ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Legal experts: Assange likely faces espionage charges if extradited to US

சட்ட வல்லுநர்கள்: அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் வேவு பார்த்தல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றை அவர் எதிர்கொள்வார்

By Oscar Grenfell 
22 April 2019

ஏப்ரல் 11 அன்று ஈக்வடோர் லண்டன் தூதரகத்தில் பிரிட்டிஷ் பொலிஸ் அசான்ஜை சட்டவிரோதமாக கைது செய்ததற்கு பின்னர், கடந்த வாரம் ஒரு CNN அறிக்கை, அமெரிக்க நீதித்துறை ஜூலியன் அசான்ஜூக்கு எதிராக “கூடுதல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு எதிர்பார்த்திருக்கிறது” என்பதை வெளிப்படுத்தியமை, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் எதிர்கொள்ளவிருக்கும் கடும் ஆபத்துக்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

போலி பிணையெடுப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் அசான்ஜ் கைது செய்யப்பட்டுள்ளமையானது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகம் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைக்கும் படி கேட்பதை எளிதாக்குகிறது.

CNN, ஒரு “அடைக்கலதாரியாக” இருந்த அசான்ஜ் அமெரிக்க அரசாங்க கணினியை அங்கீகாரமின்றி அணுகுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, அவருக்கு எதிராக பகிரங்கமாக சுமத்தப்பட்ட இரண்டு அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் பற்றி அப்பட்டமாக தெரிவித்த அமெரிக்க சட்ட வல்லுநர் ஓரின் கெர் பற்றி குறிப்பிட்டது. அவை வெறுமனே “வழக்கு தொடர போதுமான  சுருக்கமான குற்றச்சாட்டுக்களாக இருந்தன, என்றாலும் அசான்ஜூக்கு எதிரான எந்தவொரு வழக்கின் ஒரு சிறு பகுதி மட்டும் கூட அதற்கு போதுமானதாக இருந்தது” என்று கெர் தெரிவித்தார்.

கணினி குற்றங்கள் தொடர்பான ஒரு முன்னாள் மத்திய வழக்கறிஞர் பீட்டர் டோரென் இவ்வாறு கூறினார்: “ஒரு ஒற்றை எண்ணிக்கையிலான ஒரு குற்றச்சாட்டைக் கூட, அதிலும் குறிப்பாக இதுபோன்ற வழக்கு தொடர்பான குற்றச்சாட்டை அரசாங்கம் மட்டுப்படுத்தாது. ஒரு பல எண்ணிக்கை கொண்ட குற்றச்சாட்டை விட அரசாங்கத்திற்கு இது ஒரு சிறந்த நடைமுறையாகவே உள்ளது.”

இந்த குற்றச்சாட்டுக்களின் இற்றுப்போன குணாம்சம் பற்றி பல சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள், அசான்ஜ் மற்றும் அமெரிக்க இராணுவ இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சீ மானிங் இடையேயான ஒரு உரையாடலை ஆவணப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு சரிபார்க்கப்படாத 2010 அரட்டைப் பதிவை பற்றித்தான் மீண்டும் மீண்டும் விவாதித்தனர்.

அடையாளச் சொல் அல்லது கடவுச் சொல்லை கட்டவிழ்ப்பதில் அசான்ஜின் உதவியை மானிங் நாடினார் என்பதை அந்த பதிவுகள் நிரூபிக்கின்றன என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இது பாதுகாப்புத் துறையின் கணினி வலையமைப்புகளை தனக்கு சொந்தமல்லாத ஒரு கடவுச் சொல்லின் மூலம் அவர் அணுகுவதற்கு வழி செய்தது, அது அவரது அநாமதேயத் தன்மையை பாதுகாக்க உதவியது.

அசான்ஜூக்கு எதிரான குற்றச்சாட்டிற்கோ, அல்லது கடவுச்சொல் எப்போதோ முறிக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்ட ஒரு FBI சிறப்பு முகவரின் துணை வாக்குமூலத்திற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும், மானிங் ஒரு இராணுவ புலனாய்வு ஆய்வாளராக, விக்கிலீக்ஸூக்கு அவர் வழங்கவிருந்த அனைத்து விடயங்களையும் அணுகுவதற்கு ஏற்கனவே அதை அங்கீகரித்திருந்தார்.

1970 களில் பென்டகன் ஆவணங்கள் குறித்த வழக்கின் போது New York Times பத்திரிகைக்கான ஒரு பொது ஆலோசகராக சேவையாற்றிய ஜேம்ஸ் சி. கூடேல், அசான்ஜ் மீதான குற்றச்சாட்டு என்பது “ஒரு பொறி மற்றும் மாயத்தோற்றம்” என்று Hill பத்திரிகையில் குறிப்பிட்டார்.

