World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

The Congo: How and why the West organised Lumumba's assassination

Review of two BBC documentaries: Who Killed Lumumba?, and Mobutu

கொங்கோ: மேற்கத்தைய ஆட்சியாளர்கள் லுமும்பாவின் படுகொலையை நடாத்தியது ஏன்? எப்படி?

பீ.பீ.சி.யின் இரண்டு செய்தி திரைப்படங்களின் ஆய்வு: யார் லுமும்பாவை கொலை செய்தனர்?, மொபூட்டோவை

By Linda Slattery
10 January 2001

Use this version to print

இவ்வாண்டின் கடைப்பகுதியில் பெல்ஜியம் பாராளுமன்றம் கொங்கோவின் சுதந்திரத்துக்குப் பின்னர் முதலாவது பிரதமராக விளங்கிய பட்ரிஸ் லுமும்பா (Patrice Lumumba) 1961 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக லுமும்பாவின் மரணத்துக்கான சூழ்நிலைகள் பற்றிய இரகசியங்கள் மூடிமறைக்கப்பட்டு வந்தன. ஆனால் கொங்கோவின் பிரமாண்டமான கனிப் பொருள் வளங்கள் மீண்டும் ஏகாதிபத்தியப் போட்டிகளுக்கான ஒரு களமாகிக் கொண்டுள்ளதால் நீண்டகாலமாக அரசாங்க சுவடிக் காப்பகங்களில் புதைந்து போய்க் கிடந்த பத்திரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கடந்த வருடம் பீ.பீ.சி. இந்த மத்திய ஆபிரிக்க அரசின் துன்பகரமான வரலாற்றைப் பற்றி இரண்டு செய்தித் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டது. லுமும்பாவைக் கொன்றது யார்? என்ற இத்திரைப்படம் தகவல் திரைப்பட தொடரின் ஒரு பாகமாக வெளிவந்தது. இது பெல்ஜியம் வரலாற்றாசிரியர் லூடோ டீ விட்டி (Ludo De Witte) யினால் எழுதப்பட்ட புதிய நூலில் இருந்து பல விடயங்களைக் கறந்து இருந்தது. (The Murder of Lumumba) டீ விட்டி பெல்ஜியன் அரசாங்க சுவடிகள் காப்பகத்தில் இருந்து கிடைத்த விடயங்களை ஒன்றுபடுத்தி இருந்தார். அத்தோடு இச்செய்திப் படம் சுவடிகள் காப்பகத்தின் திரைப்பட அடிக் குறிப்புக்களையும் பயன்படுத்தியது. உயிர் வாழும் சாட்சிகளையும் இது பேட்டி கண்டது. லுமும்பா மேற்கத்தைய அரசாங்கங்களால் தயார் செய்யப்பட்ட ஒரு சதி மூலம் கொல்லப்பட்டார் என்பதைக் காட்டுவதாக இது விளங்கியது.

பீ.பீ.சி.யின் (Story ville) செய்தித் திரைப்படம் லுமும்பாவின் மரணத்தின் பின்னர் மேற்கத்தைய சக்திகள் எவ்வாறு ஜோசப் செசே செகோ மொபூட்டோவை ஆட்சியில் இருத்தியது என்பதை அம்பலமாக்குகின்றது. மொபூட்டோ, கொங்கோவை முறைமுறையாக கொள்ளையடிக்கும் போது 32 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருத்தப்பட்டார். மொபூட்டு ஆபிரிக்காவில் மேற்கத்தைய வல்லரசுகளின் முக்கியமான குளிர்யுத்த கால சகாவாக விளங்கினார். அத்தோடு கொங்கோ சோவியத் யூனியனுக்கு ஆதரவான ஆபிரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிரான சீ.ஐ.ஏ. (CIA) நடவடிக்கைகளின் களமாகவும் விளங்கியது.

