World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

Fighting in Macedonia threatens wider Balkan conflict

மஸடோனியாவின் யுத்தம் பால்கனில் பரந்த மோதல்களை எச்சரிக்கின்றது

By Chris Marsden
16 March 2001

Use this version to print

அல்பானிய இன பிரிவினைவாதிகளுக்கும் மஸடோனியாவின் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் இவ்வாரத்தின் தீவிரமடைந்தன. மஸடோனியாவின் இரண்டாவது பெரிய நகரமான ரெட்டோவோ (Tetovo) வின் எல்லைகளில் புதன்கிழமை நடந்த 8 மணித்தியால மோதல்களில் ஒருவர் இறந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர். ரெட்டோவோ கொசவோ-மஸடோனிய எல்லையிலிருந்து 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது.

கொசவோ விடுதலை இராணுவத்தின் [Kosovo Liberation Army] இரண்டு முக்கிய இயக்கங்களில் தேசிய விடுதலை இராணுவமும் UCK [National Liberation Army] ஒன்றாகும். இதனது தொடர்ச்சியான தாக்குதலானது தென் சேர்பியாவின் பிரெசிவோ (Presevo) மலைப்பிரதேசத்தில் இயங்கும் கொசவோ விடுதலை இராணுவத்தின் ஆதரவான ஏனைய அல்பானிய பிரிவினைவாத இயக்கங்களுடன் நேட்டோ கடந்த செவ்வாய்கிழமை செய்து கொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை அர்த்தமற்றதாக்குகின்றது. மூன்று வாரங்களுக்கு முன்னர் முதன்முதலாக மோதல்கள் உருவாகிய கொசவோ-மஸடோனிய எல்லையான Tanusevci க்கு அண்மையிலுள்ள கிராமங்களான Brest , Malino Malo வை சுற்றிய பிரதேசங்களிலும் மோதல்கள் தொடர்கின்றன.

ரெட்டோவோவின் மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான அல்பானிய சிறுபான்மையினரின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான முதன்முதலான ஊர்வலத்தின் பின்னர் நேட்டோ படையினரும் மஸடோனிய அரசாங்கத்தினரும் எதிர்நோக்கிய கையாலாகாத நிலை வெளிப்பட்டது. மஸடோனிய சனத்தொகையில் அல்பானிய இனத்தவர் 1/4 இருந்து 1/3 பங்காகவுள்ளனர். பிரிவினைவாதிகள் அல்பானியர் பெரும்பான்மையான கொசவோவுடன் இப்பகுதியை இணைக்க விரும்புகின்றனர்.

ஸ்காபுஜ் (Skopje) இல் உள்ள அரசாங்கம் மஸடோனிய, அல்பானிய இனக்கட்சிகளை கொண்ட ஒரு கூட்டரசாகும். தேசிய விடுதலை இராணுவம் [UCK] ''இக்கூட்டினை'' கண்டித்துள்ளதுடன், மஸடோனியாவில் சுயாட்சியை கோரும் புதிதாக உருவாக்கப்பட்ட கடும்போக்காளர்களின் தேசிய ஜனநாயக கட்சியுடன் தாம் இணைந்து இயங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

1999 இல் கொசவோ யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இராணுவ உடன்படிக்கையின் படி யூகோஸ்லாவிய தலைவர் சுலோபோடான் மிலோசிவிக் சேர்பியாவின் கொசவோ மாநிலத்தை சுற்றி 5 கிலோ மீற்றர் சுற்றளவிலான''தரை பாதுகாப்பு வலையத்தை'' அமைக்க ஒப்புக்கொண்டார். நேட்டோ தற்போது யூகோசிலாவியாவின் 63 வது பரசூட் படைப்பிரிவின் நூற்றுக்கணக்கான படையாட்களை மஸடோனிய எல்லையை சுற்றிய கிழக்கு பகுதிக்கு செல்ல அனுமதித்துள்ளது. இதன் மூலம் அல்பானிய பிரிவினைவாதிகளை பின்னடைய செய்ய முயல்கின்றது. யூகோசிலாவிய ஜனாதிபதி Vojislav Kostunica கொசவோவின் வடக்கு எல்லை பிரதேசத்தை நோக்கி படைகளை கொண்டுசெல்ல முனைகின்றார்.

