சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US imperialism and the catastrophe in Libya

அமெரிக்க ஏகாதிபத்தியமும், லிபிய பேரழிவும்

Joseph Kishore
17 February 2015

Use this version to printSend feedback

கிழக்கு லிபியாவின் சிர்ட்டே நகரில் பிடிக்கப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்துவ தொழிலாளர்களை படுபயங்கரமாக கழுத்தறுத்து கொன்ற ஒரு காணொளியை இந்த வாரயிறுதியில் இஸ்லாமிக் அரசு (ISIS) வெளியிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஜோர்டான் பிணைக்கைதிகளை கழுத்தறுத்து கொன்றமை மற்றும் எரித்துக் கொன்றமை உட்பட அதுபோன்ற தொடர்ச்சியான படுகொலைகளில் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை சமீபத்தியதாகும்.

இந்த சமீபத்திய ISIS அட்டூழியம், மேலதிகமான படுகொலைகளுடன் சேர்ந்து, அனுமானிக்க கூடியவாறே, அமெரிக்காவில் செய்தி அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களிடையே அதிர்ச்சி மற்றும் கோபத்தின் வெளிப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அந்த காணொளி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசி தலைமையிலான எகிப்து, ஏழு பொதுமக்கள் உட்பட 64 பேரைக் கொன்ற ஒரு வான்வழி தாக்குதல் அலையைத் தொடங்கியது.

இந்த அட்டூழியங்களுக்கு வாஷிங்டனும் அதன் அரசியல் கூட்டாளிகளுமே அரசியல்ரீதியிலும் தார்மீகரீதியிலும் பொறுப்பாகிறார்கள். லிபியாவில் இஸ்லாமியவாதிகளின் தலை துண்டிக்கும் நடவடிக்கை ஒரு முக்கிய குற்றத்தின் விளைபொருளாகும், அதாவது கேர்னல் மௌம்மர் கடாபி ஆட்சியை வெளியேற்ற லிபியாவில் நடத்தப்பட்ட 2011 நேட்டோ போரின் விளைவாகும்.

நேட்டோவின் அந்த தலையீட்டிற்கு முன்னதாக, அங்கே லிபியாவில் கிறிஸ்துவர்களின் மதவாத படுகொலைகள் எதுவும் இருந்திருக்கவில்லை, அதேபோல அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற இஸ்லாமியவாத போராளிகள் குழுக்கள் எல்லையோர மேலாளுமை எதுவுமின்றி சிறிய குழுக்களாக தான் இருந்தன. 2011இல் ஒபாமா நிர்வாகமும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தலைமையில் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கடாபியை பதவியிலிருந்து இறக்குவது என்று முடிவெடுத்த போதுதான், இந்த சக்திகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டன.

ஏகாதிபத்திய சக்திகள் இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களுக்கும் மற்றும் அல் கொய்தா செயல்பாட்டு குழுக்களுக்கும் பாரியளவிலான பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கின. பத்து ஆயிரக் கணக்கான லிபியர்கள் கொல்லப்பட்ட ஒரு பெரும் குண்டுவீச்சு நடவடிக்கைக்கு வான்வழி ஆதரவும் வழங்கின.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல: ஒரு 'புரட்சி' அல்லது 'விடுதலைக்கான' போராட்டம் என்பதற்கு மாறாக, எண்ணெய் வளம்மிக்க அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டைப் பெற, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் இன்னும் தலையீடுகளை மேற்கொள்வதற்காக அந்நாட்டின் பிரதேசங்களை ஒரு நவ-காலனித்துவ முகாமாக்க தீர்மானித்துள்ள ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கூட்டுக்குழு லிபியாவை சூறையாடுவதைத்தான் உலகம் பார்த்து வருகிறது.

லிபியா சூறையாடப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகள், இப்போது பார்வைக்கு முற்றிலும் மிகத் தெளிவாக உள்ளன.