கூடேல் மேலும், இது “அசான்ஜை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும், அவர் இங்கு வந்தவுடன், பல குற்றச்சாட்டுக்களின் தாக்குதலுக்கு அவர் ஆளாவார் என்பதில் சந்தேகமேயில்லை” என்றும் தெரிவித்தார்.

கூடேலும் மற்றும் ஏனைய வழக்கறிஞர்களும், குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைக்க இரு நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், “அரசியல் குற்றங்களை” முன்னிட்டு தனிநபர்கள் எவரையும் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஒப்படைக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.

வேவு பார்த்தல் என்பது வரலாற்று ரீதியில் ஒரு அரசியல் குற்றமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதல் உலகப் போரின் முடிவில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் வளர்ந்து வந்ததற்கு மத்தியில், சோசலிச தலைவர் யூஜீன் டெப்ஸை சிறைப்படுத்த அது பயன்படுத்தப்பட்டது. 1971 இல், ரிச்சர்ட் நிக்சனின் அமெரிக்க நிர்வாகம், வியட்நாமில் அமெரிக்க போர் குற்றங்களின் நோக்கம் பற்றி அம்பலப்படுத்திய பென்டகன் ஆவணங்களில் இருந்து New York Times பத்திரிகை மேலும் தகவல்களை வெளியிடாமல் தடுப்பதற்கு விதிமுறைகளை பயன்படுத்த பயனற்ற வகையில் முயற்சித்தது.

அரசாங்கம், அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்த விதிகளை மீறியதாக உள்ளது என்ற அதன் கோரிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கை இழந்தது.

அமெரிக்காவில் “அரசியல் குற்றங்கள்” தொடர்பான குற்றச்சாட்டுக்களை அசான்ஜ் எதிர்கொள்வாரா, மேலும் விரைவாக அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவாரா என்பனவற்றை உறுதி செய்வது போன்ற பாதுகாப்பு விவாதங்களை தவிர்க்கும் பொருட்டு, ஆரம்பகட்ட அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் கணினி தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்கள் என்பது போன்று குறுகிய வரையறை கொண்டவையாக இருந்தன.

இருப்பினும், குற்றச்சாட்டுக்களுடன் இணைந்த அசான்ஜேக்கு எதிரான வாக்குமூலம், அமெரிக்க உளவு சட்டத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட மொழியை உள்ளடக்கியுள்ளது. இது, “மானிங்கும் அசான்ஜூம், ஆப்கானிஸ்தான் போர் அறிக்கைகள் மற்றும் ஈராக் போர் அறிக்கைகளின் பொது அம்பலப்படுத்துதல்கள் அமெரிக்காவிற்கு பாதிப்பை விளைவிக்கும் என்று நம்பியதற்கு காரணம் இருந்தது” என்று தெரிவிக்கிறது.

பிந்தைய சொற்றொடர் உளவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, சிறப்பு முகவர் மேகன் பிரவுன் மூலம் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது, FBI இன் “எதிர் உளவு குழுவில்” அவர் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அசான்ஜ் மீதான அமெரிக்க விசாரணையில் அவர் ஈடுபட்டிருந்தார் என அவர் கூறினார்.

மேலும் கூடேல் இவ்வாறு எச்சரித்தார்: “அசான்ஜே குற்றச்சாட்டில் உள்ள உளவு சட்டத்தின் கீழான சதி பற்றிய குறிப்புகள், அமெரிக்க அரசாங்கம் – அசான்ஜ் அமெரிக்க மண்ணில் இருந்தபோது வேவு பார்த்தல் தொடர்பாக மட்டும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதற்காக, ஆங்கில நீதிமன்றங்களை கடந்து அவரை அங்கிருந்து விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வகையில் - தூண்டில் இட்டு சிக்க வைக்க இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.”

New York Times பத்திரிகையின் முன்னாள் வழக்கறிஞர், குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ், ஒரு தனிநபர் “அடைக்கலம் புகுந்துள்ள நாடு அந்நபரை ஒப்படைக்க ஒப்புக் கொண்டாலன்றி, அவர் மீது எந்த குற்றத்திற்காகவும் வழக்குத் தொடர முடியாது” என்று குறிப்பிட்டார்.

