ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

London public meeting demands the freedom of Julian Assange and Chelsea Manning

லண்டன் பொதுக்கூட்டம் ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கின் விடுதலையைக் கோருகிறது

By our reporter 
13 May 2019

நேற்று, லண்டனில் சோசலிச சமத்துவக் கட்சியால் (UK) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் தைரியமான இரகசிய தகவல் வெளியீட்டாளர் செல்சி மானிங்கை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பை விடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டதுடன் பலர் அதனை சோசலிச சமத்துவக் கட்சி பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பார்த்தனர். இந்த நிகழ்வானது சுயாதீன ஊடகமான Gordon Dimmack இன் YouTube சேனலில் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


அலிஸ் சம்மர்ஸ், உல்ரிச் ரிப்பேர்ட், கூட்ட தலைவர் ரிச்சர்ட் டைலர், கிறிஸ் மார்ஸ்டன் மற்றும் கிளாரா காம்போஸ்

பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் தலைவர்கள், ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்புக் குழுவை (JADC) பிரதிநிதித்துவப்படுத்தும் கிளாரா காம்போஸ் ஆகியோர் பேச்சாளர்களாக இருந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் மற்றும் பேர்லினில் இருந்து கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் உல்ரிச் ரிப்பேர்ட் ஆகியோர் அசாஞ்சிற்கு எதிரான குற்றவியல் வழிமுறைகளை அம்பலப்படுத்தி, ஏகாதிபத்திய சக்திகளின் சர்வாதிகாரத்திற்கும் போருக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எச்சரித்தனர்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் ஆஸ்கார் கிரென்பெல்லும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் நைல்ஸ் நிமுத்தும் உரையாற்றினர். ஆலிஸ் சம்மர்ஸ் பிரிட்டனில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக, காம்போஸ் மற்றும் JADC இன் ஏனைய உறுப்பினர்கள் லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்திற்கு வெளியே ஒரு விழிப்புணர்வை நடாத்தினர். ஏப்ரல் 11 அன்று அசான்ஜ் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு பிரிட்டிஷ் போலிஸாரால் தூதரகத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்படும் வரைக்கும் விழிப்புணர்வு தொடர்ந்து இடம்பெற்றது.

"விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜூலியன் அசான்ஜிற்கு ஆதரவாக ஈக்வடோரிய தூதரகத்திற்கு வெளியே பல ஆண்டுகள் நாங்கள் விழிப்புணர்வு போராட்டம் நடாத்தினோம், அது பெருநகர பொலிஸின் தூதரக முற்றுகைக்கு சாட்சி ... அவரது கைது மற்றும் அமைதியாக்கல், அத்தோடு அவரது வெளியீட்டு செயல்பாடு தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்தல் என்பன அவரைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்று தெளிவாகிறது" என்று காம்போஸ் கூறினார்.

"ஏப்ரல் 11 ம் தேதி அவரது மிருகத்தனமான கைதும் நியாயமற்ற தடுப்புக்காவலும் மேலும் அவரது நிலைமையை மோசமடைய செய்கிறது. நாம் இப்போது செயல்பட வேண்டும், அவரை விடுதலை செய்ய அணிதிரள்வோம். அவர் நம்மில் ஒருவர்" என்று அவர் மேலும் கூறினார்.


பார்வையாளர்களின் ஒரு பகுதி

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களில் SGP நிற்பதுடன் அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலை, கட்சியின் பிரச்சாரத்தில் ஒரு மையப் பிரச்சினையாக உள்ளது என்று ரிப்பேர்ட் விளக்கினார். அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன இயக்கத்தின் பாதுகாப்புக்கான போராட்டத்தாலேயே உறுதிப்படுத்தப்படும் என்றார். "எதிர்காலம் வெஸ்ட்மின்ஸ்டரில் முடிவு செய்வதல்ல. எதிர்காலம் பேர்லினின் சான்சிலர் அலுவலகத்தில் முடிவு செய்வதல்ல. எதிர்காலம் பிரஸ்ஸல்ஸிலும், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்திலும் முடிவு செய்யப்படுவதல்ல, அத்துடன் அது நிச்சயமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் தீர்மானிக்கப்படுவதல்ல. இந்த அறையில் உட்கார்ந்திருக்கும் உங்களால் தான் முடிவு செய்யப்படவுள்ளது" என கூறியபோது பலத்த கைதட்டல்கள் ஒலித்தது.

"விக்கிலீக்ஸின் நிறுவனரின் துன்புறுத்தல் என்பது, சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புதலில் ஒரு செறிந்த வெளிப்பாடும், உலக முதலாளித்துவ வர்க்கத்தின் போருக்கான உந்துதலும் ஆகும்." என்று சம்மர்ஸ் கூறினார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலையைக் கோருவதற்கு பல போராட்டங்களை நடத்தி தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து ஒரு சக்தி வாய்ந்த ஆதரவைப் பெற்றுள்ளது என்று கிரென்பெல் குறிப்பிட்டார். கைதட்டல்களின் மத்தியில் அவர் கூறினார்: "ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கோ அல்லது எந்த உத்தியோகபூர்வ கட்சிகளுக்கோ நாம் அவலம்மிக்க அழைப்புகளை விடுக்கப்போவதில்லை என்று வலியுறுத்தி கூறினோம். அசான்ஜ் மீதான தாக்குதல்களில் அவர்கள் பங்கேற்பதானது, அவர்களை ஜனநாயக உரிமைகளினதும் தொழிலாள வர்க்கத்தினதும் எதிரிகள் என்பதை நிரூபிக்கிறது”.

