World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Zionism's legacy of ethnic cleansing

றிணீக்ஷீt 1மிsக்ஷீணீமீறீவீ மீஜ்ஜீணீஸீsவீஷீஸீ நீக்ஷீமீணீtமீs னீஷீக்ஷீமீ றிணீறீமீstவீஸீவீணீஸீ க்ஷீமீயீuரீமீமீs

இனச்சுத்திகரிப்பில் சியோனிசத்தின் பாரம்பரியம்

பகுதி 1- இஸ்ரேலும் நாடு திரும்புவதற்கான பாலஸ்தீனர்களின் உரிமையும்

By Jean Shaoul
23 January 2001

Use this version to print

மத்தியகிழக்கு சமாதானப்பேச்சுவார்த்தைகளின் உடைவின் மத்திய பிரச்சனையாக இருப்பது 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் நாட்டையும் வீட்டையும் இழந்த பாலஸ்தீனர்களின் நாடு திரும்பும் உரிமையை ஏற்றுக்கொள்ள சியோனிச அரசு நிராகரிப்பதாகும். இக்கட்டுரை இவ்விடயம் தொடர்பான இரு பிரிவான கட்டுரையின் முதற் பகுதியாகும்.

ஐக்கிய நாடுகளின்படி தற்போது 3.5 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் தற்போது உள்ளனர். இவர்களில் 1948-49ம் ஆண்டு யுத்தத்திலும் 1967 ''ஆறுநாள் யுத்தத்திலும்'' நாட்டைவிட்டு வெளியேறியவர்களும் அவர்களின் சந்ததியினரும், பின்னர் இஸ்ரேலில் இருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட எண்ணுக்கணக்கற்றவர்களும் அடங்குவர். இவர்களின் பெரும்பான்மையினர் காஸா பிரதேசத்திலும், மேற்கு கரையோரப்பகுதியிலும், ஜோர்தானிலும், லெபனானிலும், சிரியாவிலும் மிகமோசமான நிலைமைகளில் அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் பலர் மத்திய கிழக்கின் பலபகுதிகளில் வாழ்ந்துவருவதுடன், ஏனையோர் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

பாலஸ்தீன அகதிகளினதும் அவர்களின் சந்ததியினரினதும் நாடுதிரும்பும் உரிமையை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் விடாப்பிடியாக நிராகரிப்பது அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான பொறுப்பையும் நிராகரிப்பதற்கு ஒத்ததாகும். மேலும் அது இஸ்ரேலில் யூத பெரும்பான்மையை முடிவுகட்டிவிடும் என்பதால் இது சியோனிச அரசின் உயிர்வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் என மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகின்றது.

பதவிவிலகிப்போகும் ஜனாதிபதி கிளின்டன் இஸ்ரேலியர்களும் யசீர் அரபாத்துக்கும் இடையில் ஒரளவு சாதகமான உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றார். இதன்மூலம் பாலஸ்தீன தலைவர் தனது மக்களுக்கு ஒரு இறுதி உடன்பாட்டிற்கான வடிவம் ஒன்றை விற்க சாதகமாக்க முயன்றனர்.

இஸ்ரேலை குடும்பங்கள் ஒன்றிணைவின் கீழ் 100,000 அகதிகளை நாடுதிரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு கிளின்டன் முன்மொழிந்தார். பாலஸ்தீன நிர்வாகம் சில ஆயிரக்கணக்கானவர்களை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதுடன் மிகுப்பகுதியினருக்கு நஷ்ட ஈடுவழங்குவதற்காக சர்வதேச நிதியம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி எண்ணிக்கை உடன்பாட்டுக்கு உரியதாக இருக்கலாம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பலஸ்தீனர்களின் அடிப்படை உரிமை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.

ஒரு கையளவான அகதிகளை மட்டும் இஸ்ரேலுக்கு திரும்புவதை ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ள இஸ்ரேலிய அரசியல் தட்டிருக்கு இம்முன்மொழிவுகளைகூட ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. அத்துடன் பாரிய அகதிகளின் திருப்பத்தால் கணிசமானளவு விரிவடைந்துள்ள ஒரு பாலஸ்தீன அரசை தனது எல்லையில் சகித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.

