ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Auto and railway workers in Tamil Nadu, India defend Julian Assange and Chelsea Manning

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாகன மற்றும் இரயில் தொழிலாளர்கள், ஜூலியன் அசான்ஞ் மற்றும் செல்சியா மானிங்கை பாதுகாக்கின்றனர்

நமது நிருபர்கள்
22 ஆகஸ்ட் 2019

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை சேர்ந்த வாகன மற்றும் இரயில் தொழிலாளர்கள், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஞ் மற்றும் துப்பு கொடுத்த செல்சியா மானிங்கிற்கு ஆதரவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்தும் பிரச்சாரத்திற்கு பலத்த ஆதரவு குரல் நல்கியுள்ளனர்.

அனைத்துலகக் குழுவின் உலகளாவிய பிரச்சாரத்தின் பாகமாக, இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட்கள் முறையே சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செப்டம்பர் 1 மற்றும் கொல்கத்தாவில் செப்டம்பர் 15 நடக்கவிருக்கும் பொது கூட்டத்திற்க்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ICFI பிரச்சாரகர்கள், சென்னையில் இரயில் தொழிலாளர்களிடமும், ஸ்ரீபெரும்புத்தூர் மற்றும் ஓரகடத்தில் உள்ள தொழிற்துறை மையங்களில் வாகன தொழிற்சாலைகளில் பணிபுரியும் வாகனத் தொழிலாளர்களிடமும் பேட்டி எடுத்தனர். இந்தியா முழுக்க உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ஆலைகளில் கொடூரமான சுரண்டப்படும் சூழ்நிலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இவர்களை பாதுகாப்பதில், ICFI-WSWS இன் பிரச்சாரம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அமைப்பை கட்டும் இதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இந்திய ஆளும் வர்க்கத்தால், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் வாழும் நிலைமைகள் அழிக்கப்பட்டு வருவதை பற்றியும், அசான்ஞ் மற்றும் மானிங்கை அமெரிக்கா தலைமையில் தண்டனைக்கு உட்படுத்துவதையும் கடுமையாக கண்டனம் செய்தனர்.


சிமியோன்

சிமியோன், 21, தமிழ்நாட்டில் இரண்டு ஆலைகளை கொண்டுள்ள  ஹூண்டாயில், பயிற்சியாளராக பணிபுரிகிறார், அவர் கூறியது, "இவர்கள் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து அமெரிக்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினர். இந்த இரு நபர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

சிமியோன், தமிழக அரசாங்கம் வாகன பாக தொழிற்சாலையை "பொது பயன்பாட்டு சேவை"யாக அறிவித்தது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள ஹூண்டாய் ஆலைகள் வருடத்திற்கு 700,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும்.


திருப்பதி

திருப்பதி, இவர் டானா இந்தியா என்ற நிறுவனத்தில் வேலை செய்பவர். இவருக்கு அசான்ஞ் மற்றும் மான்னிங் கைது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ICFI ஆதரவாளர்களுடனான, கலந்துரையாடலுக்கு பின், அவர் கூறினார், " நிதர்சன உண்மையை அறிவதில் ஆச்சரியம் கொள்கிறேன்- போர், அசான்ஞ் மற்றும் இந்திய அரசியல் நிலைமைகள் பற்றிய உண்மைகள். உங்களை தவிர யாரும் அசான்ஞ் குறித்து பேசுவது இல்லை. நான் அசான்ஞ்சை ஆதரிக்கிறேன் மற்றும் போரை எதிர்க்கிறேன்."

அவர் மேலும் கூறினார், "ஒவ்வொரு இளைஞரும் போரை எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பு, உலகம் முழுக்க தூக்கி எறியப்படவேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த அமைப்புக்குள் தொழிலாள வர்க்கத்துக்கு எதிர்காலம் கிடையாது."


