ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the 30th anniversary of the death of Comrade Keerthi Balasuriya

தோழர் கீர்த்தி பாலசூரியவின் 30வது நினைவு ஆண்டில்

By David North 
19 December 2017

இந்த கடிதம், கீர்த்தி பாலசூரியவின் மரணத்தின் 30வது நினைவு தினத்திற்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய ஒன்று கூடலுக்கு, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் அனுப்பி வைத்த கடிதமாகும். தோழர் கீர்த்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக பொதுச் செயலாளராக இருந்தார். இந்த நிகழ்வானது டிசம்பர் 18 அன்று இலங்கையின் கொழும்பில் கீர்த்தியின் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்றது.


விஜே டயஸ் உரையாற்றுகிறார்

அன்பு தோழர்களே,

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1987 டிசம்பர் 18 அன்று, தோழர் கீர்த்தி பாலசூரியா 39 வயதில் காலமானார். அந்த வெள்ளிக்கிழமை காலை செய்தி கிடைத்தபோது, எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே, இந்திய மற்றும் இலங்கை முதலாளித்துவத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட துரோக உடன்படிக்கை பற்றி ஒரு அரசியல் அறிக்கையை கீர்த்தியும் நானும் லண்டனில் கூட்டாக எழுதினோம். தனது அறிவுசார் மற்றும் அரசியல் பலத்தில் உச்சத்தில் இருந்த இந்த புத்திசாலித்தனமான புரட்சியாளர், திடீரென்று போய்விட்டார் என்று நம்புவது கடினமாக இருந்தது.

கீர்த்தியின் மரணமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் அதன் இலங்கைப் பிரிவிற்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இலங்கையில், கீர்த்தி 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நிறுவப்பட்டதில் இருந்தே அதற்கு தலைமை வகித்து வந்தார். பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) மேலும் மேலும் கொள்கையற்ற தேசிய சந்தர்ப்பவாதத்தால் மோசமடைந்த மிகக் கடினமான அரசியல் நிலைமைகளின் கீழ், கீர்த்தி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்திற்கு அடிப்படையாக அமைந்த, புரட்சிகர சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை பாதுகாக்க போராடினார்.

1985 அக்டோபரில், தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நெருக்கடி வெடித்த நிலையில், தோழர் கீர்த்தி லண்டனுக்கு பயணித்தார். அவர், நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியில் அடித்தளமாக இருந்த கொள்கைகளை பாதுகாக்க போராடும் பொருட்டு அனைத்துலகக் குழுவுடன் இருந்தவர்களுடன் தன்னை உடனடியாக இணைத்துக் கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் முறித்துக் கொண்ட அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர்வதில், அனைத்துலகக் குழுவை தத்துவார்த்த மற்றும் அரசியல் ரீதியில் மறு ஆயுதபாணியாக்குவதில் கீர்த்தி தீர்க்கமான பாத்திரம் வகித்தார்.

தோழர் கீர்த்தியின் இறுதிக் கிரியையின் போது, மார்க்சிச கொள்கைகளுக்கு மாற்றாக ஸ்ராலினிசம், தேசியவாதம் மற்றும் போலி சோசலிச வாய்வீச்சின் துரோக கலவை மூலம் கண்டுபிடிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களை விட, ஒரு புரட்சிகர மார்சிஸ்டாக கீர்த்தியின் வேலைகள் நிலைத்திருக்கும் என நான் கூறினேன்.

அந்த கணிப்பு சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கீர்த்தியின் மரணத்தில் இருந்து 30 ஆண்டுகளில் மாவோ, ஹோ சி மின், டிட்டோ மற்றும் காஸ்ட்ரோ போன்றோரின் அரசியல் மரபுடைமையுடன் வரலாறு கொடூரமாக கணக்குத் தீர்த்துள்ளது. "மூன்றாம் உலக" முதலாளித்துவ தேசியவாதத்தின் (உதாரணத்துக்கு ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிடுவதென்றால் நெல்சன் மண்டேலா, நாசர், மற்றும் கடாபி) பிரதிநிதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

தோழர் கீர்த்தி மரணித்து முப்பது ஆண்டுகளின் பின்னர், உலகில் உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தை பிரநிதித்துவம் செய்யும் ஒரே அரசியல் போக்கு, நான்காம் அகலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எமது தோழர் மற்றும் அன்புக்குரிய நண்பர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கையின் அழிக்க முடியாத மரபுடைமையும் இதில்தான் உள்ளது.

டேவிட் நோர்த்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசியர் குழுவின் சார்பில்.

பார்க்க:

In Memory of Keerthi Balasuriya 
[18 December 2012]

South Asia’s foremost Marxist of the second half of the 20th century 
[27 December 2012]