ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fascists march in Auschwitz

பாசிசவாதிகள்  அவுஷ்விட்ஸிற்கு அணிவகுத்துச் செல்கின்றனர்

Clara Weiss
31 January 2019

ஜனவரி 27 இல், சோவியத் செம்படையினர் அவுஷ்விட்ஸின் கொலை முகாம் விடுவிக்கப்பட்ட 74 வது ஆண்டு நிறைவு தினத்தன்று, 50 இலிருந்து 100வரையிலான பாசிசவாதிகள் அம்முகாமின் கதவுகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர். இங்கு இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களால் ஒரு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாசிசவாதிகள் போலந்து தேசிய கீதத்தை பாடி, யூத எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். 2015 ல் ஒரு யூதரைப் போல் தோற்றமளிக்கும் ஒரு உருவத்தை எரித்ததால் இழிபுகள் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் தலைவரான Piotr Rybak, "இது யூதர்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், போலந்தை அவர்களிடமிருந்து விடுவிக்கும் நேரம்!" என்றார்.


அவுஷ்விட்ஸ் முகாமின் வாயில்" வேலை உங்களை விடுதலை செய்கின்றது என்ற வாசகத்துடன்"

பாசிசத்தால் நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு அடையாளமாக உலகளாவிய ரீதியாக பார்க்கப்படும் அவுஷ்விட்ஸ் நினைவுச் சின்னத்தில் தீவிர வலதுசாரிகளது யூதர்களுக்கு எதிரான அத்தகைய ஆர்ப்பாட்டம், வரலாற்று முன்னோடியில்லாததாக உள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு, ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டு, முதலாளித்துவம் மறுஅறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், போலந்திலும் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நிலவுகின்ற அரசியல் நிகழ்வுகளின் விளைவு ஆகும்.

இந்த ஆண்டானது 1989 இல், கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள் அவர்களின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்ட 30 ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அதன் சிறிது காலத்தின் பின்னர், டிசம்பர் 1991 ல், சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை அழித்து, ரஷ்யாவில் முற்றிலும் முதலாளித்துவத்தை  மீட்டமைத்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஊனமுற்ற கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் அழிவும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் ஸ்ராலினிசத்தால் பல தசாப்தங்களாக அக்டோபர் புரட்சியின் சர்வதேச மற்றும் சோசலிச கொள்கைகளை காட்டிக் கொடுத்து மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை தவறச்செய்ததால்தான் சாத்தியமானது. தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்பியது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், தொழிலாள வர்க்கத்தால் ஒரு அரசியல் புரட்சியின் மூலம் தூக்கி எறியப்படாவிட்டால் தன்னை ஒரு புதிய ஆளும் வர்க்கமாக மாற்றிக்கொள்ளும் என்று லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார். இதுதான்  அங்கு நடந்தது.

இந்த எதிர்ப்புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கானது முதலாளித்துவ சிந்தனையாளர்களால் ஒரு "ஜனநாயகப் புரட்சி" என்று புகழ்ந்து நியாயப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, ஜனநாயகம், சமாதானம் மற்றும் அனைவருக்கும் செழிப்பும் கிடைக்கும் என தொழிலாளர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறனதே நிகழ்ந்தது.

முதலாளித்துவ புனருத்தானம் கிழக்கு ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் பாரியளவிலான சமூக சமத்துவமின்மைக்கு வழிவகுத்துள்ளது, மற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஏழ்மையில் தள்ளியுள்ளது. இது மற்றொரு உலகப் போருக்குகான ஏகாதிபத்திய தயாரிப்புகளுக்கு ஒரு மையமாக இப்பிராந்தியத்தை மாறிவிட்டது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் இப்பொழுது போர் செய்யத் தயாரிப்பு செய்து, யூத-விரோதத்தை ஊக்குவித்து, பொலிஸ் அரச நடவடிக்கைகளை இயங்கச் செய்யும் மிகுந்த தேசியவாத ஆட்சிகளால் ஆட்சி செய்யப்படுகின்றன.

இந்த பாசிச ஆர்ப்பாட்டக்கார்கள் போலந்திலுள்ள உத்தியோகபூர்வ அரச கொள்கையை வெளிப்படுத்துகின்றனர். 2018 ன் முற்பகுதியில், வலதுசாரி சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் (PiS) தலைமையிலான போலந்து அரசாங்கம், கொலோகோஸ்டின்போது யூதர்களுக்கு எதிராக போலந்துநாட்டவரால் நடத்தப்பட்ட குற்றங்கள் பற்றி எவ்வித்ததிலும் குறிப்பிடுவதை தடைசெய்தது. எந்தவொரு குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. அப்போதிலிருந்து, போலந்து யூத-விரோத மற்றும் யூத-விரோத இனப்படுகொலைகள் தொடர்பாக ஆய்வுசெய்த பல வரலாற்றாசிரியர்கள் தங்கள் வேலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நவம்பர் மாதம், போலந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki உட்பட பல முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஜனவரி 27 ம் தேதி உத்தியோகபூர்வ அவுஷ்விட்ஸ் நினைவு விழாவில் கலந்துகொண்டனர், போலந்து சுதந்திர தினத்தன்று போலந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்த பாசிஸ்டுகளுடன் அணிவகுத்துச் சென்றனர்.

போலந்து மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பாசிசத்தின் மறுஎழுச்சி என்பது ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் ஒரு குறிப்பாக கூர்மையான வெளிப்பாடு ஆகும்.