இப்படம் மொபூட்டுவுக்கும் பல மேற்கத்தைய நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நிலவிய மிகவும் நெருக்கமான தனிப்பட்டதும் அரசியல் ரீதியிலானதுமான உறவுகளை அம்பலப்படுத்துகின்றது. நாம் மொபூட்டுவின் படக் கத்தரிப்புகள் ஜக் சிராக்கினால் (இன்றைய பிரான்சிய ஜனாதிபதி) கட்டித் தழுவப்படுவதை காண்கிறோம். அத்தோடு மொபூட்டு அரச குடும்ப வண்டியில் பிரிட்டிஷ் இராணிக்கு அடுத்ததாக அமர்ந்து இருப்பதையும் காண்கிறோம். குளிர் யுத்த காலத்தின் முடிவில் மொபூட்டு ஆதரவுகளை இழக்கும் வரை பல வருட காலங்களாக பெல்ஜியன் மன்னரின் ஒரு நண்பனாக விளங்கினார். ஆனால் அவரின் நெருக்கமான நண்பர்களாக ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சும் (சிரேஷ்டர்) அவரது குடும்பத்தினரும் விளங்கினர்.

1885-1908 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டாய ஊழியம் (Forced labour) முறைமுறையான பயங்கரங்களின் கீழான காட்டுமிராண்டி திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஐந்து தொடக்கம் எட்டு மில்லியன் மக்கள் கொங்கோ மீதான பெல்ஜிய மன்னர் லியோபோல்ட் (Leopold) இன் சொந்த ஆட்சி முறைக்கு பலியாகினர். 1959ல் பெல்ஜிய அரசாங்கம் இறுதியில் கொங்கோவுக்கு சுதந்திரம் வழங்கத் தீர்மானித்தது. நடைபெற்ற முதலாவது தேர்தலில் பட்ரிஸ் லுமும்பா பிரதமரானார். ஆனால் அவரது அரசாங்கம் பிராந்திய நலன்களின் ஒரு ஈடாட்டம் கண்ட கூட்டரசாங்கமாக விளங்கியதோடு அது ஒரு வார காலத்தில் வீழ்ச்சியும் கண்டது. இராணுவத்தின் ஒரு பகுதியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கனிப்பொருள் வளங்களைக் கொண்ட கட்டங்கா மாகாணம் பிரிக்கப்பட்டது.

லுமும்பாவை கொன்றது யார்? திரைப்படம் கட்டங்கா பிரிவினையைப் பற்றிய முக்கியமான புதிய பல தகவல்களை வழங்குகிறது. பிரிவினைக்கு தலைமை தாங்கிய முவாஸ் ரோம்ப் (Moise Tshombe) பெல்ஜியம் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் செயற்பட்டார் என்பதைக் காட்டும் பத்திரங்களை லூடோ டு விட் (Ludo de Witte) பெல்ஜியன் சுவடிக் காப்பகத்தில் கண்டுபிடித்துள்ளார். பெல்ஜியன் அரசாங்கம் பெல்ஜியன் உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றவே படைகளை கட்டங்காவினுள் அனுப்பி வைத்ததாக எப்போதும் கூறிவந்தது. டு விட் இன் ஆராய்ச்சிகள் பெல்ஜியன் ஆட்சியாளர்கள் கொங்கோவை கூறு போட சதி செய்தனர் என்பதை காட்டிக் கொண்டுள்ளன.

கடந்த ஆகஸ்டில் வெளியிடப்பட்ட அமெரிக்கப் பத்திரங்கள் ஜனாதிபதி ஐசன்கோவர் லுமும்பாவைக் கொலை செய்யும்படி சீ.ஐ.ஏ.க்கு நேரடியாக உத்தரவிட்டார் என்பதை காட்டுகின்றன. 1960 ஆகஸ்டில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை (NSC) கூட்டக் குறிப்புக்கள் ஐசன்கோவர் லுமும்பாவை ஒழித்துக்கட்டும்படி சீ.ஐ.ஏ. தலைவர் அலன் டல்லசுக்கு கூறினார் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. உத்தியோகபூர்வ குறிப்புக்கள் எடுப்பவரான றொபேட் எச் ஜோன்சன் 1975ல் செனட் உளவுச் சேவை கமிட்டியிடம் இதைக் கூறியுள்ளார். ஆனால் இதை ஊர்ஜிதம் செய்ய முன்னர் எந்தவிதமான ஆதாரபூர்வமான பத்திரங்களின் சாட்சியமும் கிடைக்கவில்லை.

