ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

පුත්තලමේ කසල අංගන ව්‍යාපෘතියට එරෙහි මහජන විරෝධය පැතිරෙයි

இலங்கை புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்துக்கு பொதுமக்களின் எதிர்ப்பு விரிவடைகிறது

By Nihal Geekiyanage and Srikantha Fernando
2 April 2019

புத்தளம் சேறுக்குளம் கிராமத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய குப்பை சேகரிப்பு இடத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட அரசாங்கம் தீர்மானித்த போதிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி 13, 14 மற்றும் 15 திகதிகளில் புத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். மார்ச் 22 அன்று நடந்த போராட்டத்தை பொலிசார் தாக்கி கலைத்தனர்.

புத்தளம் பகுதிக்கு பயணித்த உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், அருவக்கல்லு குப்பை நிலையம் என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய குப்பை மலையானது, கடல் ஓரத்தில் மீனவர்கள் வசிக்கும் சேறுக்குளம் கிராமத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டனர்.

இந்த திட்டத்தினால் பிரதானமாக சேறுகுழி, கரதீவு ஆகிய இரு கிராமங்களுக்கும் சின்னநாக வில்லு, மால வில்லு, எரிகலன் வில்லு, ரா மடுவ, எலுவன்குலம், கங்கே வாடிய மற்றும் மங்கலபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என பொது மக்கள் சுட்டிக் காட்டினர்.

அவர்களின் படி சேறுகுழியில் 300 குடும்பங்களும், கரதீவில் 1,200 குடும்பங்களும் வாழ்கின்றன. பாதிப்பை எதிர்கொள்ளும் அனைத்து கிராமங்களிலும் சுமார் 7,000 குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த குடும்பங்களில் சுமார் 90 சதவீதம் மீன்வளத்தை நம்பியுள்ள அதே வேளை, மற்ற குடும்பங்கள் விவசாயம் மற்றும் உப்பு உற்பத்தியிலும் ஈடுபடுகின்றன. விவசாயத்திற்கான நீர் குழாய் கிணறுகளிலிருந்து பெறப்படுகிறது. புதிய திட்டம் தண்ணீரை மாசுபடுத்தி இந்த வேலைகள் அனைத்தையும் சாத்தியமற்றதாகிவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த திட்டம் விஞ்ஞான ரீதியாக கட்டப்படுகிறது என அரசாங்கம் கூறினாலும், அது அவ்வாறு இல்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ அரசாங்கங்களால் தொடங்கப்பட்ட இத்தகைய திட்டங்களால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை தந்து இந்த திட்டமும் பேரழிவு தருவதாக குடியிருப்பாளர்கள் வாதிட்டனர்.

2017 ஆம் ஆண்டில் மீதொடமுல்ல குப்பை மலை சரிவால் ஏற்பட்ட அழிவு மற்றும் புத்தளத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைப் பற்றி அவர்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளனர்.

குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு இத்தகைய சுண்ணாம்புக்கல் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இருப்பதாகவும் மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் மேல் மட்டத்தில் இருப்பதால் ஆபத்து அதிகம் இருப்பதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குப்பைகளில் மின்சார உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் இருப்பதால், அதன் மூலம் பாதரசம் மற்றும் ஆசனிக் போன்ற விஷங்கள் சுற்றுச்சூழலில் கசிந்து உயிர்களைக் கொல்லக்கூடும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் தனது கருத்துக்களை தெரிவித்த உதித தேசப்பிரிய என்ற மீனவர் இலங்கை செய்தித்தாள்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை கண்டனம் செய்தார்.

"அவர்கள் எங்களிடமிருந்து எடுக்கும் கருத்துக்களை வெளியிடவில்லை. அரசியல் கட்சிகள், நாட்டின் சட்டம் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் எங்களுக்காக உள்ள நிறுவனங்கள் அல்ல. நாங்கள் சொல்வதைக் கேட்கும் எந்த நிறுவனமும் கிடையாது. கடலோர பாதுகாப்பு, மீன்வளர்ப்பு, வனவிலங்கு பாதுகாப்பு இவை எல்லாம் எங்கே? நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கிறீர்களா?”

அவர் மேலும் கூறியதாவது: “இவை முஸ்லிம்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றன. இது நம் அனைவரின் கூட்டுப் போராட்டம் ஆகும். பாருங்கள், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்துக்கு எதிராக மக்கள் பிரச்சாரம் செய்தனர். மக்கள் தோற்றுவிட்டனர் அந்த திட்டமே வெற்றி பெற்றது. பாருங்கள் இன்று காற்றில் மிதக்கும் சாம்பலால் மக்கள் சங்கடப்படுகிறார்கள். இந்த சாம்பல் கடலில் விழுகிறது. வெப்ப மின் நிலையத்தின் கொதிக்கும் நீர் சுமார் 2-3 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் விடப்படுகிறதுகிறது. இவை சுற்றுச்சூழல் பாதிப்பு. புத்தளம் சீமெந்து தொழிற்சாலையும், அதிலிருந்து வெளியேறும் தூசியும் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது. இவற்றால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.”

