டுமொருமுறை, அவை ஓர் அருவருக்கத்தக்க ஏகாதிபத்திய போரை ஒரு "புரட்சியாக" அழைத்ததுடன், அசாத் ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரட்டப்பட்ட பிரதான ஆயுதமேந்திய சக்திகள் அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களை உள்ளடக்கியவை என்ற பெரும் ஆதாரங்களை உதறித்தள்ளின. லிபியாவைப் போலவே, ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவே அதன் விளைவாக இருந்துள்ளது.

ஏகாதிபத்திய தலையீட்டை "புரட்சியாக" வார்த்தளிப்பதற்கான போலி-இடதுகளின் முயற்சி, கியேவில் அமெரிக்காவினால்-முடுக்கிவிடப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியோடு அதன் உச்சநிலையைஅல்லது, இன்னும் துல்லியமாக கூறப்போனால், அதன் இழிவார்ந்த நிலையை எட்டியது. கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி இத்தகைய குழுக்களால், NPA இன் வார்த்தைகளில் கூறுவதானால், "ஜனநாயகத்திற்கான ஒரு பாரிய கிளர்ச்சியாக" ஆதரிக்கப்பட்டது. ஒரு ரஷ்ய பப்லோவாத அமைப்பு தலைவர், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னிலை வகித்த நவ-பாசிச குண்டர்களை, "அவ்வியக்கத்தின் மிகவும் போரிடும்தன்மை கொண்ட இராணுவ பிரிவாக" புகழும் அளவிற்கு சென்றார்.

ஒன்றுமாற்றி ஒன்றாக நாடுகளைச் சீரழித்துள்ள இத்தகைய பேரழிவுகரமான ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு இத்தகைய அமைப்புகள் அனைத்துமே தார்மீகரீதியிலும் அரசியல்ரீதியிலும் பொறுப்பாகின்றன. இரத்ததாகமெடுத்த மனித உரிமைகள்" ஆக்கிரமிப்பு போருக்கு பின்னால் அவர்கள் அணிதிரண்டமை ஏதோ தற்செயலானதல்ல, அவற்றை வெறுமனே அரசியல் முட்டாள்தனமாக காட்டி விட்டுவிடவும் முடியாது. அது, கல்வித்துறை மற்றும் ஊடகங்களில் உள்ள கூறுபாடுகள் உள்ளடங்கலாக, தனிச்சலுகை பெற்ற ஒரு மத்திய-மேற்தட்டு வர்க்க அடுக்கு ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்திருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, அவர்களது சமூக நலன்களே இத்தகைய குழுக்களின் அரசியலில் வெளிப்படுகின்றன.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்

[1 April 2011]