ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ටෙලිකොම් මෑන් පවර් කම්කරු අරගලයට විරුද්ධව වාරන නියෝගයක්

இலங்கை: டெலிகொம் மனித வள தொழிலாளர் போராட்டத்திற்கு எதிராக தடை உத்தரவு

By our correspondents 
23 December 2015

இலங்கை டெலிகொம் நிறுவனத்துடன் இணைத்து தமது தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி டெலிகொம் மனித வள (Man Power) தொழிலாளர்கள் டிசம்பர் 26 முதல் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழைம தடை ஒத்தரவு ஒன்றப் பிறப்பித்தது. தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஹியுமன் கபிடல் சொலுஷன் பிரைவட் லிமிடட் (Sri Lanka Telicom Human Capital Solution Private Limited) நிறுவனமே இந்த நீதிமன்றத் தடையைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பெப்பிரவரி மூன்றாம் திகதி வரை தொடரும்.

மனுவைத் தாக்கல் செய்த நிறுவனம், வேலை நிறுத்தம் செயவதன் மூலம் தொழிலாளர்களால் ஒப்பந்த உடன்படிக்கை மீறப்பட்டுள்ளது என்ற முடிவை நீதிமன்றத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

இது நிச்சயமாக, நிறுவனம் தொழிலாளர்களின் போராட்டத்தை குழப்புவதற்காக செய்யும் முயற்சியாகும். தொழிலாளர்கள் கூறியதன் படி, அகில இலங்கை தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கம் (அ.இ.தொ.தொ.சே.ச.) மற்றும் டெலிகொம் நிர்வாகிகளுக்கும் இடையில் வெள்ளியன்று நடந்த பேச்சுவார்த்தையில், மனித வள தொழிலாளர்களை டெலிகொம் நிறுவனத்துடன் இணைப்பதற்கு நிர்வாகிகள் உடன்பட்டுள்ளதோடு செவ்வாய்கிழமை (25) நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதன் பின்னரே, வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுவனத்தால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறியதாக மனுதாரரான நிறுவனம் நீதிமன்றத்திடம் அறிக்கை ஒன்றை பெறுவதில் வெற்றி கண்டால், நீதிமன்ற முடிவுக்கு கீழ்படுத்தி அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும். அதனால் இந்த உத்தரவானது நிறுவனம், டெலிகொம் நிர்வாகம் மற்றும் அரசாங்கமும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியாகும்.


Man Power தொழிலாளர்கள் போராட்டத்தில்

வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் 1,000 பேருக்கும் மேல் பங்குபற்றினர். தமது தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி அவர்கள் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே மாதமும் அவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, அனைவரும் டெலிகொம் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படுவர் என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன வாக்குறுதி கொடுத்திருந்தார். அப்போது இந்த தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக இருந்த தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அனைத்து ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், செனவிரத்னவின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளினர். எனினும் 121 தொழிலாளர்களே இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அவசியமான தகமைகள் பூரணப்படுத்தப்படாமை மற்றும் வயது மூப்பு ஆகிய பல்வேறு போலி காரணங்களைக் காட்டி எஞ்சிய தொழிலாளர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்கு அர்சாங்கமும் டெலிகொம் நிறுவனமும் தட்டிக்கழித்து வருகின்ற நிலையிலேயே, தொழிலாளர்களை மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு அவர்கள் இப்போது ஒழுங்கமைந்துள்ள அ.இ.தொ.தொ.சே.ச. நிர்ப்பந்திக்கப்பட்டது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை 16ம் திகதி சந்திக்க வந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சரவையுடன் பேசி தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் “ஆட்கள்” இன்னமும் டெலிகொம் நிறுவனத்தில் இருப்பதாகவும், மனித வள ஊழியர்களை நிரந்தரமாக்காமல் அவர்களே வேலையை குழப்புகின்றனர் என்றும் அங்கு கூறிய அமைச்சர் சேனாரட்ன,  “ஜனாதிபதியுடன் சேர்ந்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக” வாக்குறுதியளித்தார். டெலிகொம் மனித வள தொழிலாளர்கள் சேனாரட்னவின் மற்றும் அரசாங்கத்தின் பழைய வாக்குறுதிகளை நினைவில் கொள்வது பொருத்தமானதாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மனித வள தொழிலாளர்களின் தொழிலை நிரந்தரமாக்குவதாக சேனாரட்ன 2014 டிசம்பரில் வாக்குறுதியளித்தார். அரச நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து மனித வள ஊழியர்களையும் நிரந்தரமாக்குவதறாக 2015 வரவு செலவுத் திட்த்திலும் அரசாங்கம் வாக்குறியிளத்தது.

