சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Paris terrorists operated “in plain sight”

பாரிஸ் பயங்கரவாதிகள்வெளிப்படையாகசெயல்பட்டிருந்தனர்

Patrick Martin
21 November 2015

Use this version to printSend feedback

பாரிஸில் 130 பேரைப் படுகொலை செய்த தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட இஸ்லாமியவாதிகளில் அநேகம் பேரும், அத்துடன் இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்திருந்த பிரபல மனிதரும், நவம்பர் 13க்கு வெகு முன்பே பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய பாதுகாப்பு முகமைகளால் அறியப்பட்டவர்களாக இருந்தனர் என்பதை கடந்த பல நாட்களாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் ஏராளமான செய்திகள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆயினும் இந்த கொலை வெறியாட்டத்தை கட்டுப்படுத்த எந்த உளவுத்துறை அல்லது போலிஸ் முகமையும் நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

ுறிப்பிடத்தக்கதாக, இந்த விபரங்கள் உளவுத்துறை முகமைகளுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருக்கக் கூடிய நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சிஎன்என் போன்ற அமெரிக்க ஊடக வெளியீடுகளில் இருந்தும் அத்துடன் உத்தியோகபூர்வமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய செய்தித்தாளான Haaretz ஆகியவற்றிலும் வெளியாகி இருக்கின்றன

ியூயோர்க் டைம்ஸ் தொடர்ந்துவந்த ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது, “பாரிஸ் தாக்குதல்களை நடத்திய மனிதர்களில் பலரும் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் உளவுத்துறை அதிகாரிகளது நோட்ட வலயத்திற்குள் இருந்து வந்தவர்களாவர். தாக்குதல்தாரர்களில் பலரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அறியப்பட்டதொரு வசிப்பிடப் பகுதியில் பிரதான காவல் நிலையத்தில் இருந்து நூறு அடிகள் தூரத்தில் தான் வாழ்ந்திருந்தனர்.”

ாஷிங்டன் போஸ்ட் சூழ்நிலையை இங்ஙனம் சுருங்க விவரித்தது: “சென்ற வாரத்தில் பாரிஸில் நடந்த இரத்தம்பாய்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னிருப்பதாக நம்பப்படுகின்ற மனிதர்களில் சிலருடன் பெல்ஜிய அதிகாரிகள் நெருக்கமான தொடர்பில் இருந்தனர், சந்தேகத்துரியவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கரங்களில் இருந்து நழுவியது எப்படி என்பதான சந்தேகங்களை எழுப்புவதாக இது இருக்கிறது.” 

லிநோய் செனட்டரான டிக் டர்பின் - செனட்டில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாம் நிலைப் பொறுப்பில் இருப்பவர் - பாரிஸ் தாக்குதல்தாரர்களில் பலரும் பறக்கத் தடை கொண்ட பட்டியலில் இருந்ததாகக் கூறி, அவர்கள் அமெரிக்க உளவுத் துறைக்கும் கூட நன்கறியப்பட்டவர்களாக இருந்ததை சுட்டிக்காட்டினார்.

வம்பர் 13 தாக்குதல்களின் சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே அமெரிக்கா, துருக்கி மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பிரான்ஸை முன்கூட்டியே எச்சரித்திருந்தாக அநேக செய்திகள் குறிப்பிடுகின்றன. துருக்கி உண்மையில் தாக்குதலில் பங்குபெற்ற ஒருவரின் பெயரையும் கூட வழங்கியிருந்தது, இஸ்மாயில் ஓமர் முஸ்ரேஃபா என்ற அவர் பிரெஞ்சு அதிகாரிகளால் 2010 முதல் அறியப்பட்டிருந்தவராவார். பாதுகாப்பிற்கு கவலை தருபவராக ஒருவரை அடையாளப்படுத்தும் “fiche S” ோலிஸ் ஆவணத்தைக் கொண்டவராக முஸ்ரேஃபா இருந்தநிலையிலும், அவர் 2013 இல் சிரியாவுக்குப் பயணம் செய்ய முடிந்திருந்ததோடு அடுத்த ஆண்டு பிரான்சுக்கும் திரும்பி விட்டார். தற்கொலை செய்யும் முன்பாக பட்டாகிளான் திரையரங்கில் சுமார் 100 பேரைப் படுகொலை செய்த துப்பாக்கிதாரிகளில் இவரும் ஒருவராவார்

ட்டாகிளானின் இன்னொரு துப்பாக்கிதாரியான, சமி அமிமோர், 2012 அக்டோபரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுகளில் பிரெஞ்சு போலிசால் சிறையிலடைக்கப்பட்டிருந்தவர் ஆவார். டைம்ஸ் எழுதுகிறது: “சண்டையில் பங்கெடுக்க யெமனுக்கு செல்வதற்கு அவர் திட்டமிடுவதான சந்தேகத்தில், அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர், அதாவது பயணம் செய்வதில் இருந்து அவர் தடை செய்யப்பட்டிருந்ததோடு சீரான இடைவெளியில் அதிகாரிகள் முன்பு ஆஜராகித் திரும்பவும் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். அப்படியிருந்தும், ஒரு வருடத்திற்கு பின்னர் திருவாளர். அமிமோர் யாரும் கண்டுபிடிக்கா வண்ணம் சிரியாவுக்கு எப்படியோ சென்று விட முடிந்தது.”

