ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලේඛක ශක්තික සත්කුමාර නිදහස් කර ගැනීමේ සසප උද්ඝෝෂනයට කලාකරුවෝ සහාය පල කරති

இலங்கை: எழுத்தாளர் சக்திக சத்குமாரவை விடுதலை செய்வதற்கான சோ.ச.க. போராட்டதிற்கு கலைஞர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்

5 May 2019

எழுத்தாளர் சக்திக சத்குமார தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சிறுகதை ஒன்றில் பௌத்த மதத்தை அவமதித்தார் என பௌத்த அதிதீவிரவாத குழு ஒன்று செய்த முறைப்பாட்டின் மீது ஏப்ரல் 1ம் திகதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பொல்லகஹவெல நீதவான் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்டார். நீதிமன்றில் வழங்கிய கட்டளையின் படி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்படாததால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்தமையும் தடுத்து வைத்துள்ளமையும் ஜனநாயக உரிமைகளுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். இதற்கு எதிராக சத்குமாரவை விடுவிப்பதற்காக உலக சோசலிச வலைத் தளத்தை மையப்படுத்தி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.)  முன்னெடுத்திருக்கும் பிரச்சாரத்திற்கு கலைஞர்களினதும் புத்திஜீவிகளினதும் ஆதரவு கிடைத்து வருகிறது.

காட்சி மற்றும் ஒளிபரப்பு கலைஞரும் மொழி பெயர்ப்பாளருமான லொஹான் குணவீர, உலக சோசலிச வலைத் தளத்துக்கு அனுப்பிய அறிக்கையில்  பின்வருமாறு  குறிப்பிடுகிறார்.  "கலை புத்தகங்கள் தடை செய்வதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் இது போன்று கலை படைப்பைச் செய்யும் எழுத்தாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்."


லொஹான் குணவீர

சத்குமாரவினால் எழுதப்பட்ட "அர்த" சிறு கதையின் விடய உள்ளடக்கத்துடன் ஏற்கனவே கடந்த காலத்தில் நூல்கள் வெளிவந்துள்ள போதிலும் "ஆளும் வர்க்கத்துக்கும் மத ஸ்தாபனங்களுக்கும் அவற்றின் தாக்கம் புரியாத நிலையால் எழுத்தாளர்களுக்கு சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகவில்லை. இது ஒரு புதிய நிலைமை, தடையும் ஒடுக்குமுறையும் புதிய வடிவத்துக்கு உயர்ந்துள்ளது," என குணவீர குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதிபத்திய யுத்தக் குற்றங்களை உலகுக்கு அம்பலப்படுத்திய செல்சி மானிங் மற்றும் ஜூலியன் அசான்ஜ் தொடர்பாக குறிப்பிட்ட குணவீர, "அவர்கள் உலகின் மறுபக்கத்தில் நிச்சயமில்லாத எதிர்காலத்துடன் சிறையில் வாடுகின்றனர். உலகெங்கும் அதி வலதுசாரிகள் பிரதான களத்துக்கு வரும் சூழல் ஏற்பட்டு வருகின்றது,” எனக் கூறினார்.

பௌத்த தீவிரவாத குழுக்கள் "இந்த பரந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதன் பகுதியாகவே வலுப்பெற்றுள்ளன" என அவர் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகால யுத்த காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த கொழும்பு ஆளும் வர்க்கத்தினால் உச்சத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சாரத்தினால், சமூக அரசியல் மற்றும் கலாச்சார துறைகளின் எல்லா பிரிவுகளிலும் பௌத்த நிறுவனம் தமது ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள முன்வந்துள்ளது. சத்குமாராவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் அதன் வெளிப்பாடே  என அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது, என குணவீர கூறியுள்ளார்.

"இவ்வாறு ஒரு கலைஞனை சிறை பிடித்து நீண்டகாலமாக அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை, கலையை படைக்கும் சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் மதிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டிய விடயமாகும். எனவே அதற்கு எதிராக வெளிப்படையாக குரல் எழுப்ப முன்வருமாறு அனைத்து கலைஞர்களையும் கேட்டுக்கொள்ளகிறேன்."

"அந்த உரிமைகளை பாதுகாப்பதானது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், ஒரேயொரு தீர்க்கமான வர்க்க சக்தியான தொழிலாள வர்க்கத்தின் தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே நாம் தொழிலாள வர்கத்தின் பின்னால் அணிதிரள வேண்டும். இந்த உறுதியான அடித்தளத்திலிருந்து சத்குமாரவை  விடுவித்துக்கொள்ள சோ.ச.க. ஆரம்பித்துள்ள பிரச்சாரத்துக்கு எனது முழு ஆதரவினையும்  வழங்குகிறேன்".