ஒரு கிழமைக்கு முன்னர் போர்நிறுத்த உடன்படிக்கையில் Presevo, Medvedja, Bujanovac பிரதேசங்களுக்கான பிரிவினைவாத விடுதலை இராணுவம் [UCPMB] கையெழுத்து இடுகையில் தாம் யூகோஸ்லாவிய இராணுவத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என வலியுறுத்திக் கூறியது. UCPMB இன் இராணுவ தலைவரான Shefket Musliu "யாராவது சேபியர்களை சுட்டால் நாம் அதற்கு பொறுப்பு எடுக்க முடியாது என'' எச்சரித்தார். UCPMB Presevo மலைப்பிரதேசத்தில் வாழும் 70.000 அல்பானியர்களை கொசவோவுடன் ஒன்றிணைக்க முயல்கின்றது.

1999 இல் சேர்பியாவிற்கு எதிரான யுத்த தயாரிப்பில் கொசவோ விடுதலை இராணுவத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவெடுத்ததுடன், அண்மைக்காலம் வரை அந்நிலைப்பாட்டில் இருந்தது. இது இன்று அதற்கு எதிராகவே திரும்பியுள்ளது. கொசவோ விடுதலை இராணுவத்தின் விரிவுபடுத்தும் நோக்கம் அதன் குற்றவியல் நடவடிக்கைகளான போதைவஸ்து கடத்தல், விபச்சாரத்துடன் இணைந்து பால்க்கனில் ஸ்திரமற்றதன்மைக்கு முக்கியமான காரணமாகின்றது.

இது நேட்டோவினுள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது பிரித்தானிய Observer பத்திரிகையில் மார்ச் 11ம் திகதி வெளிவந்த கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது. K-For [கொசவோவிற்கான படை] இன் முக்கிய ஐரோப்பிய அதிகாரி ஒருவரின் கூற்றை உதாரணம் காட்டி அது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. ''CIA முன்னைய கொசவோ விடுதலை இராணுவத்தினரை யூகோஸ்லாவிய தலைவர் சுலோபோடான் மிலோசிவிக்கை கீழ்ப்படிய செய்வதற்காக தென் சேர்பியாவில் கிளர்ச்சி செய்ய ஊக்குவித்தது''.

அது K-For படைப்பிரிவின் இன்னுமொரு தலைவர் ஒருவர் ''சுலோபோடான் மிலோசிவிக்கை தூக்கிவீச கொசவோவில் கலகத்தை உருவாக்க ஒரு தனியார் இராணுவத்தை கட்ட CIA இற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது அவர் பதவியிலில்லை. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு தற்போது அதனது முறைகேடான இராணுவத்தை அடக்க முடியாதுள்ளது. கடந்த வருடத்தில் தீவிரவாத அல்பானியர்களுக்கான அமெரிக்கவின் ஆரதவு குறித்து அதிகரித்துவரும் வெறுப்பு இருந்துவந்துள்ளது. அமெரிக்க கொள்கை இப்போதும் அதன் ஏனைய நேட்டோ கூட்டுக்களுடன் முரண்பாடாக உள்ளது'' எனவும் கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பால்கனில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடம் இருக்கும் நெருக்கடியானது குறைவதாக தெரியவில்லை. பிரான்ஸ் ஐரோப்பிய அதிரடிப்படையை [Rapid Reaction Force] முதல்தடைவையாக நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு மஸடோனியாவை வலியுறுத்துகின்றது. இதன் மூலம் ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க ஆழுமைக்குரிய நேட்டோவிலிருந்து சுயாதீனமாக இயங்க முனைகின்றது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்பிய படைகளை இராணுவமயமற்ற பிரதேசத்தினுள் செல்ல அனுமதித்துள்ளதனூடாக அப்பிரதேசத்தை கட்டுப்படுத்தும் அதன் பாரம்பரிய பங்கினை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தினை சாதகமாக்கியுள்ளன. பிரித்தானியா தனது சொந்தபடையை Presevo மலைப்பிரதேசத்திற்கு விரும்பியபோதும் அது அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டது. அமெரிக்க நிர்வாகம் Vojislav Kostunica இன் நிர்வாகம் ஒரு சகல பக்கமும் வளையக்கூடிய வாகனமாக அமையும் எனவும், இதனூடாக பால்கன் பிரதேசத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் எண்ணுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக Kostunica ஜனாதிபதி பதவியை அடைவதற்கான அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நிதி, அரசியல் உதவிகளுக்கு நன்றி கூறிக்கொள்கின்றது.