மகேஷ் குமார்

மகேஷ் குமார், ராயல் என்பீல்டில் பயிற்சியாளராக பணி புரிகின்றார். இந்த இருசக்கர வாகன கம்பெனி, தமிழ்நாட்டில் மூன்று ஆலைகளை வைத்துள்ளது.

"எனக்கு அசான்ஞ் பற்றி ஒன்றும் தெரியாது, ஆனால் நீங்கள் சொன்னதை கேட்ட பின்னர், அவர் உடனே விடுவிக்கப்படவேண்டும் என்று தோன்றுகிறது", என்று கூறினார்.

மத்திய மாநில முதலாளித்துவ கட்சிகள் பற்றி கூறுகையில், குமார் சொன்னார், "அரசியல்வாதிகள் இங்கு தேர்தலின் பொழுது மட்டுமே வருவார்கள், ஆனால் அவர்கள் நாம் சந்திக்கும் நிஜ பிரச்சனைகளை சரி செய்ய தவறிவிடுகின்றனர். நான் கிராமப்புற தமிழகத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தேன், விவசாய பாசனத்துக்கு நீர் இல்லாமையே அங்கு தொடர்ந்து இருக்க முடியாமைக்கு காரணமாகும்.

குமார் தனது வேலை மற்றும் புதிய அடக்குமுறை சட்டங்கள் பற்றியும் பேசினார்: "எனது பயிற்சிக் காலம் மூன்று மாதங்கள், அனால் பயிற்சிக்கு பின் வேலை கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. இந்த கால கட்டத்தில் கம்பெனி கொடூரமான வேலை நிலைமைகளை திணிக்கின்றது. நான் தமிழ்நாடு அரசாங்கத்தின் வேலைநிறுத்தங்களை தடை செய்யும் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்க்கிறேன். சமத்துவத்துக்கான உங்களது எண்ணக்கருவை நான் ஆதரிக்கின்றேன்."


ஜானகி ராமன்

ஜானகி ராமன், இன்னொரு ராயல் என்பீல்ட் தொழிலாளி கூறியது: "நான் அசான்ஜை ஆதரிக்கிறேன், மற்றும் போரை எதிர்க்கிறேன், ஏனென்றால் அது மனிதகுலம் மற்றும் இந்த கிரகத்தையே அழித்து விடும்.”

ராமன், மக்கள் முகம் கொடுக்கும் சமூக பிரச்னைகள் குறித்து, முதலாளித்துவ வர்க்கத்தின் மெத்தனத்தை பற்றி பேசினார், மேலும் அவர் தமிழக அரசாங்கம், மாநிலத்தில் நிலவும் பெரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க மறுக்கின்றது. "அவர்கள் எப்போதும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாட்டார்கள்.” என்றார். மேலும் கூறுகையில் “செல்வந்தர்கள் மேலும் செல்வத்தை குவிக்கின்றனர் ஏனென்றால் அரசாங்கங்கள் அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றம் வருவது தொழிலாளர் அரசின் கீழே ஆகும்” என்று அவர் சொன்னார்.


கோபி

கோபி, 54, ICF (Integral Coach Factory) இல் வேலை செய்யும் இவர் அசான்சுக்கு ஆதரவு தெரிவித்து அவரது விடுதலையை கோரினார்.

கோபி, மோடி அரசாங்கத்தின் செயல்களான, ICF மற்றும் இரயில்வேயை தனியாருக்கு தாரைவார்ப்பதை சாடினார். "நிர்வாகம், தனியார்மயமாக்கல்களை, ICF ஐ நிர்வகிக்க நிதி இல்லை என்று கூறி நியாயப்படுத்துகிறது. அது, 30 வருட பணி பூர்த்தி செய்தவர்களை அல்லது 55 வயது அடைந்தோரை, "ஓய்வில்" செல்ல நிர்ப்பந்திக்கின்றது, ஆனால் இனிமேல் முழு ஒய்வு ஊதியம் கிடையாது. தொழிலாளர்கள் இது நாள் வரை ஓய்விற்கு பின் பெற்று வந்த சலுகைகளான, இலவச மருத்துவமோ, இரயிலில் இலவச பயணம் போன்றவையும் இனி கிடையாது."

