World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

Globalisation, Jospin and the political program of Attac

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்

பகுதி 3

By Nick Beams
11 September 2001

Use this version to print

நிரந்தரமான நாணயமாற்றீட்டு அமைப்பின் உடைவானது புதிய பிரச்சனைகள் உருவாக்கியது. நாணயங்களின் பெறுமதிகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் புதிய நாணய அமைப்பு முறைகள் உருவாகுவதற்கான காரணமாகியது. நாணயங்களின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களானது, ஏற்றுமதி, இறக்குமதியிலும், சர்வதேச முதலீடுகளிலும், ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது இலாபம் ஓரிரவிற்குள்ளேயே அடித்துச்செல்லும் அபாயத்தை எதிர்நோக்கிய நிலைமைகளுக்குள் ஒரு எல்லையை உருவாக்குவதற்கான ஒரு தொடர் அமைப்புகளை உருவாக்கத் தேவைப்பட்டது. இதனுள்ளேயே எதிர்காலத்தில் ஒரு நிலையான நாணயமாற்று வீதத்தில் நாணயங்களை வாங்குவதற்கான நிதி அமைப்புக்கள் உருவாக்குவதற்கான நோக்கத்தின் அடித்தளம் உள்ளது.

ஆனால் எதிர்கால உடன்படிக்கைகளுக்கான அமைப்பு நிறுவப்பட்டதும், அது தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி அபிவிருத்தி செய்துகொள்ளும். எதிர்கால உடன்பாடுகள் விற்கவும், வாங்கவும் படலாம், மற்றும் உலகத்தின் வித்தியாசமான நாணய பெறுமதியை கணக்கிற்கு எடுத்து சமப்படுத்தப்படுவதன் ஊடாக இலாபம் அடையப்படலாம். உற்பத்தி மூலதனத்தின் தேவைகளுக்கு சேவை செய்ய உருவாக்கப்படும் ஒரு அமைப்பு முறையானது தன்னை ஒரு பாரிய புதிய சந்தையாக உருவாக்கிக்கொள்கின்றது.

அற்றாக்கும், அதன் ஆதரவாளர்களும் கடந்த இரண்டு தசாப்தங்களாக பாரியளவிலான உலக நாணயச்சந்தையினதும், அதனுடன் இணைந்த ஊகவாணிபத்தினது அதிகரிப்பு தொடர்பாகவும் தமது வெளியீடுகளில் குறிப்பிடுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிட்டது கிடையாது. ஆனால் இப்போக்கிற்கான காரணங்களை ஆராய்வதற்கோ, அல்லது ஆகக்குறைந்தது ''கூடாத'' நிதிமூலதனத்திற்கும், ஊகவாணிபத்திற்கும் எதிராக ''சிறந்த'' உற்பத்தி மூலதனத்தை எதிரெதிராக நிறுத்திப் பார்க்கவும் முயலவில்லை.

எவ்வாறிருந்தபோதிலும், கடந்த 20 வருடங்களாக நிதி ஊகவாணிபத்தின் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம், இலாபவீதத்தின் மீதான நிரந்தரமாக கீழ்நோக்கிய அழுத்தமே என்பதை மேலதிக ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் அபரிதமான உற்பத்தி எழும் காலகட்டத்திலேயே நிதி ஊகவாணிபமானது குறிப்பிடத்தக்களவு அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை பெற்றது. அதாவது உற்பத்திகளில் முதலீடு செய்வதன் ஊடாக இலாபத்தை அதிகரிப்பது பிரச்சனைக்குரியதாக இருக்கையிலேயே அது வேறு வழிகளை தேடுகின்றது.