எவ்வாறிருந்தபோதிலும் Kostunica வின் அரசியல் அவரின் முன்னையவரான மிலோசிவிக்கினதை விட பாரிய அளவில் வித்தியாசப்படவில்லை. Kostunica ஒரு சேர்பிய தேசியவாதி. அவர் போட்டி தேசியவாத பிரிவுகளிடமிருந்து முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒன்றிணைப்பை பாதுகாக்கும் மிலோசிவிக்கின் முயற்சிகளுடன் முற்றாக ஒன்றிணைந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏகாதிபத்தியவாதிகளின் கோரிக்கைகளுக்கு அவர் மேலும் அடிபணிந்தவராக உள்ளார். மேலும் அவர் ஐரோப்பிய சக்திகளின் நோக்கங்களை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டுள்ளார்.

USA Today இற்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியில் Kostunica, K-For படைகள் அல்பானிய பிரிவினைவாதிகளுடன் ''நேரடியாக கூடி இயங்குவதாக'' குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா குறித்து அவர் அமெரிக்க வான் ஊர்திகளால் நடாத்தப்படும் வழமையான கண்காணிப்பு ''பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கு பதிலாக அவர்களுக்கான ஒருவகை இராணுவ உதவிகளுக்கு பயன்படுத்துவதுபோல் ஒரு அபிப்பிராயத்தை வழங்குகின்றது'' என குறிப்பிட்டுள்ளார்.

யூகோஸ்லாவியாவும் தமது இராணுவத்தின் மீது இராணுவமயமற்ற முன்னாள் பிரதேசங்களில் விதிக்கப்பட்ட தடைகளான வீடுகளை ஆக்கிரமிப்பது, வான் ஊர்திகள், கவசவாகனங்கள், ரொக்கட் லோஞ்சர்களை பாவிப்பது, தாங்கி எதிர்ப்பு மற்றும் கண்ணிவெடிகளை பாவிப்பது போன்றவற்றால் கோபங்கொண்டுள்ளது. பதில் பிரதமரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான Momcilo Perisic ''கனரக ஆயுதங்களுடனும், கவசவாகனங்களுடனும் அப்பிரதேசங்களுக்குள் நுளைய மறுக்கப்பட்டதிலிருந்து யூகோஸ்லாவிய இராணுவம் பாரிய அபாயத்திற்குள்ளாகி உள்ளதாக'' முறையிட்டுள்ளார்.

அல்பானிய இன தேசியவாதத்திற்கான அமெரிக்காவின் ஆதரவின் பின்விளைவானது, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசை உடைப்பதற்கு ஒரு வழியாக மேற்கத்தைய சக்திகள் பிரிவினைவாத இயக்கங்களை கட்டியணைத்துக்கொண்டதன் மூலமாக சீர்குலைக்க முயல்வதன் ஒரு வெளிப்பாடாகும்.

பால்கனில் பெல்கிராட்டின் நலன்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மேற்கத்தைய சக்திகளின் மத்தியில் சேர்பியாவின் அரசியல் மறுசீரமைப்பை Kostunica பயன்படுத்துவதனூடாக முழுசாத்தியப்பாடுகளும் உள்ளது. ஏனெனில் பிராந்திய போட்டி பிரிவுகளால் தூண்டிவிடப்படும் தேசிய, இன முரண்பாடுகளால் துண்டாடப்படுவதை எதிர்நோக்கும் யூகோஸ்லாவியாவில் என்ன மிகுதியாக இருக்கமுடியும்.