மிமோர் மாதந்தோறும் தனது குடும்பத்தாரிடம் ஸ்கைப் மூலமாகப் பேசிவந்தார் எனவும், அவருடன் பேசி அவரை வீடு திரும்பச் செய்யும் முயற்சியில் அவரது தந்தை சிரியாவுக்குப் பயணம் செய்திருந்தார் என்றும் பிரெஞ்சு தினசரியான Le Monde சென்ற டிசம்பரில் செய்தி வெளியிட்டிருந்தது. அவரது தந்தை நாடுதிரும்பிய சமயத்தில் காவல்துறை அவரிடம் நேர்முகம் செய்யவில்லை, அத்துடன் இந்த ஆண்டு எந்தத் தொந்தரவும் இன்றி அமிமோரும் பாரிஸுக்குத் திரும்பியிருந்தார்.

Stade de France ல் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்த பிலால் ஹாத்ஃபி, புரூசெல்ஸ் பள்ளி ஒன்றில் சார்லி ஹெப்டோ படுகொலையை ஆதரித்து அவர் கருத்து கூறியதை அவரது வகுப்பாசிரியர் புகார் செய்ததையடுத்து பெல்ஜிய அதிகாரிகளால் அறியப்பட்டிருந்தார். அதன் பின் அவர் சிரியா சென்றார் என்றும், அங்கிருந்து அவர் ட்விட்டரில் மேற்கத்திய-ஆதரவு சக்திகளைதுரோகிகள்என்று கண்டனம் செய்ததோடு சிரியாவில் தலையீடு செய்யும் நாடுகள்இனியும் பாதுகாப்பானதாக உணரக் கூடாது, அவற்றின் கனவிலும் கூடஎன்று எச்சரித்திருந்தார் என்றும் நீதி அமைச்சக பெண் செய்தித்தொடர்பாளர் Post க்கு கூறியிருந்தார்.

ாத்ஃபி சிரியா சென்று திரும்பியிருந்தார் என்பது எங்களுக்குத் தெரியும்என பெல்ஜியம் போலிசின் பெண்செய்தித் தொடர்பாளர் ஒருவர் Post இடம் கூறியிருந்தார். பெல்ஜியத்திற்கு அவர் திரும்பியபின், “இரண்டு வாரங்களுக்கு, மூலன்பேக் (Molenbeek) ல் அவர் தங்கியிருந்த வீட்டின் தொலைபேசி இணைப்பை உளவுத் துறையினர் ஒட்டுக்கேட்டனர்என்று அந்த செய்தித்தாள் தெரிவித்தது. சிரியாவில் சண்டையில் பங்குபெற்றிருந்த ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியாக ஹாத்ஃபி நன்கு அறியப்பட்டவராய் இருந்தார், காவல் ஆலோசனைக் குழு ஒன்றும் பெல்ஜியத்தின் பத்திரிகையாளர் ஒருவரும் பராமரித்து வந்த பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. நவம்பரில் அவர் பாரிஸுக்கு பயணம் சென்று தாக்குதல்களில் பங்குபெற முடிந்தது.

ப்ராஹிம் அப்தெஸ்லாம் பாரிஸ் கஃபேயில் தாக்குதல் நடத்திய தற்கொலைத் தாக்குதல்தாரர்களில் ஒருவர். இவரும் ஒரு பெல்ஜியரே, 2015 பிப்ரவரியில் சிரியாவை சென்றுசேர முயற்சி செய்ததாக அறியப்பட்டவர், ஆயினும் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாய் கூறப்பட்டது. பெல்ஜியத்தில் இருக்கும் ஒரு தலைமையான ISIS நபரான அப்தெல்ஹமீத் அபாவூத்தின் நீண்டநாள் கூட்டாளியாக அவர் போலிசால் அறியப்பட்டிருந்தார். தாக்குதல்தாரர்களில் உயிரோடு இருக்கும் ஒரேயொருவராக நம்பப்படும் அவரது தம்பி 26 வயது சலாஹ், நவம்பர் 13-14 இரவன்று பாரிஸில் இருந்து பெல்ஜியத்திற்கு காரோட்டித் திரும்பிச் செல்கையில் மூன்று இடங்களில் பிரெஞ்சு போலிசால் நிறுத்தப்பட்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