இச்சிகா என்ற நிறுவனம் உச்சிமுனை பகுதியில் ஒரு இல்மனைட் சுரங்கத் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் உள்ளதாகவும் இந்த திட்டத்தில் மண் கழுவிவிடப்படுவது கலப்பு நீருக்குள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சினைகளால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமங்களை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறார்கள் என்பதையும் தேசப்பிரிய சுட்டிக்காட்டினார். "அதிரடிப் படையின் உதவியுடனவாது இந்த திட்டத்தை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது."

மல்கம் ஜோசப் என்ற மீனவர் கூறினார்: “கன்தகுழியில் (கல்பிட்டி குடா) குண்டு பயிற்சி மைதானம் உள்ளது. இந்த குண்டு சத்தங்கள் பூமியை அதிரச் செய்கிறன. மறுபுறம், சீமெந்து தொழிற்சாலையில் சுண்ணாம்பு கற்களை உடைக்க டைனமைட் வைக்கின்றார்கள். வீடுகள் அதிருந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கழிவு மேலாண்மை மையத்தில் நிலைத்தை இடிக்கிறார்கள். எங்கள் வீடுகள் அதிர்கின்றன. பின்னர் இந்த அதிர்வுகளால் மீன்கள் நீண்ட தூரம் சென்றுவிடுகின்றன. எங்களுக்கு வேலை இல்லாமல் போயுள்ளது."


மல்கம் ஜோசப்

அவரைப் பொறுத்தவரை, மீனவர்களுக்கு வேலை செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பல மீனவர்கள் தங்கள் படகுகளை ஓரங்கட்டிவிட்டு கொழும்பில் கட்டிடத் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

அவர் ஊடகங்கள் மீதான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்: “சிரச கம்மெத்தே (கிராமத்தின் நடுவில்) நிகழ்ச்சியில் எங்களை விற்றுத் தின்றார்கள். உணவு மற்றும் பானங்களுக்கு செலவு செய்வதன் மூலம் அவர்கள் இறுதியாக கழிவு திட்டத்தை நியாயப்படுத்தினர். அந்தப் பகுதி முழுவதும் பெய்த மழையால், வேலைத் தளம் கழுவிக்கொண்டு பெரிய நீரோடை கலப்புக்குள் இணைந்தது. முழு கலப்பும் சிவப்பு நிறமாக மாறியது. எங்களது ‘மோடா’ (மீன் வர்க்கம்) திட்டமும் அந்த நீர் மாசுபாட்டால் அழிக்கப்பட்டது. கமராக்களை கலப்பு பக்கம் திருப்புமாறு நாங்கள் அன்று சிரச கமராகாரர்களிடம் கேட்டோம். அவர்கள் அதை செய்யவில்லை. மக்களை கலப்புவைப் பார்க்க வேண்டாம் என்று கூறினார்கள். மக்கள் சிரசவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி குழப்பிவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதைத் திருத்தி ஓளிபரப்பியிருந்தார்கள்.”

ஆங்கில ஆசிரியரான அக்ரம் கூறியதாவது: “மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவினர் பிரதேச செயலகத்திற்கு வந்தார்கள். மெகா பொலிஸ் திட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் அதில் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு ப்ரொஜெக்டரில் படம் காட்டி, இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது என்றார். இது அடுக்கு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது என்றனர். நாங்கள் அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டோம்: சுண்ணாம்புக் கல்லை உடைக்க டைனமைட்டை பாவிக்கும் போது அடுக்குகளுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க நிலத்தடி கேமராக்களைப் பயன்படுத்துகிறீர்களா? இல்லை என்று சொன்னார்கள். பூமிக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று நாம் கேட்டோம். நாங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறோம், அது சரிந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர்.”

மார்ச் 22 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதேசத்துக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று அவரை சந்திக்க கொழும்புக்கு சென்றது. ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. மனுவை பொறுப்பேற்ற ஜனாதிபதியின் செயலாளர், அவர் நல்ல செய்தியுடன் பிரதேசத்திற்கு வருவார் என கூறி அனுப்பியதாக, அக்ரம் கூறினார்.

"நாங்கள் அதை நம்பி திரும்பி வந்தோம். ஜனாதிபதி வந்தபோது அவருக்கு கடிதங்களை கொடுக்க எங்களை அனுமதிக்கவில்லை. குப்பை பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாங்கள் கடிதத்தை வழங்க சென்றபோது, ​​பொலிசார் எமது பெண்களை விரட்டியடித்தனர். கடிதமொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஜனாதிபதி அதைப் புறக்கணித்தார்.”


அக்ரம்

அவர் மேலும் கூறியதாவது: "நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. நான் இன்னும் 10-15 ஆண்டுகள் வாழ்வேன். நாங்கள் எதிர்கால பரம்பரைக்காகவே போராடுகிறோம். நாம் போராடாமல் விட்டால், நம் முதியோர்கள் அதை எதிர்த்துப் போராடாததாலேயே இன்று நாம் கஷ்டப்படுகிறோம் என்று வருங்கால சந்ததியினர் குற்றம் கூறுவார்கள். எங்களுக்கு இடையில் சிங்கள, முஸ்லிம் பிரிவுகள் கிடையாது. நாங்கள் சகோதரத்துவமாக போராடுகிறோம். நாங்கள் ஆரோக்கியமான, அமைதியான சூழலில் வாழ விரும்புகிறோம்.”