யூகோஸ்லாவியாவில் எஞ்சியுள்ள ஒரேயொரு குடியரசான மொன்டிநீகிரோ [Montenegro] நீண்ட காலமாக பிரிவினையை வலியுறுத்திவருகின்றது. ஏப்ரலில் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக Djukanovic இன் அரசாங்கம் தேர்தலின் பின்னர் பிரிவிற்கான சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதாக கூறி நியாயப்படுத்துவதற்கான சகல சாத்தியங்களும் உள்ளது.

மொன்டிநீகிரோ சேர்பியாவிலிருந்து பரந்த சுயாட்சியை கோரும் வடமாநிலமான Vojvodina உடன் இணைந்து பிரிவினை பாதையில் இறங்கியுள்ளது. Kostunica வின் சேர்பிய ஜனநாயக கட்சியின் [DOS] கூட்டில் Vojvodina ஐ அடித்தளமாக கொண்ட மூன்று கட்சிகள் இருக்கின்றன. சேர்பிய ஜனநாயக எதிர்ப்புக் கட்சி மிலோசிவிக்கின் அரசுக்கு எதிராக இருக்கையில் இம்மாநிலத்திற்கு சுயாதீன ஆட்சிக்கான உரிமை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

மார்ச் 2ம் திகதி Vojvodina பாராளுமன்றம் சுயாட்சிக்கான பிரேரணைகளை நிறைவேற்றியது. அதில் பாதுகாப்பு, நாணய-சுங்க அமைப்பு, வெளிநாட்டுக்கொள்கை, நீதித்துறை தவிர ஏனைய அரசுக்குரிய விடயங்கள் அனைத்தும் அடங்கியிருந்தது. Kostunica வின் சேர்பிய ஜனநாயக கட்சி இச் சட்டவரைவுக்கு எதிராக வாக்களித்ததுடன், முன்வைக்கப்பட்டவை சேர்பியாவிலிருந்து மொன்டிநீகிரோ பிரிந்து போவதற்கான முதலாவது அடி என மறுத்தது. பாராளுமன்றத்தின் நிறைவேற்றுக்குழுவின் சார்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி 60% ஆனோர் முழுசுயாட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கவனமாக பார்த்தால் பொஸ்னியா முழுவதும் தேசியவாதப்போக்குகள் எழுவதை காணக்கூடியதாகவுள்ளது. பொஸ்னியா மேலும் 1995 உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் மேற்கின் ஆளுமையில் உள்ள ஒரு பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

மார்ச் 3ம் திகதி தீவிர வலதுசாரி குரோசிய ஜனநாயக கூட்டு [Croatian Democratic Union- HDZ] நேட்டோவால் வழங்கப்பட்ட நிர்வாகத்தில் அரசமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி பொஸ்னிய-குரோசிய மக்கள் மீதான தமது அரசியல் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தாவிட்டால் 15 நாட்களுக்குள் பொஸ்னியாவின் கன்டோன்களுக்குள் [canton] ஒரு சிறிய குரோசிய அரசை உருவாக்கப்போவதாக பயமுறுத்தியுள்ளது. இப்படியாக செய்ய எடுக்கப்படும் தீர்மானமானது 1995 இல் டேட்ரன் உடன்படிக்கையில் மூலம் உருவாக்கப்பட்ட பொஸ்னியா-ஹெர்ஸகோவினா கூட்டமைப்பில் மீண்டும் இனமோதல்களின் அபாயத்தை உருவாக்கும். பொஸ்னியா-ஹெர்ஸகோவினாவினுள் உள்ள குரோசிய பிரதேசமான Herceg-Bosna யுத்தகாலத்தில் இருந்ததை போலவே இப்போதும் இருக்கின்றது.