அசான்ஜ் மற்றும் மானிங்கை "இரு துணிச்சலான நபர்கள்", "உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் ஆதரவை பெற்றிருக்கின்றனர், இந்த ஆதரவு இப்போது ஒழுங்கமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அவர்கள் ஆளும் உயரடுக்கின் சர்வதேச சதித்திட்டத்தின் இலக்குகளாக இருக்கின்றனர், அவர்களின் பாதுகாப்புக்கான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று நிமுத் தெரிவித்தார்.

"சோசலிச சமத்துவக் கட்சி, ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கின் பாதுகாப்புக்கான போராட்டமானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு எழுச்சி பெற்று வரும் உலகப் போராட்டத்தின் தாக்குமுகப்பாக காண்கிறது" என்று மார்ஸ்டன் கூறினார்.

அவர்களது கைதுகளும் சிறைகளும், "தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியுடன் சேர்ந்து, ட்ரம்ப்பை போன்ற ஆளும் உயரடுக்கின் குற்றம் சார்ந்த அரசியல் கூறுபாடுகளின் ஒரு செயலாக தன்னைத்தானே ஒதுக்கிவிட அனுமதிக்காத ஒரு அடிப்படையான மாற்றமாகும்”, இது "ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பு மற்றும் ஜனநாயக வடிவ வடிவங்களுடன் முறித்துக் கொள்வதன்" ஒரு பாகமாகும். அவை உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் மரண நெருக்கடியின் தீங்கு மிக்க அறிகுறிகளைக் காட்டிலும் அதிகமாக ஒன்றும் இல்லை" என அவர் குறிப்பிட்டார்.

இந்த உரைகளை தொடர்ந்து, பேச்சாளர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளோடு பார்வையாளர்களிடமிருந்து வலுவான பங்களிப்புடன் ஒரு உயிரோட்டமான கலந்துரையாடலும் நடைபெற்றது.


"ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! செல்சி மானிங்கை விடுதலை செய்!" என பங்கேற்பாளர்கள் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்

அசான்ஜிற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க நாடுகடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து ஏகமனதாக ஒரு தீர்மானம் (கீழே முழு உரை பார்க்க) நிறைவேற்றப்பட்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலைக்கான போராட்டத்தில் இணைய அழைப்பு விட்டது.

லண்டன் கூட்டத்தின் வருகை மற்றும் பெருநிறுவன மற்றும் அரச ஊடகங்களின் பொய்கள் மற்றும் அவதூறையும் மீறி இரண்டு மணிநேரத்திற்கும் மேல் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்த பார்வையாளர்களின் உறுதிப்பாடு என்பன அசான்ஜ் மற்றும் மானிங் ஆகியோருக்கான வளர்ந்து வரும் சர்வதேச ஆதரவுக்கு சான்றாக உள்ளன.

வரும் நாட்களில் முழு அறிக்கை வெளியிடப்படும். கூட்டத்தின் ஒரு வீடியோ பதிவை Gordon Dimmack’s YouTube சேனலில் பார்வையிட முடியும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்! செல்சி மானிங்கை விடுதலை செய்!

லண்டனில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டம், விக்கிலீக்ஸின் நிறுவனர், வெளியீட்டாளர் மற்றும் பத்திரிகையாளரான ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான கைது, சிறைதண்டனை மற்றும் அமெரிக்க நாடுகடத்தல் நடவடிக்கைகளை கண்டனம் செய்கிறது. அசான்ஜ் மற்றும் தைரியமான இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சி மானிங்கின் உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலையை நாங்கள் கோருகிறோம்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் உயிர்களை கொன்ற போர்க் குற்றங்கள், பெருநிறுவன மற்றும் அரச ஊழல்கள் மற்றும் ஜனநாயக விரோத சதிகளை அம்பலப்படுத்தியுள்ள அசான்ஜ் மற்றும் மானிங் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். உலக மக்களுக்கு உண்மையான தகவல்களை வெளியிட்டமைக்காக அசான்ஜ் மற்றும் மானிங் மீதான அரச துன்புறுத்தல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் குற்றம் ஆகும்.

அசான்ஜ் மற்றும் மானிங்கின் விடுதலைக்கான போராட்டத்தில் இணையுமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜனநாயக உரிமைகளின் உண்மையான பாதுகாப்பாளர்களுக்கும், இந்த கூட்டம் ஒரு அவசர வேண்டுகோளை விடுக்கின்றது. "நீங்கள் தனியாக இல்லை, நீங்கள் கைவிடப்பட்டிருக்கவில்லை, நீங்கள் மறக்கப்படவில்லை. நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்” என்று அசான்ஜ் மற்றும் மானிங்கிற்கு நாங்கள் தெரிவிக்கின்றோம்.

Mahatma Gandhi Hall,

Fitzroy Square

London, May 12, 2019