இருந்தாலும், குறிப்பிட்ட நபர் மீதான மேலதிக குற்றச்சாட்டுக்கள் “எந்த குற்றச்சாட்டு குறித்து மற்றொரு நாட்டிடம் ஒப்படைப்பதற்கு அனுமதிக்கப்பட்டதோ அதே உண்மைகளை அடிப்படையாக கொண்டிருப்பின்” அதற்கு விலக்கு உண்டு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கணினி தரவு திருட்டு குற்றங்களின் “மேம்படுத்தல்” என்பதாக குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைப்பார்களானால், அமெரிக்காவில் அசான்ஜூக்கு எதிராக வேவு பார்த்தல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒரு அமெரிக்க பத்திரிகையாளரான கெவின் கோஸ்டோலா, Shadow Proof வலைப்பதிவில், ஆப்கானிஸ்தான் “எதிரிக்கு உதவுகிறது” என்பது பற்றிய விக்கிலீக்ஸின் வெளியீடுகள் பற்றிய குறிப்புக்களை பிரவுனின் வாக்குமூலம் கூட உள்ளடக்கியுள்ளதை குறிப்பிட்டார். இது, 2011 அமெரிக்க சிறப்புப் படையின் திடீர் சோதனை நடவடிக்கைக்கு பின்னர் ஒசாமா பின் லேடனின் பாகிஸ்தானிய ஒருங்கிணைப்பில் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் கண்டறியப்பட்டன என்று கூறுகிறது. அவர் கூறியது போல, அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் New York Times பத்திரிகையின் நகல்களை தன்வசம் வைத்திருந்ததைக் காட்டிலும், இது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

இருப்பினும், கோஸ்டோலா மேலும் இவ்வாறு தெரிவித்தார்: “பின் லேடன் பற்றிய திடீர் சோதனை பற்றிய குறிப்பு குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் 2013 இல் மானிங்கிற்கு எதிராக நீதிமன்ற விடயங்களை முன்வைத்த இராணுவ வழக்கறிஞர்கள், ‘எதிரியின் வழக்கிற்கு உதவுவதன்’ ஒரு முக்கிய பாகமாக இது உருவாக்கப்பட்டது. என்றாலும், இந்த விசாரணைக்கு தலைமை வகித்த இராணுவ நீதிபதி டெனிஸ் லிண்ட் “எதிரிக்கு உதவிய” குற்றவாளியாக மானிங் இல்லை என்று கண்டறிந்தார்.

கடந்த வார CNN அறிக்கை, நீதித்துறை விக்கிலீக்ஸை விசாரணை செய்வதை தொடர்கிறது என்று தெரிவித்தது. பத்திரிகையாளர்கள் உட்பட, அசான்ஜின் தொடர்பாளர்கள், அத்துறையின் பிரதிநிதிகள் மூலமாக அணுகப்பட்டார்கள் என கூறப்படுகிறது.

விசாரணையின் வேறுபட்ட கவனக்குவிப்புகளாக தோன்றவிருப்பவை, விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிரான மேலதிக குற்றச்சாட்டுக்களை பாதுகாக்க நோக்கம் கொண்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கக்கூடும்: 

* ட்ரம்ப் நிர்வாகம் செல்சீ மானிங்கை சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்திருப்பது என்பது, அசான்ஜூக்கு எதிராக பொய்யான சாட்சியம் வழங்கும்படி அவரை நிர்பந்திக்க நோக்கம் கொண்டதாகும். இந்த சட்டவிரோதமான சர்ச்சையில் பங்கேற்பதற்கு அந்த தைரியமான இரகசிய தகவல் வெளியீட்டாளர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.   

* முன்னாள் CIA ஒப்பந்தக்காரரான ஜோஷூவா ஸ்கட்டில் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Vault 7 என்றறியப்பட்ட CIA ஆவணத் தொகுப்பை விக்கிலீக்ஸிற்கு கசியவிட்டதற்காக அவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அமைப்பின் உலகளாவிய கணினி தரவு திருட்டு மற்றும் வேவு பார்த்தல் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் அம்பலப்படுத்தினர். கடந்த ஜூன் மாதம் குற்றம்சாட்டப்பட்ட ஸ்கட்டில், குறைந்தபட்சம் ஓராண்டு கால தனி சிறையிலடைப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

தன் மீது திணிக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராக ஸ்கட்டில் போராடுகின்ற நிலையில், CNN செய்தியின் படி, “நேரம் முடிந்துவிட்டது” என்றும் “விசாரணை முடிவடைந்துவிட்டது” என்றும் இந்த மாதம் மத்திய நீதிமன்றத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தலைமை வகித்த நீதிபதி, அவர் தவறானவர் என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான தேடுதல் ஆணைகள் முத்திரையிடப்பட்டிருந்தை வைத்து பார்த்தால், Vault 7 ஆவணம் குறித்து அசான்ஜூக்கு எதிராக ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.         