அச்சமயத்தில் கொங்கோவில் சீ.ஐ.ஏ. ஆளாகத் தொழிற்பட்ட லாறி டெவ்லின் (Larry Devlin) தான் எப்படி "பாரிசை சேர்ந்த ஜோவை" சந்திக்கும்படி வேண்டப்பட்டார் என்பதை பீ.பீ.சி. படத் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தார். இந்த "பாரிசில் இருந்து வந்த லாறி" டாக்டர். சிட்னி கொட்லியப் (Dr Sidney Gottlieb) சீ.ஐ.ஏ.யின் பிரதம தொழில்நுட்ப அதிகாரியாக வர இருந்தவர். "அவர் எனது காரை நோக்கி நடந்த வந்ததும் நான் அவரை இனங்கண்டேன்" என டெவ்லின் நினைவு கூர்ந்தார். "ஆனால் அவர்கள் என்ன செய்ய விரும்பினார்கள் எனக் கூறிய போது நான் முற்றிலும் ஆச்சரியம் அடைந்தேன்" எனவும் அவர் கூறினார் கொட்டிலப் அவருக்கு ஒரு நஞ்சூட்டப்பட்ட பற்பசைக் குழாயைக் கொடுத்தார். இதனை டெவ்லின் லுமும்பாவின் குளியலறைக்குள் கடத்திச் செல்ல வேண்டி இருந்தது.

அவர் தான் அப்படி ஒரு போதும் செய்யவில்லை எனக் கூறுகின்றார். ஏனெனில் "நான் ஒரு போதும் படுகொலையை சிபார்சு செய்யவில்லை. அத்தோடு அது புத்திசாலித்தனமானது எனவும் நான் நம்பவில்லை". அதற்குப் பதிலாக 'நான் அதன் பயன்பாடு காலவதியானதும் அதை கொங்கோ நதியில் வீசினேன்."

இதன் பின்னர் லுமும்பா பெல்ஜியன் ஏஜன்டுகளினால் படுகொலை செய்யப்பட்டதால் நஞ்சினது "பயன்பாடு" பெரிதும் விரைவாக காலவதியாகிப் போயிற்று.

ஐசன்கோவர் மட்டும் லுமும்பா இறந்தேயாக வேண்டும் என்ற முடிவுக்கு வரவில்லை. 1960 நவம்பர் மாத ஒரு பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சின் பத்திரம் M15 அமைப்பின் தலைவராக வரவிருந்த ஒரு உயர் அதிகாரியின் கருத்துக்களைக் குறிப்பிடுகின்றது. "(லுமும்பாவின்) பிரச்சினைக்கு நான் இரண்டு சாத்தியமான தீர்வுகளை மட்டும் காண்கிறேன். முதலாவது, அவரைக் கொலை செய்வதன் மூலம் அரங்கில் இருந்து ஒழிப்பதை ஊர்ஜிதம் செய்வது சாதாரணமான விடயம்." இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் எவரும் அறியாமல் இருந்து வரவேண்டும்.

டு விட் இன் ஆக்கங்கள் லுமும்பாவை ஒழித்துக்கட்ட பெல்ஜியன் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை அம்பலமாக்குகின்றது. பெல்ஜியன் இராணுவத் தளபதிகள் லுமும்பாவை ஒழித்துக் கட்டும் சதியின் பேரில் அன்று (கொங்கோ) இராணுவத் தளபதியாக விளங்கிய மொபூட்டு, ஜனாதிபதி கசவூபு (Kasavubu) ஆகியோரிடம் இரவு நேரங்களில் விஜயம் செய்தனர். கேர்ணல் லூயி மலியேர் இந்த நோக்கத்தின் பேரில் தாம் கொண்டு வந்துள்ள பல மில்லியன் பிராங்குகளை (Franks) பற்றி பேசினார். லுமும்பாவை கொல்லும் திட்டம் "ஒப்பரேசன் பரகுடா" (operation Barracuda) என அழைக்கப்பட்டதோடு இது ஆபிரிக்க விவகாரங்களுக்கான பெல்ஜியன் அமைச்சர் கொன்ட் ட அப்ரெமொண்ட் (Count d'Aspremont) இன் பொறுப்பில் இருந்தது.