"ICF இல் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன, ஒன்று அனைத்து இந்திய இரயில்வே கூட்டமைப்பு, இதற்கு எந்த ஒரு கட்சியுடனும் இணைப்பு கிடையாது, இன்னொன்று தேசிய இந்திய இரயில்வே கூட்டமைப்பு, இது காங்கிரஸின் தொழிற்சங்கம், இவை இரண்டும் நிர்வாகத்தின் கரங்களாக வேலை செய்கின்றன. அவர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை ,தொழிலாளர்களின் அழுத்தத்தினால் தான் வெளியிட்டுள்ளனர்."

துளசி தாஸ், 57, மற்றோரு ICF தொழிலாளி அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்தார் மேலும் அவர் இங்கிலாந்தின் சிறையில் இருந்து அவரை விடுவிக்க கோரினார். "அசான்ஞ் அமெரிக்காவின் போர் குற்றங்களை அம்பலபடுத்தினார், அதனால் நான் அவரை மற்றும் உங்களது பிரச்சாரத்தை ஆதரிப்பேன்." என்று கூறினார்.

ICF தனியாருக்கு போவதை பற்றி கூறுகையில், "ICF தனியார் கைகளுக்கு சென்றால் என் வாழ்க்கையே நாசமாகி விடும். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயற்படுகின்றன. நீங்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கம் பற்றி பேசினீர்கள். எனக்கு அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது, ஆனால் அதற்கு தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த கட்சி தேவை."

ஜோதி, ஒரு கைவினைஞர் கூறினார், "நான் ஜூலியன் அசான்ஜை, அவர் உண்மையை பேசியதால் ஆதரிக்கிறேன். அவரை ஒரு சர்வதேச பிரச்சாரத்தின் வாயிலாகவே வெளி கொணர முடியும் என்பதை நான், ஒப்பு கொள்கிறேன்."

அவர் இந்திய அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சாடினார். "CPM மற்றும் CPI உட்பட யாரும் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை. ஒரு காலத்தில் நான் நினைத்திருந்தேன், பெரியாரின் (திராவிட அரசியலின் முன்னோடி) சிந்தனை, சாதி மற்றும் பெண்ணடிமை போன்ற பிரச்சனைகளை தீர்த்து விடும் என்று. ஆனால் தீர்ந்த பாடில்லை. உங்களுடன் பேசுகையில் நான் அறிந்து கொண்டேன், அனைவருக்கும் ஜனநாயக உரிமைகள் கிடைக்க, ஒரு புரட்சிகர அரசாங்கம் தேவை.

ஹரிஹர சுதன், 21, TVS இல் வேலை செய்யும் இவர், ஜூலியன் அசான்ஜ் சிறையில் அடைப்பு மற்றும் துன்புறுத்தபடுவதை மிகவும் நெருக்கமாக கவனித்து வந்துள்ளார்.

"அவர் உலக அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளார், அதனால் தான் அவருக்கு தஞ்சம் கொடுக்க அனைத்து நாடுகளும் மறுத்து விட்டன." அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தபட்டால், அவர் கொல்லப்படுவார் என எச்சரித்ததோடு, மேலும் ICFI - WSWS இன் பிரச்சாரத்தையும் ஆதரித்தார். "அமெரிக்கா, பொய்களின் அடிப்படையில் ஈராக்கை ஆக்கிரமித்தது" என்று அவர் கூறியதோடு, "நான் உலகப் போரை எதிர்க்கிறேன், அதனை நிறுத்த ஒரே வழி தொழிலாள வர்க்கத்தை சர்வதேசிய ரீதியாக இணைப்பதாகும்" என்பதையும் ஒப்புக்கொள்கிறேன் என்றார்.