பொஸ்னியாவிற்கான ஐக்கிய நாடுகளின் உயர் பிரதிநிதியான Wolfgang Petritsch குரோசிய ஜனநாயக கூட்டின் தலைவரான Ante Jelavic ஐ முக்கூட்டு பொஸ்னிய தலைமையிலிருந்தும், ஏனைய முக்கிய மூன்று தலைவர்களையும் பதவி நீக்கம் செய்தார். அவர் ''இவர்கள் பொஸ்னியா-ஹெர்ஸகோவினா விலுள்ள குரோசிய மக்கள் மத்தியில் தமது நாடு மற்றைய நாடுகளுக்கு சமமானதாக இல்லை என்ற வதந்தியை பரப்புவதாகவும், இவ்வகையான விவாதங்கள் கடந்தகாலங்களில் தேசியவாதத்தலைவர்களால் பிரயோகிக்கப்பட்டதாகவும் யூகோஸ்லாவிய யுத்தம் இந்த அறிவுரைகளினால் தான் நிகழ்ந்தது என்பதை நீங்கள் எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்த தேவையில்லை'' என எச்சரிப்பதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ளார்.

பால்கனில் அமெரிக்க கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிந்துகொள்கின்றனர். உதாரணமாக மார்ச் 12ம் திகதி New York Times பத்திரிகை ''நேட்டோ பால்க்கனில் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கின்றது, அல்பானிய மக்களின் பிரச்சனைகளையும், விருப்புவெறுப்புக்களையும் கவனமாக ஆராய மறுத்து அவர்களுக்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்கியதன் பயனை இப்போது அறுவடை செய்கின்றது'' என குறிப்பிட்டுள்ளது. ஆனால் புஷ் இன் வெள்ளை மாளிகையிலிருந்தோ அல்லது பென்டகனிலிருந்தோ புத்திசாலித்தனமான கொள்கைகள் ஏதும் தோன்றுவதற்கான அறிகுறிகள் எதனையும் காணவில்லை.

Kostunica எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், அமெரிக்க-யூகோஸ்லாவிய உறவுகளின் உடையும் தன்மை தொடர்பாக அவர்கள் அறிந்திருக்கும் போதிலும், குடியரசுக்கட்சி நிர்வாகம் யுத்தக் குற்றங்களுக்காக மிலோசிவிக்கை கைதுசெய்யும்படியும், இதை செய்யாவிடின் அவர்களுக்கான நிதி உதவிகளை நிறுத்தப்போவதாக மார்ச் 31ம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது.

புஷ்சின் நிர்வாகத்திற்கும் அமெரிக்கா முற்றாக வாபஸ்பெறப்படவேண்டும் என குறிப்பிடும் பால்கனில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் ஒரளவு பெரும்பான்மையானோருக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. இம்மாத ஆரம்பத்தில் அரசு செயலாளரான Colin Powell இப்படியான திட்டங்கள் இல்லை என மறுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். பின்னர் ஐரோப்பா-ஆபிரிக்காவிற்கான அரசியல்-இராணுவ உதவி நிர்வாகியும் படைகளுக்கான கூட்டு தலைவரான Brigadier General Keith W. Dayton கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வரவேற்பு ஒன்றில் வாஷிங்டன் 2003 அளவில் படைகளை பின்வாங்கும் என தெரிவித்துள்ளார்.

யுத்தம்-அமைதிக்கான அமைப்பின் அறிக்கை'' இக்கூட்டத்தில் கூடுதலான உயர் புலமை பெற்றவர்களும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் பால்கனின் தற்போதய எல்லைகள் மாற்றிவரையப்பட்டு 'சிறிய, ஒரு இன மக்களை கொண்ட அரசுகள்' உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதான கருத்துள்ளவர்களாக தோன்றியதாக'' குறிப்பிடுகின்றது. அது மேலும் ''தனித்தனியான இனங்களை உள்ளடக்கிய இப்புதிய எல்லைகள் 300 வருடங்களுக்கு முன்னர் நாம் கண்ட ஐரோப்பாவின் வரலாற்று வடிவத்தையும் 'இயற்கையான தன்மையையும்' பின்பற்றுவதாக இருக்கும்'' என இக்கூட்டத்தின் கலந்து கொண்டவர்கள் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.