பெல்ஜியம் அரசாங்கம் புதிய பாராளுமன்றத்துக்கு வந்த இரண்டு வாக்குகளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கொண்ட லுமும்பாவை பதவி நீக்கம் செய்யும்படி கசவூபுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மொபூட்டு ஒரு சதிப்புரட்சியில் ஈடுபட்டதோடு லுமும்பா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதில் இருந்து தப்பிய லமும்பா மொபூட்டுவுக்கு விசுவாசமான படையாட்களால் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சமகால திரைப்படம் மொபூட்டுவுக்கு எதிரில் வைத்து லுமும்பா தாக்கப்படும் போது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) துருப்புக்கள் அருகில் நின்று கொண்டுள்ளதைக் காட்டுகின்றது. பின்னர் அவர் லியபோட்வில்லின் (Leopoldville) (இன்று கின்சாசா) வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அடித்துத் தாக்கப்பட்டார். திய்வில் (Thysville) சிறைச்சாலைக்கு லுமும்பா கொண்டு செல்லப்பட்டபோது சிறைக்காவலர்களிடையே அவர் ஒரு கலகத்தை தூண்டிவிட்டார்.

கொன்ட் ட அப்ரெமொண்ட் (பெல்ஜியன் அமைச்சர்) லுமும்பாவை கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு சென்று, கொலையை ஊர்ஜிதம் செய்யும்படி கட்டளையிட்டார். லுமும்பாவும் அவரது இரண்டு ஆதரவாளர்களும் அங்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட போது அவர்கள் படுமோசமாகத் தாக்கப்பட்டனர். விமான ஓட்டி (Pilot) விமானம் தரை மோதி நொருங்கும் ஆபத்து இருந்து கொண்டுள்ளதாக முறைப்பட்டார். இவர்கள் மூவரும் பெல்ஜியம் அதிகாரிகள் தலைமையிலான ஒரு துப்பாக்கி கும்பலால் சுட்டுத் தள்ளப்பட்டனர். முவாஸ் ரோம்ப் (Moise Tshombe) இதை அவதானித்துக் கொண்டு இருந்தார்.

கட்டங்கா பொலிஸ் படையின் பெல்ஜியம் கமாண்டராக விளங்கிய ஜெராட் சொயேட் (Gerard Soete) க்கு சடலங்களை ஒழித்துக்கட்டும் பயங்கரமான பணி ஒப்படைக்கப்பட்டது. ஒரு நண்பனின் ஆதரவோடு சடலங்களை அசிட்டில் கரைப்பதற்கு முன்னதாக அவற்றை வெட்டித் துண்டாடினர். "ஒரு மிருகமும் செய்யாத காரியத்தினை நாம் செய்ததால்" தாம் இரண்டு நாட்கள் குடிவெறியில் இருந்ததாக சொயேட் நினைவு கூர்கிறார்.

இவ்விரண்டு படங்களும் லுமும்பாவின் கொலையைப் பற்றிய புதிய சாட்சியங்களை ஒரு பரந்த பார்வையாளர்களின் கவனத்துக்குக் கொணரும் ஒரு மதிப்புவாய்ந்த பணியைச் செய்கின்றது. ஏகாதிபத்திய சக்திகள் மொபூட்டூவின் சர்வாதிகார ஆட்சிக்கு எந்த விதத்தில் ஆதரவு வழங்கினர் என்பதையும் இவை அம்பலமாக்குகின்றன. ஆனால் இவ்விரண்டு செய்தித் திரைப்படங்களும் மேற்கத்தைய ஆட்சியாளர்கள் இதை எதற்காகச் செய்தனர் என்பதைப் பூரணமாக விளக்குவதாக இல்லை. அவை லுமும்பாவின் படுகொலையையும் மொபூட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டதையும் சும்மா மேற்கத்தைய நாடுகளுக்கும் மாஸ்கோவுக்கும் இடையேயான குளிர்யுத்த போட்டியின் ஒரு பாகமாகக் காட்டுகின்றன.