ஜேர்மனியில், பெரும் கூட்டணி வேண்டுமென்றே ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சியை (AfD) பிரதான எதிர்க் கட்சியாக்கியுள்ளதுடன், அதன் கொள்கைகள் மற்றும் வார்த்தையாடல்களின் முக்கிய அம்சங்களையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கடந்த ஆண்டு தீவிர வலதுசாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலும், ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, "ஹிட்லர் தீயவர் அல்ல" என்று பகிரங்கமாக கூறி, பேர்லினில் புகழ்பெற்ற ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுடன் நாஜிசத்தின் குற்றங்களை குறைத்துக்காட்ட அனுமதித்தது.

பிரான்சில், மஞ்சள் சீருடை அணிவகுப்பில் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சமீபத்தில் பாசிச சர்வாதிகாரி பிலிப் பெத்தானை "சிறந்த இராணுவ வீரராக" புகழ்ந்தார்.

உக்ரேனில், உக்ரேனிய பாசிசத் தலைவர் Stepan Bandera உம் இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் யூதர்கள் மற்றும் உக்ரேனிய பொதுமக்கள் படுகொலைகளில் ஈடுபட்டிருந்த அவரது இயக்கமும் புகழப்படுவது, 2014 பிப்ரவரியில் அமெரிக்க ஆதரவுடைய வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு ஆட்சிக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச கொள்கையாக மாறியுள்ளது.

அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டபடி பாசிச உணர்வுகளை தூண்டிவிட்டது. ஏற்கனவே இக்கொள்கையானது கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க மண்ணில் முன்னொருபோதுமில்லாத பாரிய தாக்குதல் கடந்த பிட்ஸ்பேர்க் யூதமத ஆலயத்தில் நடாத்துவதில் சென்று முடிந்தது.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிபலிப்பு பாசிச சக்திகளின் கட்டமைப்பாகும். பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் போர்க்குணம் ஆகியவற்றை எதிர்கொண்டு, முதலாளித்துவ அரசாங்கங்கள் எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், யுத்தத்திற்கும் எதிர்ப்புரட்சிக்கான நிலைமைகளையும் படைகளையும் தயாரிக்கவும் தேசியவாதம் மற்றும் தீவிர வலதுசாரிகளை ஊக்குவிக்கின்றன. வரலாற்று ரீதியாக, யூத-விரோதத்தை மேம்படுத்துவது, குறிப்பாக சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியை எதிர்ப்பதற்கு முதலாளித்துவத்தின் மைய கருத்தியல் கருவியாகும்.

இந்த நிகழ்வு முதலாளித்துவ ஊடகங்கள் முன்னணி கல்வியாளர்களால் ஹிட்லரின் புனருத்தானம் செய்யப்படுவது மற்றும் ஜேர்மனியின் தீவிர வலதுகளின் வளர்ச்சி போன்றவற்றை முற்றாக குறிப்பிடாதது போன்றே அவுஷ்விட்ஸில் பாசிச ஊர்வலத்துக்கு உடந்தையாக இருப்பதை பற்றி எடுத்துக்காட்டுகின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச வர்க்கப் போராட்டம் மற்றும் 2019 ல் முதலாளித்துவ பிற்போக்குக்கு எதிரான அரசியல் போராட்டம் என்ற முன்னோக்கு ஆவணத்தில் பின்வருமாறு எச்சரித்தது. பாசிசம், 1930களில் அது இருந்தது போல, இன்னும் ஒரு வெகுஜன இயக்கமாக ஆகிவிடவில்லை. ஆயினும் வளர்ந்து செல்லும் அபாயத்தை உதாசீனம் செய்வது அரசியல்ரீதியாக பொறுப்பற்றதாக இருக்கும். பரந்த மக்கள் உணர்கின்ற அதிருப்தியையும் கோபத்தையும் வலது-சாரி இயக்கங்கள், ஆளும் வர்க்கத்தின் மற்றும் அரசின் பிரிவுகளது ஆதரவுடன், வாய்வீச்சில் சுரண்டிக் கொள்ள முடிந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிவலது மற்றும் பாசிச இயக்கங்கள் மீண்டும் எழுவதைத் தடுப்பதற்கு எதிரான போராட்டமானது ஒரு அவசரமான அரசியல் கடமையாக இருக்கிறது.

அவுஸ்விட்ஸில் மடிந்தவர்களுடைய நினைவுகளை அழிக்கும் நாஜிக்கும்பலின் இவ்விதமான குப்பைகூழங்கள் மனிதருக்கு வெறுப்பானதாகவும் பதிலளிக்க வேண்டியதாகவும் இருக்கின்றது. ஆனால் முதலாளித்துவத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் மற்றும் பாசிச எதிர்வினைக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத இணைப்பைப் புரிந்து கொள்வதை அடித்தளமாக கொண்டிருக்கவேண்டும். பாசிசத்தை வெறுமனே தார்மீக கண்டனங்களைக் கொண்டு அல்லது ஜனநாயகத்தை பாதுகாக்க முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தோற்கடிக்க முடியாது. பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு அரசியல் போராட்டமாகும், அது ஒரு சமரசமற்ற சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும்.

அத்தகைய போராட்டத்திற்கான சமூக அடித்தளம் இப்பொழுது வளர்ந்து வருகிறது: மெக்சிகோவில் உள்ள மடாமோரோஸில், 70,000 வாகன தொழிலாளர்கள் வட அமெரிக்க கண்டத்தில் இரண்டு தசாப்தங்களாக இருந்திராத மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கின்றார்கள்.

ஹங்கேரியில் வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களும் வெடித்தன. ஐக்கிய அமெரிக்காவில் ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்கங்களை மீறி பொதுக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக பல வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மில்லியன் தொழிலாளர்கள் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இந்த போராட்டங்கள் முதலாளித்துவ பிற்போக்குக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தால் ஒரு நனவான புரட்சிகர இயக்கமாக மாற்றி ஐக்கியப்படுத்தப்பட்டு மார்க்சிச வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். இதற்காகத்தான்  நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடுகின்றது.