இப்போக்கு தொடர்பான அண்மைய ஆய்வு ஒன்று ''1980களில் இருந்து முதலீடுகளின் இலாபத்தின் அதிகரித்துவரும் அளவானது உழைப்பிலிருந்து [இலாபம், வட்டி, மறுமுதலீடு செய்த இலாபம்] அல்லாது கூடுதலாக முதலீட்டு இலாபத்திலிருந்து [சந்தைப் பெறுமதிகளின் பாதுகாப்பு தொடர்பான ஊக்குவிப்புகளிலிருந்து] கிடைத்தது. இது அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் தற்போது 75% ஆக இருந்தது, 1900-1979 காலகட்டத்தின் முழுவதற்குமான 50% ஆக இருந்தது'' என குறிப்பிட்டது. [Harry Shutt, The Trouble with Capitalism, page 124].

இலாபவீதத்தின் மீதான அழுத்தமானது ஊகவாணிபத்தின் அதிகரிப்பில் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை, மாறாக கூடுதலாக அடிப்படையான போக்கின் மீதும் காட்டியது. நிதி மூலதனத்தின் அழுத்தத்தின் கீழ் பங்குதாரர்களின் பங்குப்பெறுமதியை அதிகரிக்க செய்ய கோரியதுடன், மேலதிகமான நிதி இருப்புகளினை அணுகுவது மறுக்கப்பட்டதுடன், உற்பத்தி மூலதனமானது தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி மதிப்பை பெறுவதற்காக நேரடியாக உற்பத்தி முறைகளில் பாரிய மீள் ஒழுங்கமைப்பை செய்வதற்காக நேரடியாக நெருக்கப்பட்டது.

உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது நாடுகளுக்கு இடையில் மட்டுமல்லாது உலக ரீதியில் ஒருங்கிணைப்பு இயக்கத்தை உருவாக்கியதுடன், புதிய தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தியதும், பாரிய நிறுவனங்களில் தொடர்ச்சியான வேலைநீக்கத்தையும், உற்பத்தி போக்குகளில் தொடர்ச்சியான நெருக்கத்தையும் [உடலியல் ரீதியானதும், புத்திஜீவி ரீதியானதும்] அதிகரித்தமை என்பன நிதி மூலதனமானது உபரி இலாபத்தை அதிகரித்தளவில் பெறுவதற்கான நோக்கத்தின் வெளிப்பாடாகும்.

ஆனால் இவ் அழுத்தமானது நிதிமூலதனத்திலிருந்து மட்டும் தோன்றுகின்றது என கருதுவது முற்றாக பிழையானதாகும். மாறாக, நிதிச்சந்தையினது கட்டளையானது தனது இலாப வீதத்தின் வீழ்ச்சியின் போக்கினை கட்டுப்படுத்தும் முழு மூலதனத்தினதும் நோக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இப்போக்கு முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடித்தளங்களில் தங்கியிருப்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டினார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையானது தனது வரலாறு முழுவதும் உற்பத்தி முறையை [போக்கினை] தொடர்ச்சியாக புரட்சிகரமாக்கி வந்துள்ளதுடன், இதன் விளைவாக உழைப்பின் உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளது.

எவ்வாறிருந்தபோதிலும், இது இலாப வீதத்தினை பாதித்துள்ளதுடன், இரண்டு முரண்பாடான வழிகளில் மூலதன குவிப்பு வீதத்தினை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும். ஒரு பக்கத்தில் உழைப்பின் அதிகரிப்பானது உபரி மதிப்பிற்கும் இலாபத்திற்குமான உண்மையான மூலமான உயிருள்ள உழைப்பின் [தொழிலாளிகளின்] அளவை உற்பத்தியிலிருந்து குறைத்துள்ளது. இது இலாபவீதத்ததை குறைக்கும் திசையில் செல்கின்றது. மறு பக்கத்தில் உழைப்பின் உற்பத்தியின் அதிகரிப்பானது ஒவ்வொரு தொழிலாளியிலும் இருந்து பெறப்படும் உபரிமதிப்பை அதிகரிக்கின்றது. இது இலாப வீதத்தினை அதிகரிக்கச்செய்கின்றது.