லுமும்பாவின் மரணத்தின் மைய இரகசியம் தொடர்ந்தும் நீடிக்கின்றது. அவர் ஏன் கொல்லப்பட்டார்? இந்த தனியொரு மனிதனைக் கொல்வதற்காக குறைந்தது மூன்று மேற்கத்தைய சக்திகளின் பலம் ஈடுபட்டது ஏன்? லுமும்பா சிறைக் கைதியாக வைக்கப்பட்டு இருந்த போதும் கூட அவரைக் கைது செய்தவர்களால் (லுமும்பாவின்) இராணுவ அல்லது அரசியல் பலம் இல்லாத நிலையிலேயே தாக்கப்பட்டது ஏன்? சிலர் அவர் சர்வ-ஆபிரிக்க வாதத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டதால் மேற்கத்தைய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்கினார் என்கின்றனர். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் ஒரு சர்வ- ஆபிரிக்கவாதத்தின் தியாகியாக கொள்ளப்பட்டது உண்மையே.

1959ன் கடைப்பகுதியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் சர்வ-ஆபிரிக்கவாதம் ஒரு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு மாறாக ஆபிரிக்காவில் புரட்சியைத் தடுப்பதற்கான நல்ல வாய்ப்பை வளங்கியது என்ற முடிவுக்கு வந்திருந்தனர். லுமும்பாவைக் காட்டிலும் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே சர்வ- ஆபிரிக்கவாதிகளாக விளங்கிய என்கோமா, கென்யாட்டா, நீரே, ஒபோட்டே, அசிகிவி போன்றவர்கள் இக்காலப்பகுதியிலேயே ஆட்சிக்கு வந்திருந்தனர்.

தென் ஆபிரிக்காவுக்கு வெளியே இக்கண்டத்தில் மில்லியன் கணக்கான பலம் வாய்ந்த பெரும் தொழிலாளர் வர்க்கத்தைக் கொண்டிருந்த கொங்கோவின் அனுபவம், அதை அந்த முடிவுக்கு கொணர்வதில் ஒரு பலம்வாய்ந்த காரணியாக விளங்குகின்றது. கனிப் பொருள் செழிப்பு முடிவடைந்து 1959ல் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்த போது பெல்ஜியம் அரசாங்கம் கொங்கோவுக்கு காலனி சுதந்திரத்தை வழங்க தீர்மானம் செய்தது. அவர்களின் அடக்குமுறை இயந்திரங்களின் சக்கரங்கள் பிளவுபட்டு, சின்னாபின்னமாகிப் போன கிராமப்புற மக்களிடையே -நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அல்ல- உள்ளூர், சமூக ஆதரவுகளை இழந்து கொண்டு வந்தன.

கொங்கோ தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டுப்படுத்தும் பணிக்கு தம்மை நம்பியிருக்க முடியாது என்பதை லுமும்பா காட்டிக் கொண்டதும் அவரது தலைவிதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கத்தைய நாடுகள் கொங்கோவின் மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க தலைவர்களுக்கும் ஏகாதிபத்திய கட்டளைகளை அவர்கள் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக்கிக் கொள்ள முடிவு செய்தது. லுமும்பாவின் செயலாளராக விளங்கிய சமயம் பிரசெல்சுக்கு விஜயம் செய்த மொபூட்டு, சீ.ஐ.ஏ. யின் கவனத்தை ஈர்த்தார். அவர் மேற்கத்தைய நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். காட்டுமிராண்டித்தனத்தினதும் அரசியல் வஞ்சனைகளதும் ஒரு கலவையின் மூலம் மொபூட்டு, கொங்கோ (சயிரே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஒரு ஆபிரிக்க சோசலிசப் புரட்சியின் மின்னல் பிளம்பாகிவிடாது என்பதை ஊர்ஜிதம் செய்து, பதவியேற்றார்.