ஸ்ரீலங்கா ஹியுமன் சொலூஷன் நிறுவனம், அரச மற்றும் தனியார் இணைப்பு நிறுவனமான டெலிகொம் பி.எல்.சீ. நிறுவனத்துடன் பிணைந்த நிறுவனமாகும்.  இது குறைந்த சம்பளம் மற்றும் குறைந்த வசதியுடன் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் வழங்குவதன் மூலம், தொழிலாளர்களி உழைப்பை சுரண்டி இலாபம் பெறும் ஒரு தனியார் நிறுவனமாகும். அதன் நிர்வாகிகளாக டெலிகொம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவினரே செயற்படுகின்றனர் என தொழிலாளர்கள் கூறினர்.

ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமைர்த்திக்கொள்வது உலகம் பூராவும் நடைமுறைப்படுத்தப்படும் ஹயர் என்ட் ஃபயர் (வாடகைக்கு அமர்த்தி வெளியேற்று) முறையுடன் சம்பந்தப்பட்டதாகும். அது தொழிலாளர் வர்க்கத்தின் கடுமையான போராட்டங்களின் ஊடாக கடந்த நூற்றாண்டில் வெற்றிகொண்ட அனைத்து உரிமைகளையும் அழித்து, உழைப்புச் சுரண்டலை உக்கிரமாக்குவதன் மூலம் இலாபத்தைச் சுரண்டும் மோசமான முறையாகும்.

இலங்கையில் தனியார் துறையிலும் அரச துறையிலும் இந்த முறை பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அரச துறையினுள், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், அரச உழைப்புப் படையை வெட்டிக் குறைக்கும் மற்றும் அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பாகமாகவே நடைமுறைப்படுத்தப்டுகின்றது. அது இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேலும் மேலும் துரிதப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் விளக்கியது போல், டெலிகொம் மனித வள தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைந்த சம்பளமே வழங்கப்படுகின்றது. அவர்களின் அடிப்படைச் சம்பளம் தரத்துக்கு ஏற்ப 22,000 முதல் 32,500 வரை வழங்கப்படுகின்றது. விடுமுறை, பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட வசதிகளும் அவர்களுக்கு போதுமானளவு இல்லை. இந்த தொழிலாளர்களில் அநேகமானவர்கள், 10 முதல் 20 வருடங்கள் வேலை செய்தவர்களாகவர்.

தொலைத் தொடர்பு அதிகாரிகளின் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் டெலிகொம் அனைத்து ஊழியர் சங்கம் உட்பட டெலிகொம் தொழிற்சங்கங்கள், மனித வள தொழிலாளர்களை டெலிகொம் நிறுவனத்துடன் இணைப்பதற்கு எதிராக நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் வெளிப்படையாகவே அணிதிரண்டுள்ளதோடு அவர்கள் மனித வள தொழிலாளர்களுக்கு எதிராக டெலிகொம் தொழிலாளர்களை தூண்டிவிடும் இழிவான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். மனித வள தொழிலாளர்களை இணைத்துகொண்டால், டெலிகொம் நிறுவனம் நட்டத்தில் விழுந்து அதன் ஊழியர்களின் தொழில் மற்றும் ஏனைய உரிமைகளுக்கு தாக்குதல் தொடுக்கப்படும் என அவர்கள் விஷமத்தனமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். இவர்கள் சர்வதேச மூலதனத்தினதும் முதலாளித்துவ அரசாங்கங்களதும் நேரடி முகவர்களாவர்.

தொழிற்சங்கங்களது இந்த துரோக நடவடிக்கை சம்பந்தமாக மனித வள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபம் காணப்படுகின்றது. “பொய் பிரச்சாரத்தை செய்து நிரந்த ஊழியர்களை எங்களுக்கு எதிராக தூண்டி விடுவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் எங்களைப் பகைக்கவில்லை. சங்கத் தலைவர்களே இரு சாராரையும் மோத விடுவதற்கு முயற்சிக்கின்றனர்” என தொழிலாளர்கள் கூறினர்.

இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் டெலிகொம் தொழிலாளர்களின் தொழில் மற்றும் ஏனைய உரிமைகளை பாதுகாக்க எந்தவொரு போராட்டத்தையும் செய்வதில்லை. டெலிகொம்மை 1991ல் கூட்டுத்தாபனமாக மாற்றி 1997ல் தனியார்மயமாக்கியதே, தொழிலாளர்களின் தொழில் மற்றும் ஏனைய உரிமைகள் மீது தொடுக்கப்படும் பிரதான தாக்குதலாகும். இப்போது அது நெதர்லாந்தின் குளோபல் ஹோல்டிங்ஸ் என்.வீ. நிறுவனத்துடன் பிணைக்கப்பட்ட நிறுவனமாகும். அதன் பங்குகளில் நூற்றுக்கு 44.98 வீதத்தை, குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதுடன் நூற்றுக்கு 50.50 வீதமே அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளாகும். எஞ்சியதை ஏனைய பங்கு கொள்வனவாளர்கள் வாங்க முடியும்.