தர்ஷன மேதிஸ்

கலைஞரும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தர்ஷன மேதிஸ்: "பௌத்த அடிப்படைவாதிகளின் தூண்டுதலின் பேரில் வேட்டைக்கு உள்ளாகியுள்ள எழுத்தாளர் சக்திக சத்குமாரவின் விடுதலையோடு அவருடைய வெளியீட்டின் விடுதலைக்காகவும் உறுதியாக நிற்கும் நான், அவரை கைது செய்ததையும் தடுத்து  வைத்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன். கருத்து முரண்பாட்டுக்கு வழிசமைத்திருக்கும் அவரது சிறுகதை எமது கைகளுக்கு கிடைக்காவிட்டாலும், காலம் தொட்டு சிறிசேன-விக்ரம்சிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கலை மீதான ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் இது என்பதை புரிந்துகொள்வது கடினமான விடயமல்ல. இன்று சத்குமாரவுக்கு தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், நாளை ஏனைய கலைஞர்களை நோக்கி வரும்".

சினிமாத் துறையை சார்ந்தவரும் வானொலி நாடக எழுத்தாளருமான மாலக்க தேவப்பிரிய, மத தீவிரவாதம் என்பது மிகவும் பயங்கரமான நிலைமை. அதன் உச்ச வடிவம் மத பயங்கரவாதமாகும். இந்த நிலைமையில் மத தீவிரவாத அடிப்படையில் இலங்கை எங்கும் கட்டியெழுப்பப்படும் இஸ்லாம் மற்றும் பௌத்த  அதிதீவீரவாதத்தை எதிர்க்க வேண்டும்.


மாலக தேவப்பிரிய

இதற்கூடாக மனித உயிர்கள் சொத்துக்கள் பாரிய அளவில் அழிந்ததை கடந்த காலத்தில் நாம் பார்த்தோம். அத்தோடு மனிதர்களுக்கு இடையில் சந்தேகம், பயம் மற்றும் வைராக்கியம் உருவாக்கப்பட்ட விதத்தை கண்டோம் மத அதிவீரவாதிகள் இன்னுமோர் வகையில் தற்போது வெளியீட்டு சுதந்திரத்தை இல்லது செய்து, சமூகத்தை தீவீர வாதத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றனர்.

கடந்த காலத்தில் இலங்கை சூழலில் மேடை நாடகம், வானொலி நாடகம், நாவல்கள், சிறுகதைகள் போன்ற உருவாக்கங்களுக்கு தடை கோரி, அதிதீவீரவாத பௌத்த மத குழுக்களும் அரசியல்வாதிகளும், திட்டமிட்டு குற்ற பிரிவின் கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்ததை நாம் அறிவோம்.

திவீரவாத ஊடகங்கள் இவற்றுக்கு பிரச்சாரத்தை பெற்றுக்கொடுத்து இலாபத்தை தேடிக்கொண்டன. சத்குமார 2007, 56 இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமரச சட்டத்தின் 3(1) இன் கீழ் பொலிசாரினால்  குற்றச்சாட்டுக்கள்  தாக்கல் செய்து,  ஏப்ரல் 1ம் திகதி முதல் பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மறுபக்கத்தில் சர்வதேச ரீதியில் ஜூலியன் அசான்ஜ் போன்ற ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டு அடக்கப்பட்டு வரும் முறையை காண்கின்றோம். உலகெங்கும் பல்வேறு விதமான அதிதிவீரவாதங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதை காணலாம். இந்த அனைத்து அதிதிவீரவாதங்களையும் ஒரேயடியாக  எதிர்க்கவேண்டும்.

பௌத்த, கிறிஸ்தவ, இந்து, முஸ்லீம் என்ற வகையில் ஆசியாவில் தலைதூக்கி வரும் மத அதிதீவீரவாதத்தை நிராகரிக்க வேண்டும். அத்தோடு அதிதிவீரவாதத்துக்கு ஊடாக செய்யப்படும் சகல அடக்குமுறைகளையும் தடைகளையும் பயங்கரவாதம் போன்று நடவடிக்கைகளையும் வண்மையாக கண்டிக்க வேண்டும். மத கற்பனைக்கு  பதிலாக விஞ்ஞான ரீதியான சிந்தனைக்கூடாக சிந்திக்கும் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.