யுத்தத்திற்கு பிந்திய முதலாளித்துவத்தின் வரலாற்றை இவ்விரண்டு போக்குகளின் அடித்தளத்தில் தான் விளங்கிக்கொள்ளமுடியும். யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவிலும், உலகின் ஏனைய பகுதிகளுக்குமான முதலாளித்தவ விரிவாக்கமானது 1920,1930 களில் அமெரிக்காவில் அபிவிருத்தி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களை அசெம்பிளி லைன் முறையிலான உற்பத்தி செய்யும் முறையிலேயே தங்கியிருந்தது. இது இலாபவீதத்தினை முழுமையாக அதிகரிக்க செய்ததுடன், அற்றாக்கும், அதன் முன்மொழிவாளர்களும் ஆவலுடன் பின்நோக்கி பார்க்கும் ஒழுங்கமைக்கும் கொள்கைகள் நடைமுறையிலிருந்த 1945-1970 வரையிலான ''பொற்காலம்'' என அழைக்கப்படுவதன் எழுச்சிக்கு காரணமானது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னான முதலாளித்துவ விரிவாக்கமானது முதலாளித்துவ அமைப்பினுள் முரண்பாடுகள் இல்லாது நடைபெறவில்லை. 1960களின் இறுதியில் இலாப வீதத்தின் மீதான அழுத்தம் மீண்டும் தோன்றியது. கடந்த 25 வருடங்களாக உழைப்பின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ளது.

எவ்வாறிருந்தபோதிலும் இது யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தின் விரிவாக்க நிலைமைகளுக்கு திரும்பிச்செல்லவில்லை. அதற்கு மாறாக கடந்து 200 வருடத்திற்கு கடந்துசெல்லும் உழைப்பின் உற்பத்தியின் முழு வரலாற்று அபிவிருத்தியும் இலாப வீழ்ச்சியின் போக்கை எதிர்நோக்க உழைப்பின் உற்பத்தியின் அதிகரிப்பு இயாலாமலுள்ள ஒரு நிலைமையை அடைந்துள்ளது. உண்மையில் சந்தைப்போட்டியின் அழுத்தங்களுக்கு முன் முதலாளித்துவ நிறுவனங்கள் அபிவிருத்தி

செய்ய முயற்சிக்கத் தள்ளப்பட்டுள்ள உழைப்பின் உற்பத்தியின் மேலதிக அதிகரிப்பானது இலாப வீதத்தின் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு மாறாக அதனை அதிகரித்துள்ளன.

இதுதான் சம்பளத்தை குறைப்பதற்கும், வேலை நிலைமைகளை சீரழிப்பதற்கும், கடந்தகாலத்தின் வழங்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக நலன்களினதும், ஏனைய வசதிகளின் மீதும் மூர்க்கமான தாக்குதலை செய்வதற்கான அடித்தளமாக இருக்கின்றது. இதன் மூலம் தனக்கு கிடைக்ககூடிய உபரி மதிப்பின் அளவை அதிகரிக்க முயல்கின்றது. இதனுள்தான் அபிவிருத்தியடைந்த நாடுகளிலும், வறுமையான நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினதும், சமூக நிலைமைகளினதும் மீதான தாக்குதலுக்கான உள்ளடக்கம் அடங்கியுள்ளது. இது நிதிமூலதனத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. அது உற்பத்தி மூலதனத்திற்கு எதிராக அல்ல முழு மூலதனத்தினதும் நலன்களின் பேரிலாகும்.

நிதிமூலதனத்தின் இயக்கம் தொடர்பானதும், அதற்கும் முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்பு சம்பந்தமானதுமான ஆய்வு அற்றாக்கின் வேலைத்திட்டத்தின் தவறான வாதத்தை எடுத்துக்காட்டுகின்றது.

