ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව නීතිය අවභාවිතයට ලක් කිරීම සහ ලේඛක කුසල් පෙරේරා අත්අඩංගුවට ගැනීමේ තර්ජනය

அரசாங்கம் சட்டத்தை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதும் எழுத்தாளர் குசல் பெரேராவை கைது செய்வதற்கான அச்சுறுத்தலும்

By W.A. Sunil 
8 September 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கம், அரசியல் மற்றும் பௌத்த ஸ்தாபகத்தின் தேவையின் படி, ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்தேச சாசனம் பற்றிய சட்டத்தை (ஐ.சி.சி.பி.ஆர்.) ஒடுக்குமுறை சட்டமாக ஆக்கிக்கொண்டுள்ளது.

ஐ.நா. சாசனமானது இன மற்றும் மத வெறுப்பு பரவலுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட சட்ட விதியாகவே கருதப்படுகிறது. இலங்கையில் இது, இன மற்றும் மத வெறுப்பை பரவுவதை விமர்சிப்பவர்களை தண்டிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.

ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் துஷ்பிரோகம் செய்யப்டுவற்கான மிகச் சமீபத்திய சம்வம், பத்திரிகை கலைஞரான குசல் பெரேராவை கைது செய்து வழக்குத் தொடர்வதற்கு பொலிஸ் முயற்சிப்பதாகும்.

டெயலி மிரர் பத்திரிகைக்கு அவரால் மே 17 அன்று “From Islamic terrorism to marauding Sinhala Buddhist violence” (இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து கொள்ளையடிக்கும் சிங்கள பௌத்த வன்முறை வரை) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை குறித்த புகார் பற்றி விசாரணை நடத்தவும் பெரேராவை கைது செய்வதற்கும் ஆணையிடுமாறு, பொலிஸின் திட்டமிட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட பிரிவு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோரியது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க அரசாங்கம் தவறியதற்காக, பெரேரா தனது கட்டுரையில் "விமர்சித்தார்".

அவரது கட்டுரை "மத விரோதத்தைத் தூண்டுகிறது" என்று பொலிஸ் நீதிமன்றத்தில் கூறியது. ஊடக செய்திகளின் படி, ஓய்வு பெற்ற விமானப்படை வைஸ் மார்ஷல் ஏ.பி. சோசா என்பவரே பெரேராவுக்கு எதிராக பொலிசில் புகார் செய்துள்ளார்.

பின்னர் ஒரு ட்வீட்டில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க சிறிசேன நேரடியாக தலையிட்டதாக பெரேரா குறிப்பிட்டுள்ளார். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு என்னிடம் பேசிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நான் கைது செய்யப்படமாட்டேன் என்று உறுதியளித்தார். அத்துடன் புகாரைப் பற்றி சட்டமா அதிபரிடம் குறிப்பிட்டு அவரிடம் ஆலோசனை பெறுமாறு பொலிசுக்கு அறிவுறுத்தியுள்ளார்."

சிறிசேனவின் "வாக்குறுதி" இருந்தபோதிலும், பெரேரா கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எதிரி எனத் தீர்மானிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக, பொய்யான வழக்கை புனைந்து, பழிவாங்கலைத் தூண்டுவதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவும் தயாராக இருப்பதையே அவருக்கு எதிரான பொலிஸ் வேட்டையாடல் காட்டுகிறது. பெரேராவைக் கைது செய்வதற்கான முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.

ஆனால் பெரேராவின் அரசியலுடன், சோசலிச சமத்துவக் கட்சி அல்லது உலக சோசலிச வலைத் தளத்திற்கு எந்த உடன்பாடும் கிடையாது. அரசியல் ஸ்தாபகத்துடன் நெருக்கமானவரான பெரேரா, "சுயாதீன" பத்திரிகையாளராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவரவும் அவரது நிர்வாகத்தை ஜனநாயகத்துக்கு இடமளிக்கும் ஒன்றாக சித்தரிக்கவும் செயற்பட்ட ஒரு எழுத்தாளரே அவர். பின்னர் அவர் அதன் ஒரு விமர்சகராகவும் காட்டிக்கொண்டார்.

ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை முதலாளித்துவ அரசாங்கமும் சிங்கள பௌத்த தீவிரவாத பிற்போக்கு சக்திகளும், தனது விரோதிகளுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும், அதன் பாகமாக பேச்சு சுதந்திரத்திற்கு எதிராகவும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதன் கீழ், கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லாத அதேவேளை, இந்தச் சட்டத்தின் படி குற்றவாளியாக்கப்படும் ஒருவருக்கு கடுமையான வேலையுடன் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மேற்கண்ட சட்டத்தின் கீழ் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சக்திக சத்குமார கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கதல் செய்யப்படவில்லை. இதுவரை பொல்காஹவலை நீதவான் நீதிபதி, பொலிசின் வேண்டுகோளின் பேரில் அவரது விளக்க மறியலை இரண்டு இரண்டு வாரங்கள் படி நீடித்து வருகின்றார். பதில் நீதவான் ஒருவர் இருந்த காரணத்தால், அவர் இன்று மீண்டும் மேலும் ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு சிறுகதையில், பௌத்த மதத்தை "அவமரியாதைக்கும் அவமானத்துக்கும்" உட்படுத்தியுள்ளதாக பொல்கஹவெல (பௌத்த) சாசன பாதுகாப்பு சபையின் மான்கடவல சுமன என்ற பெயரிலான பிக்கு அளித்த அபத்தமான புகாரின் பேரில், ஏப்ரல் 1 அன்று சாகுமாரா கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர், அங்குகல்லா சிறி ஜினானந்த என்ற ஒரு பிக்கு, மலக்க தேவப்பிரியவின் "கனட பாரக்" என்ற வானொலி நிகழ்ச்சிக்கு எதிராக முறைப்பாடு  செய்திருந்தார். இந்த சிங்கள பௌத்த அதிதீவிரவாதிகளின் நலன்களுக்களின் பேரிலேயே அரசாங்கமும் பொலிசும் செயல்படுகின்றன.

மத விமர்சகர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட ஐ.சி.சி.பி.ஆர். பயன்படுத்தப்படுவது பற்றி பல்வேறு சிவில் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதை கடுமையாக கண்டித்துள்ளது. "சுதந்திர ஊடக இயக்கமானது ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குத் தொடர எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் கடுமையாக கண்டிப்பதோடு சட்டத்தை அநியாயமாகப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து பொறுப்பான தரப்பினரையும் வலியுறுத்துகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், "பொறுப்புள்ள அனைத்து தரப்பினரும்”, அதாவது அரசாங்கம், பொலிஸ், பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற்போக்கு சிங்கள-பிற்போக்கு சக்திகள் அதை தவிர்த்துக்கொள்ளும் என சிந்திப்பதும் அவற்றுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தீர்வுகளைத் தேட முயல்வது மிகவும் மாயையானதாகும்.

பிற்போக்கு சக்திகளின் உதவியுடன், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கருத்து சுதந்திரத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், உலகம் பூராவும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களால் முன்னெடுக்கப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வேட்டையாடல் இயக்கம், இதன் உச்சமாகும். அமெரிக்காவின் மிலேச்சத்தனமான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காகவே அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மீதான தணிக்கை, இந்த தாக்குதலின் இன்னொரு பகுதியாகும். அடிக்கடி சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் இலங்கை அரசாங்கம், போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு என அழைக்கப்படுபவற்றை தடுத்தல் என்ற பெயரில், தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், வழக்குத் தொடுத்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க சட்டங்களை தயாரிக்கின்றது. ஜூன் 4 அன்று, அமைச்சரவை நீதி அமைச்சகத்திற்கு இதற்காக ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு பொலிஸ்-அரசை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.