தனியார்மயத்துக்கு எதிராக எழும் தொழிலாளர்களின் எதிர்ப்பை வெற்று எதிர்ப்புகளுக்கு கீழ்ப்படுத்தி கரைத்து விட்டு, ஊழியர்களின் தொழில் மற்றும் வேலை நிலைமைகளுக்கு தாக்குதல் தொடுப்பதற்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தது இந்தத் தலைவர்களே ஆவர். தனியார்மயத்தின் பின்னர், சுயாதீனமாக ஒய்வுபெறுதல் என சொல்லப்படும் முறைமையின் கீழ், கடந்த இரு தசாப்தங்களுக்குள் டெலிகொம் உழைப்புப் படை சில ஆயிரங்களால் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ், டெலிகொம் நிறுவனத்தை முழுமையாக தனியார்மயமாக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதே பராமரிப்பு நடவடிக்கைகள் தனியார் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பயன்படுத்தப்படும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 9,500 ரூபா என மனித வள தொழிலாளர்கள் கூறினார். இதனால், டெலிகொம் ஊழியர்களின் தொழில் மற்றும் சேவை நிலைமைகளுக்கு தாக்குதல் தொடுக்கப்படுவது இந்த தனியார்மயப்படுத்தல் நடவடிக்கையினாலேயே அன்றி மனித வளத்தை இணைத்து அவர்களின் தொழிலை நிரந்தரமாக்குவதால் அல்ல. மனித வள தொழிலாளர்கள் முன் உள்ள பிரதான ஆபத்தும் இதுவே.

கோரிக்கைகளை வெற்றிகொள்ளும் வரை போராடுவதாக அ.இ.தொ.தொ.சே.ச. தலைவர்கள் கூறுகின்றனர். “நீதிமன்றத்தை அவமதிக்காமல் தடை உத்தரவை மாற்றிக்கொண்டு போராட்டத்தை வெற்றிகொள்ளும் வரை முன் செல்வோம்” என அதன் ஆலோசகர் ஜே.ஏ.எஸ்.கே. அப்புஹாமி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். எனினும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கத்துக்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்துக்கும் டெலிகொம் நிர்வாகத்தினரின் வாக்குறுதிகளுக்கு கீழ்ப்படுத்தி, மனித வள ஊழியர்களின் முந்தைய போராட்டத்தை கலைத்துவிடுவதற்கு அ.இ.தொ.தொ.சே.ச. தலைவர்கள் பங்களிப்பு செய்திருந்தனர். அனைத்து ஊழியர் சங்கத்தில் இருந்து அவர்கள் கொள்கை ரீதியில் பிளவடையவில்லை. 2014 வேலை நிறுத்தத்தின் போது, அதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக வழக்கு ஒன்று இருப்பதனாலேயே அது பிளவு அடைந்தது.

தனது சங்கம் அரசியல் அற்றது என அ.இ.தொ.தொ.சே.ச. தலைவர்கள் கூறினாலும், அவர்கள் அனைவரும் அல்லது அதில் பெரும்பான்மையானவர்கள் அனைத்து ஊழியர் சங்கத்துடன் சேர்ந்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைத்தனர். அவர்களைப் போலவே பொதுவில் தொழிற்சங்கத் தலைவர்கள், “அரசியல் இன்றி” செயற்படுவதாக கூறுவது மோசடியாகும். உண்மையில், அவர்கள் தொழிலாளர்களை முதலாளித்துவ அரசாங்கத்துடன் மற்றும் ஏதாவது ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை கொள்கை ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் முடிச்சுப்போடுவதையே அவர்கள் செய்கின்றனர்.

போலி இடது கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களுடன் அணிதிரண்டு அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற மாயையை அ.இ.தொ.தொ.சே.ச. தொழிலாளர்கள் மத்தியில் பரப்புகிறது. இந்த அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு குறைந்த அல்லது கூடிய விதத்தில் ஒத்துழைத்தன.

செவ்வாய் கிழமை (25) நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்த அமைப்புகளுடன் “பெரும்” ஊர்வலமொன்றில் சென்று, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை ஸ்தாபிப்பது அல்ல அரசாங்கத்தின் கொள்கை, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதும், அதற்கு எதிராக எழும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதுமாகும். ஹம்பந்தொட்டை துறைமுக தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொள்கை அதற்கு சிறந்த உதாரணமாகும்.

பார்க்க:

இலங்கை: அம்பாந்தோட்டை துறைமுக வேலைநிறுத்தத்தின் அரசியல் படிப்பினைகள்