சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The election in Greece and the political tasks of the working class

கிரீஸ் தேர்தலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பணிகளும்

Peter Schwarz
24 January 2015

Use this version to printSend feedback

கிரீஸில் ஞாயிறன்று நடக்கின்ற நாடாளுமன்ற தேர்தல்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் ஐந்தாண்டு காலத்திற்குப் பின்னர், அந்நாடு பொருளாதாரரீதியிலும் மற்றும் சமூகரீதியிலும் தரைமட்டத்தில் உள்ளது. தீவிர இடதின் கூட்டணி" எனும் சிரிசா (Syriza) தேர்தலில் வென்று, அரசாங்கம் அமைக்கும் வாய்ப்புள்ளது என்றளவிற்கு பாரம்பரிய கட்சிகள் வெறுக்கப்பட்டுள்ளன. ஆனால் உழைக்கும் மக்களுக்கோ, சிரிசா அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்குரிய ஒரு பாதையைப் பிரதிநிதித்தும் செய்யாது; அதற்கு முரண்பட்ட விதத்தில், அது ஒரு பெரும் அபாயத்தையே பிரதிநிதித்துவப்படுத்தும்.

அதன் இடது சாரி முகத்தோரணையுடன், சிரிசா ஒரு முதலாளித்துவ கட்சியாகும், அது செல்வாக்கு மிகுந்த மத்தியதர வர்க்க அடுக்குகளைச் சார்ந்துள்ளது. சமூக ஒழுங்கைக் காப்பாற்றி வைப்பதன் மூலமாக அவர்களது தனிச்சலுகைகளை பாதுகாக்க முயலும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலர்கள் ஆகியோரால் அதன் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் கிரீஸில் கடுமையான சிக்கன நடவடிக்கையை (மிகச் சிறியளவில்) குறைப்பதாக வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கின்ற அதேவேளையில், வங்கிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சிரிசா அரசாங்கத்திற்காக "அஞ்ச வேண்டியதில்லை" என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கவும் அவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை.

சிரிசா வெளிப்படையாகவே கிரேக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச மூலதனத்தின் அடித்தளங்களை, அதாவது முதலாளித்துவ அரசின் பொலிஸ் மற்றும் இராணுவம், யூரோ, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகியவை உட்பட முதலாளித்துவ அரசை ஏற்றுக் கொள்கிறது. அது சமூக கிளர்ச்சியின் அச்சுறுத்தலில் இருந்து முதலாளித்துவத்தையும் மற்றும் அதன் அமைப்புகளையும் பாதுகாக்கும் ஒரு கட்சியாக தன்னைத்தானே அர்ப்பணிக்கிறது

சிரிசாவின் "சோசலிசம்", பணக்காரர்கள் அவர்களது வரிகளை இன்னும் இசைவாக செலுத்த வேண்டும் மற்றும் ஏழைகளுக்கு சில இரக்கத்துடன் கூடிய கையளிப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற ஒருசில கோரிக்கைகளுக்கு அப்பால் செல்வதில்லை. ஆனால் அக்கட்சி அரசாங்கத்துள் நுழைந்ததும் இத்தகைய வாக்குறுதிகளே கூட காப்பாற்றப்படாமல் போகும்.

அவர் மீதான நம்பகத்தன்மையை ஆளும் வர்க்கங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக சிப்ரஸ் வாஷிங்டன், பேர்லின், புருசெல்ஸ் மற்றும் ஏனைய எண்ணற்ற ஏகாதிபத்திய தலைநகரங்களுக்கு விஜயம் செய்துள்ளார். பைனான்சியல் டைம்ஸின் ஜனவரி 20ஆம் தேதி பதிப்பின் ஒரு கட்டுரையில், கிரீஸ் மீது திணிக்கப்பட்ட சமூக பேரழிவுக்கு பிரதான பொறுப்பைத் தாங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவரது நிபந்தனையற்ற ஆதரவை வழங்க சிப்ரஸ் மீண்டுமொருமுறை சூளுரைத்தார்

எனது கட்சி, சிரிசா, அரசியல் ஸ்திரப்பாடு மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கான ஒரு புதிய சமூக உடன்பாட்டிற்கு உத்தரவாதமளிக்கிறது, என்று அவர் அந்த சர்வதேச நிதியியல் பத்திரிகையின் வாசகர்களுக்கு உறுதியளித்தார். யூரோ மண்டலத்தைப் பலப்படுத்தவும் மற்றும் ஐரோப்பிய செயல்திட்டத்தை அக்கண்டம் முழுவதிலும் உள்ள குடிமக்களுக்கு ஈர்ப்புடையதாக செய்வதற்கும் இதுவொன்றே ஒரே வழியாகும். 