சிர்ட்டே மீதான சரமாரியான குண்டுவீச்சில் மற்றும் கடாபி மீதான சித்திரவதை மற்றும் படுகொலையில் அந்த போர் அதன் உச்சத்தை அடைந்தது, அதன் பின்னர் அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் குரூர திருப்தியுடன், நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார், என்று கூறினார். அப்போதிருந்து லிபியா, பல்வேறு இஸ்லாமியவாத கன்னைகளுக்கும் அரசு அதிகாரத்திற்காக போட்டியிடும் எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கும் இடையே முன்பினும் கூடுதலாக இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போருக்குள் வீழ்ந்துள்ளது. ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரியாவினது ஆட்சிக்கு எதிராக சண்டையிட சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமியவாத சக்திகளை தயாரிப்பு செய்வதற்கு ஒரு பயிற்சி தளமாகவும் அந்நாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த போரிலிருந்து நான்குக்கும் குறைந்த ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் லிபியாவின் ISIS அட்டூழியங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல செய்தி வெளியிடுகின்றன. ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான (லிபியாவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வழிவகைகள் என்ன" என்ற) தலையங்கத்தை வாசிக்கும் எவருக்கும், இந்த பேரழிவை உருவாக்கியதில் வாஷிங்டன் வகித்த பாத்திரம் குறித்தோ, அல்லது அந்த நடவடிக்கையில் அமெரிக்க ஊடகங்கள் வகித்த பாத்திரம் குறித்தோ எந்த அறிகுறியும் கிடைக்காது. அந்த போரின் முக்கிய நபர்களில் ஒருவரும், போருக்குப் பின்னர் பென்காசியில் இஸ்லாமியவாதிகளின் வேட்டை ஒன்றில் கொல்லப்பட்டவருமான காலஞ்சென்ற லிபியாவிற்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸே கூட டைம்ஸின் பல இதழாளர்களின் நண்பராவார்.

இந்த எண்ணெய் வளம்மிக்க தேசம் முழுமையாக குழப்பங்களை நோக்கி [நகர்ந்து கொண்டிருக்கிறது], மேலும் "இஸ்லாமிய குழுக்களின் வளர்ச்சி மற்றும் தீவிரப்படுதலானது, லிபியாவின் பெரும்பாகங்கள் இஸ்லாமியவாத அரசின் ஒரு துணைப்பிரதேசமாக மாறிவிடுவதற்கான சாத்தியக்கூறை அதிகரிக்கின்றது" என்று டைம்ஸ் கவலை கொள்கிறது. லிபியா மீதான நேட்டோவின் ஆறு மாதகால குண்டுவீச்சுக்களைக் கூட குறிப்பிடாமல், கடாபியை பதவியிலிருந்து வெளியேற்ற இட்டுச் சென்ற மோதலை அது வெறுமனே ஓர் "உள்நாட்டு போராக" சித்தரிக்கிறது.

துல்லியமாக வாஷிங்டன் மிகவும் ஆக்ரோஷமாக தலையீடு செய்துள்ள அவ்விடத்தில் தான் இப்போது ISIS மிகவும் பலமாக உள்ளது. வாரயிறுதி வாக்கில் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட மற்றொரு கட்டுரை, இஸ்லாமிக் அரசு ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, எகிப்து மற்றும் லிபியாவில் அதன் இராணுவ இணை-அமைப்புகளை ஸ்தாபிப்பதற்காக, அதன் சிரியா மற்றும் ஈராக் அடித்தளத்தையும் கடந்து விரிவடைந்து வருவதாக" எச்சரிக்கிறது. அது குறிப்பிட்ட ஆறு நாடுகளில் நான்கில், அதாவது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா மீது அமெரிக்கா படையெடுத்துள்ளது அல்லது இஸ்லாமிய பினாமி போர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

உலகம் இப்போது வாஷிங்டனின் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் அடாவடித்தனம், காட்டுமிராண்டித்தனம், பேராசை மற்றும் எல்லையில்லா முட்டாள்தனத்தின் விளைவுகளைப் பார்த்து வருகிறது.

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, இவர் தான் லிபியா மீதான ஒரு நேட்டோ போரின் முதல் பாதுகாவலராக இருந்தார்; ஜனாதிபதி ஒபாமா, இவரது நிர்வாகம் தான் லிபியாவின் ஆயுத படைகள் மற்றும் அதன் பிரதான நகரங்களைச் சிதைக்க பாரியளவிலான வெடிகுண்டுகளை வழங்கியது; நேட்டோ கூட்டு அதிகாரங்கள், இவை அந்த மரணகதியிலான சாகசத்தில் இணைந்து கொண்டவை என்ற விதத்தில், லிபியாவில் பேரழிவிற்கான பொறுப்பு வெளிப்படையாக இவர்கள் மீது தான் விழுகிறது.

மத்திய கிழக்கில் இன்று என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, ஏகாதிபத்தியம், அதன் ஆளும் மேற்தட்டுக்கள், அதன் அரசியல் சேவகர்கள் மற்றும் அதற்காக பொய் பேசும் ஊடங்கள் மீதான ஒரு குற்றப்பத்திரிகை ஆகும்.