இஸ்ரேல் அரசின் உருவாக்கம்

1930களிலும் 1940களிலும் ஐரோப்பிய யூதர்கள் மீதான கோரமான சம்பவத்தினால், நாசிகளால் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டதில் முடிவடைந்ததை தொடர்ந்து 1948ம் ஆண்டு இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டது. சியோனிச இயக்கத்தால் 1917 இலிருந்து பிரித்தானியாவால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த பாலஸ்தீனத்தை பிரித்து ஒரு தனிநாட்டை உருவாக்கும் முன்னோக்கின் கீழ் யூதர்களால் உணரப்பட்ட தைரியமின்மையை திசைதிருப்பமுடிந்தது. நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறையையும் அவமரியாதையையும் எதிர்நோக்கிய மக்களுக்கு ஒரு ஜனநாயக சுவர்க்கமாக உருவாக்கப்படும் யூத அரசு இருக்குமென கூறப்பட்டது. யூத வாதத்திற்கு தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அதன் கதவுகள் திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டது.

பாலஸ்தீனத்தினுள் யூதர்கள் சிறுபான்மையாகவுள்ள இப்படியான ஒரு அரசை உருவாக்கியதானது தவிர்க்கமுடியாதவாறு இன்று இனச்சுத்திகரிப்பு என அழைக்கப்படுவதை நோக்கி இட்டுச்சென்றது. சியோனிசத்தின் மத்திய சுலோகமாக ''நாடில்லாத மக்களுக்கு மக்களில்லாத ஒரு நாடு'' என்பதாக இருந்தது. இந்த அரசின் அடித்தளமாக அங்கு ஏற்கனெவே வாழ்ந்து கொண்டிருந்த யூதரல்லாத மக்களின் உரிமையை நிராகரித்த முக்கியமாக ஜனநாயகமற்ற கொள்கை இருந்தது. மேலும் நவீன அரசுகளால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தூக்கிவீசப்பட்ட மதவாத அதிகாரிகளுக்கு அங்கீகாரத்தையும் வழங்கியது.

2ம் உலகயுத்தத்தின் பின்னர் உலகம் முழுவதும் இருந்த யூதமக்கள் மீதான அனுதாபமும் இப்படியான ஒரு அரசு உருவாகுவதற்கான ஆதரவை வழங்கியது. மேலதிகமாக முக்கிய சக்திகள் விசேடமாக அமெரிக்கா இஸ்ரேலின் உருவாக்கத்தை இப்பிரதேசத்தில் தனது நலன்களை அதிகரித்துக்கொள்ளும் வழியாக நோக்கியது, அல்லது ஆகக்குறைந்தது மத்திய கிழக்கில் ஆதிக்கசக்தியாக இருந்த பிரித்தானியாவினை கட்டுப்படுத்தலாம் என எண்ணியது. இதன் விளைவாக அரபு உலகத்தின் ஆத்திரத்தின் மத்தியில் சியோனிஸ்டுகளால் நவம்பர் 1947 இல் வெற்றிகரமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையை பாலஸ்தீனத்தை இருநாடுகளாக, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு தூண்டக்கூடியதாக இருந்தது.

1948 மே மாதம் Ben Gurion [இஸ்ரேலின் முதலாவது பிரதமராக பின்னர் பதவியேற்றார்] இஸ்ரேல் அரசின் உருவாக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அண்மையிலுள்ள அரபு நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் உடனடியாக யுத்தம் உருவாகியது. இவ் யுத்தம் ஜனவரி 1949 வரை நீடித்தது.

1948-49 யுத்தமும் பாலஸ்தீனர்களை திட்டமிட்டபடி வெளியேற்றியதும்

பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்ததானது இஸ்ரேல் அரசை உருவாக்குவதற்கான முக்கிய முன்நிபந்தனையாக இருந்தது.

லண்டனும் இப்பிரிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவியளிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்த்திருந்தபோதும், அது இம்முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் கலந்துகொள்ளவிரும்பாது பிரித்தானியா தனது நிர்வாக, படைப்பிரிவினரை வெறுப்புடன் வெளியேற்றியது. இது எந்தவகையிலும் பாலஸ்தீனர்களின் உரிமை மீதான அக்கறையால் அல்ல, மாறாக அப்பிரதேசத்திலுள்ள தனது ஆதரவாளர்களான ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்றவற்றின் ஆதரவை இழப்பது தொடர்பான பயத்தாலும், அப்போது பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த ஈரானிலும் வளைகுடா நாடுகளிலும் உள்ள சொத்துக்களை ஆபத்திற்குள்ளாக்க விரும்பாததாலுமாகும்.

அதன் இறுதியில் பிரித்தானியா ரான்ஸ் ஜோர்டானின் [தற்போது ஜோர்டான்] அரசரான அப்துல்லாவை பிரித்தானிய உத்தியோகஸ்தர்களையும் நிதி உதவியையும் பெற்றுவரும் அரபு படையை பாலஸ்தீனர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமாறு இரகசியமாக ஒழுங்குசெய்தது.