டுத்து, தாக்குதல்களின் பிரதான ஒருங்கிணைப்பாளராகக் கூறப்படும் அபாவூத் விவகாரம். இவர் நவம்பர் 19 அன்று அதிகாலையில் இன்னமும் அடையாளம் காணப்படாத ஒரு ஆணுடனும் மற்றும் இவரது உறவுக்கார பெண் ஒருவருடனும் சேர்த்து பிரெஞ்சு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ISIS இன் நன்கறியப்பட்ட பொதுத்தொடர்பு குரலாக இருந்த அபாவூத், அதன் இணையப் பத்திரிகையான டபிக்கில் (Dabiq) அபு உமர் அல்-பல்ஜிகி என்ற பெயரில் பிப்ரவரியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார்.   

ாய்ஸ் ஆஃப் அமெரிக்கா விவரிப்பதன் படி, அந்த நேர்காணலில் அபாவூத், “பெல்ஜியத்தில் கண்களுக்கு முன்னால் இயங்கியபோதும் ஒருபோதும் பிடிபடாமல் இருக்க முடிந்திருந்ததைக் குறித்து பெருமையடித்துக் கொண்டார்”. அவர் கூறியிருந்தார், “எனது பெயரும் படமும் செய்திகள் முழுக்க இடம்பிடித்திருந்தன, ஆனாலும் கூட அவர்களது இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டே, அவர்களுக்கு எதிராகத் திட்டங்களைத் தீட்டி, அவசியப்படும்போது பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்னால் முடிந்திருந்தது.” ஒரு சமயம், போலிஸ் அவரை நிறுத்தியது, ஆனால் அவரை அடையாளம் காண முடியாத காரணத்தால், அவரை செல்ல விட்டிருந்தது. இத்தனைக்கும், ISISக்கு பெல்ஜிய இளைஞர்களை ஆளெடுத்ததற்காக, அவரின் ஆஜரில்லாமலேயே, பெல்ஜிய நீதிமன்றம்  ஒன்று அவருக்கு 20 வருடம் சிறைத் தண்டனை அளிக்குமளவிற்கு படுபயங்கரமான மனிதராக அவர் இருந்திருந்தார்.

கண்ணுக்கு முன்னால் இருந்தும் புலப்படாமல் இருக்க முடிந்ததற்கு ஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கத்தில் தெய்வாதீனத் தலையீடு இருந்ததை அபாவூத் காரணமாய் கூறினாலும், அதற்கு அதனினும் எளிமையான ஒரு விளக்கமும் இருக்கிறது. அபாவூத் ISIS இல் செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருந்த பெரும்பகுதி சமயத்தில், அந்தக் குழு அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளது ஆதரவுடன் சிரியாவில் நடத்தப்பட்ட ஆசாத்-எதிர்ப்பு பிரச்சாரத்தின் பகுதியாக இயங்கிக் கொண்டிருந்தது.

2014 ூன் வரை, அதாவது ISIS தீவிரவாதிகள் எல்லைகடந்து ஈராக்கிற்குள் சென்று மோசூல் நகரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க-ஆதரவு ஆட்சிக்கு அச்சுறுத்தலாகும் வரை, அந்தக் குழுவின் நடவடிக்கைகள் சகித்துக் கொள்ளப்பட்டன, ஊக்கமும் கூட அளிக்கப்பட்டன. மொசூலுக்குப் பின்னரும் கூட, ISIS, குறைந்தபட்சம் சிரியாவிலேனும், ஏகாதிபத்தியத்தின் ஒரு வளமான சொத்தாகவே கருதப்பட்டிருந்தது என்பதை சூசகம் செய்வதைப் போல, அமெரிக்க ஆதரவுகூட்டணிமிகக் கவனத்திற்குரிய வகையில் சீரற்ற குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை நடத்தியது.  

ந்த நிகழ்வடிவம் 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரத்திலும் வாஷிங்டன் டிசி மீதுமான பயங்கரவாதத் தாக்குதல் வரை பின்சென்று ஒப்பிடத்தக்கதாகும்: அல் கெய்தா, ISIS மற்றும் இவற்றின் ஏராளமான வழித்தோன்றல்கள் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதக் குழுக்கள் தங்களது தோற்றுவாய்களை ஏகாதிபத்திய உளவு முகமைகளின், குறிப்பாக அமெரிக்காவினது உளவு முகமைகளின் இரகசிய வேலைகளில் கொண்டிருக்கின்றன.  