நிதிமூலதனத்தை மறு ஒழுங்கு செய்வதானது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தின் செழிப்பான நிலைமைகளுக்கு திரும்பமுடியாது மட்டுமல்லாது, அதற்கு அண்மையில் அணுகவும் முடியாது. ஏனெனில் அந்த நிலைமைகள் முதலாளித்துவ உற்பத்தியின் அபிவிருத்தியினாலேயே அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக உற்பத்தி முறையில் ஏற்பட்ட தொழிற்நுட்ப மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட உழைப்பின் உற்பத்தியின் பாரிய அதிகரிப்பானது உலக முதலாளித்துவ அமைப்பிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நெருக்கடி ''சுதந்திரச் சந்தையின்'' நவ தாராளவாதக் கொள்கையாலோ அல்லது தேசிய அரசுகளால் புதிய ஒழுங்கமைப்புகளை நடைமுறைப் படுத்துவதாலோ தீர்க்கப்படமுடியாது. அடிப்படையான பொருளாதாரப் போக்குகளை கவனத்திற்கு எடுத்ததன் ஊடாக வரும் இம்முடிவிற்கு ஆழமான அரசியல் உள்ளடக்கம் உள்ளது.

அதிகரிக்கும் உழைப்பின் உற்பத்தியால் எடுத்துக்காட்டப்படும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கும் தேசிய அரசினையும், தனியார் இலாப முறையை அடித்தளமாகக் கொண்ட சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டிலேயே இந்நெருக்கடிக்கான வேர்கள் உள்ளன. ஆனால் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் மத்தியான இதே உழைப்பின் உற்பத்தியின் வளர்ச்சியானது ஒரு உயர்மட்டத்திலான சமூக ஒழுங்கமைப்பிற்கான புறநிலை அடித்தளத்தை வழங்குகின்றது.

அற்றாக்கும், ரொபின் வரியின் ஆதரவாளர்களும் சர்வதேச நிதியின் பாரிய பாய்ச்சலையும், ஒரு சிறிய சிறுபான்மையினரின் கைகளில் பாரிய செல்வம் குவிவதையும், உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் சிறந்த, தரமான வாழ்க்கைத்தரத்தை வழங்குவதற்கும் அதிகமான வளங்கள் இருப்பதை சரியாக எடுத்துக்காட்டுகின்றனர்.

ஆனால் அவர்களின் வேலைத்திட்டமானது அப்படியான முன்னோக்கை யதார்த்தமாக்குவதில்லை. மாறாக அவர்களின் தேவையானது முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தை ஒரு உணர்மையான சர்வதேச சோசலிச முன்னோக்கினை அபிவிருத்தியடைவதை தடைசெய்வதுடன், அதற்கு தமது முதுகைக்காட்டி தேசிய அரசை அணைத்துக் கொள்வதுமாகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், நிதிச்சந்தைகளை அவர்கள் சகலவிதமான நிராகரிப்பின் மத்தியிலும், அற்றாக் உலக முதலாளித்துவ அமைப்பின் எதிர்ப்பாளர்கள் அல்ல. அது இவ் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராக மட்டுமல்லாது, மிகமுக்கியமாக இவ்வெதிர்ப்பு இயக்கங்கள் முற்கூட்டி கூறும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எதிராக முதலாளித்துவத்திற்கு ஒரு அரசியல் பாதுகாப்பு அமைப்பை வழங்க முயல்கின்றது. இதனால்தான் ஜொஸ்பன் அற்றாக்கின் அரசியலை எடுத்துக்கொண்டுள்ளார்.

அற்றாக்கிற்கும், அதைப்போன்ற ஏனைய இயக்கங்களுக்கும் எதிராக, உலக முதலாளித்துவத்தின் இந்நெருக்கடி முன்வைத்துள்ள பாரிய அரசியல் கடமை கற்பனாவாத பொற்காலத்திற்கு திரும்புவதல்ல. முக்கிய கடமை சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்து உலக முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலகப் பொருளாதாரத்தை ஒரு முற்போக்கான திசையில் மறு ஒழுங்கமைப்பு செய்வதாகும். இந்த வழியில் தான் பலதலைமுறையாக தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட பாரிய உற்பத்தி சக்திகளை மனித சமுதாயத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தமுடியும். இந்த முன்னோக்கிற்காகத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் போராடுகின்றது.

See Also:

21 September 2001

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்:பகுதி2

17 September 2001

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்