அப்துல்லா மட்டுமல்ல ஏனைய அரபுத்தலைவர்களும் தற்போதைய இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் முன்னோடியான ஹகானா (Hagana) வினை தமது ஒன்றிணைந்த படையால் இலகுவாக தோற்கடிக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் இஸ்ரேல் சோவியத்யூனியனின் உதவியிலான செக் [Czech] ஆயுதங்களால் எண்ணிக்கையிலும் இராணுவத்திலும் முன்னணியில் இருந்தது விரைவில் தெளிவானது. அடுத்த 7 மாதங்களில் ஹகானா பாலஸ்தீன மக்களை அயலிலுள்ள அரபு நாடுகளுக்கு அவர்களின் வீடுகளில் இருந்து துரத்தியடித்து ஐக்கிய நாடுகள் சபையால் முன்மொழியப்பட்டதை விட கூடுதலான பிரதேசத்தினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. இதனுள் ஜெருசலமின் ஒரு பகுதியும் நெகாவ் பாலைவனமும் அடங்கும்.

பிரித்தானிய கணக்கெடுப்பு ஒன்று 1947ம் ஆண்டு பாலஸ்தீன சனத்தொகை 1,157,000 பாலஸ்தீன முஸ்லீம்கள், 146,000 கிறிஸ்தவர்கள், 580,000 யூதர்களும் இருந்ததாக பதிவுசெய்திருந்தது. இரண்டு வருடத்தின் பின்னர் இஸ்ரேலாக மாறிய பாலஸ்தீன பிரதேசத்தில் 200,000 பாலஸ்தீனர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமித்தது இன்னும் மோசமாக இருந்தது. 1946 இல் பின்னர் இஸ்ரேலாக மாறிய பிரதேசத்தில் 12% இற்கு குறைவான பிரதேசத்தையே யூதர்கள் சொந்தமாக கொண்டிருந்தனர். இது 1948-49 யுத்தத்தின் பின்னர் 77% ஆக அதிகரித்தது.

பல பாலஸ்தீனர்கள் யுத்தத்தில் இருந்த தவிர்த்துக்கொள்ள வெளியேறியதுடன், கூடுதலானோர் சியோனிச பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கினால் என்ன நிகழும் என்ற பயத்தால் வெளியேறினர். மிகவும் மோசமான சம்பவங்களில் ஒன்று Deir Yassin படுகொலையாகும். இதில் Menachem Begin இன் Irgun குழு வீட்டுக்கு வீடு சென்று பாலஸ்தீனர்களை கலைத்தபோது 250 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இரத்தம் உறையசெய்யும் வகையில் படுகொலை செய்யப்பட்டனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என தெரிந்திருந்த போதும் அண்மைவரையில் ''கட்டுப்பாட்டுக்குள் இல்லாத'' ஒரு குழுவால் செய்யப்பட்டதாக தொடர்ந்தும் கற்பனை செய்யப்படுகின்றது. Benny Morris இன் பாலஸ்தீன அகதிகள் பிரச்சனையின் தோற்றம் என்ற புத்தகத்தில் 1947-1949 இன் பதிவுகள் முன்வைக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் ''புதிய வரலாற்றாசிரியர்களில்'' ஒருவரான Benny Morris இப்படுகொலைக்கு ஹகானா உதவியளித்ததையும் கலந்துகொண்டுள்ளதையும் மிக தெளிவாக்குகின்றார். மிக முக்கியமானது என்னவெனில் Deir Yassin படுகொலை பாலஸ்தீனத்தை விட்டு அரபுமக்களை திட்டமிட்டபடி வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். Morris விபரிப்பது போல் முழுப்பயங்கரமும் அதன் காட்டுமிராண்டித்தனமும் ''பாலஸ்தீனத்தை விட்டு அரபு கிராமவாசிகளை வெளியேறுவதை துரிதப்படுத்திய யுத்தத்தில் இறுதிவரை நீடித்த ஒரு தனி நிகழ்வாகும்''.

சில அரபு கிராமத்தவர்களே வெளியேறினர். 800,000 இற்கு அதிகமாக அல்லது முழு பாலஸ்தீன சனத்தொகையின் 2/3 பகுதியினர் வெளியேறினர். பின்னர் இஸ்ரேலியர்கள் Deir Yassin இன் அழிவுகளின் மத்தியில் தற்போதய ஜெருசலமின் முன்நகரமான Givat Shaul ஐ கட்டினர்.

ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்ட சமாதான ஆணைக்குழு யூதர்களால் 80% ஆன நிலங்கள் பலாத்காரமாக பறிக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. 1950ம் ஆண்டில் நாட்டில் இல்லாதோரின் சொத்துடைமை சட்டத்தின் கீழ் இப்பறித்தலை சட்டபூர்வமாக்கியது. மேலும் அரசு சொத்துடைமை சட்டத்தில் கீழும், நில அதிகார சட்டத்தின் கீழும் உண்மையான பாலஸ்தீன சொந்தக்கரர்களுக்கு திரும்ப வழங்குவதை மறுக்கப்படுகின்றது.

பின்னைய வருடங்களில் பாலஸ்தீனியர்கள் தமது சொந்தவிருப்பினால் அல்லது அரபு தலைவர்களின் தூண்டுதலால் வெளியேறியதாக இஸ்ரேல் கூறியது. அதன் பொது உறவுகளுக்கான சாதனங்கள் இஸ்ரேல் ஒரு வெறுமையான, புறக்கணிக்கப்பட்ட, ஜனசஞ்சாரமற்ற பிரதேசத்தில் கட்டப்பட்டதாக எடுத்துக்காட்ட கடுமையான பிரச்சாரம் செய்தன. இதற்கு எதிரான சாட்சியங்களை ஒடுக்குவதற்காக தணிக்கை பிரயோகிக்கப்பட்டது. எந்தவொரு விமர்சனமும் யூத எதிர்ப்புவாதம் என நிராகரிக்கப்பட்டது.

பிரித்தானிய பத்திரிகையாளரான Robert Fisk தனது புத்தகமான Pity the Nation இல் எவ்வகையில் நில அதிகார சட்டம் இயங்கியது என்பதை விபரமாக எடுத்துக்காட்டுகின்றார். நாட்டில் இல்லாதோரின் சொத்தை பராமரிப்பவரை Fisk பேட்டி கண்டபோது, அவர் 70%மான இஸ்ரேல் நிலத்திற்கு அரபு, யூத இரண்டு உடைமையாளர்கள் இருக்கலாம், ஒரே நிலத்திற்கு பிரித்தானிய நிர்வாகமும் யூத உறுதியும் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். Fisk இன் கட்டுரை வெளிவந்ததும் அது இஸ்ரேலிடமிருந்தும் பிரித்தானியாவிலிருந்த அதன் ஆதரவாளர்களிடமிருந்தும் பலத்து எதிர்ப்பை எதிர்நோக்கியது.

உண்மையை ஒடுக்குவதில் ஒருபகுதியாக இஸ்ரேலின் தலைவர்களும் தணிக்கைசெய்தனர். ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக்காட்டுகின்றேன். 1979 இன் இறுதியில் இராணுவ தலைவரும் பிரதம மந்திரியுமான இட்ஷாக் ரபீனின் ஞாபகார்த்தங்கள் தணிக்கைக்குள்ளாகின. தானும் இன்னொரு Harel படைப்பிரிவின் யூத படைத்தளபதியுமான ஜிகால் அலனும் ஒரு சந்திப்பின் போது Ben Gurion இடம் ''இந்த மக்களை என்ன செய்வது என கேட்டபோது'' ''நாட்டைவிட்டு துரத்து'' என அர்த்தப்படும் விதத்தில் கைகளை அசைத்ததாக குறிப்பிட்டது தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. உடனடியாக இப்படைப்பிரிவு லொட், றமலா நகரங்களை சேர்ந்த 50,000 அராபியர்களை சுற்றிவளைத்து இஸ்ரேலைவிட்டு 15 மைல்கள் தூரம் கால்நடையாக அரபு படைகளால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசத்திற்கு கட்டாயப்படுத்தி துரத்தினர். இப்படி துரத்தப்பட்டவர்களில் பின்னர் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கான பொதுஜன முன்னணியின் தலைவரான ஜோர்ஜ் ஹபாஸ் ம் அடங்குவார். ரபீன் இந்நடவடிக்கையை ''மோசமானதும் மோசமானதும்'' என விபரித்தபோதும் அது இராணுவ ரீதியாக அவசியமானது என பாதுகாத்தார்.