1980ளில் ஆப்கானிஸ்தானில் சோவியத்-ஆதரவு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா நடத்திய தலையீட்டில் பங்குபெற்றிருந்த அரபுப் படைகளில் இருந்தே அல் கெய்தா எழுந்திருந்தது. ஈராக் போர் ISIS இன் முன்னோடி அமைப்பை உருவாக்கியது, சிரியாவிலான அமெரிக்க-ஆதரவு ஆட்சிமாற்றப் பிரச்சாரம் தான் இந்த குழுவினை ஈராக்-சிரியா எல்லையின் இருபக்கங்களிலும் பிராந்தியத்தை கைப்பிடியில் கொண்ட ஒரு சக்திவாய்ந்த படையாக மாற்றியது.  

ன்னுமொரு நிகழ்வடிவமும் இருக்கிறது: ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டு ஆயுதமளிக்கப்படும் குழுக்கள் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள், தேசிய பாதுகாப்பு அரசின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு போலிச்சாக்காக ஆகியிருக்கின்றது. பாரிஸ் தாக்குதல்களை அடுத்து, ஏகாதிபத்திய சக்திகளது உளவு அமைப்புகள், அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் சிஐஏ, NSA மற்றும் FBI இந்த அட்டூழியத்தில் இருந்து ஆதாயம் பெறுவதற்கான ஒரு தீவிரப் பிரச்சாரத்தை தொடக்கியிருக்கின்றன.

மீபத்திய பயங்கரவாத சம்பவங்களுக்கு எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளிக்கொணரல்கள் மீதும், ஸ்மார்ட்போன் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனத் தயாரிப்பாளர்கள் வழங்குகின்ற உடன்பொதிந்த மறைகுறியீட்டுச் சேவையின் மீதும், மற்றும் அரசு வேவு பார்ப்பதற்கு கைநிறைய இருக்கும் சட்டபூர்வக் கட்டுப்பாடுகளின் மீதும் பழிபோடுகின்ற வரிசையான உரைகளை தலைமையான அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நிகழ்த்தியிருக்கின்றனர்.

பாரிஸில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தால் ந்த வாதங்களின் மோசடியான தன்மை விளங்கப்படும். தாக்குதல்தாரர்கள் பயன்படுத்திய செல்போன்களில் ஒன்றை பிரெஞ்சு போலிஸ் கைப்பற்றியது, அதில் மறைகுறியீடாக்கப்படாத குறுஞ் செய்திகளும், அபாவூத் மற்றும் இந்தத் தாக்குதல்களில் உதவிய வலைப்பின்னலின் பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் மற்றவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிய வழிவகுத்த GPS தகவல்களும் காணப்பட்டன. தாக்குதல்தாரர்களில் எவரும் மறைகுறியீடாக்கப்பட்ட தகவல்தொடர்பைப் பயன்படுத்தியதற்கோ, அல்லது அவர்களது நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டப்பட்டிருந்ததை கொண்டுபார்த்தால், அவர்களுக்கு அது அவசியமாக இருந்தது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.    

துவரை கிடைத்திருக்கக் கூடிய மிகக்குறைந்த விபரங்களைக் கொண்டு, நவம்பர் 13, 2015 அன்று பாரிஸில் நடந்த சம்பவங்களுக்கே ஒரு முழுமையான மற்றும் திட்டவட்டமான கணக்கைக் கூற சாத்தியமில்லாததாய் இருக்கும்போது, உளவுத் துறையின் நடவடிக்கைகள் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்துடன் சந்தித்துக் கொள்கின்ற ஒரு நிழல் உலகத்திலான அதன் தோற்றுவாய்கள் குறித்துச் சொல்லவும் தேவையில்லை.

ஆயினும் தப்பமுடியாத இரண்டு முடிவுகள் என்னவென்றால்: (1) இந்த அல்லது அந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து, அரசுக்கும் உளவுத்துறை முகமைகளுக்கும் பின்னால் பொதுக்கருத்தை அணிவகுக்கச் செய்யும் நோக்கத்துடனான, உத்தியோகபூர்வ பிரச்சாரங்கள் பாதி-உண்மைகளையும் மற்றும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. (2) ஏகாதிபத்திய அரசாங்கங்கள் - எண்ணெய்க்காகவும் புவியரசியல் அனுகூலத்திற்காகவும் மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் இவை நடத்திய மிருகத்தனமான போர்களே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேலெழுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றன, அந்த அமைப்புகளுடன் இவை இணைந்து வேலைசெய்திருந்தன - வெளிநாட்டில் இராணுவப் பெருக்கத்தை அதிகரிப்பதற்கும் தாயகத்தில் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கும் நீண்டகாலமாய் கொண்டிருக்கின்ற திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒரு போலிச்சாக்காக ஒரு பயங்கரவாத அட்டூழியத்தை மீண்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.