* 2016 இல் விக்கிலீக்ஸ் பிரசுரித்த மின்னஞ்சல்களை ரஷ்ய உளவுத் துறை “திருடிவிட்டது” என்பதாக முற்றிலும் ஆதாரமற்ற வகையில் கூறப்படுகிறது. ஹில்லாரி கிளின்டனுக்கு ஆதரவாக, தன்னை “சோசலிசவாதி” என சுய அறிவிப்பு செய்துகொண்ட பேர்னி சாண்டர்ஸூக்கு எதிராக, ஜனநாயகக் கட்சியின் முதன்மைவாதிகளை ஜனநாயகக் கட்சியின் தேசிய குழு மோசடி செய்துள்ளது என்ற தகவலை அது அம்பலப்படுத்தியது, அத்துடன், வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு ஹில்லாரி கிளின்டன் வழங்கிய இரகசிய உரைகளையும் விக்கிலீக்ஸ் பிரசுரித்ததன் மூலம், அவர் பெருநிறுவன உயரடுக்கின் கைதேர்ந்த பிரதிநிதியாக திகழ்ந்துள்ளார் என்பதையும் தெளிவுபடுத்தியது.

ரஷ்யாவால் மின்னஞ்சல்கள் பெறப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் ஒருபோதும் வழங்கப்படவில்லை. மேலும், விக்கிலீக்ஸின் பிரசுரங்களின் சாரம், பொது நலனை பொறுத்தமட்டில், அதன் துல்லியத்தன்மை ஒருபோதும் மறுக்கப்படவில்லை என்பது தெளிவாக இருந்தது. இருப்பினும், கடந்த வாரம் வெளியான ட்ரம்ப் பிரச்சாரம் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான கூட்டுச் சதி பற்றிய முல்லர் அறிக்கையில் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அசான்ஜ் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்தாலும், அவை விக்கிலீக்ஸ் வெளியிட்ட இதழியல் அம்பலப்படுத்தல்களை குற்றம்சாட்டவும், மேலும் அரசாங்க குற்றங்கள் மற்றும் அதன் சட்டவிரோதத் தன்மை பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடக அமைப்புக்களை தடுப்பதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்கவும் நோக்கம் கொண்டிருக்கும்.

அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை மீதான நீதிமன்ற விசாரணைக்கு மே 2 அன்று அடுத்து அசான்ஜ் ஆஜராவார். கடந்த வாரம் Unity4J ஊர்வலத்தில், சர்வதேச சட்டம் பயிற்றுவிக்கும் ஒரு அமெரிக்க பேராசிரியரான ஃபிரான்சிஸ் போயில் பின்வருமாறு எச்சரித்தார்: “பிரிட்டிஷ் அமைப்பின் மூலம் கூடிய விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான கடும் பரிசீலனைக்கு உட்பட்டவராக அசான்ஜ் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.”

போயில் மேலும், இங்கிலாந்தின் மாவட்ட தலைமை நீதிபதி மிக்கேல் ஸ்நோ அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைப்படுவார் என்று மே 2 அன்று தீர்ப்பளிப்பார் என நான் கருதுகிறேன் என்றும் கூறினார். அசான்ஜ் ஒரு “நாசிசவாதி” என்று ஸ்நோ முன்பு கண்டித்ததையும், கைது செய்யப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் போலியான பிரிட்டிஷ் பிணையெடுப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு வழங்கப்பட்ட விசாரணையற்ற தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அசான்ஜ் அயல்நாட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய குற்றவாளி என்று கருதப்பட்டால், விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோர வேண்டும் என்றும் போயில் தெரிவித்தார். மேலும், குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு உள்துறை செயலரும் அங்கீகரிக்க வேண்டும். அசான்ஜ் மீதான அவர்களது விரோத போக்கை அடிப்படையாக வைத்து, விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக இரண்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடும் என்பது போன்று பேராசிரியர் எச்சரித்தார்.

இத்தகையதொரு சூழ்நிலையில், அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படாமல் தடுப்பதற்கு, விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தெரிவு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் ஒரு தற்காலிக தடையுத்தரவை பெறுவதற்கு அவர்கள் முனைய வேண்டும் என்றும் போயில் தெரிவித்தார். இது தோல்வி அடைந்தால், “அமெரிக்காவிற்கு கிளம்பவிருக்கும் அடுத்த ஜெட் விமானத்தில்” அவர் ஏற்றப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் சட்டரீதியான செயல்முறையை ஒத்த எந்தவொரு நடவடிக்கைக்கும் அசான்ஜ் உட்படுத்தப்பட மாட்டார் என்றும் சட்ட வல்லுநர் தெரிவித்தார்.

அசான்ஜ் உயிர் பிழைப்பதற்கு, அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவதை தடுப்பதற்கும், மேலும் அவரது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் அரசியல் இயக்கத்திற்குள் பாரிய ஆதரவை மாற்றியமைக்கும் அவசரநிலை உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த உடனடி ஆபத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Authorised by James Cogan for the Socialist Equality Party, Suite 906, 185 Elizabeth Street, Sydney, NSW, 2000.