பாலஸ்தீனர்களை வெளியேற்றியது உயர்மட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பதையும் இது அரபு கோலியாத்துக்கு எதிரான சியோனிஸ்டுகளின் தாவித்தின் போராட்டம் போன்றது என்ற விடாமுயற்சியாக செய்யப்பட்ட புனைகதையுடன் முரண்படுகின்றதால் இப்பந்தி வெட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர் இன்று இஸ்ரேல் எனப்படும் மத்திய பகுதியை சியோனிஸ்டுகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. ஏனெனில் பிரித்தானியாவால் தலைமை தாங்கப்பட்ட அரசர் அப்துல்லாவின் படையினர் தமது அராபிய நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்காமலே இப்பிரதேசத்திலுள்ள தமது படைகளை வெளியேற்றினர்.முக்கியமாக எகிப்து உட்பட ஏனைய அராபியபடைகளுக்கான தொடர்புகள் இல்லாது போனதால் இலகுவாக தோற்கடிக்கப்பட்டது. இதன் விளைவாக 1947 இல் ஐக்கியநாடுகள் தீர்மானத்தில் குறிப்பிட்டதிலும் பார்க்க 1/3 பகுதி கூடுதலாக 8000 சதுரமைல் அளவிலான நாட்டை இஸ்ரேல் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய நாடுகள் தலையிட்டு ஒரு யுத்தநிறுத்தத்தை ஒழுங்கு செய்தது. ஆனால் இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் இஸ்ரேலின் வெற்றியை ஏற்றுக்கொண்டதுடன், அதன் விரிவுபடுத்தப்பட்ட பிரதேசத்தை ஒரு மாற்றமடையாததாக ஏற்றுக்கொண்டு பாலஸ்தீனர்களின் பிரச்சனைகளை ஒரு அகதிகள் பிரச்சனையாக மட்டுமே பார்த்தது. 1948 இல் ஐக்கிய நாடுகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு நாட்டுக்கு திரும்புவதற்கு அல்லது நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்குமான பதிலீடு இருப்பதாகவும், இதனை சமாதான ஆணைக்குழு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டது. ஆனால் ஆரம்ப கூட்டத்தின் பின்னர் இஸ்ரேல் தனது எல்லைகளை மாற்ற நிராகரித்ததுடன், சிலர் பைபிள் பாலஸ்தீனமாக குறிப்பிடும் முழுப் பிரதேசத்தையும் உள்ளடங்கிய நாடு வேண்டும் என்றனர்.

இஸ்ரேலியர்களால் வெற்றிகொள்ளமுடியாத பாலஸ்தீன நிலத்தில் மேற்கு கரைப்பகுதியையும், கிழக்கு ஜெருசலமினையும், பழைய நகரத்தையும் ஜோர்தானுடன் இணைத்து பாலஸ்தீனர்கள் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அனைத்தையும் நாசம் செய்தார். காஸா பிரதேசத்தின் நிர்வாகத்தை எகிப்து எடுத்துக்கொண்டது.

பிரித்தானியா தனது ஆதரவுநாடுகள் மூலமாக இவ்வணைப்பை அங்கீகரித்தபோதும், மற்றைய நாடுகள் அதனை சம்பிரதாயத்திற்கு நிராகரித்தன. எவ்வாறிருந்தபோதும் அதனை தடுக்க ஒன்றும் செய்யவில்லை. ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்று ஜெருசலம் ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சர்வதேச நிர்வாகத்தினுள் கொண்டுவரப்படவேண்டும் என அழைப்புவிட்டிருந்த போதும், இஸ்ரேல் அதனை நிராகரித்ததுடன் Ben Gurion இஸ்ரேல் அரசாங்கத்தை ரெல் அவிவ் இலிருந்து மேற்கு ஜெருசலமிற்கு மாற்றினார்.

பாலஸ்தீன மக்களை என்ன செய்வது என்பதை விவாதிக்க 1948 யூன் மாதம் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சரான Moshe Sharrett பாலஸ்தீனர்களின் பாரிய வெளியேற்றத்தை ''உலக வரலாற்றிலும் இஸ்ரேலின் வரலாற்றிலும் ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. அவர்கள் திரும்பவில்லை அதுதான் எமது கொள்கை'' என குறிப்பிட்டார். Ben Gurion இன் அணுகுமுறையும் இதேபோல் இரக்கமற்றதாகவே இருந்தது. அவர் ''அவர்கள் [பாலஸ்தீனர்கள்] தோல்வியடைந்து ஓடிப்போய்விட்டார்கள். அவர்களது திரும்பல் தற்போது கட்டாயம் தடுக்கப்படவேண்டும். மேலும் யுத்தத்தின் பின்னர் அவர்கள் திரும்புவதையும் நான் எதிர்ப்பேன்'' என கூறினார். இத்துடன் அமைச்சரவை 800,000 இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் தலைவிதியை மூடித்தாளிட்டது. அவ்வகதிகளும் அவர்களது குடும்பங்களும் நிரந்தர அகதிகளாகினர்.

தொடரும்........

See Also :

பகுதி2- இஸ்ரேலும் நாடுதிரும்புவதற்கான பாலஸ்தீனர்களில் உரிமையும்