கிரேக்க கடனைத் திரும்பி செலுத்தவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிய தகுதி வகைகளுடன் இசைந்து கொடுக்கவும் அவர் தானே பகிரங்கமாக பொறுப்பேற்றுக் கொண்டார்: ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்ட கணக்கைப் பராமரிக்கவும் மற்றும் பணப்புழக்க இலக்குகளுக்குப் பொறுப்பேற்கவும், சிரிசா அரசாங்கம் ஒரு யூரோ மண்டல அங்கத்தவராக, கிரீஸின் கடமையை மதிக்கும்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில், ஐரோப்பிய ஆளும் மேற்தட்டுக்களின் கணிசமான அடுக்குகள் இப்போது சிப்ரஸை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு சாத்தியமான பாதுகாவலராக கருதுகின்றன. குட்டி முதலாளித்துவத்தின் போலி-இடது அமைப்புகள் முதலாக பலதரப்பட்ட ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் வங்கிகள் வரையில், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் பிரான்சில் உள்ள தீவிர வலது தேசிய முன்னணி (FN) வரையில் நீண்டு பரவிய ஒரு "ஐக்கிய முன்னணியால்" அவர் ஆதரிக்கப்படுகிறார்.  

பிரெஞ்சு நாளிதழ் Le Mondeஇல், FN தலைவர் மரீன் லு பென் கிரீஸில் வரவிருக்கும் தேர்தலில் "கடும்-இடது" சிரிசா கூட்டணி வென்றால் அவருக்கு மகிழ்ச்சியே என்று அறிவிக்கிறார்: அவர்களது மொத்த திட்டத்துடனும் நாங்கள் உடன்படவில்லை என்றாலும், அவர்களது வெற்றியை நாங்கள் வரவேற்போம், என்று எழுதுகிறார்.      

1938இல், ஐரோப்பா பாசிசத்திற்குள் மற்றும் போருக்குள் இறங்கிய போது, லியோன் டிரொட்ஸ்கி எழுதினார்: ஒருபுறம் 'மக்கள் முன்னணிகளும்', மறுபுறமும் பாசிசமும் என இவை பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்தியத்தின் கடைசி அரசியல் ஆதாரங்களாக உள்ளன.

முதலாளித்துவ வர்க்கத்திடம் தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யவும் மற்றும் வன்முறைரீதியில் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கவும் ஒரு இயங்குமுறையாக மக்கள் முன்னணி செல்வாக்கு மிகுந்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு சேவை செய்தன. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில், அது புரட்சிகளின் குரல் வளையை நெரித்ததுடன், பாசிசத்திற்கு பாதையைத் திறந்துவிட்டது

இன்றோ, ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் பெருந்திரளான செல்வாக்கின்றி முற்றிலுமாக மதிப்பிழந்து போயுள்ள போது, சிரிசா போன்ற குட்டி முதலாளித்துவ கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றன. சிப்ரஸினது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கேடுகெட்ட வேலையை ஏற்று செய்வதற்கு மட்டும் தயாராக இல்லை, மாறாக "யூரோ மண்டலத்தைப் பலப்படுத்துவதற்கான" மற்றும் "ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை பராமரிப்பதற்கான" அதன் வாக்குறுதியை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்முறைரீதியில் நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளது.

சிப்ரஸ் நிபந்தனையின்றி நேட்டோவை ஏற்றுக் கொள்கிறார். 1967-1974இன் இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து இன்னமும் அதன் கரங்களில் இரத்தகறையைக் கொண்டுள்ள பொலிஸ் மற்றும் கிரேக்க இராணுவத்துடன் அவரது நெருக்கமான தொடர்புகளை அவர் கட்டமைத்துள்ளார்.

இராணுவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு தயாராகும் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கு, இராணுவம் என்பது "சீருடையில் உள்ள மக்களே" ஆவர் என்று 1973இல், சிலியில் அலெண்டே அரசாங்கம் அறிவித்தது. அதன் விளைவு ஒரு இரத்தந்தோய்ந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பும் மற்றும் பினோசேயின் சர்வாதிகாரமுமாக இருந்தது, அதில் பத்து ஆயிரக் கணக்கானவர்களின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டது. சிப்ரஸ் அரசாங்கத்தின் கீழ் கிரேக்க தொழிலாள வர்க்கமும் அதேபோன்ற அபாயங்களை எதிர்கொள்கிறது.  

இடதுசாரி வார்த்தைஜால போர்வையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தும் ஒரு சிரிசா அரசாங்கமானது, கோல்டன் டௌன் (Golden Dawn) மற்றும் ஏனைய பாசிச அமைப்புகள் அரைத்த மாவையே அரைக்கும் என்பதுடன், அது ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளின் ஏமாற்றம் மற்றும் கோபத்தை ஒரு பிற்போக்குத்தனமான திசையில் திருப்பிவிட முயலும்.   

சிரிசாவிற்கு எவ்வித அரசியல் ஆதரவும் வழங்க வேண்டாமென உலக சோசலிச வலைத் தளம் கிரேக்க தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறது. இத்தேர்தலில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு கட்சியும் இல்லை.

சிரிசாவின் வேலைத்திட்டத்தில் ஏதோவொரு புள்ளியை விமர்சிக்கின்ற, ஆயினும் அதே கட்சிக்கு வாக்களிக்க அழைப்புவிடுக்கும், போலி-இடது குட்டி-முதலாளித்துவ அமைப்புகள் ஒரு குற்றகரமான பாத்திரம் வகித்து வருகின்றன. அவை தொழிலாளர்களை நிராயுதபாணி ஆக்குவதுடன், அதிகரித்துவரும் அபாயத்திற்கான பொறுப்பிலும் பங்கு வகிக்கின்றன.

பெருந்திரளான மக்களின் இடதுசாரி திருப்பத்தை சிரிசா பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டும், தொழிலாள வர்க்கத்தால் அதனை முற்போக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தமளிக்க முடியுமென்று வாதிட்டும் அவை பிரமைகளை வளர்க்கின்றன. பின்னர் அவையே உருவாக்கிவிட்ட அதுபோன்ற பிரமைகளைக் கொண்டு தான் வெகுஜனங்களிடையே ஒருவர் செல்ல முடியும் என்றும், சிரிசாவிற்கு ஆதரவைப் பெற முடியுமென்று அவை வாதிடுகின்றன. அதுபோன்றவொரு சந்தர்ப்பவாத மற்றும் துரோகத்தனமான கொள்கையின் எதிர்ப்பாளர்கள், "குறுங்குழுவாதிகளாக" குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்.  

இங்கே பணயத்தில் இருப்பது தந்திரோபாயமல்ல, மாறாக கோட்பாட்டுரீதியிலான பிரச்சினைகள் ஆகும். சிரிசா, மூலதனத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்திற்கு விட்டுக்கொடுப்புகளைக் கொண்டு எதிர்வினையாற்றாது, மாறாக முதலாளித்துவ-சார்பு அமைப்புகள் நெருக்கடி காலகட்டங்களில் எப்போதும் செய்திருப்பதைப்போல மூர்க்கமான தாக்குதல்களைக் கொண்டு எதிர்வினையாற்றும்.  

கிரீஸில் நிலவும் முன்னேறிய சமூக மற்றும் அரசியல் நெருக்கடி அத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான முன்னோக்கின்மை ஆகிய இந்த நிலைமையானது, கிரீஸிலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியமைப்பதன் அவசரத்தை அடிக்கோடிடுகிறது.

அனைத்துலக குழு மட்டுமே ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுகின்ற ஒரே அரசியல் கட்சியாக உள்ளது. தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நாம் நிராகரிப்பதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்தையும் நாம் நிராகரிக்கிறோம்.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைக் கையகப்பபடுத்திய, இரகசிய சேவைகள் மற்றும் இராணுவத்தைக் கலைத்துவிட்ட, மற்றும் உற்பத்தியை முதலாளிமார்களின் இலாப நலன்களுக்காக அல்லாமல், சமூக தேவைக்காக ஒழுங்கமைக்கும் தொழிலாளர்களது அரசாங்கங்கள் உள்ள ஒரு ஐரோப்பாவாக திகழும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதே நமது இலட்சியமாகும்.